• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நனியுண்டு நனியுண்டு காதல்! 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
ஆதித்த கரிகாலனை போட்டு தள்ளிருவீங்களா சிஸ்? சீரியஸ்லி, இந்த ஐடியாவே இல்லை எனக்கு. இன்பாக்சில் வந்த இந்த கேள்வியால் அந்த போஸ்ட்டை தூக்கிட்டேன். என்னுடைய KET கதையின் தாக்கத்தால் இப்படி கேட்டீங்கன்னு நினைக்கிறேன். அதன் கதை வேறு. களம் வேறு. let me clear one thing. இப்போது எழுதுவது love cum family melodrama. பெரிய twist, turns எதுவும் இருக்காது. entertaining ஆக வாசிக்க நினைப்பவர்கள் உள்ளே நுழையலாம். வேறெந்த எதிர்பார்ப்பும் வச்சுக்காதீங்க. AK,KK supporters எல்லாம் weapons தூக்க வேண்டிய அவசியமில்லை.;);) இங்கே AK மட்டும் தான் ஹீரோ. AK supporters ஹாப்பியாகி இருப்பீங்கன்னு நம்புறேன். AK, KK க்கு இருக்கும் சப்போர்ட் பார்த்து ரொம்ப ஹாப்பியா இருக்கு. நன்றி மக்களே!!
இன்னைக்கு எபி ஷார்ட் தான். அட்ஜஸ்ட் கரோ. கதையை வாசிப்பவர்கள் எல்லோரும் ஒரு வரியிலாவது, கமென்ட் எழுதுங்கள்!!


9

பைக் ரேஸ் நடக்கும் பகுதி சமதளமாக இருக்கவில்லை. மேடும் பள்ளமுமாக இருந்தது. இப்போது, கரிகாலனின் போகசுக்குள் மணிமேகலை இல்லை. அருள்மொழி மட்டுமே அவன் போகஸுக்குள் இருந்தான். அவனை ஜெயிப்பது ஒன்றே குறிக்கோள்.

சிறு வயதிலிலேயே ஊறிப்போன போட்டி மனப்பான்மை எங்கும்.எதிலும்..எப்போதும்..இன்றும்..இப்போதும் கூட அது மாறவில்லை.

எதற்கு வந்தான் இங்கே? என்னைக்காணத் தானா? அது மட்டும் நிஜமாக இருந்தால் அவனையும் மீறி அந்தரங்கத்தில் ஒரு சந்தோஷம் பூக்கவே செய்யும் கரிகாலனுக்கு.

கரிகாலனைபோல அத்தனை தீவிரம், அருள்மொழிக்கு இருப்பதாக தோன்றவில்லை. அட்ரினல் பயங்கரமாக சுரக்கும் அளவிற்கு போட்டி போடுவான் கரிகாலன்.

நான்கு பெரிய வீதிகளை சுற்றி விட்டு, பைக்கால் ஒரு பெரிய வட்டமிட்டு பின் தொடங்கிய இடத்திற்கே வந்து சேர வேண்டும். சக்கரங்கள் மண்ணில் சரிந்து, சிக்கி பாதையை மாற்றியது. அந்த பாதைகளில் பைக் ஓட்டுவது எளிதல்ல. அதுவும் ரேஸ். சொல்லத்தேவையில்லை. கரடுமுரடான கற்களும் துருத்திக்கொண்டு தெரிந்தது பாதையில்.

‘போட்டியில் ஜெயிக்க வேண்டும்.’ ஏறக்குறைய இருவருக்கும் ஒரே உணர்வு தான். பல வருடங்கள் ஆகிவிட்டது இருவரும் நேருக்கு நேர் மோதி.

அங்கே ஒருவரின் பைக்கை மற்றவர் பிடித்து இழுப்பதுவும், எட்டி உதைத்து தள்ளிவிடுவதெல்லாம் சகஜம். கரிகாலனை மட்டும் யாருமே நெருங்கவில்லை.

கையில் பலமான சிராய்ப்புகளுடன் கோப்பையை தட்டி சென்றது கரிகாலனே!

அந்த பெரிய வட்டத்தின் மேல் ஊர்ந்து விட்டு அவன் எல்லைக்கோட்டிற்கு வந்தது தான் தாமதம்.

போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களை, கடுமையாக குற்றம் சாட்டிக்கொண்டிருந்தாள் மணிமேகலை. முன்னெச்சரிக்கைகள் எதுவும் இல்லாமல் ரேஸ் நடத்த, யார் அனுமதி கொடுத்தது. பலமான காயங்களுக்கு யார் பொறுப்பேற்றுகொள்வது?

‘கிராமத்தில் எல்லா வருடமும் நாங்கள் செய்வது தான்.’ அவர் சொன்ன, சாக்குகள் எதுவும் அவளிடம் எடுபடவில்லை. மக்கள் சூழத் தொடங்கினார்கள்.

“இது இங்கே சகஜம்மா!!” மணிமேகலைக்கு பின்னே வந்து மெல்லிய குரலில் மொழிந்தான் கரிகாலன். அவள் அமைதியாகவில்லை.

