• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நிலவைக் கொண்டு வா - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
அன்பானவர்களே,

அனைவருக்கும் வணக்கம்.... நிலவைக் கொண்டு வா முதல் அத்தியாயத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ், சைலண்ட் ரீடிங் மூலம் ஊக்கப்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே போல, இரண்டாவது அத்தியாயத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ், சைலண்ட் ரீடிங் மூலம் ஊக்கப்படுத்தி தங்களின் ஆதரவை அளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.


3514.jpg
 




Last edited:

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
நிலவைக் கொண்டு வா – 2



வடபழனியில் உள்ள ‘3D ஆர்க்கிடெக்ட் நிறுவனம்’ மாலை வேளையிலும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது. ரெசிடென்சியல், ரிசார்ட்ஸ், மாடர்ன், ஏன்சியண்ட் ஆர்க்கிடெக்ட் மற்றும் இண்டீரியர், புளோர் ப்ளான், ரியல் எஸ்டேட் அட்வைசரி, நியூ பில்ட்ஸ், சோலார் பவர் ஜெனரேசன் என கட்டிடங்களின் அனைத்து வித தேவைகளையும் பூர்த்தி செய்து தருவதில் அவர்களுக்கு நிகர் அவர்கள் மட்டுமே.


நான்கு மாடி கட்டிடத்தில் இயங்கி வரும் நிறுவனத்தில் அனைத்து தர மக்களுக்கும் ஏற்றவாறு கட்டிடங்கள், குறித்த காலத்தில், தரமான பொருட்களைக் கொண்டு கட்டித்தரப்படுவதால், அலுவலகத்திற்கு வந்து போவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டு போகிறதே தவிர குறைந்தபாடில்லை.

இரண்டாவது மாடியில் தனக்கு ஒதுக்கப்பட்ட கேபினுக்குள் சிஸ்டம் முன் அமர்ந்து, தனக்கு கொடுக்கப்பட்ட பணியில் மிகத் தீவிரமாக பணி செய்து கொண்டிருக்கும் அழகுப் புயல் ‘காதம்பரி’.

காண்பவரை ஒரு கனம் நின்று ரசிக்கத் தூண்டும் ஐந்தரை அடி உயர மெழுகுச் சிலை. வள, வள பேச்சில்லா, சுறு சுறுப்பான பெண்.

தன் திறமை, அழகு பற்றிய எந்த கர்வமும் இல்லாத, அலட்டல் இல்லாத..., எதையும் அலட்சியப் படுத்தாத புத்திசாலிப் பெண்.

சிதம்பரம், கமலாவின் ஒரே செல்ல மகள். பொது நலத்துறையில் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் சிதம்பரத்திற்கு, தனது மகளின் பொறுப்பான செயல்களை எண்ணிப் பெருமிதம்.


“கேட்(KAT), உன் வர்க் முடிஞ்சா, என் கேபின் வரை வர முடியுமா...?”, என அலுவலகத் தோழி மஞ்சு கேட்க

“டென் மினிட்ஸ்ல வரேன்...” என்றவாறு, தனது பணியை விரைந்து செய்தாள்.

“இன்னிக்கு மும்பை டிசைனர்ஸ் அவார்டு போட்டிக்கு அனுப்ப லாஸ்ட் டேட் மஞ்சு... அதான்.... முடிக்க போறேன்....மெயில் செண்ட் பண்ணிட்டு வந்துறேன்”

“நானெல்லாம் இங்க குடுக்கற வேல செய்யவே திண்டாடிட்டு இருக்கேன்..... ஆனா உன்ன மாதிரி இங்க நிறைய பேரு டக்குனு வேலய முடிக்கிறீங்க....காம்படீசனுல்ல எல்லாம் கலந்துகிறீங்க.....என்னவோபா..... நீங்க படிச்ச அதே தான் நாங்களும் படிச்சோம்.....ம்.ம்ம்..”

“வரேன்.... மஞ்சு ... புலம்பாதே......” , என்றாள் சிரித்தவாறு

அலுவலகத்தின் வாயிலாக பங்கேற்க கூடிய, அனைத்து தனது துறை சார்ந்த போட்டிகளில் கட்டாயமாக காதம்பரி கலந்து கொண்டு பரிசும் வென்றிருக்கிறாள்.

கடந்த ஆண்டு, சென்னையில் உள்ள பிரபலமான பொறியியல் கல்லூரியின் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான கேம்பஸ் இண்டர்வியூவில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்களில் ஆர்க்கிடெக்ட் துறை மாணவியான காதம்பரியும் ஒருத்தி.


