• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நினைவில் தத்தளிக்கும் நேசமது 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
ஹாய் ஹாய் பட்டூஸ் சொன்னமாதிரியே சீக்கிரம் வந்துட்டன்னா ☺☺☺....போன எபிக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்ட எல்லோருக்கும் நன்றி???

நினைவில் தத்தளிக்கும் நேசமது 13 :

ஜித்தேந்தர் சென்றபின் ஷாலினி விஷ்வாவை பற்றித்தான் யோசித்தாள் . அன்று அவ்வறையில் அவன் அருகாமையில் ஏற்பட்ட உணர்வுகளின் தாக்கத்தால் அவன் முன் வர வெட்கம் கொண்டு போக்கு காட்டியவள் விரைவாகவே தன் வீட்டிற்குச் சென்றுவிட்டாள் . தன் அறைக்குள் நுழைந்து உடை மாற்றுவதற்காக அலமாரியைத் திறந்தவளின் மனமோ அவனைப் பற்றியே சிந்திக்க கைகளோ ஒவ்வொரு ஆடையாக எடுத்து வெளியே போட்டது .கைப்பேசியின் ஓசையில் கலந்தவள் செய்துவைத்த வேலையை கண்டு தலையில் அடித்துக்கொண்டு , விஷ்வா ஆனாலும் நீ என்ன ரொம்ப மயக்கி வைச்சிருக்க டா என அதற்கும் அவனையே பழி சொல்லி திரும்ப அனைத்து ஆடைகளையும் எடுத்து வைக்கையில் அடியிலிருந்த கவரை கண்டு புன்னகையுடன் அதைப் பிரித்தாள் .

ஆறுமாதம் முன்பு தனது வேலை காரணமாக ஹரியானா வரை சென்றவள் விஷ்வாவை பார்த்துக்கொண்டே இருப்பதற்காக அவனை ஃபாலோ செய்து புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என தனது உதவியாளருக்கு கட்டளை இட்டு விட்டே சென்றிருந்தாள் . அவரும் தனது வேலையைச் சரியாய் செய்ய அவளது வேலையில் கடைசி இரண்டு நாட்கள் மிகவும் கடுமையானதாக இருந்ததில் இறுதியாக வந்த புகைப்பட கவர் திரிக்கப்படாமலே பையிலிருந்து அலமாரியை சென்று சேர்ந்திருந்தது . பிறகு ஒருநாள் அதை பிரிக்க நினைக்கையில் ஜித்தேந்தர் ஒரு உதவி வேண்டும் என கேட்டு வர அந்த வேலையில் கவனமானவள் போட்டோ கவரை மறந்தே போனாள். இப்பொழுது அதிலிருந்து ஒவ்வொன்றாய் எடுத்து பார்த்து தன்னவனின் அழகை ரசித்துக் கொண்டிருந்தவள் கடைசியாய் இருந்த புகைப்படத்தை பார்த்து யோசனையானாள். சிறிது சிறிதாக அவளது யோசனை பார்வை கோபப் பார்வையாய் மாறியது . அப்புகைப்படம்.. விஷ்வா ஒரு பெண்ணை தன் கைகளில் ஏந்தியவாறு தன் காரின் அருகில் செல்வது போல் இருந்தது .
முதலில் எவ அவ என யோசனையாய் பார்த்தவள் அப்பெண்ணின் முகத்தைக் கண்டு இவங்க அவன் ஆஸ்பிட்டல் இருந்தவங்க தான என முணுமுணுக்கும் போதே அந்த பெண்ணிற்கு அவன் கொடுக்கும் முக்கியத்துவமும் சில மாதங்களுக்கு முன் இந்த பெண்ணிற்காகவே இரவு நேரங்களில் கூட ஹாஸ்பிட்டலே கதி என அவன் இருந்ததையும் நினைத்தவள் யார் அப்பெண் என கேட்டதற்கு ஒரு முறை கூட அப்பெண்ணை பற்றி தன்னிடம் அவன் சொல்லவில்லை என்பதில் இவன் எப்பவும் இப்படிதான் அப்ப நான் கேட்டும் ஒன்னுமே சொல்லல ....எப்பவுமே என்கிட்ட எதையுமே சொல்ல மாட்டிக்கிறான் என யோசனை கோபமாய் மாறியது. நிச்சயம் அவளது கோபம் அவன் தன்னிடம் எதையும் பகிரவில்லை என்பதில் தான்னன்றி அவன் மேல் சந்தேகம் கொண்டல்ல .( எப்பவோ சொல்லதாதுக்கா இப்போ கோபம் அட என்னமா நீ ).

