• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தொட்டாச் சிணுங்கி தேவா 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
ஈரங்காயம்

==+===============

சின்ன வெங்காயத்துக்கு எங்க பக்கம் இன்னொரு பேருண்டு

"ஈரங்காயம்"
(ஈர வெங்காயம் தான் இப்படியாச்சு!)

அது ஏன்னா....அப்பல்லாம் வாரச் சந்தைல தான் வரவு,செவவு எல்லாம்!மாட்டு வண்டில தான் பாரப் போக்குவரத்து நடக்கும் ... எங்காளுங்கள எதுக்க பாத்துட்டா 'ஆய்'னு கைய,மண்டைய ஆட்டிட்டு போயிட முடியாது.. சோட்டுக்கு சோடு வயசா இருந்தாலும் "வாங்க மாப்ள"ன்னு பெருசா ஒரு கும்பிடு போட்டுட்டு மொதல்ல மழை மாரில ஆரம்பிச்சு அப்புறமா பண்டம் பாடிக்கு(கால் நடை)வந்து பட்டி நாய் போட்ட குட்டி நாய் வரைக்கும் வெசாரிச்சுட்டு தான் கடைசியா போச்சாது போங்கற மாதிரி மனுஷ ஜீவனுங்களுக்கு வருவாங்க...

அவங்களுக்கு மண்ணு,பண்டம் பாடி தான் உயிர் நாடி..வீட்டு மனுசங்களுக்கு கை வைத்தியம் பாத்தாலும் பண்டம் பாடிக்கு ஒண்ணுன்னா ஓடிப் போயி மாட்டு டாக்டர (கால் நடை வைத்தியர்) கையோட கூட்டிட்டு வந்து பண்டுதம் (வைத்தியம் )பாத்து அவர் கேக்கற காசக் குடுப்பாங்க ...சொன்னா நம்ப மாட்டீங்க.. எரும மாடுன்னு இல்ல..ஒரு ஆடு போட்ட குட்டி செத்துட்டா கூட போதும்.. ஊட்டு மனுசன் மண்டையப் போட்டா துக்கம் விசாரிக்க வர்ற மாதிரி ஒரம்பரை வந்த வண்ணமா இருக்க காபி அடுப்பு எரிஞ்ச வண்ணமா இருக்கும்...சொந்த பந்தம் மட்டுமில்ல...பழகுன பலவட்டற ஜாதியும் வரும்...

வர்றவங்க சும்மா கைய வீசிட்டு வர மாட்டாங்க...ரெண்டு சீப்பு வாழப் பழம், வளத்திப் பன்னு, கொளந்தைங்க இருந்தா பிரிட்டானியா பிஸ்கட்டு, மிக்சரோ பூந்தியோ எல்லாங் கலந்து ஒரு ஒயர் கூடை நெறைய வரும் ..ஆட்டு குட்டிய பறி குடுத்து மாபெரும் துக்கத்துல இருக்கற இவங்க சின்ன ஆளுங்களா? ஒயர் கூடைய வாங்கிட்டுப் போயி உள்ள இருக்கறத எடுத்து வச்சுட்டு ஒரம்பரை கிட்ட பேசிட்டே ஒரு காரியம் பண்ணுவாங்க பாருங்க ...

அந்த கூடைக்குள்ள அவங்க தோட்டங் காட்டுல என்னென்ன வெளஞ்சுதோ அத்தனையும் கொஞ்சங் கொஞ்சம் எடுத்து வச்சுடுவாங்க ...கடலைக்காய், தேங்காய், பாவக்காய், அவரைக்காய்.... எல்லாத்துலயும் சிலதப் போட்டு சந்தில்லாம அமுக்கி திணிச்சு கொண்டு வந்து வெக்கைல ஊட்டுக் கவுண்டன் தம் பங்குக்கு ஒரு குண்டப் போடுவான் பாருங்க

