• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன் மழையில் சிறுதுளி 6---- சௌந்தர்யா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
"என்னுடைய செயல்திட்டத்தில் நான் என்ன சொல்லுறேன்னா? ஆதித்த கரிகாலச் சோழன் இறப்பில் மர்மமிருக்கிறதா? இல்ல அவருடைய இறப்பே மர்மமா? அவர் இறந்ததா கூறப்படுகிறதே தவறாகவும் இருக்கலாம் இது தான் என்னுடைய ஆராய்ச்சி டா."
"அதெப்படி டீ ஊரே இறந்துட்டாருனு சொல்லுகிறது நீ மட்டும் இப்படி ஒரு குண்ட தூக்கிப்போடுகிற!" என்று அதிர்ந்தான் சூர்யா.

"அந்த சின்ன வயசிலேயே அருமையான போர் யுக்தி, கட்டிடக்கலை, அறிவுக் கூர்மையோடு இருந்தவர் தனக்கு இவர்களெல்லாம் எதிரி என்று தெரியாமலா இருப்பார்? சரி அப்படியே அவர் கொல்லப்பட்டிருந்தாலும் அதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படும் உத்தம சோழனை எதற்காக அரியனை ஏற்றினார் சுந்தரச் சோழன்? நியாயப்படிப் பார்த்தால் சிறையில் அல்லவா அடைத்திருக்க வேண்டும்?"

"எனக்கெப்படிடி தெரியும்? என்ன நடந்ததென்று."
"அதற்காகத் தான் ஆராய்ச்சியே பண்ணப்போகிறேன். பட் அந்த சாம்பு மவன் ரிஜக்ட் பண்ணிட்டான். அதுவுமில்லாமல் ஆதித்தனை பற்றின கல்வெட்டுக்களெல்லாம் சிதிலமடைஞ்சுட்டே வருகிறது. அந்த மாதிரி ஒரு கல்வெட்டில் சொல்லிருக்கிறதுப்படி பார்த்தா ஆதித்த சோழனுக்கு அரசாளும் ஆசையே இல்லையாம். அவர் ஆசையெல்லாம் சோழர் பெருமையை வளர்ப்பதிலும் அவர்கள் புலிக்கொடியை உலகமெங்கும் பறக்க விடுவதிலும் தான். அதற்காகவே ஈழத்திலிருந்த தன் இளவல் அருள்மொழி வர்மனை வரவழைத்தாராம் முடிசூட்ட."

"இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் டி?"
"கல்வெட்டுகளிலிருந்ததை மொழியாக்கம் செய்து நிறைய ஆய்வு புத்தகங்கள் பப்ளிஸ் பண்ணிருக்காங்கடா. அதில் படித்தது தான் இதெல்லாம்."
"இதன் மூலம் தாங்கள் கூறவரும் கருத்து?"
"ஆதித்த சோழன் இறந்திருக்க மாட்டான். அவன் நாடுகள் பல வென்று அங்கெல்லாம் அவன் புலிக்கொடியுடன் சோழர்களின் புகழ்க் கொடியையும் நாட்டியிருப்பான் என்பதே என் ஆய்வின் முடிவு. சோழற் கொடியின் மிரளவைக்கும் புலியைக் தற்போது கொடிகளில் கொண்டுள்ள ஒவ்வொரு நாடும் அவன் கால் பதித்து ஆட்சி புரிந்ததேயாகும். "

"ஹேய்! கூல் டி! எதற்கு இவ்வளவு உணர்ச்சிவசப் படுகிறாய் நீ?"
"சீச்சி! அப்படியெல்லாம் இல்லை. ப்ராஜக்ட் ரிவ்யூ சொதப்பிருச்சுல அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கிறது."
"இதை நீ ப்ரசீட்(proceed) பண்ணனும்னா என்ன பண்ணவேண்டும்?"
"பணபலமும் ஆள்பலமும் வேண்டும். இல்லையென்றால் கவர்மன்ட் ஆதரவும் ஆணையும் வேண்டும்."
"சரி விடு பார்த்துக்கொள்ளலாம். ஆமா இவ்வளவு பெரிய பெரிய விசயமெல்லாம் உன் ப்ராஜக்ட்டில் இருக்கும் போது எதுக்குடி அவர்கள் காதல் கதையை மட்டும் சொன்ன?"
"அப்போதாவது உனக்குக் காதல் ரசம் பொங்குதா என்று பார்க்கத்தான். என் புத்தியை ஓடுகிற ஆற்றில்தான் போடவேண்டும்."

