• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நனியுண்டு நனியுண்டு காதல்! 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் தந்தவர்களுக்கு நன்றி!! அடுத்த பதிவு. வாசித்து விட்டு கருத்துக்களை பதிவிடுங்கள்.
~கல்பனா
12

தெலுங்கு சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்வதா? தமிழ் முறைப்படியா? கரிகாலன், மணிமேகலை இருவர் குடும்பத்திற்குள்ளும் சலசலப்பு. குழப்பம். சாதி கலப்பு திருமணங்களுக்கு உதவியாக இருந்துவிட்டு கரிகாலனே விட்டுக்கொடுக்கவில்லை என்றால் எப்படி?

தன் இல்லத்தினரை, கவின்ஸ் செய்து சம்மதிக்க வைத்தான் கரிகாலன். திருமணம் வெகு சாதரணமாக, ஆடம்பரமில்லாமல் இருக்க வேண்டும் என்பதில் இருவருமே தெளிவாக இருந்தனர்.குடும்ப உறுப்பினர்களுக்கு ஆடம்பரமாக செய்வதிலே விருப்பம். மிகவும் ஆடம்பரமும் இல்லாமல், வெகு சாதாரணமாகவும் இல்லாமல் மையமாக கொண்டாடினார் திருமணத்தை.

இரு கரத்திலும் பச்சை நிற இளநீரை தாங்கியவண்ணம், வெண்மையும், பிங்க், தங்க நிற இழைகள் கொண்டு பட்டுடுத்தி, ஆண்டிக் நகைகளால் அலங்கரிக்கப்பட்டு, வெட்கத்தில் முகம் செம்மையுற, மேடையேறி வந்தாள் மணிமேகலை.

தெலுங்கு மக்கள், வழக்கமாக நெற்றியில் இடும் பிந்தியின் கீழ், பிறை போல வளைந்த வடிவம், அவளுக்கு கூடுதல் அழகை தந்தது.அவளை தூக்கி சென்று, அந்த விண்மீன் கூட்டத்துக்கு நடுவில் பொருத்திவிட்டாலும் வேறுபாடு தெரியாது என்கிற அளவிற்கு மிளிர்ந்துகொண்டிருந்தாள். மூச்சுவிட மறந்தான் கரிகாலன், சில நிமிடங்களுக்கு. அவளை விடவும் இரட்டிப்பான கம்பீரத்துடன், கரிகாலன் வசீகரித்தான்.

அவர்கள் பாணியில் வேட்டியை இரு கால்களுக்கு இடையில் சுற்றிவிட்டிருக்க, அது மட்டும் அனீசியாக இருந்தது.இருவரையும் எதிரெதிரே அமரவைத்து, இடையில் ஒரு திரையை தொங்கவிட்டு சடங்குகள் தொடங்கியது. இருவர் கரத்திலும் தேங்காய் கொடுத்து அதற்கு பூஜை செய்து பின் அவர்கள் சம்பிரதாய முறைப்படி மணமகன், மணமகள் கழுத்தில் மங்கலநாணை பூட்ட வேண்டும்.

பூக்களும், அட்சதைகளும் தூவி ஆசிர்வாதம் செய்ய, கம்பீரமாக எழுந்து, அவள் கண்களுக்குள் பார்த்துக்கொண்டே, அவள் சங்குகழுத்தில் நாணைப் பூட்டினான் கரிகாலன்.இருவர் வதனத்திலும் சிரிப்பு உறைந்தே இருந்தது, அழகாக!!

கலகலத்து சிரித்தபடி மணிமேகலை, அவன் தலையில் அரிசியை கொட்ட, அவன் மந்தகாசப்புன்னகையுடன் தட்டிவிட்டுக்கொண்டிருந்தான். அவனுலகம் அவளிலியே உறைந்துவிட்டது.

“கரிகாலா!! அரிசியை கொட்டுடா!!” சுற்றியிருந்தவர்கள் உலுக்கி விட, திடுமென விழித்தவன், “கேண்டிட் கிளிக் கேட்டான். அதற்காக..” கேஷுவலாக சமாளித்து விட்டு சடங்குகளில் கவனமானான்.ஹோஹோஓஓஓ!!!“சமாளிக்குறடா கரிகாலா!!” மெச்சிக்கொண்ட மாறனுடன், பலமாக சிரித்தபடி இணைந்துகொண்டான் AV.

