• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience நான் சுமங்கலியாக சாக வேண்டும் இறைவா....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Eppa ulla ellarukkum ethey yennam erukku, yen appa erantha pothu entha sadanku yethuvum seiya villai anal yen amma poo pottu ellaml dhan erukirarkal.
Sonnalum kepathu ellai, muthali white color sari dhan uduthinarkal nangal romba solli padu patu dhan eppo kojam varusama ga dhan dull color sari uduthukirarkal.
Ana yen athai (mamiyar) apadi ellai
Poovai thavira matra yellam vaikirarkal oru savangalai parkkum pothu widow yendru solla mudiyathu. Avanga apadi erukkurathu yenga ellarukkum happy.
Eppo yellam neenga solluramathiri neraiya nadapathu ellai, pengal thirunthi maru thirumanam ennum nala matarangal vanthu vittarkal.

Neenga solluvathu nam ammakkal kalathil erupavarkal matume apadi erukirargal.

Young age ullavanga eppa yellam appadi ellai dear. Nam samoothaiyam mari kondu varukirathu.

Neenga 'periyarai'example sollama eruthu erukalam avar yevalavu age kku aparam magal age erukkum maniammaiya mrg pannurar.
ஈஸ்வரி நீங்க சொல்லும் பெண்கள் சிட்டில வாழும் பெண்கள் பா இப்போ யாரும் தாலி மெட்டி போடுவதும் இல்லை இப்போ யாரு சுமங்கலி யாரு விடோன்னு கண்டு புடிக்க முடியல ஆனா இதுக்கும் மத்தியிலே இது போல சடங்கு எல்லாம் இன்னும் இருக்க தான் பா செய்யுது ஊரு சைடு எல்லாம் இன்னும் திவிராமா தான் இருக்கு அது இல்லாமா இப்போ டீவி சினிமாவில் இன்னும் மெருகேத்தி காட்றங்க அது போல சினுக்கு பெண்கள் கூட்டம் தான் அலை மோதிகிட்டு ஒடுது இப்போ ரிசண்டு மூவி ஒண்ணு அந்த சடங்கை தான் அடிகடி ஒட்டிகிட்டு இருக்கு ஒரு சானலில்??‍♀
 




Bharathikannamal1112

அமைச்சர்
Joined
Nov 18, 2018
Messages
3,251
Reaction score
8,456
Location
Tamil Nadu
இந்த பதிவிற்க்கு like வேண்டாம் உங்கள் கருத்தை பதியுங்கள்...
அது பல பேருக்கு மாற்றத்தை கொடுக்கும்

நான் சுமங்கலியாக சாக வேண்டும் இறைவா....

இது தான் இந்து மதத்தை பின் பற்றும் ஏறத்தாழ முக்கால்வாசி பெண்களின் பிரார்த்தனையாக இருக்கிறது .....
ஏன் அவர்களின் வாழ்நாளின் குறிக்கோள் என்று கூட சொல்லலாம்...
அதற்காக எத்தனை விரதங்கள், பூஜைகள்...
எனக்கே என் திருமணதிற்க்கு பின் தான் தெரிந்தது பெண்கள் தங்களின் கணவன்மார்கள் நீண்ட ஆரோக்கியமுடன், ஆயுளோடும் வாழ வேண்டும் என்று எதற்காக விரதம் இருக்கிறார்கள் என்று.

What for this system? Who invent this system? Why invent this system? இப்படி பலதரப்பட்ட கேள்விகள் என் சிறு CPU வில்....ஆனால் பதில்தான் இல்லை....( google search ஆலையே கண்டுபிடிக்க முடியவில்லை.... நம்மாளுங்க எம்மாபெரிய தில்லாலங்கடிங்க ??)

