• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன் மழை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
புரவிகள் மிரட்சியில் கனைக்க, முத்தழகன் ரசித்த அந்த கார்மேக அழகனின் முகம் இல்லை. அதிர்ந்தான்.

என்ன நிகழ்ந்தது என்று யோசிக்க விநாடிகள் கடந்த போது தலையில்லா முண்டமாக இருந்தான் அதித்த கரிகாலன்!

தீயாக பரவி உடலெல்லாம் உஷ்ணம் தகிக்க வியர்வை வடிய அந்த பெண்ணவள் அலறி துடித்து எழுந்து அமர்ந்தாள்.

அவள் உறக்கம் கலைந்திட உடல் நனைந்திருக்க, அருகில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வனின் புத்தகம் !
அவளை பார்த்து சிரித்த புத்தகத்தின் மேல் நிலைத்த அவளின் கண்கள் தான் கண்டது கனவு என்பதை நம்ப மறுத்தது.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
சமுத்திரா அப்படியே தலையை பிடித்து கொண்டாள். சில நிமிடங்கள் அவளுக்கு எதுவுமே ஓடவில்லை. கனவு என்று நம்புவதற்கு சிரமமாயிருந்தது. அவள் பார்த்த காட்சியின் தீவிரம் அத்தகையது.

உள்ளுர இருந்த படபடப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தான் ஏன் அப்படி ஒரு கனவை கண்டோம் என்று சிந்திக்கலானாள்.

ஆதித்த கரிகாலன்!!!!

அவனை பற்றி கல்கி விவரித்த வார்த்தைகள் அவள் மனதோடு அப்படியே ஆழமாக உள் சென்று பதிவானது. அந்த முகத்தைத்தான் அவள் கண்கள் கனவில் கண்டன. ஆனால் சில நொடிகளில் அவன் தலையில்லாத முண்டம்!

அப்படியே உறைந்து போய்விட்டாள். கதையில் கூட அவன் இறப்பை ஏற்க முடியாமல் புத்தகத்தை தூர வைத்துவிட்டு படுக்கையில் சரிந்த பெண்ணவள் மனம் அவனை மட்டுமே நினைவில் நிறுத்தி கொண்டது. அவனை பற்றியே சிந்தித்தது. அந்த கதாபாத்திரத்தை உண்மையாக காண ஏக்கம் கொண்டது.

அந்த கார்மேக வர்ணனின் நிமிர்ந்த நடையும் கம்பீரமும் அவன் கூர் வாள் பேச்சும். அவன் முகத்தை அப்படியே மனதில் நிறுத்தி கொண்டிருந்தவள் அப்படியே உறங்கியும் போனாளே!
 




Priya kumar

SM Exclusive
Joined
Mar 6, 2019
Messages
350
Reaction score
2,215
Location
Madurai
அவளுக்கு சரித்திர நாவல் வாசிப்பது ஒன்றும் புதிதல்ல...ஆனால் இந்த நாவலைப் படித்த போது மட்டும் எதற்கு இந்தக் கனவு வர வேண்டும்... கனவில் கண்ட அவன் முகமும் பின்பு தலை கொய்யப்பட்ட அவன் உடலும் அவளை உலுக்கி எடுத்தன...அந்தக் கனவு அவளுக்கு ஏதோ கூற முற்படுவதை உணர்ந்தாள்...
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அந்த அதிகாலை வேளை வந்த அந்த கனவு, அவள் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வை நிகழ்த்த போகும் ஒரு அறிகுறியாக வந்ததை அவள் அப்பொழுது அறியவில்லை.

"அம்மா லேட் ஆகிடுச்சு காலேஜ்க்கு, சீக்கிரம் எனக்கு டிஃபன் எடுத்து வைங்க" என்று கூறிக் கொண்டே சமுத்திரா கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டு இருந்தாள்.

