• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நினைவில் தத்தளிக்கும் நேசமது 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
ஹாய் டியர்ஸ் நான் வந்துட்டேன் ...இது ரொம்பவே சிம்பிளான எபி தான்பா அப்றம் இந்த எபிலையும் பாவா வரலை கோச்சிக்காதிங்க நிச்சயம் அடுத்த எபில கூட்டிட்டு வரேன் ....பிளஷ்பக் ஆரம்பிக்கபோது டியர்ஸ் அதுல பாவா தான் வருவாரு ஓகே வா.


நினைவில் தத்தளிக்கும் நேசமது 17 :

தங்களது உயிர்அலையில் தத்தளித்த சுகத்துடன் முகம் மலர அந்த காபி ஹட்டினுள் நுழைந்தாள் ஷாலினிவர்தன்.

அவ்வளவு நேரம் சிறுபிள்ளையாய் சித்ராங்கதாவுடன் சண்டையிட்டு கொண்டிருந்த விஷ்வேந்தர் ஷாலினியை கண்டபின் , ஏய் குட்டிச்சாத்தான் போன வை டி .இப்போ உன்கூட சண்டை போட்ற மூட் இல்ல என்றவன் போனை கட் பண்ணிவிட்டான் .

அவன் பேசியத்திலிருந்தே யாரிடம் என தெரிந்துகொண்ட ஷாலினி , ஹாஹா... என்ன அத்தான் நம்ப சித்துவா போன்ல . ஆனாலும் உங்க ரெண்டு பேருக்குமே இந்த சூடு சொரணை லாம் கம்மி தான் போல என கண்சிமிட்ட ,

ஆமா டி ஆமா...ஒருவேளை அதுலாம் கம்மியா இருக்கறதுனால தான் உன்னை லவ் பண்ணிருப்பனோ என்னவோ ?

டேய் எரும ...

ஏய் என்னடி இது , ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி தான் அத்தான்னு கூப்பிட்ட அதுக்குள்ள மரியாதையை பறக்கவிடற .

நீ அப்டி பேசுனாடா நானும் இப்படி தான்டா பேசுவேன்டா

யம்மா தாயே இனிமே வாயே தொறக்கலமா என வாயை பொத்தியவனை பார்த்து அஃது என்பதுபோல் தலையசைத்து கண்ணடித்தாள்.

பேரரிடம் தங்களுக்கு வேண்டியதை சொல்லியவர்கள் , அவை வந்தபின்பு சாப்பிட்டவாரே பேசிக்கொண்டிருந்தனர்.

சிறு ஊடலின் பின் நேர்ந்த நெருக்கத்தின் விளைவால் காதல் அதிகரித்திருக்க பேச பேச முடிவில்லாமல் இந்நேரம் தொடரக்கூடாதா என்னும் எண்ணம் இருவரின் மனதிலும் எழாமல் இல்லை.

அப்றம் அத்தான் , நான் இன்னிக்கு சாயந்திரம் டெல்லி கிளம்பறேன்.
ஆனா அத்தான் ப்ளீஸ் ஏன்னு மட்டும் கேட்டுறாதீங்க , என்னால உங்க கிட்ட பொய் சொல்ல முடியாது .

ஹாஹா! என் குட்டச்சி அம்புட்டு நல்லவளா டி என கலாய்த்த விஷ்வா தொடர்ந்து , நான் உன்ன எதுவும் கேக்க மாட்டேன் ஓகே . பட் ஜாக்குரதையா இரு என ஆரம்பித்து சில பல அறிவுரைகளை சொல்ல ஆரம்பித்தான் .

ஆரம்பிச்சிட்டான்ய்யா என மனதில் சொல்லிக்கொண்ட ஷாலினி ...வழக்கமாய் தான் ஒவ்வொரு முறை இப்படி எங்காவது செல்லும்பொழுது விஷ்வாவின் இந்த அறிவு,(றுவை)கள் சகஜம் தான் என இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டவாறு தங்களை சுற்றிலும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் .