வேலைக்கு சேர்ந்த மூன்றே மாதங்களில், இண்டீரியர் பிரிவில் பதவி உயர்வின் மூலம் முக்கிய பொறுப்பில் இருக்கும் காதம்பரியையும், அவளின் திறமையையும் பற்றி அறியாதவர்கள் அவ்வலுவலகத்தில் யாரும் இல்லை.

“என்ன மஞ்சு...... என்ன பிரச்சனை...?”

“இந்த டிசைன்ல கொஞ்சம் மாடிஃபை பண்ண .... மவுஸ் யூஸ் பண்ணா...... மேல உள்ள டிசைனும் அஃபைக்ட் ஆகுது...... எனக்குத் தெரியாம .... எதோ ஒரு டூல் ஆக்டிவேட் ஆகி இருக்கு.... ஆனா என்னால் அதை கண்டு பிடிச்சு ரெக்டிஃபை பண்ண முடியல..... கேட்....”

“சரி..... நான் பாக்குறேன்”

அடுத்த ஐந்தாவது நிமிடம்.... “பாரு மஞ்சு.... இப்போ... ஓகே...வானு....”

“எப்டிபா.... உடனே முடிச்சிட்டே.....”

உடனே அதற்குரிய விளக்கங்களை கூறி விட்டு ..... அங்கிருந்து அகன்றாள்.

தனது திறமைக்கு தீனி போடும் சவாலான சில கட்டிடங்களின் உள்கட்ட, வெளிப்புற வடிவமைப்பில் தனக்கென ஒரு இடத்தை ஆர்வம் மற்றும் இடைவிடாத உழைப்பால் குறுகிய காலத்தில் பெற்றிருந்தாள்.

தியாகராய நகரில், சீனிவாசன் தெருவில் அமைந்துள்ள அவர்களது வீட்டில், மகளின் வரவிற்காக அவளின் தாய் கமலா வாயிலைக் கவனித்தவாறே தனது பணிகளைச் செய்த வண்ணமிருந்தார்.

வீட்டிற்கு ஒரே மகளாக இருந்தாலும், இருவரின் கண்டிப்பான வளர்ப்பாலும், ஊக்கத்தாலும் சிறு வயது முதலே விழிப்புணர்வோடும், தன்னம்பிக்கையுடனும் வளர்ந்திருந்தாள்.

இருபத்து மூன்று வயதான தனது மகளை, நல்ல குடும்பத்தில் மணமுடித்து கொடுத்து விட்டால், தனது பிறவியின் நோக்கத்தை அடைந்த திருப்தி கிடைக்கும் என்று எண்ணும் சராசரித் தமிழகத் தாய் கமலா.

அந்த நோக்கத்தை அடைய, உரிய முயற்சியாக சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் பல மேட்ரிமோனியில் பதிந்து நல்ல வரனுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.

மகளின் அமைதி, அறிவு, அழகு, பொறுமை இவற்றிற்கு ஏற்ற வரனை கண்டுபிடிப்பது இலகுவான காரியமாக எண்ணியவருக்கு, களத்திற்குள் இறங்கிய பின் தான் புரிந்தது அது எளிதல்ல என்று.

சற்று முன்பே பதிந்திருந்தால் வரன் தகைந்திருக்குமோ என்று எண்ணும் அளவிற்கு வரன் பார்ப்பதில் உண்டான அனுபவம் அவரை சற்றே நிதானிக்கச் செய்கிறது.

மகளின் திருமணம் சார்ந்த பணிகளை கவனிக்கும் முன்பு கணவரிடம் கூறிய போது,

“இப்ப என்ன அவசரம்..?”

“இன்னும் நாலு வருசத்துல ரிட்டையர்ட் ஆகிருவீங்க,.... அதுக்குல்ல முடிச்சா..... நல்லதுனு நினைக்கிறேங்க...”


“சரி ..... இப்போ.... நானென்ன செய்ய.....”

“தரகர் யாருக்கிட்டயாவது..... சொல்லி வைங்க.... அப்றம்... பார்ப்போம்....”

தரகர்களின் வாயிலாக வந்த ஜாதகங்களைக் கண்ட கமலா......

