• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நினைவில் தத்தளிக்கும் நேசமது 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
ஹாய் ஹாய் டியர்ஸ் ...ரொம்ப ரொம்ப லேட்டா வந்துட்டேன் எல்லா அக்கா தங்கச்சிங்க அண்ட் அம்மாஸ் எல்லோரும் மன்னிச்சுடுங்க . சிலபல தொடர்வேலை கொடுக்கணும்னு நினைச்சிருந்தா குடுத்துருக்கலாம் ஆனா இது என்னோட முதல் படைப்பு ரொம்பவே ஆசைஆசையா எழுத தொடங்கியது . அத ஏனோதானோனு எழுத எனக்கு பிடிக்கல அதான் இந்த கேப் . நிச்சயம் இனிமே இப்படி தாமதம் ஆகாதுன்னு தான் நினைக்குறேன் .
ரொம்ப லேட்டா வந்துருக்கேன் உங்க ஆதரவுலாம் எனக்கு திரும்ப கிடைக்குமான்னு தெரியலயே . இந்த பச்சபிள்ளையை மன்னிச்சு லைக் அண்ட் கமண்ட்ஸ் போட்டு எனக்கு பூஸ்ட் ஏத்துங்க டியர்ஸ்.


நினைவில் தத்தளிக்கும் நேசமது 16 :


விஷ்வேந்தர் ஏற்படுத்திச் சென்ற மாயத்திலிருந்து விடுபட விரும்பாத ஷாலினி , அவன் காத்திருப்பதாய் சொன்னதில் சற்று தெளிந்து பரபரப்புடன் கிளம்பினாள் .

கீழே ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ருத்திரவர்தனும் , சாவித்திரியும் ஷாலினியின் வருகையில் களைந்து ... தன்னவனின் மாயலோகத்தில் லயித்திருந்த தாக்கத்தில் முகம் மலர்ந்து விகசிக்க, துள்ளிக்கொண்டு வந்த மகளின் அழகை வழக்கம்போல் ரசித்து பார்த்தனர் .

சிரித்துக் கொண்டே வந்த ஷாலினி , ருத்ரவர்தன் அமர்ந்திருந்ததில் அவரின் முதுகுப்புறமாய் சென்று கழுத்தில் கைகள் கோர்த்து தொங்கிகொண்டே அருகில் அமர்ந்திருந்த அன்னையின் கன்னத்தில் முத்தமிட்டாள் .

குழந்தையின் சிரிப்பில் சந்தோஷிக்கும் பெற்றோராய் இருவரின் முகமும் பிரகாசித்தது .

மகளின் கன்னத்தை ஆதுரமாய் தடவி ,என்ன இன்னிக்கு பட்டுகுட்டி ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க ....என்றார் சாவித்திரி.

அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா . ஆமா உன் முகம் இன்னிக்கு ரொம்ப அழகாயிருக்கு என அன்னையை பார்த்து சொன்னவள் , டாடி வர வர மம்மியோட அழகு கூடிட்டே போதுல அதோட ரகசியம் என்னவா இருக்கும் என தந்தையை கூட்டுசேர்த்து யோசிப்பது போல் நடித்தாள்.

ஆஹான் ...ஏங்க நம்ப பொண்ணோட முகம் கூட இன்னிக்கு அழகாஇருக்குல்ல ....அந்த மாயத்தை செஞ்சது யாரா இருக்கும் என அப்பாவியாய் கெட்டவரின் கண்களோ நக்கலாய் சிரிக்க ..நான் உனக்கு அம்மா டி என சொல்லாமல் சொன்னார் சாவித்திரி .

