• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நாங்கலாம் அப்பவே அப்படி-- 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
சென்ற அத்தியாயத்தை படித்தவர்களுக்கு நன்றி, விருப்பத்தை தெரிவு செய்தவர்களுக்கு மிக்க நன்றி, கருத்துக்களை பதிவு செய்த நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி....... இதோ அடுத்த அத்தியாயம்....


நாங்கலாம் அப்பவே அப்படி-- 6



நாளை வெள்ளிக்கிழமை, ரத்னபாண்டி, காமாட்சி தம்பதிகளுக்கு அறுபதாம் ஆண்டு திருமணநாள் விழா . அதற்காக வேண்டிதான் அஞ்சுகம் பாட்டி வந்தது.


மறுநாள் விசேசம் என்பதால் வீடு முழுதும் ஆட்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். அஞ்சுகம் பாட்டிகூட எதாவது வேலையை மேற்பார்வையிட்டபடி இருந்தார்.


"ஏலேய் முத்தா மண்டபத்துக்கு காய்கறியெல்லாம் போயாச்சா" வீரபாண்டி.


"அதெல்லாம் நம்ம சின்னதம்பி வந்து சரிபார்த்து வாங்கி வச்சுட்டாக அய்யா!"

"யாரு கௌதமா?"


"ஆமாங்கய்யா"


"வாழை மரத்துக்கு சுப்பையாகிட்ட நம்ம தோட்டத்துல வெட்டி வைக்க சொல்லிருக்கேன் அத என்னான்னு பாத்துக்க"


"அய்யா அதையும் சின்னய்யா வெட்டி மண்டபத்துக்கு அனுப்பிட்டாக"


"பொறவு அலங்காரத்துக்கு...."

"அய்யா அதுவும் தான்க, நம்ம சின்ன தம்பி பம்பரமா சொழண்டு எல்லா வேலையும் முடிச்சிபுட்டாக, நீங்க வெசனப்படாதீக"


வீரபாண்டிக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அவ்வளவு பெரிய நிறுவனத்தை ஒற்றை ஆளாய் கவனிக்கும் ஆளுமைகாரன். அங்கு அவன் பின்பமே வேறுமாதிரி! ஆனால் இங்கு இவர்களுக்கு இணையாய் இறங்கி வேலை பார்ப்பதில் அவருக்கு அளவில்லா பெருமை, பாருங்கயா இதுதான் எங்க குடும்பம் என்பதாய்.


இவர்களும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல! அங்கே ஏ.சி. அறை என்றால் இங்கே களத்துமேடு; அங்கே நுனிநாக்கு ஆங்கிலம் என்றால், இங்கே மண்மணக்கும் கொங்குதமிழ்; அங்கே ஆடம்பரம் கொண்டு அறியப்படும், இங்கே பாரம்பரியம் கொண்டு அறியப்படும்;


"எல்லா வேலையும் அவகளே பார்த்தா நீங்க என்ன வேலை பார்த்தீங்க?"


தலையை சொறிந்தவாறு "அய்யா அவககூட அந்த ராகேசு தம்பி, நம்ப தம்பி அப்பறம் உதவிக்கு மருதும், கண்ணணும் இருக்காங்க"



"சரிசரி நீ எதுக்கும் மண்டபத்துக்கு போய்ட்டு எல்லாம் சரியா இருக்கான்னு இன்னொரு முறை சரிபார்த்துடு, அப்படியே தம்பி ராத்திரிக்கு அங்கனயே தங்கறாங்களாம் அதனால அவகளுக்கு உடுப்பு தரேன் எடுத்துபோய் கொடுத்துடு" என்றவாறு


"ஆத்தா நாச்சியா!"


அதுவரை தந்தை பேசுவதை ஒருவித சலிப்புத்தன்மையுடன் கேட்டுக் கொண்டிருந்தவள்


" என்னங்கப்பா"


"ஆத்தா அப்படியே பசங்க மூனுபேருக்கும் புது உடுப்பு எடுத்து என்ற அறைல இருக்கு அத எடுத்து வந்து கொடாத்தா"

"ம்.. சரிங்கப்பா"

"ஏன் இங்க வரவே மாட்டானாமா? கௌதமா நாளைக்கு உனக்கு இருக்குடா" என கறுவியவாறு எடுத்துவந்து கொடுத்துவிட்டு அவள் அறைக்கு சென்று விட்டாள்.



