• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நினைவில் தத்தளிக்கும் நேசமது 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
நினைவில் தத்தளிக்கும் நேசமது 20

பிப்ரவரி 16 :

ஒவ்வொருமுறை தன் காதலை பூமிஅழகி நிராகரிக்கும்போதும் வலியுடன் மரித்துபோகும் ஆதவன் , தான் கொண்ட காதலில் தளராமல் மீண்டுமாய் தன்னவளை தேடி ஆர்பாட்டமாய் வெளிவரும் காலை பொழுது .

பலபல காதல்களையும் , சந்தேகங்களையும் , வலிகளையும் , அழுகைகளையும் தாங்கியவாறு இந்த நாள் முடிய விருப்பது அறியாமல் அறுவரும் ( நினைவு + உணர்வு +உயிர் அலையில் தத்தளிப்பவர்கள் ) அந்த விடியலை மகிழ்ச்சியுடன் வரவேற்தனர் .

விஷ்வேந்தரும் , ஜிஷ்ணுவும் தத்தம் காதலியின் வருகைக்காக தயாராக ,
ஷாலினியும் , சித்ராங்கதாவும் அவரவர் காதலரை பார்க்க கிளம்பினர் .


அழகிய பொம்மையாய் ரோஜா வண்ண சுடிதாரில் சித்ராங்கதா இறங்கி வர , அவளை பார்த்த விஷ்வேந்தர் , என்னடி குளிச்சியா கொஞ்சம் அழகா இருக்குற .

டேய் ஒருவாரமா ஒரே பேண்ட்டை துவைக்காம போட்ற அழுக்குமூட்டை நீ என்னை சொல்றியா ?

ஹீஹீ இப்படி கம்பெனி சீக்ரெட்லாம் வெளிய சொல்லகூடாது என அவன் அசடுவழிய ,அவனை காரித்துப்புவது போல் பார்த்தாள் சித்ராங்கதா .

விடு..விடு... மொதல்ல கிளம்புங்க. இதோ ஏஞ்சலும் வந்தாச்சு என சித்ராங்கதாவிடம் சொல்லியவன் , ஹாஹா இது என்ன எப்பவும் நீ மித்ரேந்தர தூக்கிட்டே திரியுற என மித்ராளினியிடம் கேட்டான் .

தூயவெள்ளை நிறத்தில் ஆங்காங்கே சிகப்பு வண்ண பூக்கள் பதித்த சுடிதாரில் , மித்ரேந்தரை வாகாய் அணைத்தார்ப்போல் தூக்கிவந்தவளை பார்க்க அத்தனை பாந்தமாய் இருந்தது .

விஷ்வாவின் கேள்விக்கு சட்டென்று , என் கை நா தூக்குறன் உனக்கென்ன என கேட்டவள் கேட்டபின்பே என்ன நினைப்பார்களோ என திருதிருவென முழித்தாள்.

விஷ்வா , ஹாஹா நம்ப உண்மையான ஏஞ்சல் வெளிய வராங்க டோய் என சிரிக்க ,

அது... ஆண்ட்டி சாவித்ரி ஆன்டியை பார்க்க போயிருக்காங்க , ரவி அங்கிளும் சீக்கிரமே கிளம்பிட்டாங்க , நான் தான் குட்டி என்கிட்டவே இருக்கட்டும்னு சொல்லிட்டேன் என்றாள் .

சரி சரி நீங்க இப்போ கிளம்புனா தான் சரியா இருக்கும் கிளம்புங்க , ஏய் குரங்குக்குட்டி என்ன அமைதியா நிக்குற ? நான் சொன்னது நியாபகம் இருக்குல்ல வீட்டுக்கு கிளம்புறதுக்கு முன்னாடி எனக்கு கால் பண்ணு நான் வந்து கூட்டிட்டு வரேன் , இப்போ முருகன் அண்ணா வண்டிஓட்டுவாரு.

கொஞ்சம் வாய மூடு ,இந்த ஷாலினி எரும சரியா தான் சொல்லிருக்கா . உன் அண்ணன் வாய திறந்தா மூட மாட்டான்னு . சரி இப்போ நாம எங்க போறோம் அதுவும் நீ வரல போல என அவனிடம் வாய் கேட்டாலும் , மனமோ என் ரவுடி பேபியே ஏதோ அதிசயமா பார்க்கனுன்னு சொல்லிருக்கான் ...அதுலயும் இந்த பக்கி மண்ணை போட பாக்குறானே என புலம்பியது .

