• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன் மழை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
இங்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்த அதே சமயம்,"நகரேஷூ காஞ்சி " என்று நகரங்களில் உயர்ந்ததாய் ,சிறப்பானதாய் சொல்ல படும் ,காஞ்சிபுரத்தின் எல்லையில் அமைந்து இருந்த அந்த தோப்பின் பாழ் அடைந்த கட்டிடத்தில் அமர்ந்து ஒருவன். அங்கு நடப்பதை நெருப்பு ஜுவாலையில் பார்த்து கொண்டு இருந்தான் .ஆம் நெருப்பில் அவன் அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்தான் .

உயரம் ஏழடி ,கண்கள் கோவை பழம் போலே சிவந்து இருந்தன கழுத்தில் சிறு பிள்ளைகளின் மண்டை ஒட்டு மாலை .கருப்பு நிற கோவணம் மட்டுமே அணிந்து இருந்தான் .வாய் விடாமல் ஏதோ ஒரு மந்திரத்தை ஜெபித்து கொண்டு இருந்தது ....தொடர்ந்து எட்டு கோடி முறையாய் விடாமல் .....

அவன் இருந்த தோப்பில் மட்டும் கருமேகம் சூழ்ந்து இருந்தது .கும்மிருட்டு -இதற்கும் பகல் வேலை .

காதில் கேட்கவே முடியாத ,புரிந்து கொள்ளவே முடியாத பாஷையில் அழுகுரல்கள் கேட்டு கொண்டு இருந்தது அந்த தோப்பில் இருந்து .இதய துடிப்பை நிச்சயம் நிறுத்தி விடும் அமானுஷயம் அங்கு நிறைந்து இருந்தது.

அந்த கட்டிடத்தின் பாதாளம் மூன்று ,நான்கு அடுக்குகள் பூமிக்கு உள்ளேயே சென்று இருந்தது.காற்று என்பதே இல்லாத அதள பாதாளம் .அங்கு நிறுவ பட்டு இருந்தது அந்தரத்தில் மிதக்கும் பெயர் சொல்ல முடியாத தீய சக்தியின் சிலை .அந்த சிலையின் தலை முடி காற்றில் ஆடி கொண்டு இருந்தது .கிட்டே நெருங்கி பார்த்தால் தான் அவை அனைத்தும் பாம்புகள் என்பதே தெரியும் ....மெதூசா என்ற கிரேக்க கடவுள் போலே.

அவன் முன் ஆடை அணியாத பெண் ஒருத்தி உடல் முழுவதும் ரத்த அபிஷேகம் செய்ய பட்டவளாய் தன் ப்ராக்ஜய் இன்றி இருந்தாள் .

"ம்ம் "என்ற அவன் கர்ஜனைக்கு உட்பட்டு அடுத்த நொடி எரிந்து கொண்டு இருந்த அக்னி குண்டத்தில் குதித்து விட்டாள் .

அவள் குதித்த மறுகணம் வானில் மின்னல் வெட்டியது .அந்த அக்னியில் இருந்து வெளிவந்தது ஒரு அழுகி போன கை .அதன் கரத்தில் மின்னியது வைர வாள் .காஞ்சிபுரத்தில் முன்பு இளவரசன் உயிர் போக காரணமாய் இருந்த அதே வாள் .சமுத்திராவின் கனவில் ஆதித்தன் தலை கொய்த அதே வாள் .

"இந்த தடவையும் உன் உயிர் பறிப்பேன் ஆதித்யா ....காஞ்சிபுரம் மீண்டும் எழும்ப விட மாட்டேன் ...மண்னோடு மண்ணாய் போன நீ கட்டிய தங்க அரண்மனை வெளி வர விடவே மாட்டேன் ......இது என் சபதம் ...எத்தனை பிறவிகள் எடுத்தாலும் ஜெயிக்க போவது நான் தான் .....இந்த முறை சமுத்திரா என்ற பெயரில் பிறந்து இருக்கும்பெண் மீண்டும் இரவில் நர பலி கொடுக்க போகிறேன்.அதற்கு தான் சமுத்ராவை மணக்கஉன் குடும்பத்தை அனுப்பி இருக்கேன். .....யார் வருவார் என்னை வெல்ல ?"என்ற அவன்-ரக்த பீஜன் என்னும் அரக்கனின் குரல் கேட்டு அந்த மாளிகையில் கண்ணுக்கு தெரியாத பலர் அழ ஆரம்பித்தனர்.

கரிகாலன் தாய் அருகே நிற்கும் நந்தினி யார்?...இந்த ரக்தபீஜன் யார் ?காஞ்சிபுரத்தின் நிலை என்ன ?தங்க அரண்மனை ரகசியம் என்ன?ஆதித்யன் இந்த ஜென்மத்தில் நல்லவனா கெட்டவனா ?
 




Attachments

Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
soundarya krish ud podunga.....me next
அனிதா அக்கா நான் தான் அவங்களுக்கு பிறகு
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
"யாரவள்? தேவலோக அப்ஸரசோ? அழகுக்கு இலக்கணமோ? யாரவள்?? உவமைக்கு பற்றாக்குறையானதே அவள் எழிலை எடுத்தோம்ப.. அடடா தேர் போல நெருங்கி வரும் தேவதையே.. ரதியுமே ரசிக்கும் பத்மினி வகை பெண்ணவள்...

கருவிழிகள் தான் கருந்துளையோ உள்ளீர்க்க?

நாசிதனின் அழகினை நவிலாதவரும் நல்லவறன்றே..

அதரங்கள் அருளும் அருளமுதை பருகத்தான் பாலை நிலமும் தவம் புரியுமோ?

கார்முகிலின் கருமையும் இவள் கருங்கூந்தலிடம் தான் கடன் பெற்றதோ??

குழலே உடையா? பிரித்தெரிய முடியாத இரட்டைகிளவி நீயடி..

தனங்களா இவை , அடடா கமல மொட்டும் முகம் வெட்டுகின்றதே பொறாமையால் தன்னை விட அதிகம் அழகு கலசங்களை கொண்ட யுவதி கண்டு..

