• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன் மழையின் சாரல்---நாச்சுஅன்னம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
நானும் எழுதுறேன்னு எழுதிட்டேன். ஆனா எழுதி முடிச்சதுக்கு அப்புறம் என்னாலேயே என் சிரிப்ப கண்ட்ரோல் பண்ண முடியல??.. ஏன் நினைக்கிறீங்களா இது வேற வரலாறு சம்பந்தப்பட்ட கதை ஆனா நான் எழுதியிருக்கிறதுல தமிழும் இல்ல வருணனையும் இல்ல??.. கொஞ்சமா புகழ்றதாயிருந்தா(திட்டுறது) கமெண்ட் பாக்ஸில் புகழுங்க கொஞ்சம் அதிகமா புகழ்றதாயிருந்தா இன்பாக்ஸ் க்கு வந்துடுங்க??

நேத்து பெரிய debate ஆகிடுச்சு.. ரெண்டு கரிகால சோழன்னும் வேறனு..so கடைசி பகுதி எனக்கு தெரிஞ்ச மாதிரி மாதிட்டேன்??


நீண்டு வளர்ந்து கொண்டிருந்தது அந்த ராஜபாட்டை.இருபுறமும் செழித்து வளர்ந்து நின்ற மரங்கள் அந்த காட்டிற்கு அரணாக இருக்க.. நடுவில் சுமங்கலி பெண்ணின் நடுவகிடு போல நேராக இருக்க இதமான தென்றல் தவழ்ந்து வந்து அந்தப் புரவிகளின் மேல் பயணம் செய்து கொண்டிருந்தவர்களை தழுவியது!

“அரசே…!” சற்று தயங்கியவாறு அழைத்தவனை புரவியை மென்மையாக செலுத்தியவாறு திரும்பிப் பார்த்தான் அவன்! என்ன ஒரு தேஜஸ் அந்த கண்களில்!
நிமிர்ந்து அவன் அமர்ந்திருந்த விதமே தனி கம்பீரத்தை தர, அந்த கருமை நிறத்தவனுக்கு ரசிகர் கூட்டமென்று நிறைய உண்டு!
மார்பை மறைக்கவென ஒரு மேலாடையும் இடுப்பில் ஒரு இருக்கமாக கட்டியிருந்த கீழாடையும், முறுக்கிய மீசையும், முறுக்கேறிய புஜங்களும், திண்மையான மார்பும், அதிலிருந்த வடுக்களும், கூர்மையான கண்களும் அவனை மிகச்சிறந்த வீரன் என கூற “சொல் முத்தழகா” என்றான் ஆதித்த கரிகாலன்.

அரசே என்னை தவறாக நினையாதியுங்கள். நாம் இருக்கும் அவசர சூழலில் இந்தப் பயணம் தேவைதானா!
இப்பொழுது என்ன அவசர சூழல் ஏற்பட்டது முத்தழகா. இருவரும் நன்றாக தானே சென்று கொண்டிருக்கிறோம் .”அங்கே ஆகாயத்தை பார்!”சித்திரையில் பூரண சந்திர நிலவு தன் முழு ஒளியும் இந்த வனம் முழுவதும் பரவி வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருக்கிறது.தூரத்தில் இரு புள்ளினங்கள் ஒன்றுடன் ஒன்று இணைவதற்காக கானம் மீட்டு கொண்டிருக்கின்றன.

“தென்றல் அவள் சாமரமாய் வீசுகிற பொழுதெல்லாம் சுகந்தமான நறுமணத்தை அள்ளி வீசி செல்கிறாள்”. இன்னும்!...
“போதும் அரசே!” நாம் இருக்கும் சூழ்நிலை தெரியாமல் நிலா, புள்ளினம், தென்றல் என்று கூறுகிறீர்கள்…

முத்தழகா! நாம் இருக்கும் சூழ்நிலையை நன்கு அறிவேன் நான். இருந்தாலும் காலம் என்பது ஒரே ஒருமுறைதான். நாம் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் ரசித்து கொண்டே செல்ல வேண்டும். ஏனென்றால் இது போல் இன்னொரு வாய்ப்பு நமக்கு அமையாது அல்லவா!

அது சரி அரசே! ஆனால், நாம்…. போதும் முத்தழகா! இப்பொழுது நீர் என்ன தான் சொல்ல வருகிறீர்… நான் வீரபாண்டியனின் தலையை கொய்து தஞ்சை முழுவதும் ஊர்வலம் வந்ததால் என்னை கொல்வதற்கு மாபெரும் சதி நடக்கிறது இதுதானே!...
உனக்கே தெரிந்திருக்கும் பொழுது எனக்கு தெரியாது என்றா நினைக்கிறீர்!