என்னடி! நேத்து நைட் தான ஏஞ்சல் கூட கோவிலுக்கு போய்ட்டு வா னு சொன்னேன், நீயும் மண்டைய மண்டைய ஆட்னியே .

அச்சச்சோ ,இதைத்தான் இவன் சொன்னானா இப்போ வரமுடியாது சொன்னாலும் கேள்வி கேட்டு கொல்லுவானே .இவங்க வேற அம்சமா கிளம்பிருக்காங்க, என்னபண்ணலாம்? என யோசிக்க , பேசாம இப்போ போயிட்டு பாதில கிளம்பிடலாம் , இவங்களுக்கு வழி தெரிஞ்சிருக்காதுனு தான் நம்பள அனுப்புறான் என மனசாட்சி ஐடியா குடுக்க அதற்க்கு கை கொடுத்து பாராட்டி உள்ளே அனுப்பியவள் ,

ஹான் ஆமா..ஆமா ..ஹீஹீ காது தவறி கேட்டுட்டேன் போல என சமாளிப்பதாய் நினைத்து உளறினாள் .

என்னது ! அது வாய் தவறி சொல்லிட்டேன்னு தான வரும் என்றான் விஷ்வா சந்தேகமாய் .

அவனிடமிருந்து தப்பிக்க ,எப்பப்பாரு கேள்விக்கேட்குறதே வேலையா வச்சிக்கிட்டு , நீங்க வாங்க நம்ப போவோம் நேரம் ஆகுது என மித்ராளினி வருகிறாளா என்றுகூட பார்க்காமல் வேகமாய் வெளியே சென்றாள் .
***************************************************************************


காலை 8மணி :

அத்தான் இது விஷ்வா தான என ஷாலினி கத்த , ஜித்தேந்தர் எதுவும் சொல்லாமல் அமைதியாய் பார்த்தான் .

அவனின் பார்வையில் , இது நம்ப விஷ்வா அத்தானே தான் ..லூசு மாதிரி கேள்வி கேக்குறானு பாக்குறாரோ ?? என எண்ணியவள் வெளியே , ஹீஹீ சின்னத்தான் போட்டோ இங்க எப்படிஎன கேட்டு அசடு வழிந்தாள்.

அதற்கு அவன் பதில் சொல்வதற்குள் ,
அண்ணா நீங்களா ...வாட் எ சப்ரைஸ் ...என வேகமாய் வந்து ஜித்தேந்தரை அணைத்துக்கொண்டான் சஞ்சீவ் .


இது யாரு புது என்ட்ரி என ஷாலினி புருவம் சுருக்க ,

ஹலோ சஞ்சீவ் , எப்படி இருக்க ? பிரகாஷ் எப்படி இருக்கான் .

எங்களுக்கு என்னன்ணா எல்லோரும் நல்லா இருக்கோம் .நீங்க வீட்டுக்கு வந்திருக்கலாமே ணா .

அது சஞ்சீவ் ! நாங்க ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி தெரிஞ்சிக்க தான் இங்க வந்திருக்கோம் அத இங்க பேசினா தான் சரியாஇருக்கும் .அப்றம் இவங்க ஷாலினி என்று அவனிடம் சொல்லியவன் ஷாலினியிடம் ,
ஷாலினி ! இவர் சஞ்சீவ் இந்த ஹாஸ்பிடலோட சேர்மன் , இவர் தம்பி பிரகாஷும் நம்ப விஷ்வாவும் ப்ரெண்ட்ஸ் என்று அறிமுகப்படுத்தினான்.


ஷாலினியா ....என அவளை அதிர்ச்சியாய் பார்த்த சஞ்சீவ் நம்ப விஷ்வா ...என ஆரம்பிக்க பார்வையாலே ஜித்தேந்தர் அவனை தடுத்ததில் அமைதியானான்.

இந்த பம்பரவாயன் என்ன சொல்ல வந்தான் இப்டி அத்தானை பார்த்து திருட்டுமுழி முழிக்கிறான் என ஷாலினி யோசிக்க ,

அதை கவனித்த ஜித்தேந்தர் நம்ப வந்த விஷயத்தை பேச ஆரம்பிக்கலாமா என்றான்.