அடுத்தடுத்த சடங்குகளில், அவளைப்பார்க்காமல் கூடுதல் கவனமாகவே இருந்தான் கரிகாலன்.

“அவ உன்னைத்தான் பார்க்கிறாள். அவள் முகத்தை தான் பாரேண்டா!!” என்றார் அவன் பாட்டி.

“எதுக்கு? உசுப்பி விட்டு, அவனை கலாயக்கவா?” என்ற மாறனை முறைத்து பார்த்தான் கரிகாலன்.

“ஹேய்!! மேண்டி.. அன்னைக்கு ஏதோ பிடிக்காத மாதிரி என்னை அடிச்ச.. இப்போ இப்படி வெறிக்க வெறிக்க அண்ணனை பாக்குற. தலை குனிஞ்சு வெட்கப்படு.. ஒரு ஷாட் க்ளிக்குறேன்.” நக்கலடித்த நந்தினியை, ஒரு விரல் நீட்டி எச்சரித்தாள் மணிமேகலை.

சம்பிரதாயங்கள், உணவு முடிந்து, தங்கள் இல்லத்திற்கும் திரும்பி, மீதமிருந்த சடங்குகளையும் நிறைவாக செய்து முடித்தனர்.

வீட்டின் ஹாலில் கரிகாலனும், மணிமேகலையும் அருகருகே அமர்ந்திருந்தனர். அடிக்கடி கரிகாலனின் போன் சப்தம் எழுப்பிக்கொண்டே இருந்தது. முன்னிலும் அதிக உரிமையுடன், அவன் போனை பறித்து வைத்துக்கொண்டவள், “இன்று மட்டுமாவது, இது இல்லாமல் இருக்கலாமில்லையா?” என்றாள் கெஞ்சலாக.

இணையவளின் சொல்லுக்கு, அப்பீல் செய்யாமல் கண்சிமிட்டி, தலையசைத்தான் கரிகாலன். பலரும் வந்து வாழ்த்து சொல்லிவிட்டு சென்றுகொண்டிருந்தனர். இன்முகமாக அனைத்து வாழ்த்துக்களையும் பெற்றுக்கொள்வதே அவர்கள் பணியாக இருந்தது.

மதிய வேளையில், மாறன் வந்து கரிகாலனின் காதுக்குள் ஏதோ கிசுகிசுத்தான். சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தவன், தன் அறைக்கு சென்று, வழக்கமாக உடைக்கு மாறிக்கொண்டு வெளிவந்தான்.

மணிமேகலையிடம் கண்களாலேயே அனுமதி கேட்க, அவள் பிடிவாதமாக மறுத்தாள். அவளை மட்டும் தனியே விட்டு செல்கிறான். அப்படி என்ன அவசர வேலை? எல்லோர் முன்னும் ஏதும் பேசமுடியாது, பார்வையால் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டான் கரிகாலன்.

அவன் கூறியது போலவே, முதல் நாளே அவளை, அவனுக்கு பழகிக்கொள்ள வைத்துவிட்டான் AK. மனம் அவனோடு பிணங்கி கொண்டது. அவள் வயதையொத்த, வானதி மட்டுமே அளவலாவிக்கொண்டிருந்தாள், அவளோடு.
 




Last edited:

kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
மணிமேகலைக்கும், வானதிக்கும் நடுவில் வந்து திடுமென குதித்து அமர்ந்தான் AV.

அவனைக்கண்டுகொள்ளாது இரு பெண்களும் தெலுங்கில் உரையாட,“கொல்டீஸ்..தமிழில் பேசுங்க..” என்றான் AV.

அவன் அழைப்பில் உக்கிரமாகி சரமாரியாக இரண்டு பெண்களும் தங்கள் தாய்மொழியிலேயே வறுத்தெடுக்கவும், “மன்னிச்சுடுங்க அண்ணி!! நான் சரண்டர் ஆகிக்கொள்கிறேன்” என மொத்தமாக விழுந்தான்.