விழியின் கருமணிகளை உருட்டி, அப்படியொரு முறைப்பு. ‘தடுக்க தடுக்க கேட்காமல் சென்று விட்டாய் தானே?’ என்று. கரிகாலன் கரத்திலிருந்த, சிராய்ப்புகளும், காயங்களும் அவள் முறைப்பிற்கு நெய் வார்த்துக்கொண்டிருந்தது.

ஒரே ஒரு முறை மண்ணில் புரண்டு எழுந்தான். அவ்வளவே தான்.

“என்னதிது??”

“லேசான காயம் தான்டி..” சுற்றும் முற்றும் யாரும் தங்களை பார்க்கவில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு சன்னமாக சொன்னான்.

“உட்கார்..” நாற்காலியை சுட்டிக்காட்டி சொன்னாள். அவள் மிரட்டலில் அசந்துபோய் கரிகாலன் சொன்னதை செய்ய,

கெஹ்...பிஹ்.. அருகில் நின்றவண்ணம், அருள்மொழி சிரித்துக்கொண்டிருந்தான்.

“உனக்கென்ன சிரிப்பு?? பர்ஸ்ட் எய்ட் கிட் கொண்டு வா..”

“ஹு??? மீ??” AV பயங்கர ஆச்சரியமாக வினவ,

“எஸ்.. உன்னைத்தான். கொண்டு வா..சீக்கிரம்..” என ஏவினாள்.

“என்ன பண்றேன்னு புரியுதா உனக்கு??” பல்லைக்கடித்தபடி கேட்டான் கரிகாலன். கரிகாலன் எங்கிருந்தாலும் ‘சென்டர் ஆப் அட்ராக்ஷன்’ அவனாகத்தான் இருப்பான். இவளின் நடவடிக்கையே இருவருக்குமான உறவை காட்டிக்கொடுத்து விடுமே, மற்றவர்களுக்கு. அவளோ இன்னும் அவனை முழுமனதாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் காதலே ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அருள்மொழியும், ஒரு மாதிரி கோணலாக சிரித்து விட்டு செல்கிறான்.

அவன் காட்டும் கடுமைகளை கண்டு கொள்ளாமல், சிராய்ப்புகளை வருடி, உற்று நோக்கிக்கொண்டிருந்தாள். ஏதோ களிம்பு ஒன்றை பூசினாள். குளிர்ச்சியாக தோலுக்குள் இறங்கியது. அவள் மும்முரமாக சிகிச்சை கொடுத்து கொண்டிருக்க, சுற்றியிருந்தவர்கள் இருவரையும் சுவாரஸ்யமாக பார்த்துவிட்டு நகர, கரிகாலன் அவஸ்தையாகி தவித்தான்.

“விடுடி..அவ்வளவு சீன் இல்லை.” என்றான் அடிக்குரலில்.

“அதை நாங்க முடிவு செய்யணும்.” என்றாள் வெடுக்கென்று.

“எல்லோரும் நம்மை தான் பாக்குறாங்கடி.”

“பார்க்கட்டும்.சோ வாட்?”

புரிந்து தான் பேசுகிறாளா இவள்? அங்கே அவனொரு விஐபி. அவன் தும்மினாலும் பிளேஷ் நியுஸ் தான் கிராமத்திற்கு.

“படுத்தாதேடி!!” அவன் அவளிடமிருந்து விலகி ஓடப்பார்க்க,

விழிகளை உயர்த்தி நோக்கியவள், “நான் உன் பக்கத்தில் இருப்பது உனக்கு அவமானமா என்ன? உனக்கு உதவி செய்யக்கூடாதா? பிடிக்கவில்லையா?” வார்த்தையால் மடக்கினாள் அவள்.

“நான் எதுவும் சொல்லலடி..” அவனையே மடக்குகிறாளே பெண்.

கரத்தை அவளிடம் கொடுத்து விட்டு விச்ராந்தியாய் உட்கார்ந்துவிட்டான் கரிகாலன். வேறென்ன செய்யமுடியும்? கிராமத்தில் அவனுக்கென்று சில விரோதிகளும் உண்டு. அவர்கள் தேவையில்லாமல் இவளை சீண்டபார்த்தால்? அதற்கு தான் தயங்கினான்.

காயத்தை சுத்தம் செய்து, பேன்ட் எய்ட் ஒட்டினாள். கரிகாலன், அமைதியாக பார்த்துக்கொண்டே இருந்தான்.

“நிஜமாகவே, உன் வேகத்தை பார்த்து அரண்டுட்டேன். இனி இது போல் செய்யாதே!!” தீவிரமாக சொன்னாள் மணிமேகலை. அவள் கரிசனம் இதமாக இருந்தது. இருந்தாலும், “kk!! எனக்குன்னு ஒரு ஸ்பேஸ் இருக்கு. அதுக்குள் யாரையும் நுழையவிடமாட்டேன். உன்னோட ஸ்பேஸ்குள்ள நானும் மூக்கை நுழைக்கமாட்டேன். புரிஞ்சிதா??”