"ஏனுங்க அத்தை இந்த குட்டிக்கு என்னாச்சு நாலுநாளா என்னவோபோல இருக்கா!" பூத்தொடுத்துக்கொண்டிருந்த தெய்வானை காமாட்சியிடம் வினவ,



காமாட்சி "ஏமா மருமவளே,உன்ற மவள வையாம பொழுது போகலயா?" என்றார் சிரிப்புடன்.

"ஏனுங்க அத்த நான் வேணும்னா அவள வையறேன்! நாளை இன்னொரு குடும்பத்தில வாக்கப்பட போற பொண்ணு, அடக்கமா இருக்க வேணாம், சிறுவாண்டுக கூட ஊர சுத்திக்கிட்டு எல்லார்கிட்டயும் வம்பிழுத்துக்கிட்டு இருக்கறா. அவ வெளில போய்ட்டு வீட்டுக்கு வர வரைக்கும் மனசு ஒரு நிலைல இருக்க மாட்டிங்குது" என தாயாய் அவர் புலம்ப,


"அதுக்கு என்ன ஆத்தா வயசுப்புள்ள அப்படி கலகலப்பா இருந்தாதான் வீடு, வீடா இருக்கும். அவ இந்த வீட்டு மகாலட்சுமி ஆத்தா. அவளால கௌரவமும், பெருமையும்தான் உண்டே ஒழிய நீ தலைகுனியற மாதிரி எந்த வேலையும் செய்ய மாட்டா!" அது என்னவோ உண்மை என்பதால் தெய்வானை அமைதியாகிவிட்டார்.


அங்கு மண்டபத்தில் கௌதம் பரபரப்பாக வேலையெல்லாம் சரியாக நடக்கிறதா என கவனித்துக்கொண்டிருந்தான். முன்று நாளாய் சரியான உறக்கம் இல்லை. அதன் விளைவாக கண்கள் சிவந்து காணப்பட்டன.


பூந்தோரணங்களை கட்டுவதற்க்கு உதவி செய்தவாறு இருந்தவனை "பாஸ்.. பாஸ் ..என்ன நீங்க இந்த வேலையெல்லாம் செய்யறீங்க, இங்க வந்து ஆளே மாறிட்டீங்க. அங்க அவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருப்பீங்க, இங்க இவ்வளவு ஜாலியா இருக்கீங்க எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்யறீங்க இதுல எந்த பாஸ் நிஜம்"


அவன் புன்னகையோடே "அதெல்லாம் கிளைதான் ராகேஷ், ஆனா வேர் இங்கதான். வேர எப்படி விடமுடியும்? வேர் இல்லைனா கிளையும் தங்காது. இது புரிஞ்சாலே போதும்"


இப்போது பிரம்மிப்பாக பார்ப்பது அவன் முறையாயிற்று. எவ்வளவு பெரிய விசயத்தை இவ்வளவு எளிதாக கூறிவிட்டான்.


"ஏக்கமா இருக்கு பாஸ்" அதில் இருந்த பாவனையில் திரும்பி அவனை பார்த்தவன்

"எதுக்கு"


சுற்றி அந்த இடத்தை பார்வையிட்டவாறே நெஞ்சை தடவியவன் "இங்க நான் பிறக்காம போனனேன்னு!!!!!!!" கண்கள் கூட சற்று கலங்கியதோ???


ராகேஷ் அனாதை இல்லத்தில் வளர்ந்தாலும் எதற்கும் கலங்கியவன் இல்லை.பள்ளி படிப்பு வரைதான் ஆசிரமம் பார்த்துக் கொண்டது.


அதன் பிறகு தன் கையே தனக்குதவி என்பதை போல சொந்த முயற்சியால் கல்லூரி படிப்பை முடித்தான். யாரும் இல்லாதவன் என்று தன்னை யாரும் இரக்கமாய் பார்க்க கூடாது என்பதற்காகவே தான் இருக்கும் இடத்தை எப்போதும் கலகலப்பாக வைத்துக் கொள்வான்.



