• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன் மழை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் அங்கே விதிக்கு என்ன வேலை...
நந்தினியும் ரக்தபீஜன்னும் சந்தித்து கொண்டார்கள். இது எதிர்பார்த்த சந்திப்பா அல்லது எதிர்பாரா சந்திப்பு என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம்..

தூக்கத்திலிருந்து எழுந்த நந்தினி இது கனவா அல்லது நினைவா என்று உணரும் முன்னே நந்தினியின் ஆத்மாவால் நேரே சென்று நின்ற இடம் ரத்தபீஜன்னிடம்.

நீ வருவாய் என்று எதிர்பார்த்திருந்தேன் தங்கையே. ஆம் அண்ணா எனக்கு இருப்பதோ நீ ஒருவன் தான் உன்னிடம் வராமல் நான் எங்கு செல்வேன் நான் இப்பொழுது வந்ததும் ஒரு முக்கியமான விடயத்தை உன்னிடம் பகிரத்தான்.


அண்ணா உனக்கே தெரிந்திருக்கும் சமுத்திராவை தவிர அனைவருக்கும் முன்ஜென்ம கதை நினைவு வந்து விட்டது என்று.

அந்த கரிகாலன் சமுத்திராவிடம் இதை சொல்வதற்கு முன்பு ஏதாவது செய்து என்னை அவனிற்கு திருமணம் செய்து கொடு இல்லையேல் சமுத்திராவை இந்த முறையும் கொன்றுவிடு.
இந்த பேச்சை கேட்டுத்தான் வீரா அதிர்ந்து போனது தனது பேராசையே தன்னையும் , தன் தங்கையையும் பலி கொண்டு விட்டது என்பதை நினைத்து மனம் நொடிந்து போனவன் தீய சக்தியின் வழி நடக்க தொடங்கினான் . இல்லாவிட்டால் அவனுடைய தேஜஸ்வியை பலியாக்கி கொள்வேன் என்று அவனிடம் கெக்கரித்தது
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
இங்கே நந்தினியின் உடம்பில் புகுந்த ஆன்மா தன் வேலையை காட்ட ஆரம்பித்திருந்தது.
கெட்ட சக்திகளின் கூட்டு அழிந்த போன புதையலை தேடுவது போல் தங்க மாளிகையை கைப்பற்ற வீரா வை கொண்டு சிறப்பு பூஜையை தொடங்கியது .
தனது விருப்பமின்னமயை காண்பித்த வீராவையும் தாக்க அஞ்சவில்லை .இப்பொழுது வீராவும் தேஜூவும் நந்தினியின் கைபொம்மைகளாய் ஆக்கப்பட்டனர் . மறுபடியும் ரத்தப்பலி நடத்த அதற்குரிய வேலைகள் தொடங்கப்பட்டன. தீய சக்தியின் சிலை முன் மீண்டும் ஒரு பெண் பலி கொடுக்க பட்டு புதைந்து போன தங்க அரண்மனையை மீட்டு ரகசியம் கேட்க பட்டது
அந்த ரகசியம் என்னவென்றால் சமுத்திராவின் வலது கையில் உள்ள நட்சத்திர மச்சத்தில் இருந்து விழும் குருதியே தங்க அரண்மனையை அடையும் வழி.

தங்க அரண்மனை என்பதால் அதனை காக்கும் பொறுப்பு காத்தியாயினி எனும் பெண் கடவுளிடமே உள்ளது.

காத்தியாயினி இடமிருந்து தங்க அரண்மனையை எப்படி மீட்பது என்று
தெரிய மறுபடியும் நந்தினி ஒரு பெண்ணை பலிகொடுத்து கோடி முறை மந்திர உபாசனைகள் சொல்லி தீய சக்தியின் கடவுளிடமிருந்து விடை தெரிந்து கொண்டாள்.


அதாவது நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் போதையன அம்மாவாசை நள்ளிரவில் காத்தியாயினியின் சக்திகள் குறைந்திருப்பது என்பது தான் அது. அப்பொழுது வெகு சுலபமாக தங்க அரண்மனையை மீட்டு விடலாம்.


இன்னும் இரண்டு நாட்களில் போதையன அம்மாவாசை வருவதால் நந்தினி வெகு வேகமாக காய்களை நகர்த்த தொடங்கினாள்.


இவர்களுக்கு யார் சொல்வது காத்தியாயினியின் மறு உருவம் தான் சமுத்திரா என்று.
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
என்றும் எதிலும் உறைந்திருக்கும் பெண் காவல் தெய்வமாம் கார்தியாயினியின் மருவுருவம் தான் சமுத்திரா என்றாலும் அவளின்னும் அதை உணரவில்லையே. அவளுக்கு உண்மையை உணர்த்த நேரம் வந்துவிட்டதை அறிந்த கார்த்தியாயினி இன்று அவள் கனவில் தோன்ற முடிவு செய்தது.
அந்த ஆற்றங்கரையோரம் சமுத்திரா அவளவனுக்காய் காத்திருக்கின்றாள். அந்த இரவும் நிலவும் ஏனென்றே தெரியாமல் அவள் மனதில் ஓர் ஆழ்ந்த அமைதியை நிறைத்து. இதமான தென்றல் கன்னியோ கன்னியிவளை கொஞ்சி விளையாடினாள். ஆதித்தன் வர தாமதமானதும் அரசுவேலையில் ஆழ்ந்திருந்தால் என்னழகன் ஊனுறக்கமன்றி என்னையும் மறந்திடுவார். சேதியாவது அனுப்புவாரே முத்தழகனிடம் என்று தனக்குள்ளே பெண்ணவள் தனக்குள்ளேயே உழன்று கொண்டிருந்தாள் பேதை.

