நிலவைக் கொண்டு வா - 6

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#1
ஹாய் ஃப்ரண்ட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம்

கடந்த பதிவுகளுக்கு, லைக்ஸ், கமெண்ட்ஸ், சைலண்ட் ரீடிங்க் மூலம் ஊக்கப்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன். படித்துவிட்டு உங்களின் கருத்துகளைப் பதிவு செய்து என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வாருங்கள்..........

நிலவைக் கொண்டு வா - 6

3514.jpg
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#2
நிலவைக் கொண்டு வா – 6

நான் காலைநேரத் தாமரை
என் கானம் யாவும் தேன்மழை
நான் கால்நடக்கும் தேவதை
என் கோவில் இந்த மாளிகை
எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்
என்னோடு தோழி போலப் பேசிடும்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே


காதம்பரியின் குடும்பத்தினர் சுந்தரமுடையான் சென்று, வீடறிதல் முறைக்காகவும், தன் மகள் வந்து வாழக்கூடிய வீட்டின் நிலை அறிய வேண்டி அக்கம், பக்கம் வந்து விசாரித்தல் போன்ற வழக்கத்தினை செய்தனர்.


மகனின் எதிர்கால வாழ்வு சிறக்க ஏற்ற மருமகளாக பெண் இருப்பாளா?, அவர்களின் பழக்க வழக்கம், மகனின் வளர்ந்த விதத்திற்கு ஒத்திசைவானதாக இருக்குமா என்பதை அறிய ஹரிகிருஷ்ணன் குடும்பத்தினரும் சென்னையில் வந்து காதம்பரியின் வீட்டை பார்த்துச் சென்றனர்.

இருகுடும்பத்திலும் நிறைவாக உணர்ந்ததால், திருமண வேலைகளில் பெரியவர்கள் ஈடுபட்டிருக்க, மணமுடிக்க இருப்பவர்கள் அவரவர் அலுவலக வேலைகளை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்தில், அதில் கவனமாக இருந்தனர்.

மாலை நான்கு மணி, மும்பை ‘ஓம் பில்டர்ஸ்’ பத்து மாடிக்கட்டிடத்தின், ஆறாவது தளத்தில் இந்தியாவின் பல நகரங்களிலும் இயங்கி வரும் முன்னணி பில்டர்ஸ் தனது அலுவலகத்தின் சார்பாக அனுப்பிய டிசைனர்ஸ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.


2BHK, 3BHK ரெசிடென்சியல் கட்டிடங்களின் இருபது சதவீத அதிகம் பயன்படக்கூடிய வகையிலான கட்டிட வடிவமைப்புக்கு இடையிலான போட்டி.

இருபது சதவீத எக்ஸ்ட்ரா இடம் இருக்குமாறு டிசைன் செய்த பல நிறுவனங்களின் டிசைனில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து டிசைன்களில் உள்ள ஐயங்களைப் பற்றிய கேள்விகளுக்கு (வடிவமைத்த) உரிய டிசைனர்ஸ் விளக்கங்கள் கூறிக்கொண்டிருந்தனர். அதில் காதம்பரியும் இடம்பெற்றிருந்தாள்.

அதிக செலவில்லாமலும், வித்தியாசமாகவும், காண்பவரை கவரும் விதமாகவும், வழக்கத்தைவிட இருபது சதவீதம் அதிகமான இடம் பயன்பாட்டுக்கு ஏதுவாக இருந்த காதம்பரியின் 2BHK வடிவமைப்பு முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.

‘டீ’ இடைவேளையில் தன் தந்தையுடன் தொடர்பு கொண்டு பேசினாள்.

“கதம்பு, என்னடா..... ஈவ்னிங் செஷன் எப்டி போச்சு”

“நிறைய டவுட்ஸ் கேட்டாங்க..... இது கன்சியுமப்லா எப்டி இருக்கும்னு க்ளியர் பண்ண சொன்னாங்க”

“அப்றமா ..... ஃபைனலா என்னாச்சுடா?”

