நினைவில் தத்தளிக்கும் நேசமது 22

Thoshi

Author
Author
#1
நினைவில் தத்தளிக்கும் நேசமது 22 :

குழப்பத்துடன் கோவிலில் இருந்து கிளம்பிய சித்ராங்கதா சிறிது நேர பயணத்தில் அந்த இடத்திற்கு வந்திருக்க, கதவை திறந்து செல்லும் பொழுதே டப்ப் என்ற ஓசை கேட்க அடுத்த நொடி இடது கையை கன்னத்தில் வைத்தவாறு முழித்தாள் .

"யாருடா அந்த பயபுள்ள... இப்படி அடிவாங்குவது. சத்தத்தை கேட்டதுக்கே எனக்கு காது கிழியுதே" என அடித்தவனை எட்டிப்பார்த்தாள்.

"ஆத்தாடி! இது நம்ம ரவுடி பேபி போல இருக்கே, எதுக்கும் கொஞ்சம் கிட்ட போய் பார்ப்போம் " என கால் எடுத்து வைத்தவள், அடுத்து அடுத்தவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்ததை பார்த்து விட்டு, "ரைட்டு! இனி டௌட்டே வேணாம் இது நம்ம ஆளு தான்.இவருக்கு போலீஸ் ட்ரைனிங்ல என்ன கத்துக் கொடுத்தாங்களோ இல்லையோ ஆனாவூனா துப்பாக்கிய தூக்க சொல்லிக்கொடுத்து இருக்காங்க போல" என மனதில் கவுண்டர் அடித்தாள்.

இத்தனை நேரம் மனதில் இருந்த குழப்பம் அனைத்தும் அவனை கண்ட நொடியில் கரைவதாய்
உணர்ந்தாள்.

அதன் பிறகு அவனை ஜொல்லியவாறு வாயிலிலேயே நின்று கொண்டிருக்க, சிறிது நேரம் பிறகு அதைக் கண்ட ஜிஷ்ணு சிரித்தவாறே அவளைக் கூட்டிச் சென்றான்.

அவனின் அதிரடியிலே மயங்கும் அவள், அவனின் அத்தி பூத்தார் போன்ற இவ்வசியம் செய்யும் சிரிப்பில் மொத்தமாய் சறுக்கினாள்.

எவ்வளவு நேரம் சென்றதோ ,அவளின் ரசிப்பை ரசித்தவன் "பேபி போதும்டி இது பப்ளிக் பிளேஸ் உன் மச்சான் ஒரு போலீஸ்னு மறந்துடாத" என்றான் .

அசடு வழிய, "ஏதோ பேசணும்னு சொன்னீங்க வந்து ஒரு மணி நேரம் ஆகுது" என சமாளித்த அவளுக்கு அப்பொழுதுதான் தான்கேட்க வேண்டியது எல்லாம் நினைவுக்கு வந்தன.

இத்தனை நேரம் அவளை ரசித்தவாறு அமர்ந்திருந்தவன், அவளின் கேள்வியில் காதலை சொல்லும் தருணம் வந்ததும் சிறிது படபடத்தான்.

"முதல்ல ....அது...எனக்கு ...நான் .. அதை எப்படி சொல்றதுன்னு எனக்கு " என இருபது பேரை ஒரே நேரத்தில் அசால்டாய் சமாளிப்பவன் காதலை சொல்ல தடுமாறினான்.

அவன் தடுமாற்றத்தில் அவன் சொல்ல வருவதை உணர்ந்தவள் அது சரிதானா என அறிவதற்கு இதற்கு முன் தனக்கு தோன்றிய கேள்விகளை தெளிவுபடுத்திக் கொள்ளலாம் எனத் தவறாக முடிவு எடுத்தாள்.

ஆழமூச்செடுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்ட ஜிஷ்ணு, "பேபி ...ஐ "என சொல்வதற்கும்

சித்ராங்கதா," நீங்க எனக்காகவா தினம் காலேஜ் வந்தீங்க" என கேட்டிருந்தாள்.

காதலை சொல்ல வந்தவன் அவளின் திடீர் கேள்வியை புரியாமல் பார்க்க,

அதை உணர்ந்த சித்ராங்கதா,"இல்லை, நீங்க போலீஸ்தான. போலீஸ்க்கு எப்பவும் வேலை இருக்கும்னு சொல்லுவாங்க. ஆனா, நீங்க எங்க காலேஜ் வாசலில் வாட்ச்மேன் வேலை தானே பார்த்தீங்க" என தனது கேள்வியை விளையாட்டாய் கேட்டவளின் மனமோ, "உன்னை பார்க்கத்தான் வந்தேன் பேபினு சொல்லுடா" என வேண்டியது.

ஜிஷ்ணு அனைவரிடமும் அழுத்தமாய் தன்னை காட்டிக் கொண்டாலும் அதை உடைத்து அவனை பாசமான தந்தையாகவும், அடம்பிடிக்கும் குழந்தையாகவும் மாற செய்தவள் மித்ராளினியே. அவளைத் தவிர வேறு ஒருவரிடம் அவன் அப்பரிமாணத்தை வெளிப்படுத்துவான் என்றால் அது சித்ராங்கதா மட்டுமே.

அவள் தன் கேள்வியை விளையாட்டாய் கேட்டிருக்க, இவனும் தன் காதலை சொல்லப் போகும் தருணத்தில் கொண்ட பரபரப்பில் அதை, அவளின் மனதின் வேண்டுதலை உணராமல் "பேபி அது நான் பாப்பாவ ட்ராப் பண்ண வந்தேன்டா... ஆஹாஹா.... அதுக்கு நீ என்ன வாட்ச்மேன் ஆகிட்டியா" என சிரித்தான்.

" பாப்பா...வா..." என சித்ராகதாவின் குரல் தந்தியடிக்க,

"ஹான் எப்பவும் வெளியே அப்படி சொல்லியே பழக்கம் ஆகிடுச்சு. ஆக்ஷுயலா நானே உன்கிட்ட அவளை அறிமுக படுத்தனும்னு நினைச்சேன் ஆனா அதுக்குள்ள என்னன்னவோ ஆகிடிச்சி ம்ம்ம்ம் ...அவ தான் என்னோட உயிர், என் தேவதை, சின்னதுல இருந்து எப்பவும் என்னோடவே இருக்கிறவ , இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் பேபி. உனக்கு கூட தெரிஞ்சு இருக்கும் உன் காலேஜ் தான, அவளை கூட்டிட்டு போறதுக்கும் விடுவதற்காகவும் தான் உன் காலேஜ்க்கு வருவேன் அண்ட் அதுனால தான உன்னையும் பார்த்தேன்" என இத்தனை நாளாய் பேசாததற்கும் சேர்த்து அவன் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக, எதிரிலிருந்தவள் சிறிது சிறிதாக உடைய ஆரம்பித்தாள்.

