• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நாங்கலாம் அப்பவே அப்படி -- 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
சென்ற அத்தியாயத்தை படித்தவர்களுக்கு நன்றி, விருப்பத்தை தெரிவு செய்தவர்களுக்கு மிக்க நன்றி, கருத்துக்களை பதிவு செய்த நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி....... இதோ அடுத்த அத்தியாயம்....

நாங்கலாம் அப்பவே அப்படி-- 9

நாச்சியார் ஜுஸ் அடங்கிய ட்ரே வை கௌதம் நிவி இருக்கும் இடத்திற்க்கு எடுத்து வர,

" பரவால்ல முதல்ல அவங்களுக்கு கொடு." என பெருந்தன்மையாய் பாட்டி, ராகைஷை சுட்டி காட்டினாள்.

ஆனால் நாச்சியார் அதை
கவனிக்காமல் இவர்களை நோக்கி வந்தாள்.

"பார்த்தீங்களா கௌதம் ஒரு மிரட்டு மிரட்டுனதும் எப்படி பயந்து என்கிட்ட கொண்டு வரா"

இதைக் கேட்ட ராகேஷ் சிரிப்பை அடக்க முடியாமல் அமர்ந்திருந்தான்.

கௌதம் "இது ரொம்ப முக்கியம் இப்ப" ராகேஷ் ஒருவித சுவாரஸ்யத்துடன் பார்த்திருந்தான்.

மெதுவாக வந்தவள் ஒரு க்ளாசை எடுத்து நிவியின் மேல் உயர்த்தி பிடித்து அப்படியே தலையில் கொட்டியிருந்தாள்.

ராகேஷ் "அது..எந்தங்கச்சியா கொக்கா"

"ஹேய்..யூ ஸ்டுப்பிட் என்ன பண்ணிட்ட! "

என்றவாறு எழ , அவளை அப்படியே அமர வைத்தவள் அனைத்து க்ளாஸ்களில் இருந்த ஜுஸையும் கொட்டிவிட்டுதான் விட்டாள்.

ஆத்திரம் தலைக்கேற நிவி கையை ஓங்கி அடிக்க வர நாச்சியார் அப்படியே நின்றிருந்தாள்.

கௌதமின் கை நிவியை தடுத்திருந்தது. "நிவி யூ ஆர் கோயிங் டூ மச்"

நாச்சியார் விலகி சென்று சோபாவில் கால்மேல் கால் போட்டபடி அமர்ந்து கொண்டாள்.

நிவிக்கு அப்படி ஒரு அதிர்ச்சி, "வாட் நான் டூ மச் சா போறேனா. இவ பண்ணது மட்டும் சரியா. கேவலம் ஒரு வேலைக்காரிக்காக பேசி என்னை அவமானப்படுத்தறீங்க" என கீச்சுக்குரலில் கத்த

"ஜஸ்ட் ஸ்டாப் இட் நிவி, மறுபடி மறுபடி வேலைக்காரி சொல்லாத" கௌதமுக்கு அத்தனை கோபம்.

அவனின் மொத்தமும், அவன் உட்பட அவளுக்கே. அப்படிபட்டவளை வார்த்தைக்கு வார்த்தை வேலைக்காரி என்பதா!

நிவிக்கு பேரதிர்ச்சி, கால்மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்திருந்த நாச்சியாரை பார்த்தாள் யாரிவள்? இவளுக்காக என்னிடம் கத்துகிறானா! அதையே கேள்வியாக கேட்டாள்.

"யார் இவ"

"ஓ..காட் உனக்கு மரியாதையா பேச வராதா" அத்தனை ஆயாசம் கௌதமுக்கு இத்தனை முறை கூறியும் கேட்க மாட்டேன் என்கிறாளே.

நிவிக்கு அப்படி ஒரு ஆத்திரம்.விட்டால் நச்சியாரின் முடியை இழுத்து போட்டு சாத்தும் அளவுக்கு. ஆனாலும் கட்டுபடுத்தினாள்.

கௌதம் இந்தளவுக்கு பரிந்து பேசுகிறானென்றால் இவள் யாரென தெரிந்து கொள்ளவேண்டும்.