ஐயோ! அரசே கோபம் கொள்ளாதீர்கள்!.. உங்களுக்கு தெரியாது என்று நான் எப்பொழுது கூறினேன்! இப்பொழுது இந்த பயணம் தேவைதானா என்றே என் கேள்வி!...

கோபம் அல்ல முத்தழகா உனக்கே தெரிந்திருக்கும் பொழுது எனக்கு தெரியாமலா இந்த பயணத்தை மேற்கொள்வேன்.

“இளவரசி நந்தினி தேவியாரை கண்டு நான்கு திங்கள் ஆகப்போகிறது!”… ஏனோ என் மனம் சிறிது சஞ்சலமாக இருக்கிறது. அதுதான் அவர்களை கண்டு வரலாம் என்று கிளம்பினேன்… ஆனால் நீரோ என்னை கேள்வி மேல் கேள்வி கேட்கிறீர்!.

அரசே, தங்களை நான் கேள்வி கேட்பேனா… என் மனதில் இருந்ததை மட்டும் தான் கூறினேன்!

இடிஇடியென சிரித்த கரிகாலன் அதற்கு பெயர்தான் கேள்வி முத்தழகா! மிகவும் சாதுரியமாக பதில் கூறுவதாக நினைப்போ! வாரும் செல்லலாம்!

அரசே!போதும் முத்தழகா இதைப் பற்றிய பேச்சுக்கள். நாட்டில் இப்பொழுது என்ன நடைபெறுகிறது என்று கூறுங்கள்.
“காவிரியாற்றில் வெள்ளம் அடிக்கடி வருவதால் நம் மக்கள் பலர் மாண்டு போகிறார்கள். பலரின் விளைநிலங்கள் பாழாகிறது… இப்பொழுது இது ஒன்றுதான் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. மேலும்,வெள்ளக்காலங்கள் இல்லாத நேரத்தில் தண்ணீர் வற்றி, மக்கள் வேளாண்மை செய்ய இயலாமல் உணவிற்காக தவிக்கின்றனர் அரசே!”

முத்தழகன் கூறி முடித்தவுடன் ஆதித்யனனிடம் பெரும் சிந்தனை. இப்படியே சில நாழிகைகள் சென்றவுடன் ஆதித்ய கரிகாலன் தன் திருவாய் மலர்ந்தான்...

ஏன் முத்தழகா காவிரிக்கு நடுவே நாம் ஒரு அணையை கட்டினால் என்ன! உனக்கு என்ன தோன்றுகிறது.

“அரசே! இது எப்படி சாத்தியமாகும். காவிரியிலிருந்து இரண்டு லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு நடுவே அணை என்பது நிச்சயம் சாத்தியமல்ல”.
“சாத்தியமில்லாத ஒன்றை செய்து வெற்றி பெறுவதே என் குறிக்கோள் முத்தழகா”. நாம் நம் இடம் சென்றவுடன் நமது முதன்மை கட்டுமான கலை வல்லுனர் மூரியனை என்னை வந்து பார்க்க சொல்!

இப்பொழுது நந்தினி தேவியாரின் அரண்மனை அருகில் வந்து விட்டோம். சுரங்கப்பாதை வழியாக சென்று நந்தினி தேவியாரை வரச்சொல்!...

“உத்தரவு அரசே! இதோ சென்று அழைத்து வருகிறேன்”...

அங்கே அரண்மனைக்குள் ஆளுயர உருப்பளிங்குக்கு நேர் உட்கார்ந்து இருந்தாள் மாது ஒருத்தி. மாது என்பதற்கு பதில் தேவலோக மங்கை என்பதே மிகப் பொருத்தமாக இருக்கும்.
“பளிங்கு போன்றவள் எனும் எடுத்துக்காட்டுக்கு மிகச் சரியாக பொருந்தக் கூடிய உருவம்… இரண்டு வில்லையே முகத்தில் ஒட்டியது போன்ற புருவங்கள்..அது கண்களா அல்லது இரண்டு கயல்களா என்று பிரித்தறிய முடியாதபடி மீன் போன்ற கண்கள்... அதற்கு மேலும் அழகு சேர்ப்பது பச்சை நிற கருவிழிகள் தான்...கூரான நாசிகள் அதற்கும் கீழே பிரம்மன் மிகவும் சிரமப்பட்டு மிக நேர்த்தியாக செய்து வைத்த உதடுகள்… முன் கோபுர கலசங்கள் இரண்டையும் மிக நேர்த்தியாகவும் இறுக்கமாகவும் கட்டிய சிகப்பு கச்சைகள் என் தலைவனுக்கு மட்டுமே என்று கட்டியம் கூறுகின்றது... இடையென்ற ஒன்று உள்ளதா எனும் தேடும்படியான இடையுடையாள்... கீழேயும் மிகவும் வேலைப்பாடுகள் கொண்ட அதே நிறத்திலான சிகப்பு கச்சை தன் பணியை செவ்வன செய்திருக்கிறது…