ஹான் சொல்லுங்கணா , அதுக்குமுன்னாடி நம்ப வெளிய போய் எதுனா சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம் என சஞ்சீவ் சொல்ல,

அப்பாடி ! இப்பவாவது வந்தவங்களுக்கு சாப்பிட எதுனா கொடுப்போம்னு தோணுச்சே .டேய் பம்பர வாயா இதுக்காகவே இந்த ஷாலினி, உன்ன பொழச்சிப்போன்னு விடுறேன் டா என அவனுக்கு பதிலை மனதிற்குள் பேசிக்கொண்டிருந்தாள் .

ஜித்தேந்திரோ , இல்ல சஞ்சீவ் , அதுக்குலாம் இப்போ டைம் இல்ல .இது ரொம்ப முக்கியமான விஷயம் என சொல்ல,

இதற்கும் ஷாலினி , "சோறு போச்சா " என மனதிற்குள் கவுண்டர் கொடுத்தாலும் , இது ஜித்தேந்தரின் வாழ்க்கை சம்பந்தபட்டது என அமைதியாய் கவனிக்க ஆரம்பித்தாள் .

சஞ்சீவ் ! போன ஆகஸ்ட் 18 மம் தேதி இந்ன் ஹாஸ்ப்பிட்டல அட்மிட் ஆன பேஷண்ட்ஸோட லிஸ்ட் எனக்கு வேணும் என ஜித்தேந்தர் கேட்க ,

ஆகஸ்ட் 18 ஆ ??? அண்ணா நான் நினைக்கிறது சரினா நீங்க " ராணி" அக்காவ பத்தியா கேக்குறீங்க ?

அவனின் கேள்வியில் , இவர் அத்தானோட " ராணிமா "வையா சொல்றாரு என வியந்தவள் , ஜித்தேந்தரை பார்க்க

அவனோ வழக்கம்போல் உணர்ச்சிகள் அற்ற முகத்துடன் அமர்ந்திருந்தான்.

அவனது முகம் உணர்வுகளை தொலைத்திருந்தாலும் , மனமது அவனின் ராணிமாவை சுற்றி சுழல சஞ்சீவின் கேள்விக்கு ஆம் என தலையசைத்தான் .

ஓஹ் ! விஷ்வாவும் பிரகாஷும் தான் அவங்கள இங்க கொண்டுவந்து சேர்த்தாங்கணா . எவ்வளவு ட்ரீட்மெண்ட் கொடுத்தும் அவங்களோட நிலைமை ரொம்ப கிரிடிக்கல்லா இருந்ததுனால கிட்டத்தட்ட ரெண்டு மாசம் இங்க கோமா ஸ்டேஜ்ல தான் இருந்தாங்க .

அவன்சொல்ல சொல்ல , ஜித்தேந்தரின் மனம் குற்றவுணர்வில் " என்னை மன்னிச்சுடுடாமா நான் இருந்தும் உன்னை இப்டி தனியா கஷ்டபடவிட்டுடனே " என கதறி துடித்தது .

தான் சொல்லி முடித்த பின்பே ஜித்தேந்தரை கவனித்த சஞ்சீவ் , அண்ணாவோட முகம் ஏன் இவ்ளோ கசங்கி போயிருக்கு ? அப்போ ....ராணி அக்காவ அண்ணனுக்கு தெரியுமா ...அப்போ அந்த விஷயமும் அண்ணாக்கு தெரியுமா என சஞ்சீவ் யோசிக்க ,(அது என்னனு அப்றம் பார்ப்போம் டியர்ஸ் ).

ஷாலினியோ , இதுவரை கம்பீரமாகவே பார்த்து வந்த அத்தானை இரண்டாம் முறையாய் கலங்கி போய் பார்த்ததில் அவளின் கண்களும் கலங்கியது .

இவர்களின் நிலையை கவனிக்காமல் கண்களை மூடி கொண்டிருந்த ஜித்தேந்தர் , இப்போ ராணிமா எங்க ?? என கேட்டான் . உள்ளுக்குள் அத்தனை கலங்கியிருந்தாலும் அவனின் குரலில் கலக்கமோ தடுமாற்றமோ எதுவும் இல்லாமல் வெறுமையாய் இருந்தது .

அண்ணா !அப்போ அந்த விஷயமா தான் வந்திங்களா ?? அப்படினா நீங்க இங்க வந்திருக்க வேண்டிய அவசியமே இல்ல . ஏன்னா விடை அங்க தான் இருக்கு என்றான்.