*அட....கொழுந்தியாளுக்கு கொட்டமுத்து கொஞ்சம் குடுத்து உடு"
(கொட்டமுத்து.. .ஆமணக்கு)

பைல தான் எடமே இல்லியேன்னு நீங்க சந்தோசப் பட்டுட முடியாது ...அங்க இங்க தொழாவி கெடைக்கலன்னா பக்கத்து ஊட்ல போயி குறியாப்பா (கைமாத்து) ஒரு மஞ்சப் பைய வாங்கிட்டு வந்து கொட்டி அமுக்கி யையோட காத இழுத்து முடிஞ்சும் குடுத்துடுவாங்க... கவுண்டன் சொன்ன கொஞ்சம் கொட்டமுத்து ரெண்டு கிலோவுக்குக் கொறையாது...

நாம வாங்கிட்டுப் போனது அஞ்சு கிலோன்னா திரும்ப வரைல பத்துக் கிலோவச் சொமந்து தோள் பட்ட கழண்டுடும் ... அத என்ன 'ம'னாவுக்கு அப்படிச் சொமக்கணும்? .. வேண்டாம்னுட்டு வர வேண்டியது தானன்னு புத்திசாலித்தனம் காட்டப் படாது ... கேவலமாயிடும் ... வெள்ளாளனுக்கு தன் வெளச்சல மத்தவங்களுக்குக் குடுக்கறதுல ஒரு சந்தோசம்.. அத மறுக்க முடியாது...கூடாது ... அது ஒரு மொறமை.. சாங்கியம் !நாமளும் வெறுங்கைய வீசிட்டுப் போகக் கூடாது ... அவங்களும் வெறுங் கையா நம்மள அனுப்ப மாட்டாங்க...

உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்... வர்றவங்க அத்தன பேரும் வாங்கிட்டு வர்ற பண்டங்க அத்தனையும் ஒரு மினி ஆட்டோவுக்கே லோடாகுமே...அத என்ன பண்ணுவாங்க... அதானே?
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
மேட்டைச் சரிச்சு பள்ளத்தைச் நெறைக்கறது வெள்ளாளன் டெக்னிக்...
இல்லாதப் பட்டவங்களும் வருவாங்களே? அன்னாட கூலிங்க...பண்ணை ஆளுங்க.. அவங்களும் அந்த மாபெரும் துக்கம் வெசாரிச்சு காபித் தண்ணி குடிச்சுட்டு கெளம்பும் போது பெரிய கவுண்டர் தொண்டையக் கனச்சு கவுண்டச்சிக்கு சிக்னல் குடுக்க காத்திருந்த மாதிரி பெரிய கவுண்டச்சி ஒரு பையோட வருவாங்க... எல்லாத்துலயும் கொஞ்ச கொஞ்சம் அதுல இருக்கும் ...பை நிறைய!குடுக்கும் போது சிரிச்சுக்கிட்டே இப்படி சொல்வாங்க....

"கொழந்தைங்களுக்குக் குடு"

(கொடுத்தல் கர்வமற்றிருப்பின் பெறுதலும் உறுத்தலற்றுப் போகும் )

இங்க ஆட்டுக் குட்டி சாவு ஒரு சாக்கு...
ஏன்னா...பண்ணையம்கறது எட்டு மணி நேர ஆபீஸ் டூட்டியோ, ஊன்னு சங்கூதுனா அங்கராக்க(சட்டை) மாட்டற மில்லு வேலையோ இல்ல... எந் நேரமும் மண்ணுலயே,,, அதையே தாவிக் கட்டிப் புடிச்சு அதோடயே பொரண்டுக்கிட்டு கெடக்கணும்..