மேலாடையாக மிக நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட பச்சை நிறத்திலான பாலின் ஆடையை ஒத்த பட்டாடை இது என் இடம்மென்று சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது...”

அகலின் நறுமணத்தால் அந்த அறையே சுகந்தமான நறுமணத்தில் மூழ்கி இருந்தது… அதற்கு நடுவே புது மலரேன அமர்ந்து தன் கயல் விழிகளுக்கு மேலும் அழகு சேர்க்க அஞ்சனம் தீட்டுகிறாள். அப்பொழுது கதவு திறக்கும் ஓசையினால் தன் கவனம் கலைய திரும்பிப் பார்க்கிறாள் அவள்!வந்தது அவளது தோழி அனலிகா...

“இளவரசி! சொல் அனலிகா என்கிறாள் பிரபஞ்ச பேரழகி நந்தினி”. இரு நாழிகைக்கு அனலிகாவிடம் எந்த அசைவும் இல்லாததால் தன் கண்களுக்கு அஞ்சனம் தீட்டும் வேலையை மீண்டும் செய்கிறாள்.

மறுபடியும் “இளவரசி!” என்னும் சொல்லுக்கு நந்தினியிடமிருந்து ஒரு பார்வையே பரிசாக கிடைத்தது…
 




Last edited:

Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
தங்களது கருங்கூந்தலை காணும் பொழுது எனக்கு இந்தப் பாடலே நினைவுக்கு வருகின்றது.

“கூந்தல் மகளிர் கோதை புனையார்
பல்இருங் கூந்தல் சில்மலர் பெய்ம்மார்
தண்நருந் தகர முளரி நெருப்பு அமைத்து
இருங்காழ் அகிலோடு அவள் அயிர் புகைப்ப”


என்ன அனலிகா இன்று என் கூந்தல் மீது இவ்வளவு பொறாமையுனக்கு.
இன்று மட்டுமல்ல இளவரசி என்றுமே தங்களது கூந்தலை காணும் பொழுது எல்லாம் நான் எனை மறந்து ரசிக்க ஆரம்பித்து விடுகிறேன்.

அதற்கும் அவளிடமிருந்து ஒரு பார்வையே பரிசாக கிடைத்தது!
“அது இருக்கட்டும் இளவரசி!” இத்தனை நாட்களாக பசலை நோயால் வாடியவர் போல் இருந்தீர். இன்று என்ன சிறப்பான நாளா தேவலோக மங்கை எல்லாம் தோற்கும் படி அழகுக்கு அழகு சேர்த்து கொண்டு இருக்கிறீர்கள் அதுவும் இந்த ராத்திரி வேளையில்…

“இந்த வினாவிற்கும் நந்தினியிடமிருந்து ஒரு பார்வையே பதிலாக வந்தது.”
இப்படி பார்த்தால் என்றால் நான் என்ன நினைப்பது எனக்கு பதில் கூறுங்கள் அரசியே!..

“சொல்கிறேன் கேள் அனலிகா!” இன்று என் மன்னவன் எனைத் தேடி வருவார் என்று என் மனம் இடைவிடாமல் கூறிக் கொண்டிருக்கிறது அதனால் தான் கிளம்புகிறேன்…

எப்படி அரசி இவ்வளவு உறுதியிட்டு கூறுகிறீர்கள் இன்று அவர் வருவார் என்று! “அதுதான் காதல் அனலிகாஅவரது மனதையும் நான் படிக்கும் வித்தையை கற்று கொடுக்கும்.”