ப்ரம்மனின் படைப்பின் சிறப்பின் உச்சம்..

கணநேரமும் தாங்காமல் வியப்பில் விழி விரிக்கும் உயிர்கள் உனைக்கண்டால் ..

தேஜஸ்வி..

திருமகளும் அலைமகளும் கலப்பரோ? அவ்விதம் கலந்தால் அவளை அழைப்பது எப்படி?"

"ஹும் ப்யூட்டி வித் ப்ரையின்.."
என்னடி எதையோ பினாத்திகிட்டு இருக்க என்னாச்சு குழலி உனக்கு என்ன குரலில் சமுத்திராவின் வரவை உணர்ந்தவள்...மலர்ச்சியோடு

"வாடி என் ஆழி* ... வாவிக்கரையோரம்* வளையோசை குலுங்க..உன் அன்புடையவரின் ஆணத்தில்* கட்டுண்ட என் திமி* அழகே" என்று கை விரித்து விடுதி சிப்பந்தி போல் தலை குனிந்து அழைத்த தோழியை கண்டு முறுவலுடன்

" என்னடி பேசற, ஒண்ணும் புரியல..
மேக்ஸ், சயன்ஸ் டிபார்ட்மெண்ட்ல ஃப்ரண்ட்ஸ் வச்சுருக்கறவயெல்லாம் நிம்மதியா இருக்கா.. தமிழ் டிபார்ட்மெண்ட்ல உனக்குன்னு ஃப்ரண்டா ஆகி என்னத்த கண்டா இந்த சம்மூ" என்று சந்தானத்தில் ஆரம்பித்து சௌகார் ஜானகியாய் முடித்தாள் சமுத்திரா..

ஹீம் அப்படியா?

"என்னவள் இவளென நீ பெருமையடைய எழுதியிருக்கேன் பார் ஒரு‌ பிட்டு...

பாதி தான்டி வர்ணிச்சு இருக்கேன் எழுதியவை படி"

என்று கல்லூரியில் அவள் துறையில் அவள் ஆராய்ச்சிக்காக சேகரித்த துணுக்குகளை சேர்த்து..எழுதி கொண்டிருந்த கட்டுறையின் பத்தியினை காண்பித்தாள், சமுத்திராவினை பொன்னியின் செல்வன் என்ற கடலில் மூழ்கடித்த காரிகை...

"யாரது அவ்வளவு பில்டப் கொடுத்த ஆளு? "

அவளின் கயல்கள் நீந்தமறந்ததேன்!!? தூரிகையில் வடித்த காரிகையை கண்டு..

சுந்தரனின்‌ குழவி
மௌனமொழியாளின் பூங்குரல்
ஆதித்தன் ஆலிங்கனம் செய்ய விரும்பிய பாழி
பாண்டியனின் கைப்பாவை..
இலக்கண பிழையென இலக்கியத்தால் மறைக்கப்பட்ட குடத்திலிட்ட விளக்கு
சாணிக்கியரின் பெண் உருவம்
அவளே...

வெப்பம் வெப்பம் உடல் முழுவதும்..கால்கள் துவள , கண்களின் ஒளி மறைக்க..இமைகளும் அணைத்து ஆலிங்கனம் செய்ய..மனமென்னும் தேரெரி எண்ணம் என்னும் புரவி பூட்டி..சமுத்திரா காண செல்வது, கண்டது யாரை ???? அவள் அறிந்தவரா? ஜென்மங்கள் பல தாண்டியும் நினைவோடு உறவாடும் அவ்வுயிர் யாருடையது..?

************

*ஆழி, திமி- கடல்
வாவி- நீர்நிலை(A lake)
ஆணத்தே-அன்பு (Affection)
 




Last edited:

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
சென்னையில் மீன் வாசம் வீசும் காசிமேடு...
சற்று ஒதுக்குப் புறமான ஏரியாவில், கடலோரத்தில் அமைந்திருந்த அந்த சிமெண்ட் ஷீட் போட்ட குடோனில், பரவலாக ஆட்களின் நடமாட்டம்.
"ஏ... மாரி... நாளைக்கு கப்பல்ல ஏத்த வேண்டிய சரக்கெல்லாம் ரெடியாடா?"

"அதெல்லாம் மதியமே ரெடி ண்ணா, இப்ப அடுத்த வாரத்துக்கான சரக்குதான் ரெடியாகிட்டு இருக்கு"
சிறிய அளவிலான மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை அது.
அது போக சிற்சில சட்ட விரோத காரியங்களும், கட்டப்பஞ்சாயத்துகளும் நடைபெறும்.
உப்பு வாசம் வீசும் காற்றை சுவாசித்தபடி, வெளியே வந்து நின்றான் அவன்.
ஆறடி உயரமும், ஆஜானுபாகுவான உடலமைப்பும், உழைத்து உரமேறிய தோள்களும், அவனருகில் வரவே அனைவரையும் அச்சப்படுத்தும்.
மேலேறிய புருவமும், இடுங்கிய கண்களும், கூர்ந்த அவன் பார்வையும் தொலைவில் வந்து கொண்டிருந்த வாகனத்தில் பதிந்தது.
அருகில் வந்த வாகனத்தில் இருந்து குதித்தவன்,
"வீரா , நம்ம பசங்க மேலேயே கை வச்சுட்டானுங்க "
கண்கள் சிவக்க, " எவன்டா அது நம்ம ஆளுங்க மேல கை வச்சது"
" எவனோ காலேஜு புரபசராம்"
" என்ன பிரச்சனைன்னு தெரியல, நம்ம குருதான் போன் பண்ணி சொன்னான்".
"ஏய் ஏறுடா வண்டில, இனிமே நம்ம பசங்க மேல எவனும் கை வைக்க யோசிக்கனும்"
"இந்த வீர பாண்டியன் யாருன்னு இன்னைக்கு தெரியும்டா"