ஆனால் இங்கு வந்த பின்பே இவர்களின் அன்பெனும் மழையில் நனைந்து மனித மனங்களின் அன்பிற்காக ஏங்க தொடங்கினான்.


அப்போது அங்கு அரசு செல்வதை பார்த்த கௌதம் "டேய் அரசு இங்க வா" "என்ன அத்தான்?"


"ம்..இந்த சார்ர்ருக்கு யாரும் இல்லைனு ரொம்ப பீலிங்கா இருக்காம் என்னான்னு கேளு"


அவனை திரும்பி முறைத்தவன் "இருங்க அக்காகிட்ட போட்டு குடுக்கறேன்" அதில் ஜெர்க்கானவன்


"தம்பி ராசா அந்த உன்னத வேலையை மட்டும் செஞ்சிடாத புண்ணியமா போகும்"


"ஆ...அது இனிஇப்படி பேசுனீங்க ..."


மாட்டேன் மாட்டேன்" என்று கையெடுத்து கும்பிடஇருவருக்கும் சிரிப்பு..


"சிரிங்க சிரிங்க என்னைய வச்சு எல்லாரும் காமெடி ஷோ நடத்தறீங்க!! " என்று போலியாய் சலித்துக்கொள்ள


"நாங்க நடத்துல நீங்களே நடத்திக்கறீங்க..ஹா..ஹா.." என்று சிரித்த அரசு போய்விட,


"பாஸ் நீங்க போய் கொஞ்ச நேரம் தூங்குங்க நான் இதை பார்த்துக்கறேன்." அவனுக்கும் ஓய்வு தேவைப்பட்டது அதனால் செய்ய வேண்டிய வேலைகளை அவனிடம் கூறிவிட்டு அங்குள்ள ஒரு அறையில் முடங்கிவிட்டான்.



உறங்க முயன்றானே ஒழிய உறக்கம் வராது போக்கு காட்டிக் கொண்டே இருந்தது.இரு கைகளையும் தலைக்கு கொடுத்தவாறு படித்திருந்தவன் மனதில் அன்று அருவிக் கரையில் முத்தமிட்டது நினைவில் வந்ததும் முகம் தானாக புன்னகையை பூசிக் கொண்டது.


"வெக்கமா இல்ல அந்த புள்ள உன்னை அடிச்சிருக்கு நீ என்னடான்னா பல்ல காட்டற? " என மனசாட்சி கேலி பேச,

"பதிலுக்கு நானும்தான அடிச்சேன்" என கெத்தாக கூற ,


"ஹான்..என்ன நீ அடிச்சியா? அடிச்சியா? அடிச்சியா? (எதிரொலி அதாவது எக்கோ) எப்ப நானும் அங்கதான இருந்தேன் "


"எல்லார் கண்ணுக்கும் அது தெரியாது" மயக்கத்தோடு கூற,


"என் கண்ணுக்கு கூடவா?"


"நானே கண்ண மூடிதான் அடிச்சேன், அதான் என்ன நினைக்கறான்னு தெரியாம மண்டை காயறேன்"


"இவன் பேசறதே புரியல எப்ப அடிச்சான் என யோசித்தவாறே மனசாட்சி இடத்தை காலி செய்தது.



அவள் மொத்த உயிரையும் ஒற்றை அச்சாரத்தில் உறிஞ்சுபவன் போல அவளை மூச்சுக்காற்றுக்கு தவிக்க விட்டவன் மெதுவாக விடுவித்து அவள் கழுத்தில் இறங்கி பயணிக்க, அதுவரை இருந்த இறுக்கத்தை சற்று தளர்த்தினான்.


அதை பயன்படுத்திக்கொண்டவள் அவனை தள்ளி விட்டு ஓடிவிட இவன் மீண்டும் நீருக்குள் விழுந்தான். அவன் மீண்டும் எழுந்து பார்க்கையில் அவள் ஓடிவிட்டிருந்தாள்.


"ச்சே" என்றவாறு தலையை கோதியவன் "நானா இப்படி! என்னமோ வசியம் பண்றா! கடவுளே கொஞ்ச நேரத்துல எல்லாத்தையும் மறக்கடிச்சிட்டா" முன்னதை சத்தமாக சொன்னவன் பின்னதை முணுமுணுத்தவாறு மந்தகாச புன்னகையுடன் அவர்களிருக்கும் இடம் வந்தான்.