அப்போது ஓர் சில்லென்ற காற்று அவளை ஊடுருவி அவளை அழைத்து சென்றது ஓர் காட்டுப்பகுதிக்குள். அங்கே ஓர் தெய்வீக ஒளிசிந்தும் பெண்ணொருத்தி அமர்ந்திருந்தாள். அவளருகில் சிங்கம் ஒன்று படுத்திருந்தது. நமக்கு தான் சிங்கம் அப்பெண்ணருகில் அது ஓர் செல்லபிராணி போல விளையாடியபடி அமைதியாய் இருந்தது.

அந்த பெண் முகத்தில் யாதென அறிய இயலாத ஓர் பாவம். சமுத்திரா அவளையே ஊன்றி பார்க்கவும். அந்த பெண் ஒரு பாடல் பாடினாள்..
" ஆதவன் அணைத்த
ஆழியின் செந்நீரில்
கார்த்தியாயினியும்
கலந்தாலே...
இம்மையிலும்...
வழி பிறக்குமே.."
பின்பு அவள் முகம் அதே பாவத்தை தத்தெடுத்தது. கனவு கலைந்தெழுந்தாள் சமுத்திரா.1280px-Katyayani_Sanghasri_2010_Arnab_Dutta.JPG
 




Last edited:

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
சமுத்ரா விழித்தெழுந்தாள்.

அவள் முகத்தில் சொல்லிலடங்கா உணர்ச்சி குவியல்கள். அதோடு வார்த்தையில் அடங்கா தேஜஸான புன்னகை. சத்தமாக குரலெடுத்து சிரித்தாள் அவள். உள்ளுர புதிதாக இரத்தம் பாய்ச்சிய உணர்வு.

அந்த நடுநிசியில் மகளின் சிரிப்பு சத்தம் கேட்டு எழுந்த சமுத்திராவின் தாய் அவள் நின்ற கோலம் கண்டு அதிர்ந்தாள்.

அந்த நள்ளிரவில் திருமண நகைகளை எல்லாம் மொத்தமாக எடுத்து கொண்டு பட்டுப்புடவை எடுத்து உடுத்தி கொண்டு ஓர் பெண் தெய்வமாக நின்றிருந்தாள் அவள்.

"சமுத்திரா!" என்று அதிர்ச்சியாக அவர்குரல் கொடுக்க அந்த அறையிலேயே உறங்கி கொண்டிருந்த தேஜேஸ்வினியும் எழுந்து தோழி நின்ற கோலத்தை பார்த்து அதிர்ந்தாள்.

"என்னடி வேலை பண்ணி வைச்சிருக்க? இதான் நீ விளையாடிற நேரமா?" என்று கேட்க,

"ஆம் விளையாட்டுதான். இது தெய்வ விளையாட்டு... எங்கே என் சிங்கமுகன்?" என்று பிதற்றி கொண்டிருந்த மகளை பார்த்து சமுத்ராவின் தாய் மிரண்டு அவள் தந்தையை அழைத்து வந்தார்.

யாருக்குமே அவள் நடந்து கொள்ளும் விதம் புரியவில்லை.

"இன்னும் கொஞ்ச நேரத்தில முகூர்த்த நேரம் வந்திரும் சம்மு" என்று தேஜேஸ்வினி சொல்ல,

"என் மனம் கவர்ந்தவரோடுதானே!" என்று முகம் மலர கேட்டாள். அங்கே வந்து சமுத்ராவை பார்த்த யாருக்கும் நடப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

அவர்கள் இருப்பது திருமண மண்டபத்தில். இன்னும் சில மணித்துளிகள் கடந்தால் அவளுக்கு திருமணம் என்ற நிலையில் இவளின் வித்தியாசமான செய்கை அதிர செய்தது.

அவளின் வருங்கால கணவன் அப்போது முன்னே வந்து நிற்க, "வாருங்கள் முத்தழகா! எங்கே அவர்? வரவில்லையா? அவரிடம் நான் ஒன்று சொல்ல வேண்டும்" என்று சம்பந்தமே இல்லாமல் பிதற்றினாள்.

"முத்தழகனா... யாரது... நீ ஏன் இப்படி பேசுற" என்றவன் கேட்டு கொண்டிருக்கும் போதே,

"சம்மு என்னாச்சும்மா?' என்று பரிவாக அவள் அருகில் வந்து நிற்க,

"ஏ நந்தினி.? நீதான் எல்லாவற்றிற்கும் காரணம்" என்று அந்த பெண்ணின் கழுத்தை நெறிக்க தொடங்கினாள்.

"அய்யோ நான் நந்தினி இல்ல. சுதா!" என்று சொல்லும் போதே அவளுக்கு மூச்சு முட்ட ஆரம்பித்தது.

சமுத்ரா வெறி பிடித்தவள் போல் நடந்து கொள்ள அவளை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அவளை மருத்துவமனை அழைத்து சென்றனர்.

சமுத்ராவிற்கு தீவிரமாக மருத்துவ பரிசோதனைகள் நடந்தது. சில மணிநேரங்களுக்கு பிறகு சமுத்ராவின் பெற்றோரையும் தேஜேஸ்வினியையும் அழைத்து அவள் நடவடிக்கையை விசாரித்தனர்.