“என்னோட 2BHK டிசைன், இன்னிக்கு தேவைக்கு பில்டர்ஸ், கஸ்டமர் ரெண்டு பேருக்கும் ஆப்டா வரும்னு செலக்ட் பண்ணிட்டாங்கப்பா”

“அப்டியாமா ..... ரொம்ப சந்தோஷம்”

“இன்னிக்கு அடுத்ததா இண்டீரியர்ஸ் ஜென்ரல் கான்ஃப்ரன்ஸ் இருக்குபா”

“சரிடா..... அட்டெண்ட் பண்ணிட்டு நைட் கால் பண்ணு”, சரிப்பா என்றுவிட்டு கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்குள் சென்றாள் காதம்பரி.

அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த கணவரிடம், கமலா


“சம்பந்தியம்மா போன் பண்ணாங்க......மாப்பிள்ளை இன்னிக்கு மார்னிங் சென்னை வந்துட்டாராம்..... இன்னிக்கு இங்க ஆபீஸ்ல வேலயாம்”

“எப்பொ ஊருக்கு கிளம்பராராம்?”

“நாளைக்கு நைட்டு”

“அப்பொ காலைல போயி, அவங்க பிளாட்லயே பாத்துட்டு வாரேன்”

“சரி காதம்பரிட்ட பேசினீங்களா?”

“இப்பொ அவளுக்கு கான்ஃப்ரன்ஸ்....... முடிஞ்சதும் பேசுவா”

“நாளைக்கு எப்பொ வருவா?”

“ஏழு மணிக்கு ஃப்ளைட்...... அப்டியே ஆபீஸ்ல இருந்து போயி பிக்கப் பண்ணிட்டு வந்துரேன்”

அதன் பிறகு பேசிய மகளிடம், நிறைய அறிவுரைகளை வழங்கி அன்றைய தினம் எவ்வாறு போனது என்பது பற்றியும் விசாரித்து விட்டு, அடுத்த நாள் அங்கிருந்து கிளம்பும் முன்பு
தன்னிடம் பேசுமாறும் கூறிவிட்டு வைத்தார், கமலா.


சிதம்பரம் முன்பே பேசியதால், அடுத்தநாள் அவளை ஏர்போர்டில் வந்து பிக் அப் செய்து கொள்வதாக கூறிவிட்டு வைத்தார்.

காலையில் எழுந்து தினசரி வேலைகளை முடித்த பின்பு மருமகனாக வர இருக்கும் ரகுநந்தனுக்கு போன் செய்துவிட்டு நேரில் காண சென்றார், சிதம்பரம்.


“வாங்க சார்”

“இருக்கட்டும் தம்பி, நல்லாயிருக்கீங்களா?”

“இருக்கேன்........ என்ன சாப்டுறீங்க...டீ இல்ல காஃபீயா?”

“ஒன்னு வேணாம், வரும்போது தான் பிரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு வந்தேன், நீங்க உக்காருங்க.... உங்கள நேரில பாக்கறதுக்காக வந்தேன்.... வேற விசயம் ஒன்னுமில்ல”

“சரி, பால் இருக்கு..... இண்ஸ்டண்ட் காஃபீ கலந்து எடுத்துட்டு வரேன்...”

“இல்லபா இடையில எதுவும் குடிக்க மாட்டேன், ஜாப்லாம் எப்படி போகுது?”

“லாஸ்ட் த்ரீ இயர்ஸ்ஸா சாஃப்ட்வர் கம்பெனிய ரன் பண்ணீட்டு இருக்கேன்....நல்லா போகுது..... அது விசயமா தான் அப்பப்போ வெளிநாடு போற மாதிரி இருக்கும்”

“பொண்ணு போட்டோல பாத்திருப்பீங்கனு நினைக்கிறேன்..... உங்களுக்கு பிடிச்சிருக்கா...?”