"அப்போ இவர் எனக்கானவர் இல்லையா ? அன்னிக்கு என்னை பார்க்கும் போது காதல் தெரிஞ்சுதே அது எனக்கானது இல்லையா ? இல்ல அது என் கற்பனையா ? நான் தான் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுகிட்டேனா? அப்போ... அப்போ...என் காதல் தப்பானதா?எனவும்...

இல்லை கீர்த்தி சொன்னமாதிரிலாம் இருக்காது ...ஆமா இருக்காது..இவர் என்னுடையவர், என்னோட ரவுடி பேபி தான்" என உள்ளுக்குள் ஒரு வாதத்தை நடத்திக் கொண்டிருந்தாள்.

சித்ராங்கதாவின் முகத்தை பார்த்த ஜிஷ்ணு தன் பேச்சை நிறுத்தி,"பேபி என்னாச்சுடா? ஏன் உன் முகம் இவ்வளவு வலியை காட்டுது" என பதறினான்.

"தான் சொல்லாமலே தன் முகம் பார்த்து வலியை உணரும் அவனை எண்ணி பெருமைப்படுவதா? இத்தனை நாள் போல் இல்லாமல் இடைவிடாமல் அவன் பேச அதில் சந்தோஷப்படுவதா? இல்லை தான் எண்ணியது அனைத்தும் பொய்யாய்ப் போக அவன் தனக்கு இல்லை என்பதில் அழுவதா" என எந்த உணர்ச்சியை வெளிப்படுத்துவது என அறியா பிள்ளையாய் கண்கள் கலங்க விழித்தாள்.

இவளின் முகம் காட்டும் உணர்வுதனில் அவனின் மனம் கசங்க எழுந்து அவளருகில் அமர்ந்து, "என்ன ஆச்சு பேபி ! சொல்லுடா "என கேட்க அந்த கேள்வி அவளின் காதில் விழவேயில்லை.

அவள் கவனம் முழுக்க டேபிளில் வைத்து இருந்த அவனின் தொலைபேசியின் ஒளியில் தெரிந்த எண்ணிலே இருந்தது.

ஜிஷ்ணு மொபைலை சைலன்டில் போட்டிருக்க, சத்தமில்லாததில் அவன் அதை கவனிக்காமல் இருக்க, அதற்குள் அவன் அலைபேசி மூன்று நான்கு முறை கிறுகிறுத்து அடங்கியது .

அதில் அவன் மித்ராளினிக்கு புதிதாய் வாங்கி கொடுத்த அலைபேசியின் எண் ஒலிக்க, திரையில் (என் உயிரானவள்)மித்துமா என இருந்தது .

அதை பார்க்க பார்க்க தன் காதல் ஒன்றுமில்லாததாய் தோன்ற, ஜிஷ்ணுவின் குரல் அவளின் செவியில் கேட்காமல் போக, சித்ராங்கதாவின் மனதின் குரல் அதிகமாய் கூக்குரலிட்டது .

"இவன் உனக்கானவன் இல்லை வேறுஒருவருக்கு சொந்தமானவன். நீ போ இங்கிருந்து . அவன் சித்ராங்கதாவிற்கானவன் இல்லை அவன் மித்ராளினியின் முறைமகன் " என சத்தமிட அதற்கு மேல் அதை கேட்க முடியாதவள், காதை பொத்தியவாறே " இல்லை... நீ... நீங்க... எனக்கு வேணாம்... எனக்கு... வேணாம்.." என கத்தினாள்.

அவள் திடீரென இவ்வாறு நடந்து கொண்டதில் ஜிஷ்ணு புரியாமல் அவளை பார்க்க, அவளோ "வேண்டாம் ..போங்க... போயிருங்க... நான் உங்களுக்கு ஒண்ணுமே இல்ல தானே போங்க" என கத்த,

அவன் " பேபி மா "என் அருகில் வர,

"வராதீங்கனு சொல்றேன்ல... போயிருங்க ...போங்க.."என அவள் கூச்சலிட்டதும் தான் அவனும் சுற்றுபுறம் உணர்ந்து பார்த்தான்.

அங்கிருந்த அனைவரும் இவர்களை வேடிக்கை பார்ப்பது அறிந்து சற்று இறுக்கமாய் உணர்ந்தவன், ஆயினும் காரணம் புரியவில்லை எனினும் கதறிக் கொண்டிருக்கும் தன்னவள் மட்டுமே முக்கியமாய் பட்டதில் முதலில் அவளை அமைதிப்படுத்த தண்ணீர் இருந்த கண்ணாடி தம்ளரை எடுத்துக் கொண்டு கதறி கொண்டிருப்பவளை, "பேபி" என அழைக்க,

தன் காதல் பொய்யாய் போனதாய் தப்பாய் புரிந்துகொண்டவள் அதன் கனத்தை தாங்கமுடியாததால் சரியாய் யோசிக்கமுடியாமல் போக, பாய்ந்து அவன் சட்டையை இரு கைகளாலும் பற்றி," ஏன் மச்சான் இப்படி சொன்னீங்க? அப்போ நீங்க எனக்காக வரலையா? அப்போ நான் உங்களுக்கு முக்கியம் இல்லையா? என மீண்டும் மீண்டும் அதையே கேட்டவாறு இருந்தாள்.

அப்பொழுதுதான் சிக்கலின் நுனியை கண்டுகொண்ட ஜிஷ்ணு, "இல்ல டா பேபி "என ஆரம்பிக்க,

அவனை பேசவிடாமல்," வேணாம் நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். உங்க உயிரானவங்ககிட்டயே போங்க. அவங்க தான உங்களுக்கு முக்கியம்ல போயிடுங்க" என கத்த இவ்வளவு நேரம் காதலர்களின் சண்டையை சுவாரஸ்யமாய் பார்த்தவர்கள் இப்போது இன்னும் ஆர்வமாய் பார்க்க,

ஏற்கனவே இந்நிலையில் சிறிது இறுக்கமடைந்திருந்தவன் சித்ராங்கதாவின் தற்போதைய பேச்சில் இன்னும் இறுக கோபத்தை அடக்கும் வழி அறியாமல் கையில் இருந்த கண்ணாடி தம்ளரை கைகளால் இறுக்கி உடைத்தான் .

உடைத்த பின்பும் கோபம் அடங்காமல் போக மேலும் கைகளை இறுக்க உடைந்த கண்ணாடித் துண்டுகள் அவனின் கையை கிழித்து , ரத்தம் வேகவேகமாய் அத்துண்டுகளை அலங்கரித்தது.

இதை கண்டு சித்ராங்கதா பதறி அருகில் வர, இப்பொழுது அவன் விலகியவாறு அவளை நோக்கி இடதுபுற உதடு வளைய சிரித்தான்.

அவனின் சிரிப்பினை புரியாமல் அவள் பார்க்க , "என்னோட யோசனை சரினா.. நீ இதுவரைக்கும் என்னையும் அவளையும் சேர்த்து கூட பார்த்திருக்க மாட்ட. நான் இப்போ சொல்லலைன்னா உனக்கு இது சரியாக கூட தெரிஞ்சு இருக்காது . நான் அவளை எப்படி பாக்குறேன்... இனிமே இப்படி பார்ப்பேன்... அவ என்ன எப்படி பார்த்தா... இது எதுவும் தெரியாது. ஏன் இப்ப நான் உன் கிட்ட சொல்ல வருவதை கூட நீ முழுசா கேட்கல. ஆனா அதுக்குள்ள சந்தேகம் ....நைஸ்... சூப்பர்... பென்டாஸ்டிக்" என ரத்தம் கசியும் கையையும் பொருட்படுத்தாமல் கை தட்டினான்.