"சரி...யார் இவங்க"

"அழகு நாச்சியார் என்னோட மாமா பொண்ணு" அவள் பேரை சொல்வதற்கே இத்தனை குழைவா!என்றுதான் எண்ணினாள்.

"ஓ கிராமத்துல இருந்து வந்திருக்கா...ங்களா" என்று இளக்காரமாக பார்த்தாலும், கௌதம் எதற்காக இவ்வளவு பரிந்து வரவேண்டும் என்ற எண்ணமும் எழாமல் இல்லை.

கௌதமிற்காக "சாரி" என்று ஒப்புக்கு கேட்ட போதும் நாச்சியார் அதை கண்டுகொள்ளவே இல்லை. அவள் மற்ற இருவரிடமும் பேசிக்கொண்டிருந்தாள்.

"என்ன ஒரு திண்ணக்கம்! உன்ன பாத்துக்கறேன்டி" என்று கருவியவள்,

"கௌதம் நான் போய் உங்க ரூம்ல ஃப்ரஷ் அப் ஆகிட்டு வரேன்." என்றவாறு மாடியேறப் போனவளை

"நில்லு நிவி! அங்க இருக்க கெஸ்ட் ரூமுக்கு போய் ரெடி ஆய்க்கோ". என்று கீழே ஒரு அறையை காட்டினான்.

"ஏன் கௌதம் எப்பவும் உங்க ரூம்தானே யூஸ் பண்ணுவேன்.

நாச்சியாரை பார்த்தவாறே "இனியும் அப்படி இருக்க முடியாது நிவி கீப் டிஸ்டன்ஸ் ஃப்ரம் மீ" நாச்சியாரும் இவனை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.

இவ்வளவு வெளிப்படையாக மறுப்பான் என்று நிவி எதிர்பார்க்கவில்லை. மனம் அப்படி காந்தியது. அவள் முன் அவமானப்படுத்திவிட்டான்.

எல்லாம் இவன் சொத்துக்காவும், கொஞ்சமே கொஞ்சம் இவன் அழகுக்காகவும் பொறுத்துப் போவதாய் இருக்கிறது, இல்லையென்றால் அவளை......" இது எதுவும் தடையாக இல்லையென்றாலும் நாச்சியாரை ஒன்றும் செய்ய முடியாது என்று அச்சிறு பிள்ளைக்கு யார் சொல்வது.

ராகேஷ் எழுந்தவன் "சரி பாட்டிமா நான் கெளம்பறேன்" என்க.

நாச்சியார் "ஏன் அண்ணா நாங்கலாம் இங்க இருக்கும் போது நீங்க எங்க போறீங்க"

நிவியும் கேட்பாள்தான் "அங்க போய் தனியாதான இருக்கனும்"என்னும் குத்தல் பேச்சோடு. அர்த்தம் ஒன்றே ஆனால் வார்த்தைகளில் எத்தனை வித்தியாசம்.

"அது... என்னோட அப்பார்ட்மெண்ட்டுக்குமா" என தயங்கியவாறு சொல்ல,

"அப்படியா அப்ப சரி வாங்க போவோம் நாச்சியார் எழுந்து வந்தவள் கௌதமிடம் நான் அண்ணனோட போறேன்" என்றாள்.

அதில் "நீ அவரை இங்கேயே தங்க சொல்ல வேண்டும் என்ற பொருள் மறைந்திருந்தது."

இப்போது கௌதம் கோபமாக "டேய் ஒழுங்கா உள்ள போ...என்ன கொலகாரனாக்காத"
அவனும் எத்தனைதான் சமாளிப்பான்.

" இல்ல பாஸ்.."

"ஏங்க சார் நான் வந்து உங்க பெட்டிய எடுத்து வைக்கனுமா" என நக்கலாக வினவ, இனியும் மறுத்து பலனில்லை என நினைத்தவன் அமைதியாக உள்ளே சென்றான்.