சதி செய்து கணவனை இழந்த பெண்களை சதி (sati) என்ற மூடபழகத்தின் மூலம் உயிருடன் தீயில் தள்ளிய மூடர்களை முற்றிலுமாக சிதறாடித்தவர் ராஜாராம் மேகன்ராய்... அதற்கான தடைசட்டத்தை விதித்து 1861 ஆண்டில் இந்தியா முழுக்க அமுலுக்கு கொண்டுவந்தவர்கள் ஆங்கிலேயர்கள் ..... ( அப்ப எல்லாம் சட்டதிற்க்கு மரியாதை கொடுத்தாங்க அதனால சுலபமாக நிறைவேற்றினார்கள் . அவரே இப்ப வந்தா oh my கடவுளே,என்னை இந்த மூடர்கூட்டத்திடம் இருந்து காப்பாற்று என்று அவரை தெரிச்சு ஓட விடுவோம் இல்ல , இல்லாத காலரை தூக்கி விட்டு விமர்சனம் மட்டும் நல்லா செய்வோம்... உருபடியாக ஒன்றும் செய்ய மாட்டோம்... இது தான் இன்றைய நம் நிலை...)

நாம் அறியாமலே முழ்கி, முடங்கி, இருக்கும் இந்த மூடபழக்கத்தில் இருந்து யார் நம்மை காப்பார்கள்?
ராஜாராம் மோகன் ராய், பாரதியார், பெரியார் போன்றவர்கள் வந்தால் தான் பெண்களுக்கு இந்த அடிமை வாழ்வில் இருந்து விடிவு கிடைக்குமா?....

கனவு காணாதீர்கள் பெண்களே!!
ஓட்டமாக ஓடும் இந்த இயந்திர உலகில்...
சுயநலமான இந்த வாழ்க்கை முறையில்...
உங்களுக்காக யாரும் வர மாட்டார்கள்...
உங்களுக்கான மாற்றத்தை நீங்கள் தான் தொடங்க வேண்டும்...
உங்களுக்கான மாற்றத்தை நீங்கள் தான் உருவாக்க வேண்டும் ...
உங்களுக்கான மாற்றத்தை நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் ...

என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புறேன்..

என் வயதை ஒட்டிய எல்லாரும் ஆங்கிலம் புத்தகத்தில் இந்த poem யை ஆறாம் வகுப்பில் படித்து இருப்பீர்கள் ....

I know a face, a lovely face,
As full of beauty as of grace,
A face of pleasure, ever bright,
In utter darkness it gives us light,

இந்த பாட்டு படிக்கும் போது என் பெரியம்மா தான் என் நினைவிற்க்கு வருவாங்க.. ஏன்யென்றால் அவங்க பேரு மாதிரியே அவ்வளவு லட்சுமிகடாச்சத்துடன் இருப்பாங்க... மஞ்சல் பூசி, பெரிய பொட்டு வைத்து, தலையில் பூ வைத்து என்று அத்தனை அம்சமாக இருப்பாங்க....

எங்க பெரியம்மாவுக்கு இத்தனை பெரிய வேண்டுதல் இருந்தது என்று எங்க பெரியப்பா இறந்த அன்று தான் எனக்கு தெரிந்தது... என்ன வேண்டுதல் என்றால் அவங்க சுமங்கலியாக சாக வேண்டும் என்று.. எங்க பெரியம்மா அன்று அழுதது இன்று கூட என் நினைவில் இருக்கிறது... அவங்க கும்பிட்ட அத்தனை தெய்வத்தையும் அன்று நிந்தித்தார்கள்....எங்க பெரியம்மா மட்டும் இல்ல இந்துக்களாக பிறந்த ஏறத்தாழ அனைத்து பெண்களுக்கும் அந்த வேண்டுதல் இருக்கும் போல...

அந்த நாளும் வந்தது அவங்களின் அடையாளத்தை, சிறு வயது முதல் தன்னை அலங்கரித்த ஒன்று, தான் இரசித்த ஒன்று, தன்னை மங்களகரமாக இந்த சமுகத்தில் வலம் வர வைத்த ஒன்று, இனி தன் வாழ்விலே இல்லை என்ற தருணம்...