கல்லூரியில்,
புழுதியைக் கிளப்பிக் கொண்டு அரை வட்டம் அடித்து நின்றது சுமோ.
அதிலிருந்து குதித்து இறங்கிய வீரபாண்டியன்,
" எவன்டா என் ஆளுங்க மேல கை வச்சவன்"
அவனது கர்ஜனையில் கல்லூரியே ஒரு முறை அதிர்ந்து அடங்கியது. வேடிக்கை பார்க்க வந்த மாணவர்கள் அலறி பின்வாங்கினர்.
அப்பொழுது,
"நான்தான் அடிச்சேன்"
குரல் வந்த திசையில் அவன் கண்கள் கண்டது ஆதித்த கரிகாலன்.
சிறு யோசனை அவனுள் எங்கோ கண்டிருக்கிறேன் இவனை...
கண நேரத்தில் சுதாரித்த வீரா,
ஆதித்தனை நெருங்கி
" என் ஆளு மேல கை வைக்க உனக்கு எவ்வளவு துணிச்சல்"
" அவன் செஞ்ச தப்புக்கு அவன் அடி வாங்குனான்"
" காலேஜ் காண்டினுக்கு மீன் சப்ளை செய்ய வந்தால் , அந்த வேலையை மட்டும் செய்யனும் . அத விட்டு காலேஜ் பொண்ணுங்களை வம்பிழுத்தான் அதான் அடிச்சேன்"


குருவிடம் நடந்ததை அறிந்து கொண்ட வீரா, அவனுக்கு ஒரு அறை பளார் என்று கொடுத்தவன், ஆதித்யாவிடம்,
" என் ஆளு மேல தப்பிருக்கறதால நீ தப்பிச்ச ஆனா என்னைக்காவது என்கிட்ட மாட்டுவடா..."
வீரா ஏறியதும் விருட்டென்று சுமோ கல்லூரி வளாகத்தை விட்டு சென்றது.
அவன் செல்லும் திசையில் , உதட்டில் உறையும் சிறு புன்னகையுடன் பார்வையை பதித்திருந்தவன் எண்ணத்தில் சிறு சலனம்...
இவன இதுக்கு முன்னே எங்கயோ பார்த்திருக்கேனோ....
 




Last edited:

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
ரக்த பீஜன் அரக்கனின் நெருப்பில் விழுந்து, தன்னை மாய்த்தவளின் ஆத்மா, அவள் உடலை விட்டுப் பிரிந்து சென்றது… அதற்கு இன்றைய பொழுதே வாழ்வதற்கு, இன்னொரு உடல் கிடைத்தது … அந்த உடல்… ஆதித்தியனின் அத்தை மகளான நந்தினி…

நந்தினி உடலில் புகுந்த ஆன்மா திட்டமிடத் தொடங்கியது… இந்த ஜென்மத்தில் ஆதித்தியனைப் பழிவாங்கியே தீரவேண்டும்… ஆனால் அதை எப்படிச் சாத்தியமாக்குவது.. சாத்தியமாக்க படவேண்டிய கட்டாயத்தில் அந்த ஆன்மா… அதற்குத் துணை நிற்கப் போவது இரண்டு விடயங்கள்… ஒன்று அத்தை மகள் நந்தினி மேலான முத்தழகனின் காதல்.. மற்றொன்று ஆதித்தியனுக்கு யானை பலம் சேர்க்கப் போகும் ‘சமுத்திராவின் காதலைப் ‘ பிரிக்கப்போகும் தேஜஸ்வி….

இன்றைய தினம் கல்லூரி அறையில்..

அடிவாங்கிய வீரபாண்டியன் வேறு யாரும் இல்லை… நகரேஷு காஞ்சியில் நெருப்பின் முன் அமர்ந்திருந்த ரக்த பீஜன் தான் மாற்று உருவில் வந்திருந்தான்… ஆதித்தியனின் வீரத்திற்குப் பதில் சொல்ல அவன் இன்னும் பற்பல செய்ய வேண்டி இருக்கிறது…. இன்று கல்லூரியே அருவருப்பாகப் பார்த்த வீரபாண்டியனை, இரு கண்கள் மட்டும் ஆசையோடு பார்த்தன.. அந்த கண்கள் சமுத்திராவின் தோழி தேஜஸ்வியினது…

அன்று இரவு சமுத்திரா நிம்மதியாக தூங்கச் சென்றாள்… ஆனால் இன்று கனவு ஆதித்தியனுக்கு வந்தது.. சற்று பின்னோக்கி சென்றது யுகங்கள்…

அது ஒரு அழகிய நகரம்… நகரேஷு காஞ்சி என்று பெயர்.. நகரத்தின் மக்கள் எல்லாம் சந்தோஷத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தனர்.. ஏனெனில் ஆண்டு வந்த மன்னர் பரம்பரை அப்படிப்பட்டது.. வானதி தான் அவர்களின் புதல்வர்களான ஆதித்தியன், முத்தழகன், தேஜஸ்வீ

ரக்தபீஜன், நந்தினி இவர்களது தாய் தந்தையர் இல்லாதவர்கள்… வானதியின் அண்ணன் மகவுகள்…

இந்த ராஜ்யத்தை பொருத்தமட்டில் தங்க மாளிகை என்று ஒன்று உள்ளது… யாருக்கு ராஜ்யத்தில் முதலில் திருமணம் நடக்கிறதோ அவர்களுக்கே அந்த தங்கமாளிகைச் சென்றடையும்.. ரக்த பீஜன், தேஜஸ்வி காதல் அங்கு எல்லாருக்கும் தெரிந்ததால், அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து தங்க மாளிகையைப் பரிசளிக்க நினைத்தான் ஆதித்தியன்…

தன் திருமணம் முடிந்தவுடன் தன் தங்கை நந்தினிக்கு ஆதித்தியனை மணமுடிக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் ரக்தபீஜன்…

ஆனால் முதலில் திருமணம் நடந்தது என்னவோ இளவரசன் ஆதித்தியனுக்கும் வேடவப் பெண்ணான சமுத்திரா தேவிக்கும்…
 