“ஏங்க...... ஜாதகங்கள் வந்தாலும்.... பத்துல.... ரெண்டு பொருந்தறதே...... கஸ்டமா இருக்கு... அதனால... மாட்ரிமோனிலயும் பதிஞ்சிருவோம்”

“ஆபீஸ் கிளம்பும்போது மறக்காம அந்த டீடைல்ஸ் பைல் குடுத்து விடு..... சாயந்திரம் வரும்போது... பதிஞ்சுறேன்”

இவ்வாறு இருவரும் நல்ல வரனை நோக்கி காத்திருக்க, இதை அறியாத காதம்பரி வழக்கம்போல அலுவலகம் சென்று வந்தாள்.
 




Last edited:

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
தனது மகளின் ஆக்டிவா சத்தம் கேட்டு, விரைவாக காபியை தயாரித்தவர் மகள் வீட்டிற்குள் நுழையும் போது அவளை எதிர்கொண்டு காபியை கையில் கொடுத்தவாறு,

“என்னடாம்மா..... இன்னிக்கு கொஞ்சம் லேட்டா....?”

“ட்ராஃபிக்..... வழக்கம் போலம்மா...”

“உங்களுக்கு பொழுது எப்டி போச்சு...”

“வீட்டு வேல செய்ய ஆரம்பிச்சா..... நேரம் போறதே... தெரியாது”

“மதியம் .... சாப்டீங்களா...?”

“ம்.... மூணு மணிக்கு”

“இன்னிக்கு சீக்கிரமா சாப்டீங்க போல...” என சிரித்தபடி, குடித்து முடித்த காபி டம்ளரை சிங்கில் போட்டவள், அவளின் அறைக்குள் சென்று சிறு குளியல் போட்டு அம்மாவிடம் வந்தாள்.

“என்னம்மா.... செய்றீங்க..?”

“கிரைண்டர் போட போறேன்..”

“சரி... நான் போடுறேன்.... கொஞ்ச நேரம்... அப்டி உக்காருங்க..”

“நீ இப்பதான ஆபீஸ்ல இருந்து வந்த..... இரு... அம்மா பாத்துக்கறேன்”

“நான் ரைஸ் போடுறேன்.... அது வரை இருங்க...” என்றபடி அதற்கான பணிகளை மேற்கொண்டாள்.

மகளிடம் பேசியவாறு, கமலா உலர்ந்த துணிகளை மடித்தார்.

காதம்பரி அலுவலகத்தில் மட்டுமல்லாது வீட்டிலும் தனது தாய்க்கு உதவியாக எல்லா வேலைகளையும் செய்து கொடுப்பாள். அலுவலகத்தில் பணி செய்து விட்டு வரும் மகளிடம், எந்த பணியையும் கொடுக்காத நிலையிலும், அவளாக முன்வந்து தாயிற்கு உதவி செய்வாள்.

“அம்மா...என் காலேஜ் மேட் ப்ரவீணாவுக்கு டெல்லில ஜாப் கிடச்சிருக்கு.... அதுக்கு ட்ரீட் கமிங் சண்டே தராளாம்...போயிட்டு வரவாம்மா..?”

“சரிம்மா.....”

“உங்க அப்பத்தா இன்னிக்கு போன் பண்ணாங்க....”

“எதுக்குமா?” பேத்தியின் ஜாதக விசயமாக கேட்கவே அவர் பேசியது... ஆனால் அதை விடுத்து...

“கோவில் விசேசத்துக்கு இந்த வருசமாவது வர சொன்னாங்க”

“எப்பவாம்மா...?”

“அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை....., உனக்கு உங்க கம்பெனில லீவு கெடைக்குமா?”

“எத்தனை நாளுக்குமா?”

“செவ்வாய் கிழமை நைட் கிளம்புனா.... அங்கிட்டு நாளு நாளாவது இருக்கணும்.... இல்லனா... உங்க அப்பத்தா.... அதுக்கு எதாவது சொல்லுவாங்க”

“ஜாப்ல ஜாயிண்ட் பண்ணதில்ல இருந்து இது வரை நான் லீவே போடல... அதனால...லீவுனு நான் போயி கேட்டா கண்டிப்பா கெடைக்கும்மா... அப்பாவுக்கு லீவு இருக்காணு கேளுங்க.... இருந்தா எங்க ஆபீஸ்ல லீவு சொல்றேன்மா..”