அந்த கோபத்திலே நாட்களைக் கழித்தவள் அவனின் தொடர் அழைப்பில் தன் கோபம் மறந்து அவனை பார்க்க வேண்டும் போல் தோன்ற உடனே அவளின் அத்தை வீட்டிற்கு கிளம்பி சென்றாள் .

யாஹ்வி :

தனது அத்தையின் வீட்டிற்கு வந்த ஷாலினி அங்கு முன்னறையில் எவரும் இல்லாததால்அப்படியே அத்தானோட ரூமுக்கு போய்டலாமா என யோசிக்க ....அவளது மனசாட்சி , வர வர உனக்கு கொழுப்பு அதிகமா போச்சு உன்னை பெத்தவ அங்க பாக்குறவங்க கிட்டலாம் உன்ன குழந்தைனு சொல்லிக்கிட்டு திரிஞ்சா நீ இங்க என்ன வேலை பார்க்க நினைக்கிற என காரித்துப்ப அதில் முகத்தை துடைத்துக் கொண்டவள் .... சரி சரி நாம முதல்ல அத்தையை பார்ப்போம் அப்புறம் நம்ம ஆள நல்லா கவனிச்சிக்கலாம் என அத்தையின் அறையை நோக்கி செல்ல உள்ளிருந்து குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடி வந்த மித்ராளிணியின் மேல் மோதி நின்றாள் .

மித்ராளிணி , உப்ப்....ஸாரி நான் கவனிக்கல.

ஷாலினி , நானும் ஸாரி...நானுமே கவனிக்கல என சொல்ல பதிலுக்கு புன்னகைத்தவளை கண்டு யோசனையுடன் நீங்க என கேட்க...

சரியாய் அங்கு வந்த நாச்சியார், வாடாமா மருமகளே இப்போ தான் இந்த அத்தை வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா என ..

அச்சோ அத்தை ...நீங்களுமா வேலை அதிகம் அத்தை அதான் வர முடியல என்றவள் அங்கு அமைதியாய் தங்களை கவனித்துக் கொண்டிருந்தவளை காட்டி இவங்க யார் அத்த என்றாள் .

நாச்சியார் , உன்னை பார்த்ததில்ல இந்த பொண்ண அறிமுகப்படுத்தவே இல்ல பாரு ....இவ மித்ராளினி , நம்ப விஷ்வாக்கு வேண்டிய பொண்ணு ..கொஞ்ச நாள் நம்ம வீட்டில் தான் தங்க போறா என ஷாலினியிடம் சொல்லியவர்... மித்ராளினியிடம் , அம்மாடி ....இவ அவரோடு தங்கச்சி பொண்ணுமா பெயர் ஷாலினி என்றார்.

அவ்வளவு நேரம் மித்ராளிணியை எங்கோ பார்த்தது போல இருக்கே என யோசித்துக்கொண்டிருந்த ஷாலினி நாச்சியாரின் பேச்சில் விஷ்வா உடன் போட்டோவில் இருந்த பெண் எனக் கண்டு கொண்டவள் ....அவளிடம் இப்போ எப்படி இருக்கீங்க என்ன பாக்குறீங்க ஒரு தடவை ஹாஸ்பிடல் வந்தப்போ உங்கள பாத்து இருக்கேன் அப்போ நீங்க மயக்கத்தில் இருந்திங்க அதனால உங்களுக்கு என்னை தெரியாது ...

மித்ராளினி , ஓஒ ... இப்ப பரவாயில்ல என சிரிப்புடன் சொல்ல அவளின் சிரிப்பை ரசனையாய் பார்த்த ஷாலினி அப்போதுதான் அங்கே தங்களைத் தவிர வேறொருவர் நின்றிருந்ததை அறிந்து நிமிர்ந்து பார்க்க மித்ராளிணியின் பின் நின்றிருந்த ஜிஷ்ணுவைக் கண்டு.. சார் நீங்களா என கண்களை விரித்தாள்.