அவள் முன்பாகவே காரில் ஏறி கலையரசனையும் அவளுடன் நடுவில் இருத்திக்கொண்டாள். அவனையும் பார்க்கவில்லை, அவனை பார்க்க விடவும் இல்லை.


என்ன நினைக்கிறாள் என்றே தெரியாமல் மண்டை காய்ந்தது அந்த பிஸினஸ் புலிக்கு. மற்றவர் முகத்தை பார்த்தே எண்ணங்களை துல்லியமாக அளவிடும் அவனால் அவளை அறிய முடியவில்லை.எங்கே அவள்தான் முகத்தையே காட்டவில்லையே!



வீட்டிற்குசென்றவள் தன் அறையில் சென்று அடைந்து கொண்டாள். வெளியே வரவும் இல்லை. இவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பொறுமை விடைபெற, இனியும் அவள் தன் கண்முன் வராவிட்டால் கோபத்தில் எதாவது செய்துவிடுவோம் என எண்ணியவன் திருமணத்திற்க்கான வேலையை எடுத்துக் கொண்டான்.
 




Last edited:

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
அலுவலக வேலை, திருமண வேலை என சுழல, அவளது நினைவுகள் சற்று மட்டுபட்டது.

கோபம் என்ற ஒன்றை வெளிப்படையாக காட்டினாலாவது மனம் சமாதானம் அடைந்திருக்கும். ஒன்றும் கூறாமல் கண்ணாமூச்சி ஆடுபவளை என்ன செய்ய? யோசித்தவாறே உறங்கிவிட்டிருந்தான்.


அடுத்த நாள் காலை மங்கள நாதத்தோடு திருமண சடங்குகள் ஆரம்பித்தன. வரனும், வதுவும் மனையில் அமர்ந்திருக்க, அஞ்சுகம் பாட்டி முதல் வரிசையில் அமர்ந்து அண்ணா, அண்ணியின் அறுபதாம் திருமணத்தை மகிழ்ச்சி பொங்க பார்த்துக் கொண்டிருந்தார்.


வீரபாண்டி, தெய்வானை, இவர்கள் மேடையில் நின்றிருந்தனர். இளவட்டங்களைதான் அங்கே காணவில்லை.


ராகேஷும், அரசுவும் பந்தி பரிமாறும் இடத்தில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என கவனிக்க, கௌதம் ஏதோ வேலையாய் வெளியே சென்றிருந்தவன் அப்போதுதான் வேகமாக உள்ளே வர, வரவேற்பில் நின்றிருந்தவளை பார்த்ததும் அழகாய் புன்னகை பூத்தான்.


சிவப்பு வண்ண பட்டு புடவை அவளை முழுவதும் பாந்தமாய் தழுவியிருக்க, அதற்குரிய நகைகளோடு வானில் ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கு இணையாய் விசேசத்திற்க்கு வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்றுக்கொண்டிருந்தாள்.


உடல் சிலிர்த்து அடங்க அன்று மாடிப்படியில் நின்றதை போல இன்றும் அதே உணர்வுகள் தாக்க அவன் புன்னகை மேலும் விரிந்தது.


"பேசாம இன்னைக்கே கல்யாணத்த முடிச்சிடலாமா?" மனம் தன்போக்கில் தறிகெட்டு திரிய,


"போடா டேய் மூனுநாள் கழிச்சு இன்னைக்குதான் முகத்தையே பார்க்கற அத கெடுத்துக்காத,

"தம்பி நல்லாருக்கீகளா?"

அப்போதுதான் கனவு கலைந்தவன் போல் "நான் நல்லாயிருக்கேன் சித்தப்பா உள்ள வாங்க முகூர்த்தம் நெருங்கிடுச்சு" வார்த்தை அவரிடம் பார்வை இவளிடம். அவரிடம் பேசியவாறே அவளிருக்குமிடம் வந்தான்.

"என்ன மாமா இப்பதான் வரீங்க?"

"ஒரு வேலை ஆத்தா நாச்சியா அதான் தாமதமாயிடுச்சு"


"ஆகட்டுங்க மாமா உள்ள போவீங்களாம்" அவரை உள்ளே அழைத்து செல்லுமாறு அவனிடம் கண்களிலேயே சைகை காட்டினாள்.