இப்பொழுதும் ஜித்தேந்தர் கண்களை திறக்கவில்லை ,

ஷாலினிக்கு அவன் சொல்வது புரியாமல் , நீங்க என்ன சொல்ல வரீங்க மிஸ்டர் .சஞ்சீவ் என கேட்க ,
அவன் பதில் சொல்வதற்கு முன்பே ஜித்தேந்தர் , " விஷ்வா " என்றிருந்தான் .


விஷ்வா - வா என ஷாலினி இவர் என்ன சொல்கிறார் குழப்பத்துடன் என சஞ்சீவை பார்க்க அவன் "ஆம்" என தலையசைத்தவன் ,

ரெண்டு மாசமா அவங்ககிட்ட எந்தவித முன்னேற்றமும் இல்லாம இருக்க அப்போ அவங்கள பார்க்க வந்த விஷ்வா, அவங்கள தன்னோட ஹாஸ்ப்பிட்டல்க்கு கூட்டிட்டு போய் பாத்துக்க போறதா சொன்னான் . இதே வேற யாராவது கேட்டிருந்தா நிச்சயம் ஒத்துக்கிட்டிருந்திருக்க மாட்டேன் . அவன் என்கிறதுனால ஒத்துக்கிட்டேன் அதுவும் "ராணி " அக்காவுக்காக தான் .

ஏனோ அவன் இறுதியாய் சொன்னது பாதி தான் என ஷாலினியின் துப்பறியும் மூளை சொன்னாலும் , இப்பொழுது ஜித்தேந்தரின் அருகில் எதுவும் கேட்கமுடியாமல் இருந்தாள் .

இத்தனை நேரம் கண்களை மூடி இருந்த ஜித்தேந்தர் தனது கண்ணாடியை அணிந்தவன் , ஓகே சஞ்சீவ் அப்போ நாங்க கிளம்புறோம் & உன் நேரத்தை வீணாக்கியதற்க்கு சாரி என்றான் .

அச்சோ அண்ணா என்ன நீங்க . ஓகே அண்ணா இப்போ நீங்க உடனே கிளம்பனும்னு புரியுது , நாங்க ஒருநாள் வீட்டுக்கு வரோம்ணா .

சரிஎன தலையசைத்து வேகமாய் நடக்க , அவனை தொடர்ந்து ஷாலினியும் விடைபெற்றுகிளம்பினாள்.
***************************************************************************


காலை 9 மணி :

மித்து அது ..என் பிரிண்ட் வர சொல்லிருந்தா . நான் உங்களையும், குட்டியையும் கோவில்ல விட்டுட்டு போயிட்டு வந்துர்றேன் . நான் வரவரைக்கும் அங்கையே இருங்க நான் வந்தப்பரும் விஷ்வாக்கு கூப்டுக்கலாம் சரியா என சித்ராங்கதா , மித்ராளினியிடம் சொன்னாள் .

சரி என்று பதிலுக்கு மித்ராளினி தலையசைத்து விட்டு மித்ரேந்தரை கவனிக்க ஆரம்பிக்க ,

ஏன் மித்து ! நீங்க ரொம்ப அமைதியோ .எப்பவும் ஒன்று ரெண்டு வார்த்தை தான் பேசுறீங்க இல்லனா தலையசைக்குறிங்க .ஆனா காலையில விஷ்வா கிட்ட பேசுனத பார்த்தா அப்டி தெரிலையே,

அவளின் கேள்விக்கு புன்னைகைத்த மித்ராளினி , ம்ம்ம் எனக்குமே இப்டி அமைதியா இருக்கிறது ஏதோ மாதிரி தான் இருக்கு . ஜிணு கூட சொன்னான் "நீ சரியான வாயாடி " னு .இப்போ மறந்ததுனால இப்படி இருக்கன்னு நினைக்குறேன் .

ஜிணு - வா ? அது யாரு மித்து ? நேத்து கூட அந்த மால்ல யாரையோ பார்த்தீங்கன்னு சொன்னிங்களே அவங்களா ?

ம்ம்ம் ஆமா ..அவங்கள தான் எனக்கு நியாபகம் இருக்கு ஒருவேளை சின்ன வயசுல இருந்தே எனக்கு அவன் அவனுக்கு நான்- னு கூடவே வளர்ந்ததுனால இருக்குமோ என அவளுக்கு தோன்றிய கேள்வியையே சித்ராங்கதாவிற்கு பதிலாய் சொன்னாள்.