"ஆமா! தினமும் நைட் பொன்னியின் செல்வன் படிச்சிட்டு தூங்க உனக்கு இப்போ எல்லாம் லேட் ஆகிடுது" என்று நொடிதுக் கொண்டே அவர் அவளுக்கு வேண்டியதை செய்தார்.

அதை வழக்கம் போல் சட்டை செய்யாமல், சாப்பிட்டு முடித்து விட்டு அவர் கட்டிய மதிய உணவை எடுத்துக் கொண்டு தன் ஸ்கூட்டியில் கிளம்பினாள் கல்லூரிக்கு.

கல்லூரியில் வண்டியை அதன் இடத்தில் நிறுத்திவிட்டு, நேராக அவள் பயிலும் M.com வகுப்பிற்குள் நுழைந்தாள். அவளின் தோழிகள் அவளை சூழ்ந்து கொண்டு, நலம் விசாரித்தனர்.

அதன் பின் அங்கே வகுப்புகள் தொடங்க போகும் மணி அடிக்கவும், எல்லோரும் அவரவர் இடத்தில் முதல் வகுப்பு தொடங்க காத்து இருந்தனர்.

அப்பொழுது உள்ளே வந்தவனை பார்த்து, அதிர்ந்தாள் சமுத்திரா. அங்கே உள்ளே வந்தவனோ, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

"ஹாய்! ஐ அம் ஆதித்ய கரிகாலன் யுவர் நியூ management professor" என்றவனை பார்த்து பார்த்தபடி இருந்தாள் சமுத்திரா இனி அவளை ஆட்டி படைக்க போகும் அவளின் மணாளன்.
 




Last edited:

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அடுத்த பதிவை போட போகிறவர்கள் NEXT என்ற வார்த்தையை போட்டு அந்த இடத்தை முதலில் நிரப்பிவிட்டு பின் தொடரலாம். இதனால் குழப்பங்கள் நேரிடாது. அவர் எழுதி போடும் வரை மற்றவர் காத்திருக்கலாம் மக்களே !

இந்த வழிமுறையை பின்பற்றுவீர்களாக!!!
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
அன்று அவள் கவனம் பாடத்தில் துளியும் லயிக்கவில்லை. கனவின் வீரியம் குறையும் முன்னே, கண் முன் தோன்றியவனைக் கண்டு கலப்படமற்ற குழப்பம் கொண்டாள். அன்றைய வகுப்பறையில் அவன் எடுத்த பாடத்தில் கடுகளவு கூட ஏறவில்லை, அவளது காதல் புகுந்த மூளைக்குள் புகவில்லை.


கண்டவுடன் காதலா.. இல்லவே இல்லை… இது காலங்கள் கடந்து நிற்கும் காதல்… இல்லை.. நான் எப்படி இன்னொருவனை நினைக்க முடியும்.. எனக்காக நிச்சயக்கப்பட்டவன் இருக்கும் போது..


வகுப்பு முடிந்தவுடன்…. தன்னிலை மறந்து நடக்கத் தொடங்கினாள்…


திடுமென தன்னைக் கூப்பிடும் குரல் வரும் திசை நோக்கித் திரும்பினாள்…

மூச்சிரைக்க ஓடி வந்து அவள் அருகில் நின்றான்...ஆதித்த கரிகாலன்.. எதுவும் புரியாமல் அவனையே பார்த்தபடி நின்றாள்…

அவன் ஆரம்பித்தான்..

“உங்கள எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கு… உங்களுக்கு அந்த மாதிரி பீல் வருதா.. “

“பீலா.. “என்றாள் வித்தியாசமாக.

“ஐ மென்ட் பார்த்த மாதிரி.. “

இல்லை என்பது போல் தலையை அசைத்தாள்.