“பார்த்தேன்..... பெரியவங்க பாத்து செய்யறது ஒன்னும் பிரச்சனை இல்ல சார் எனக்கு”

“மாமானு சொல்லுங்க தம்பி......”

“ம்... சாரி .... புதுசா பாக்றதால அப்டி சொன்னேன்.... போக போக சரியாகிரும்.... சா.. ம்.....
மாமா”


“நல்லா இருக்கணும்பா....., இன்னிக்கு ஊருக்கு போறீங்களா?”

“ஆமா மாமா, அங்க எல்லாரும் கல்யாணத்துக்கு வந்துட்டாங்க.... மாப்ள இன்னும் வராம இருந்தா நல்லா இருக்காது..... அப்டினு அப்பா சொன்னாங்க.... இன்னும் பத்து நாள் தான இருக்கு”

“அதுவும் சரி தான் தம்பி..... அப்போ நான் கிளம்புறேன்....”

“சரி மாமா” என்றவாறு சிதம்பரம் விடைபெற்றுச் சென்றவுடன், ரகு ஆஃபீஸை நோக்கி பயணித்தான்.

அன்று மாலை அலுவலகத்திலிருந்து நேரடியாக காதம்பரியை ரிசீவ் பண்ணுவதற்கு ஏர்போர்ட் சென்றார் சிதம்பரம்.


மணி ஏழரை ஆகியும் இன்னும் காதம்பரி வராததால் அவளின் வருகைக்காக காத்திருந்தார். அவள் வரும் ஃப்ளைட் இரண்டு மணி நேரம் லேட் என அனோன்ஸ்மெண்ட் வந்திருந்தது.

ஆனால் இதை அறியாத கமலா, காதம்பரி வந்துட்டாளா என அரை மணி நேரத்திற்கு முன்பு கால் செய்திருந்தார்.
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#3
அனோன்ஸ்மெண்ட் வந்தவுடன் மனைவிக்கு போன் செய்து விசயத்தை சொல்லிவிட்டு, சற்றே மனமறியா சஞ்சலத்துடன், மகளை தனியாக அனுப்பியது தவறோ என்று எண்ணியவாறு அமர்ந்திருந்தார்.

தாய் மும்பை செல்ல வேண்டாம் என்று சொல்வது சரியென்றாலும், அலுவலகத்தில் தன்னை அனுப்ப எண்ணுவதிலும் தவறில்லை என்பது புரிந்தாலும், இப்படி ஒரு இக்கட்டான சூழலை எதிர்பார்க்கவில்லை, காதம்பரி.


சற்றே ஆறப்போட்டாள், பிறகு தான் போயாக வேண்டிய கட்டாயத்தினையும் எடுத்துக் கூறினாள்.

“எங்க ஆஃபீஸ் சார்பா நான் அனுப்ன டிசைன் செலக்ட் ஆகி இருக்குமா”

“அதுக்கு ..... பத்து நாள்ல கல்யாணத்தை வச்சிட்டு உன்ன அனுப்ப முடியுமா?”

“அம்மா...... இது யாரும் இப்டி எதிர்பாக்கல.... ஆனா .... செலக்ட் ஆன அஞ்சு டிசைன்ல என்னோடதும் ஒன்னு....... இந்த டிசைன் ரிலேட்டடா குவஷின் பண்ணுவாங்கம்மா.... அப்பொ டிசைன் பண்ணவங்களாலதான ஆன்சர் பண்ணமுடியும்.....

அந்த வெரிஃபிகேஷன் அன் டெஸ்டிங் செஷன்ல.....நிறைய பில்டர்ஸ் கலந்துப்பாங்க.... அப்பொ எல்லா வகையிலயும் எந்த டிசைன் ஆப்டா இருக்கோ அதுக்கு பெஸ்ட் டிசைனர் அவார்டு கிடைக்கும்,

அதுக்கப்பறம் எங்க கம்பெனியோட ப்ளேஸ் இன்னும் முன்னாடி வரும், எங்களுக்கு இன்னும் நிறைய ஆர்டர்ஸ் வரும், சம்பளம் கூடும், இப்டி இன்னும்..... எனக்கும், எங்க கம்பெனிக்கும் நிறைய பெனிஃபிட்ஸ் கிடைக்கும்...”

