நாங்கலாம் அப்பவே அப்படி -- 3

karthika manoharan

Author
Author
SM Exclusive Author
#1
சென்ற அத்தியாயத்தை படித்தவர்களுக்கு நன்றி, விருப்பத்தை தெரிவு செய்தவர்களுக்கு மிக்க நன்றி, கருத்துக்களை பதிவு செய்த நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி....... இதோ மூன்றாவது அத்தியாயம்....


நாங்கலாம் அப்பவே அப்படி


"தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க உள்ளாற வந்தா நான் பொல்லாதவேங்க"


என தலைவர் பாடல் காதை பிளக்க அலறியடித்து எழுந்தான் ராகேஷ். மணி எத்தனை என்று பார்க்க அது ஐந்து நாற்பத்தைந்தை காட்டியது. தலையை உலுக்கி தூக்கத்தை விரட்டினாலும் போகமாட்டேன் என அது அடம்பிடிக்க வலுக்கட்டாயமாக தண்ணியில் அமுக்கி அதை விரட்டினான்.


"யாருடா அது இந்த வீட்ல இவ்ளோ சத்தமா பாட்டு கேக்கறது. அரசுவா இருக்குமோ? ச்சே..ச்சே இருக்காது..வேற?????


அந்த பொண்ணு .."டேய்..டேய் அறிவுகெட்டவனே அது அவ்ளோ அமைதியா இருந்துச்சு அந்த பாப்பா அப்படிலாம் பண்ண சான்ஸே இல்ல. "என மனசாட்சி கல்லை கொண்டு அடிக்க...அதுவும் சரிதான் யாரா இருப்பாங்க என்றவாறு தன் அறையை விட்டு வெளியே வர


இந்த சத்தம் தங்களை துளியும் பாதிக்கவில்லை என்பதை போல தாத்தா தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க, காமாட்சி, தெய்வானை இருவரும் சமையலறையில் இருந்தனர்.சரி அவர்களிடம் விவரம் கேட்போம் என அங்கு சென்றான். "அம்மா...பாட்டி" என மாறிமாறி அழைக்க அவர்களுக்கு கேட்டதை போல தெரியவே இல்லை. அதுசரி இந்த சத்தத்துல எங்க கேக்க போகுது என நினைத்துக்கொண்டவன் தெய்வானையின் தோளை தொட அவரோ பயந்து விருக்கென்று அதிர்ந்து திரும்ப, அங்கு ராகேஷ் இருப்பதை பார்த்ததும் தன் நெஞ்சில் கை வைத்து ஆசுவாசமடைந்தவர்,


" வாப்பா எழுந்துட்டியா? காலைல என்ன சாப்பிடுவ பால், காபி, டீ என்ன வேணும் சொல்லு"


"எனக்கு...."

அவனை நிறுத்துமாறு சைகை செய்தவர் தன் காதிலிருந்து பஞ்சை எடுத்துவிட்டு


"இப்ப சொல்லுப்பா"

அவரது செயலில் ஆ...வென வாயைப்பிளந்தவன்..

"ஏன்மா இப்படி?" என ஆச்சர்யம் விலகாமல் கேட்க....

"அதை ஏன்பா கேக்கற எல்லாம் நான் பெத்ததுக்காகதான்" அவரது கவலை அவருக்கு...


"யாருமா அரசா?"


"இல்லப்பா அவன் தங்கம் , கலகலப்பா இருப்பானே ஒழிய சூதுவாது இல்லாத புள்ள....நான் பெத்த பெருசுதான் இதுக்கு காரணம்"


"என்ன அவங்களா?" என ஆச்சர்ய மிகுதியில் கத்தியேவிட்டான்.

"அவகளேதான்"


"வெளிய தாத்தா".... என தடுமாறியவன் "அவர் ஒன்னுமே சொல்லமாட்டாரா?"


"அத அப்பறம் சொல்றேன் " என சைகை செய்தவர் மீண்டும் என்ன வேண்டும் என கேட்டு கொடுக்க, தனது கப்புடன் ஹாலிற்க்கு வந்தான்....


அங்கோ நடுஹாலில் அரசு தூங்கி வழிந்தவாறு அமர்ந்திருக்க, அவன் அருகில் சென்றவன் "அரசு" என தோளில் கைவைக்க "ஐயோ அக்கா " என கத்தியவனை பார்த்து விருட்டென தானும் இரண்டடி பின்னால் சென்ற ராகேஷ்


"டேய் என்னடா காலங்காத்தால எல்லாரும் இப்படி பயங்காட்டுறீங்க" என அழாத குறையாக புலம்ப..