“உங்க அப்பாக்கு எப்பவும் எதாவது சாக்கு சொல்லுவாறு..... இந்த முறை சொல்லி பாப்போம்..... கிடச்சா போயிட்டு வருவோம்”

"நாம ரெண்டு பேரும் என்னோட லெவந்த் லீவுல ஊருக்கு போனதும்மா...”, என்றவாறு அரைத்த அரிசி மாவை அள்ளிவிட்டு உழுந்தை போட்ட மகளிடம்,

“சரி நீ போயி ரெஸ்ட் எடு.... அம்மா பாத்துக்குறேன்”

“அவ்வளவு தான்மா...அப்பா வர மாதிரி வண்டி சத்தம் கேட்குது... நீங்க அப்பாவை கவனிங்கம்மா....”

“அவரு வரட்டும்.... பரவாயில்ல...நான் பாக்குறேன்”

“மொதல்ல அப்பாவைக் கவனிங்கம்மா...”

வீட்டிற்குள் வந்த சிதம்பரம், இருவருடைய சத்தம் வரும் திசையை நோக்கியவாறு, “காதம்பரி, அப்பாக்கு குடிக்க தண்ணீ கொண்டு வாடா.....”

உடனே அம்மாவிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு வேகமாக செம்பில் நீருடன் வந்தாள்.

“இந்தாங்கப்பா....” என நீரை கொடுத்தாள்.

வாங்கிய நீரை அருந்திவிட்டு, சற்று நேரம் மகளுடன் பேசியபடி இருந்தார். அங்கு வந்த கமலா, அவரது தாய் கோவிலுக்கு வருமாறு கூறியதைக் கூறினார்.

சற்று நேரம் யோசித்துவிட்டு, “சரி போவோம்.... ஆனா நம்ம காதம்பரிக்கு...” என மகளை நோக்க

“எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லப்பா....” என்றவாறு தனது தாயிடம் கூறியதை தந்தையிடமும் கூறினாள்.

ஒருவாராக அடுத்த வாரத்தில் ஊருக்கு செல்வதாக முடிவு செய்யப்பட்டு காதம்பரி தனது அறைக்கும், சிதம்பரம் அவர்களது அறையை நோக்கியும் சென்று விட்டனர்.

காதம்பரி, தனது மொபைலில் சிறிது நேரம் செலவழித்து விட்டு, பிறகு லேப்பை ஆன் செய்து அதில் அடுத்த வாரம் ஊரில் இல்லாத போது தனது ஷெட்யூல் வேலைகள் என்னென்ன? அதை ஊருக்குச் செல்லும்முன்பு முடிக்க வேண்டிய பணிகளை அட்டணை செய்து அதன்படி வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.

ஹாலில் இருந்த கமலாவின் போன் ஒலியில், அங்கு வந்து அதை எடுத்து பேச ஆரம்பித்தார்.

“சொல்லுங்க தரகரே, ...”

“உங்க பொண்ணூக்கு பொருந்தற மாதிரி ஏழு ஜாதகம் கைல இருக்கு”

“ம் அப்டியா.... நாளைக்கு காலைல பதினோரு மணிக்கு மேல் வாங்க” என்றவாறு போனை வைத்து விட்டு, அங்கிருந்தபடி மகளின் அறையை நோக்கியவாறு, ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்த கணவரிடம் விசயத்தினை கூறினார்.

அடுத்து வந்த நாட்களில் கோவில் விசேசத்திற்கு தங்களது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானகிரி செல்வதற்கான பணிகளை மேற்கொண்டனர்.

தந்தை மற்றும் மகள் இருவரும் அவரவர் அலுவலகப் பணிகளில் நேரத்தினை செலவிட்டனர்.

கமலா மகளுக்கு வந்த ஏழு ஜாதகத்தினை எடுத்துக் கொண்டு பொருத்தம் பார்க்கவும், பொருத்தமான ஜாதகங்களின் மாப்பிள்ளை மற்றும் குடும்பம் பற்றிய விசயங்களைக் கவனிப்பதிலும், விசாரிப்பிலும், ஊருக்கு கிளம்பும் நாளும் வந்தது.

சிதம்பரம் தனது வருகையை முன் கூட்டியே தனது தாய் மனோகரியிடம் தெரிவிக்க, அங்கு அவர் தனது குலதெய்வத்திடம், பேத்திக்கு விரைவில் மணக்கோலம் அமைய வேண்டுதலை வைத்துவிட்டு.., தனது மகனின் குடும்ப வரவை எண்ணி ஆவலோடு காத்திருந்தார்.

வேண்டுதல் நிறைவேறுமா?.......
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
Nice ud ??? Kat --- different pet name than..,??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top