அடடா நம்ப இவங்கள ஓட்டலாம் பார்த்தா இவங்க நம்ப கதைய கிழிச்சி தொங்கவிட்ருவாங்க போலயே ...எஸ் ஆகிட்றி ஷாலினி என்ற மனசாட்சியை பார்த்து இந்த விஷ்வாவ நினைச்சிட்டே இருக்கறதுனால நீ கூட அவனை மாதிரியே யோசிக்க ஆரம்பிச்சிட்ட செல்லம் என புகழ்ந்தவள் வெளியே ,

ஹீஹீ... டாட் அது எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் போய்ட்டு வந்துர்றேன் என வெற்றிகரமாய் பின்வாங்கியவள் ,

மீண்டும் ஒரு முத்தத்தை அன்னையின் கன்னத்தில் கொடுத்துவிட்டு தந்தையை பார்த்து டாட் இப்போ உங்க டர்ன் ...நான்இப்போ கிளப்பிடுவேன் யூ என்ஜாய் என கண்ணடித்துவிட்டு சென்றாள்.

அடிங்...இவ யாரை பார்க்க இப்படி குதிச்சிட்டு போறான்னு எனக்கு தெரியாதாக்கும் . இதுல நம்பள கிண்டல் பண்ணிட்டு போறதை பாருங்க என சிரிப்பாய் அலுத்துக்கொண்டார் சாவித்திரி .

மனைவியின் சிரிப்பை கண்டவர் , அவர் பேசியதில் யோசனையுடன் சாவித்திரி என இழுத்தார் .

ஏங்க ...விச்சு கண்ணா நம்ம வீட்டுக்கு மருமகனா இல்ல மகனாகவே இருப்பாங்க. அவனோட சின்ன வயசுல இருந்து அவனை பார்க்கிறேன் ...அண்ணிகிட்ட அவன் இருந்தத விட அத்த அத்தனு என் முந்தானைய பிடிச்சிட்டு திரிஞ்சது தான் அதிகம்.

காலையில அவன் கீழ வந்தப்போ அவன பார்த்திங்களா .புள்ளையோட கண்ணுலயே அம்புட்டு காதல் இருந்திச்சி. நம்ப பொண்ணு மட்டும் என்ன ? மூணு நாளா ஏதோ பறிகொடுத்த மாதிரியே திரிஞ்சவ அவனை பார்த்ததும் எப்படி சந்தோஷமா போறா பார்த்தீங்களா என நீளமாய் தன் அண்ணன் மகனின் காதலிற்க்காய் பேசினார் சாவித்திரி.

( டேய் விஷ்வா , இன்னுமாடா இந்த உலகம் நம்புது . ஐயகோ ) .

ருத்திரவர்த்தன் எதுவும் பேசாமல் எழுந்து செல்ல , நான் இவ்வளவு நேரமா மூச்சுப்பிடிக்க பேசிற்க்கேன் . நீங்க என்னனா அமைதியா எழுந்துபோறீங்க .ஏங்க நம்ப புள்ளைங்க மனச நம்மளே புரிஞ்சிக்கலனா எப்படிங்க . அவனுக்கு என்னங்க குறை .நம்ப விஷ்வாவ , ஷாலினிக்காக அண்ணன்கிட்ட பேசலாம்ங்க என்றார்.

திரும்பி மனைவியை பார்த்தவர் , சாவித்ரி இனிமே இப்படிலாம் பேசாத என கடுமையாய் சொல்லி சென்றார்.

கணவரின் கடுமையில் முகம் சோர்ந்து நினறவரை கண்டு , ம்க்கும் என செறுமிய ருத்திரவர்த்தன் , ஏண்டி நம்ப வீட்டு மாப்பிள்ளைய யாரவது அவன் இவனு சொல்வாங்களா என்றவரின் உதடுகள் புன்னகையில் விரிந்திருந்தது .

கணவரின் மறைமுக சம்மதத்தில் மகிழ்ந்தவர் அதை மறைத்து , ஆங் முதல்ல அவன் என் அண்ணன் புள்ள அப்புறம் தான் இந்த வீட்டு மாப்பிள்ளை , ஞாபகம் இருக்கட்டும் என்று நொடித்தவரின் முகமோ சந்தோஷத்தில் குளித்திருந்தது.