அவள் சொல்லியதோ சிறுவயது முதல் தங்கள் இவருக்கான நட்பில் எவரையும் இடையில் கொண்டுவராமல் இருவர் மட்டுமாய் இருந்ததை ,
சித்ராங்கதா புரிந்துகொண்டதோ , அவர்கள் இருவரும் காதலர்கள் போல் என்று .
***************************************************************************
 




Last edited:

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
காலை 11.00மணி

என்ன சின்னமருமகனே, வெளிய எதாவது பூகம்பம் வருதா என்ன அதிசயமா பாப்பா இல்லாதப்ப வந்திருக்கீங்க ?? என கேலியாய் விஷ்வாவிடம் கேட்டுக்கொண்டே வந்தார் சாவித்திரி .

அத்தை நீங்களா ?? அம்மா உங்கள பார்க்கவரதா சொல்லியிருந்தாங்க , ரெண்டு பேரும் வெளிய எங்கையும் போலையா.

இல்லடா நாங்க போகவேண்டிய இடத்துல 11.30 மணிக்கு வாங்க சொல்லிட்டாங்க அதான் இங்கையே இருந்துட்டோம் என சொல்லிக்கொண்டு அங்கு நாச்சியார் வந்தார் .

ஓஒ ...மணி இப்பவே 11.00ஆகுதே கிளம்புங்க அப்போ தான சரியா இருக்கும் .

யாருக்கு டா சரியா இருக்கும்னு சொல்ற .ஆமா இந்த நேரத்துக்கு நீ ஹாஸ்ப்பிட்டல்ல தான இருந்துருக்கணும் என்கிறார் சந்தேகமாய் .

ஆமா சின்னமருமகனே, இங்க என்ன பண்றீங்க? அதுவும் எப்பவும் வர உங்க அந்த எருமமாடு வண்டில வராம கார்ல வந்தமாதிரி சத்தம் கேட்டுச்சு .

ஹீஹீ அது ஒண்ணுமில்லை அத்த ...பைக் பஞ்சர் என ஆரம்பிக்க நாச்சியார் கண்களை உருட்ட ஆரம்பித்ததில் , பட்டென்று இருவரின் கால்களிலும் விழுந்தவன் ,

"எனக்கு சோறுபோட்டு வளர்த்த என் ஆத்தா ,சோறு மட்டுமில்லாம பலகாரமா செஞ்சுபோட்ட என் பாச அத்தை ரெண்டு பேரும் இந்த பச்சை பிள்ளைமேல கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா . பிளான் சக்ஸஸ் ஆனா ரெண்டு பேருக்கும் 50 லட்சத்துல புடவை வாங்கி குடுத்துறேன் இந்த அடியேனை இப்போ விட்டுடுங்களேன் " என அவன் பாட்டிற்கு கெஞ்சிக்கொண்டிருக்க ,

நாச்சியாருக்கு கண்ணை காட்டிவிட்டு மெதுவாய் வெளியே கூட்டி சென்ற சாவித்திரி ,
சின்னமருமகனே அங்க என்ன சோபாவோட காலை பிடிச்சிக்கிட்டு இருக்கீங்க நாங்க கிளம்புறோம் , நீங்களும் சீக்கிரம் கிளம்பிடுங்க என கத்திவிட்டு சென்றார் .


சோபா காலா என நிமிர்ந்தவன் அத்தையின் விளையாட்டில் சிரித்துகொண்டே , ஷாலினியின் அறைநோக்கி சென்றான் .

பாருடா நம்ப குட்டச்சி ரூம்மை இவ்ளோ அழகா வச்சிருக்கா .இங்க பாருடா இவ கூட போட்டோவுல அழகா இருக்கா , ஒருவேளை க்ராபிக்ஸ் ஆஹ் இருக்குமோ என கிண்டலாய் நினைக்க ,

ஓஒ !அவ அழகா இல்லாம தான் சார் பல வருஷமா அவங்க மேல பைத்தியமா திரிஞ்சி்ங்களோ என முறைக்க ,

சே சே ...இந்த மனசாட்சி கூட அந்த காத்தாயிக்கு தான் சப்போர்ட் பண்ணுது என்றவன் தான் வாங்கி வந்தவற்றை காரிலிருந்து எடுத்துவந்தவன், தான் நினைத்தது போல் அவ்வறையை மாற்றினான் .