“நீ வேண்டுமானால் காதலித்துப்பார் உனக்கும் தெரியும். எங்கே இளவரசி எனக்குத்தான் காதலே வரவில்லையே! என்று சொல்லி முடிக்கும் நேரம் அரண்மனை அந்தப் புரத்தில் உள்ள நந்தினியின் அறைக்கதவு மிக லேசாக தட்டப்பட்டது!”

“ஒருவரை ஒருவர் பார்த்த நிமிடம் காதல் பூ மலருமா?” எனும் கேள்வி நீக்கமற மறைந்தது. “அனலிகாவும் முத்தழகனும் சந்தித்த நேரத்தில்”.

“என்ன அனலிகா அங்கே யார்!” ஏதும் கூறாமல் வடித்த சிலையென நிற்கிறாய் எனும் நந்தினியின் கேள்விக்கு பிறகே அனலிகா மற்றும் முத்தழகன் எனும் சிலைகளுக்கு உயிர் வந்தது…

“அது வந்து அரசியாரே நமது சோழத்தின் அரசர் ஆதித்த கரிகாலனின் படைத்தளபதி முத்தழகன் தங்களை காண வந்திருக்கிறார்!..”

“அப்படியா!”நான் சிறிது நேரத்திற்கு முன்பு கூறினேன் அல்லவா! அவர் என்னை தேடி வருவார் என்று… பார் என் மனக்கிடங்கு என்றுமே பொய்யுரைப்பதுதில்லை என்று கூறிக்கொண்டே அந்த இடம் வந்தால் நந்தினி.

அவ்விடம் வந்த நந்தினியை பார்த்து ஒரு சில நிமிடங்கள் முத்தழகன் பிரமித்தான் என்பதே உண்மை. பிரமிப்பிற்குக் காரணம் மானிட மங்கை போலல்லாது தேவலோக மங்கை விண்ணில் இருந்து வந்தது போல் இருந்த நந்தினியின் வதனமே அதற்கு காரணம்.

“தான் வந்தும் எந்த ஒரு அசைவும்மில்லாத முத்தழகனை சிந்தையிலிருந்து கலைக்கும் விதமாக தன் கரங்களில் தவழ்ந்த அழகான வளைகளை மிக லேசாக இசைத்தால் அந்த நங்கை.”

அந்த ஒலியினால் தன் சிந்தை கலைந்த முத்தழகன் தான் வந்த விடயத்தை சுருங்க சொன்னான்.

“நந்தினி தேவியாரே!” தங்களை காண சோழத்தின் மாபெரும் அரசர் ஆதித்த கரிகாலன் அவர்கள் வந்திருக்கிறார்.

இங்கு அரண்மனையிலிருந்து ஒரு காத தூரம் சென்றவுடன் இருக்கும் தென்னந்தோப்பில் தங்களுக்காக காத்திருக்கிறார் எனும் செய்தி கூறி முடித்தவுடன்…தன் மார்பில் மீன் என துள்ளிக்கொண்டிருந்த முத்து மாலையை கழட்டி பரிசாக முத்தழகனிடம் கொடுத்தால் அந்த “காதல் அணங்கு.”

பின்பு,முத்தழகன் மற்றும் அனலிகா உதவியுடன் சுரங்கப்பாதை வழியாக அரண்மனையை விட்டு வாயுவென வெளியே செல்கிறாள் தன் காதல் அரசனைக் காண!..

தோப்பின் ஆரம்பத்திலே அனலிகா மற்றும் முத்தழகன் நின்றுவிடுகிறார்கள். அவர்களின் காதலையும் சிறிது வளர்க்கத்தான் ஆனால் இருவருக்கும் நடுவே மௌனம் எனும் அரசனை ஆட்சி நடத்தினான்.

அங்கே தோப்பினுள் ஆதித்யனை கண்ட அடுத்த நொடி வில்லில்லிருந்து புறப்படும் அம்பின் வேகத்துடன் அவனை மார்போடு கட்டிக் கொள்கிறாள் அவனது “காதல் கிழத்தி”.