அனைத்தையும் களைத்து
உணர்வுகளை துடைத்து
பெண்ணாக ஏன் பிறந்தோம் என்று நிந்தித்து
கதற வைக்கும் அந்த சடங்கும் நடந்தது
கடைசியில அவங்களுக்கு heart attack ம் வந்தது...

கணவனை இழந்து தவிக்கும் தவிப்பை விட , இந்த சமுதாயம் கொடுக்கிற இந்த கொடுமை தான்வார்த்தைகளால் சொல்ல முடியாத மிக பெரிய வலியும் வேதனையும்...

யாருக்கு இந்த சடங்கு...
எதற்க்காக இந்த சடங்கு...
இன்று வரை புரியாத புதிர் எனக்கு....

அதோடு முடிந்ததா என்றால் இல்லை ... எந்த ஒரு சுப நிகழ்வுக்கும் பங்கு பெற அனுமதியில்லை....தான் பெற்ற பிள்ளைகளே ஆயினும் அவர்களின் திருமண சடங்குகளில் முன் நிற்கக்கூடாது எத்தகைய கொடுமை.... ஒரு குழந்தையை பாலுட்டி, சிராட்டி, சீரும் சிறப்புடன் வளர்க்கும் தாயைவிட, பாட்டியைவிட, அத்தையைவிட, பெரியாம்மாவைவிட, சித்தியைவிட இந்த உலகத்தில் வேறு யாரு மனப்பூர்வமாக, ஆத்மார்தமாக பல்லாண்டு காலம் வாழ்ந்து,எந்த ஒரு குறையும் இல்லாமல், பதினாறு செல்வங்களையும் பெற்று நீடோடி வாழ வேண்டும் என்று ஆசிகளை வழங்கிட முடியும்....

இந்த மூடபழக்கத்தை கடவுளிடமும் விட்டு வைக்கவில்லை...

நான் இப்ப இங்கிலாந்தில் இருக்கேன் இங்க இருக்கிற முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருக்கல்யாணம் ஆண்டு தோறும் வெகு விமர்சையாக கொண்டாடுவோம். என் தோழியுடைய அம்மா, கணவரை இழந்தவர் இந்தியாவில் இருந்து வந்து இருந்தார்கள் .... அவங்களை அந்த பூஜையில் எந்த ஒரு நிகழ்வுக்கும் அழைக்கவில்லை காரணம் அவங்க சுமங்கலி இல்லை அதனால் அவர்கள் வரக் கூடாது என்று சொல்லிவிட்டாங்க....
என்ன தான் படித்து மேலை நாட்டில் இருந்தாலும், மனதளவில் நாம் மூடர்களே என்று உணர்த்திய தருணம். கல்வி அறிவினால் மட்டும் மூடபழக்கத்தை மாத்த முடியாது என்று நடு மண்டையில் ஆனி அடித்தது போல உணர்ந்த தருணம்... மேலை நாட்டில் வாழ்ந்தால் மட்டும் போதுமா? மேன்மையான சிந்தனை வேண்டாமா என்று என்னை நானே சுய அலசலில் அலசிய தருணமும் கூட....
மூடபழகத்தில் முடங்கி கிடப்பது பெண்கள் தான் என்று உணர்ந்த தருணம் .... வேதனையான தருணமும் கூட...நம் அறியாமையை எண்ணி நொந்த நாளும் அதுவே...

எங்க அப்பா 6 வருடம் முன்ன இறந்தபோது கண்டிப்பாக அந்த சடங்கு எங்க அம்மாவுக்கு செய்யக்கூடாது என்று நான் மறுத்தேன்... ஏன்யென்றால் எங்க பெரியம்மாவிற்க்கு நடந்ததை பார்த்த பிறகு எங்க அம்மாவிற்க்கு அதை நடத்த என்னால முடியவில்லை.. ஆனாலும் அதை யாரும் கேட்கும் மன நிலையிலும் இல்லை .... காலம் காலமாக நம் பெரியோர்கள் கடைபிடித்து வரும் சடங்கு அதற்கு கண்டிப்பாக. ஏதாவது ஒரு அர்த்தம் இருக்கும் என்று. அதில் ஒரு அர்த்தமும் இல்லை எல்லாமே அபத்தம் என்று சொன்னாலும் செவி கொடுக்க யாரும் இல்லை..