Last edited:

Priyaraji

நாட்டாமை
Joined
Jul 9, 2018
Messages
31
Reaction score
82
Location
Pondicherry
ரக்த பீஜன் அரக்கனின் நெருப்பில் விழுந்து, தன்னை மாய்த்தவளின் ஆத்மா, அவள் உடலை விட்டுப் பிரிந்து சென்றது… அதற்கு இன்றைய பொழுதே வாழ்வதற்கு, இன்னொரு உடல் கிடைத்தது … அந்த உடல்… கரிகாலனின அத்தை மகளான நந்தினி…

நந்தினி உடலில் புகுந்த ஆன்மா திட்டமிடத் தொடங்கியது… இந்த ஜென்மத்தில் ஆதித்த கரிகாலனைப் பழிவாங்கியே தீரவேண்டும்… ஆனால் அதை எப்படிச் சாத்தியமாக்குவது.. சாத்தியமாக்க படவேண்டிய கட்டாயத்தில் அந்த ஆன்மா… அதற்குத் துணை நிற்கப் போவது இரண்டு விடயங்கள்… ஒன்று அத்தை மகள் நந்தினி மேலான முத்தழகனின் காதல்.. மற்றொன்று கரிகாலனுக்கு யானை பலம் சேர்க்கப் போகும் ‘சமுத்திராவின் காதலைப் ‘ பிரிக்கப்போகும் தேஜஸ்வி….

இன்றைய தினம் கல்லூரி அறையில்..

அடிவாங்கிய வீரபாண்டியன் வேறு யாரும் இல்லை… நகரேஷு காஞ்சியில் நெருப்பின் முன் அமர்ந்திருந்த ரக்த பீஜன் தான் மாற்று உருவில் வந்திருந்தான்… கரிகாலனின் வீரத்திற்குப் பதில் சொல்ல அவன் இன்னும் பற்பல செய்ய வேண்டி இருக்கிறது…. இன்று கல்லூரியே அருவருப்பாகப் பார்த்த வீரபாண்டியனை, இரு கண்கள் மட்டும் ஆசையோடு பார்த்தன.. அந்த கண்கள் சமுத்திராவின் தோழி தேஜஸ்வியினது…

சிறிது நிமிடங்களுக்குப் பிறகு…

ஆதித்யா வகுப்பறையில் பாடங்களை நடத்திக் கொண்டிருந்தான்.. வழக்கம்போல் இல்லாமல், எந்த ஒரு குழப்பமும் இன்றி, தனக்காக நிச்சயக்கப்பட்ட மணவாளன் இவனே என்ற நம்பிக்கையுடன்… அவன் மீது காதல் பார்வைகள் வீசிக் கொண்டிருந்தாள்.. ‘வள்ளுவனின் மூன்றாம் பாலைப் பற்றிப் பேசியவன் எப்படி மேனேஜ்மென்ட் பற்றிப் பாடம் எடுக்கிறான்’ என்று சந்தேகத்தில் குழம்பினாள்… மார்பு மச்சத்தைப் பற்றியும் சிலசில சமயங்களில் வெட்கத்துடன் நினைத்துக் கொண்டாள்….

ஆனால் அவனோ ‘இவளை எப்படி சமாளிப்பது’ என்று தெரியாமல் பாடத்திலிருந்து கேள்வி ஒன்று கேட்டான் அவளிடம்… உடனே எழுந்து நின்றவள்..

“கார்மேகப் புரவியில் வந்தவனே காதல் பார்வைகள் தந்தவனே ஜென்மங்கள் தொடரும் துன்பத்தை தூர விரட்டித் தூக்கிச் செல்வாயா
தூர தேசத்திற்கு - - அங்கு
தங்க அரண்மனை புகுந்து
தாலி கட்டி வாழ வேண்டுமடா-உன்
மச்சம் வாழும்
மார்பில் இதழ் தேன் சிந்தி.. “

கேட்ட கேள்வி என்ன.. வந்த பதில் என்ன…
வகுப்பே சிரித்தது…

சிறிது நேரத்திற்கு பிறகு
கல்லூரி மரத்தடியில்..
கரிகாலனும் சமுத்திராவும்..

“எப்படி தூரதேச நாம ரெண்டு பேரும் மட்டும் போனா போதுமா.. இல்ல பேமிலியோட போனுமா.. “என்றான் கொஞ்சம் செல்லக் கோபத்தோடு..

பதில் ஏதுமின்றி தலை குனிந்து நின்றிருந்தாள்.

“அதென்ன கருப்புக் குதிரைலதான் போனுமா.. மத்ததில ஏற மாட்டீங்களா.. “

திரும்பவும் பதில் ஏதுமின்றி நின்றாள்.

“அன்னைக்கே பார்த்த மாதிரி இருக்கான்னு கேட்டேன்.. ஒன்னும் சொல்லல.. வீட்டுக்கு வந்தப்பவும் பெரிசா ஒன்னும் இல்ல.. இப்ப எப்படி இவ்வளவு.. “

அமைதியாக நின்றாள்..

“இப்படியே கிளாஸ்ல பேசினா, கண்டிப்பா தூர தேசம் போய்ருவோம்… “

‘ஏன்’ என்பது போல் பார்த்தாள்..

“ஏன்னா வேல போயிரும்… “

“பீலாகிருச்சிப்பா…அதான் அப்படி பேசிட்டேன்.. “என்றாள் குழைந்ந குரலில்…

அவனும் சிரித்தான்.. பின் அவளும் சிரித்தாள்..