அவர்கள் அந்த ஹட்டின் நடுவில் இருந்த மேஜையில் அமர்ந்திருக்க , அங்கு இருக்கும் பெண்களும் சரி அங்கு வருபவர்களும் சரி ....ஒருமுறையாவது தங்களின் புறம் திரும்பிபார்ப்பதை அறிந்தவள் , எதுக்கு எல்லோரும் நம்மளையே குறுகுறுனு பாக்குறாங்க என புருவத்தை சுருக்கினாள். ( யோசிக்கிறாங்களாம்பா ) .

ஏய் குட்டச்சி , என்னடி நான் சொன்னதுலாம் கேட்டியா இல்லையா ??.என்னடி நீ யா இவ்ளோ அமைதியா இருக்கிறது சரியில்லயே .

டேய் அத்தான் ! பேண்ட்டு கீண்ட்டு போட மறந்துட்டியா.

யே...என்னடி லூசாகிட்டியா .அய்யயோ ஆஞ்சநேயா தெரியாத்தனமா ஒரு லூச லவ் பண்ணிட்டேன் போலயே .கடைசில நானும் உன் பிரெண்ட் பிள்ளையார் மாதிரி ஆகிடுவேன் போலயே.

டேய் லூசு அத்தான் , கொஞ்சம் சுத்தி எல்லோரையும் பாரு உன்ன தான் பாக்குறாங்க . அதுக்குதான் கேட்டேன் என அவனின் தலையில் எக்கி கொட்டினாள்.

ஹாஹா குட்டச்சி ஹாஹா ஆனாலும் உனக்கு இந்த காமெடிலாம் சுட்டு போட்டாலும் வராதுன்னு தெரியும்ல .... அப்றம் ஏன் செல்லம் ட்ரை பண்ணற என்றவன் மீண்டும் பலமாய் சிரிக்க ஆரம்பிக்க , அவளோ கைகளில் கிடைப்பதை எல்லாம் தூக்கி எறிய , விஷ்வாவோ வேகவேகமாய் அவர்கள் உண்டதற்கான பணத்தை செலுத்திவிட்டு அங்கிருந்து ஓடினான் .

அவனை துரத்தி கொண்டே ஓடியவள் ,அவன் அங்கிருந்த மரத்தின் ஓரம் சட்டென்று நிற்க அவளும் தடுமாறி அவனின் மேலேயே மோதி நின்றாள்.

அவளின் புறம் திரும்பிய விஷ்வா , ஆமா குட்டச்சி ...பொண்ணுங்களுக்கு பொதுவா பொசசிவ் பொசசிவ் னு ஒன்னு அதிகமா இருக்குமாமே உனக்கு அதுலாம் இல்லையாடி.

அத்தான் அத்தான் இதுக்கு பதில் , நான் ஏற்கனவே ஒருதடவை கவிதையா எழுதியிருக்கேன் அத இப்போ சொல்லட்டுமா ப்ளீஸ் ப்ளீஸ் .

வேணாம்னா விடவா போற என முனங்கியவன் தலையை சரி என ஆட்ட , ஷாலினி தனது கவிதையை சொல்ல ஆரம்பித்தாள் .
( இது ஏற்கனவே நான் எழுதி உங்கள்ல நிறைய பேருக்கு தெரிஞ்சதுதான் டியர்ஸ் ...என்னோட எழுத்துல எனக்கு ரொம்பவே பிடிச்சதும் கூட ).

செல்லும் இடமெல்லாம் என்னவனை ரசிக்கும் பெண்களின் கண்கள் ...

கண்டும்காணா சிரிக்கும்
இதழ்களுடன் நான்...

அதை கண்டு சிணுங்கும் சிறுவனாய் என்னவன் ...

அவனின் அச்சிணுங்களில் மயங்கி பெருமையுடன் கூறினேன் ,

" எவர் கண்கள் உன்னை ரசித்தாலும் உனது கண்கள் என்மேல் மட்டுமே " என்று ,

உன்னவள் உன்னை அறிவாளடா !!!!


அத்தான் எப்படி இருக்கு என் கவிதை ?? என்று ஷாலினி அழகாய் புருவத்தை ஏற்றி இறக்கினாள்.

அவளின் புருவத்தை விரல் கொண்டு வருடிய விஷ்வா , அந்த சித்து குரங்கு சொல்றதுல இத மட்டும் நான் ஒத்துப்பேன் , உன்னோட புருவங்கள் ரொம்பவே அழகு டி, அதுவும் நீ அத இப்படி ஏத்தி இறக்குறப்ப ப்பாபா மனுஷன கொல்ற என சிறிது ரசனையை பேசினான் .