“அது யாருக்கு இப்பொ வேணும்”

“அம்மா.... அப்டி போகலனா நஷ்ட ஈடு எங்க கம்பெனிக்கு கொடுக்கணும்..... அப்றம் வேற எங்கயும் என்ன ப்ளேஸ் ஆக விடமாட்டாங்க”

“நீ வேலைக்கு போகணும்னு ஒன்னு இல்ல அங்க”

“அதுக்காகவா நான் படிச்சேன்”

“சொன்னா புரிஞ்சுக்கோ காதம்பரி”

“வேலய விட்டு நிக்கறதா இருந்தா... த்ரீ மந்த்ஸ் முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணனும்.... அப்டிதான அக்ரீமெண்ட் சைன் பண்ணி அங்க ஜாப் போனேன்.... இல்லனா நஷ்ட ஈடா எத்ன இலட்சம் கேட்டாலும் கொடுங்க......”

“அப்பாவை விட்டு பேச சொல்றேன்”

“அவங்க தெளிவா அக்ரீமெண்ட் போட்டு தான் வேலைக்கு சேர்த்திருக்காங்கம்மா...”

சிதம்பரம் மிகவும் யோசித்து, பிறகு மகளிடம்


“கண்டிப்பா வேலைக்கு போகணுமாம்மா”

“ஆமாப்பா....”

“இல்ல அவங்களுக்கு பெனால்டியா.... எவ்வளவு கேப்பாங்கனு தெரியுமாமா?”

“அவங்களுக்கு இந்த ப்ரொஜெக்ட் செலெக்ட் ஆனா எவ்வளவு வருமானம் வருமோ அவ்வளவு எதிர்பார்ப்பாங்கப்பா...”

“அப்டியா...உங்க MD ட்ட பேசி பாக்கவாம்மா...”

“வேணாம்பா.....”

“முன்னாடியே தெரிஞ்சிருந்தா.... கல்யாணத்தை கொஞ்சம் லேட்டா ஃபிக்ஸ் பண்ணீருக்கலாம்..... இப்பொ பத்திரிக்கை அடிச்சு எல்லா சொந்த பந்தங்களுக்கும் கொடுத்து முடிச்சாச்சு.... இன்னும் கல்யாண வேலைலாம் பாக்கி இருக்கு..... இல்லனா நானு உங்கூட வந்துருவேன்.... யோசிப்போம்.....”

மகளிடம் சொல்லாமல், அவளின் MD வசம் சிதம்பரம் பேசினார். அதற்கு அவர், அவளுக்கு நல்ல ஆபர்சூனிட்டி அவர்களின் நிறுவனம் மூலம் கிடைத்திருப்பதாகவும், இந்த விழா, கான்ஃபரன்ஸ் மற்றும் டெஸ்டிங்க் செஷன் அனைத்திலும் மொத்தம் ஐந்து நபர்கள் தங்களின் நிறுவனம் சார்பாக கலந்து கொள்வதாகவும், அதனால் பயப்படாமல் அனுப்பி வைக்குமாறும் கூறினார்.


ஒரு மனதாக மனைவியிடமும் விசயத்தினைக் கூறி சம்மதிக்க வைத்திருந்தார்.

சரியாக இரவு ஒன்பது மணிக்கு வந்த காதம்பரியை நேரில் பார்த்த பிறகே நிம்மதியாக உணர்ந்தார், சிதம்பரம். வீட்டிற்கு வர இரவு பத்தரை ஆகிவிட்டது.


“ஏன்மா ரொம்ப டல்லா இருக்க”

“ஒன்னுல்லப்பா” , அதற்கு மேல் பேசாமல் உடன் வந்த மகளை கவனிக்க இயலாத அளவிற்கு ட்ராஃபிக்.