(அதான ...என்னிக்கு இந்த பொண்டாட்டிங்க புருஷன் பேச்சை கேட்டு இருக்காங்க ...
அட எந்த அக்கா அங்க விளக்கமாத்த தூக்குது தெரிலயே. ஐய்யயோ நான் எதுவும் ஜொல்லலைங்கோ அக்காவ்வ்வ் ).



****************************************************

யாஹ்வி :

ஜிஷ்ணுவை பார்த்த சந்தோஷத்துடன் அதுவும் அவனின் அந்த மயக்கும் சிரிப்பை பார்த்த பின்பு அவளின் சோகம் போய் விழிகளில் பழைய குறும்புத்தனம் மின்ன வீட்டினுள் நுழைந்தாள் சித்ராங்கதா.

அம்ம்ம்ம்மாமாமா என கத்தி கொண்டே வந்த சித்ராங்கதா , ஹாலில் மித்ரேந்தருடன் அமர்ந்திருந்த மித்ராளினியை பார்த்து அமைதியாகி விழித்துக்கொண்டு நின்றாள்.

துறுதுறுவென நிற்க்கமால் ஓடியாடி தனது கேள்விகளால் மற்றவரை விழிப்பிதுங்க வைக்கும் குழந்தை வெளியாளை பார்த்து வாயை இறுக்க மூடி திருதிருவென விழிப்பதை போல் நின்றிருந்தவளை கண்ட மித்ராளினியின் இதழ்களில் புன்னகை அழையா விருந்தாளியாய் வந்தமர்ந்தது .

மகளின் குரலில் ஹாலிற்கு வந்த நாச்சியார் , அவள் மித்ராளினியை பார்த்து விழிப்பதை கண்டு ,

என்னடி முழிச்சிகிட்டு நிக்கிற , வீட்டுக்கு ஒருத்தங்க வராங்கன்னு சொன்னா அவங்கள வந்து பார்த்து ,எப்படி இருக்காங்க... என்ன ஏதுன்னு விசாரிக்கிற பழக்கம்லா இல்லையோ . இந்த லட்சணத்துல நீ எல்லாம் என்னத்த காலேஜ் போய் படிக்கிற என நேற்று அவள் மித்ராளினியை பார்க்காமல் , சாப்பிடக்கூட வராமல் இருந்ததில் கோபமாய் இருந்தவர் தற்போது பொறிந்து தள்ளிவிட்டார்.

( ஏன்னுங்கம்மா ...நேத்து சித்து குட்டி மட்டுமா பார்க்கவரல. முக்கியமா பார்க்க வேண்டியவனே முக்காட போட்டுக்கிட்டு வேற ஊர்ல தேடிட்டு திரியுறான் . நீங்க இந்த புள்ளைய திட்டிட்டு இருக்கீங்க ).

மா ...அது வந்து ...என என்ன சொல்வதென்று தெரியாமல் இழுத்தாள் சித்த்ரங்கதா .அவளுக்கும் முந்தைய தினம் விஷ்வா , என் ஏஞ்சலை கூட்டிகொண்டுவரப்போவதாய் சொல்லி இருந்தான் . ஜிஷ்ணுவை பற்றிய நினைவில் இதை மறந்ததை நினைத்து அவளுக்கு சிறிது குற்றவுணர்வாகியது .

நாச்சியாரோ , என்னடி இழுத்துட்டு இருக்க . காலையில இப்படித்தான் என்ன,ஏதுனு ஒழுங்கா சொல்லாம ஓடிட்ட. ஆமா ஏதோ ட்ரைனிங்ன்னு போன இப்போ வந்து நிக்குற என்று தொடர்ந்து கேள்வியாய் கேட்க, சித்ராங்கதாவோ பதில் சொல்லாமல் திருதிருத்தாள்.

( எம்மா.... நாச்சியாரம்மா... ஒவ்வொரு பாலா போடுங்கம்மா . ஒருபா் அடிக்கறதுக்கு முன்னாடி அடுத்தது போட்டா எப்படி??. குழந்தை தினறுதுல...).

இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மித்ராளினிக்கு தன் அம்மா எப்படிஇருப்பார்களோ என்ற ஏக்கம் தோன்ற , அப்பொழுதுதான் தான் விழித்த இத்தனை நாட்களில் தன் குடும்பத்தை பற்றி எண்ணாதது நினைவிற்கு வந்தது.

ச்சே...என்ன இது நம்ப குடும்பத்த பத்தி கூட யோசிக்காம இருந்துருக்கோம் . ஆனா அந்த குரலை பத்தி ஒரு நிமிஷம் கூட நினைக்காம இருந்ததில்லையே. அந்த குரல் அந்த அளவிற்க்கா என்னை ஆட்டிப்படைக்குது என தனக்குள் திட்டிகொண்டவள் . அடுத்தமுறை ஜிஷ்ணுவிடம் குடும்பத்த பத்தி கேட்கணும் என மனதில் குறித்துக்கொண்டாள்.


சித்ராங்கதாவோ மனதினுள், ஆத்தாடி என்ன இன்னிக்கு நம்ப அம்மா இந்த வாங்கு வாங்குறாங்க .இந்த விச்சு எரும இருந்தாவாச்சி அவனை உள்ளே இழுத்துவிட்டுட்டு நம்ப எஸ் ஆகிற்கிலாம் இப்போ என்ன பண்றது . ஆஞ்சநேயா எங்க அம்மா கிட்ட இருந்து என்னை காப்பாத்துப்பா , உனக்கு வெண்ணை வாங்கி தரேன் . உனக்கு பாதி எனக்கு பாதி சரியா என மனதில் டீல் பேசிக் கொண்டிருந்தாள்.

இன்னும் விட்டா இவ நம்பளுக்கு வர எல்லாத்தையும் ஆட்டைய போட்டாலும் போட்றுவா என யோசித்த ஆஞ்சநேயரும் அவளிடமிருந்து தப்பிக்க, ரவிச்சக்ரவர்த்தியை அனுப்பி வைத்தார்.

ஹாலிற்கு வந்த ரவிசக்கரவர்த்தி , என்ன நாச்சி... இவ்வளவு நேரம் மூச்சை பிடிச்சிட்டு புள்ளையை திட்டுறதுக்கு நீயே ஏஞ்சல அறிமுகபடுத்தி இருக்கலாம்ல என மடக்கியவர் , மகளிடம் திரும்பி ஆனாலும் உங்க அம்மாக்கு கொஞ்சமே கொஞ்சம் மூளை கம்மிதான் குட்டி என கண்ணடித்தார் .

நாச்சியார் ஏதோ சொல்லவர அதற்குள் குறுக்கிட்ட சித்ராங்கதா ,உங்களுக்கும் ஏஞ்சலா என கேட்டு பேச்சை மாற்றினாள்.

ஹாஹா என சிரித்த ரவிச்சக்கரவர்த்தி , சித்ராங்கதாவை மித்ராளினியின் முன் நிறுத்தி ,நீயே பார்த்து சொல்லு இந்த பொண்ணு ஏஞ்சல் மாதிரி தான இருக்கா என கேட்டவர் .மித்ராளினியிடம் , இவ தான்மா இந்த வீட்டோட செல்ல குட்டிஇளவரசி என அறிமுகப்படுத்தினார் .

தன்னை பார்த்து புன்னகைத்த மித்ராளினியை பார்த்த சித்ராங்கதாவோ , உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என யோசனையாய் கேட்டாள்.

அவளின் கேள்வியில்
இவளிற்கு மித்ராளினியை தெரியுமோ என ஆவலாய் பார்த்த நாச்சியார் , இவளின் கேள்விக்கு தன் வில்போன்ற புருவங்களை சுருக்கி விரல்களால் நெற்றியை தடவியவாறு யோசிக்கும் மித்ராளினியை கண்டு பதறினார் .