"டாலி நீங்க உங்க ரூமுக்கு போங்க களைப்பா இருப்பீங்க" என நாச்சியார் பாட்டியையும் விரட்ட,

"இப்பதான் வீடு வீடா இருக்கு, இனி பீடையெல்லாம் போயிடும்" என நிவியை ஓரக்கண்ணால் பார்த்தவாறு கூறிவிட்டு சென்றார்.

நிவி "ஓல்டிக்கு கொழுப்ப பாரு , இரு கெழவி உன்ன அப்பறம் கவனிச்சுக்கறேன். " என பொருமிக் கொண்டிருந்தாள்.

அவர் சென்றதும் கௌதமிடம் வந்த நாச்சியார் "என்னோட ரூம் எங்கயிருக்கு" என வேறுபக்கம் பார்த்தவாறு வினவினாள்.

"மேல"

"சரி நான் போய்க்கறேன், நீங்க உங்க விருந்தாளிய கவனிங்க" என்று அவனிடம் கூறியவள்.

நிவியிடம் "இடம் ,பொருள், ஏவல்,முக்கியமா யார்க்கிட்ட பேசறோம்னு பாத்து பேசனும் இல்லைனா இப்படிதான் ஆகும்.

ஏதோ தெரியாம பேசிட்ட , முதல் தடவ அதனால இத்தோட விடறேன். ஞாபகம் இருக்கட்டும்" என்று விடுவிடுவென மாடிக்கு சென்று விட்டாள்.
 
Last edited:

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
"கௌதம் என்ன இது இந்த பொண்ணு இப்படி மிரட்டிட்டு போகுது"

ஹா..ஹா.. மிரட்டினதோட விட்டாளேன்னு சந்தோசப்படு.

தன் வீட்டில் தன்னவள் என்னும் நினைவே சந்தோசத்தை அளித்தது தன் நீண்ட பின்னலாட செல்லும் அவளையே பார்த்திருந்தான்.

"கௌதம்"

என மீண்டும் அவனை உலுக்க "என்ன நிவி இன்னும் கெளம்பலயா, இப்படியேவா நிக்க போற சிக்கிரம் போ"

அப்போதுதான் தன்னை குனிந்து பார்த்தாள். பார்த்து பார்த்து செய்த அலங்காரங்கள் பாழாய் போனது.

"இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகனும் பட்டிக்காடு" என்று எண்ணியவாறு தன ஹை ஹீல்ஸ் சத்தம் எழுப்ப வெளியே சென்று விட்டாள்.

அவள் சென்றதும் கௌதம் அவனது அறைக்கு மேலே செல்ல, அப்போதுதான் நாச்சியார் அவனறையிலிருந்து வெளியே வந்தாள்.

இவனை கண்டதும் "அது தெரியாம என்னோட ரூம்னு நினைச்சு வந்துட்டேன் சாரி"

"ஹேய் இதுக்கெல்லாம் எதுக்கு சாரி, இதுவும் உன்னோட ரூம்தான் வா..."

அவளை அப்படியே தள்ளிக்கொண்டு உள்ளே சென்று விட்டான்.

"விடுங்க"

என்று அவள் திமிர,

"உங்கிட்ட கொஞ்சம் பேசனும் "

"இல்ல நான் போறேன்"

"ப்ளீஸ் ப்யூட்டி"

"இதுக்கும் மேல கட்டாயபடுத்தினா இங்க இருந்து போயிடுவேன்"

அவளை விட்டவன்
"சரி போ" அவள் செல்ல

"ஒரு நிமிசம்"
திரும்பி பார்த்தாள்.

"இப்ப உன் விருப்பம், ஆனா எப்பவுமே அப்படி கிடையாது சரியா!"

அவள் அவனை முறைத்துக்கொண்டே சென்று விட்டாள்.

இவன் சிறு சிரிப்புடனே அலுவலகத்துக்கு செல்ல தயாரானான். வழக்கமான ஃபார்மல் உடையில் தயாரானவன், ராகேஷ் என அழைத்தவாறே இறங்கினான்.

அவன் முணகியவாறே வர , என்ன சார் இன்னும் வெக்கேஷன் முடியலயா! வரீங்களா? இல்லையா?என நக்கலாக வினவ,

"தோ வரேன் பாஸ்" இப்படியாக கௌதம் அலுவலக வேலையில் மூழ்கி விட, பாட்டிக்கு ஓய்வினை கொடுத்துவிட்டு நாச்சியார் வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டாள்.