அவனின் பேச்சில் முகம் செம்மையுற நின்றவளை கண்டவன் அவளை சகஜமாக்கும் பொருட்டு , ஆமா டி குட்டச்சி ! ஏதோ கவிதை சொல்றன்னு சொன்ன எப்போ சொல்வ . சீக்கிரம் சொல்லு அத்தானுக்கு நேரம் ஆகுதுல .

வெட்கத்தால் சிவந்திருந்த ஷாலினியின் முகம் தற்பொழுது கோபத்தால் சிவக்க , யூ ....யூ..என திட்டுவதற்கு வார்த்தைவரமால் கோபத்தில் தடுமாறினாள் .

ஹாஹா என சிரித்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவன் , சரிடி நான் கிளம்பறேன் ....ஹாஸ்பிடல்ல எமெர்ஜென்சி எதுவும் இல்லனா ஈவினிங் நீ கிளம்பரத்துக்குள்ள வர பார்க்குறேன் சரியா என கிளம்பியவன் மீண்டும் திரும்பி வந்தான் .

ஷாலினி என்ன என்பது போல் பார்த்து , திரும்ப உன் அறுவைஉ(றிவு)ரையை ஆரம்பிக்க போறியா என்ன என்று அலறினாள் .

அவனோ சிரிக்காமல் இருக்க அவனின் முகமோ மிக மிக அழுத்தமாய் இருந்தது .

குட்டச்சி நீ சொன்ன கவிதைல ஒரு சின்ன மாற்றம் , நான் சிணுங்குவேன்னு சொன்னல நிச்சயமா இல்லை . உன்ன தவிர வேறொருத்தரோட பார்வை என்மேல பட்றத கூட என்னால ஏத்துக்க முடியாது டி. நான் உனக்கு மட்டும் தான் . இதுல உனக்கு சின்னதா எதுனா சந்தேகம் வந்தா கூட அதுதான் ...அந்த நொடி தான் நம்ப சேர்ந்து இருக்குற கடைசி நொடியா இருக்கும் என்றவன் அவளின் நெற்றில் முத்தம் பதித்துவிட்டு தன் வண்டியில் ஏறி கிளம்பி சென்றான் .


விஷ்வா மற்றபொழுதுகளில் விளையாட்டாய் இருந்தாலும் , ஷாலினியுடனான காதலில் சிறு விளையாட்டையும் சேர்க்காமல் மிக மிக அழுத்தமான, இத்தைகைய பிடிவாதத்துடனான காதலுடனே இருப்பான் . ஒருவேளை அவனின் இந்த அழுத்தமும் பிடிவாதமுமே இவர்களின் காதலில் பிளவை ஏற்படுத்துமோ ???


**************************************************

பேசிக்கொண்டிருக்கும்போதே (ஹீஹீ அதாவது திட்டிக்கொண்டிருக்கும் போதே) விஷ்வா போனை வைத்துவிட்பான சித்ராங்கதா ,அம்மாஆஆஆ என கத்தினாள் .

மும்முரமாய் ரவிச்சக்கரவர்த்தியை முறைத்துக்கொண்டிருந்த நாச்சியாரோ , ஏய் ஏண்டி கத்துற போ சாப்பாட டைனிங்டேபிள் ல வச்சிருக்கேன் பாரு அதுக்கு தான கத்திட்டு கிடைக்க .

அவ்வளவு நேரம் தன் நினைவுகளில் முழ்கிருந்த மித்ராளினி நாச்சியாரின் பேச்சில் வாய்விட்டு சிரித்தாள் .

நாச்சியாரிடம் பதிலுக்கு பேச போன சித்ராங்கதாவோ மித்ராளினியின் சிரிப்பில் அவளை பார்த்தவளின் மூளையோ பலமாய் சத்தமிட்டது இவர்களை எங்கோ பார்த்திருப்பதாய் .

இதற்க்கு நடுவே ரவிச்சக்கரவர்த்தியோ எங்கே நாச்சியார் மீண்டும் முறைக்க ஆரம்பித்திடுவாரோ என்றெண்ணி பேச்சை மாற்றுவதற்க்காய் , குட்டிமா விஷ்வா என்னடா சொன்னான் வரனாமா என கேட்டார் சித்ராங்கதாவிடம் .