“என்ன அவசரம் தேவியாரை தாங்கள் வந்து மோதியதில் உரமேறிய என் நெஞ்சும் சிறிது தடுமாறத்தான் செய்கிறது என்று சிரித்துக்கொண்டே கூறினான் அந்தக் காதல் கள்வன்…”

“என் நிலைமையை கண்டால் தங்களுக்கு சிரிப்பாகத்தான் தோன்றும் அரசே. தங்களை காணாமல், தங்களிடமிருந்து செய்தியும் வாராமல் பசலை நோயில் தவித்தவள் நான் தானே என்று கூறி அவனை இன்னும் இறுக்கி கொண்டாள்…”

“போதும் தேவியே!” இங்கு வீசும் தென்றலும் இருவருக்குமிடையே வர முடியாத கோபத்தில் சற்று பலமாகவே வீசுகிறது என்று கூறி அவளை தன்னிடமிருந்து பிரித்தான் நகைத்துக் கொண்டே…

பிரித்த நொடி நந்தினியின் இதழ்களில் இருந்து வெளிப்பட்ட வினா! “என்ன சிந்தனை அரசே என்பது மட்டும்தான்…”

“தங்களதுபுத்திக் கூர்மையை கண்டு வியக்கிறேன் ராணி. ஆனால் தாங்கள் எவ்வாறு நான் சிந்தனையில் இருப்பதாக கூறினீர்கள்.”

நாம் இருவரும் இருக்கும் நேரம் தாங்கள் நம்மைப் பற்றி மட்டுமே பேசுவீர்கள். மேலும், தத்தமது அரண்மனைக்கு செல்லும் வரை பிணைந்தேயிருப்போம்.ஆனால் இன்று தாங்கள் என்னை பிரித்து நிற்க வைக்கிறீர்கள் என்றால் என்னையும் தவிர தங்களை எதுவோ ஒன்று பாதிக்கிறது என்று தானே அர்த்தம் அரசே.

“ஆம் தேவியாரே!” சரியாக கூறினீர்கள். அதாவது காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை பற்றிய சிந்தனை தான் அது. இதை எப்படி சாத்தியப்பட வைப்பது என்ற கேள்வியை என் மனதை வண்டாக குடைகிறது…

“இப்பொழுது காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான அவசியம் என்ன அரசே!..” “கேள்ளுங்கள் தேவியாரே!ஒன்று மக்கள் வறட்சி இல்லாமல் இருப்பதற்கு.. இதுவே அனைவருக்கும் சொல்லப்படும் காரணம். ஆனால் பிரிதொரு உண்மை காரணம் என்னவெனில் பல தலைமுறைகள் கடந்தும் என் பெயர் வரலாற்றில் மறக்க முடியாத இடத்தை பெற வேண்டும் என்பதே ஆகும்!”

“கண்டிப்பாக தங்களது பெயர் வரலாற்றில் இடம்பெறும் அரசே. அதற்கு முன்பு தாங்கள் இப்போதே இந்த நிமிடமே என்னை விவாகம் செய்து கொள்ளுங்கள்…”

“இப்பொழுது என்ன அவசரம் தேவி நான் அணை கட்டிய பிறகு தங்களை மணம் முடித்துக் கொள்கிறேன்…”

என் மனதிற்கு ஏனோ தவறுகள் நடக்க போவது போல் தோன்றிக்கொண்டே இருக்கிறது! அதனால் தாங்கள் இப்பொழுதே என்னை விவாகம் செய்து கொள்ளுங்கள். கந்தர்வ விவாகமோ அல்லது சத்ரிய விவாகமோ இரண்டிலும் நாம் இருவர் தான் பதி,பத்தினி. பிறகென்ன அரசே என்னை மனம் முடிப்பதில் இவ்வளவு சிந்தனை தங்களுக்கு.

விவாகம் முடிந்து விட்டால் தினம் தாங்கள் என்னுடனேயிருக்க வேண்டும், உங்கள் கார் கூந்தலை கலைத்து விளையாட வேண்டும், தங்கள் கச்சைகளுக்கு பதில் நானே இருக்க வேண்டும் என்று என் மனம் சண்டித்தனம் செய்யும் தேவியாரே. அதனாலே கூறுகிறேன் இப்பொழுது விவாகம் வேண்டாம் என்று.

“சண்டித்தனம் செய்யும் மனதை அடக்குவது தங்கள் கவலை அரசே. என்னை இப்பொழுதே மணம் முடியுங்கள் என்று கூறி கயல் விழியாள் கண்ணீர் சிந்தினாள்…”

“அவளது கண்ணீரைகண்ட நொடி அந்த அஞ்சாநெஞ்சன் சோழ அரசன் கலங்கினான் என்பதே உண்மை…” பின்பு, அனைத்தும் மறக்க அந்த மதிமுகத்தாளை சாட்சியாக வைத்து தனது முத்திரை மோதிரத்தை அவளிற்கு அணிவித்து தமது காந்தர்வ விவாகத்தை முடித்தான்….