சமையல் முதல் தோட்டம் வரை இவளின் எண்ணத்தில் மிளிர்ந்தது. வேலையாட்களும் இவளிடம் அன்பும் மரியாதையுமாக நடந்துகொண்டனர்.

இப்படியாக ஒரு வாரம் சென்றது. இவளும் பேசவில்லை, கௌதமும் பேசவில்லை. தன் வீட்டினர் போன் செய்தால் கூட அவள் பேசுவதில்லை. நிவியும் வரவில்லை.

அன்றே தந்தையுடன் வருவாள் என்று எண்ணிணான். ஆனால் அவர்கள் வரவில்லை. இதுவும் நல்லதுக்கே என கௌதம் எண்ணிக்கொண்டான். ஆனால் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் சுவாரஸியம் ஏது?

அன்று அலுவலகத்துக்கு விடுமுறை என்பதால் கௌதம் வீட்டிலேயே லேப்பில் வேலை செய்துகொண்டிருந்தான். ஹாலில் இருந்ததால் வேலையில் ஒரு கண்ணும், தன்னவளின் மேல் ஒரு கண்ணுமாக அமர்ந்திருந்தான்.

பாட்டி தனது அறையில் ஓய்வெடுக்க, அப்போது ராகேஷும் தனது லேப்புடன் வெளியே வந்து அமர்ந்து கொண்டான்.

ஏதோ சந்தேகம் தோன்ற கௌதமிடம் கேக்கலாம் என நிமிர்ந்தவன் "பாஸ்" "பாஸ்" என அழைத்து பார்க்க அவன் திரும்பவே இல்லை.

என்னாச்சு இவருக்கு அவனை உற்று பார்க்க அவன் கனவுலகில் இருப்பதை போல சிறுசிரிப்புடன் நாச்சியாரையே பார்வையால் தொடர்ந்தபடி இருந்தான்.

அவளும் அவ்வப்போது ஓரப்பார்வை தரிசனம் கண்டாள்.

"ஆஹா இது எப்ப ஆரம்பிச்சது, தெரியவே இல்ல ராகேசு நீ வேஸ்டுடா இப்படி ஒரு ட்ரேக் ஓடறது தெரியாம இருந்திருக்க"

"இவரு சிங்கம்னா, அந்தம்மா புலி ரெண்டுக்கும் எப்படி செட்டாகும். ரெண்டும் மெஜாரிட்டி காட்டற கேஸு வேற. எப்படியோ ரெண்டு பேரும் சேர்ந்தா சந்தோசப் படற முதல் ஆள் நான்தான். " என எண்ணியவாறே அங்கிருந்து நழுவி வெளியே செல்ல வந்தான்.

அப்போது வெள்ளை சட்டையும், வெள்ளையில் பேண்ட்டுமாய் உஜாலா விளம்பர மாடல் போல் ஒருவர் உள்ளே நுழைந்தார். அவருடன் நிவியும்.

ஆம் நிவியின் அப்பா அவர். இவனை கண்டதும் "என்னப்பா இங்கயே தங்கிட்ட போல" என நக்கலாக வினவ,

ஆமா அன்னைக்கு மவ வாங்கிட்டு போனது பத்தாதுன்னு இன்னைக்கு அப்பாவும் வந்திருக்கார் போல.. என மனதில் நினைத்தவன்.

"ஆமா சார் தங்கச்சிதான் இனி இங்கயே இருங்க அண்ணா சொன்னாங்களா அதான் தட்ட முடியல பாருங்க" என கூறியவன்

"நான் பாட்டிய பாக்க போகனும் நீங்க உள்ள போங்க பாஸ் உள்ள தான் இருக்கார்." என மீண்டும் உள்ளே திரும்பி பாட்டியின் அறைக்கு சென்றான்.

கௌதமின் அன்னை காஞ்சனாவின் அண்ணன் கருணாகரன். அவரும் ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்துபவர்தான். ஆனால் சிறிய நிறுவனம்.