கடைசியாய் ஒருமுறை எல்லாம் சரியாய் இருக்கிறதா என பார்த்துகொண்டே வந்தவனின் காலில் ஏதோ இடர , விழுந்தவனின் கையில் கிடைத்தது அப்பொருள் .

அது ஒரு போட்டோ ...மித்ராளினியை அணைத்தார்போல் விஷ்வேந்தர் தூக்கிகொண்டிருப்பது போல் இருந்த புகைபடம் அது .அன்று அதை ஷாலினி சரியாய் வைக்காமல் போக கீழே விழுந்திருந்ததே இப்பொழுது விஷ்வாவின் கையில் கிடைத்திருந்தது .
***************************************************************************


இந்த விஷ்வா சரியான லூசு அத்தான் ...எப்பப்பாரு ஏஞ்சல் ஏஞ்சல் னு சொன்னாரே பேர சொன்னாரா ?? என விஷ்வாவை அந்த ஹாஸ்ப்பிட்டலிருந்து வெளிவந்ததில் இருந்து திட்டஆரம்பித்தவள் இப்பொழுது சென்னை செல்வதற்க்காய் ஏர்போர்ட்ல் இருக்கும் நொடி வரை திட்டிக்கொண்டிருந்தாள்.

இத்தனை நாள் இவர்கள் அருகிலே அவள் இருந்திருக்க எங்கெங்கோ தேடிக்கொண்டிருந்த எரிச்சலில் இருந்தாள் அவள் .

இத்தனை நேரம் அவளின் பேச்சை கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்த ஜித்தேந்தர் , விஷ்வா ஏஞ்சல் னு சொன்னானா ? என கேட்டான்.

ஆமா அத்தான் அந்த பக்கி எப்பவும் அப்படி தான் சொல்லும் இப்போ போன வேற எடுக்க மாட்டிக்கிறான் என்றவள் சொல்லியபின்பே விஷ்வாவை மரியாதையின்றி சொல்லியதை எண்ணி நாக்கை கடித்தாள் .

ம்ம்ம்ம் என்கிட்ட மட்டும் பேர சொல்லிருந்தான்னா எப்பவோ உங்கள சேர்த்துவச்சிருப்பேன் . அத்தான் உங்களுக்கு விஷ்வா மேல கோபம் இல்லையா ? இத்தனை நாளா நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பிங்க ஆனா அவங்க உங்க பக்கத்துலையே இருந்துக்காங்களே , எல்லாம் இவனால என மீண்டும் விஷ்வாவை வறுக்க ஆரம்பித்தாள் சிறிது நேரத்தில் தான் உடையப்போவதை அறியாமல் .( ஏங்க அந்த குறும்படம் இருந்தா கொஞ்சம் போடுங்க .இந்த பொண்ணுகிட்ட ஜிஷ்ணு மித்ராளினிய அறிமுகப்படுத்திவச்சான்ங்க .இது பயபுள்ள மறந்துட்டு பேசுற பேச்சை பாரு ).

"இத்தனை நாள் நீ என் பக்கத்துலையே தான் இருந்தியாடாமா ? நான்தான் உன்னை கண்டுபிடிக்கலையா ? அப்போ நான் கிளம்புறதுக்கு முன்னாடி நாள் உன்னதான் கூட்டிட்டுவரபோறாதா சொன்னனா ? அப்போ அன்னிக்கு நீ நம்ப வீட்லையே இருந்துருக்க ஆனா எனக்கு எதுவும் தெரில ஏன்டாமா ? உன்ன தனியா கஷ்டப்பட விட்டுட்டேன்னு இந்த பாவா மேல கோபமா "என ஜித்தேந்தர் தனக்குள்ளே கேள்விகேட்டுக்கொண்டிருந்தான் .

அவனை கலைத்த ஷாலினி , அத்தான் நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலயே ? விஷ்வாமேல கோபமா ?