அவனின் உரத்த கேள்வியில் தவறு செய்த குழந்தையாய் அவள் திருத்திருக்க , அந்நிலையிலும் அவளை அள்ளி அணைத்திடவே அவன் நெஞ்சம் விரும்பியது.

எப்படி ஆரம்பித்தது இந்த நாள்.. தன் காதலைச் சொல்லி அவளுடன் எப்படி எல்லாம் பேச வேண்டும் என எத்தனை முறை சிந்தித்து தனக்கு தானே சிரித்த நொடிகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தவனிற்கு அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் போக விலகியவன் அவளை திரும்பி பார்க்கவேண்டுமென தோன்றிய உணர்வில் மறுபடியும் வந்தவன் அங்கிருந்த அலைபேசியை கண்டு அதை எடுத்தவாறு வெளியேறினான்.

சித்ராங்கதாவோ, அவனின் காதல் தனக்கு இல்லையோ என மனதில் எழுந்த சிறுகுழப்பத்தில் மிக இலகுவாய் பேசவேண்டியவற்றை , தனக்கு வேண்டியதை பிறர் பறித்துவிடுவாரோ என அவசரம் கொள்ளும் குழந்தையாய் செயல் பட்டு அவர்களின் உணர்வலையை அறுத்தவள், அவனின் விலகலையும் தாங்க முடியாமல் அழுதவாறே வெளியேறினாள்.

வலியே என்

உயிர் வலியே நீ
உலவுகிறாய் என்
விழி வழியே சகியே
என் இளம் சகியே உன்
நினைவுகளால் நீ
துரத்துறியே மதியே என்
முழு மதியே பெண் பகல்
இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசிறியே

மனம் மனம்
எங்கிலும் ஏதோ கனம்
கனம் ஆனதே தினம்
தினம் ஞாபகம் வந்து
ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில்
கிளிஞ்சலாய் வாழ்கிறேன்

நீயா முழுமையாய்...
நானோ வெறுமையாய்..
நாமோ இனி சேர்வோமா...

யாரோ மனதிலே
ஏனோ கனவிலே நீயா
உயிரிலே தீயா தெரியலே

மிக மிகக்
கூர்மையாய் என்னை
ரசித்தது உன் கண்கள்தான்
மிருதுவாய் பேசியே என்னுள்
வசித்தது உன் வாா்த்தை தான்
கண்களைக் காணவே இமைகளை
மறுப்பதா வெந்நீர் வெண்ணிலா
கண்ணீர் கண்ணிலா நானும்

வெறும் கானலா
 
Thoshi

Author
Author
#2
ஜீப்பின் ஸ்டியரிங்கில் கரத்தில் வழியும் ரத்தம் சிந்தியவாறிருக்க அதன் வலி சிறிதும் ஜிஷ்ணுவிடம் இல்லை. ஒருவேளை அவன் கொண்ட மனக்காயம் அதை விட பெரிதோ ?

அவனின் காயம் அவனது அலைபேசிக்கு எவ்வாறு தெரியப்போகிறது. அது சைலண்டில் போட்டிருந்ததால் தொடர்ந்து கிறுகிறுத்தது(வைப்ரேடிங் பா) .

தன் ரத்தம் சொட்டும் கை கொண்டு அதை எடுத்தான்.
அந்த பக்கம் என்ன சொன்னார்களோ இதுவரை வெற்று பார்வை பார்த்திருந்த கண்கள் இரண்டும் யோசனையாய் சுருங்கியது.

"அவன் யாரு என்னனு உடனடியா விசாரிச்சு சொல்லுங்க இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன் " என அதுவரை இருந்த காதலனின் முகம் போய் காவலனுக்கு உரிய கம்பீரத்துடன் சொன்னான் ஜிஷ்ணு.

கையின் காயமதை உணராதவன்,மனதின் காயமதில் துவண்டிருந்தாலும் கடமை அதை வெல்ல, தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவந்தான்.

தனக்கு வந்த ஃபோன் காலிற்க்கு பிறகு அலுவலகம் நோக்கி சென்றுகொண்டிருந்த ஜிஷ்ணு, சிறிது நேரம் பிறகே தன்னை பின்தொடர்ந்து வரும் அந்த கருப்பு நிற காரை கண்டுகொண்டான்.

கண்களில் கவலிட , யாரென அறிய முற்பட்டான் .தற்போது மீண்டும் அவன் அலைபேசி அலற அதை எடுத்து ஸ்பீக்கரில் போட்டவாறே பின்னால் வரும் காரை நோட்டமிட்ட, அவனின் நோட்டம் வீண் என்பதுபோல் அலைபேசியில் ," என்ன மாப்ள சௌக்கியமா...திரும்பி திரும்பி பார்த்துட்டே போற கொஞ்சம் முன்னாடியும் பார்த்து போ மாப்ள" என மறு புறத்திலிருந்து குரல் கேட்க,
ஜிஷ்ணுவின் புருவங்கள் இரண்டும் யோசனையாய் சுருங்கியது.

"என்ன மாப்பிள அதுக்குள்ள என்னை மறந்துட்டியா...ச்சுச்சு.. உன் காதல் அவ்வளவு தானா ஆனாஉன் முத காதலி கூட உன்னைவிட்டுட்டு வேறொருத்தன் பின்னாடி போய்ட்டா போல...ச்சுச்சு ...சரி விடு அது தான் இப்போ வேற பொண்ணு கூட சுத்துற போலயே... அந்த பொண்ணு வேற பணக்காரி போல ...ஆனா பாவம் இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த பொண்ணு கதி என்னவோ" என சொல்லிக் கொண்டு இருந்தவன் பாதியில் நிறுத்தி போனை அணைத்தான்.

அதே நேரத்தில் ஜிஷ்ணுவின் ஜீப்பை இத்தனை நேரம் தொடர்ந்து வந்த காரும் வேறு பாதையில் சென்றது .

சட்டென்று திரும்பி அக்காரை தொடர முடியாமல் போனது. ஏனோ அந்த குரலை மிகவும் வேண்டாத தருணத்தில் கேட்டதை போல் தோன்ற, இம்முறையும் அவனின் மனம் ஏதோ தவறு நேரபோவதாய் உணர்தியது.

ஆபத்து என்றவுடன் அவனுக்கு தன் உயிர் மற்றும் வாழ்வே பிரதானமாய் தெரிய, முதலில் மித்ராளினியின் பாதுகாப்பிற்க்காய் தான் நியமித்தவருக்கு அழைப்பை விடுக்க அவர் , அவள் குழந்தையுடன் பார்க்கில் இருப்பதாய் சொன்னதில் நிம்மதியானவன் சித்ராங்கதாவிற்கு அழைத்தான்.