அதனாலேயே தங்கை குடும்பத்தின் மேல் பொறாமை கொண்டவர். தங்கை கணவரான பிரபாகரிடம் தொழில் நஷ்டத்தை அடைந்ததாக கூறி சிலபல கோடிகளை கடனாக பெற்றுள்ளார்.

இதுவரை திருப்பி தரவுமில்லை. சிலமுறை கவனித்த குமார பூபதி மேலும் இது தொடராதவாறு பார்த்துக்கொண்டார்.

பிரபாகர் தந்தையை போல அல்லாமல் மென்மையான குணம் கொண்டவராக இருந்தார், அதனாலேயே கணவர் இருந்தவரை ஜெயக்குமார் குடும்பத்தை நெருங்க விட்டதே இல்லை.

ஆனால் இப்போது அவர்கள் பார்வை பணத்தை விட்டு கௌதமின் மேல் திரும்பியது. அவனை நிவிக்கு திருமணம் செய்ய ஆவல் கொண்டார்.

இவன் பிடிகொடுக்காமல் இருக்க, பத்தாததுக்கு இப்போது மாமன் மகள் ஒருத்தி வந்து அதிகாரம் செலுத்துவாள் என்று கனவா கண்டார்.

அவரை பார்த்த கௌதம் "வாங்க மாமா, வா நிவி" என அழைக்க,

"வரேன் மாப்பிள்ளை"

"உட்காருங்க, அழகி மாமாவுக்கு ப்ளேக் காஃபி அப்பறம் நிவிக்கு ஜுஸ் எடுத்துவா"

"ஐயோ ஜுஸா வேணாம் எனக்கு தண்ணி போதும்".

அதற்குள் அவள் அவரவர்க்கு வேண்டியதை கொண்டு வந்தாள். அவளை அளவிடுவது போல பார்க்க கௌதமிற்கு அது பிடிக்கவில்லை.

"இந்த பொண்ணுதான் மாமா பொண்ணாபா, பாப்பா சொன்னா"

"ஆமா மாமா"

சிறிது நேரம் மற்ற விசயங்களை பேசியவர் "நானும், அத்தையும் கொஞ்ச நாள் வெளியூர் போறோம் மாப்பிள்ள அதனால நிவி கொஞ்ச நாள் இங்க தங்கட்டுமா"

பெட்டியோடு வந்த பின் என்ன சொல்ல

"சரி மாமா இருக்கட்டும்"

"சரிப்பா நான் கெளம்பறேன்." என்றவர் சென்று விட்டார். கடமைக்கு கூட பாட்டியை பற்றி கேட்கவில்லை.

அன்றிலிருந்து நிவிக்கு கௌதம் கௌதம்தான். அவன் எங்கேயோ இவளும் அங்கேயே.

முன்பிருந்ததற்க்கு இப்போது ராகேஷும் நாச்சியாரும் நன்றாக பாசப்பயிரை வளர்த்தனர்.

அன்றும் அப்படிதான் ராகேஷ் லேப்பில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனுக்கு அது வரவில்லை.

"இந்த வேலைக்கு பேசாம வேற எங்கயாவது கழுதை மேய்க்க போகலாம். மண்டை காயுது" என புலம்பி கொண்டிருந்தான்.

அவனுக்கு வாழ்க்கையை ஜாலியாக வாழ வேண்டும். ஆனால் கௌதம் வேலை வேலை என் பெண்டெடுப்பான்.

அதான் அவ்வப்போது வேற வேலைக்கு செல்லலாமா என கிறுக்குதனமான யோசனை வரும். ஆனால் அதெல்லாம் இதுவரை யாசனை அளவிலேயே.

அப்போது அங்கு வந்தாள் நாச்சியார் "என்னண்ணா வேற வேலை வேணுமா!"

அவன் நல்லமூடில் இருந்திருந்தால் இவள் டோனை வைத்தே இவள் விளையாடுகிறாள் என கண்டிருப்பான். ஆனால் இவன் குழப்பத்தில் இருந்ததால் தெரியவில்லை.