ஏண்டி ,வந்தவுடனே உன் விசாரணையை ஆரம்பிக்கனுமா என்று சித்ராங்கதாவை அதட்டியவர் மித்ராளினியின் கவனம் தன் புறம் திரும்பியதில் நல்லவேளை இவ ரொம்ப யோசிக்க கூடாதுனு விஷ்வா சொல்லிர்க்கானே என நிம்மதி பெருமூச்செய்தினார்.

ரவிச்சக்கரவர்த்தி ,ஆமா குட்டி நீ என்ன இன்னிக்கு காலேஜ் போலையா . அப்போ நம்ப எல்லோரும் எங்கனா வெளிய போலாமா . நானும் வேலைலாம் இல்லாம உங்க கூட கொஞ்ச நேரம் இருக்கலாம் நினைக்கிறேன் .

ஆமா ...இல்லனா மட்டும் நீங்க அப்படியே வேலை செய்யுற மாதிரி தான். என்னிக்கு கண்ணப்பா பார்க்க ஆரம்பிச்சானோ அப்போல இருந்து சும்மாதானே இருக்கீங்க என கணவரின் மூக்குடைத்தார் நாச்சியார்.

உங்க அத்தைக்கு மூளை கம்மினு நான் சொன்னதை நியாபகம் வச்சிட்டு என்னை வெட்டியா இருக்கேன்னு கலாய்க்குறா பார்த்தியா . நம்ப அத அப்டியே கண்டுக்காத மாதிரியே போய்டணும் என மித்ராளினியிடம் முனங்கினார்.

அவர் பேச்சில் தன்னையும் இணைக்க நினைப்பதை உணர்ந்து , அவரின் மறைமுக பாசத்தில் புன்னகைத்தாள் மித்ராளினி.

சித்ராங்கதாவோ இன்றைய மனநிலையில் வெளியில் செல்ல மகிழ்ச்சையாய் ஒத்துக்கொண்டவள் , அப்பா நான் விஷ்வாக்கு கால் பண்றேன் . அந்த பக்கியும் வந்தா நல்லா இருக்கும் என விஷ்வாவிற்கு கால் செய்தாள்.
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
*****************************************************
ஷாலினியின் வருகைக்காய் அந்த காப்பி ஹட்டின் வாசலை பார்த்தவாரு அமர்ந்திருந்த விஷ்வாவை கலைத்தது மொபைலின் ஓசை.

இந்த குட்டி பிசாசுக்கு எப்படித்தான் தெரியுதுன்னு தெரியல , எப்ப நான் என் குட்டச்சிக்காக காத்திருந்தாலும் இவளுக்கு மூக்கு வேர்த்து எனக்கு கால் பண்ணிட்றா என சத்தமாய் புலம்பியவன் இப்போ என்ன குண்ட போட போறாளோ என நினைத்துக் கொண்டே பேசினான் .

எடுத்து காதில் வைத்தவுடனே ,
எரும எரும பன்னி போன எடுக்க எவ்வளவு நேரம்டா . கொஞ்சமாவது உனக்கு மூளைன்னு எதுனா இருக்கா ,அறிவுகெட்டவனே என வசமழை பொழிந்தாள் சித்ராங்கதா .

ஏய் குட்டிபிசாசு, குரங்கு என்னை என்ன உன்ன மாதிரி வெட்டியாவே இருக்குறதா நினைப்பா . போனை எடுக்க முன்னபின்ன தான் ஆகும் . போன் பண்ணா என்னனு சொல்லணும் அத விட்டுட்டு லூசு மாதிரி பேசிகிட்டு சரியான லூசு லூசு.

டேய் யாருடா லூசு... நீ தான் மெண்டல், பக்கி , பரதேசி என மாத்தி மாத்தி சண்டையிட கடுப்பான நாச்சியார், ஏண்டி உன்ன அவன்கூட சண்டை போடுறதற்க்கா கால் பண்ண சொன்னோம். இப்போ ஒழுங்கா பேசுறியா இல்ல கரண்டியால வாயில சூடு போடவா என மிரட்டினார் .