வீட்டிற்கு வந்த பிறகும் இருவரது கேள்விகளுக்கும், ஒற்றை பதிலை கொடுத்தவள், அமைதியாக உண்டு விட்டு படுக்கச் சென்றுவிட்டாள்.


நேரமானதால் மகளிடம் அதிகமாக எதுவும் பேச்சு கொடுக்காமல் கமலாவும், சிதம்பரமும் திருமண வேலைகளைப் பற்றி பேசியபடி உறங்கச் சென்றனர்.

அடுத்த நாள் வழக்கம்போல எழுந்து வேலைகளை கவனித்த கமலத்திற்கு ஏழு மணியாகியும் எழாத மகளை எண்ணியவாறு, அவளின் அறைக்குச் சென்றார்.


“காதம்பரி................... என்னம்மா இன்னும் எழாம இருக்க....?”

“ம்.... ம்ம் ....”

“காதம்பரி......”

“ம்......ம்.....”

“என்னடா செய்யுது”, என பதறியபடி மகளின் படுக்கை அருகே வந்தவர், மகளின் கை தொட்டார்..... கை சில்லென்று இருந்தது......

பதறியவர்.. கன்னங்களில் தட்டி..... மகளை அழைத்தார்.

ம்.... என்பதற்கு மேல் அவளால் பேச இயலவில்லை. ஆனால், அவள் மூடிய இமைகளுக்குள் இருந்து கண்ணீர் வந்தபடி இருந்தது.

கமலத்தின் சத்தம் கேட்டு பதறியபடி வந்த சிதம்பரம், மகளின் நிலை புரியாமல், உடனே அம்புலன்ஸிற்கு போன் செய்தார். சற்று நேரத்தில் பிரபல மருத்துவமனையின் எமெர்ஜென்ஸி வார்டில் அட்மிட் செய்யப்பட்டாள் காதம்பரி.


மருத்துவர்கள் அவர்கள் இருவரிடமும் சில முக்கியமான விசயங்களைக் கேட்டறிந்துவிட்டு, அவளின் சிகிச்சைகளைக் கவனிக்கச் சென்று விட்டனர்.

மகளுக்கு என்ன செய்கிறது என்பதை டாக்டர்கள் கூறுவார்கள் என இருவரும் காத்திருந்து அன்று மாலையானது. அதுவரை அவர்களிடம் எதுவும் கூறாததால் அவர்களே டாக்டரிடம் சென்று கேட்டார்கள்.

அனைத்து டெஸ்ட்களும் எடுத்திருப்பதாகவும், சற்று பொறுமையுடன் கோ-ஆபரேட் செய்யுமாறும் கூறிச் சென்றார்கள்.

அதன்பின், சிதம்பரம் தனது தாயை போனில் அழைத்து மகளுக்கு சற்று உடல் நலக்குறைவாக இருப்பதால் சென்னை கிளம்பி வருமாறு கூறினார்.
 
#5
காதம்பரி க்கு என்ன ஆச்சு 🤔நல்லா தான ப்ராஜெக்ட் முடிசிட்டு கிளம்பி வந்தா 😗😗ஐயோ முடியல சரோ mam கரெக்டா இப்படி வந்து பாஸ் கொடுத்துட்டீங்க 😡😡😡
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#8
So sad 😢... Kat...what happened?.... Ippdi kondu vanthu நிருத்திட்டிங்களே🙄🙄.... Romba யதார்த்தமா போகுது கதை...💞💞 சீக்கிரம் next epi குடுத்த்துருங்க... Eagerly waiting dear 😍😍
 

Nachuannam

Author
Author
SM Exclusive Author
#9
அருமையான எபி அக்கா 😍😍...

அவளுக்கு என்ன ஆச்சு😨😨...

இப்டி எண்டு கார்ட் போட்டிங்களேக்கா... நெக்ஸ்ட் எபியோட சீக்கிரமா வாங்க...
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top