அதிகாலை மூன்று மணிக்கு நான் தூங்கிய நேரம் பார்த்து அந்த சடங்கை ஆரம்பித்து விட்டார்கள் நான் கண் விழித்த போது நீ உங்க அம்மாவ பார்க்க கூடாது என்றார்கள். கொடுமையின் உச்சம் . நேற்று வரை எனக்கு அதிர்ஷ்ட தேவதையாக இருந்த என் அம்மா இன்று அபசகுனமான மனிதர் என் வாழ்வில் .... தலையில் முக்காடு போட்டு ஒரு மூலையில் அமர்த்திய காட்சியை என் உயிர் உள்ள வரை மறக்க முடியாது...நான் கதறிய கதறலையும் மறக்க முடியாது....

எல்லாத்தையும் நிருத்தினேன் இனி மேல் ஏதாவது செய்திங்க நான் மனுஷியாவே இருக்க மாட்டேன் என்றேன் ... நிறுத்தினாங்க..... என்னால எங்க அம்மாவை அந்த கோர சடங்கில் இருந்து காப்பாற்ற முடிந்ததா என்றா முழுவதாக இல்லை ஆனால் என் எதிர்ப்பை பதிவு செய்தேன்... ஒன்று புரிந்தது எதிர்ப்பை பதிவு செய்யனும், குரலை உயர்த்தனும்... அமைதியாக மட்டும் இருக்க கூடாது என்று..

எங்க அம்மாவை பொட்டு வைங்கம்மா,என்னால உன்னைய இப்படி பார்க்க முடியவில்லை என்றால் வைக்க மாட்டாங்க கேட்டால் இந்த ஊரு என்னை தப்பாக பேசும் நான் மாட்டேன் என்னால அந்த ஏளனபேச்சை கேட்க முடியாது என்று முடித்துவிடுவார்கள்.

ஆணவம் பிடித்த, பெண்களை இழிவாக நினைத்த, அடக்க நினைத்த மூடர்கள் என்றோ ஓரு நாள் வலுக்கட்டாயமாக நம் மீது தினித்த ஒன்றை இன்றும் அதை நம் பெரியோர்கள் கடைபிடித்தார்கள் நாமும் அதை பின்பற்ற வேண்டும் என்று பிடித்து தொங்குவது முட்டாள் பெண்களே .....பெண்களே...பெண்கள் மட்டுமே..

எத்தனை ஆழமாக இந்த சமுதாயத்தில் வேரூன்றி இருக்கு...இதை ஒரு இராப்பொழுதில் மாற்ற முடியுமா என்றால் முடியாது....இந்த மாதிரி மூடபழக்கத்தை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்கிற எண்ணம் முதலில் பெண்களுக்கு வர வேண்டும்....பெண்கள் மாற வேண்டியது மிக மிக அவசியம்.. நான் இன்னொரு பெண்ணுக்கு இந்த மாதிரி சடங்கை செய்ய மாட்டேன் என்கிற உறுதி வேண்டும்....பெண்கள் நினைத்தால் மட்டுமே தான் இது சாத்தியம் ....இது சத்தியமும் கூட..

எல்லா மாற்றமும் நம் வீட்டில் இருந்து தான் தொடங்க வேண்டும் ....
முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை..
மாற்றம் ஒன்றே மாறாதது ...
நம் அடுத்த தலைமுறைக்காவது இந்த கொடுமையான
மூடபழகத்தில் இருந்து விடுதலை கொடுப்போம் ...


