• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன்மழையில் சிறுதுளி 1---- சௌந்தர்யா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
நீண்டு வளர்ந்து கொண்டிருந்தது அந்த ராஜபாட்டை... இருபுறமும் செழித்து வளர்ந்து நின்ற மரங்கள் அந்த காட்டிற்கு அரணாக இருக்க நடுவில் சுமங்கலி பெண்ணின் நடுவகிடு போல நேராக இருக்க ... இதமான தென்றல் தவழ்ந்து வந்து அந்த புரவிகளின் மேல் பயணம் செய்து கொண்டிருந்தவர்களை தழுவியது!



“இளவரசே ...!” சற்று தயங்கியவாறு அழைத்தவனை புரவியை மென்மையாக செலுத்தியவாறு திரும்பி பார்த்தான் அவன்!



என்ன ஒரு தேஜஸ் அந்த கண்களில்!



நிமிர்ந்து அவன் அமர்ந்திருந்த விதமே தனி கம்பீரத்தை தர, அந்த கருமை நிறத்தவனுக்கு ரசிகர் கூட்டமென்று நிறைய உண்டு!



மார்பை மறைக்கவென ஒரு மேலாடையும் இடுப்பில் ஒரு இறுக்கமாக கட்டியிருந்த கீழாடையும் முறுக்கிய மீசையும், முறுக்கேறிய புஜங்களும், திண்மையான மார்பும், அதிலிருந்த வடுக்களும், கூர்மையான கண்களும் அவனை மிகச்சிறந்த வீரனென கூற,

"சொல் முத்தழகா..." என்றான் ஆதித்த கரிகாலன்.

ஆம்... அருள்மொழி வர்மனுக்கு மூத்தவன்.

"போகுமிடம் யாதென உரைத்தால் திவ்யமாகும்... இளவரசே!!!" கேள்வியையே வாக்கியமாக்கினான் முத்தழகன்.

"அரசரகசியங்களை ஆராய மனம்விளைகிறதா??? முத்தழகா... அல்லது.. உன் நண்பன் மீதுகொண்ட நம்பிக்கை பொய்த்ததா??? "

"இளவரசே இனி வாய் திறக்கமாட்டேன்.. விட்டுவிடும் என்னை.." இருகைகளாலும் வாயை மூடிக்கொண்டான் முத்தழகன்.

"ஹா...ஹா...ஹா... உன்னை அழைத்துவர வேண்டுமென அரசகட்டளை.. இளவரசேயானாலும் மீறமுடியுமா??? சொல்.. உன் இப்போதைய வாய்பூட்டுச் சட்டம்.. பின்விளைவுகளை தவிர்க்கும்.." என்று கண்சிமிட்டினான் ஆதித்த கரிகாலன்.

"பின்விளைவுகளா??? நான் கண்களையும் கூட பூட்டிக்கொள்கிறேன் இளவரசே..." என்று சிரித்தான் முத்தழகன்.

அந்த அழகிய சோலை கொண்ட ஆற்றங்கரையில் இறங்கி அங்கிருந்த பாறைகளில் குதிரைகளை கட்டினர். சிறிது தூரத்தில் விறகுகளை வைத்து நெருப்பு மூட்டியிருந்தனர். அதனை கண்ட ஆதித்தன் அதனை முத்தழகனிடம் சுட்டிக் காட்டினான்.

"அங்கே தான் சந்திப்பிற்கான ஏற்பாடென்று கருதுகிறேன். அங்கு சென்று யாரேனும் உள்ளனரா என்று பார்... நான் ஆற்றில் நீரருந்தி வருகிறேன்.." என்றவாறு ஆற்றை நோக்கி சென்றான்.

நெருப்பு மூட்டியிருந்த இடத்திற்கு சென்று பார்த்தான் முத்தழகன் யாரையும் காணவில்லை. திடீரென்று இருவர் பின்னிருந்துவந்து அவனது இருகரங்களையும் பின்னிளுத்துக் கட்டினர். கண்களை துணிகொண்டு கட்டினர்.

முத்தழகனோ விடுபட முயலவுமில்லை... அவன் முகத்திலோ பயத்தின்சுவடும் கடுகளவிற்கும் இல்லை. ஆழ்ந்த அமைதி அவன் வதனத்தில் நிலைகொண்டிருந்தது. அவர்கள் அவனை அழைத்து சென்று ஓரிடத்தில் நிருத்தினர்.

ஆதித்தன் நீர் அருந்தி முகம், கை, கால் கழுவி எழுந்தான். ஆற்று நீரில் தன்னுருவ பிரதிபலிப்பை ஆராய்ந்தான். அப்போது ஓருவன் மறைந்து மறைந்து தன்னருகில் வருவதை கண்டான். அவன் கைகள் தானாக உடைவாளை தழுவிமீண்டது.
தொடரும்... நாளை...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top