"அடியேய் மாமனுக்குக் காதல் ரசம் பொங்காம தான் இந்த வேங்கை புலியுடையக் குட்டி புலி உன் வயிற்றுக்குள்ள வளருதாடி(யாரும் அடிக்க வராதீர்கள்! அவர்களுக்குக் கல்யாணம் முடிந்து ஒரு வருசமாச்சுப்பா) என் பொண்டாட்டி புலி."
நாண மிகுதியில் பேச்சற்று நடந்தாள் இளமதி தன் ஏழுமாத மகவைச் சுமந்தபடி. சூர்யா அவளை தன்தோளோடு சேர்த்தணைத்தபடியே நடந்தான்.
__ __ __ __

போரில் வென்று திரும்பியவுடன் ஆதித்தன் நிலவழகியுடனான தனது காந்தருவ மணத்தைத் தந்தையிடம் எடுத்துரைத்து திருமண ஏற்பாடு செய்தான். கூடவே தேனருவி முத்தழகனுக்குமான திருமணத்தையும் சேர்ந்தே நடத்திட ஏற்பாடுகள் செய்தான்.
திருமணம் முடிந்தவுடன் தனது அழகிக்குப் பரிசளிப்பதற்காக ஓர் மாளிகை கட்டிமுடித்தான். அதில் எண்ணற்ற அற்புதங்கள் நிறைந்த வைர, வைடூரிய, மாணிக்க, மரகத, பவள கற்களை வாரி இறைத்து தங்கத்திலே சுவர்கள் அமைத்து பிரமாண்டமாகக் கட்டினான். நண்பர்கள் முதல் எதிரிகள் வரை அனைவர் கண்ணையும் அந்த பிரமாண்ட மாளிகை கவர்ந்திழுத்தது.

வல்லவன் ஒருவன் வளர்ந்தால் பகைமையும் சேர்ந்தே வளருமாம். அவன் நெல்மணி போல் பெருமை வாய்ந்த தன் சோழற்குலத்திற்கு சேர்த்த பேரும் புகழும் சில புதர்களாய் உள்ளவர்களிடம் பகைமையை வளர்த்தன.
இருதிருமணங்களும் பார் போற்றுமாறு பிரமாண்டமாகவும் பேருவுகையுடனும் நடந்து முடிந்தது. இரு தம்பதியரும் காதலிலும் மகிழ்ச்சியிலும் திளைத்தனர். நிலவழகியின் மகவு தனது ஒன்பதாவது மாதத் தொடக்கத்தைத் தனது தாயின் கருவறையில் கொண்டாடிக் கொண்டிருந்தது.

தமையன் மகன் தன் மகன் என்பதை மறந்து துஷ்டருடன் கூட்டுச் சேர்ந்து தன் சொந்த இரத்தத்திற்கே குழி பறித்தான் உத்தம சோழன். அனைவரையும் தன் மாளிகைக்கு விருந்துக்கு அழைத்து நஞ்சிட்டு அன்னமிட்டான் அந்த அதி உத்தம சோழன்.

ஆதித்தன் சோழர் குலத்தின் பெருமையைப் பெருக்க வந்த புலியல்லவா ஒரே கண்பார்வையில் கண்டுகொண்டான் அனைத்தையும்.அனைவரும் உணவுண்ண அமர்ந்தனர். ஆதித்தனோ உத்தம சோழனையே ஊன்றிப் பார்த்தான்.
உத்தம சோழனிற்கோ அச்சத்தில் நா வறண்டது. அவரைப் பார்த்தவாறே எழுந்தான் ஆதித்தன்.
"என் மீது தானே சிற்றப்பா உமக்கு வெறுப்பு. இப்போது அனைவருக்கும் விருந்து என்கிற பெயரில் நஞ்சைக் கலந்து முதுகில் குத்த திட்டந்தீட்டியிருக்கின்றீரே! உமது உடம்பில் உண்மையிலேயே சோழர் குருதி தான் ஓடுகிறதா? எத்தனையோ விதத்தில் எதிர்ப்புக்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இப்படி இழிவானதொரு செயலை மருந்துக்கும் எண்ணவில்லை. அவமானம்! அவமானம்! சோழ வம்சத்துக்கே அவமானம்! என் உயிரினும் மேலான என் புலிக்கொடியை அரைக்கம்பத்தில் ஏற்றியதுபோல் அவமானத்தில் துடிக்கின்றது என்னுள்ளம்! உமக்கென்ன அரியனை ஏறவேண்டும் அவ்வளவுதானே ஆசையைக் கூறியிருந்தால் ஆவன செய்திருப்பாரே உமது தமையன் சுந்தரச் சோழர். மகனே என்று என்னிடம் கேட்டிருந்தால் நான் செய்திருப்பேனே தகுந்ததை. இப்படி வஞ்சத்தில் வீழ்ந்துவிட்டீரே!"