பிறகென்ன அந்த மன்மதனுக்கே குருவான ஆதித்யன் தமது மன்மத கலை அனைத்தையும் நந்தினிக்கு பயிற்றுவித்தான். புயல் ஒன்று பூவை முத்தமிட முடியுமா… ஆனால் அங்கே அதுதான் நடந்தது… இவர்கள் இருவரும் இருக்கும் நிலை கண்டு அந்த மதிமுகத்தாள் வெட்கம் எனும் மேக ஆடைக்குள் மறைந்து கொண்டாள். மேலும் தென்றல் இருவருக்கும்மிடையே நுழைந்து விடலாம் என்று எண்ணி… போராடி பின்பு தோற்று இவர்களுக்கு இடையே செல்ல இயலாது என்று தன் கைகளால் இன்னும் கொஞ்சம் காற்றை பலமாக வீசி சென்றாள்.
மூன்றாம் ஜாமம் வரை நந்தினியை ஆலிங்கனம் செய்த கரிகாலன் வலுக்கட்டாயமாக பிரிந்தான். பின்பு, “சென்று வாருங்கள் அரசியாரே! பொழுது புணரும் நேரம்மாகிவிட்டது.” இனி என் முழு சிந்தனையும் அணை கட்டுவது பற்றியே இருக்கும் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது ஆகும்…

அணை கட்டிய உடன் தங்களை என் பட்டத்து மகரிஷியாக ஆக்கிக் கொள்கிறேன் என்று கூறி இருவரும் அன்று நடந்த கூடலை எண்ணி பிரிய மனமின்றி பிரிந்தனர்.
 




Last edited:

Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
சோழ அரண்மனை:
“முத்தழகா நமது முதன்மை கட்டுமானக் கலை வல்லுனர் மூரியனை வரச்சொல். அப்படியே ஆகட்டும் அரசே! இப்பொழுதே வர சொல்கிறேன்…”

“அரசே தாங்கள் என்னை காண விளைவதாக நமது படை தளபதி கூறினார் காரணம் என்னவோ!”
ஆமாம் மூரியரே தங்களை அழைத்ததற்கான காரணம் காவிரியின் நடுவே நான் ஒரு அணை கட்டுவதை பற்றி சிந்தித்திருக்கிறேன். அதை எவ்வாறு கட்டுவது என்பதைப்பற்றி விவாதிக்கவே தங்களை வரச்சொன்னேன்.

“அப்படியா அரசே!” இது மிகவும் நல்லதொரு செயல். எனக்கு ஒரு திங்கள் அவகாசம் தாருங்கள். இதன் மாதிரி வடிவத்துடன் தங்களை வந்து காண்கிறேன். இப்பொழுது உத்தரவு தாருங்கள் அரசே! நான் விடை பெறுகிறேன்… சென்று வாரும் மூரியரே… வரும்பொழுது இதற்கான வரைபடத்துடனும் மாதிரியுடனும் என்னை வந்து சந்தியுங்கள் என்று கூறி விடை கொடுத்தான்.
ஒரு திங்கள் கழித்து:
அரசே தங்களைக் காண மூரியன் வந்துள்ளார்… “அப்படியா முத்தழகா!” அவரை காணவும் அந்த அணையின் வரைபடத்தையும், மாதிரியையும் பார்க்கவே என் மனம் ஆவலாய் இருக்கிறது. அவரை உடனே நம் கலந்தாய்வு மண்டபத்திற்கு வரச்சொல். “ஆகட்டும் அரசே!...”

தன் முன்னே பிரம்மாண்டமாக இருக்கும் மாதிரியை கண்டு ஆதித்தன் பிரமித்தான் என்பதே உண்மை… இரண்டு நாளிகை கழித்து ஆதித்யன் தன் திருவாய் மலர்ந்து கேட்ட வினா….

“கூறுங்கள் மூரியரே! இதை எப்படி நாம் நிறைவேற்றுவோம் என்று…”

அரசே அணையானது காவிரியின் குறுக்கே கட்டுவதால் மணல் கொண்டு கட்டினால் அது அழிவதற்கான சாத்தியக் கூறு இருப்பதால் நாம் கல்லணையாக கட்ட வேண்டும். மேலும் ஒவ்வொரு கற்களையும் நாம் போட்டவுடன் மண்ணரிப்பால் அது சில அடி கீழ் சென்று உறுதியாகும். பின்பு அதன் மேல் மற்றொரு கல்லை அடுக்க வேண்டும் இதுவே அணையின் அஸ்திவாரமாகும்.