அவளின் வியப்பில் மித்ராளிணி, உங்களுக்கு முன்னாடியே ஜிண்ணுவை தெரியுமா என கேட்க ,

ஷாலினி , தெரியுமா வா.... நான் அவரோட பெரிய பேன் ( fan ).

அவளின் பதிலில் ஜிஷ்ணு புன்னகைக்க ....மித்ராளினியோ ஆச்சர்யமாய் பார்த்து நீங்க பேன் ஆஹ் இருக்க அளவுக்கு இவன் அப்படி என்ன பண்ணான் என கேட்டாள்.

அவளின் கேள்விக்கு ஷாலினியோ என்னங்க இப்டி கேட்டுட்டீங்க அவரை நாங்க முதல் முதலா பார்க்கும்போதே சும்மா படத்துல வர ஹீரோ மாதிரி ஒரே பஞ்ச் ல எதிர்ல இருந்தவன் மூஞ்ச பஞ்சர் ஆகிட்டாரு என அவனை முதன் முதலாக பார்த்ததை விவரிக்க ஆரம்பிக்க அவளுடன் ஜிஷ்ணுவும் தன்னவளை முதல்முதலாக கண்ட நொடிகளுக்கு பயணப்பட்டான்.

இங்கு மரத்தடியில் அமர்ந்திருந்த சித்ராங்கதாவும் ... கண்ட முதல் நாளிலே தன்னவனின் மேல் காதல் கொண்டு அவனை ரசித்து பார்த்த நினைவுகளில் சுழன்றாள்.


அங்கு தமையனவனோ..

தனது காதலவளின்
நினைவலையில் தத்தளிக்க.....!!
இங்கு தங்கையவளோ..
தனது சொல்லா காதலின்...

உணர்வலையில் தத்தளித்தாள்...!!!


உணர்வலை :

அன்று ஷாலினியுடன் அவளது கல்லூரியின் விழாவிற்காக சென்றிருந்த போதுதான் ஜிஷ்ணுவை முதல்முதலாக பார்த்தாள் சித்ராங்கதா. அன்று விழா நாளில் வம்பு வளர்ப்பதற்கென்றே இருக்கும் சில கும்பல் பெண்களிடம் வம்பு இழுப்பதாக தகவல் வர அங்கு விரைந்தான் ஜிஷ்ணு ... கல்லூரி மாணவர்கள் போல் அல்லது ரௌடிகளை போல இருந்தவர்கள் பெண்களை கிண்டல் செய்து கொண்டிருக்க ஒருவனின் முகத்தில் கை முஷ்டியால் அடித்தவன் மற்றவர்களை போட்டு துவைத்து ஆரம்பித்தான் . ஜாலியாக ஷாலினியுடன் பேசிக் கொண்டே வந்த சித்ராங்கதா தன் கால் அருகில் வந்து விழுந்தவனைக் கண்டு திகைத்துப் போய் பார்க்க எதிரே ருத்ர மூர்த்தியாய் கண்கள் சிவக்க வந்துகொண்டிருந்தவனை கண்டாள். அருகிலிருந்த ஷாலினி அவனது கோப முகத்தைக் கண்டு நடுங்க ...இவளோ அவனின் முகத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.அவன் காக்கி பேண்ட் வெள்ளை நிற டீசர்ட் அணிந்து இருக்க அந்த டிஷர்ட் கைகளை இறுக்கி பிடித்து அவனின் முறுக்கேறிய தோளை வடிவாய் காட்டியது . தலைமுடியை ஒட்ட நறுக்கி இருந்தாலும் அவனது முகத்திற்கு அது அழகாய் இருப்பதாய் தோன்ற அவனின் தலை முதல் கால் வரை ரசித்து பார்த்த சித்ராங்கதாவின் மனதில் அன்று காலையில் கேட்ட பாட்டு பின்னணியில் ஓடிக் கொண்டிருந்தது.


" மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்குப் பிடிக்காது ...முரடா... உனை ரசித்தேன்."