இதை இரண்டு கண்கள், மிகுந்த பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தன.. அந்த கண்களுக்கு சொந்தக்காரியும் தேஜஸ்வி…
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
ரக்தபீஜன் தன் காதல் வசப்பட போகின்றது என்ற சந்தோஷத்தை விட மாநகரத்தின் ஒரு தங்க மாளிகை தன் கைவசம் வருகிறது என்றே மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தான்.. திருமண நாளை நோக்கி நகரமே நகரத் தொடங்கியது.. நகரங்கள் எங்கும் அலங்கார அகல் விளக்குகளும் தோரணங்களும், அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இருந்தது… திருமணத்திற்காக நகரத்தைச் சேர்ந்த அனைவரும் வரவழைக்கப்பட்டனர்…

திருமண நாளுக்கு முந்தைய இரவு ஆதித்தியனும் ரக்தபீஜனும் பேசிக் கொண்டிருந்தனர்.. பேச்சுவாக்கில் ரக்தபீஜன்…

“என் திருமணம் முடிந்ததும், உனக்கும் நந்தினிக்கு திருமணம் நடக்க வேண்டும் ஆதித்தியா.. “

ஆதித்தியனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“எனது வாழ்வை நிர்ணயிக்கும் உரிமையை உனக்கு யார் கொடுத்தார்கள்… அத்தோடு எனக்கு நந்தினி மீது திருமணம் சம்பந்தமாக எந்த எண்ணங்களும் இல்லை.. “ என்றான் தெளிவாக.

“ஆனால் என் தங்கைக்கு உன் மீது விருப்பம் இருக்கிறது.. “

“அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.. “

“எனக்கு என் தங்கை முக்கியம் ஆதித்தியா.. அவளின் ஆசை அதைவிட முக்கியம்… “

“அதற்காக எனது ஆசைகளை நான் மண்ணோடு மண்ணாக்க முடியாது.. “

“ஆசையா உன்னாசை என்ன… “

“வேடவப் பெண்ணான சமுத்திரா தேவியை மனதார விரும்புகிறேன்… புரிந்து கொள்.. “

“இது என்ன புதிய உறவு.. எனக்குத் தெரியாமல்… “

“உனக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்லை… “

ரக்தபீஜனுக்கு கோபம் தலைக்கேறியது.. வாய் வார்த்தையை விட்டான்..

“என் தங்கை திருமணம் நடக்கவில்லை என்றால்… உன் தங்கை திருமணமும் நடக்காது ஆதித்தியா.. “

“இப்படி பேச உனக்கு வெட்கமாக இல்லை… என் தங்கை உன் மீது அதீத காதல் கொண்டிருக்கிறாள்… “

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே.. அங்கு நந்தினியும் வந்து சேர்ந்தாள்.

“என்ன அண்ணா சொல்கிறார் இவர்… புதிதாய் ஒரு காதல் கதை.. “

அதன்பிறகு மூன்று பேருமே கனலின் சூடு கொண்ட பேச்சுக்களையே பேசிக்கொண்டிருந்தனர்.. கடைசியில் திருமணம் நிறுத்த வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது… நிறுத்தவும் பட்டது…

தன் தங்கையின் முகத்தை பார்க்க முடியாமல், ஆதித்தியனும் முத்தழகனும் புரவியை எடுத்துக் கொண்டு காட்டிற்குள் புகுந்தனர்..

முத்தழகன் அறிவான்.. ஆதித்தியன் மனதில் என்ன ஓடுகிறது என்று… அவனுக்கு ஒரு புறமாக மனம் கவர்ந்த சமுத்திராவின் எண்ணங்கள்.. மற்றொருபுறம் மணக்க நினைத்த நந்தினியின் ஏக்கங்கள்… இரண்டும் அவனை கொன்று தின்றது…

அவர்கள் சென்று கொண்டிருக்கும் போது.. புரவியின் எதிரே வந்து நின்றாள், கண்களில் கண்ணீரோடு சமுத்திரா.... அவளுக்கும் விஷயம் தெரிந்திருந்தது…

“என்ன தேவி… “என்று புரவியிலிருந்து இறங்கி வந்து கேட்டான் இளவரசன்ஆதித்தியன்…

“இதுதான் உங்கள் வழக்கமா… “

“ என்ன தேவி ..புரியவில்லை.. “

“பிரச்சனை என்றால் அதை விட்டுவிட்டு ஓடிச் செல்வது… “

“இல்லை தேவி.. என் தங்கையின் முகத்தில் என்னால் விழிக்க முடியவில்லை… “

“இதற்கு, எங்கள் இனம் பலிகடாக வேண்டுமா… “

“என்ன சொல்லுகிறாய்.. ஒன்றும் புரியவில்லை… “

“உங்கள் தங்கையின் கணவராக இருந்திருக்க வேண்டியவர் ஆட்களை கூட்டி வந்து எங்கள் வீடுகளை எல்லாம் அடித்து உடைக்கிறார்கள்.… உங்கள் மீது உள்ள கோபத்தை எங்களிடம் காட்டுகிறார்… “

அவளே தொடர்ந்தாள்..
“நான் தான் முட்டாள்.. தகுதி அறிந்து மனம் பரிமாறிக் கொண்டிருக்க வேண்டும்… “

அந்த வார்த்தையில் ஆதித்தியன் துணுக்குற்றான்.. உடனே அருகில் இருந்த மரத்தின் பூக்களை எடுத்து மாலையாக தொடுத்தான்.. அவள் கழுத்தில் அதை அணிவித்து அக்கணமே அவளை மணம் புரிந்தான்…

இங்கு இந்தப் பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே… அரண்மனையில் நந்தினிக்கும் ரக்தபீஜனும் பேச்சு வந்தது

“யார் அண்ணா, அந்த சமுத்திரா தேவி உனக்கு தெரியுமா.. “என்று கேட்டாள்..