அப்பக்கம் அழைப்பு எடுக்கப்படாமல் போக தனது உதவியாளருக்கு அழைத்தபடியே அவளைத் தேடிச் சென்றான்.
அவன் தன்னவளை காக்க செல்ல காலனோ அந்த காரை வேறுவொருவரை நோக்கி செலுத்தினார்.

அந்த கருப்பு நிற காரின் உள்ளே," இப்போ நம்ம அந்தப் பெண்ணைத் தேடிப் போறமா மச்சி" என ஒருவன் கேட்க,

"அவ எதுக்கு மச்சி நமக்கு , அந்த ஏசிபிய சும்மா சுத்தல்ல விடலாம்னு சொன்னேன்டா. இவங்களால நான் எவ்ளோ அவமானபட்டேன் அதுக்கு தான் ஒருத்தனையும் அடையாளமில்லாம ஆக்கினேன்....மம்ஹா... இப்பவும் அந்த காட்சியை நினைக்கும்போதுலாம் சும்மா ஜிவ்வுனு இருக்கு மச்சி" என்றவன் ,

"இப்ப பாரு இந்த ஏசிபி அந்த பொண்ண தேடி போய் இருப்பான். ஆனாலும் அவனும் என்ன பண்ணுவான் அவனுக்குனு இருந்தவளையும் நம்ப காலி பண்ணிட்டோமே" எனச் சொல்லி சிரித்தான். ( இந்த கேரக்டர் ரொம்ப முக்கியம்ங்க நல்லா பாத்துக்கோங்க).

**************************************************

"டேய் லூசு...எரும மாடு விஷ்வா... நான் என்ன சொல்ல வரேன்னு கூட கேட்காமல் அப்படி என்னடா உனக்கு "என விஷ்வாவை தலையணையால் மொத்தி எடுத்தாள் ஷாலினி.

விமான நிலையத்தில் இருந்து வந்தவள் கண்டது, தலையில் கட்டுடன் அமர்ந்திருந்த விஷ்வாவை தான். ஒரு வருடம் முன்பு ஒரு தடவை இவ்வாறு அவன் இருந்திருக்க அன்றைய நினைவுகளின் தாக்கத்தில் பதறியவாறு அவனின் அருகில் சென்றாள் ஷாலினி.

அசைவை உணர்ந்து விழித்துப் பார்த்த விஷ்வா ஷாலினி கண்டவன் , " என்னடி மாமன வச்ச கண்ணு வாங்காம பாக்குற" என வழமைபோல் கண் சிமிட்டி சிரித்தான்.

நெஞ்சோரமாய் இருந்த சிறு துளி பாரமும் விலக அவனை கண்டு முறைத்தவள், அவன் மேல் தலையணை போர் தொடுக்க ஆரம்பித்திருந்தாள். .

சிறிது நேரம் கழித்து மூச்சுவாங்க சோபாவில் அமர்ந்த இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள, ஒரேநேரத்தில் இருவரும் " சாரி" என்றனர்.

அதில் சிரிப்புடன் ஷாலினியின் அருகில் இன்னும் நெருங்கி அமர்ந்து அவளின் கரம்பற்றிய விஷ்வா, "சாரிடி நான் அந்த மாதிரி ரியாக்ட் செஞ்சிருக்ககூடாது. அதும் நீ போய் சந்தேகப்பட்டனு " என தன் கரம் கொண்டு தலையில் அடித்துக்கொண்டான்.

"ச்சு ..அத்தான் ..என்ன இது ? " என்று குறுக்கிட்ட ஷாலினியை தடுத்தவன்,

" ஹாஹா நான் சொல்லிறேன்டி...அது அப்போ எனக்கு எந்த மாதிரி இருந்துச்சுனு உனக்கு புரிய வைக்கமுடியுமானு எனக்கு தெரியல . அது சில வருஷம் முன்னாடி எப்படி நான் இருந்தேன்னும், என்ன பண்ணனும் உனக்கு தெரியும் நல்லாவே. சோ அப்போ இருந்தமாதிரியே இப்பவும் தொடருமோ? உனக்கு என்னை, என் காதலை புரியவே இல்லையோனு நானே கேட்டுகிட்டேன்டீ . அது தான் இவ்வ்ளோத்துக்கும் காரணம் " என்றவன் அவளின் பற்றிய கரம் விலக்காமலே அவளின் முன் மண்டியிட்டு,

"அப்போ சொன்னது தான் இப்பவும் சொல்றேன் ...நான் விளையாட்டுத்தனமா தான் இருப்பேன், ஆனால் என்னோட காதல் விளையாட்டு இல்ல . உன்கிட்ட சத்தியமா என்னால பொய்யா இருக்க முடியாதுடி . இப்போ இந்த அடிபட்ட நிமிஷம் கூட உன் முகம் தான் எனக்கு தெரிஞ்சது. திரும்பவும் உன்ன விட்டுட்டு அந்த இருட்டுக்குள்ள போயிடுவேனோன்னு நெஞ்சு பதறிடிடுச்சிடி" என்றான்.

சிறிது நேரம் அந்தநேரத்தின் உணர்வுகளில் லயித்திருந்து அமைதியாயிருந்தனர் இருவரும்.

முதலில் அதிலிருந்து வெளிவந்த விஷ்வா ," ஹா ஹா ஹா ஹா ...என் அண்ணனு ஒருத்தர் இருக்காரே எப்போதும் தள்ளியே இருப்பார். எப்பவும் நம்ப போய் பேசும்போதுகூட சொல்றியா சொல்லு ..போறியா போனு இருப்பான் . ஆனா அவனுக்கு எங்க எல்லோரும் மேலயும் பாசம் ஜாஸ்தி தான். எனக்கு எதுவும் ஆகக்கூடாதுனு ஒருத்தனை பாதுகாப்புக்கு போட்டு இருக்காரு. அதுவே எனக்கு இன்னிக்கு தான் தெரிஞ்சது.

அவன்தான் டாக்டரை கூட்டிட்டு வந்து கட்டு போடுற வரைக்கும் கூட இருந்தான் . நான் கண்ணை முழிக்குறவரைக்கும் எங்க அண்ணா அவனை போன வைக்கவிடல" என சிரிப்பாய் தன் அண்ணனின் புகழ் பாடினான் விஷ்வேந்தர்.

அவன் போனில் பேசிய நொடி முதல் தவிர்த்திருந்தவளின் அந்நேர பதட்டத்தை நீக்கியதும் ஜித்தேந்தர் தான் என்பதில் ஷாலினியுமே அவனின் புகழை கேட்டவாறிருந்தாள்.

இத்தனை நேரமாய் இருந்த இறுக்கமான சூழ்நிலை விலகியிருக்க, தற்பொழுது தன் வழக்கமான சிரிப்புடன் விஷ்வா பேசுவதை ரசித்தவளின் கரம் , தன் முன் மண்டியிட்டு இருந்தவனின் தலையில் போடபட்டிருந்த கட்டை மிருதுவாய் வருடியது.