அவளின் பாடலை உணர்ந்தோ என்னவோ... திரும்பியவன் இந்த கலவரத்தின் நடுவில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளை கண்டு இங்க என்ன வேடிக்கை பார்க்கிற எல்லோரும் போனது தெரியல போ என கர்ஜித்தான் .

இப்பொழுது அவளது மனதில் ...

"தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன் "

என வரிகளோட அவனின் பேச்சை காதில் வாங்காமல் அவனின் இதழ்களையே ரசித்து...பொண்ணுங்க உதடு மாதிரி ரோசா இருக்கு நம்ப ஆள்க்கு தம் அடிக்கற பழக்கம்லா இல்ல போல என் செல்லம் " என மனதில் அவனை கொஞ்ச....
இவளை பார்த்துக் கொண்டிருந்தவனோ இவளின் பாவனையில் குழம்பி பேச வரும் முன்பு ஒருவன் தாக்க வர எங்கு அவள் மேல் அடி விழப்போகிறதோ என அவளின் கைகளை பிடித்து இழுத்தவன் பின் இவளை மறந்து சண்டையில் மூழ்கிவிட்டான்.
அவன் அவளது கைகளை பிடித்து இழுத்ததில் அவனது மார்பில் முட்டி நின்றவளின் முகம் சரியாய் அவனின் நெஞ்சில் பதிந்திருந்தது . ஜிஷ்ணு அடிக்க வந்தவனுடன் கோபமாய் சண்டையிட்டுக் கொண்டிருக்க இவளோ அவனது மார்பில் சாய்ந்து அவன் கைகளுக்குள் இருப்பதை ரசித்துக்கொண்டிருந்தாள்.

" முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ "

என மனதில் பாட ...சண்டையிட்டு கொண்டிருந்தாலும் அவள் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தவன் எதுக்கு இந்த பொண்ணு நம்பளையே பாக்குது ஏற்கனவே நம்பள தெரியுமா என யோசனையுடன் சற்று குனிந்து தன் கை வளைவினுள் இருந்தவளை பார்த்தவன் அவளின் கண்களில் வழிந்த காதலில் திகைத்து விட்டான் .


உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்குதே
நான் பிறக்குமுன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தான்
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது


மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது முறடா உனை ரசித்தேன்
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்
முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ
உன்னைப் போலே ஆண்ணில்லையே நீயும் போனால் நான்னில்லையே
நீர் அடிப்பதாலே மீன் அழுவதில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது


நீ ஒரு தீ என்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாய் இரு
நீ ஒரு முள் என்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாய் இரு
நீ வீரமான கள்ளன் உள்ளூரம் சொல்லுது நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது
உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்
நீ வசிக்கும் குடிசை என் மாட மாளிகை காதலோடு பேதம் இல்லை
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்குதே
நான் பிறக்குமுன்னே அட நீ பிறந்ததேன்

நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தான் ..


.........................................................................................................................................................................................................................................................
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
யாஹ்வி :

அவனின் மார்பில் சாய்ந்தவாறு கண்களில் காதல் வழிய பார்த்துக்கொண்டிருந்தவளை பற்றி எண்ணி கொண்டிருந்த ஜிஷ்ணு அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஷாலினியின் குரலில் தன் உணர்வலையில் இருந்து கலைந்தான் .

அவளோ மற்ற இருவரிடமும் ....அவன் அன்று அடித்த ஒவ்வொரு அடியையும் பாவனையுடன் சொல்லிக்கொண்டிருந்தாள் .நாச்சியார் அதை ஆர்வமுடன் கேட்க மித்ராளினியோ அவளின் பேச்சிற்கு ஏற்ப தனக்கு சிறியதாய் நினைவு வந்ததில் அதை பற்றி யோசித்தாள்.
அதில் ....
ஜிஷ்ணு இவளிடம் , மித்துமா இன்னிக்கு நான் காலேஜ்க்கு போய்ர்ந்தப்ப அங்க ஒரு பொண்ணு என்னையே பார்த்துட்டு இருந்திச்சி நானும் எதுக்கு இப்டி பார்க்குறானு அவள உத்து பார்த்தனா ...அப்போ ...அப்போ அவ கண்ண பார்க்கும் போது எனக்கு ப்ப்ப்பா என்னா கண்ணுடா இது அப்படி தான் தோணுச்சு ....ஏன் டா எனக்கு அப்படி தோணிச்சி என அப்பாவியாய் முகத்தை வைத்து கேட்க அதற்க்கு இவள் , டேய் ஜிண்ணு உண்மைய சொல்லு ...யார் அந்த பொண்ணு அவளை பார்க்க தான காலேஜ்க்கு போன ? என அவனை படுத்தி எடுப்பது போல் தோன்றியது.