“முதலில் தெலுங்கு கத்துக்கணும். புரியாத பாஷையில் வசை வாங்க முடியவில்லை.”

“மீ!! இவங்க ஹனிமூன் ப்ளேன் செஞ்சிடீங்களா?” பரபரப்பாக சுழன்றுகொண்டிருந்த தன் அன்னையை நிறுத்தி தீவிரமாகக்கேட்டான் AV.

“கேரளாவுக்கு தான் அரேஞ் பண்ணிருந்தேன். கரிகாலன் ஒரு மாதத்திற்கு கிராமத்தை விட்டு நகரமுடியாதுன்னு சொல்லிட்டான்.”

“நானும் உன் அம்மாவும் செகன்ட் ஹனிமூன் போக முடிவுபண்ணிட்டோம்டா.” என்றார் அவன் தந்தை.“மூளையிருக்கா உங்களுக்கு?” கரிகாலனின் அம்மா கடிந்து கொள்ள,

“மீ!! வெட்கப்படாதீங்க. என்ஜாய்..” விஷமமாக கண்ணடித்தான் AV. அவன் தோளிலே பலமாக ஒரு அடி விழுந்தது.

“மகனே!! நான் லண்டனுக்கு ப்ளேன் போட்டேன். ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறாள், உன் மம்மி..ஹெல்ப் மீ டா..” குறைபட்டுக்கொண்டார் தந்தை.

“ஹாஹா..நான் பாத்துக்கிறேன். கவலையை விடுங்க.” உறுதி கொடுத்தான் மகன்.“

அருள்!! எனக்கும் உதவி பண்ணுடா!!” தாத்தாவும் இணைந்து கொண்டார்.

“எதுக்கு தாத்தா?நீங்களும் ஹனிமூனா? ஹாஹா” அவன் வெடித்து சிரிக்க,“விவரங்கெட்ட மனுஷன்..” வெட்கத்துடன் முறைத்தார் பாட்டி.

“இன்றைக்கு யாருக்கு மேரேஜ் முடிஞ்சதுன்னு தானே சந்தேகப்படுறீங்க?” அருகிலிருந்த மணிமேகலையிடம் கேட்க, எந்த பக்கம் தலையாட்டுவது என்று புரியாமல் விழித்தாள் அவள்.

“நாங்க கொஞ்சம் வித்தியாசம். பழகிடும்.” என்றான் கண்சிமிட்டி. கரிகாலனை நினவுப்படுத்தியது அது.பழகிடும் என்பது, இவர்கள் பேமிலி ட்ரேட் மார்க் டையலாக் போலும்.

ஆண்கள் செய்யும் அட்டகாசத்திற்கு சிரிக்காமல் இருக்க முடியவில்லை அவளால்! நிஜமாகவே அவளுக்கும் AV சொன்ன சந்தேகம் உதித்தது.

“ஹனிமூனுக்கு பேமிலியாக செல்பவர்கள் இவர்களாகத்தான் இருக்கும்.ஹாஹா” – வானதி.

“vv!! உனக்கு ஓகேன்னா, ஹனிமூன் போக நானும் ரெடி..” கள்ளமாக கண்ணடித்தான் AV.

“நீ மட்டும் போ.”

“நான் மட்டும் போனால், அது ஹனிமூன் இல்லடி..”

‘ஸ்ஸ்..அடப்பாவிங்களா??’ இவர்கள் சேட்டையில், அதிர்ந்து விழித்தது என்னவோ மணிமேகலை தான்.

‘ஹுக்கும்..’ தொண்டையை செருமி தன் இருப்பை காட்டினாள் மணிமேகலை. ‘அண்ணி, என்கிற மரியாதை கூட இல்லையாடா?’ என்பது போல இருந்தது அந்த பார்வை.

‘ருலர் ஆப் திஸ் ஹவுஸ்’ என்றால் அது கரிகாலன் மட்டும் தான். அவன் பார்வைக்கே சரண்டர் ஆகிறவர்களை பார்த்திருக்கிறாள். இல்லத்திலும் அவன் அப்படியே தான் போலும்.