உடனே தன் காதில் இருந்த பஞ்சை எடுத்துவிட்டு "ஐயோ! நீங்களா சாரிண்ணா..சாரிண்ணா நான் அக்காவோன்னு நினைச்சேன்.


வாங்க வந்து உட்காருங்க "என தன் பக்கத்தில் இடம் காட்ட இவனோ" குடும்பமே இப்படிதான் சுத்தறாய்ங்களோ? "என எண்ணியவன் ஒரு அடி தள்ளி அமர்ந்தான்.

(உஷாராமாம்..ஆனா இவனுக்கு தெரியல சைத்தான் மேல இருந்து மட்டுமில்ல வீட்டுக்கு வெளில இருந்தும் வரும்னு) காபியை ஒரு மிடறு விழுங்கியவன்


"ஆஹா காபின்னா அது தெய்வாம்மா காபிதான் பேஷ்..பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு" என்றவாறே மெதுவாக உறிய தொடங்கினான்.


அப்போது திடீரென்று பாட்டு சத்தம் நிறுத்தப்பட "அண்ணா கவனம் அவங்க வருவாங்க" என அரசு எச்சரிக்கை செய்ய உள்ளுக்குள் அதிர்ந்தாலும் வெளியில் "ஹா..யாருக்கிட்ட நாங்க சைத்தானயே சைட்ல தூக்கி போடுவோம்...இதெல்லாம் ஜீஜுபி."
என கெத்தாக சொல்லியவனை ஒரு பாவப்பார்வை பார்த்தான் அரசு.


"இவன் ஏன் நம்மள இப்படி பாவமா பார்க்கறான்..நேத்தும் கூட இப்படிதான் பார்த்து வச்சான் என்னன்னு கேக்கனும்..ஆனா முதல்ல காபிய குடிப்போம்" என வாயில் வைக்க "தல" என திடீரென்று பல குரல்கள் கத்தும் சத்தம் வீட்டினுள் கேட்க குடித்துக்கொண்டிருந்த காபியை அப்படியே வெளியில் துப்பிவிட்டான்.


நல்லவேளை கப்பை கீழே போடவில்லை. இந்த வீட்டுல நிம்மதியா காபி கூட குடிக்க விடமாட்டிங்கறாங்களே என வெளிப்படையாகவே புலம்பியவன் இம்முறை யாரென பார்க்க அங்கே சைஸ் வாரியாக பத்து, எட்டு, ஆறு ,நான்கு வயதுகளில் நான்கு குட்டிகள் இருக்க...இவர்கள் யாரையும் பொருட்படுத்தாமல் மேலே உள்ள அறைக்கு ஓடினர்.


"இந்த அவதார் குட்டிங்க யாருடா?" என மனதில் நினைப்பதாய் வெளியே பேசிவிட்டான்.

அவன் வாயை அவசரமாக பொத்தியவன் அருகில் இருந்த அறைக்கு அவனை இழுத்துச் சென்றான்.

"டேய்..டேய் அரசு என்னடா பன்ற?"

"அட வாங்கண்ணா முதல் நாளே பூஜை வாங்க அவ்வளவு அவசரமா?" அறையினுள் இழுத்துச் சென்றவன் கதவை கொஞ்சமாக திறந்து வைத்தவாறே "இப்ப நடக்கறத வேடிக்கை மட்டும் பாருங்க" "இதென்னடா மந்திர குகை மாதிரியே இப்படி பயங்காட்டுறான்!!! சரி பாப்போம் என்ன நடக்குதுன்னு" என்று எண்ணியவாறு அவனும் எட்டிபார்த்திருக்க..


சிறிது நேரத்தில் ஒவ்வொருவராய் வெளியே வந்தனர். கண்களில் கலர் கலராய் சன் கிளாசுடன் அவர்களின் பின்னால் அழகு நாச்சியார் நிற கிளிப்பச்சை நிற பாவாடை, மஞ்சள் நிற ஜாக்கெட், ரோஜா நிற தாவணி அணிந்து, தலைவாரி அடியில் குஞ்சம் வைத்து பின்னி தலை நிறைய குண்டுமல்லி பூ வைத்து, அஞ்சனம் பூசிய மைவிழிகளை மறைத்தவாறு கருப்பு நிற சன் கிளாஸ், பின்னலிட்ட ஜடையை முன்னால் விட்டு ஆட்டியவாறு நடந்து வர உள்ளிருந்து ராகேஷ் ஆவென பார்த்திருந்தான்.