அவர்களிடம் அனுமதி கேட்கும் நேரம்கூட இல்லாதது போல் அங்கு மூச்சிரைக்க வந்து நின்றிருந்தார் விஷவேந்தருக்காய் , ஜித்தேந்தர் நியமித்திருந்த பாதுகாவலர்.

அங்கு ஜிஷ்ணுவும், சித்ராங்கதாவும் தங்களின் உணர்வலை அறுந்ததாய் எண்ணி வருந்திருக்க,

இங்கு விஷ்வாவும், ஷாலினியும் தங்களின் உயிர்அலை உயிரற்று போவதற்கு முன்பே தங்களின் காதலை கொண்டு அதை உயிர்த்திருந்தனர் .

**************************************************
நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுயிரின் உரிமையானவளை கண்டுகொண்ட ஜித்தேந்தர் , அவளின் உரிமை சாசனத்தை அவளிடமே சேர்ப்பிக்கும் வேகத்துடன் மித்ராளினியை நோக்கி நடந்தான் .

அவனின் ஒவ்வொரு அசைவையும் மித்ராளினியின் கண்கள் படம் பிடிக்க ,மனமோ இது இது என்னவனின் அசைவுகள் என இதற்க்கு முன்பான அவனுடனான தருணங்களை எடுத்துக்கொடுத்தது.

உதடு மட்டுமில்லாமல் கண்களும் சேர்ந்து சிரித்து, மற்றவர்களை ரசிக்க வைக்கும் சிரிப்பு . தன்னை பார்க்கும் நொடிகளில் மட்டுமே அக்கண்களில் சிரிப்புடன் சேர்ந்து வெளிப்படும் அவனின் காதல், என கண்கள் இந்நாள் காட்சியையும் ,மனம் அந்நாள் காட்சியையும் ஒருங்கிணைத்து காட்டியது.

இருவரின் உதட்டிலும் சிரிப்பிருக்க, இருவரின் கண்களும் கண்ணீரில் பளபளத்தது.

அவர்களின் அத்தருணத்தை கண்ட அக்காலனும் தான் விதியை மாற்றலாமா என சிந்திக்க அதற்குள் காலம் கடந்திருந்தது .

அந்த கருப்பு நிற கார் இவர்கள் இருந்த ரோட்டினுள் நுழைந்திருந்தது .

ஜித்தேந்தர் தன் வழக்கமாய் தன் மோதிரவிரல் கொண்டு இடது புருவத்தை நீவியவாறே சிரித்தபடி சாலையை கடப்பதை சற்று தொலைவில் வந்துகொண்டிருந்த காரில் இருந்தவன் கண்டு அதிர்ச்சியுடன் நிறுத்தினான்.

"டேய்****...எதுக்கு இப்போ வண்டிய நிறுத்துன " என அவனின் அருகிலிருந்தவன் எகிற,

காரை ஓட்டியபடி வந்திருந்தவன் கண்களில் பயம் புலப்பட " ஆர்....ஜே....ஆர்ஜே " என்றவனின் பார்வை ஜித்தேந்தரை விட்டு விலகவில்லை.

அவன் சொன்னதில் அருகிலிருந்தவனும் அதிர்ந்து , அவன் பார்வை இருக்கும் இடத்தில் பார்த்தவனின் வாயும் " ஆர்ஜே " என பயத்துடன் உச்சரித்தது .

ஆனால் அவனின் பயம் ஒருநொடி தான் ," டேய் இவன் எப்படி டா இங்க ....தூக்குடா... அடிச்சி தூக்கு " என கத்தினான்.

அதில் காரை ஓட்டுபவன் சிறிதுநடுக்கத்துடன் அருகிலிருப்பவனை பார்க்க,

"என்னடா மச்சான் பார்த்துட்டு இருக்க.இவன் உயிரோட இருக்கிறது எவ்வளவு ஆபத்துனு தெரியும்ல அதும் நம்ப செஞ்சதுலாம் தெரிஞ்சிது அவ்வளவு தான் .அடிச்சி தூக்குடா " என மீண்டும் கத்தினான்.

தன்னுயிர் சேர போகும் திருப்தியுடன் மித்ராளினியும், தன் தந்தையை கண்டு துள்ளியவாறு மித்ரேந்தரும் பார்த்திருக்க அவர்களை தன்னுடன் அணைத்துக்கொள்ளும் ஆசையுடன் வந்த ஜித்தேந்தரை தூக்கியடித்தது அந்த கருப்பு நிற கார்.

தூக்கியெறியப்பட்ட ஜித்தேந்தரின் தலை எதிர்புறம் ரோட்டில் இருந்த கல்லில் மோத , வீசப்பட்ட வேகத்தில் அவனின் வலதுகை முட்டி விலகி உயிர்போகும் வழியை அளித்தது .

சட்டென்று நிகழ்ந்த இந்நிகழ்வின் தாக்கத்தில் திகைத்திருந்த மித்ராளினி தன் அடிமனதிலிருந்து எழுந்த உணர்வில் "பாவாவாவா" என கத்தியவள் மித்ரேந்தரை அணைத்தபடி ஜித்தேந்தரை நோக்கி ஓடினாள் .

ஜித்தேந்தரின் மேல் மோதிய திமிருடன் சிரித்தவர்கள் காதில் விழுந்த குரலில் திகைத்து திரும்பி பார்த்தனர்.

" டாக்டர் .மித்ராளினி" என காரை ஓட்டியவன் சொல்ல,

"ஆஆஆஆ...எப்படிடா எப்படி ..மொத்தமா சாய்ச்சுட்டதா நினைச்ச எல்லோரும் எப்படிடா திரும்ப வந்தாங்க...ஆஆஆ ...தூக்குடா அவளையும் தூக்கு" என அலற , முன் சென்ற கார் மீண்டும் அதே வேகத்துடன் வருவதை கண்ட ஜித்தேந்தர் எழ முற்பட , அதற்குள் அது மித்ராளினியை மித்ரேந்தருடன் சேர்த்து தூக்கி எறிந்திருந்தது .அதிலும் இவ்விதியை என்ன சொல்ல? இத்தனை நாள் இருவரையும் சந்திக்கவிடாமால் செய்த அவ்விதிதான் தற்பொழுது காரில் தூக்கியெறியப்பட்டதில் அவர்களை அருகருககே விழசெய்திருந்தது .
 
Thoshi

Author
Author
#3
தன் கண்முன்னாலே தன்னவளுக்கு ஏற்பட்ட நிலையை கண்ட ஜித்தேந்தர் கத்தவும் முடியாமல் சிறிது சிறிதாய் நகர்ந்து அவளின் அருகில் சென்றான்.

நகர்ந்தபடி அவர்களிடம் வந்தவன் மித்ராளினியை தன்னை நோக்கி திருப்பினான் .
முகம்முழுக்க ரத்தம் தோய்ந்திருக்க தன்னை பார்த்தவள் கண்ட ஜித்தேந்தர் , " இத்தனை நாள் பிறகு உன்னை பார்த்தப்பவும் உன்னை இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாக்கிட்டானே" என புலம்ப,

அவனை தடுத்தவள் அவனின் முன் தன் கரங்களில் பத்திரமாய் பாதுகாத்து அணைத்திருந்த மித்ரேந்தரை நீட்டினாள் .

