நாங்கலாம் அப்பவே அப்படி -- 4

#19
"ப்பா" ஹாலில் அமர்ந்திருந்த வீரபாண்டியின் மடியில் தலைவைத்து படுத்திருந்தாள் நாச்சியார். இரவு உணவு முடிந்து தெய்வானை சமைலறையில் இருக்க, கௌதம் பிஸினஸ் விசயமாக பேச மாடிக்கு சென்றுவிட்டான்.மற்ற அனைவரும் அங்குதான் இருந்தனர்.


"என்னம்மா"


" நாளைக்கு காரும், டிரைவரும், வேணும்பா"


"ஆமா ஊருல அடிக்கற லூட்டி பத்தாதுன்னு காரேறி போய் பம்பரம் விட போறாளாம்!! இந்த கொடுமை இங்கதான் நடக்கும்" என தெய்வானை தன்பாட்டிற்க்கு புலம்ப,


"எடுத்துக்கம்மா.. யார் யார் கெளம்பறீங்க?"

" அதுங்கப்பா ராகேஷ் அண்ணனும் இன்னும் இங்க இருக்கற இடம்மெல்லாம் பாத்ததில்லையாம் அதனால அவரு, நண்டு, சிண்டு, சுண்டு, வண்டு, கலை நீயும் வரியா? என தம்பியை வினவ..."என்னை கலைன்னு கூப்பிடாதீங்கன்னா கேட்க மாட்டிகங்கறீங்க, பொண்ணு பேர் மாதிரி இருக்கு" என அழாத குறையாக கூற,"ஏன்டா குட்டி நல்லாதான இருக்கு"


அதெல்லாம் தம்பியின் மேல் அளவில்லாத பாசம் கொண்டவள்தான், அவனும் அப்படியே! ஆனால் சீண்டல் குறையாது. அடிதடிகள் அலுக்காது. உடன் பிறப்புகளுடன் போராட்டம் இல்லாத சிறுவயது உண்டா என்ன?"


அத விடுடா, அவகளும் வராங்களா கேளு!"


"யாருக்கா?"


அப்பாவின் மடியில் இருந்து எழுந்து கொண்டாள். பேச்சு தடுமாறியது ,

"அதா...ன்டா கௌ...தம்"வீரா தன் தந்தையுடன் நிலத்தை அறுவடை பற்றி பேசிக்கொண்டிருக்க, இவர்கள் பேசுவதை கவனிக்கவில்லை. அஞ்சுகம் பாட்டி மட்டுமே பேத்தியின் நிலஅதிர்வு போன்ற ஒரு நிமிட தடுமாற்றத்தை கண்டு கொண்டார். அது அறிவித்த செய்தி அவருக்கு மகிழ்வை வாரி இறைத்தது."ஆண்டவா இந்த விசயத்தை நல்லபடியா முடிச்சு கொடுப்பா" என்றுவேண்டுதலும் வைக்கப்பட்டது.


"அட அத்தான கேட்டீங்களா, அதெல்லாம் நான் கூப்டா வருவாங்க" என பெருமையாக சொல்ல இவளுக்கு காந்தியது. எந்நேரமும் அத்தான்,பொத்தான்னு வால புடிச்சுகிட்டே திரிய வேண்டியது.ஏன் நீயும் திரிய வேண்டியதுதானே! என மனசாட்சியின் கேள்விக்கு பெருமூச்சு மட்டுமே பதிலாக வந்தது.


காலையில் நான் வந்துட்டேன் என்றவாறே வெப்பத்தை வாரி இறைத்தவாறே கதிரவனும் வந்தான். ராகேஷ், அரசு இருவரும் தயாராக இருக்க, நாச்சியார் கடலின் பல வகையான நீல வண்ணங்களை கொண்ட தாவணி பாவாடையில் கடல் கண்ணியை போல் மாடியில் இருந்து இறங்கி வந்தாள்.


கௌதமும் அப்போதுதான் மாடியில் தன் அறையில் இருந்து வெளியே வர, அப்படியே நின்றுவிட்டான்.

அப்சரஸ் போல இருந்தவள் இவன் அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு பாதிபடியிலேயே திரும்பி பார்க்க இதயம் ரேஸ் குதிரையை போல தறிகெட்டு ஓட தொடங்கியது. அதை நிறுத்த கடிவாளம்தான் ஏது? தன் நெஞ்சை நீவியபடி தனிக்க முயன்றான், அந்தோ பரிதாபம் மோசமாக தோல்வியை சந்தித்தான்.