எனக்கு உங்களின் கருத்து வேண்டும் ...
எல்லாவற்றிர்க்கும் மேல் தீர்வு வேண்டும் ...
அமுல் படுத்த வழி வேண்டும் ...
முடிந்தால் இங்கு பதிவிடுங்கள்

நன்றி தோழிகளே???
super akka
 




Bharathikannamal1112

அமைச்சர்
Joined
Nov 18, 2018
Messages
3,251
Reaction score
8,456
Location
Tamil Nadu
Ithu feminism kidayathu
intha rituals ellam gentsku ethuvum kidayathe
ponnungala eppavum oru slave mathiri pakkura society la than nama irukom athai wife appadindra perula iruku nerya ladies veliya solla mudiyama kasta padranga
 




Bharathikannamal1112

அமைச்சர்
Joined
Nov 18, 2018
Messages
3,251
Reaction score
8,456
Location
Tamil Nadu
Na ennoda pasangalukku ne paiyan ne ponnu appadi nu solli entha salugaiyum kodukka la mansanga mariyathaiya nadantha numu solluran .....palina patham pakkurathu thappunu solluran ennala mudunjathu avalavuthan....but athula intha samuthayam naraya thappu pannithu vitta vula pariyavungala nee paiyan athunala ne pariyavan vittu valai saiya tha va illa nu 5 year paiyanta solluranga annal Na avanoda valaya avanthan Panna viduvan ....athunala ennakku eppavum katta paru than pravailla nalaikku avana nallavana. Mathavungala mathikka tharunjavana urvakkuratthu ennoda kadamai illaya....
super akka
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
நான் சுமங்கலி என்ற பட்டத்தை விரும்பவில்லை. எனக்கு பின்னர் எனது கணவர் இருந்திருந்தால் அவர் மிகவும் சிரம்ப்பட்டு இருப்பார். அந்த சிரமத்தை அவருக்கு நான் கொடுக்கவில்லை என்பது எனக்கு ஆறுதலே
என் கணவர் ஒரு நாள் என்னிடம் கேட்ட விசயம் அப்படி.... எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் அதனால என்னிடம் சொன்னாங்க நீபாட்டுக்கு எனக்கு முன்னால் சுமங்கலியாக சாகனும் என்று வேண்டாதே ....because I cant live without you... நான் அப்படியே உருகிபோய்ட்டேன். அச்சோ!! நம்ம மேல என்ன காதல், அன்பு, பாசம் இறைவா நான் ரொம்ப பாக்கியசாலி இப்படி பட்ட ஒரு அர்த்நாரிஸ்வராரை எனக்கு கொடுத்த உமக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்...இது எல்லாம் சில வினாடிகளுக்கும் குறைவன என் மனவொட்டம்... என்னைய யாரு பார்த்துக்கொள்ளவார்கள்... நான் என் பொண்ணை எல்லாம் நம்பி இருக்க மாட்டேன் அதனால உனக்கு முன்ன நான் சாகனும் என்று வேண்டிக்கொள் என்று... சொன்னாங்க பாருங்க ..... நான் கேட்டேன் நீ இல்லாமல் நான் மட்டும் எப்படி இருப்பேன் என்று நீ யோசிச்சியா.. உன்னையே போய் அர்த்தநாரிஸ்வர் என்று நினைத்தேனே ?? நீ ஒரு செல்பிஸ்வர்(selfish)....என்று...jokes apart நீங்க
சொன்னது 200% சரியே...
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
ஈஸ்வரி நீங்க சொல்லும் பெண்கள் சிட்டில வாழும் பெண்கள் பா இப்போ யாரும் தாலி மெட்டி போடுவதும் இல்லை இப்போ யாரு சுமங்கலி யாரு விடோன்னு கண்டு புடிக்க முடியல ஆனா இதுக்கும் மத்தியிலே இது போல சடங்கு எல்லாம் இன்னும் இருக்க தான் பா செய்யுது ஊரு சைடு எல்லாம் இன்னும் திவிராமா தான் இருக்கு அது இல்லாமா இப்போ டீவி சினிமாவில் இன்னும் மெருகேத்தி காட்றங்க அது போல சினுக்கு பெண்கள் கூட்டம் தான் அலை மோதிகிட்டு ஒடுது இப்போ ரிசண்டு மூவி ஒண்ணு அந்த சடங்கை தான் அடிகடி ஒட்டிகிட்டு இருக்கு ஒரு சானலில்??‍♀
Erukku ellanun solla dear ana marikitu varuthu dhan solluren.
Eppo recent avangalukku age 32 or 33 erukkum avangalum rural area ullavanga dhan avangalukku apadi nadakala.

