• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நாங்கலாம் அப்பவே அப்படி --10 final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
Wowwww semma story pa❤❤❤❤❤❤

இப்ப தான் படிச்சேன் கார்த்திகா சகி,
ரொம்ப ரொம்ப பிடிச்சது.
கதை தொடக்கத்தில இருந்து முடிவு வரைக்கும் மிக அருமையாக இருந்தது.

அழகி நாச்சியார் சான்சே இல்ல செம்ம, கௌதம் சொல்லவே தேவையில்ல...

மிக அழகான காதல் சொல்லும் குறுநாவல் ?????

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் சகி ????
 




Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
பார்க்கலாம் நீயா? நானா? என்று மனதில் நினைத்தவள் அவ்விடம் விட்டு அகன்றாள். அது அறியாமல் காதல் பறவைகள் தங்களது உலகத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர்.


அப்போது மேலே பறந்து சென்ற பறவை ஒன்று கவ்வி சென்ற பழம் நழுவி இவர்கள் அருகில் விழ நினைவு கலைந்து கௌதம் அவள் கையை பிடிக்க வர,

"கிட்ட வந்தா கொன்றுவேன் கௌ" என்று விலக


"கொன்னுடு, இந்த அவஸ்தை என்னால முடியல பக்கத்துல நீயிருந்தும் உன்னை கட்டாம கைகட்டி நிக்கற இந்த நிலமைய நான் அடியோடு வெறுக்கறேன்."


"அய்ய என்ன இப்படி ஆய்ட்டீங்க, நான் இந்த ஆட்டத்துக்கு வரல, நான் கெளம்பறேன் பா " என்றவள் ஓடிவிட்டாள்.


அவளறைக்கு சென்று புகுந்து கொள்ள அவளின் பின் வந்தவன் அவளறை கதவை தட்ட நினைத்து பின் வேண்டாம் என அவனது அறைக்கு சென்று விட்டான்.

சிறிது நேரத்தில் நாச்சியாரின் அறை கதவு தட்டபட, யாரென்று கதவை திறந்தால் அங்கே நிவி நின்று கொண்டிருந்தாள். இவளென்ன இங்கே என நினைத்தாலும் "என்ன வேணும்" என வாய் கேட்டது.


"அது ஒரு சின்ன ஹெல்ப்"


"என்ன"

"அது என்னோட செய்ன் அங்க ஸ்விம்மிங் பூல்ல விழுந்துடுச்சு அத எடுக்கனும்"

"அதுக்கு நான் என்ன பண்ணணும்"

"என்னால இந்த ட்ரெஸ் போட்டு எடுக்க முடியல, அதான் நீ வந்து எடுத்து தரியா"


"ஏன் வேற யாரும் இல்லயா"


"இல்ல ரோகேஷ் காணோம், கௌதம ஏன் டிஸ்டர்ப் பண்ணணும் நீ வாயேன்"


யோசித்தாலும் "சரி வா" என்றவாறு முன்னே நடக்க பின்னால் மர்ம புன்னகையுடன் பின் தொடர்ந்தாள் நிவி.


நாச்சியாரை எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க வெறி பிடித்தவள் போல குறுக்கும் நெடுக்கும் நடந்து கண்டுபிடித்ததுதான் இந்த வழி.


ஒரு முறை தனக்கு நீச்சல் தெரியாது என்றும் தனக்கு பயம் என்றும் ராகேஷிடம் நாச்சியார் பேசிக் கொண்டிருந்ததை நிவி கேட்டிருந்தாள்.


அதனால் அவளை அதை வைத்து சிறிது மிரட்டி வீட்டை விட்டும் கௌதமை விட்டும் துரத்தலாம் என எண்ணியே இப்போது நாச்சியாரை அழைத்து செல்கிறாள். நீச்சல் குளம் அருகே வந்திருந்தனர்.


"எங்க இருக்கு உன்னோட செய்ன்"

"அதுவா தோ அங்கதான் இருக்கு பாரு"


"எங்க எனக்கு தெரியலயே"


"குனிஞ்சு பாரு, ஒன்றரை லட்சம் பிளாட்டினம் செய்ன் "


அவள் சொன்னதை நம்பி இன்னும் நன்றாக குனிந்து பார்க்க சுற்றும் முற்றும் பார்த்தவள் தண்ணீரில் தள்ளி விட்டிருந்தாள்.