நான் எதுக்கு அவன் மேல கோபப்படணும் ? உண்மைய சொல்லனும்னா நான் அவனுக்கு நன்றி கூட சொல்ல கூடாது அவன் அவனோட கடமையை தான் செஞ்சிருக்கன் என்றவன் தொடர்ந்து ,

ம்ம்ம் ஒருவேளை அவன் என்கிட்டயும் ஏஞ்சல்னு சொல்லிருந்தாவது நான் கண்டுபிடிச்சிர்ப்பேன் என்று இதழ்களில் முதல்முறையாக சிரிப்பை நெளியவிட்டவன் " என் ராணிமாவை தவிர வேற யாரு அவனுக்கு ஏஞ்சலா இருக்க முடியும்" என்றான் .
*******************************************************************************************


இங்கு விஷ்வாவோ அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துவிட்டான் . சற்று தள்ளி ஒரு கவரும் கிடைக்க அதில் இருந்த பெயரை கண்டவன் இது குட்டச்சியோட நண்பனோட பெயராச்சே ...அப்போ குட்டச்சி என்னை சந்தேகப்பட்டாளா என ஒரு மூளை கேள்வி எழுப்ப ,

இல்ல விஷ்வா ! அவ உன்னோட செல்ல குட்டச்சி , அவ உன்னை எப்பவும் சந்தேகப்படமாட்ட என அவனின் மனம் சொல்லியது .

சந்தேகபடாமையா இப்டி உன்னை போலோவ் பண்ணி படம் எடுக்க வைப்பா என மூளை தன் வாதத்தை முன்வைக்க ,

அதில உன்னோட நிறைய படம் இருக்கு விஷ்வா .உன் குட்டச்சி உன்ன பார்க்கணும்ன்றதுக்காக கூட அத எடுக்க சொல்லி இருக்கலாம்ல என அவளின் மேல் காதல் மனம் சரியாய் கணிக்க ,

அந்த பொய்யான மனம் சொல்றத நம்பாத , யோசி நேத்துகூட உனக்கு நா முக்கியமில்லை அவங்க தான் முக்கியம்னு உன்னை சந்தேகமாய் கேட்டா தான நீ தான் முட்டாள் சரியா புரிஞ்சிக்கல , என மூளை விடாமல் உசுப்பேற்ற ,

விஷ்வா உன் மனசால யோசி , உன் குட்டச்சி அப்படி பண்றவளா ? நேத்து அவ கேட்டது காதலுக்கே உரிய பொறாமைல தான் என மனமும் சத்தமிட ,

இரண்டும் மாறி மாறி பேசியதில் பைத்தியம் பிடிப்பதை போல் உணர்ந்தவன் , ஆஆஆ என தலையை பிடித்து கத்தினான் .

ஆயினும் தன் உணர்வுக்கு திரும்பமுடியாமல் தலைவலிப்பதை போல் இருக்க , மூளையில் அப்போ நடுவுல என்கிட்டே பேசாம போனதும் இந்த விஷயத்துனால தான, என தோன்ற தாங்கமுடியாமல் அங்கிருப்பவற்றை அனைத்தையும் உடைக்க ஆரம்பித்தான் .

ஒருகட்டத்தில் உடைப்பதற்கு ஒன்றுமில்லாம போக , இன்னும் தன் மனம் அமைதியாகததில் எங்கே மீண்டும் தான் ஒருவருடம் முன்பான நிலைக்கு சென்றுவிடுவோமோ என பயந்தவன் , அங்கிருந்து வேகமாய் கிளம்பினான் .

இத்தனை நேரம் ஷாலினி, விஷ்வாவிற்கு செய்த கால்கள் அனைத்தும் இணைக்கப்படாமல் இப்பொழுது இணைக்கப்பட்டது தான் விதியோ ??
சரியாய் அவன் வெளியே செல்லும் நொடியில் அவனின் மொபைல் அழைத்தது .


குட்டச்சி என திரையில் ஒளிர மீண்டும் அவனின் மூளையும் மனமும் இரண்டாய் பிரிந்து வாதிட ஆரம்பிக்க , அதை தடுப்பதற்காய் போனை எடுத்தான் .

அவன் எடுத்தவுடன் அந்தப்பக்கம் அவள் "ஏஞ்சல்" என ஆரம்பிக்க ,

அவளின் பேச்சில் குறுக்கிட்டவன் , நீ என்கிட்ட பேசாம இருந்ததுக்கு ஒரு போட்டோ தான் காரணமா என கேட்டான் .

அவனின் கேள்வியில் அதிர்ந்தவள் , ஏதோ சொல்ல வர மீண்டும் இடையிட்டவன் ,

என்மேல் சத்தியமா கேக்குறேன் , நீ என்கிட்ட பேசாம இருந்ததும் இந்த போட்டோ தான காரணம் ?