மூணு பீஸ் கரண்ட் பகவான் நட்ட நடு ராத்திரில கண்ணு தொறப்பார் ...ஒரு கைல பேட்டரி லைட்டு, இன்னொரு கைல மமுட்டியோட... பேய் கூட தூங்கலாமான்னு யோசிக்கற நேரத்துல தண்ணி கட்டப் போகணும் .. நாளைக்குப் பாத்துக்கலாம்னு குளுருக்கு பொண்டாட்டிய அணைஞ்சு படுத்துட முடியாது..(அறுத்துப் போடுவா அம்மிணியே!)...வெடிஞ்சா தண்ணி மொறை அடுத்த பங்குக் காரனுக்குப் போயிடும்..

பாம்பு ,பல்லிய யோசிக்காம போய்த் தான் ஆகணும் ..நடுக் காட்டுக்குள்ள விரியன் பாம்பு புடுங்குனா ஊடு வர்றதுக்குள்ள கண்ணு நட்டுக்கும்... பாடை கட்ட வேண்டியது தான்.. பண்ணையம்கறது 24மணி நேரம் பத்தாதுங்கற விசயம்...சும்மா இந்த ஞாயித்துக் கெழம இந்த ஒரம்பரை ஊடு அடுத்த ஞாயித்துக் கிழம அந்த ஒரம்பரை ஊடுன்னு போக முடியாது..அதனால இப்படி ஆடு மாடு செத்தா அத சாக்கா வெச்சு ஒரு ரவுண்ட் வர்றது..

அடடா....விசயத்த உட்டுப்போட்டு எங்கியோ போயிட்டேன்..மழை மாரி, பண்டம் பாடி. ஊட்டு மனுசங்கள வெசாரிச்சுட்டு கடேசீல தான் "சந்தைக்கு என்ன கொண்டு வந்தீங்க?"ன்னு வருவாங்க...சரி வயசுக் காரங்க கிட்ட சாதாரணமா, 'வெங்காயமுங்க மாப்ள'ன்னு சொல்லலாம்..அவங்களும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க... ஆனா,பெரியவங்க கிட்ட?

பெரியவங்க எதுக்க வந்தா வலசலுங்க பம்மற பம்மு இருக்கே?காணக் கண் கோடி வேண்டும்...படார்னு தலத் துண்டு தோளுக்கு வரும்(பெருசுங்க முன்னால தலைல துண்டக் கட்டிக்கிட்டு பேச மாட்டோம்) மடிச்சுக் கட்டியிருக்கிற வேட்டி கீழ எறங்கும்.."வாங்க மாமா"ன்னு பெரிய கும்பிடும் போடணும் ..அங்கயும் பெருசு, சிறுசு பாகுபாடு பாக்காம "வாங்க மாப்ள"யும் கும்பிடும் வரும்.. அப்புறமென்ன?அதே கதை தான்...மழை மாரி...பண்டம் பாடி... கடேசியா அந்தக் கேள்வி வரும்

"வண்டிப் பாரம் என்ன மாப்ள?"

இது மாப்ள காதுல சரியா உளுவலைன்னா பம்மிகிட்டே கேப்பாரு பாருங்க

"தென்ன கேட்டீங் மாமாங்?"

மரியாதை ஒவ்வொரு வார்த்தைலயும் கொஞ்சத்த முளுங்கிடும்...மாப்ள கேட்டதுக்கு அர்த்தம் இதான்

"என்ன மாமா கேட்டீங்க?"

சிரிச்சுக்கிட்டே மாமங் கேப்பார் இப்படி...

"அட.. அரணாக் கவுறு கூட இல்லாம அம்மணத்தோட பொறந்த மாப்ள .. சந்தைக்கு என்னய்யா கொண்டு வந்தீங்க?"

இது எங்க பக்கத்து நக்கலுக்கு சின்ன சாம்பிள்...மாப்ளக்கு சங்கடம் தான்... கிண்டல் பண்ணத் தெரியாம இல்ல... மூணு தலக் கட்டா குடுத்து எடுக்கற மாமன். அவர் அக்காவ இவங்கப்பன் கட்ட... இவனோட அக்காவ மாமங் கட்ட... மாமன் புள்ளய இவனுக்குன்னு வளப்பாங்க... அவரக் கிண்டல் பண்ண முடியுமா ? அதுக்காக கிண்டலக் கேட்டுகிட்டு சிரிச்சுக்கிட்டும் போயிட முடியாது.. அத மாமனே ரசிக்க மாட்டார்..கிண்டலும் இருக்கணும்..மரியாதையும் கொறையப் படாது...கூட சிரிச்சுக்கிட்டே பதில் வரும் இப்படி...