நேற்று பார்த்த பெண்ணா இவள்..இன்றைய அதிர்ச்சிகள் இன்னும் முடியவில்லை போல.ஒய்யாரமாக நடந்து வந்தவள், ஹாலில் இருந்த ஒற்றை சோபாவில் கால்மேல் காலிட்டு அமர , மற்ற நால்வரும் அவளின் பின்னால். சுற்றி ஒருமுறை நோட்டம் விட்டவள் முகம் ஒரு கனம் சுருங்கி எதையோ யோசித்து பின் தெளிந்தது.

"அம்மா"

"ம்மா"

"மா"

"தாயே தெய்வா" என இடைவிடாது கத்திக்கொண்டிருக்க...

"என்னடி"

"தாயே குரல் மட்டும் வருது உன் திருமுகத்தை ஒருமுகமா காட்டம்மா"

"எனக்கு வேலை நிறைய இருக்கு என்னன்னு சொல்லு" குரல் காரமாகவே வர,

"உன் கையால காபி போட்டு கொடும்மா" "அப்படியே என்னோட தளபதிகளுக்கும் "

"என்னடா காபி ஓகே வா"

"ஓகே தல"

"அண்ணா இவனுங்க பேர் தெரியுமா?

" என்ன என்பதை போல ராகேஷ் பார்க்க.... அதோ மிலிட்டரி ஆபீஸர் மாதிரி விரைப்பா நிக்கறானே அவன் "நண்டு"

அடுத்து எப்படா காபி வரும்னு சமையலறையையே பார்க்கறானே அவன் "சிண்டு" சரியான தீனிக்கோழி.

அதுக்கடுத்து பச்ச மண்ணு மாதிரி பவ்யமா நிக்கறானே அவன் "சுண்டு" சரியான விவகாரம் புடிச்சவன் அவன்கிட்ட ஜாக்கிரதையாஇருக்கனும்,

அந்த கடைக்குட்டி "வண்டு" இப்பதான் இந்த "கொரில்லா கேங்ல " சேர்ந்திருக்கு.
 
Last edited:

karthika manoharan

Author
Author
SM Exclusive Author
#3
அறிமுகத்தை முடித்தவன் வெளியே
நடப்பதை வேடிக்கை பார்க்கலானான்.

"ஆபீஸர் சுண்டு , எனி நியூஸ்?"

"இருக்கு தல, அர்ணால்டுக்கும், டாம் க்ரூஸூக்கும் நேத்து சண்டை"


"ஏன்டா?"

"எல்லாம் இடப்பிரச்சனைதான்.

"என்னாது அர்னால்டு.. டாம் க்ரூஸ்ஸா????"

"அண்ணா அதெல்லாம் தாத்தாங்க, இப்படி ஒவ்வொருத்தர்க்கும் ஒவ்வொரு பேர் வச்சிருக்காங்க"

"ஆஹான்"

"ஓ... ஜாக்குலின்க்கு உடம்பு இப்ப எப்படி இருக்கு?" பேசிக்கொண்டிருக்கும் போதே தெய்வானை காபியோடு வர, பேச்சு நின்று ஒரு சிக்னல் செய்தாள் அதை புரிந்து கொண்ட நண்டு அவள் கையில் ஒன்றை வைக்க...


சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்த தெய்வானையையும் கையையும் மாறி மாறி பார்த்தவள் அடுத்த நொடி அதை தூக்கி எறிந்திருந்தாள். அது ஒரு பொம்மை பல்லி.


ஏதோ தன்மீது விழுந்த பதற்றத்தில் தெய்வானை காபி கப்புகள் அடங்கிய ட்ரேவை கை நழுவ விட அது பொத்தென கீழே விழுந்து அவர் புடவையெல்லாம் காபி சிந்தியது. அதை பார்த்து


"என்னம்மா தெய்வா பார்த்து வரக்கூடாது" என நக்கலடித்து "எங்களுக்கு காபி வேணாம், நான் போய் அஞ்சு குட்டிய பார்த்துட்டு வரேன்" என்றவள் அவர் முறைப்பதையும் பொருட்படுத்தாது


"டேய் பசங்களா நீங்க சாப்பிட்டு வாங்க அதுக்குள்ள நானும் வந்துடுவேன்" என்று சொல்லி செல்ல அவர்கள் சிட்டாய் பறந்துவிட்டனர்.