ஜித்தேந்தரின் நெற்றியில் இருந்து வழிந்த ரத்த துளிகள் மித்ராளினியின் முகத்தில் விழுந்து அவளின் முகத்தில் வழியும் ரத்தத்துடன் கலந்தது.
அவர்களின் மகவிற்கு கடவுளின் பேரருளால் பேரடியாய் எதுவும் ஏற்படாமல் இருக்க அதை கண்டு அந்நிலையிலும் இருவரும் நிம்மதி பெருமூச்செய்தினர் .

அவர்களை சுற்றி அனைவரும் கூடினாலும் எவரும் உதவிக்கு வராமல் போக, மித்ரேந்தரை அணைத்தபடி இருந்த மித்ராளினியையும் சேர்த்து அணைத்தபடி தனது இடது கரத்தில் முழுபலமும் , அடிபட்டிருக்கும் வலதுகையை அணைவாகவும் கொடுத்து தூக்கினான் ஜித்தேந்தர்.

அடுத்தடுத்து நடந்த நிகழ்வில் செய்வதறியாமல் நின்றிருந்த மித்ராளினியின் பாதுகாப்பிற்க்காய் ஜிஷ்ணு அமைத்திருந்த பாதுகாவலர் தற்பொழுது வேகமாய் முன்னே வர,

அந்நிலையிலும் அவரை கூர்மையான பார்வையால் அளவிட்டபிறகே அவரின் உதவியை ஏற்றான் ஜித்தேந்தர்.

அவர் அவர்களை தூக்க கை கொடுக்க, தடுத்த ஜித்தேந்தர் தன் வலியை பொருத்தவாறு காரின் கதவை திறக்க சொல்லினான்.

அவர்கள் இருவரையும் அணைவாய் தூக்கியபடியே காரினுள்ளும் அமர்ந்திருந்தான் .இந்நொடிவரை மித்ராளினியின் கண் ஜித்தேந்தரை விட்டு விலகியிருக்கவில்லை.

தொடர்ந்தநிகழ்வால் அழுதுகொண்டிருந்த மித்ரேந்தரின் அழுகையை நிறுத்த முயற்சித்துகொண்டிருந்த ஜித்தேந்தர் அவளின் பார்வையை உணர்ந்து மித்ராளினியின் புறம் திரும்ப,

மீண்டுமாய் அவனின் புருவம் மேல் இருந்து வழிந்த ரத்தம் அவளின் இதழில் விழுந்தது .

அவனை பார்த்தவாரே தனது ஒருகையால் தான் வழக்கமாய் செய்யும் செயலாய் அவன் அணிந்திருந்த சட்டையின் முதல் பட்டனை அவிழ்த்தாள் .

அவள் செய்யப்போகும் செயலை உணர்ந்த ஜித்தேந்தர் காரின் சீட்டில் தன் அடிபட்ட தலையை சாய்த்து கண்களை மூடினான்.

அவனின் செயலை பார்த்தவாரே தான் திறந்த பட்டனின் வழியே தெரிந்த அவனின் நெஞ்சில் அழுத்தமாய் முத்தமிட ,அவளின் உதட்டில் விழுந்திருந்த அவனின் ரத்தத்தின் துளி அவனின் நெஞ்சில் மேல்எழுதியிருந்த அவ்வெழுத்துக்களின் மேல் அச்சாய் பதிந்தது.

ஆம் அது அவளுக்கான இடம் . எப்பொழுதும் தனிமையில் அவனை பார்க்கும் நொடிகளில் அவள் முத்தமிடும் இடம். அது அவளுக்கான சமஸ்தானம் என அவனால் சாசனம் கொடுக்கப்பட்டு அதன் அச்சாரமாய் அவனின் நெஞ்சில் "ஜித்ராணி " என எழுந்திருந்த இடம்.

-கரைவாள்...
 
#4
நினைவில் தத்தளிக்கும் நேசமது 22 :

குழப்பத்துடன் கோவிலில் இருந்து கிளம்பிய சித்ராங்கதா சிறிது நேர பயணத்தில் அந்த இடத்திற்கு வந்திருக்க, கதவை திறந்து செல்லும் பொழுதே டப்ப் என்ற ஓசை கேட்க அடுத்த நொடி இடது கையை கன்னத்தில் வைத்தவாறு முழித்தாள் .

"யாருடா அந்த பயபுள்ள... இப்படி அடிவாங்குவது. சத்தத்தை கேட்டதுக்கே எனக்கு காது கிழியுதே" என அடித்தவனை எட்டிப்பார்த்தாள்.

"ஆத்தாடி! இது நம்ம ரவுடி பேபி போல இருக்கே, எதுக்கும் கொஞ்சம் கிட்ட போய் பார்ப்போம் " என கால் எடுத்து வைத்தவள், அடுத்து அடுத்தவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்ததை பார்த்து விட்டு, "ரைட்டு! இனி டௌட்டே வேணாம் இது நம்ம ஆளு தான்.இவருக்கு போலீஸ் ட்ரைனிங்ல என்ன கத்துக் கொடுத்தாங்களோ இல்லையோ ஆனாவூனா துப்பாக்கிய தூக்க சொல்லிக்கொடுத்து இருக்காங்க போல" என மனதில் கவுண்டர் அடித்தாள்.

இத்தனை நேரம் மனதில் இருந்த குழப்பம் அனைத்தும் அவனை கண்ட நொடியில் கரைவதாய்
உணர்ந்தாள்.

அதன் பிறகு அவனை ஜொல்லியவாறு வாயிலிலேயே நின்று கொண்டிருக்க, சிறிது நேரம் பிறகு அதைக் கண்ட ஜிஷ்ணு சிரித்தவாறே அவளைக் கூட்டிச் சென்றான்.

அவனின் அதிரடியிலே மயங்கும் அவள், அவனின் அத்தி பூத்தார் போன்ற இவ்வசியம் செய்யும் சிரிப்பில் மொத்தமாய் சறுக்கினாள்.

எவ்வளவு நேரம் சென்றதோ ,அவளின் ரசிப்பை ரசித்தவன் "பேபி போதும்டி இது பப்ளிக் பிளேஸ் உன் மச்சான் ஒரு போலீஸ்னு மறந்துடாத" என்றான் .

அசடு வழிய, "ஏதோ பேசணும்னு சொன்னீங்க வந்து ஒரு மணி நேரம் ஆகுது" என சமாளித்த அவளுக்கு அப்பொழுதுதான் தான்கேட்க வேண்டியது எல்லாம் நினைவுக்கு வந்தன.

இத்தனை நேரம் அவளை ரசித்தவாறு அமர்ந்திருந்தவன், அவளின் கேள்வியில் காதலை சொல்லும் தருணம் வந்ததும் சிறிது படபடத்தான்.