அப்பா அவனை பத்தி பேசாதீங்க , அவனும் வந்தா நல்லா இருக்கும் எனக்குன்னு தான அவனுக்கு கால் பண்ணேன் . அந்த எரும பேசவே விடாம திட்டிட்டு போன கட் பண்ணிட்டான் பா.
( யாரு யார பேச விடாம பண்ணுனது .இங்கிட்டு எப்படி போட்டு குடுக்குது பாத்திங்களா ...பாவம்பா இந்த அண்ணனுங்களாம் ) .


இல்லையே மா விஷ்வா என்னமாதிரிதான அவனுக்கு திட்டலாம் வராதே வேணும்னா திட்டு வாங்குவான்னு சொல்லு நம்புறேன் என சிரிக்காமல் சொல்லிமுடிக்க

நாச்சியாரோ , மேய்க்குறது எரும இதுல என்ன பெரும என நொடித்தார் .

ஹாஹா ஏஞ்சல் உங்க அத்த டைமிங் காமடி பன்றாளாம் சிரிச்சிடுமா என விடாமல் ரவிச்சக்ரவர்த்தி கவுண்டர் அடிக்க , மித்ராளினியோ எங்கு தன் சிரிப்பில் மித்ரேந்தர் எழுத்துவிடுவானோ என அவனை ஒருகையால் ஆதுரமாய் தட்டிகொண்டே சிரித்துக்கொண்டிருந்வள் நாச்சியார் ஏதோ சொல்ல ஆரம்பிக்க , ரவிச்சக்கரவர்த்தியை காக்கும் பொருட்டு சித்ராங்கதாவிடம் ,

டாக்டர் வரலைனா என்ன நம்ப மட்டும் போயிட்டு வருவோமா என கேட்டாள்.

ஐய் எனக்கு அடுத்த கம்பெனி கிடைச்சாச்சு , ம்ம்ம் எங்க போலாம் ம்ம்ம் ஹான் ஈஏ (ea mall ) போலாமா .

ஏய்ய் சுப்பரே வாங்க போலாம் வாங்க - வேற யாரு ரவிச்சக்கரவர்த்தியே தான்.


அவரை தன் முறைப்பில் கிடப்பில் போட்ட நாச்சியாரோ , ஏண்டி அதுக்குலாம் நாங்க வரமுடியாது வேற எதுனா உருப்படியா சொல்லு.

மாம் அது ரொம்ப நல்லா இருக்கும் மோரெவர் நம்பள அங்க யாருக்கும் தெரியாது . வேற எந்த பெரிய மால் போனாலும் அண்ணனை யாருக்காவது தெரிஞ்சிற்கும் மாம் . நம்மளால ஜாலி ஆஹ் இருக்க முடியாது .

ஆண்ட்டி என அழைத்த மித்ராளினி , அதான் அவங்க ஆசைப்படறாங்களா அங்கயே போலாமே .

ஆமா நாச்சி அங்கயே போலாம் ...வேணும்னா நாங்க மூணு பேரும் மட்டும் போய்ட்டு வரோம் என அவர் தன்னை கிடப்பில் போட்டதை தூசியாய் தட்டிவிட்டு மீண்டும் ஆஜர் ஆனார் ரவிச்சக்கரவர்த்தி .

ஏதேது ....இவருக்கு இப்போ தான் இருபது வயசு . அங்க போயிட்டு வந்தப்பரும் நாச்சி இந்த கால் ரொம்ப வலிக்குதுன்னு சொல்லிட்டு வருவீங்கல அப்போ வசிக்கிறேன் என்றவர் தொடர்ந்து ,

சரி எல்லோரும் போய் கிளம்புங்க , இப்போ போனா தான் சாயந்திரம் சீக்கிரம் வரலாம் மித்துமா நீ வாடா நம்ப பாப்பாக்கு தேவையானதுலாம் எடுத்து வைப்போம் என எல்லோரையும் ஏவினார் .
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
எக்ஸ்பிரஸ் அவென்யு (Ea mall ) :

வந்தநொடி முதல் அவ்விடத்தை ஒரு வழி பண்ணிக்கொண்டிருந்தனர் சித்ராங்கதாவும் , ரவிச்சக்ரவர்த்தியும்.