Ennum silla edangal sadangukal nadakku ana athukku aparam avanga normal ah eppothum yeppadi erupangalo appadi erukanga.

Matranga paiyathan nadakum dear, ketadha naama sikkiram adopt ahgirom yella vishiyathilum ana nallathu neraiya poratangal ezhappukal aparam dhane nadukku.
Naam nam pillaikalukku nallathai ozhukangalai solli koduthu nalla thaimaraga erunthal matume marume thavira padithal matum pothathu dear
 




Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
Enakum ethil Udan padu illai, Annal nan kann mune partha sambavam ethu ennum en thatha sonathu nenaivu erukindrathu pothuvaga erappu entha vayathulum varum athai arinthavan kadavul matumea,enathu uravinar thatha Patti avargal ullanar Patti sedu sedu endru erupargal thatha Romba nalavar anal pattiyin maranam santhamaga nigalinthathu oru kotavi than vetargal eranthuvitargal achiriyam Annal thatha vatham vanthu padukaiyil velunthuvittar nan ketatharku avar sonna bathil mooda Nambikai veru karma veru moraiyana samburuthaiyam veru oru kanavanai pavam seiyamal thadupathu manaiviyin kadamai, oru manaviyai punniyam seiya vaipathu kanavanin kadamai,enaku koduthu velaiyai sariyaga seithean athanal than aval kastam millamal eranthu vittal endrar kadavul nambikai athigam kondalum mooda nambikai vendam Entha jenmathil nadakum anaithirkum nam karamave karanam.......vendinal mattum varam kedaithu veduma enna..................
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Eppa ulla ellarukkum ethey yennam erukku, yen appa erantha pothu entha sadanku yethuvum seiya villai anal yen amma poo pottu ellaml dhan erukirarkal.
Sonnalum kepathu ellai, muthali white color sari dhan uduthinarkal nangal romba solli padu patu dhan eppo kojam varusama ga dhan dull color sari uduthukirarkal.
Ana yen athai (mamiyar) apadi ellai
Poovai thavira matra yellam vaikirarkal oru savangalai parkkum pothu widow yendru solla mudiyathu. Avanga apadi erukkurathu yenga ellarukkum happy.
Eppo yellam neenga solluramathiri neraiya nadapathu ellai, pengal thirunthi maru thirumanam ennum nala matarangal vanthu vittarkal.

Neenga solluvathu nam ammakkal kalathil erupavarkal matume apadi erukirargal.

Young age ullavanga eppa yellam appadi ellai dear. Nam samoothaiyam mari kondu varukirathu.

Neenga 'periyarai'example sollama eruthu erukalam avar yevalavu age kku aparam magal age erukkum maniammaiya mrg pannurar.
ஈஸ்வரி சமிபத்துல நான் கேட்ட கதை ஒன்று தான் என் நினைவுக்கு வருகிறது...

இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர் சொன்னாறாம் ...ஐயா நம்ம ஊரில் ஒருவன் எல்லோருக்கும் உபதேசம் செய்கிறான் அப்புறம் அதை கேட்பவர்களும் மாறுகிறார்கள் ஆனால் அந்த மனிதர் கொஞ்சம் ஒழுக்கம் கெட்டவர் என்று. இதற்க்கு பரமஹம்சர் கேட்டாராம் உங்க வீட்டில் துடப்பம் இருக்கிறதா என்று. அதற்க்கு அந்த மனிதர் ஆம் ஐயா இருக்கு... எப்படி இருக்கும் எங்கே இருக்கும் என்று கேட்டாராம் . அது அழுக்காக ஒரு ஓரமாக மூலையில் இருக்கும் என்றார்...