அந்த நினைவுகளில் ஒருவேளை ஜிண்ணு சொன்ன பொண்ணு இவங்களா இருப்பாங்களா என ஷாலினியை பார்த்தவள் பின் ஜிஷ்ணுவின் முகத்தில் எதையாவது கண்டுப்பிடிக்க முடியுமா என பார்த்தாள்.

அப்பொழுது படிகளில் இறங்கி வந்த விஷ்வா ஷாலினியை அங்கு கண்டு பிரம்மையோ என கண்களை கசக்கி கொண்டுபார்க்க அவளின் பாவனைகளில் நிஜமென உணர்ந்து மயங்கி நின்றவன் ..டேய் டேய் ஏற்கனவே நீ பண்ண ஏதோ ஒரு விஷயத்துனால தான் பேசாம இருந்தா திரும்ப இப்டிலாம் பார்த்துவைக்காதடா என்ற அவனின் மனசாட்சி கூற்றில் தன் பார்வையை விளக்கி கொண்டு இறங்கி வந்தான்.

அவன் வந்ததில் அமைதியானவள் தன்னை பார்ப்பான் என ஆவலுடன் பார்க்க அவனோஅங்கு யோசனையுடன் இருந்த மித்ராளினியை கண்டு , ஏஞ்சல் ...என்னாச்சி ஆர் யு ஆல்ரைட் என கேட்டான் .

மித்ராளிணி , ஆங் ஒண்ணுமில்லை சிலது நினைவு வந்த மாதிரி இருந்திச்சி அதான் யோசிச்சேன்.

விஷ்வா , நினைவு வந்தா அத பத்தி யோசிக்கணும்னு இல்ல ஏஞ்சல்...எப்பவும்போல இருங்க எல்லாமே பொறுமையா நினைவு வந்துரும் .

அவன் பேச்சில் நாச்சியார் , ஷாலினி , ஜிஷ்ணு என அனைவரும் ....ஆமாம் மித்து எதையும் யோசிக்காத என்று அவரவர் பாணியில் சொன்னார்கள் .

அவர்களின் பாசத்தில் புன்னகைத்த மித்ராளிணி சரி சரி நான் எதையும் யோசிக்கல ....ஷாலினி நீங்க இவனோட பேன்னு (fan ) சொல்லிட்டு இருந்திங்கல அத பத்தி இன்னும் சொல்லுங்க என்றாள் .

அவள் சொன்னதில் என்ன்ன்னானானாதுது ....இந்த குட்டச்சி என் வில்லனோட பேன் னா...அடியே.. குத்துக்கல்லு மாதிரி இங்க இருக்கவன் கிட்ட பேசாம அந்த மைதா மாவு மூஞ்சிகாரனுக்கு பேன்னுனா சொல்லிட்டு தெரியுற ..மவளே உன்ன என மனதிற்குள் அவளை வறுத்தெடுத்தவன் வெளியே அவர்களை முறைத்தவாறு புசுபுசு என மூச்சிவிட்டான்.

அவனை கண்டுகொள்ளாமல் ஜிஷ்ணு கிளம்புவதை கண்டவள் நேரம் ஆனதை உணர்ந்து ...அச்சோ மணி ஆகிடிச்சே அப்பா வேற ஊர்ல இல்லனு அம்மா சீக்கிரம் வர சொன்னாங்களே நாம இன்னும் அத்தான் கிட்ட பேசவே இல்லையே என திருத்திருத்தவள் சரி நாளைக்கு அத்தான் ஹாஸ்பிட்டல்க்கு கிளம்பரத்துக்கு முன்னாடியே வந்து பேசிடுவோம் என முடிவெடுத்து வரும்பொழுது ஆட்டோவில் வந்ததால் இப்பொழுது ஜிஷ்ணுவிடம் சார் ..என்ன கொஞ்சம் ட்ராப் பண்ண முடியுமா என கேட்டாள்.