அவள் இப்படி தள்ளுவாள் என எதிர்பார்க்காத நாச்சியார் தண்ணீரில் விழுந்து உள்ளே போய் போய் வந்து கொண்டிருந்தாள்.


அவள் உயரத்திற்க்கு அது ஒன்றும் அவ்வளவு ஆழம் இல்லைதாஸன், ஆனால் பயம் அவள் புத்தியை மறைத்து விட்டது.


அவளை ஒரரு குரூர திருப்தியுடன் பார்த்த நிவி "இனி கௌதம நினைப்ப அதுக்குதான் இந்த தண்டனை" என கூறிக்கொண்டிருக்க

"ஹேய் ப்யூட்டி"


என கத்தியவாறு கௌதம் வந்து சேர்ந்தான்.


அவனறை பால்கனியில் அமர்ந்திருந்தவன் நாச்சியாரின் பேச்சுக்குரல் கேட்டு அவளை காண எழுந்து நின்று பார்த்திருந்தான். உடன் நிவியை பார்த்து நெற்றி சுருக்கியவன் அவர்களையே பார்த்திருக்க நீச்சல் குளம் அருகில் சென்றவள் குனிந்து எதையோ தேடிக்கொண்டிருப்பது தெரிந்தது.



எதை தேடுகிறாள் என நினைக்கும்போதே நிவி நாச்சாயாரை பின்னிருந்து தள்ளியதை பார்த்து ஓடி வந்திருந்தான். வந்தவன் விரைந்து நீரில் குதித்து அவளை மேலே இழுத்து வந்தான்.


அப்படி ஒன்றும் மோசமாகவில்லை, கொஞ்சம் பயந்து நடுங்கி கொண்டிருந்தாள். நிவியோ கையை பிசைந்தபடி நின்றிருந்தாள்.


ச்சே இவன் கரெக்டா வந்துட்டானே.நாம தள்ளினத பார்த்திருப்பானோ? ச்சே இருக்காது எதுக்கும் நூல் விட்டு பாப்போம்.


"அது நான் வேணாண்ணுதான் கௌதம் சொன்னேன் ஆனா இவதா......" பளீரென்று அறைந்த அறையில் நிவி நீச்சள் குளத்தில் விழுந்திருந்தாள்.


ஒரு விரலை நீட்டி எச்சரித்தவன் "நடிக்கற ராஸ்கல் பொண்ணா நீ ஒழுங்கா இப்பவே ஓடிப்போயிரு இல்ல நடக்கறதுக்கு நான் பொறுப்பில்ல" என்றவன் இருமிக் கொண்டிருந்த நாச்சியாரை தூக்கி சென்றிருந்தான்.



அவளறைக்கு சென்றவன் அவளை துணி மாற்றி கொள்ளுமாறு கூறி, பால்கனிக்கு சென்றுவிட்டான். அவள் மாற்றியவுடன் உள்ளே வந்தவன் இறுக்கமாக அணைத்து கொண்டான்.


"ஏன்டி அவகூட போன "


"அவதான் செய்ன் எடுக்க கூப்டா"


அவ கூப்டா நீயும் போய்டுவியா லூசு கொஞ்ச நேரத்துல கொண்ணுட்டடி" என இறுக்க இவளும் பாந்தமாக அவனுள் அடங்கினாள்.


ஒரு மாதம் கழித்து இன்னும் ஒரு வாரத்தில் கௌதமிற்கும் ,நாச்சியார்க்கும் திருமணம் ஊரில் வைத்து.


கௌதம் தான் பாட்டியிடம் சொல்லி அவசரமாக திருமணத்தை வைக்க பணித்திருந்தான். நாச்சியாரின் வீட்டிலும் அனைவருக்கும் மகிழ்ச்சி. திருமண வேலைகள் மடமடவென்று நிகழ்ந்து கொண்டிருந்தன.


இதுவரை இவன் அவளை ஊருக்கு அனுப்பவில்லை. ஏன் என்று கேட்டவர்களை ஒருவாறு சமாளித்திருந்தான். இதோ இன்று நீச்சல் குளத்தில் வைத்து நாச்சியார் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.