ஆனால் கௌதம் கண்டுகொண்டான். அப்போதுதான் வந்தவன் இவர்கள் பேசுவதை கேட்டதும் அங்கேயே நின்றுவிட்டான். இவள் என்ன கூறுவாள் என்பத அறியும் ஆவல்.

"நான் உங்களுக்கு ஒரு வேலை ஏற்பாடு பண்ணட்டா"

"உன்னால முடியுமா"

"ம்.. ஆனா வேலை முதுமலைல யானைகள் சரணாலயத்துல உங்களுக்கு யானைனா பயமில்லையா"

யானை கிட்டயா எச்சில் விழுங்கியவன் பரவால்ல நல்ல வேலையா இருந்தா என மனதில் நினைத்தவன்

"இல்லையே சொல்லபோனா ஐ லவ் யானை" ஒருவித ராகத்தோடு கைகளை அகல விரித்து கூறினான்.

"ஓ...அப்ப சரி"

"சரி என்ன வேலைனு இன்னும் சொல்லவே இல்ல"

"அதுவா..ஒண்ணுமில்ல யானை இருக்குமா! அத கட்டிபோட்டு உப்பு பேப்பர் வச்சி தேய்ச்சு .."

"தேய்ச்சு"

"அப்பறமா அதுக்கு கருப்பு பெய்ண்ட் அடிக்கனும் அவ்வளவேதான்"

என்ன வேலையோ என ஆர்வமாக கேட்டு கொண்டிருந்தவன் முகம் அஷ்டகோணலாய் மாறியது.

அப்போதுதான் அவள் தன்னை கலாய்க்கிறாள் என தெரிந்தது.

"ஏன் இப்படி" என பாவப்பார்வை பார்க்க,

"ஏன் இந்த வேலைக்கு என்ன குறைச்சல் சும்மா வேற வேலைக்கு போறேன்னு சொல்லுறீங்க! இனி அப்படி சொல்லுவீங்க" என மிரட்ட,

"தெய்வமே இனி சாகற வரைக்கும் இந்த வேலைய விடலாங்கற எண்ணமே எனக்கு வராது போதுமா!"

உனக்கு இது தேவையா இனி வேற வேலைக்கு போறேன்னு சொல்லுவியா..சொல்லுவியான்னு மாறிமாறி கன்னத்திலேயே அடித்துக்கொண்டான்.

அட அந்த வேலை வேண்டான்னா "வரிக்குதிரைக்கு கோடு போடற வேலை, புலிக்கு புள்ளி வைக்கற வேலை இந்த மாதிரி நிறைய இருக்கு"

"என்னாது சரியான கொலகார குடும்பம்யா..நான் இடத்த காலி பன்றேன் என்றவாறு எழுந்து ஓடிவிட்டான்.

அவனை பார்த்து கலகலத்து சிரித்தவாறே திரும்ப கௌதம் புன்னகையோடு நின்றிருந்தான்.
 
Last edited:

nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
சென்ற அத்தியாயத்தை படித்தவர்களுக்கு நன்றி, விருப்பத்தை தெரிவு செய்தவர்களுக்கு மிக்க நன்றி, கருத்துக்களை பதிவு செய்த நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி....... இதோ அடுத்த அத்தியாயம்....

நாங்கலாம் அப்பவே அப்படி-- 9

நாச்சியார் ஜுஸ் அடங்கிய ட்ரே வை கௌதம் நிவி இருக்கும் இடத்திற்க்கு எடுத்து வர,

" பரவால்ல முதல்ல அவங்களுக்கு கொடு." என பெருந்தன்மையாய் பாட்டி, ராகைஷை சுட்டி காட்டினாள்.

ஆனால் நாச்சியார் அதை
கவனிக்காமல் இவர்களை நோக்கி வந்தாள்.

"பார்த்தீங்களா கௌதம் ஒரு மிரட்டு மிரட்டுனதும் எப்படி பயந்து என்கிட்ட கொண்டு வரா"

இதைக் கேட்ட ராகேஷ் சிரிப்பை அடக்க முடியாமல் அமர்ந்திருந்தான்.

கௌதம் "இது ரொம்ப முக்கியம் இப்ப" ராகேஷ் ஒருவித சுவாரஸ்யத்துடன் பார்த்திருந்தான்.