"அண்டர் வேரும் அங்கராக்கும் போட்டுக்கிட்டுப் பொறந்த மாமனுக்கு தெரியாதுங்களா?ஈரங்காயமுங்க"

வெங்காயம் எங்களுக்கு ஈரங்காயமான கதை இது தான்!

---------------------------------------------------------
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
பி.கு....

1)வெங்காயத்த பத்தி நாலு வார்த்தை சொல்லலாம்னு வந்தா எங்கயோ இழுத்துக்கிட்டுப் போயிடுச்சு...

2)இது வழக்கமா சாப்பிடப் போற மகேஷ் மாப்ள ஓட்டல் கடைல எடுத்தது... குட்டான்ல இருந்து ஒரு வெங்காயத்த தனியா வெச்சா தடவி கிடவி கண்டு பிடிக்கவே ஒன்றரை நாளாவும்...யாருக்கோ?

3)இத கிலோ கணக்குல மொட்டாட்டம் தொலிக்கற நம் பெண் தெய்வங்களை வணங்குகிறேன்

4)ரெண்டு நாளா இதப் பத்தியே யோசனைல மனசுல வந்து உளுந்ததெல்லாம் டைப் பண்ணினது இன்னும் ரெண்டு பதிவுக்காகும்.. நீளம் கருதி வெட்டிட்டேன்

5)எங்க மதிலியங் காட்டுக்குப் போயிருந்தேன்..எம்பதத் தாண்டுன எங்க பெரியப்பா பழனிச்சாமி கவுண்டர் தென்ன மரத்துக்கு தண்ணி கட்டிக்கிட்டிருந்தார்... ஒரு மகன் ரிக் ஓனர்...இன்னொருத்தன் வெளி தேசத்துல வேல...கை நிறைய சம்பாதிக்கறாங்க..அவரு ஆசப் பட்டா காருல போய் எறங்கலாம்...இன்னும் எம்பத்திச் சொச்ச வயசுல றாலி சைக்கிள் தான்...ஒருக்கா பேசிக்கிட்டிருக்கறப்ப கேட்டேன்

"ஏம் பெரியப்பா இன்னுஞ் சீரழிஞ்சுகிட்டு...?ஜாலியா ரெஸ்ட் எடுக்கலாமே?"

மடிப்பைல இருந்து வெத்தலய எடுத்துக்கிட்டே சிரிச்சுட்டுச் சொன்னார்

"ரெஸ்டா அப்புனு....? மமுட்டி புடிச்சு மண்ணக் கொத்தறவனுக்கு மண்ணுக்குள்ள போற வரைக்கும் ரெஸ்ட்டேது ?நாலாளுக்கு மேலாளாப் போறது தான் ஒரே ரெஸ்ட்டு"
(பாடை மேல போறத அவரு பாணில சொல்றார்!)

6)தோட்டத்து வீட்டுக்கு பின்னால நின்னுகிட்டு பீடி ஒண்ணப் பத்திக்கிட்டே ரெண்டு மைலுக்கு அக்கட்ட இருக்கற சிப்காட் பக்கம் பாக்கறேன்... மானத்த தொடற ராட்சச பொகைக் கொழாய்ங்க...அதையும் தாண்டி நிக்கற செல் போன் டவர்...2500 ஏக்கர் பரப்பளவுள்ள பரந்து விரிந்த சிப்காட் பத்தி முன்னொரு காலத்துல பெருமை இருந்துச்சு...இப்ப நெஞ்சு முழுக்க இனம் காண முடியாத கசப்பு... அந்தக் கசப்பா... பீடி பொகை கசப்பான்னு தெரியல... வாந்தி வர்ற மாதிரி தொண்டைல கசப்பு ஓங்கரிச்சு வர காறித் துப்பறேன் சிப்காட் பக்கம்

........த்தூ.........
(பின் பி.கு...