"முதல்ல ....அது...எனக்கு ...நான் .. அதை எப்படி சொல்றதுன்னு எனக்கு " என இருபது பேரை ஒரே நேரத்தில் அசால்டாய் சமாளிப்பவன் காதலை சொல்ல தடுமாறினான்.

அவன் தடுமாற்றத்தில் அவன் சொல்ல வருவதை உணர்ந்தவள் அது சரிதானா என அறிவதற்கு இதற்கு முன் தனக்கு தோன்றிய கேள்விகளை தெளிவுபடுத்திக் கொள்ளலாம் எனத் தவறாக முடிவு எடுத்தாள்.

ஆழமூச்செடுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்ட ஜிஷ்ணு, "பேபி ...ஐ "என சொல்வதற்கும்

சித்ராங்கதா," நீங்க எனக்காகவா தினம் காலேஜ் வந்தீங்க" என கேட்டிருந்தாள்.

காதலை சொல்ல வந்தவன் அவளின் திடீர் கேள்வியை புரியாமல் பார்க்க,

அதை உணர்ந்த சித்ராங்கதா,"இல்லை, நீங்க போலீஸ்தான. போலீஸ்க்கு எப்பவும் வேலை இருக்கும்னு சொல்லுவாங்க. ஆனா, நீங்க எங்க காலேஜ் வாசலில் வாட்ச்மேன் வேலை தானே பார்த்தீங்க" என தனது கேள்வியை விளையாட்டாய் கேட்டவளின் மனமோ, "உன்னை பார்க்கத்தான் வந்தேன் பேபினு சொல்லுடா" என வேண்டியது.

ஜிஷ்ணு அனைவரிடமும் அழுத்தமாய் தன்னை காட்டிக் கொண்டாலும் அதை உடைத்து அவனை பாசமான தந்தையாகவும், அடம்பிடிக்கும் குழந்தையாகவும் மாற செய்தவள் மித்ராளினியே. அவளைத் தவிர வேறு ஒருவரிடம் அவன் அப்பரிமாணத்தை வெளிப்படுத்துவான் என்றால் அது சித்ராங்கதா மட்டுமே.

அவள் தன் கேள்வியை விளையாட்டாய் கேட்டிருக்க, இவனும் தன் காதலை சொல்லப் போகும் தருணத்தில் கொண்ட பரபரப்பில் அதை, அவளின் மனதின் வேண்டுதலை உணராமல் "பேபி அது நான் பாப்பாவ ட்ராப் பண்ண வந்தேன்டா... ஆஹாஹா.... அதுக்கு நீ என்ன வாட்ச்மேன் ஆகிட்டியா" என சிரித்தான்.

" பாப்பா...வா..." என சித்ராகதாவின் குரல் தந்தியடிக்க,

"ஹான் எப்பவும் வெளியே அப்படி சொல்லியே பழக்கம் ஆகிடுச்சு. ஆக்ஷுயலா நானே உன்கிட்ட அவளை அறிமுக படுத்தனும்னு நினைச்சேன் ஆனா அதுக்குள்ள என்னன்னவோ ஆகிடிச்சி ம்ம்ம்ம் ...அவ தான் என்னோட உயிர், என் தேவதை, சின்னதுல இருந்து எப்பவும் என்னோடவே இருக்கிறவ , இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் பேபி. உனக்கு கூட தெரிஞ்சு இருக்கும் உன் காலேஜ் தான, அவளை கூட்டிட்டு போறதுக்கும் விடுவதற்காகவும் தான் உன் காலேஜ்க்கு வருவேன் அண்ட் அதுனால தான உன்னையும் பார்த்தேன்" என இத்தனை நாளாய் பேசாததற்கும் சேர்த்து அவன் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக, எதிரிலிருந்தவள் சிறிது சிறிதாக உடைய ஆரம்பித்தாள்.

"அப்போ இவர் எனக்கானவர் இல்லையா ? அன்னிக்கு என்னை பார்க்கும் போது காதல் தெரிஞ்சுதே அது எனக்கானது இல்லையா ? இல்ல அது என் கற்பனையா ? நான் தான் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுகிட்டேனா? அப்போ... அப்போ...என் காதல் தப்பானதா?எனவும்...

இல்லை கீர்த்தி சொன்னமாதிரிலாம் இருக்காது ...ஆமா இருக்காது..இவர் என்னுடையவர், என்னோட ரவுடி பேபி தான்" என உள்ளுக்குள் ஒரு வாதத்தை நடத்திக் கொண்டிருந்தாள்.

சித்ராங்கதாவின் முகத்தை பார்த்த ஜிஷ்ணு தன் பேச்சை நிறுத்தி,"பேபி என்னாச்சுடா? ஏன் உன் முகம் இவ்வளவு வலியை காட்டுது" என பதறினான்.

"தான் சொல்லாமலே தன் முகம் பார்த்து வலியை உணரும் அவனை எண்ணி பெருமைப்படுவதா? இத்தனை நாள் போல் இல்லாமல் இடைவிடாமல் அவன் பேச அதில் சந்தோஷப்படுவதா? இல்லை தான் எண்ணியது அனைத்தும் பொய்யாய்ப் போக அவன் தனக்கு இல்லை என்பதில் அழுவதா" என எந்த உணர்ச்சியை வெளிப்படுத்துவது என அறியா பிள்ளையாய் கண்கள் கலங்க விழித்தாள்.

இவளின் முகம் காட்டும் உணர்வுதனில் அவனின் மனம் கசங்க எழுந்து அவளருகில் அமர்ந்து, "என்ன ஆச்சு பேபி ! சொல்லுடா "என கேட்க அந்த கேள்வி அவளின் காதில் விழவேயில்லை.

அவள் கவனம் முழுக்க டேபிளில் வைத்து இருந்த அவனின் தொலைபேசியின் ஒளியில் தெரிந்த எண்ணிலே இருந்தது.

ஜிஷ்ணு மொபைலை சைலன்டில் போட்டிருக்க, சத்தமில்லாததில் அவன் அதை கவனிக்காமல் இருக்க, அதற்குள் அவன் அலைபேசி மூன்று நான்கு முறை கிறுகிறுத்து அடங்கியது .

அதில் அவன் மித்ராளினிக்கு புதிதாய் வாங்கி கொடுத்த அலைபேசியின் எண் ஒலிக்க, திரையில் (என் உயிரானவள்)மித்துமா என இருந்தது .

அதை பார்க்க பார்க்க தன் காதல் ஒன்றுமில்லாததாய் தோன்ற, ஜிஷ்ணுவின் குரல் அவளின் செவியில் கேட்காமல் போக, சித்ராங்கதாவின் மனதின் குரல் அதிகமாய் கூக்குரலிட்டது .

"இவன் உனக்கானவன் இல்லை வேறுஒருவருக்கு சொந்தமானவன். நீ போ இங்கிருந்து . அவன் சித்ராங்கதாவிற்கானவன் இல்லை அவன் மித்ராளினியின் முறைமகன் " என சத்தமிட அதற்கு மேல் அதை கேட்க முடியாதவள், காதை பொத்தியவாறே " இல்லை... நீ... நீங்க... எனக்கு வேணாம்... எனக்கு... வேணாம்.." என கத்தினாள்.