இருவர் உறவுக்கும் அப்போதே, ஒரு எல்லைக்கோட்டை மிக தெளிவாக வகுத்தான் கரிகாலன். அவள் பார்வை, உஷ்ணமாக உரசித்திரும்பியது. அவள் செயலில் கூடிய வேகமும், அவசரமும் அவள் கோபத்தின் அளவை எடுத்துக்காட்டியது.

அவள் முகம் மொத்தமாக விழுந்து விட்டிருந்தது. கன்னக்கதுப்புகளில் சிவப்பேறியிருக்க, இமைகுடைகள் தாழ்ந்து, இதழ்கள் துடித்துக்கொண்டிருந்தது. ‘அவன் சொன்னதற்காகவா?’

அவள், இடது கை மணிக்கட்டில் டேட்டுவாக மிளிர்ந்த, அந்த ம்யூசிக் நோட் அவனை வெகுவாக ஈர்த்தது. தன்னிலை மறந்து, அவள் கரத்தை எடுத்து முத்தமிட எத்தனிக்க, அவள் விருட்டென, எழுந்து போயிருந்தாள், குறையாத கோபத்துடன்.

“kk!!”

“சொதப்பிட்டியேடா!! ச்ச..”

பொம்மையை பிடுங்கிய குழந்தையின் ஏக்கத்துடன் அவன், செல்பவளை பார்த்துக்கொண்டிருக்க, அவன் பிபியை ஏற்றிவிடும் நோக்கில், முன்னே வந்து குதித்தான் அருள்மொழி.

‘என்னென்ன செய்ய காத்திருக்கிறானோ இவன்?’ மானசீகமாக நெற்றியில் அறைந்து கொண்டான் கரிகாலன்.

தோற்றதற்காகவெல்லாம் கவலைகொள்ளும் ஜென்மம் இல்லை அருள்மொழி. எல்லா மனிதனுக்குள்ளும், குரங்குத்தனம் மிச்சமிருக்கும். குரங்கிற்குள் மனிததன்மை இருக்குமானால் அது AV தான்!!

கரிகாலனிடம் அருள்மொழியை பற்றி கேட்டோமானால், அவன் விளக்கம் மேலே சொன்னது போலத்தான் இருக்கும்.

“யாரந்த பியுட்டி??”

“பல்லை உடைப்பேன். மரியாதையா பேசு..” எகிறினான் கரிகாலன்.

“ஹோ!! புரிஞ்சிடுச்சு..” இதழ்களை இறுக்கி பலமாக தலையாட்டினான் AV.

“அவளிடம், உன் குரங்குதனத்தை காட்டினால் சும்மா இருக்கமாட்டேன்.” யாரிடமோ பேசுவது போல எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னான் AK. சலனமில்லாமல் தலையாட்டினான் அருள்மொழி.

அன்று, தோப்பில் வேலை இருந்ததால், அதிகாலையிலேயே சென்றிருந்தான் கரிகாலன்.

நிலத்தில் வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறை. அவன் மட்டுமே நிர்வகிக்க வேண்டும். கூலிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை, பெரும்பாலும்.

மற்றவர்கள் இருபது மண்டி தேங்காய் இறக்கினால், இவன் தோப்பிலிருந்து நான்கு மண்டிகளை நிரப்பும் அளவு தான் ஈல்ட் கிடைக்கும். பெரிதாக லாபம் இல்லையென்றாலும், இயற்கை விவசாயத்தையே கடைபிடித்தான் கரிகாலன்.

திருவிழாவில் அவனிடம் கோபமாக பேசியதோடு முடிந்தது. அதன் பிறகு அவனிடம் பேசவேயில்லை கரிகாலன். அருள்மொழியும் படுஅமைதியாக கிராமத்தை வலம்வந்து கொண்டிருந்தான்.

‘இவன் அமைதியாக இருந்தாலே, வில்லத்தனம் செய்யப்போவதாக தானே அர்த்தம்?’

‘மாறிவிட்டிருப்பனா?’ தனக்கு தானே கேட்டுக்கொண்டான் கரிகாலன். விடை தெரியவில்லை. அவன் நினைத்த நொடியே, தான் மாறவேயில்லை என்று நிரூபித்தான் AV. மணிமேகலையிடமிருந்து வந்த கால் அதை நிரூபித்தது.

“இல்லம்மா!!”

“என்னடி பிரச்சனை?” மணிமேகலையை காண விரைந்தான்.

அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கும் காதலுக்கு என்ட் கார்ட் போட்டு விடுவான் போலிருக்கிறதே!! கரிகாலனின் உடன்பிறந்த, தம்பி அருள்மொழி தன் லீலைகளை அரங்கேற்றம் செய்யத் துவங்கியிருந்தான், செவ்வனே.
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
அந்த பயம் இருக்கட்டும் கல்ப்மா. ஆ.க. தான் இந்த கதையில் கதாநாயகன் இதை நினைவில் வைத்துக் கதை எழுதினால் சரி ;):giggle:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top