“ஆம் தெரியும்.. ஆனால் காதல் என்று தெரியாது.. “

“எப்படி தெரியும்.. “

“ஒருநாள் காட்டு வழியில் போகும் போதுதான் அவளைப் பார்த்தேன்.. சிறு சலனம் கொண்டேன்… பின் அவளை துரத்திப் பிடிக்கச் செல்லும் போதுதான் முத்தழகன் வந்து அவளைக் காக்க வாள்பிடித்து நின்றான்.. பின் சிறிது நேரத்திலேயே இருவருக்கும் இடையிலேயே ஆதித்தியன் வந்து நின்றான்( இன்றைய சமுத்திரா வின் கனவில் வந்தது) … ஆனால் அப்போது அவர்கள் ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிறார்கள் என்றுதான் நினைத்தேன்… அது கரிகாலன் மனம் கவர்ந்தவள் என்று எனக்குத் தெரியாது… “

“உன்னுடைய இந்த புத்தியால், இப்போது எவ்வளவு பிசகு ஆகிவிட்டது என்று பார்.. இப்போது என்ன செய்ய… “

பின் அவளே தொடர்ந்தாள்…
“அவரிடம் போய் மன்னிப்பு கேட்போம்… பிறகு திருமணம் பற்றிய அவரது முடிவை மாற்றலாம்.. நாம் நினைத்தது நடக்க வேண்டும் அண்ணா.. “

அப்படித்தான் அவர்கள் இருவரும் இளவரசு ஆதித்தியனை தேடிக்கொண்டு காட்டிற்குள் வந்தனர்…

காட்டிற்குள்…
திடீரென்று புரவிகள் வரும் சத்தம் கேட்டது.. சத்தம் கேட்ட திசையை நோக்கிப் பார்க்கும் பொழுதுதான் ரக்தபீஜனும் அவன் தங்கை நந்தினியும் வந்து கொண்டிருந்தனர்…

வந்து பார்த்தவர்களுக்கோ அதிர்ச்சி… ஆதித்தியாவும் சமுத்திராவும் மாலைமாற்றி இருந்தனர்.. இதைப் பார்த்த அண்ணன் தங்கை இருவருக்கும் கோபம் அதிகமாகியிருந்தது…

கோபத்தில் வாக்குவாதங்கள் தொடங்கின.. வாக்குவாதங்கள் சண்டையாக மாறின.. சண்டையின்போது சமுத்திராவின் நாயகன் தலை துண்டிக்கப்பட்டது (இன்றைய சமுத்திரா வின் கனவில் வந்தது) … தன் மன்னவன் தன் முன்னே மடிவதைக் கண்கூடாகப் பார்த்த சமுத்திரா அதிர்ந்து நின்றாள்…

சமுத்திரா அளவு கடந்த கோபம் கொண்டாள்… ஆங்காரமாக மாறியது அவளது கோபம்.. ஏற்கனவே அவளது குலத்தினரின் வீடுகளை அழித்த கோபம்.. இப்போது தன் உயிரையே பறித்து விட்டது போல் ஒரு சோகம்.. இரண்டும் சேர்ந்த கத்தினாள்..

“என்ன காரியம் செய்து விட்டீர்கள் அண்ணன் தங்கை இருவரும் சேர்ந்து… கேவலம் ஒரு தங்க மாளிகைக்காகவா இந்த நிகழ்வு… ஆசைப்பட்டீர்கள் அல்லவா… அந்த தங்க மாளிகை யாருக்கும் கிடைக்காது… நான் இவரை விரும்பியது உண்மை என்றாள், அந்தத் தங்க மாளிகை மண்ணோடு மண்ணாக இன்றே புதைந்து போகும்… உங்கள் யாருக்கும் கிடைக்காது… இந்த ஜென்மத்தில் இவருடன் வாழாத நான்… அடுத்து வரும் ஜென்மங்களில் இவருக்காகவே பிறந்து, வளர்ந்து அவரை மணமுடித்து, தங்க மாளிகையை மீட்டு எடுப்போம்… “

என்று சூளுரை உரைத்து.. தன் மணவாளன் மேலே விழுந்தே, மரணத்தைத் தழுவினாள்…

ரத்தபீஜனும் சூளுரைத்தான்.. “என் தங்கைக்கு கிடைக்காத ஒன்று, எந்த ஜென்மத்திலும் உனக்கு கிடைக்க விடமாட்டேன்.. அதேபோல் அந்தத் தங்க மாளிகையையும் மீட்டு எடுக்க விடாமல் பாதுகாப்பேன்.... “

இந்தக் கனவு இன்று சமுத்திரா தவிர. ரக்தபீஜன் இருக்கிற வீரபாண்டியன்.. நந்தினிக்குள் புகுந்த அந்த ஆத்மாவினால் நந்தினிக்கு… முத்தழகன்… தேஜஸ்வி… என எல்லாருக்கும் வந்தது…

கனவிலிருந்த விழித்த ஆதித்தியா… இதை எப்படியாவது சமுத்திராவிடம் கூறி.. இந்த ஜென்மத்திலாவது அவள் கரம் பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்..
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
ரக்தபீஜன் தன் காதல் வசப்பட போகின்றது என்ற சந்தோஷத்தை விட மாநகரத்தின் ஒரு தங்க மாளிகை தன் கைவசம் வருகிறது என்றே மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தான்.. திருமண நாளை நோக்கி நகரமே நகரத் தொடங்கியது.. நகரங்கள் எங்கும் அலங்கார அகல் விளக்குகளும் தோரணங்களும், அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இருந்தது… திருமணத்திற்காக நகரத்தைச் சேர்ந்த அனைவரும் வரவழைக்கப்பட்டனர்…

திருமண நாளுக்கு முந்தைய இரவு ஆதித்த கரிகாலனும் ரக்தபீஜனும் பேசிக் கொண்டிருந்தனர்.. பேச்சுவாக்கில் ரக்தபீஜன்…

“என் திருமணம் முடிந்ததும், உனக்கும் நந்தினிக்கு திருமணம் நடக்க வேண்டும் கரிகால.. “

கரிகாலனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“எனது வாழ்வை நிர்ணயிக்கும் உரிமையை உனக்கு யார் கொடுத்தார்கள்… அத்தோடு எனக்கு நந்தினி மீது திருமணம் சம்பந்தமாக எந்த எண்ணங்களும் இல்லை.. “ என்றான் தெளிவாக.