“ஓகே.. எப்பவாவது அந்த மாதிரி பீல் வந்தா சொல்லுங்க சமுத்திரா”என்று சொல்லிக்கொண்டே புரவியில் செல்லும் வீரனைப் போல் சென்று விட்டான்…

அன்றைய அஞ்சன இரவிலும்… அவளுக்குக் கனவு வந்தது… கனவில் காட்டுப் பாதையில் ஓடுகிறவளை ஓர் உருவம் துரத்திக் கொண்டு வருகிறது.. அதற்கு மேல் ஓட முடியாமல் ஒரு மரத்தின் மேல் சாய்ந்து நின்றவளை… அந்த உருவம் நெருங்கியது… மிரண்ட கண்களுடன் அந்த உருவத்தின் கையில் உள்ள வாளைப் பார்த்தாள்.. தன் உயிரை எடுக்க வந்து விட்டான் இந்தப் பாவி என நினைத்தாள்… தன் மனம் கவர்ந்தவன் வந்து, தன்னைக் காப்பாற்ற காதல் கடவுளிடம் வேண்டினாள்…இந்த காதல் கடவுள் கொஞ்சம் நல்ல கடவுள்… கைவிடவில்லை அவளை… சமுத்திராவைக் காக்க வந்து நின்றான் அவளுக்கும் அந்த உருவத்திற்கும் இடையே…

“சமுத்திரா எந்திரிடி…”

“என்னம்மா.. “

“உன்னப் பார்க்க… மாப்பிள்ளை வந்திருக்காரு.. சீக்கிரம் கிளம்பி வா“என்று சொல்லி விட்டுச் சென்றார்.

கடகடவென்று கிளம்பி வெளியே வந்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

கனவில் வந்த உருவங்கள் கண்ணில் தெரிந்தன…

கனவில்

காக்க வந்தவன்.. Management professer

வாளை ஏந்தி அழிக்க வந்தவன்… இப்பொழுது அவள் கண் முன் நிற்கும் முத்தழுகன்…
 




Last edited:

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
கல்லூரியில்மதிய இடைவேளையில் வகுப்பறையில் அமர்ந்திருந்தவளுக்கு , இந்த இரண்டு நாட்களில் தன் வாழ்க்கை இவ்வளவு திருப்பங்களுடன் செல்லும் என்பதை அவள் நினைத்திருப்பாளா?

கனவில் வந்த மன்னவன் நேரில் வந்ததும், கொல்ல வந்தவன் மணக்க கேட்டு வந்ததும், என அடுத்தடுத்து அதிர்ச்சியே அவளுக்கு.

வாழ்க்கை தனக்கு என்ன கொடுப்பதற்க்கு காத்திருக்கிறது என சத்தியமாய் அவளுக்கு தெரியவில்லை. நல்லதோ, கெட்டதோ அதன் போக்கிலே செல்ல முடிவெடுத்துவிட்டாள்.

அன்று பெண்பார்க்க வந்தவனை கண்டதும் அதிர்ச்சியில் நின்றவளுக்கு வேறு எதுவும் மனதில் பதியவில்லை. அவர்களுக்கு பெண்ணை பிடித்திருப்பதாகவும், விரைவில் நிச்சயம் வைத்துக்கொள்ளலாம் என கூறி சென்றனர்.

அவர்கள் சென்ற பிறகு அன்னை, தந்தையிடம், "ஏன் என்னை கேட்காமல் பெண்பார்க்க அழைத்தீர்கள் என ஆடித்தீர்த்து விட்டாள்".

அதை யோசித்துக்கொண்டு அமர்ந்திருந்தவளின் எதிரில் வந்து அமர்ந்தான் ஆதித்தன்.........

அவளின் விழிகளையே தீர்க்கமாக பார்த்து "என்ன தேவி திருமணம் நிச்சயமாகிவிட்டது போல? இனியும் உன்னை விட்டுவிடுவேன் என்று நினைத்து கலங்குகிறாயா? இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது. இம்முறை விதியை மதியால் வென்று நம் காதலை உலகுக்கு புரியவைப்பேன். இது அந்த பரமேஸ்வரன் மேல் ஆணை!!!!!"என சூளுரைத்தவனைக் கண்டு அவளுக்கு இதயம் தாளம் தப்பி அதிவேகமாக அடித்துக்கொள்ள இரண்டு நாட்கள் ஏற்பட்ட மனவுளைச்சலில் மயங்கி மேசையிலேயே சரிந்தாள்.
 