மித்ராளினி மித்ரேந்தரை தன் தோளில் சாய்த்தவாறு அங்கு சுற்றியவள் , இங்கு ஏதேனும் தனக்கு பரிட்சியமாய் இருக்குமா என தன் நினைவடுக்குகளில் தேடிக்கொண்டிருந்தாள்.
நாச்சியார்தான் மித்ரேந்தரை மித்ராளினி வைத்து கொள்வதாய் சொல்ல அவளிடம் கொடுத்துவிட்டனர் சித்ராங்கதாவும் , ரவிச்சக்கரவர்த்தியும் செய்யும் அலும்புகளை கண்டு புலம்பிக் கொண்டேவந்தார் .

அம்மாடி மித்து இந்த மனுஷர பார்த்தியாடா இன்னும் எப்படி சேட்டை பண்ணிட்டு இருக்காருனு என அலுத்துக்கொண்டவரின் குரலிலோ காதலே விஞ்சியிருந்தது .

அனைத்தையும் ஒரு சிறு சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த மித்ராளினியோ , இத்தனை வயதிலும் குரலில் கூட இத்தனை காதலை காட்ட முடியுமா , அதுவும் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் வாரி கொண்டிருந்தாலும் இருவரின் கண்களிலும் குறும்பையும் மிஞ்சும் காதலையே கொண்டிருந்ததில் நாமும் இப்படி வாழ்வோமா என ஏங்கவே ஆரம்பித்திருந்தாள் .
அந்த எண்ணம் தோன்றும் பொழுதெல்லாம் காதோரம் கேட்க்கும் ராணிமா என்னும் குரலோ அந்த ஏக்கத்திற்கு மேலும் தூபம் போட்டவாறு இருந்தது .

ரொம்ப டயர்டாகி வந்த சக்கரவர்த்தியும் சித்திரங்கதாவும் ஒரு இடத்தில் அமர , நாச்சியார் தனது கச்சேரியை ஆரம்பித்தார்.

அதை காதில் வாங்காமல் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்த சித்திராங்கதாவின் கண்களில்பட்டான் , கருப்பு நிற ஜீன்ஸ் மற்றும் அதே கருப்பு நிற சட்டை அணிந்த சென்றுகொண்டிருந்த ஜிஷ்ணு.


ஐ நம்ம ஆளு என மனதினுள் குதித்தவள் ரவுடி பேபிக்கு இன்னிக்கு டூட்டி இல்லையா அடடா நல்ல சான்ஸ் ஆஹ் மிஸ் பண்ணிட்டியே என வெளிவந்த மனசாட்சியின் தலையில் குட்டி உள்ளே அனுப்பியவள் , முட்டாப்பசங்க தான் சான்ஸ்க்கு காத்திருப்பாங்க ...புத்திசாலிங்க சான்ஸ் அ தான உருவாகிப்பாங்க ...சித்து குட்டி சீக்கிரம் போய் உன் மைதாமாவை பிடி என சொல்லிக்கொண்டவள் வேகமாய் அவனின் பின் சென்றாள்.

மித்ராளினியோ எங்க போற என கேட்க ...

இங்க தான் இவங்க சண்டை முடிறதுக்குள்ள வந்துறுவேன் என சிட்டாய் பறந்தாள்.

வேகமாய் வந்தவள் ஜிஷ்ணுவை காணாமல் அதற்குள் எங்க போய்ட்டாரு என சுற்றுமுற்றும் தேடியவள் அங்கு ஜிஷ்ணு தனது கைகளில் ஒரு சட்டையை எடுத்துக்கொண்டு ட்ரையல் ரூம் நோக்கி செல்வதை பார்த்து வேகவேகமாய் சென்றாள்.
அதற்குள் அவன் உள்நுழைந்திருக்க ஏதோ ஒரு நினைவில் அவளும் நுழைந்தாள்.

எவரோ தன் பின்னால் நுழைந்ததை உணர்ந்த ஜிஷ்ணுவின் கைகள் தானாய் பாக்கெட்டில் இருக்கும் துப்பாக்கியைத் தொட அதை உணர்ந்த சித்ராங்கதா , சொப்பாஆ அவனின் கைகளின் மேல் தன் கைகளை வைத்து தடுத்து ...எப்ப பார்த்தாலும் கை துப்பிக்கிட்டையே போகுதே உங்கள் வச்சிக்கிட்டு நான் என்னத பண்ண போறனோ.