“மூரியரை! எனக்கு இங்கே ஒரு கேள்வி தோன்றுகிறது… கூறுங்கள் அரசே உங்கள் சந்தேகம் என்ன…”

இப்படி கற்களின் மீது மற்றொரு கற்களை வைத்தால் அது எப்படி ஒன்றுடன் ஒன்று நிற்கும்… ஆம் அரசே! இதை நான் முன்னமே சிந்தித்தேன்…அதற்கு தீர்வாக இந்த களிமண்ணை நாம் உபயோகிக்க வேண்டும். இதனை சில மூலிகைகளின் மூலக்கூறுகளால் உருவாக்கியுள்ளேன். ஆதலால் இது பசைபோல் இரு கற்களையும் பிடித்துக் கொள்ளும்… மேலும் இதன் பூச்சுக்காக முட்டை மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவையை நாம் உபயோகிக்க வேண்டும்.

மேலும் அணையின் நீளமானது 1080 அடியும் அகலம் 66 அடியும் உயரம் 18 அடியும் இருப்பது போல் நாம் உருவாக்க வேண்டும்.

மேலும் அணையின் வலது முனையை விட இடது முனையை சற்று அதிக உயரம் கொண்டதாக கட்ட வேண்டும். ஏனென்றால் இடதுபுறமே தண்ணீர் வெள்ள காலங்களில் செல்லும்.

“வேளாண்மை செய்யும் காலங்களில் காவிரி ஆற்றில் நீர்வரத்து போலவும்… வெள்ள காலங்களில் கொள்ளிடத்தை அடைவது போலவும் அணையானது இருக்க வேண்டும்.மேலும் குறைந்தது இரண்டாயிரம் வீரர்களாவது தேவைப்படுகிறார்கள் அரசே.

பின்பு கற்களை தூக்குவதற்கும் பல வேலைகளுக்கும் நூரு களிருகளும் 200 பரிகளும் தேவைப்படுகிறது…”

சிறிது நேரம் சிந்தித்த ஆதித்யன்… அதற்கு என்ன மூரியரே நான் வெண்ணிப் போரில் வெற்றி கொண்டு பிடித்து வைத்திருக்கும் வீரர்களையும் களிறுகளையும் பரிகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

“உத்தரவு அரசே!நாளைய தினமே சிறப்பாக உள்ளது எனவே நாளையே அணை கட்டும் பணியை நாம் துவங்கலாம். ஆகட்டும் மூரியரே இனிதே ஆரம்பிக்கட்டும் பணியானது…”
பல நாட்களுக்குப் பிறகு:
அங்கே மூரியன் காட்டிய வரைபடமும், மாதிரியும் காவிரியின் குறுக்கே உருவம் பெற்றுக் கொண்டிருந்தன. அனைவரும் இரவும் பகலும் அயராது பணிபுரிந்ததால் கல்லணை முழு உருவம் பெற்றது….
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு:
தஞ்சையே விழாக்கோலம் பூண்டிருந்தது…தெருவெங்கும் தோரணங்கள்… அனைவரது வாசல்களிலும் சாணமிட்டு பூசணிப்பூ வைத்திருந்தார்கள்… மேலும் அனைவரது வீடுகளும் வெள்ளையடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் இருந்தது.. ஆம் இந்த கொண்டாட்டத்திற்கான காரணம் சோழத்தின் மாபெரும் அரசன் ஆதித்த கரிகாலனின் திருமணமே ஆகும். அன்று நடந்த கந்தர்வ விவாகம் இன்று சத்திரிய விவாகமாக மாறிக்கொண்டிருந்தது. தரணியே வாழ்த்த தன்னில் பாதியான நந்தினி தேவியாரின் சங்கு கழுத்தில் திருமாங்கல்யத்தை பூட்டினான் அந்த காதல் அரசன். ஊரே வாழ்த்த அவர்களது திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

"அடியே தீவட்டி தண்டம் எந்திரிச்சு தொல"… எவ்வளவு நேரமா உன்ன எழுப்புறது. உனக்கு கத்தி கத்தியே என் தொண்டை தண்ணி எல்லாம் வத்திடுச்சுன்னு சொல்லி அவ போத்திருந்த bed sheet ஒரே இழுவைய்யா இழுத்தது அவங்க அம்மா காயத்ரி.