அப்போதுதான் சில உண்மைகள் பிடிப்பட்டது. சமுத்ராவிற்கு அதிகமாக இரவு நேரங்களில் புத்தகம் படிக்கும் பழக்கம். அதுவும் சரித்திர நாவல்கள். இரவெல்லாம் உறக்கமில்லாமல் படித்து கொண்டிருக்கிறாள். அதோடு தேஜஸ்வினியின் தமிழ் ஆர்வமும் அவள் சொல்லும் சில சரித்திர ஆராய்ச்சி விஷயங்களும் இவள் மனதை பாதித்திருக்கிறது.

சமுத்ராவின் பெற்றோரை பார்த்த அந்த மனநல மருத்துவர் ஆழ்ந்த யோசனைக்கு பிறகு பேச தொடங்கினார்.

"சாரி டு சே திஸ்! 'சீசோபெரினியா'
இந்த நோயில்தான் பாதிக்கப்பட்டு இருக்கா உங்க டாட்டர்" என்றார்.

பெண்ணிற்கு ஆசை ஆசையாக திருமண ஏற்பாடு செய்த ஒரு அம்மா அப்பாவின் மனநிலை என்னவாக இருக்கும்.

அங்கேயே உடைந்து சமுத்ரவின் தாய் அழ அந்த மருத்துவர், "பிளீஸ். கொஞ்சம் உங்க பீலிங்ஸை கன்ட்ரோல் பண்ணிக்கோங்க" என்று சொல்லும் போது அவர் முகத்தை துடைத்து கொண்டு மருத்துவரை பார்க்க அவர் மேலும்,

"சீசோபெரினியா'

இதுக்குன்னு தனிப்பட்ட முறையில் மெடிசின்ஸ் கிடையாது.

பொதுவாகவே ஒரு டென் காம்பினேஷன்ஸ் இருக்கு.

அதைத்தான் மாத்தி மாத்தி ட்ரை பண்ணுவோம்.எந்த காம்பினேஷன்
எடுக்கும் போது அவங்க கன்ர்ரோல்ல இருக்காங்களே... அது சில நாட்களுக்கு கன்டினியூ பண்ணனும்...
சம் டைம்ஸ் இது வருஷக்கணக்குல கூட தொடரும்.
வேற வழியில்ல..

விளக்கிக்கொண்டிருந்தார் மன நல மருத்துவர்.

பேச்சற்று உறை நிலையில் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார் தன்னைத்தானே 'சமுத்திராவின் அன்னை.

விஷுவல் ஹாலுசினேஷன் எனப்படும் ஒரு வகை மனநோய்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களுடைய ஆழ்மன எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக... நேரில் பார்பதுபோல் காட்சிகள் விரியும்தொடு உணர்ச்சி...
வாசனைகளை உணர்வது என அனைத்தும் உண்மை போல் தோன்றும் அவர்களுக்கு.
இது ஒரு வித நரம்பு தளர்ச்சி.

சமுத்ராவை யாராலும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. மருந்துகள் கொடுக்க கூட அவள் யாருக்கும் ஒத்துழைக்க மாட்டேன் என்றாள். அவளின் பெற்றோரை கூட அவளுக்கு அடையாளம் தெரியவில்லை.

இதற்கிடையில் அவள் திருமணமும் நின்றது. மருத்துவமனையில் மோசமான நிலையில் அவள் இருக்க, அப்போது அங்கே வந்தான் ஆதித்தியன்.

அவனை பார்த்த நொடி அவள் ஓடி வந்து அவனை இறுக அணைத்து கொண்டு, "எங்கே என்னை தவிக்க விட்டு சென்றீர்கள்? இவர்கள் எல்லாம் என்னை கொல்ல பார்க்கிறார்கள்" என்க,

அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவளை விலக்கி நிறுத்தவும் முடியவில்லை. மருத்துவமனையில் இப்படி பெண்ணவள் அவனை அணைத்து நிற்பது அவனுக்கு சங்கடமாய் இருந்தது.

"சமுத்ரா! ப்ளீஸ்" என்றவன் கெஞ்ச அவள் கேட்கவே இல்லை.

"எனக்கு பயமாக இருக்கிறது.... என்னை நீங்கி சென்று விடாதீர்கள்" என்றவள் பிதற்றும் போதே மருத்துவர் ஒரு விஷயத்தை புரிந்து கொண்டாள். யாரிடமும் அடங்காதவள் அவனிடம் அடங்கி ஒடுங்கி நின்றிருந்தாள்.

மருத்துவர் அவனிடம் கண்ணசைத்து அந்த மருந்துகளை கொடுக்க சொல்ல அவனும் அவர்கள் சொல்வதை கேட்டு அவளுக்கு மருந்துகள் தர முதலில் முரண்டு பிடித்தவள் பின் அவன் வார்த்தைகளை அப்படியே கேட்டு கொண்டாள்.

கொடுக்கப்பட்ட மருந்துகளின் வீரியத்தினால் ஆழ்நிலை உறக்கத்திற்குச் சென்றாள் சமுத்ரா. அதற்கு பிறகு நடந்தவற்றை தேஜேஸ்வினியிடம் கேட்டு அறிந்து கொண்டான் ஆதித்தியன்தான்.

அவனின் பெயர் ஆதித்தியன். சமுத்ரா கனவில் ஆதித்தியனை கண்டது உண்மை. அடுத்த நாள் அதே முகச்சாயலில் அவனே அவளின் மேனேஜ்மென்ட் பிரொபஸராக நிற்க அங்கிருந்து அவள் மனநிலை நிஜத்திற்கும் நிழலுக்கும் இடையில் ஊசலாட தொடங்கினாள்.