Last edited:

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
சரிந்த மணல் பரப்பில் ஆளரவமற்ற அந்த நதிகரையில் புற்களை போர்வையாக்கி... பூக்களை தலையனையாக்கி... சாய்ந்திருந்தான் அவளவன். அவன் மார்பை தலையனையாக்கி மஞ்சம் கொண்டிருந்தாள் சமுத்ரா...

"ஏழாயிரத்தி நூற்றித் தொண்ணூத்தி ஒன்பது..."

"எதையெண்ணுகிறீர்கள்?? நட்சத்திரத்தையா??"

"வள்ளுவனின் மூன்றாம் பாலில் எங்கு வந்தது நட்சத்திர சாஸ்திரம்... நான் தித்திக்கும் தேன் துளிகளை எண்ணிக்கொண்டிருக்கிறேன்."

"தேனா... ப்ச்ச்.. எனக்களிக்காமல் தனித்துண்டீரா??" மூக்கு நனிச் சிவந்தபடி கேட்டவளை... தன் பதிலால் கன்னக் கனி சிவக்க வைத்தான் அக்காதல் கள்வன்.

"நீ என் மார்பில் சிந்திய உன் இதழ்த் தேன் துளிகளைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறேன்.. அழகி.."

"கண்டுகொண்டீரா... பொல்லாதவர்தான் தாங்கள்... ஆமாம் அதென்ன கணக்கு ஏழாயிரத்தி நூற்றித் தொண்ணூத்தி ஒன்பது??"

"இப்போது ஏழாயிரத்தி இருநூறு..." என்று கண்சிமிட்டினான்.

"சொல்லுடா அழகா அந்த கணக்கைத்தான்.." என்று கொஞ்சினாள்.

"நாம் இங்கு வந்த இரண்டு மணி நேரத்தில் மொத்த விநாடிகள்... அழகி.."

"அதையெதற்கு இப்போது?????" கேட்டவள் பாதியிலேயே பதிலையுணர்ந்து.. வெக்கமிகுதியில் பேசாமடந்தையானாள்.

"முதலிலேயே கண்டுகெண்டீரா... அழகரே??"

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....... அதென்ன எதைப்பார்த்தும் எளிதில் பரவசமடையாத என்னழகி... இந்த அற்பனின் மார்பு மச்சத்திற்கு மயங்குகிறாய்???"

"என்ன இப்படி கேட்கிறீர்கள்??? உங்கள் மச்சத்தை உற்று கவனியுங்கள் ஆதித்யனான சூரியன் உமக்குள் நிறைந்தவள் உம் கடலழகி சமுத்ரா.."

"பிறப்பிலேயே உன்னை கொண்டவன் நான் அதுதானே மற்றொரு வியக்கத்தக்க காரணம்?!!"

"ம்ம்ம்ம்ம்" என்று மயங்கி பதிலளித்தாள் அக்காரிகை.

அவள் காதலனோ அவளிடம் வம்பு செய்ய எண்ணி ஆற்றுநீரை கைகளில் அள்ளி அவள் மீது தெளித்தான்....

மயக்கம் தெளிந்தவள் கண்டது தனக்கு மிக அருகே தன் கனவில் வந்த மச்சம் கொண்ட தன் அழகனை... ஆம் அவள் அழகன் ஆதித்த கரிகாலன்...
IMG_20190414_232618.jpg
Carry on darling @sandhiya sri
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
next....
படுக்கை அறையில் மயக்கத்தில் கிடைந்த சமுத்திராவின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார் அவளின் அம்மா.. அவள் கண்விழித்து பார்க்கும் பொழுது அவளின் அருகில் நின்றிருந்தான் கரிகாலன்..