இங்கேயே சாப்பிட சொன்னால் கேட்க மாட்டார்கள். தெய்வானையின் முறைப்பிற்க்கு பயந்தே ஓடிவிடுவர். அவருக்கு தெரியாதா தான் நேற்று பேசியதன் எதிரொளி என்று... ஒரு பெருமூச்சுடன் சுத்தம் செய்ய வேலையாளை ஏவிவிட்டு தன் அறைக்கு சென்றார், உடை மாற்றத்தான்.

இதுதான் நாச்சியார் அவளுக்கு எது கிடைக்கிறதோ அதை இருமடங்காக கொடுக்கும் எண்ணம் உடையவள். அவளை போல அரவணைக்கவும் ஆளில்லை, வம்பு செய்யவும் ஆளில்லை. ஆனால் அதெல்லாம் செயலை செய்யும் வரை மட்டுமே. அதற்கு பின் அதையும் மறந்துவிடுவாள். வஞ்சம் வைத்து பழிவாங்கும் நல்ல பாம்பின் ரகமல்ல, ஆனால் தன்னை தீண்டியவரை தீண்டாமல் விடாத தேளின் ரகம்.


ஊருக்கு செல்ல பிள்ளை. பல இடங்களில் இவளே பிரதானம். இவள் சொல்லுக்கு அப்படி ஒரு மரியாதை இந்த வயதிலேயே. வயதுக்கும் மரியாதைக்கும் சம்மந்தம் ஏது , செய்யும் செயலே பேசும். ஆனால் எந்த இடத்திலும் குடும்பத்தை தலைகுனிய விட்டதில்லை. அதிலும் பொது இடங்களில் "நாச்சியாரின் அம்மா வழிவிடுங்கப்பா" என்று கூறும் அளவிற்க்கு ஊருக்குள் பெயர். இத்தனைக்கும் ரத்ன பாண்டிதான் பஞ்சாயத்து தலைவரும் கூட. இந்த வெள்ளிக்கிழமை வனவாசம் கூட குடும்பத்திற்காகதான். ஆம் வனவாசம்தான். வெளியில் செல்லாமல் வீட்டிற்குள் அடக்கமாய் வலம் வருவது. இதுவும் அவள் நினைப்பதால் மட்டுமே. இல்லையென்றால் இல்லை மட்டும்தான் அவளிடம். வளையாத இரும்பு ஆனால் பாசம் என்னும் நெருப்பினால் மட்டுமே வளைக்க முடியும் இரும்பு.


அங்கு பாட்டி தனது காதில் பஞ்சை வைத்தவாறு தூங்கிக்கொண்டிருக்க அவர் நெற்றியில் முத்தமிட்டு

"அஞ்சு பேபி" என அவரை அணைத்து கொண்டாள். உறக்கம் கலைந்தவர்

"வாடா அம்மு, நல்லா தூங்கிட்டேன் போல" அவர் எழுவதற்க்கு உதவி செய்தவள்


"அதனால என்ன அஞ்சு பேபி, வாங்க கஞ்சி குடிப்பீங்களாம்"

"தோ , வரேன்டா" அவர் குளித்துவிட்டு வரவும் அவரை அழைத்து சென்று அவருக்கு வேண்டியதை கவனித்தாள். காமாட்சியும் அங்கே இருக்க இருவரும் பேசிக்கொண்டே தங்களது வேலையை கவனித்தனர்.

இந்த ராகேஷ் அண்ணா எங்க? " என்று எண்ணியவள்


"ராகேஷ் அண்ணா" என்று சத்தமாக அழைக்க அப்போதுதான் குளித்துவிட்டு தலை வாரிக் கொண்டிருந்தவன் இவளது குரல் கேட்க,


"இவங்க எதுக்கு இப்ப கூப்பிடறாங்க, நாம எதுவும் செய்யலயே... கடவுளே அப்படியே எதாவது செஞ்சிருந்தாலும் என்னை காப்பாத்தி விட்றுங்க..உங்களுக்கு கோடி புண்ணியமாக போகும். " என்று நிமிடத்தில் வேண்டுதலை வைத்தவன் வேகமாக வெளியே வந்தான்.