இவன் நின்ற நிலையை பார்த்து எதாவது பிரச்சினையாக இருக்குமோ என்று எண்ணியவள் மேலே ஏறி வந்தாள். அருகில் வரவர அவள் சுகந்தம் காற்றில் அவளுக்கு முன் இவனை சேர்ந்தது. அதை ஒரு முறை ஆழ்ந்து சுவாசித்தவனுக்கு சற்று ஆசுவாசமடைவதுபோல் தோன்றியது.


நோயும் அவளே ; மருந்தும் அவளே! மனம் நொடியில் ஒரு ஹைக்கூவை எடுத்து விட உனக்கு முத்திடுச்சுடா! என அவனுக்குள்ளே கூறிக்கொண்டான்.

"என்னாச்சு?"


"ஒன்னுமில்லையே!"


"இல்ல ஏதோ நெஞ்சை புடிச்சிகிட்டு நின்னீங்களே அதான் .."


"அதான்"


"வலிக்குதோன்னு" கண்களில் சிறு கலவரம், பரபரப்பு. அதை கண்டதும் இவனுக்கு சில்லென்ற உணர்வு.


"ம் ஆமா ஒரு மோகினி அடிச்சிட்டா" மயக்கத்துடன் கூற, அவனது பதிலில் அவனை ஒரு மாதிரி பார்த்தவள் திரும்பி சென்றுவிட,


"அடிப்பாவி ஒன்னும் சொல்லாம போறா! இருடி வைக்கறேன் செக்!"

இவள் சென்றபோதே நான்கு வாண்டுகளும் வந்திருக்க "பார்த்து பத்திரமா போய்ட்டு வரனும்" என்ற அறிவுரையோடு தெய்வானையின் கைவண்ணத்தில் சாப்பாடும் நொறுக்கு தீனிகளும் தயாராக வர காரில் அத்தனையும் ஏற்றினர் அண்ணனும், தம்பியும். அதாங்க ராகேஷும், அரசுவும்.


கௌதம் வந்தவன் கீழே அமர்ந்து விட "என்ன அத்தான் உட்கார்ந்துட்டீங்க? வாங்க போலாம்." நாச்சியாரை ஒரு பார்வை பார்த்தவன்

"இல்லடா அரசு நான் வரல" உடனே அவளது முகம் சுருங்குவதை கண்டு மனம் ஆனந்தத்தில் துள்ளியது.

"ஏன் பாஸ் வாங்க போலாம்" என ராகேஷும் அழைக்க

"சார்தான் ஆபீஸ்னு ஒன்னு இருக்கறதையே மறந்துட்டு உடன்பிறப்புகளோட ஊர்கோலம் போறீங்க, நானும் அப்படி இருக்க முடியுமா ஆபீசர்" என கேட்க இனி அவன் வாயை திறப்பான். இரண்டடுக்கு பாதுகாப்போடு பூட்டிக் கொண்டான்.


பேத்தியின் முகம் வாடியதை பார்த்த அஞ்சுகம் "கௌதம் கண்ணா எந்நேரமும் ஆபீஸ் வேலைதானா போய்ட்டு வாப்பா" என கூற அவரிடமும் ஒருவாறு சமாளித்தவன் சட்டமாக அமர்ந்திருக்க மற்ற இருவரும் வாண்டுகளை அழைத்து சென்று விட்டனர்.


இவள் அழைப்பாளா என அவனும், வந்துவிடேன் என்று அவளும் மனதிற்குள் விண்ணப்பமிட வாயில் வரை சென்றவள் திரும்பி ஒரு பார்வை பார்த்து சென்றாள். ஆயிரம் கதைகள் சொன்னது அப்பார்வை. அதன் பொருளை படித்தவன்


" கடவுளே பார்த்தே கொல்றா!ஒன்னும் இல்லாத மாதிரி நடிக்கறா! சீக்கிரமே உன்னை என்கிட்ட வர வைக்கல நான் கௌதம் இல்லடி என் ப்யூட்டி.ஜஸ்ட் வெய்ட் அண்ட் வாட்ச்"


"சரி டார்லிங் இவ்ளோதுரம் நீங்க சொல்றதால நானும் போய்ட்டு வரேன்."


"பார்த்து போய்ட்டு வா பேராண்டி!"


அதற்குள் ஓட்டுனருக்கு பக்கத்து இருக்கையில் ராகேஷ் அமர்ந்திருக்க, அரசுவும, நாச்சியாரும் நடுபகுதியில் அமர்ந்தனர். நான்கு வாண்டுகளும் பின்னால் குதூகலித்தபடி ஏறிக்கொண்டனர்.