அவனைப் பார்த்ததும், 'என்னோட அழகனா..' என்று அவனின் மச்சத்தை வைத்து கண்டுகொண்டவளின் உள்ளம் திக்கென்றது..

அவள் எழுந்ததும் தன்னோட கண்களை நம்ப முடியாமல் கண்ணிரண்டையும் கசக்கிக்கொண்டு அவனைப் பார்த்தாள்..

அவனும் அவளைப் பார்க்க,,"என்ன சமுத்திரா.. உனக்கு என்ன ஆச்சு" என்று அவளின் அம்மா அவளிடம் கேட்டார்.. அவருக்கு பதில் சொல்லாமல் அவர் தடுக்க தடுக்க அவர் சொல்வதைக் காதில் வாங்காமல் வேகமாக ஹாலிற்கு சென்று விட்டாள்..
அவளின் பின்னோடு அவரும் வந்தார்..

அவளின் அறையில் நின்றிருந்த கரிகாலனோ, 'ஐயோ இவளை வைத்துகொண்டு நான் என்ன பண்ண போறேனோ... அம்மா எனக்கு இப்போ கல்யாணம் ரொம்ப முக்கியமா..' என்றவன் மனதிற்குள் புலம்பினான்..

ஆனால் அவனின் மனமோ, 'சமுத்திரா' என்று அவளின் பெயரை உச்சரிக்க அவனின் உள்ளத்தில் ஒரு ஆழிப்பேரலை வேகமாக எழுந்தது.. அது ஏன் என்று அவனுக்கே தெரியவில்லை..

அவள் அறையில் இருந்து வெளியே வந்து முத்தழகனையும், அறையின் உள்ளே நின்ற கரிகாலனையும் மாறி மாறி பார்த்தாள்.. பி ஏனோ அவளின் பார்வை கரிகாலன் மீதே நிலைத்து நின்றுவிட அவனும் இமைக்காமல் பார்க்க அவனும் அவளையே பார்த்தான்..

சமுத்திராவால் இன்னும் நம்பமுடியவில்லை.. சில வினாடி திகைத்துத்தான் நின்றுவிட்டாள்.. அவளின் கனவில் நடக்கும் விஷயமும் இப்பொழுது நேரில் நடக்கும் விஷயமும் அவளை சில நாளாகவே குழப்பிக் கொண்டிருந்தது..

'நான் காண்பது கனவா..? இல்லை நிஜமா..?'

கனவில் நிழலென வரும் உருவங்கள் அனைத்தும் இப்பொழுது எதற்காக நேரில் வருகிறது..' என்று நினைத்தவளின் பார்வை முத்தழகன் மீது திரும்பியது..

'என்னை காப்பாற்ற வந்த கரிகாலனுக்கும் , இப்பொழுது என் என் கண்முன்னே நிற்கும் இவனுக்கும் என்ன சம்மதம்..?' என்று சமுத்திராவின் உள்ளம் நொடிபொழுதில் உலகத்தையே சுற்றிவந்தது..

அவளுக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாக புரிந்தது...

தன்னுடைய கனவில் நடக்கும் நடக்கும் காட்சிகள் சில மனிதர்கள் மட்டும் நிஜ உலகத்தில் இருக்கின்றனர் என்றால்...

தன்னுடைய வாழ்க்கையில் ஏதோவொரு விஷயம் முன் ஜென்மத்தில் நடந்திருக்குமோ என்று அவள் யோசிக்க,

என்னடா இது என்னோட வாழ்க்கை இப்போ ராம்சரண் நடித்த மாவீரன் படம் மாதிரி போகிறதே..

'ஐயோ ஆண்டவா.. என்னோட கனவுக்கும், அந்த கரிகாலன் சாருக்கு, இப்போ பொண்ணு பார்க்கிறேன் என்று வந்து நிற்கும் இவனுக்கும் என்ன சம்மதம்..'