மனோவோடு அவள் நிச்சயிக்கப்பட்ட பிறகு அவளின் கற்பனை ரூபமாய் நின்ற ஆதித்தகரிகாலன் கிட்டதட்ட அதே ரூபத்தில் முன்னே வர அவள் படித்த சரித்திர நாவல்கள் உயிர்பெற தொடங்கின. காட்சிகளாக அரங்கேறின. நிஜத்திற்கும் நிழலுக்கும் இடையில் அவள் தனக்கென ஒரு கற்பனை உலகத்தில் சஞ்சரித்தாள்.

ரத்த பிஜு நந்தினி முத்தழகன் என்று எல்லாமே அவள் படித்த கதைகளின் பாத்திரங்கள்.

அவள் படித்த கதைகளோடு அவள் உடன் இருந்தவர்களை தொடர்புப்படுத்தி கொண்டாள். மனோவை முத்தழகனாக அவனின் அத்தை பெண் சுதாவை நந்தினியாக!

அதோடு அவளையும் அந்த கற்பனைக்குள் தொடர்புபப்படுத்தி கொண்டு அவள் மனம் கவர்ந்த ஆதித்த கரிகாலனை தன் மணவாளனாக தருவித்து கொண்டாள்.

மனோ அவளை பார்க்க வந்த போது உண்மையிலேயே அங்கே ஆதித்தியன் இல்லை.அப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று அவளாக கோர்த்து கொண்ட கற்பனை.

கேன்டீனுக்கு மீன் சப்ளை செய்ய வரும் சேகர் மீது தேஜேஸ்வினி விருப்பமிருந்தது உண்மை. அவனை அவள் வீரபாண்டியனாக எண்ணி கொண்ட நேரம் சில காரணங்களினால் ஆதித்தியனும் சேகரனும் முட்டி கொண்டது உண்மை.

அதோடு சமுத்ரா ஆராய்ந்து சொன்ன சில சரித்திர நிகழ்வுகள் சமுத்ராவின் கற்பனை குதிரையை வேகமாக தட்டிவிட்டிருக்கிறது.

அதன் பின்னரே முழுவதுமாக கற்பனைக்குள் வாழ தொடங்கினாள் சமுத்ரா!

இதில் ஓரே ஆச்சரயம் ஆதித்தயனை பார்க்கும் முன்னரே அவனை கனவில் பார்த்தது. அதன் பின் அவள் உள்ளம் காதல் கொண்டுவிட, நிஜம் நிழல் என்று எல்லாமுமாக அவன் மட்டூமே!

அவன் கல்லூரியில் தேடிவந்து உங்களை பார்த்தது போல் இருப்பதாக சொன்னதும் கற்பனையே! அப்படியிருந்தால் நன்றாக இருக்குமே என்று அவளாக எண்ணி கொண்டது.

ஆதித்தியன் ஒரு பேராசிரியராகதான் அவளை பார்க்க வந்தான். ஆனால் அவளின் நிலையை கண்டு உள்ளம் நெகிழ்ந்தது. பாடம் எடுக்கும் போதே அவள் பார்வை தன்னை ஏதோ ஒரு ஏக்கத்தோடும் தவிப்போடும் பார்ப்பதை அவன் உணர்ந்திருக்கிறான். அதன் உள்ளர்த்தம் இப்போதே அவனுக்கு விளங்கிற்று.

தேன்மழையாக அவள் சிந்திய காதல் பார்வைகள் அவனுக்குள் தித்தித்தது உண்மை. ஆனால் முளை அதனை ஏற்காமல் விலகி நிற்க முற்பட்டதும் உண்மை. ஆனால் இந்த நிலையில் அவனின் விலகலை விட அவனுடைய அரவணைப்பு அவளுக்கு தேவைப்பட்டதாக அவனுக்கு தோன்றியது.
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
இது சும்மா காமெடிக்கு தான் ?

படுத்திருத்த சிங்கம் அருகே திடீர் என புகை மண்டலம் உருவானது

அந்த புகை மறைய மறைய சிங்கம் உரு மாறி அழகாய் கம்பீரமாய் தேஜஸ் நிரம்பிய கந்தர்வனை போல ஒரு ஆணழகன் வெளிப்பட்டான் அவர் வேறு யாரும் அல்ல ஆதி ஆதி ஆதித்தனே

அவனைக் கண்டதும் தான் சமுத்ரா அவளுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு ஆவேசம் வந்ததோ ஆதி என்று கதறியபடி ஓடிச்சென்று அவனை இருக்கி கட்டிக்கொண்டு கண்ணாளா என்னை விட்டு எங்கே சென்றீர்கள் இனி ஒரு கணமும் என்னை விட்டுப் பிரியக் கூடாது போது மறைந்திருந்து ஆடிய ஆட்டம் எல்லாம் இனி நான் எதற்கும் அனுமதிக்க மாட்டேன் இங்கு என்னை சுற்றி ஏதோ மாயவலை பின்னப்பட்டது போல் இருக்கிறது எனக்கு பயமாக இருக்கிறது என்னை இங்க இருந்துஅழைத்து செல்லுங்கள்,,...