கையில் இவளுக்கான நீச்சல்உடையுடன் நின்று கொண்டிருந்தான்.

"ப்ளிஸ் கௌதம் மாமா வேணாமே"



"மாமா கூப்டா மயங்கிடுவோமா! நோ நீ இத செஞ்சிதான் ஆகனும். "

அவள் பிடிவாதமாய் நிற்க

"சரி பரவால்ல இந்த ட்ரெஸ்ஸ விட தாவணி பாவாடைதான் எனக்கு வசதி நீ அப்படியே வா" என கையை பிடித்து இழுக்க

"விடு நானே வரேன்" என நீச்ஞல் உடை மாற்றி நெளிந்தபடி வந்தாள்.


அவளை நீரினுள் இறக்கி "ஒழுங்கா கத்துக்கற புரியுதா" என கர்மசிரத்தையாக சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தான்.


அவள் தான் இவன் விரல்களின் ஸ்பரிசத்தில் நெளிந்து கொண்டிருந்தாள்.

அன்று நிவியால் ஆபத்து ஏற்பட்டாலும் நீச்சல் தெரிந்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது என எண்ணி அவளுக்கு வலுக்கட்டாயமாக நீச்சல் கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருந்தான்.


இதற்கு குடும்பத்தில் இருந்து ஏகோபத்த வரவேற்பு.பின்னே சிறுவயதில் நீச்சல் பழக்க கிணற்றில் குடுவையை கட்டி விட ,இவள் பயந்து பேய், நீந்திக் கொண்டிருந்த கௌதமின் கழுத்தில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

அவனுக்கோ குடுவை இல்லை.
எப்படியோ தினறி அவளை கீழே தள்ளி விட்டாருந்தான். உயிர் போய் உயிர் வந்த நிலமை அவனுக்கு.

அதிலிருந்து அவள் நீச்சல் பக்கம் சென்றதேயில்லை. இன்று அதை நினைத்துக்கொண்டவள்,

"கௌதமா இரு வரேன் என்கிட்டயேவா! " என கூறிக்கொண்டவள் நொடியில் அவனை இழுத்து அவன் மேலே ஏறியிருந்தாள். அவனும் இதை எதிர்பார்க்கவில்லை.


"ஏய் பம்ப்கின் இறங்குடி. என்ன பன்ற நீ..திருந்தவே மாட்டியா! என்று அவளை கீழே இறக்கினான்.


"இதுக்குதான் சொன்னேன் கேட்டியா நீ" என நக்கலாக சிறித்தபடி கேட்க,


"இவ்வளவு வயிசாயிடுச்சு இன்னும் சின்ன புள்ளையாட்டம் அடம் பண்ற, ஏன்டி இத்தன வில்லத்தனம் பன்ற" என சுகமாய் சலித்துக் கொண்டான்.


" நாங்கலாம் அப்பவே அப்படி" இருந்தோம், இப்ப இருக்க மாட்டோமா! போயா..போயா போய் வேற வேலைய பாரு வந்துட்டாரு நீச்சல் கத்துக் கொடுக்க."


அவளை ரசனையாய் பார்த்தவாறே "சரி கொஞ்ச நாள் நல்ல பையனா இருக்கலான்னு பார்த்தா விடமாட்டியே என்றவன் அவள் சுதாரித்து விலகும் முன் அவளையும் சேர்த்து அணைத்துக்கொண்டு நீருக்குள் மூழ்கியிருந்தான்" (ஸ்ஸப்பா இந்த தடவ யாரும் பாக்கல)


சிறிது நேரம் கழித்து வெளியே வந்த நாச்சியார் தன் இதழை தொட்டுப்பார்த்தவாறே "கெட்ட பய சார் இந்த கௌதம்" என அவன் நெஞ்சிலேயே அடைக்கலமானாள். இத்துடன் நாமும் விடைபெறுவோம்.
??????? appa mudilada samyyy superr kalakutnga????????
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
Nivi...:mad: worst behaviour ...rakeshkum oru jodi vaichurkalaam pa..

Supera mudichuteenga(y)
நன்றிபா...ஜோடி வச்சிருக்கலாம்தான் ஆனா கொடுத்த லிமிட்குள்ள இத முடிக்கவே நாக்கு தள்ளிடுச்சு... :sleep::sleep:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top