"வாங்கண்ணா காபி குடிப்பீங்க"


"இல்லைங்க நான் குடிச்சிட்டேன்" அவன் படபடப்பாய் சொல்ல...அவனை கூர்ந்து பார்த்தவள் பயந்துட்டாரு போல என புருவத்தை நீவியவாறு யோசித்தவள்


"பயப்படாதீங்கன்னா தப்பு பண்ணாதவரை ஒண்ணும் பண்ண மாட்டேன் " என்று சொன்னாளே பார்க்கலாம்.


"இல்லைங்க நான் இனி தப்புங்கற வார்த்தைய பத்தி கூட யோசிக்க மாட்டேன்." இன்னும் படபடப்பாய்கூற கண்டவள்,

"அண்ணா!"

"அப்படி கூப்பிடலாம்தானே" அவள் அப்படி கேட்டதில் மகிழ்ந்தவன்"கூப்பிடுமா தங்கச்சி" என உடனடியாக சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டான்.


"சரிண்ணா அப்ப என்னை நீங்க , வாங்கன்னு கூப்பிடகூடாது, நீ, வா, போன்னுதான் கூப்பிடனும் சரியா" என விகல்பமில்லாமல் சிரித்தவளை கண்டவன் யாருமில்லாமல் இருந்தவனுக்கு இப்படி பாசத்தை கொட்டும் குடும்பம் கிடைக்க வேண்டாம் என்றா சொல்லுவான்.


"சரிம்மா" என்று சந்தோசமாய் தலையாட்டினான்.


"என்ன ராகேஷ் என்ன சொல்றா உன் தங்கச்சி" என்றவாறு கௌதம் அங்கு வந்து சேர்ந்தான். உடன் கலையரசுவும் வந்துவிட்டிருந்தான்.


கௌதமின் பார்வை முழுதும் நாச்சியாரின் மீதே "இவ்வளவு பண்ணுவியா நீ? இன்னும் மாறவேயில்லை" என்பதாய் இருந்தது அவன் பார்வை.


அதிகாலை எப்போதும் போல் ஐந்து பதினைந்துக்கு எழுந்தவன் உடற்பயிற்சி செய்வதற்காக வெளியே வர, வீராவும் வயலுக்கு செல்ல வேண்டி அப்போதே கிளம்பியிருக்க தெய்வானையும் அவருடன்.


"என்னப்பா கௌதம் அதுக்குள்ள முழிச்சிட்ட?" என்று கேட்க


"நார்மலி இந்நேரத்துக்கே முழிச்சிடுவேன் மாமா அதான், நீங்க இந்நேரத்துக்கே கிளம்பிட்டீங்க?"


"வயல்ல இன்னைக்கு வேலை செய்யஆளுங்க வருவாங்கப்பா இப்ப போனாதான் சரியா இருக்கும்"


"சரி மாமா அப்பநானும்வரேன்" வரேன் அத்தை, என்றவன் அவருடன் கிளம்பி சென்றான். அதிகாலை நேர சுத்தமான காற்றை சுவாசித்தவாறே அவருடன் நடந்து சென்றவனை எதிர்கொண்டவர்கள் அனைவரும் "வாங்க தம்பி" என்று அவனிடம் நலம் விசாரித்து பேசி செல்ல அவர்களுக்கு பதில் கொடுத்துக்கொண்டே அவர்களின் வயல் வரை சென்றவன்,

மீண்டும் திரும்பி வரும்போதுதான் நாச்சியார் மாடியிலிருந்து இறங்கிவருவதை பார்த்தான்.நேற்றே அவளின் அழகில் விழுந்துவிட, இன்று அவளது தோற்றத்தில் மேலும் வீழத்தப்பட்டான்.


ஆனால் அதற்கு பிறகு அவளின் லீலைகளை கண்டதும் "இன்னும் இவ மாறவே இல்ல" என்று நினைத்தவன் அவள் பாட்டியின் அறைக்கு சென்றதும் இவனும் உள்ளே சென்று தயாராகி வந்துவிட்டான்.இவளோ அவன் இன்னும் பார்வையைமாற்றாமல் தன்னை பார்ப்பதை கண்டு படபடப்பாய் வர வேறு பக்கம் திரும்பி கொண்டாள். இந்த தயக்கம் புதிது, எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர்தான் அவளிடத்தில் , ஆனால் இவனோ மயக்கும் பார்வை பார்த்து வைக்கிறான்.மங்கையின் நிலை ஆடவனுக்கு தெரியவில்லை...


ஆடவனின் பார்வை மங்கைக்கு புரியவில்லை....


இனி இவர்களின் நிலை ????
 
Last edited:

Sponsored

Latest Episodes

Advertisements

Top