ச்ச்சு ச்ச்சு எதுக்கு நாச்சி கோபப்படற , நம்ம பொண்ணு வாயிலிருந்து உன் புறந்தவீட்டு மனுஷங்க பேர் வர்றத பார்த்து நானே பூரிச்சு போய் இருக்கேன் . நீ எதுக்கு குறுக்கபோற அப்புறம் பிள்ளைக்கு மறந்துரும்ல என வழியவந்து சிக்கினார் ரவிச்சக்கரவர்த்தி .

எது எது என் புறந்த வீட்டு ஆளுங்க உங்களுக்கு பரதேசிங்களா. இன்னிக்கு உங்களுக்கு காலை டிபன் வெறும் கஞ்சி தான் என்றார் முறைத்தவாறே .

நீ செய்ற குழம்புக்கு அந்த பழைய கஞ்சே தேவலாம் என ரவிச்சக்கரவர்த்தி முனங்க அது சரியாய் நாச்சியாரின் காதை சென்றடைந்ததில் அவர் அங்கு தன் பிள்ளைகளுக்கு சமமாய் ஒரு யுத்தத்தை ஆரம்பித்தார் .

இவர்களை கண்டு கொள்ளாமல் சித்ராங்கதாவோ இன்னும் விஷ்வாவுடன் சண்டையிட்டு கொண்டிருந்தாள்.

சிறுபிள்ளைகளாய் முறைத்துக் கொண்டிருக்கும் நாச்சியார் , ரவிசக்கரவர்த்தியும் , எதற்கு போன் பண்ணிணாளோ அதைவிட்டு விஷ்ஷாவுடன் சண்டையிட்டு கொண்டிருந்த சித்ராங்கதாவையும் , மடியில் மித்ரேந்தரை வைத்தவாறு சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தாள் மித்ராளினி .

இதேபோல் அவளும் ஜிஷ்ணுவும் சண்டையிட்டுக் கொள்ள பச்சை நிறப் பட்டுடுத்தி அதே கலரில் கல்வைத்த மூக்குத்தி அணிந்து , முகத்தில் சாந்தம் தவழ ஒரு பெண்மணி தங்களை சமாதானப் படுத்துவது போல் நினைவு எழுந்து அவளின் மனதை வியாபித்தது .

*****************************************************

விஷ்வாவை பார்க்கப்போகும் ஆசையில் வேகவேகமாய் சென்ற ஷாலினியின் மனமோ அதை விட வேகமாய் பயணித்து , விஷ்வா தன் காதலை சொல்லிய மறுநிமிடமே தன்னுயிருடன் அவனின் உயிரை சங்கமித்து ஓருயிராய் மாறிய அத்தருணத்தை நோக்கி ஓடியது .

உடல்கள் இணைவது மட்டும் சங்கமமல்ல ...இருஉயிர்கள் தங்கள் காதலை உணர்ந்து ஓருயிராய் மனதால் இணைவதும் ******* தான் .

ஷாலினியும் அத்தகைய சங்கமமாகிய அவர்கள் இருவரின் உயிர் அலையில் தத்தளிக்க ஆரம்பித்தாள் .

உயிர் அலை :

தான் எப்பொழுதும் பொறுமையாய் நின்று ரசிக்கும் , சிறு குழந்தையென துள்ளி விளையாட தூண்டும் , ஆசை காதலியை அணைப்பது போல் அவளை தழுவும் மழை... இன்றும் திறந்திருந்த ஜன்னலின் வழியே அவளை தீண்டும் பேராவலில் தடையென இருக்கும் கம்பிகளையும் தாண்டி அவள் மேல் பட்டு, அடுத்த நொடியே மோட்சம் பெற்றதாய் எண்ணி தெரித்தது.

இம்முறை அச்சுகத்தை அனுபவிக்க முடியாமல் கண்களை இறுக்க மூடி கொண்டு தான் அமர்ந்திருந்த சோபாவில் சாய்த்தவளின் கால்களில் இரு துளிகள் விழுந்தது .

