• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நம்பிக்கை-பெண்களின் பலவீனம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,861
Location
MADURAI


“பூலோகத்தில்

பெண் குழந்தையின்

வருகை

பூந்தென்றலாய்”



“தத்தி நடைபயிலையிலே

நம்பி பிடித்துக்கொண்டாள்

நானிலத்தில் தான்

தோன்ற

காரணமாய் இருந்தவர்களின்

கரங்களை”



“பெண்ணின்

ஒவ்வொரு பருவத்திலும்

ஒளித்துக்கொண்டால்

தன்னுள்ளே

தனலாய் தகிக்கும்

வீரமதை

தானாய் வளர்த்துக்கொண்டாள்

தன்னை சுற்றி

இருப்பவர்களின் மேல்

நம்பிக்கையை”



“நம்பிக்கையும்

ஒரு நாள்

நஞ்சாய் மாறியது”



“பிஞ்சு பெண்மனம்

மணம்புரிந்தவன்

ஆண்டவன் என எண்ணிட

அவன்

அடுத்தவளை

நாடிச்சென்றிட

நடுவீதியில்

பெண்ணவள்

நின்றிட

பெற்றோரும்

காலனோடு

கை கோர்த்திட

உடன் பிறந்தோறும்

மனைவிகளின்

வாழாவெட்டி வஞ்சிக்கு

வீட்டில்

இடம் இல்லை கூற்றை

வேதவாக்காய்

எண்ணிட

தனித்து விடப்பட்ட

தங்கமகள்

அவளோடு

தவமிருந்து

பெற்ற பிள்ளைகளோடு

கூடி அழுதிட

குறையற்ற அவள்

அன்பு குப்பையில்

வீசப்பட்ட

வேகத்தில்

நன்னம்பிக்கை

கொண்ட நாயகி

அவளின்

நயனங்களில்

நாள் தோறும்

கண்ணீர் கோடுகள்”



“நம்பிக்கையால்

நனைந்த அவள்

கண்கள்

ரௌத்திரமாய்

மாறியது

பெற்றெடுத்த நன்முத்தின்

வாழ்வை பேணிட”



“பெற்றெடுத்த பிள்ளையும்

ஒரு நாள்

ஓய்வெடுக்கச்சொல்லி

அவளை

ஊருக்கு

ஒதுக்குபுறத்தில்

ஓர் முதியோர்

இல்லத்தில்

விட்டுச்சென்றிட

வெந்ததோ அவள்

மனது

வேதனையில்

அவள்

நம்பிக்கை

நாலாப்புறமும்

அவளை

சிதைத்ததோ”



“பிரசவத்தின்

பெருவலியை

தாங்கிடுபவள் தான்

நம்பிக்கை எனும்

நஞ்சால்

நொடிக்கொருதரம்

மடிந்தாளோ?”



கனி
 




THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,861
Location
MADURAI
அருமையான வரிகள் டா என்னைக்கும் பெண்களோட பலவீனம் நம்பிக்கை தான் ?????
ஆமாம் அல்லிமா அந்த பலவீனத்துல தான் பலர் விளையாடுறாங்க
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top