Latest Episode நிலவைக் கொண்டு வா – 15 (FINAL)

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#61
ஹாய் சரோ,
உண்மையைச் சொல்லப்போனால் இது உங்கள் முதல் நாவல் என்று நீங்க சொன்னதால்தான் தெரிகிறது.
வாசிக்க தூண்டும் எழுத்து நடை உங்களோட ப்ளஸ். குறுநாவல் என்பதால் சீக்கிரம் முடிந்த ஃபீல் என்பது நமக்கே புரிகிறது. கதையில் வதனியின் மைண்ட் வாய்ஸ் செம...
அழகாகக் கதையை நகர்த்தி கொண்டு போய் முடித்திருந்த விதம் அருமை.

நீங்க தைரியமாக நெடுநாவல் எழுத முயற்சிக்கலாம். அதற்கு என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துகள் சரோ.
welcome for ur valuable comment dear:love::love::love::love:
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#63

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#65
#66
காலை பதினோரு மணிக்கு தோப்பு வீட்டிற்கு சென்றனர். வதனி அரியலூர் ஐடி கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளை தொந்திரவு செய்யாமல், கடல் இருக்கும் புறத்தில் தொங்கிய மூங்கில் ஊஞ்சலில் அமர்ந்து ஹெட் போனில் பாட்டுக் கேட்டவாறு கண்களை மூடி இசையை, அது உண்டாக்கும் உணர்வுகளை தனக்குள் ரசித்திருந்தான்.

வெகு நேரம் தன்னை தொந்திரவு செய்யாமல் இருக்கும் கணவனை வியந்தபடி அங்கு வந்தவள், அவன் மடியிலிருந்த அவன் கைகளை மெதுவாக விலக்கி அமர்ந்தாள்.

அவன் வலப்புற காதிலிருந்த ஹெட் போனை எடுத்து அவளது காதில் மாட்டியவாறு அவனுடைய பரந்த மார்பில் சாய்ந்திருந்தாள். இருகைகளால் அவளை அவன் அணைத்திருக்க

சித் ஸ்ரீராம், ஸ்ரேயா கோஷல் குரலில், யுவன் சங்கர் ராஜா இசையில், உணர்வுகளை, உடலின் ஒவ்வொரு அணுவையும் மயங்கச் செய்திருந்த அந்த வரிகளை அனுபவித்து பாடிக் கொண்டிருக்கும் குரல்கள்

........ ஏனோ இரவோடு ஒளியாய்கூடும்
உறவொன்று கேட்கிறேன்
வரை மீறும் இவளின் ஆசை
நிறைவேறப் பார்க்கிறேன்.
நதி சேரும் கடலின்மீது

மழை நீராய் சேருவேன்
..........................


என்ற பாடலை இருவரும் இணைந்து ரசித்திருந்தனர்.

பாடல் முழுவதையும் கேட்ட பெண்ணவள், தனது உணர்வுகளை இதழ் மூலம் அவனிதழ்களுக்கு கடத்தினாள். கடத்தலில் காணாமல் போன இருவரையும் கண்டு பிடித்தது, வீட்டிலிருந்து வந்த போன் கால்.இரவு நேர பௌர்ணமி நிலா மேலெழும்ப, அதன் நிழல் கருமை படர்ந்திருந்த கடலில் விழுந்தது. காண்பவர் கண்களுக்கு, மஞ்சள் நிலவு இரண்டாகக் காட்சி அளித்தது.

அவனுடைய நிலா அவன் கைகளுக்குள் இருக்க, எதிரில் தெரியும் இரு நிலவைப் பார்த்தவாறு அர்த்தமில்லா பல விசயம் அவன் பேச, அர்த்தம் புரியாமலேயே கேட்டிருந்தாள்.

அவன் கரங்கள் பேசிய கதைகள் பெண்ணவளின் தேகம் உணர்ந்த வேளை,

முடிவறியா முதல் அனுபவம் முற்றிலும் அவளறியாததால், அவன் பயணிக்கும் வேகத்திற்கு ஒத்துழைத்து, மனம் நெகிழ காத்திருந்தாள்.

அவளின் தேகத்திற்கு ஆடையானவன், முத்த ஊர்வலத்தை நடத்த, இருவருக்கும் பருவப் பசி கிளர்ந்தெழ, பசி போக்க... ஒருவரையொருவர் யாசிக்க ... மனமொத்து இருவரும் விருந்து பரிமாறி, களித்து, கனிந்து, களைத்திருந்தனர்.

இதழ் விரித்து மலரக் காத்திருந்த மலருக்குள், தேனருந்த வந்த வண்டினை இதழ்களால் சிறை செய்திருந்தது, மலர்.

காமக்கடலில் மூழ்கி இருவரும் முத்தெடுத்த வேளையில், அவனது வாழ்விற்குள் வர யோசித்த.... நிலவைக் கொண்டு வர உண்டான மனக்கிலேசமெல்லாம் பனிபோல மறைய, அவளின் பருத்த மார்புகளுக்கிடையே முகம் புதைத்திருந்தான்.


சந்திரவதனியின் உலகமாகியிருந்தான் ரகுநந்தன். அத்தான் என்ற அவளின் அழைப்பைக் கேட்டால் அத்தனையும் மறந்து அவள் பின்னால் என்னவென நிற்கும் ரகு அனைவருக்கும் புதிரானவன், புதிதானவன். வதனிபித்தன்.

நமது ரசனைக்குரியவன்..... அவனை பிறர் ரசிக்க விரும்பா அவனுடைய ராட்சசி வதனி. அறியா விளையாட்டுப் பெண்ணாக இருந்தவள், ரகுவிற்கும், ஆடிட்டிங்கிற்கும் அரசியாகியிருந்தாள்.

நிறைவான வாழ்வால் இருவரும், எல்லா வளங்களையும் பெற்று திறம்பட வாழ்ந்திருந்தனர்.

வாழ்த்தி விடைபெறுவோம்!!!
😱😱😱😱😂😂😂😍😍😍😘😘😘👏👏👏👏👌👌👌👌
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#67

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top