அத்துளிகளை ஆராய விடாமல் அவளின் மனமோ வேகமாய் துடிக்க , இதற்க்கு முன் பலமுறை இவ்விதயவேகத்திற்கு காரணமாய் இருந்தவனின் நினைவில் மேலும் கண்களை இறுக்கமாய் மூடினாள்.

அவனின் நினைவிலே உழன்றதாலோ என்னவோ அவனின் வாசம் தன்னை சூழ்வது போல் உணர்ந்தவள் இன்னும் இது தொடர்ந்தால் தன்னால் தாங்க இயலாது என கண்களை திறந்தவளின் முன்னும் அவளின் உயிரானவனே தெரிந்தான் .
அது மாயை என எண்ணி விலக்க நினைத்தவளிற்கு நிஜமென உணர்த்த அவளின் கால்களில் அழுத்தமாய் முத்தமிட்டு முத்திரை பதித்தான் விஷ்வா ....விஷ்வேந்தர்....ஷாலினியின் உயிரான விஷ்வேந்தர் .

முத்தமிட்டு நிமிர்ந்தவன் கண்களில் நீர் துளிர்க்க இரு கைகளையும் விரித்த விஷ்வா வா என்பதை போல் தலையசைக்க , அடுத்தநொடி கதறியவாறு அவனின் அணைப்புக்குள் புகுந்திருந்தாள்.

அ...அத்தான் ....நீ ...நீங்க எங்க போனீங்க ..

குட்டச்சி இப்பாவது என்னை பேச விடுடி. இத்தனை நாளா உன்கிட்ட பேசாம செத்துபோய்ட்ட மாதிரி இருந்திச்சி டி. சாத்தியமா சொல்றேன் டி அன்னிக்கு உன்கிட்ட என் காதலை சொல்ல தான் வந்தேன் , ஆனா என்னன்னவோ நடந்துடிச்சி . என்னை மன்னிச்சிடு டி என அவளை இறுக்கி அணைத்தவாறு புலம்பினான் .

அவன் காதலை சொல்ல வந்தேன் என்னும் வார்த்தையில் அதிர்ந்து அவனின் முகத்தை பார்க்க முயற்சிக்க அவனோ இன்னும் இன்னும் இறுக்கமாய் அவளை அணைத்தான் .

அவனின் பிடியிலிருந்து விலக முடியாமல் போக அவனின் இருக்கத்திலிருந்தே அவனின் காதலை உணர்ந்தவள் கண்களோரமாய் முத்தாய் கண்ணீர் துளிகள் பளபளக்க மகிழ்ச்சியில் அவனின் முதுகில் தன் விரல்நகம் பதிய தானும் அவனை தன்னுடன் இறுக்கினாள் .

சிறிது நேரம் சென்று அவளை விடுவித்தவன் அவளை தன்கைகளில் ஏந்தியவாறு அருகிலிருந்த கதவை திறந்து படிகளில் ஏறினான் .

அவன் தூக்கும்போதே அவன் செய்ய போவதை உணர்ந்தவள் , அவனை காதல் போங்க பார்த்து தன்கைகளை அவனின் கழுத்தில் கோர்த்து வாகாய் அவனின் நெஞ்சில் சாய்ந்தாள் .

படிகளில் ஏறி மேலே செல்ல செல்ல மழைத்துளிகள் ஆவேசமாய் அவர்களை முத்தமிட்டு அம்முத்ததில் மோகம் தீராமல் மீண்டும் மீண்டுமாய் அவர்களை முத்தமிட வந்தது.

மொட்டைமாடியின் நடுவில் மழையின் வன்மை காதலின் நடுவில் நின்ற விஷ்வா , ஷாலினியை பார்த்தவாரே அவளை கைகளிலிருந்து இருந்தவன் ,தன் கால்களின் மேலே அவளை நிற்கவைத்து தன் கைவளைவிற்க்குள்ளாகவே அவளை இருத்தினான் .