அன்பே பயப்படாதே நான் வந்து விட்டேன் அல்லவா இனி எதுவும் உன்னை நெருங்க விட மாட்டேன் கலங்காதே கண்மணி
என்று அவளை தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்...
ஓஓஓஓ
மை கடவுளே....?
?‍♀ இப்படி எடுத்துட்டு போங்க யா கதைய ரொமான்டிக்கா அதை விட்டுட்டு அமானுஷ்யம் திகில் திகில் திகிலா கொண்டு போறீங்களே கதை ஹிம் ?‍♀
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
அவள்.. படித்த சரித்திர நாவல்கள்..
அவள் கற்பனை உலகத்தை தூண்டி விட்டு.. அதிலேயே.. அவள் வாழ்ந்து.. அந்த கற்பனை கதாபாத்திரங்களை.. தன்னோடு இருக்கும் நிஜ மனிதர்களோடு கலந்து... வாழ்ந்து வந்திருக்கிறாள்.. என்று அந்த மன நல மருத்துவர் கூற கேட்ட ஆதி மருத்துவரிடம்.. " அப்போ அவ என் மீது கொண்ட காதலும் கற்பனையா? " என்று கேட்க..

மருத்துவர் "அதை அவுங்க குணமானதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுக்க முடியும் மிஸ்டர். ஆதித்தியன்"

ஆதி.. " ஓ. எவ்வுளவு நாளாகும் டாக்டர்"

டாக்டர் "அது அவுங்க ஒத்துழைப்பை பொறுத்து.. மினிமம் 3 சிட்டிங்.. Counselling ல. முடியும்.. "

சமுத்திரா அந்த மன நல மருத்துவரின் ஆலோசனை பெயரில்.. அவர்கள் அளித்த சிகிச்சை முறையில் குணம் அடைந்தால்.. கல்லூரி இறுதி தேர்வை முடிந்தது... கல்லூரி கடைசி நாளில் அவனது அறைக்கு சென்றால்

ஆதி " உள்ள வாங்க சமுத்திரா"

சமுத்ரா" உங்களிடம் பேசனும் சார்"

"சொல்லுங்க"

"இல்ல treatment எடுக்குறது முன்னாடி நான் எப்படி நடந்து கிட்டேனு.. இப்ப தான் தேஜ் சொன்னா.. அதான் அப்படி நா உங்ககிட்ட நடந்து கிட்டது மன்னிப்பு கேட்கலாம்னு வந்தேன்.." என்றால் பார்வை தாழ்த்தி..

"அவ்வுளவு தானா.. "

"ம்ம்.. "

இதழ்களில் புன்னகை அரும்ப நின்ற ஆதி "சரி போய்டுவாங்க"

அதிர்ச்சியில் நிமிர்ந்து அவனை பார்த்தவள் கண்கள் கலங்க அந்த அறையை விட்டு வெளியேறினாள்..

வீட்டில் அவளை நாளை பெண் பார்க்க வருவதாக சொல்ல ஏற்கனவே.. அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டம்.. வேண்டாம் என்று காதலை மறைத்து திருமணத்திற்கு சம்மதித்தாள்.. ஆம் என்னதான் கற்பனை என்று அவள் வாழ்ந்தாலும்.. ஆழ் மனதில் ஆதித்தன் மேல் பெண்ணவள் காதல் உண்மையே...

மறுநாள் மனமே இன்றி தயாரானால்.. பெண் பார்க்கும் படலத்திற்காக..

கார் வந்த சப்தமும் ஆட்களின் அரவமும்.. அம்மா அப்பாவின் ஆர்பரிப்பும் கேட்டது.. மனத்தை தயார்படுத்தி தன்னை அழைக்க காத்திருந்தவளை.. வந்து அழைத்து சென்றால் அத்தை பெண் சுதா உடன் அவள் தோழி தேஜ்..
தலையை குனிந்தாவாரே நின்றிந்தவளை... நிமிர்ந்து பார்க்க சொன்ன தோழியை முறைத்தாவாரே திரும்பியவளின் கண்ணில் அவன் பட்டான்.. ஆம் அங்கே மாப்பிள்ளையாக அமர்ந்து இருந்தாவன் அவளது ஆதித்தனே..

இவள் நிமிர்ந்து பார்த்தும் ஒற்றை கண்ணை சிமிட்டி.. இதழ் குவித்து பறக்கும் முத்தம் ஒன்றை பறக்க விட பெண்ணவளோ.. அதிர்ச்சியாகி பின் நாணத்தை அணைத்து கொண்டாள்..

அதற்கு பிறகு கல்யாண நாள் அடுத்த முகூர்த்தத்தில் முடிவாகி வேலைகள் விறுவிறுபாக.. நடக்க தொடங்கின.. இங்கே மணமக்களே.. கனவில் மிதந்தனர்(மறுபடியுமா..???????? )(அட கல்யாண கனவு மா..)

மணநாளும் விடிந்தது.. மங்கள வாத்தியங்கள் முழங்க மங்கள நாணை அவளது சங்கு கழுத்தில் கட்டினான்.. ஆதி..

சடங்குகள் அனைத்தும் நிறைவு பெற.. மணமக்களுக்கான தனிமை நேரமும் வந்தது..
அறைகுள் நுழைந்தவளை புன்னகையுடன் வரவேற்றான்..

தயக்கத்துடன் நின்றவளின்.. அருகே வந்து கொஞ்சம் நிமிர்ந்து பார் சமுத்ரா என்றான்

அவள் நிமிர்ந்து பார்த்தது அதிர்ந்து பின் ஆச்சிரியமாக அவனை கேள்வியாக ஏறிட்டாள்.. அவன் கண்ணை மூடி திறந்து ஆம் என்றான்.. கண்களை இன்னும் அகல விரித்தாள் திகைத்து.. நின்றாள்...