சரியென தானாக தலை ஆட மந்திரித்து விட்டவனை போல அவரை அழைத்து சென்றான். அவன் சென்றதும்தான் இவள் இயல்பாக சுவாசித்தாள்.


"ஆனாலும் அநியாயத்துக்கு அழகா இருக்கடா கௌதமா!" என்று மனம் தன் போக்கில் புலம்பியது .


அலைஅலையாய் கேசம் துள்ளிகுதிக்க வேட்டி சட்டையில் இருந்த மோகனனை பார்த்தவர் மயங்காமல் இருப்பரா என்ன?


ஆனா என்ன இப்படி பார்த்து வைக்கிறான். நல்லவேளை மாமாகூட வந்ததால தப்பிச்சேன்" என நினைத்த நேரத்தில் மீண்டும் அவளருகே வந்திருந்தான்.

அவள் அரண்டு சுற்றி பார்க்க அங்கே யாரும் இல்லை. வந்தவன் ஒன்றும் பேசாமல் அவளையே பார்க்க அவள் வேறுபுறம் பார்வையை படரவிட்டாள்.


சுற்றும் முற்றும் பார்த்து அவள் மறுக்க மறுக்க கைபிடித்து மறைவான இடத்திற்க்கு இழுத்து சென்றவன், அவளை சுவரில் சாய்த்து இருபுறமும் அணையிட்டவாறு நின்றுகொண்டான்.


அவள் செல்ல பார்க்க "ஷ்.. "என்று உதட்டின் மேலே கைவைத்து "பேசக்கூடாது கொஞ்ச நேரம் பேசிட்டு விட்றுவேன்" என்றவன். சோ ஒருவழியா கண்ணாமூச்சி ஆட்டம் முடிஞ்சதா?"


கதைபேசும் கண்கள் படபடப்பை மறைக்க பாடுபட, இவள் அவனை தவிர எல்லா இடங்களையும் பார்த்து வைத்தாள்.


அவள் கன்னத்தை ஒரு கையால் பற்றியவாறு தன்னை பார்க்க செய்தவன் அதன் மென்மையில் கிறங்கி பெருவிரலால் அலைந்து மெதுவாக அவளை பார்த்துக்கொண்டே காதருகே குனிய அவள் கண்கள் தானாக மூடிக்கொண்டது.


அதை பார்த்தவன் மெல்லிய புன்னகையுடன், "இது முறையில்லதான் ஆனா தப்பில்ல" என்று கிசுகிசுத்த அதே வேகத்தில் அவள் கன்னத்தில் ஆழப்புதைந்தான்.


மயிர்க்கால் சிலிர்த்து நிற்க , முகமும் செந்நிறத்தை கடன் வாங்கியது போல சிவந்தது. அது மேலும் அவனை கிறங்கடிக்க இருக்கும் இடம் அவன் கைகளை கட்டிபோட்டது.



சுற்றி இன்னொரு முறை பார்வையை படரவிட்டவன் மேலும் நெருங்கி நின்று


"சோ அன்னைக்கும் இப்படிதான் ஃபீல் பண்ணியா பம்ப்கின்?"


அதில் டக்கென்று கண்களை திறந்தவள் அவனை பார்க்க, அது ஆயிரம் கதைகளை அவனுக்கு சொல்லியது.

அதன் ஜாலத்தில் மயங்கியவன் மீண்டும் முகம் நோக்கி குனிய, சுதாரித்தவள் அவனை தள்ளிவிட்டு மண்டபத்தினுள் ஓடிச்சென்றுவிட்டாள்.


இவனும் சிரிப்புடனே அவளை தொடர்ந்து மண்டபத்தினுள் வந்திருந்தான். இதை ஒருவன் கோபத்துடன் பார்த்ததை இருவரும் அறியவில்லை. யார் அவன்?
 




Last edited:

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
யோவ்... அப்படியே அருமையா போய்கிட்டு இருக்கறப்ப ஊடால யாருய்யா அது? அபஸ்வரம் மாதிரி....
ஹி..ஹி...வில்லன் வேணாமா...ஆனா வில்லன் ரேஞ்செல்லாம்இல்ல.:p
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top