ஜிஷ்ணு , கண்டிப்பா ஆனா இனிமே சார் னு கூப்பிடாம ஜிஷ்ணு னு கூப்பிடனும் ஓகே வா என தன்னவளுடன் அன்று இவளை கண்டதில் தன்னவளின் தோழியை தனது சகோதரியாய் கருதி இவ்வாறு சொன்னான் .

அவனது பதிலில் ஷாலினி மகிழ விஷ்வாவோ காதில் புகை வராத குறையாய் அமர்ந்திருந்தான் .

தான் ஒருவன் இங்கிருப்பதையையே கண்டுகொள்ளாமல் ஜிஷ்ணுவுடன் கிளம்பியவளை கண்டு கோபத்துடன் பற்களை கடித்தவன் சட்டென்று காலை தன் அண்ணன் சொன்னது நினைவு வர.....மாம் அப்பாவும் மாமாவும் ஊருக்கு வந்துட்டாங்களாம் இன்னும் கொஞ்ச நேரத்துல ரெண்டு பேரும் நம்ப வீட்டுக்கு வந்துருவாங்க நினைக்கிறேன் என்றான்.

நாச்சியார் , என்னடா சொல்ற ...ஷாலினிமா அப்போ நீ அப்பா வரவரைக்கும் இங்கயே இருடா என்றார்.

அவள் அங்கிருப்பதாய் முடிவாக அனைவரிடமும் விடைபெற்ற ஜிஷ்ணு வழக்கம்போல் மித்ராளினியின் தலை கோதி நெற்றியில் முத்தமிட்டவன் அவளின் கைகளில் சுகமாய் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைக்கும் முத்தமிட்டு சென்றான்.

.......................................................................................................................................................................................................................

நேரம் ஆனதில் இதற்க்கு மேல் காத்திருக்க முடியாமல் அங்கிருந்து கிளம்பினாள் சித்ராங்கதா . ஸ்கூட்டியில் வந்துகொண்டிருந்தவள் வழியில் வண்டி நின்று விட ஏற்கனவே ஜிஷ்ணுவை பார்க்கமுடியாத கடுப்பில் இருந்தவள் அதை எட்டிஉதைக்க ....அவ்வழியில் வந்த ஜித்தேந்தர் அவளை கண்டு தனது காரை அவளது ஸ்கூட்டியின் முன் சென்று நிறுத்தினான் .தனது அண்ணனின் காரை கண்டு அருகில் வந்தவள் , நல்லவேளை ணா ...நீ இந்த பக்கம் வந்த... என் ஸ்கூட்டி மக்கர் பண்ணிடிச்சிண்ணா.

ஜித்தேந்தர் ,குட்டிமா நீ உன் வண்டிய ஓரமா விட்டுட்டு என் கூட வாடா ....இங்கதான நம்ப ட்ரைவர் வீடு இருக்கு அவர்கிட்ட சொல்லி காலையில வரும்போது சரி பண்ணி எடுத்துட்டு வர சொல்லலாம் என்றான்.

ஓகே ஓகே அண்ணா....மறுபக்க காரை திறந்தவளுக்கு அய்யய்யோ இப்போ அண்ணா ஏன் இவ்ளோ நேரம் கேட்டா என்ன சொல்றது என யோசிக்க அவனோ அவனின் ராணிமாவை பற்றிய நினைவில் மூழ்கி அமைதியாய் இருந்தான் . அவனிடம் கேள்வியை எதிர்பார்த்திருந்தவள் அவனின் அமைதியில் நிம்மதி பெருமூச்சுவிட்டு ஜிஷ்ணுவை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தாள் .


தங்களின் இதயம் நுழைந்து ...
உயிரில் கலந்து ...
உணர்வானவர்களை
காணா தவிப்பில்
தத்தளிப்பவர்களிடம்
எவர் சொல்வது ???
அவர்களின் தவிப்பிற்கான விடை
அவர்களின் உறைவிடத்திலே

உயிர்த்திருப்பதை ...!!!


-கரைவாள்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top