அவனோ குறும்பு புன்னகையுடன்.. பண்ணிய கற்பனை கொஞ்சம் சின்னதா பண்ணிருக்க கூடாதா.. இத குத்துறதுக்குள்ள வலி பின்னிட்டு..

என்ன குத்துறதுகுள்ளயா என புருவத்தை சுருக்கி ஏறிட்டாள்..

ஆம் அவன் காட்டியது.. நெஞ்சில் அவன் வரைந்த சமுத்ராவின்.. கற்பனை மச்சத்தை தான்.. ஆதிகுள் சமுத்ரா

Original இல்லமா. Tatoo தான்.. அதுக்காக.. பார்க்க மட்டும் தான் செய்வாயா.. நான் கூட அந்த ஆதிக்கு கிடைச்ச மாதிரி இல்லநாலும் atleast பாதி முத்தமாது கிடைக்கும்னு நினைச்சேன்.. வலிக்க வலிக்க நீ குத்துனது waste டா ஆதி என்று கூறி பெருமூச்சிறைந்தான்..

சமுத்ரா.. புன்னகையுடன் வெட்கம் மேலிட அவன் மார்ப்பில் அந்த tatoo வில் தன் இதழினை பதிக்க.. அவள்.. முகத்தை பற்றி.. அவன் இதழில் தேன் மழையை பருக தொடங்கினான்...

இனி அவர்கள் வாழ்க்கையில் தேன் மழை மட்டுமே..

சுபம்
 




Last edited:

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
அவள்.. படித்த சரித்திர நாவல்கள்..
அவள் கற்பனை உலகத்தை தூண்டி விட்டு.. அதிலேயே.. அவள் வாழ்ந்து.. அந்த கற்பனை கதாபாத்திரங்களை.. தன்னோடு இருக்கும் நிஜ மனிதர்களோடு கலந்து... வாழ்ந்து வந்திருக்கிறாள்.. என்று அந்த மன நல மருத்துவர் கூற கேட்ட ஆதி மருத்துவரிடம்.. " அப்போ அவ என் மீது கொண்ட காதலும் கற்பனையா? " என்று கேட்க..

மருத்துவர் "அதை அவுங்க குணமானதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுக்க முடியும் மிஸ்டர். ஆதித்தியன்"

ஆதி.. " ஓ. எவ்வுளவு நாளாகும் டாக்டர்"

டாக்டர் "அது அவுங்க ஒத்துழைப்பை பொறுத்து.. மினிமம் 3 சிட்டிங்.. Counselling ல. முடியும்.. "

சமுத்திரா அந்த மன நல மருத்துவரின் ஆலோசனை பெயரில்.. அவர்கள் அளித்த சிகிச்சை முறையில் குணம் அடைந்தால்.. கல்லூரி இறுதி தேர்வை முடிந்தது... கல்லூரி கடைசி நாளில் அவனது அறைக்கு சென்றால்

ஆதி " உள்ள வாங்க சமுத்திரா"

சமுத்ரா" உங்களிடம் பேசனும் சார்"

"சொல்லுங்க"

"இல்ல treatment எடுக்குறது முன்னாடி நான் எப்படி நடந்து கிட்டேனு.. இப்ப தான் தேஜ் சொன்னா.. அதான் அப்படி நா உங்ககிட்ட நடந்து கிட்டது மன்னிப்பு கேட்கலாம்னு வந்தேன்.." என்றால் பார்வை தாழ்த்தி..

"அவ்வுளவு தானா.. "

"ம்ம்.. "

இதழ்களில் புன்னகை அரும்ப நின்ற ஆதி "சரி போய்டுவாங்க"

அதிர்ச்சியில் நிமிர்ந்து அவனை பார்த்தவள் கண்கள் கலங்க அந்த அறையை விட்டு வெளியேறினாள்..

வீட்டில் அவளை நாளை பெண் பார்க்க வருவதாக சொல்ல ஏற்கனவே.. அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டம்.. வேண்டாம் என்று காதலை மறைத்து திருமணத்திற்கு சம்மதித்தாள்.. ஆம் என்னதான் கற்பனை என்று அவள் வாழ்ந்தாலும்.. ஆழ் மனதில் ஆதித்தன் மேல் பெண்ணவள் காதல் உண்மையே...

மறுநாள் மனமே இன்றி தயாரானால்.. பெண் பார்க்கும் படலத்திற்காக..

கார் வந்த சப்தமும் ஆட்களின் அரவமும்.. அம்மா அப்பாவின் ஆர்பரிப்பும் கேட்டது.. மனத்தை தயார்படுத்தி தன்னை அழைக்க காத்திருந்தவளை.. வந்து அழைத்து சென்றால் அத்தை பெண் சுதா உடன் அவள் தோழி தேஜ்..
தலையை குனிந்தாவாரே நின்றிந்தவளை... நிமிர்ந்து பார்க்க சொன்ன தோழியை முறைத்தாவாரே திரும்பியவளின் கண்ணில் அவன் பட்டான்.. ஆம் அங்கே மாப்பிள்ளையாக அமர்ந்து இருந்தாவன் அவளது ஆதித்தனே..

இவள் நிமிர்ந்து பார்த்தும் ஒற்றை கண்ணை சிமிட்டி.. இதழ் குவித்து பறக்கும் முத்தம் ஒன்றை பறக்க விட பெண்ணவளோ.. அதிர்ச்சியாகி பின் நாணத்தை அணைத்து கொண்டாள்..