இந்த சிப்காட்ட வெச்சுத் தான் உள்ளுக்குள்ள நாவல் ஒண்ணு ஓடிட்டிருக்கு... மண்ணே கதின்னு இருந்த வெள்ளாள வாழ்க்கை முறைல...சிப்காட் காரணமா திடீர்னு வந்த பணத்தால ஏற்பட்ட மாற்றங்கள் ...நல்லதும் கெட்டதும்... அழிஞ்சதும் தழைஞ்சதும்... இதான் அதோட கான்செப்ட்!

நகர வாழ்க்கை எனக்குத் தெரியாது... ரன்வே,டிரெயின் டிராக் எத்தன சொன்னாலும் புரியாது...எனக்கு! எனக்கு வெள்ளாம பண்ணத் தெரியாட்டியும் வெள்ளாளனையும் அவங் கஷ்டங்களையும் சந்தோசங்களையும் நல்லா தெரியும்...அரை நூற்றாண்டா நாம் பாத்து ரசிச்சு வேதனைப் பட்ட அந்தக் கதைய எழுதணும்...அதுல என்னப் பாதிச்ச ஜீவன்களே கதா பாத்திரங்கள்.. அப்ப கண்டிப்பா பார்வதியும் சுதந்திரா தேவியும் உண்டு...அவர்களுக்கு என் காணிக்கையும் பிராயச்சித்தமும் இதுவொன்றே!

நிறைய தகவல்கள் சேகரிக்கணும
கள ஆய்வும் போகணும்...குறிப்பா.. வீரப்பூர்...இது இல்லாத வெள்ளாளன் கதையா?கரூரப் பொறுத்த வரைக்கும் எக்கச்சக்க மாப்பிள்ளை சொந்தங்கள்.. தலவலி அவங்களுக்கே!

இத முடிக்காம நாஞ் சாக மாட்டேன்.. இந்த ஒண்ணுக்காகவே காலம் திரும்பத் திரும்பச் செதுக்கி பண்படுத்தி இங்க நிறுத்தியிருக்கறதா நம்பறேன்... என் ரெண்டு முகவரிலயும் இருந்த நண்பர்களுக்குத் தெரியும.. ரெண்டு முகவரி பதிவுக்குள்ள வித்தியாசம்.... அனுபவம் வாழ்க்கைய மட்டுமில்ல.. என் எழுத்தையும் செதுக்கியிருக்கு....
எப்படியும் வருசமாயிடும் ... எனவே,வருசங் கழித்து எதிர் பாருங்கள்

"ஒன்றுக்குள் ஒன்றுமில்லை_சிப்காட்
(ஈர வெங்காயம்)
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
இத வச்சு சாயந்திரம் வரைக்கும்
பொழுத ஓட்டுவோம்..
எட்டு மணிக்கு
காதல் நீலாம்பரி 26
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
அருமையான வட்டார மொழியில் அரட்டை அடித்த உணர்வு ஆனாலும் ஈரங்காயம் முழுமையாக வராத ஏக்கம் எடிட் செய்யாமல் போட்டிருக்கலாம்
 




kavitha28

மண்டலாதிபதி
Joined
Jan 24, 2018
Messages
415
Reaction score
683
Location
chennai
hi deva bro
nice post....vengayamnu disrespectful la solla mudiyaatha situationai azhaga ,vellaamaiyin kashtangalaiyum , arpanipum , izhapum avargalin kalnadaiyin meethulla akaraiyum,palagaaram-kaai kari exchange um miga arputhamaaga solli irukeenga......very touchin post...and all the best for ur new work.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top