“ஆனால் என் தங்கைக்கு உன் மீது விருப்பம் இருக்கிறது.. “

“அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.. “

“எனக்கு என் தங்கை முக்கியம் கரிகாலா.. அவளின் ஆசை அதைவிட முக்கியம்… “

“அதற்காக எனது ஆசைகளை நான் மண்ணோடு மண்ணாக்க முடியாது.. “

“ஆசையா உன்னாசை என்ன… “

“வேடவப் பெண்ணான சமுத்திரா தேவியை மனதார விரும்புகிறேன்… புரிந்து கொள்.. “

“இது என்ன புதிய உறவு.. எனக்குத் தெரியாமல்… “

“உனக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்லை… “

ரக்தபீஜனுக்கு கோபம் தலைக்கேறியது.. வாய் வார்த்தையை விட்டான்..

“என் தங்கை திருமணம் நடக்கவில்லை என்றால்… உன் தங்கை திருமணமும் நடக்காது கரிகாலா.. “

“இப்படி பேச உனக்கு வெட்கமாக இல்லை… என் தங்கை உன் மீது அதீத காதல் கொண்டிருக்கிறாள்… “

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே.. அங்கு நந்தினியும் வந்து சேர்ந்தாள்.

“என்ன அண்ணா சொல்கிறார் இவர்… புதிதாய் ஒரு காதல் கதை.. “

அதன்பிறகு மூன்று பேருமே கனலின் சூடு கொண்ட பேச்சுக்களையே பேசிக்கொண்டிருந்தனர்.. கடைசியில் திருமணம் நிறுத்த வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது… நிறுத்தவும் பட்டது…

தன் தங்கையின் முகத்தை பார்க்க முடியாமல், ஆதித்ய கரிகாலனும் முத்தழகனும் புரவியை எடுத்துக் கொண்டு காட்டிற்குள் புகுந்தனர்..

முத்தழகன் அறிவான்.. ஆதித்த கரிகாலன் மனதில் என்ன ஓடுகிறது என்று… அவனுக்கு ஒரு புறமாக மனம் கவர்ந்த சமுத்திராவின் எண்ணங்கள்.. மற்றொருபுறம் மணக்க நினைத்த நந்தினியின் ஏக்கங்கள்… இரண்டும் அவனை கொன்று தின்றது…

அவர்கள் சென்று கொண்டிருக்கும் போது.. புரவியின் எதிரே வந்து நின்றாள், கண்களில் கண்ணீரோடு சமுத்திரா.... அவளுக்கும் விஷயம் தெரிந்திருந்தது…

“என்ன தேவி… “என்று புரவியிலிருந்து இறங்கி வந்து கேட்டான் ஆதித்ய கரிகாலன்…

“இதுதான் உங்கள் வழக்கமா… “

“ என்ன தேவி ..புரியவில்லை.. “

“பிரச்சனை என்றால் அதை விட்டுவிட்டு ஓடிச் செல்வது… “

“இல்லை தேவி.. என் தங்கையின் முகத்தில் என்னால் விழிக்க முடியவில்லை… “

“இதற்கு, எங்கள் இனம் பலிகடாக வேண்டுமா… “

“என்ன சொல்லுகிறாய்.. ஒன்றும் புரியவில்லை… “

“உங்கள் தங்கையின் கணவராக இருந்திருக்க வேண்டியவர் ஆட்களை கூட்டி வந்து எங்கள் வீடுகளை எல்லாம் அடித்து உடைக்கிறார்கள்.… உங்கள் மீது உள்ள கோபத்தை எங்களிடம் காட்டுகிறார்… “

அவளே தொடர்ந்தாள்..
“நான் தான் முட்டாள்.. தகுதி அறிந்து மனம் பரிமாறிக் கொண்டிருக்க வேண்டும்… “

அந்த வார்த்தையில் ஆதித்ய கரிகாலன் துணுக்குற்றான்.. உடனே அருகில் இருந்த மரத்தின் பூக்களை எடுத்து மாலையாக தொடுத்தான்.. அவள் கழுத்தில் அதை அணிவித்து அக்கணமே அவளை மணம் புரிந்தான்…

இங்கு இந்தப் பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே… அரண்மனையில் நந்தினிக்கும் ரக்தபீஜனும் பேச்சு வந்தது

“யார் அண்ணா, அந்த சமுத்திரா தேவி உனக்கு தெரியுமா.. “என்று கேட்டாள்..

“ஆம் தெரியும்.. ஆனால் காதல் என்று தெரியாது.. “

“எப்படி தெரியும்.. “

“ஒருநாள் காட்டு வழியில் போகும் போதுதான் அவளைப் பார்த்தேன்.. சிறு சலனம் கொண்டேன்… பின் அவளை துரத்திப் பிடிக்கச் செல்லும் போதுதான் முத்தழகன் வந்து அவளைக் காக்க வாள்பிடித்து நின்றான்.. பின் சிறிது நேரத்திலேயே இருவருக்கும் இடையிலேயே ஆதித்ய கரிகாலன் வந்து நின்றான்( இன்றைய சமுத்திரா வின் கனவில் வந்தது) … ஆனால் அப்போது அவர்கள் ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிறார்கள் என்றுதான் நினைத்தேன்… அது கரிகாலன் மனம் கவர்ந்தவள் என்று எனக்குத் தெரியாது… “

“உன்னுடைய இந்த புத்தியால், இப்போது எவ்வளவு பிசகு ஆகிவிட்டது என்று பார்.. இப்போது என்ன செய்ய… “

பின் அவளே தொடர்ந்தாள்…
“அவரிடம் போய் மன்னிப்பு கேட்போம்… பிறகு திருமணம் பற்றிய அவரது முடிவை மாற்றலாம்.. நாம் நினைத்தது நடக்க வேண்டும் அண்ணா.. “

அப்படித்தான் அவர்கள் இருவரும் ஆதித்ய கரிகாலனை தேடிக்கொண்டு காட்டிற்குள் வந்தனர்…

காட்டிற்குள்…
திடீரென்று புரவிகள் வரும் சத்தம் கேட்டது.. சத்தம் கேட்ட திசையை நோக்கிப் பார்க்கும் பொழுதுதான் ரக்தபீஜனும் அவன் தங்கை நந்தினியும் வந்து கொண்டிருந்தனர்…