சித்ராங்கதாவின் குரலில் தானாய் சிரிப்பு உதட்டில் ஒட்டிக்கொள்ள அவளின் பழைய ஜிஷ்ணுவாய் குரலில் குறும்பு கொப்பளிக்க , வச்சிக்க கஷ்ட்டமா இருந்தா கட்டிக்கோ பேபி என்றிருந்தான்.

நீண்டநாட்களுக்கு பின்னான அவளவனின் பேச்சில் வாயில் கொசு போனால் கூட தெரியாதவாறு திறந்து வைத்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ராங்கதா .

ஆமா பேபி நீங்க எதுக்கு ட்ரையல் ரூம் வந்திங்க என கேட்டவாறே அவளிடம் நெருங்க நெருங்க தனது சட்டைப் பொத்தான்களை ஒவ்வொன்றாக கழட்ட ஆரம்பித்தான்.

சித்ரங்கதா அவன் இந்தத் தொடர் தாக்குதலில் திகைத்து விழித்தவள் , அச்சோ அறிவுகெட்டவளே போயும் போயும் இப்படியா அவர் பின்னடியே வந்து மாட்டுவ என மானசீகமாய் கொட்டிக்கொண்டவள் என்ன செய்வது என தெரியாமல் திருதிருவென்று முழித்தாள்.

அவனோ இன்னும் அருகில் நெருங்கிருக்க இவ்வளவு நெருக்கத்தில் பயந்தவள் கண்களை இறுக்கமாய் மூடி கொள்ள அவளின் காதோரம் நெருங்கியவன் , பேபி கண்ண திற என்றான் காற்றாகிப்போன குரலில்.

அவளோ இடம்வலமாய் தலையசைக்க , சரி எனக்கு ஓகே எவ்வளவு நேரமானாலும் உன்ன இப்படி பார்த்துட்டே இருப்பேன் பட் வெளில இருந்து யார்னா கதவை தட்டுனா என்ன பண்றது .

அவனின் பேச்சில் வேகமாய் கைகளை அடுத்தவளின் முன் அவளை மயக்கும் சிரிப்புடன் நின்றிருந்தான் ஜிஷ்ணு வேறொரு சட்டையில்.

இதுதான் இந்த விளையாட்டுத்தனத்தை தான் ஜிஷ்ணுவிடம் காணாமல் இத்தனைநாள் வாடியிருந்தாள் சித்ராங்கதா . ஜிஷ்ணு அழுத்தக்காரனாய் அவனின் செயல்கள் அதிரடியாய் இருந்தாலும் ஏனோ அவன் சித்ராங்கதாவிடம் மட்டும் தன் விளையாட்டுதனத்தை மொத்தமாய் கட்டவிழுத்துவிட்டிருந்தான் . அவனின் துறையில் அனைவரும் அவனை கண்டு பதற இவளோ அவனை விளையாட்டு பொம்மையாக்கினாள்.

ஜிஷ்ணுவிற்கே அது ஆச்சர்யம் தான் , தான் இன்னும் ஒருமுறை கூட தன் காதலை இவளிடம் சொல்லவில்லை அப்றம் எப்படி இவகிட்ட மட்டும் இவ்வளவு உரிமையா பழகுறோம் என ஒவ்வொருமுறையும் தன்னைத்தானே கேட்க்கிறான் அன்றும் , இன்றும் .


இந்தக் காதல்தான் விந்தையிலும் விந்தையோ !!!

விளையாட்டாய் இருப்பவனோ காதலில் மிக மிக அழுத்தமாய்...

அழுத்தமாய் இருப்பவனோ காதலில் மிக மிக விளையாட்டாய் ...

முரண்பாடுகள் தான் காதலோ ...
இல்லை
காதலே முரண்பாடுகளால் கட்டமைக்கபட்டது தானோ????


இவர்களின் இத்தகைய முரண்பாடே இவர்களின் காதலுக்கு எதிரியாய் மாறுமோ ....


-கரைவாள்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top