"அம்ம்ம்ம்மானு கத்திட்டே போர்வைக்குள்ளருந்து எந்திரிச்சு உட்கார்ந்தா அம்மு"…

"என்னடி அம்மா"… "காலையில ஏழு மணிக்கு எழுப்பி விடுங்கன்னு சொன்ன!.. ஏதோ புது ப்ரொபசர் வராரு கிளாஸ் எடுக்குறாங்கன்னு!… நானும் ஏழு மணியிலிருந்து எழுப்பறேன் எந்திரிகிறியா நீ!.. மணியைப் பாரு ஒன்பது ஆச்சு!.. பத்து மணிக்கு காலேஜ் நீ எப்டி போரேன்னு நானும் பாக்குறேன் டி!"...

"ஏன்மா நீ என்னைய பெக்கும்போது பாக்கலையா இரண்டு கால் இருந்திருக்குமே"!… அதை வச்சு தான் நடந்து போவேன் ஆனாலும் பத்து நிமிஷம் நடந்தா வர காலேஜுக்கு நீ பண்ற அலப்பறை இருக்கே தாங்க முடியல மா.

"எது நான் அலப்பறை பண்றேன்னா நீ பண்றது தாண்டி தாங்க முடியல".

"அம்மா என்ன ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு எழுப்பி இருந்தேனா ஆதித்த கரிகாலனுக்கும், நந்தினிக்கும் அட்சதைய தூவி இருப்பேன்..." "ஆதித்த கரிகாலன் கல்லணை கட்டி முடிச்சவுடனே நந்தினியை கல்யாணம் பண்ணிக்கிட்டான் மா!.. நல்லா இருந்துச்சு கனவு நீ வந்து கலச்சுவிட்ட!..."

"எது ஆதித்த கரிகாலன் கல்லணையை கட்டினாரா!... லூசாடி உனக்கு! ...ஆதித்த கரிகாலன் ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்தவன்!! கல்லணை கட்டியது இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி!!..."

"இதுக்குத்தான் ராத்திரி ஃபுல்லா சரித்திர நாவல் படிக்கக் கூடாதுனு சொல்றேன்"... "கேக்கறியா கழுத!..."

"அம்மா!" நெஜமாவா நீ சொல்ற ரெண்டு பேரும் வேற வேறயா... ஆனா எனக்கு கனவுல கல்லணை யோட மெசர்மென்ட் எல்லாம் வந்துச்சு மா...

"நேத்து நைட்டு youtube ல என்ன வீடியோ பார்த்த... கல்லணை வீடியோ பார்த்தா அதோட மெசர்மென்ட் வராம கல்லறையோட மெசர்மென்ட்டா டீ வரும்.. முந்தாநாள் நீயும் நானும் யூடியூப்பில் பார்த்த வீடியோ ஆதித்த கரிகாலன் பற்றி.. அதான் இரண்டும் கலந்து கட்டி உனக்கு கனவா வந்திருச்சு..."

"இப்படி கூட கனவு வருமா அம்மா எல்லாமே உண்மையா இருந்த மாதிரி இருந்துச்சு"... "எங்கேயுமே அது கனவுனே எனக்குத் தோணல..."

"சில சமயத்துல இந்த மாதிரி வரும் டி நம்ம அடி மனசுல எது பதிவாகி இருக்கோ அது நமக்கு கனவா வரும்..."

"ஆனா அம்மா! எனக்கு இன்னொரு டவுட்... நீ இப்படியே டவுட் கேட்டுட்டே இரு...மணிய பாத்தியா 9.40!"

"நீ எப்படி காலேஜ் போறேன்னு நானும் பாக்குறேன் டி"..."ஐயோ!..."

"மணி ஆகிடுச்சு மா கொஞ்சம் கூட உனக்கு பொறுப்பே இல்ல!.. போய் டிபன் எடுத்து வைங்க நான் குளிச்சிட்டு வந்துடறேன்!..."

"எது எனக்கு பொறுப்பில்லையானு சொல்லி ஏசி ரிமோட் அம்முவோட தலையை பதம் பார்க்கிறதுக்குள்ளயும் குளிக்கப் போயிட்டா அவ..."

"அம்மு அவங்க அம்மாவ வம்பு இழுத்து காலேஜ் கிளம்பட்டும்!..."நாம இங்க இருந்தோம்னா நமக்கும் அடி விழுகும் அதனால ஜுட் விடலாம்!!!...
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
Me first ?? கல்லணை concept super deivanachi madam ???? நந்தினியின் அழகு அப்பப்பா ?????? சூப்பர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top