அதற்கு பிறகு கல்யாண நாள் அடுத்த முகூர்த்தத்தில் முடிவாகி வேலைகள் விறுவிறுபாக.. நடக்க தொடங்கின.. இங்கே மணமக்களே.. கனவில் மிதந்தனர்(மறுபடியுமா..???????? )(அட கல்யாண கனவு மா..)

மணநாளும் விடிந்தது.. மங்கள வாத்தியங்கள் முழங்க மங்கள நாணை அவளது சங்கு கழுத்தில் கட்டினான்.. ஆதி..

சடங்குகள் அனைத்தும் நிறைவு பெற.. மணமக்களுக்கான தனிமை நேரமும் வந்தது..
அறைகுள் நுழைந்தவளை புன்னகையுடன் வரவேற்றான்..

தயக்கத்துடன் நின்றவளின்.. அருகே வந்து கொஞ்சம் நிமிர்ந்து பார் சமுத்ரா என்றான்

அவள் நிமிர்ந்து பார்த்தது அதிர்ந்து பின் ஆச்சிரியமாக அவனை கேள்வியாக ஏறிட்டாள்.. அவன் கண்ணை மூடி திறந்து ஆம் என்றான்.. கண்களை இன்னும் அகல விரித்தாள் திகைத்து.. நின்றாள்...

அவனோ குறும்பு புன்னகையுடன்.. பண்ணிய கற்பனை கொஞ்சம் சின்னதா பண்ணிருக்க கூடாதா.. இத குத்துறதுக்குள்ள வலி பின்னிட்டு..

என்ன குத்துறதுகுள்ளயா என புருவத்தை சுருக்கி ஏறிட்டாள்..

ஆம் அவன் காட்டியது.. நெஞ்சில் அவன் வரைந்த சமுத்ராவின்.. கற்பனை மச்சத்தை தான்.. ஆதிகுள் சமுத்ரா

Original இல்லமா. Tatoo தான்.. அதுக்காக.. பார்க்க மட்டும் தான் செய்வாயா.. நான் கூட அந்த ஆதிக்கு கிடைச்ச மாதிரி இல்லநாலும் atleast பாதி முத்தமாது கிடைக்கும்னு நினைச்சேன்.. வலிக்க வலிக்க நீ குத்துனது waste டா ஆதி என்று கூறி பெருமூச்சிறைந்தான்..

சமுத்ரா.. புன்னகையுடன் வெட்கம் மேலிட அவன் மார்ப்பில் அந்த tatoo வில் தன் இதழினை பதிக்க.. அவள்.. முகத்தை பற்றி.. அவன் இதழில் தேன் மழையை பருக தொடங்கினான்...

இனி அவர்கள் வாழ்க்கையில் தேன் மழை மட்டுமே..
:love::love::love:
சுபம்
Jeya semma po kalakkitta (y)(y)(y)(y). Marubadium kanava hahaha:LOL::LOL:
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அட்ரா சக்க அட்ரா சக்க இதுதான் ஃபினிஷிங் அடி தூள் கிளம்பிட்டே ஜெயமா சூப்பர்?????????
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
"கண்ணி பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன்"

"பெண்கள் பின்னால் சுற்றாமல் பெண்கள் சுற்றும் வாலிபன் எவனோ?" ஓ....ஓ...ஓ...

அவனே காதல் மன்னன்....காதல் மன்னன்....

என்ற பாட்டின் வரிகள் ஆறடி ஐந்தங்குல ஆணழகன் இவனுக்காகவே எழுதப்பட்டதோ....

"பரந்த நெற்றி, கூரானா நாசி, நான் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவன் என எடுத்துக்காட்டும் சிவந்த இதழ்கள், அதில் உறையும் குறும்பான மென்னகை, உறுதியான கடவாய், ட்ரிம் செய்யப்பட்ட தாடி, வலிமையான தோள்கள், பரந்த மார்பும், குறுகிய இடையும், என ராஜதோரனையுடன் வலம் வருபவன். "ஆதித்தன்"."

அந்த கல்லூரியில் பயிலும் இளைஞர்களின் ரோல் மாடல், பெண்களின் கனவு நாயகன்.......இந்த "கனவு நாயகன் " அப்படிங்கற இடத்திலதான் அவனுக்கு கண்டமே......

பாடத்தில் எதாவது சந்தேகம் கேட்டு பெண்கள் கூட்டம் அவனை சுற்றிக்கொண்டே இருக்கும்...இதை பார்த்தால் எந்த மனைவிக்குதான் குளுகுளுன்னு இருக்கும்....கண்ணு, காது, மூக்குல எல்லாம் புகை புகையா வரும் அம்மணி்க்கு. விளைவு சாயங்காலம் வீட்டில் ஒரு போர்க்களமே நடக்கும். இன்னைக்கும் அதான் நடக்குது வாங்க பார்க்கலாம்.

(அவளுக்கு எப்படி தெரியும்னு நினைக்கறீங்களா? சமுத்திராவும் அங்கதான் இப்பொழுது வேலை செய்கிறாள்.. )

ஹாலில் சமுத்திரா அமர்ந்திருக்க, ஆதித்தன் அவள்முன் முகத்தை பாவமாய் வைத்தவாறு நின்றிருந்தான். அவனின் நாடகத்தை அறிந்தவளாய் இதழுக்குள் வந்த சிரிப்பை அடக்கி....கோபமாய் வைத்துக்கொண்டாள்.