வந்து பார்த்தவர்களுக்கோ அதிர்ச்சி… ஆதித்த கரிகாலனும் சமுத்திராவும் மாலைமாற்றி இருந்தனர்.. இதைப் பார்த்த அண்ணன் தங்கை இருவருக்கும் கோபம் அதிகமாகியிருந்தது…

கோபத்தில் வாக்குவாதங்கள் தொடங்கின.. வாக்குவாதங்கள் சண்டையாக மாறின.. சண்டையின்போது ரக்தபீஜனால் ஆதித்த கரிகாலனின் தலை துண்டிக்கப்பட்டது (இன்றைய சமுத்திரா வின் கனவில் வந்தது) … தன் மன்னவன் தன் முன்னே மடிவதை கண்கூடாகப் பார்த்த சமுத்திர அதிர்ந்து நின்றாள்…

சமுத்திராதேவி அளவு கடந்த கோபம் கொண்டாள்… ஆங்காரமாக மாறியது அவளது கோபம்.. ஏற்கனவே அவளது குலத்தினரின் வீடுகளை அழித்த கோபம்.. இப்போது தன் உயிரையே பறித்து விட்டது போல் ஒரு சோகம்.. இரண்டும் சேர்ந்த கத்தினாள்..

“என்ன காரியம் செய்து விட்டீர்கள் அண்ணன் தங்கை இருவரும் சேர்ந்து… கேவலம் ஒரு தங்க மாளிகைக்காகவா இந்த நிகழ்வு… ஆசைப்பட்டீர்கள் அல்லவா… அந்த தங்க மாளிகை யாருக்கும் கிடைக்காது… நான் இவரை விரும்பியது உண்மை என்றாள், அந்தத் தங்க மாளிகை மண்ணோடு மண்ணாக இன்றே புதைந்து போகும்… உங்கள் யாருக்கும் கிடைக்காது… இந்த ஜென்மத்தில் இவருடன் வாழாத நான்… அடுத்து வரும் ஜென்மங்களில் இவருக்காகவே பிறந்து, வளர்ந்து அவரை மணமுடித்து, தங்க மாளிகையை மீட்டு எடுப்போம்… “

என்று சூளுரை உரைத்து.. அந்த ஆதித்த கரிகாலனின் மேலே விழுந்தே, மரணத்தைத் தழுவினாள்…

ரத்தபீஜனும் சூளுரைத்தான்.. “என் தங்கைக்கு கிடைக்காத ஒன்று, எந்த ஜென்மத்திலும் உனக்கு கிடைக்க விடமாட்டேன்.. அதேபோல் அந்தத் தங்க மாளிகையையும் மீட்டு எடுக்க விடாமல் பாதுகாப்பேன்.... “

இந்தக் கனவு இன்று சமுத்திரா தவிர. ரக்தபீஜன் இருக்கிற வீரபாண்டியன்.. நந்தினிக்குள் புகுந்த அந்த ஆத்மாவினால் நந்தினிக்கு… முத்தழகன்… தேஜஸ்வி… என எல்லாருக்கும் வந்தது…

கனவிலிருந்த விழித்த கரிகாலன்… இதை எப்படியாவது சமுத்திராவிடம் கூறி.. இந்த ஜென்மத்திலாவது அவள் கரம் பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்..
இங்கே நந்தினியின் உடம்பில் புகுந்த ஆன்மா தன் வேலையை காட்ட ஆரம்பித்திருந்தது.
கெட்ட சக்திகளின் கூட்டு அழிந்த போன புதையலை தேடுவது போல் தங்க மாளிகையை கைப்பற்ற வீரா வை கொண்டு சிறப்பு பூஜையை தொடங்கியது .
தனது விருப்பமின்னமயை காண்பித்த வீராவையும் தாக்க அஞ்சவில்லை .இப்பொழுது வீராவும் தேஜூவும் நந்தினியின் கைபொம்மைகளாய் ஆக்கப்பட்டனர் . மறுபடியும் ரத்தப்பலி நடத்த அதற்குரிய வேலைகள் தொடங்கப்பட்டன. தீய சக்தியின் சிலை முன் மீண்டும் ஒரு பெண் பலி கொடுக்க பட்டு புதைந்து போன தங்க அரண்மனையை மீட்க ரகசியம் கேட்க பட்டது
 




Last edited:

Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் அங்கே விதிக்கு என்ன வேலை...
நந்தினியும் ரக்தபீஜன்னும் சந்தித்து கொண்டார்கள். இது எதிர்பார்த்த சந்திப்பா அல்லது எதிர்பாரா சந்திப்பு என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம்..

தூக்கத்திலிருந்து எழுந்த நந்தினி இது கனவா அல்லது நினைவா என்று உணரும் முன்னே நந்தினியின் ஆத்மாவால் நேரே சென்று நின்ற இடம் ரத்தபீஜன்னிடம்.

நீ வருவாய் என்று எதிர்பார்த்திருந்தேன் தங்கையே. ஆம் அண்ணா எனக்கு இருப்பதோ நீ ஒருவன் தான் உன்னிடம் வராமல் நான் எங்கு செல்வேன் நான் இப்பொழுது வந்ததும் ஒரு முக்கியமான விடயத்தை உன்னிடம் பகிரத்தான்.


அண்ணா உனக்கே தெரிந்திருக்கும் சமுத்திராவை தவிர அனைவருக்கும் முன்ஜென்ம கதை நினைவு வந்து விட்டது என்று.

அந்த கரிகாலன் சமுத்திராவிடம் இதை சொல்வதற்கு முன்பு ஏதாவது செய்து என்னை அவனிற்கு திருமணம் செய்து கொடு இல்லையேல் சமுத்திராவை இந்த முறையும் கொன்றுவிடு.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top