பரமஹம்சர் சொன்னாராம் துடப்பம் அழுக்காக இருக்கு என்று நீ அதை உபயோகப்படுத்தாமல் இருக்கியா என்ன... உன் வீட்டில் உள்ள குப்பைகளை அந்த அழுக்கான துடப்பம் தானே சுத்தம் செய்கிறது அப்படி இருக்கும் போது அந்த நபர் ஊருக்கு உபதேசம் செய்து எல்லார் மனதையும் சுத்தம் செய்கிறார் அவர் அழுக்காக இருந்தால் உனக்கு என்ன பிரச்சனை என்று....

பெரியார் ஏன் மணியம்மையை மணம் முடித்தார் என்று அவரும் மணியம்மை மற்றுமே அறிந்தது நமக்கு அவர் தனிபட்ட வாழ்கையில் முறை தேவையில்லையே..

அவரை பற்றி தெரிந்து கொள்ள வேறு நிறைய இருக்கே...
தேவதாசி முறையை ஒழிக்க நிறைய பாடுபட்டார்....
கல்லுக்கடை மறியல் இப்படி பல..

நான் அவரை பற்றி படித்து இல்லை அதனால அவரை பற்றிய என் அறிவு குறைவு தான் ....
ஆனால் தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கு...
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Erukku ellanun solla dear ana marikitu varuthu dhan solluren.
Eppo recent avangalukku age 32 or 33 erukkum avangalum rural area ullavanga dhan avangalukku apadi nadakala.

Ennum silla edangal sadangukal nadakku ana athukku aparam avanga normal ah eppothum yeppadi erupangalo appadi erukanga.

Matranga paiyathan nadakum dear, ketadha naama sikkiram adopt ahgirom yella vishiyathilum ana nallathu neraiya poratangal ezhappukal aparam dhane nadukku.
Naam nam pillaikalukku nallathai ozhukangalai solli koduthu nalla thaimaraga erunthal matume marume thavira padithal matum pothathu dear
?????????????
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
நான் இட்ட மாற்றத்தின் ஆரம்பபுள்ளி....

ஒரு சமயம்...எங்கள் வீட்டின் பூமிபூஜை போடும் விழாவிற்கு....சொந்தபந்தங்களுக்கு அம்மா அழைப்பு விடுத்திருந்தார்...
ஒரு சித்தியை தவிர..ஆனால். அவரின்
மகனை..மட்டும்.. அழைத்திருந்தார்...
விழா அன்று...சித்தி வராததை பற்றி அம்மாவிடம் விசாரிக்கும்போது....அம்மா
சொன்னாங்க.. இந்த மாதிரியான.. சுப நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அவ வரக்கூடாது.....நீ சின்ன பொண்ணு உனக்கு ஒண்ணும் தெரியாது.ன்னு...சொல்லி...
சமாளிச்சாங்க...
வந்ததே பாரூ ங்க எனக்கு கோபம்.....அம்மாகிட்ட பயங்கரமா சண்டை போட்டேன்....
நாளைக்கு...எங்களுக்கு...(myself and sister) இதே மாதிரியான நிலமை வந்தா இப்படிதான் ஒதுக்கி வைப்பீங்களான்னு...
செம argument...என்னால ஏத்துக்கவே முடியல.. இத்தனைக்கும்.. அந்த சித்திய அவ்வளவா எனக்கு பிடிக்காது ...
கடைசியில..அம்மாவே..போய்..
Sorry ..கேட்டு... சித்திய கூப்பிட்டு வந்தாங்க.....
பெண்கள் தான் இந்த மாதிரியான அபத்தங்களை அதிகமா அனுமதிக்கிறாங்க..அதை முதலில் தடுக்கனும்.....ப்ரேம்க்கா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top