"Mr. ஆதித்தன் .....நீங்க என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க உங்க மனசில?"

" உங்களதான்"......

"என்னது?"

"என்னோட மனைவியன்னு சொன்னேன்"

( இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல என்று மனதில் நினைத்தவள்)

"இன்னைக்கு என்ன..... அந்த பொண்ணுங்ககிட்ட சிரிச்சு, சிரிச்சு பேசிகிட்டு இருந்தீங்க"....

"காமெடி பண்ணா சிரிக்கதான் செய்வாங்க..... இது ஒரு குத்தம்னு என்ன நிக்க வச்சு கேள்வி கேக்கறது நியாயமே இல்ல மை லார்ட்"....

"அப்ப நீங்க என்ன பண்ணாலும் கேள்வி கேக்க கூடாதா?" எனக்கு அந்த உரிமையில்லையா?"

முகத்த ஏழு முழத்துக்கு தூக்கி வச்சிக்கிட்டு போயிட்டா..... (வெளிய இல்லங்க உள்ளதான் அப்பதான சமாதானம் செய்வான்)

இது தினமும் நடப்பதால் சிறுசிரிப்புடன் சமையலறைக்கு சென்று எதையோ எடுத்தவன் அவளை காண அறைக்கு சென்றான்....


"பேபி....பேபி.....பே....பி..."

" பேபியாம் பேபி ம்ஹும்"என வாய்க்குள்ளயே முனகிக்கொண்டு ஜன்னலோரமாக திரும்பி நின்றிருந்தாள்.

மாலை நேர மஞ்சள் வெயில் முகத்தினில் பட இளஞ்சிவப்பு நிற சேலையில் அப்சரஸ் போல இருந்தவளை எப்போதும் போல அவனது கண்கள் ரசிக்க தவறவில்லை.

மெல்ல அவளருகே சென்றவன் " என்னடா கோபமா?" என பின்னிருந்து இடது கையால் அவளை அணைத்துக்கொண்டான்.

..................

"அப்ப மேடம் பேசமாட்டீங்க?"

..........
"ரொம்ப சூடா இருக்காங்களோ? என நினைத்தவன்......
இப்ப பாரு .... என்ன பண்றேன்னு....
குறும்பு புன்னகையுடன் கையில் வைத்திருந்த குளிர்நீர் பாட்டிலை அப்படியே அவள் தலையில் கொட்டிவிட்டான்......

"ஆ......"

"மேடம் சூடா இருந்தீங்களே... இப்ப ஜில்லுன்னு இருக்கா?" என கேட்டுக்கொண்டே அங்கிருந்து ஓடிவிட்டான் கள்ளன்.

அதிர்ச்சியில் இருந்தவள்.... "ஆதீ".......என்றவாறு அவனை துரத்திச்செல்ல ....அவன்தான் அப்போதே ஓடிவிட்டானே....

இதழ்களில் சிரிப்புடன் வரட்டும் இன்னைக்கு இருக்கு!!!! என்று எண்ணிக்கொண்டு குளிக்க சென்று விட்டாள்.

குளித்துவிட்டு மஞ்சள் நிற சேலையில் தலையை துவட்டியவாறு வந்தவள் அவனை தேட அவனை காணவில்லை....

" எங்க போய்ட்டாங்க?" என எண்ணும்போதே இரு கரங்கள் பின்னிருந்து அணைத்தன.

வந்துவிட்டான் அவளின் அழகன், அவளின் உணர்வுகளை ஆர்ப்பரிக்க வைக்கும் அசுரன்.

குளித்திருப்பான் போல இடையில் துண்டுடன்.....அவன் வெற்று மார்பின் மேல் அவளை அழுத்தமாக பிணைத்தவாறு....மூச்சுக்காற்று கழுத்தில் பட "இப்ப கோவம் போச்சா?" என்று உதடுகள் காதில் ரகசியம் பேசியது.....

அவளுக்கு தேகம் சிலிர்த்து அடங்கியது...அவனின் வலது கை கூந்தலில் அலைய, இடது கை இடையில் வீணை மீட்டியது.

"கோவம் போச்சா கேட்டேன்?" என்று இன்னும் அழுத்தம் கொடுக்க...அவள் எங்கே பதில் பேசும் நிலையிலா இருக்கிறாள்.....

அவளை முன்பக்கம் திருப்பியவன்.."பேபி"....

ம்......

"என்னடா?"

அவன் கண்களை பார்த்தவாறு "கோவம் வந்தாதான போறதுக்கு.....இங்க நாந்தான் இருக்கேன்னு எனக்கு தெரியுமே" என்று அவன் இதயத்தை சுட்டிக்காட்டி கூறினாள்.

" கள்ளி.....வேணும்னே நடிச்சியா?"இதுக்கு கண்டிப்பா உனக்கு தண்டனை உண்டு"......


" நீங்க மட்டும் என்னவாம் நான் இருக்கறது தெரிஞ்சேதான அந்த பொண்ணுங்ககிட்ட வேணும்னே சிரிச்சு பேசுனீங்க" என்றாள் அவனை அறிந்தவளாய்.

"சரியான கேடிடி நீ!!!!!!" என்று சிரித்தவன்...அவளுக்கான தண்டனை நிறைவேற்ற அவளை கையில் ஏந்திக்கொண்டான்.....

அவளும் அதை ஏற்கும் விதமாய் அவனது மச்சத்தில் இதழ் பதிக்க, இவன் அவளின் இதழில் இசைமீட்ட தொடங்கினான்.

.......முற்றும்.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top