அவன் தன்மேல் சத்தியமிட்டதில் மனம் அதிர , போட்டோவும் ஒரு காரணம் தான் அத்தான் ஆனா என்றவளை தடுத்தவன் ,

அப்போ என்னோட காதலை சந்தேக பட உனக்கு ஒரு போட்டோ போதும்ல என்றவனின் குரலில் பேதத்தை உணர்ந்தவள் பேசுவதற்க்குள்ளாகவே ,

எத்தனையோ தடவ உங்ககிட்ட சொல்லிருக்கேன் மிஸ்,ஷாலினி வர்தன் , " நான் விளையாட்டா இருக்கலாம் என் காதல் எப்பவும் விளையாட்டு இல்லைனு " . ஆனா ஒரேஒரு போட்டோ எப்படிஎப்படி ஒரேஒரு போட்டோல மொத்தமும் முடிஞ்சிடிச்சி .
ம்ம்ம் ரைட் மிஸ்.ஷாலினிவர்தன் , நான் இன்னொரு விஷயமும் சொல்லிருப்பேன் " என்னிக்கு நம்ப காதல்ல சந்தேகம்னு அது தான் நம்ப காதலுக்கு கடைசி நாள் னு " இனிமே என் வாழ்க்கைலையே நீ வரக்கூடாது - என அவளை சிறிதும் பேசவிடாமல் போனை அணைத்தான்.


கண்ணீர் சிந்தும் கண்களை துடைத்துக்கொண்டே அவனின் எண்ணிற்கு மீண்டும் மீண்டுமாய் ஷாலினி முயற்சிக்க , அது எடுக்கப்படாமலே ஒலித்து நின்றது .

"ப்ளீஸ் எடுடா விஷ்வா , எனக்கு உன்கிட்ட பேசணும்டா .நான் எப்படிடா உன்னை சந்தேகப்படுவேன் "என புலம்பிகொண்டே அவள், அவனின் எண்ணிற்கு முயற்சித்துகொண்டே இருந்தாள் .

இங்கோ விஷ்வாவிற்கு தலைவெடிப்பது போல் இருந்தது , சிறுவயதுமுதல் மனதில் அவளை மட்டுமே வைத்து , பலப்பல இன்னல்களுக்கு பின் அவளிடம் காதலை சொல்லியிருக்க , இன்றும் அனைத்தும் பொய்த்துப்போனதாய் நினைத்து தன்னிலையில்லாமல் , தன் உயிர் அலை இன்று உயிரற்று போனதில் உணர்வற்று படிகளில் உருள அவனின் தலையின் ஓரம் துளியாய் ஆரம்பித்து வெளிவர ஆரம்பித்தது குருதி .

எவன் ஒருவன் மற்றவர்களை சிரிக்க வைத்து ரசிக்க வைக்கிறானோ...
அவனிற்கு வலியை மட்டுமே விடையாய் கொடுக்கும் காலம் ...
அது அவனிற்கு சொந்தமில்லை எனினும்...

இதயம் கேட்கும்
காதலுக்கு வேறெதையும்
கேட்டிட தெரியாது அன்பை
கேட்கும் காதலுக்கு சந்தேகம்
தாங்கிட முடியாது


காதல் ஒரு
ஆகாயம் அது என்றும்
வீழ்வது இல்லையடி
கண்ணீர் ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும்
இல்லையடி


கடலுக்குள்ளே மீன்
அழுதால் மீன் கண்ணீர்
வெளியே தெரியாதே
உன்னை மெல்ல நீ
உணர்ந்தால் உன் காதல்
என்றும் பிரியாதே


காதல் ஒரு
ஆகாயம் அது என்றும்
வீழ்வது இல்லையடி
கண்ணீர் ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும்
இல்லையடி


இதயம் கேட்கும்
காதலுக்கு வேறெதையும்
கேட்டிட தெரியாது அன்பை
கேட்கும் காதலுக்கு சந்தேகம்
தாங்கிட முடியாது


மேடும் பள்ளம்
இல்லாமல் ஒரு பாதை
இங்கு கிடையாது பிரிவும்
துயரம் இல்லாமல் ஒரு
காதலின் ஆழம் புரியாதே


காதல் ஒரு ஆகாயம்
அது என்றும் வீழ்வது
இல்லையடி கண்ணீர்
ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும்
இல்லையடி


இல்லையடி
இல்லையடி இல்லையடி
இல்லையடி இல்லையடி
ஓஹோ ஓஓ ஓஓ


- கரைவாள்...
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யமுனா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top