கார் கிளம்ப இருந்த சமயம் கௌதம் வந்தான். அவனின் நவீன விலையுயர்ந்த கேமிரா சகிதம். வந்தவன் யாரையும் சட்டை செய்யாமல் காரின் நடுபகுதியில் ஏறி அமர நாச்சியார் ஆனந்தமாய் அதிர்ந்தாள். நொடிக்கும் குறைவான மகிழ்ச்சியை அவள் கண்ணில் கண்டவன் கண்கள் மின்னின.

பாஸ் நீங்க முன்னாடி வாங்க என்று அழைத்தவனிடம் "இல்லை ராகேஷ் இதே கம்ஃபர்டபிளா இருக்கு" என்று மறுத்து விட்டான். அரசுவும், ராகேஷும் பேசியபடி வர, நாச்சியார் வேடிக்கை பார்ப்பதும் சைடில் சைட்டடிப்பதுமாக வர, கௌதம் பின்னால் இருந்த சிறுவர்களிடம் பேச்சு கொடுத்தான்.


"டேய் பசங்களா உங்க பேர் என்ன? " அவர்களுக்கு அதுவே போதுமானதாக இருக்க தங்களை ஆதி முதல் அந்தம் வரை கூறினர்.


"வீட்ல எப்படி விட்டாங்க உங்கள?"

" ஏன் மாமா அக்காகூடதான வரோம் அதெல்லாம் விட்டுடுவாங்க"

"பார்றா உங்க அக்கா மேல அவ்ளோ நம்பிக்கையா" சைடில் அவளை பார்த்துக் கொண்டே வினவ,


பின்ன எங்க அக்கா யாரு? அவங்க பவரு என்ன? அவங்கள எதிர்த்து ஒரு கேள்வி கேட்க முடியுமா?" இந்த நான்கு வாண்டுகளின் வீடுகளிலும் நாச்சியாருக்கு நல்ல பழக்கம். அவ்வப்போது இப்படி அழைத்து செல்வாள்தான். இவள் சமாளித்து விடுவாள் என்பதாலேயே நான்கு வயது வண்டை கூட அவன் அன்னை அனுப்பி விடுவார்.

"டேய் பசங்களா சும்மா இருங்க" அவளுக்கு படபடப்பாய் இருந்தது.

"அவங்கள ஏன் அடக்கற?"

"அதான நம்ம மாமா தானேக்கா"

"அதென்னடா மாமா, ராகேஷ் மட்டும் அண்ணா சொல்றீங்க?"அவன் சாதாரனமாகதான் கேட்டான் இவளுக்குதான் படபடப்பாக வந்தது.

"கௌதமா! நீ அமைதியா வந்தால் தேவல" என எண்ணதான் முடிந்தது. அதற்குள் அடுத்த கேள்வியை கேட்டிருந்தான்

"யார்டா உங்களுக்கு சொன்னது என்ன மாமான்னு கூப்பிட சொல்லி?"

"அக்காதான்" உடனே கோரசாக பதில் வந்தது. மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பது போல திரும்பி கொண்டாள்.


அவளைதான் பார்த்துக்கொண்டிருந்தான், "ஆனா உங்கக்கா இதுவரை என்னை மாமான்னு கூப்பிட்டதில்லையே!"

"அக்கா ஏன்கா என்ககிட்ட மட்டும் என் மாமான்னு சொன்ன" என்று மாட்டிவிட

"ம்ஹீம் இவனுங்கள அடக்கியே ஆகனும்" வலுக்கட்டாயமாக கோபத்தை பறைசாற்றும் குரலில் "டேய் என்னடா இப்ப, எனக்கு தோன்றப்பதான் கூப்பிட முடியும்! கம்முனு வாங்க இல்லைனா இனி எங்கயும் கூட்டிட்டு போக மாட்டேன்" என்றூ கூறி விட அதன்பின் பேசுவார்களா என்ன?

"பாரேன் எப்படி சமாளிக்கறா? எவ்வளவு நாளைக்கு சமாளிப்ப, மாட்டுவ ப்யூட்டி நீ என்கிட்ட வசமா மாட்டுவ அப்ப இருக்கு உனக்கு" என எண்ணி கொண்டவனுக்கு தெரியவில்லை இன்று மாலையே அவளிடம் அரை வாங்குவானென்று!!!!!
😂😂😂😂😂😂😍😍😍😍 enathu araivala ennnn 😍😍😍
 

Sponsored

Advertisements

Top