அவளின் கேள்விக்கு விடை சொல்லாமல் விதி தன்னுடைய விளையாட தொடங்கிய வண்ணம், 'இத்தோடு முடிவதில்லை.. இது தொடக்கமே..' என்று புன்னகையோடு சென்றது..

அவள் அதிர்ச்சியில் சிலையென நிற்பதைப் பார்த்த முத்தழகன், "ஹலோ என்ன இப்படி நிக்கிறீங்க..?" என்று அவளிடம் கேட்டதும் நனவுலகிற்கு வந்தாள் சமுத்திரா..

அவனின் கேள்வியில், 'நான் எப்படி நிற்கிறேன்...' என்றுதன்னுடைய உடையை ஆராய்ந்தாள் சமுத்திரா..

அப்பொழுதுதான் அவளுக்கே ஒரு விஷயம் புரிந்தது..

காலையில் அம்மா எழுப்பிய அதிர்ச்சியில் நைட் போட்ட நைட்டியைமாற்றாமல் ஹாலிற்கு வந்து நின்றது..

அவளின் மனமோ, 'நல்ல வேலை நான் மணப்பெண் அலங்காரத்தில் வரல.. அப்படி நான் அலங்கார பண்ணனும் என்றால் அதுக்கு என்னோட கரிகாலன் என்னைப் பெண்பார்க்க வருகிறார் என்றால் நான் அலங்காரம் பண்ணிக்கிறேன்..' என்று நினைத்தவள்,

'இந்த மூஞ்சிக்கு இது போதும்..' என்று அவளின் அறையை நோக்கி நடந்தாள் சமுத்திரா... அவளை கேள்வியாக பார்த்தவன், "டேய் அண்ணா உனக்கு கல்யாணம் பண்ணி முடிப்பதற்குள் நீ எனக்கு கருமாதி பண்ணிருவான் போலவே.. எல்லாம் இந்த அம்மாவால் வந்தது..' என்று பல்லைக் கடித்தான் முத்தழகன்..

கரிகாலன் அறையைவிட்டு வெளியே செல்ல அவனைப் பார்த்தவண்ணம் நின்றாள் சமுத்திரா.. அந்தபிறகு அவள் அமைதியாக அவளின் அறைக்குள் செல்ல, "என்னடி மாப்பிள்ளை முன்னாடி மானத்தை வாங்கற.." என்றவர் கேட்டதும், "யாரும்மா மாப்பிள்ளை..?" என்றவள் கேட்டதும், "இவர்தான்.." என்று கரிகாலனைக் கைகாட்டினார் தாய்..

"ஐயோ என்னோட அழகனா.. ஹப்பாடா.. சமுத்திரா எஸ் ரெடி..' என்று நொடிபொழுதில் தயாரானாள் சமுத்திரா..

அவள் காபியுடன் வெளியே வர அவளைப் பார்த்த முத்தழகனின் பார்வையோ, 'இவங்களை நாம் எங்கோ பார்த்திருக்கிறோமே..' என்று யோசிக்க ஆரம்பித்தான்..
முத்தழகன்..

விதியின் விளையாட்டு ஆரம்பம் ஆனது..

பூக்குள் புகுந்த பூநாகம் போல அண்ணன், தம்பியின் இடையே சமுத்திரா நுழைந்தாள்.. அவள் பூவென்று கரிகாலனுக்கு தெரியும்.. கரிகாலன் வண்டென்று சமுத்ராவிற்கு தெரியும்.. இறுதியில் நாகம் யாராது.. முத்தழகனா.? இல்லை கரிகாலனின் அம்மாவா..?

கரிகாலனின் தாயருகே கரிகாலனைக் கொலைவெறியுடன் பார்த்த வண்ணம் நின்றிருந்தாள் நந்தனி.. கரிகாலனின் அத்தை மகள்...

முன் ஜென்மத்தின் பகை இகே தொடருமா..? யாரந்த நாகம்...???
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top