மெதுவாக வந்தவள் ஒரு க்ளாசை எடுத்து நிவியின் மேல் உயர்த்தி பிடித்து அப்படியே தலையில் கொட்டியிருந்தாள்.

ராகேஷ் "அது..எந்தங்கச்சியா கொக்கா"

"ஹேய்..யூ ஸ்டுப்பிட் என்ன பண்ணிட்ட! "

என்றவாறு எழ , அவளை அப்படியே அமர வைத்தவள் அனைத்து க்ளாஸ்களில் இருந்த ஜுஸையும் கொட்டிவிட்டுதான் விட்டாள்.

ஆத்திரம் தலைக்கேற நிவி கையை ஓங்கி அடிக்க வர நாச்சியார் அப்படியே நின்றிருந்தாள்.

கௌதமின் கை நிவியை தடுத்திருந்தது. "நிவி யூ ஆர் கோயிங் டூ மச்"

நாச்சியார் விலகி சென்று சோபாவில் கால்மேல் கால் போட்டபடி அமர்ந்து கொண்டாள்.

நிவிக்கு அப்படி ஒரு அதிர்ச்சி, "வாட் நான் டூ மச் சா போறேனா. இவ பண்ணது மட்டும் சரியா. கேவலம் ஒரு வேலைக்காரிக்காக பேசி என்னை அவமானப்படுத்தறீங்க" என கீச்சுக்குரலில் கத்த

"ஜஸ்ட் ஸ்டாப் இட் நிவி, மறுபடி மறுபடி வேலைக்காரி சொல்லாத" கௌதமுக்கு அத்தனை கோபம்.

அவனின் மொத்தமும், அவன் உட்பட அவளுக்கே. அப்படிபட்டவளை வார்த்தைக்கு வார்த்தை வேலைக்காரி என்பதா!

நிவிக்கு பேரதிர்ச்சி, கால்மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்திருந்த நாச்சியாரை பார்த்தாள் யாரிவள்? இவளுக்காக என்னிடம் கத்துகிறானா! அதையே கேள்வியாக கேட்டாள்.

"யார் இவ"

"ஓ..காட் உனக்கு மரியாதையா பேச வராதா" அத்தனை ஆயாசம் கௌதமுக்கு இத்தனை முறை கூறியும் கேட்க மாட்டேன் என்கிறாளே.

நிவிக்கு அப்படி ஒரு ஆத்திரம்.விட்டால் நச்சியாரின் முடியை இழுத்து போட்டு சாத்தும் அளவுக்கு. ஆனாலும் கட்டுபடுத்தினாள்.

கௌதம் இந்தளவுக்கு பரிந்து பேசுகிறானென்றால் இவள் யாரென தெரிந்து கொள்ளவேண்டும்.

"சரி...யார் இவங்க"

"அழகு நாச்சியார் என்னோட மாமா பொண்ணு" அவள் பேரை சொல்வதற்கே இத்தனை குழைவா!என்றுதான் எண்ணினாள்.

"ஓ கிராமத்துல இருந்து வந்திருக்கா...ங்களா" என்று இளக்காரமாக பார்த்தாலும், கௌதம் எதற்காக இவ்வளவு பரிந்து வரவேண்டும் என்ற எண்ணமும் எழாமல் இல்லை.

கௌதமிற்காக "சாரி" என்று ஒப்புக்கு கேட்ட போதும் நாச்சியார் அதை கண்டுகொள்ளவே இல்லை. அவள் மற்ற இருவரிடமும் பேசிக்கொண்டிருந்தாள்.

"என்ன ஒரு திண்ணக்கம்! உன்ன பாத்துக்கறேன்டி" என்று கருவியவள்,

"கௌதம் நான் போய் உங்க ரூம்ல ஃப்ரஷ் அப் ஆகிட்டு வரேன்." என்றவாறு மாடியேறப் போனவளை

"நில்லு நிவி! அங்க இருக்க கெஸ்ட் ரூமுக்கு போய் ரெடி ஆய்க்கோ". என்று கீழே ஒரு அறையை காட்டினான்.