அவள் திடீரென இவ்வாறு நடந்து கொண்டதில் ஜிஷ்ணு புரியாமல் அவளை பார்க்க, அவளோ "வேண்டாம் ..போங்க... போயிருங்க... நான் உங்களுக்கு ஒண்ணுமே இல்ல தானே போங்க" என கத்த,

அவன் " பேபி மா "என் அருகில் வர,

"வராதீங்கனு சொல்றேன்ல... போயிருங்க ...போங்க.."என அவள் கூச்சலிட்டதும் தான் அவனும் சுற்றுபுறம் உணர்ந்து பார்த்தான்.

அங்கிருந்த அனைவரும் இவர்களை வேடிக்கை பார்ப்பது அறிந்து சற்று இறுக்கமாய் உணர்ந்தவன், ஆயினும் காரணம் புரியவில்லை எனினும் கதறிக் கொண்டிருக்கும் தன்னவள் மட்டுமே முக்கியமாய் பட்டதில் முதலில் அவளை அமைதிப்படுத்த தண்ணீர் இருந்த கண்ணாடி தம்ளரை எடுத்துக் கொண்டு கதறி கொண்டிருப்பவளை, "பேபி" என அழைக்க,

தன் காதல் பொய்யாய் போனதாய் தப்பாய் புரிந்துகொண்டவள் அதன் கனத்தை தாங்கமுடியாததால் சரியாய் யோசிக்கமுடியாமல் போக, பாய்ந்து அவன் சட்டையை இரு கைகளாலும் பற்றி," ஏன் மச்சான் இப்படி சொன்னீங்க? அப்போ நீங்க எனக்காக வரலையா? அப்போ நான் உங்களுக்கு முக்கியம் இல்லையா? என மீண்டும் மீண்டும் அதையே கேட்டவாறு இருந்தாள்.

அப்பொழுதுதான் சிக்கலின் நுனியை கண்டுகொண்ட ஜிஷ்ணு, "இல்ல டா பேபி "என ஆரம்பிக்க,

அவனை பேசவிடாமல்," வேணாம் நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். உங்க உயிரானவங்ககிட்டயே போங்க. அவங்க தான உங்களுக்கு முக்கியம்ல போயிடுங்க" என கத்த இவ்வளவு நேரம் காதலர்களின் சண்டையை சுவாரஸ்யமாய் பார்த்தவர்கள் இப்போது இன்னும் ஆர்வமாய் பார்க்க,

ஏற்கனவே இந்நிலையில் சிறிது இறுக்கமடைந்திருந்தவன் சித்ராங்கதாவின் தற்போதைய பேச்சில் இன்னும் இறுக கோபத்தை அடக்கும் வழி அறியாமல் கையில் இருந்த கண்ணாடி தம்ளரை கைகளால் இறுக்கி உடைத்தான் .

உடைத்த பின்பும் கோபம் அடங்காமல் போக மேலும் கைகளை இறுக்க உடைந்த கண்ணாடித் துண்டுகள் அவனின் கையை கிழித்து , ரத்தம் வேகவேகமாய் அத்துண்டுகளை அலங்கரித்தது.

இதை கண்டு சித்ராங்கதா பதறி அருகில் வர, இப்பொழுது அவன் விலகியவாறு அவளை நோக்கி இடதுபுற உதடு வளைய சிரித்தான்.

அவனின் சிரிப்பினை புரியாமல் அவள் பார்க்க , "என்னோட யோசனை சரினா.. நீ இதுவரைக்கும் என்னையும் அவளையும் சேர்த்து கூட பார்த்திருக்க மாட்ட. நான் இப்போ சொல்லலைன்னா உனக்கு இது சரியாக கூட தெரிஞ்சு இருக்காது . நான் அவளை எப்படி பாக்குறேன்... இனிமே இப்படி பார்ப்பேன்... அவ என்ன எப்படி பார்த்தா... இது எதுவும் தெரியாது. ஏன் இப்ப நான் உன் கிட்ட சொல்ல வருவதை கூட நீ முழுசா கேட்கல. ஆனா அதுக்குள்ள சந்தேகம் ....நைஸ்... சூப்பர்... பென்டாஸ்டிக்" என ரத்தம் கசியும் கையையும் பொருட்படுத்தாமல் கை தட்டினான்.

அவனின் உரத்த கேள்வியில் தவறு செய்த குழந்தையாய் அவள் திருத்திருக்க , அந்நிலையிலும் அவளை அள்ளி அணைத்திடவே அவன் நெஞ்சம் விரும்பியது.

எப்படி ஆரம்பித்தது இந்த நாள்.. தன் காதலைச் சொல்லி அவளுடன் எப்படி எல்லாம் பேச வேண்டும் என எத்தனை முறை சிந்தித்து தனக்கு தானே சிரித்த நொடிகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தவனிற்கு அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் போக விலகியவன் அவளை திரும்பி பார்க்கவேண்டுமென தோன்றிய உணர்வில் மறுபடியும் வந்தவன் அங்கிருந்த அலைபேசியை கண்டு அதை எடுத்தவாறு வெளியேறினான்.

சித்ராங்கதாவோ, அவனின் காதல் தனக்கு இல்லையோ என மனதில் எழுந்த சிறுகுழப்பத்தில் மிக இலகுவாய் பேசவேண்டியவற்றை , தனக்கு வேண்டியதை பிறர் பறித்துவிடுவாரோ என அவசரம் கொள்ளும் குழந்தையாய் செயல் பட்டு அவர்களின் உணர்வலையை அறுத்தவள், அவனின் விலகலையும் தாங்க முடியாமல் அழுதவாறே வெளியேறினாள்.

வலியே என்
உயிர் வலியே நீ
உலவுகிறாய் என்
விழி வழியே சகியே
என் இளம் சகியே உன்
நினைவுகளால் நீ
துரத்துறியே மதியே என்
முழு மதியே பெண் பகல்
இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசிறியே

மனம் மனம்
எங்கிலும் ஏதோ கனம்
கனம் ஆனதே தினம்
தினம் ஞாபகம் வந்து
ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில்
கிளிஞ்சலாய் வாழ்கிறேன்

நீயா முழுமையாய்...
நானோ வெறுமையாய்..
நாமோ இனி சேர்வோமா...

யாரோ மனதிலே
ஏனோ கனவிலே நீயா
உயிரிலே தீயா தெரியலே

மிக மிகக்
கூர்மையாய் என்னை
ரசித்தது உன் கண்கள்தான்
மிருதுவாய் பேசியே என்னுள்
வசித்தது உன் வாா்த்தை தான்
கண்களைக் காணவே இமைகளை
மறுப்பதா வெந்நீர் வெண்ணிலா
கண்ணீர் கண்ணிலா நானும்

வெறும் கானலா
Me first ah
 
Sponsored

Advertisements

Top