அவ்வேளையில் அவளின் முகத்திலிருந்து வழிந்து அவளின் உதட்டில் பொட்டாய் வீற்றிருந்த மழைத்துளியை கண்டு அதை பருக குனிந்தான்.

அந்த மழையிலும் அவனின் மூச்சுக்காற்று அவளின் முகத்தை சுட அத்ற்க்குமேல் தாங்க இயலாமல் அவள் கண்களை மூட , அவளை நெருங்கியவனோ அவளின் இந்நிலையில் மயங்கி கிறங்கினான்.

இந்தநொடிவரை தன் காதலை சொல்லவில்லை ....இவளின் அத்தனை துன்பத்திற்கும் நான் மட்டுமே காரணமாய் இருக்க இவளோ அதை அனைத்தும் ஒன்றுமில்லை என்பதை போல் தன் நெருக்கத்தில் மயங்கும் அளவிற்கு காதல் கொண்டுள்ளளா ?? என தனக்குள் கேட்டுக்கொண்ட விஷ்வா இதற்க்கு மேல் உன்னை தவிக்க விடமாட்டேன் டி என மெதுவாய் முணுமுணுத்தான் .

அவளின் இதழை தீண்ட நெருங்கியவன் சற்றே சாய்ந்து அவளின் காதோரமாய் குனிந்து அவள் இத்தனை நாளாய் ஏங்கிய அவ்வார்த்தையை உதிர்த்தான் .

ஏய் குட்டச்சி , ஐ லவ் யு டி என் செல்ல காத்தாயி .
இந்த நிமிஷத்துல இருந்து நீ தான் என் வாழ்க்கை . நீ மட்டும் தான் டி .

அவனின் முத்ததிற்க்கை காத்திருந்த ஷாலினி, அவனிடமிருந்து இதை எதிர்பார்க்காததில் ஒருநொடி திகைத்து மறுநொடி ஆவேசமாய் அவனை அணைத்து கதற , அவளை தன் மேல் ஏந்தியவாறு நின்றிருந்த விஷ்வா தடுமாறி கீழே சாய அந்நிலையிலும் அவனவளிற்கும் எதுவும் நேரமாலிருக்க அவளை அரவணைத்தவாரே விழுந்தான் .

அதை எதையும் கவனிக்க முடியாமல் அவன் காதல் சொல்லியதிலே கசிந்துருகியவள் தன் காதலை ஆவேசமாய் அவனின் முகத்தினில் முத்தமிட்டு தெரிவிக்க அந்த மழையும் அவர்கள் மேல் கொண்ட காதலில் ஆவேசமாய் அவர்களை தீண்டி சென்றது.



-கரைவாள்
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
Dei..vanthutiya..va va...

Super epi da ??... jolly and romantic epi??...

rmba nall intha family ya miss pannen nan??.. so Next epiyota vegama vanthutu da...
 




Last edited:

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
Mee first thoshi...romba naal kalichi vara.. ??? comedy and romantic ud thoshi.. oru jodiya main jodiya vittutiye maa.. ?? but ithuve perusu la.. waiting for next ud.. ???
Haha thanks d????? ....varuvanga varuvanga avangalum nxt epila ??...ama d knjam perusu thaan ninaikren ellam enna slranga terilaey ...???
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
Dei..vanthutiya..va va...

Super epi da ??... jolly and romantic epi??...

rmba nall intha family ya miss pannen nan??.. so Next epiyota vegama vanthutu da...
Hahaa???????????ka ...kandippa ka seekrem varen ??
 




Nishirdha

அமைச்சர்
Joined
Feb 8, 2018
Messages
3,003
Reaction score
5,586
Location
Tamil Nadu
Super ud Thoshi(y)(y) vishwa coffee shop la meet panna shalini ya koptan... Athukaprom yenna aachu:unsure::unsure: next uyir azhai la shalini feel pannitu irukirappa vishwa samathana paduthura maari iruku... Naduvula yenna aagi irukummm..... In between something missingo_Oo_Oo_O
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top