"ஏன் கௌதம் எப்பவும் உங்க ரூம்தானே யூஸ் பண்ணுவேன்.

நாச்சியாரை பார்த்தவாறே "இனியும் அப்படி இருக்க முடியாது நிவி கீப் டிஸ்டன்ஸ் ஃப்ரம் மீ" நாச்சியாரும் இவனை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.

இவ்வளவு வெளிப்படையாக மறுப்பான் என்று நிவி எதிர்பார்க்கவில்லை. மனம் அப்படி காந்தியது. அவள் முன் அவமானப்படுத்திவிட்டான்.

எல்லாம் இவன் சொத்துக்காவும், கொஞ்சமே கொஞ்சம் இவன் அழகுக்காகவும் பொறுத்துப் போவதாய் இருக்கிறது, இல்லையென்றால் அவளை......" இது எதுவும் தடையாக இல்லையென்றாலும் நாச்சியாரை ஒன்றும் செய்ய முடியாது என்று அச்சிறு பிள்ளைக்கு யார் சொல்வது.

ராகேஷ் எழுந்தவன் "சரி பாட்டிமா நான் கெளம்பறேன்" என்க.

நாச்சியார் "ஏன் அண்ணா நாங்கலாம் இங்க இருக்கும் போது நீங்க எங்க போறீங்க"

நிவியும் கேட்பாள்தான் "அங்க போய் தனியாதான இருக்கனும்"என்னும் குத்தல் பேச்சோடு. அர்த்தம் ஒன்றே ஆனால் வார்த்தைகளில் எத்தனை வித்தியாசம்.

"அது... என்னோட அப்பார்ட்மெண்ட்டுக்குமா" என தயங்கியவாறு சொல்ல,

"அப்படியா அப்ப சரி வாங்க போவோம் நாச்சியார் எழுந்து வந்தவள் கௌதமிடம் நான் அண்ணனோட போறேன்" என்றாள்.

அதில் "நீ அவரை இங்கேயே தங்க சொல்ல வேண்டும் என்ற பொருள் மறைந்திருந்தது."

இப்போது கௌதம் கோபமாக "டேய் ஒழுங்கா உள்ள போ...என்ன கொலகாரனாக்காத"
அவனும் எத்தனைதான் சமாளிப்பான்.

" இல்ல பாஸ்.."

"ஏங்க சார் நான் வந்து உங்க பெட்டிய எடுத்து வைக்கனுமா" என நக்கலாக வினவ, இனியும் மறுத்து பலனில்லை என நினைத்தவன் அமைதியாக உள்ளே சென்றான்.

"டாலி நீங்க உங்க ரூமுக்கு போங்க களைப்பா இருப்பீங்க" என நாச்சியார் பாட்டியையும் விரட்ட,

"இப்பதான் வீடு வீடா இருக்கு, இனி பீடையெல்லாம் போயிடும்" என நிவியை ஓரக்கண்ணால் பார்த்தவாறு கூறிவிட்டு சென்றார்.

நிவி "ஓல்டிக்கு கொழுப்ப பாரு , இரு கெழவி உன்ன அப்பறம் கவனிச்சுக்கறேன். " என பொருமிக் கொண்டிருந்தாள்.

அவர் சென்றதும் கௌதமிடம் வந்த நாச்சியார் "என்னோட ரூம் எங்கயிருக்கு" என வேறுபக்கம் பார்த்தவாறு வினவினாள்.

"மேல"

"சரி நான் போய்க்கறேன், நீங்க உங்க விருந்தாளிய கவனிங்க" என்று அவனிடம் கூறியவள்.

நிவியிடம் "இடம் ,பொருள், ஏவல்,முக்கியமா யார்க்கிட்ட பேசறோம்னு பாத்து பேசனும் இல்லைனா இப்படிதான் ஆகும்.

ஏதோ தெரியாம பேசிட்ட , முதல் தடவ அதனால இத்தோட விடறேன். ஞாபகம் இருக்கட்டும்" என்று விடுவிடுவென மாடிக்கு சென்று விட்டாள்.
Sema shot,?? first ballye sixer maathiri appidi Oru feel????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top