“மிரு இத்தரு ப்ரேமிஸ்துன்னாரா??” Av யை தாண்டி, வானதியிடம் சந்தேகம் கேட்டாள் மணிமேகலை.

“யக்..லேது.” படுஅவசரமாக மறுத்தாள் வானதி.

“ஹோ!!”

“அண்ணி!! நீங்க ப்ரெஷ் ஆகிடுங்க. நான் உங்க சரிபாதியை அழைச்சிட்டு வரேன்.” இடையில் புகுந்தவன், மணிமேகலையை அங்கிருந்து அனுப்பிவிட்டான்.

ஹாலில் யாரும் இல்லையென்பதை உறுதிபடுத்திக்கொண்டு, வானதியின் முன்னே வந்து நின்றான் AV. அவளும் அனிச்சையாக எழுந்துநிற்க, அவள் கரத்தை பிடித்து பின்னே முறுக்கியவன்

“எதுக்குடி, என்னை பார்த்து ஓடுற??” என்றான் வேகமாக.

“வலிக்குதுரா..வொதலு..” வெண்பட்டு பாந்தமாக அவளுடலை தழுவியிருக்க, கருமணிகள் அங்குமிங்கும் உருள, அவன் பிடியிலிருந்து விடுபட போராடிக்கொண்டிருந்தவளை கண்டு அசந்து தான் போனான் AV.

“ஏன்டி? என்னோடு பேசமாட்டாயா?” நெருங்கி வந்திருந்தான்.

“நேனு மாட்லாடுதுன்னானு. கனி, நுவ்வு நாக்கு ப்ரபோஸ் செய்யகூடது..ரைட்?” கறாராக, டீல் பேசினாள் அவள்.நொடி நேர அமைதிக்கு பின், அவள் சொல்லில் அட்டகாசமாக சிரித்தான் அவன்.

“நீ பயங்கர ஸ்மார்ட் vv!! ஒத்துக்கிறேன். நான் உன்னை ப்ரபோஸ் பண்ண போறேன்னு மட்டும் காமெடி பண்ணாதே..” குலுங்கி குலுங்கி சிரித்தான்.‘

என்ன குழப்புகிறான்?’

“நான் எப்போதாவது சொன்னேனா உன் மேல் இன்ட்ரெஸ்ட் இருக்கு.. அப்படி இப்படின்னு..” அவளை மடக்கினான், தீவிரமான முகத்துடன்.

‘ஹையோ!!’ அவசரத்துடன் இல்லையென மறுத்தாள்.அதெப்படி அவனையே மடக்கலாம் அவள். ப்ரபோஸ் செய்யக்கூடாது என்று தடை வேறு. வானதியை நன்றாக குழப்பி, தவிக்கவிட்டு ரசித்தான் AV.

‘விழிப்பதை பார். மை ஸ்வீட் vv..’ மௌனமாக, உள்ளுக்குள் கொஞ்சிகொண்டான் அவளை.“ஐ நோ கேர்ள்.. நான் ரொம்ப ஸ்மார்ட்.. ஹாட் அன்ட் செக்ஸி” அவளை நோட்டம் விட்டபடி புருவத்தை நீவியவன், ‘நீ என்னை பார்த்தும், இம்ப்ரெஸ் ஆகிட்ட. ப்ரொபோஸ் செய்ய முயற்சி பண்ற. ஹுப்..’ நெடிய மூச்சொன்றை வெளியேற்றியவன், “பட், கண்ட்ரோல் யுவர் செல்ப் வானதி. ஐ ஹேட் கமிட்மென்ட்ஸ்.” விழிகள் அவள் மீது ரசனையாக படர, உதடுகள் பார்வைக்கு எதிராக பேசிக்கொண்டிருந்தது.

ஆச்சரியத்தில், வாயைப்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தாள்.என்ன மொத்தமாக அவள் புறம் திருப்பிவிட்டான். ஏமாற்றம் அவள் இதயத்தை சூழ்ந்தது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top