உள்ளுக்குள் குறுகுறுத்தாலும் வெளியே அதைக் காட்டாது ஆவேசமாய்,"யாரைக் கேட்க வேண்டும் நான் என் தமையனிடமும் உன்னிடமும்? நான் என்ன கோவணத்துடன் பிச்சை கேட்கும் ஆண்டியென நினைத்தாயோ? என்னுரிமையை யாரிடமும் பிச்சைக் கேட்டுப் பிழைக்கும் ஈனப்பிழைப்பு பிழைக்கச் சொல்கிறாயா?"

"ஈனப் பிழைப்பா? தாம் இப்போது செய்யத் துணிந்தது அறச் செயலோ? சொந்தத் தமையனையும் அவர் மக்களையும் அழிக்கத் துணிந்தது தான் நீர் பயின்ற அறமோ?"
உத்தம சோழனின் கண்ணசைவில் பல பகை வீரர்கள் மாளிகையை முற்றுகையிட்டு உள் நுழைந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் விருந்தினர் மாளிகையே யுத்த களமாகியது. முத்தழகன் ஆதித்தனின் புத்திக்கூர்மையை எண்ணி மெச்சினான். ஏனென்றால் இங்கு வரத் தயாராகும் போதே எத்தகைய சூழலையும் சமாளிக்கத் தயார்நிலையிலிருக்குமாறு கூறிச்சென்றதன் அர்த்தம் இப்பொழுது விளங்கியது அவனிற்கு.

இருவரும் இயன்றவரைச் சண்டையிட்டுப் போராடினர் அவர்களுடன். திடீரென்று எங்கிருந்தோ வந்த வாழ் ஒன்று ஆதித்தனை பதம் பார்க்க முயன்றது. அதன் முயற்சியை முறியடித்தாள் நிறைமாத கர்ப்பிணியான நிலவழகி. ஆதித்தனின் கண்களோ பெருமையிலும் காதலிலும் கலங்கித் துடித்தன. நிலவழகியின் கண்களோ கர்வத்தில் மின்னியது.

கர்வத்தில் மிளிர்ந்தவளின் கண்களில் வலியை உணர்ந்தான் ஆதித்தன். ஆம் இருவராய் தந்தையும் தாய்மாமனும் பலரை எதிர்த்துப் போராடுவதைப் பொறுக்கமுடியாமல் அவர்களுக்கு உதவும் பொருட்டு அந்த இளஞ்சோழப் புலி வெளிவரத் துடித்தான் தன் தாயின் கருவறையிலிருந்து.
தேனருவி ஓடிச்சென்று தன் தோழியை மடி தாங்கினாள். ஆனால் நிலவழகியோ ஆதித்தனையே நோக்கியவாறு இருந்தாள்.

திடீரென்று அவனை அருகே அழைத்து அவனிடம் ஓர் வேண்டுகோள் விடுத்தாள்.
"அன்பரே என் சிறிய வேண்டுகோளுக்கு தா...ம் செவிசாய்க்க வேண்டும். செய்வீர்களா?"
"அழகி என்ன இது கேள்வி. உன் அடிமை எனக்கு ஆணையிடு. நான் என்ன செய்ய வேண்டும்."
"சண்டையிடுவதை நிறுத்த வேண்டும்."
அனைவரும் அதிர்ந்து அவளைப் பார்க்க ஆதித்தனின் காதல் பார்வை மட்டும் மாறாது அவளை நோக்கியது.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top