நிலவைக் கொண்டு வா - 7

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#1
ஹாய் ஃப்ரண்ட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம்

கடந்த பதிவுகளுக்கு, லைக்ஸ், கமெண்ட்ஸ், சைலண்ட் ரீடிங்க் மூலம் ஊக்கப்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன். படித்துவிட்டு உங்களின் கருத்துகளைப் பதிவு செய்து என்னை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வாருங்கள்..........

நிலவைக் கொண்டு வா - 7
3514.jpg
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#2
நிலவைக் கொண்டு வா – 7ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்

நீருக்கு நிறம் ஏது நேசத்தில் பேதம் வராது
உன் அன்பில் அழுதாலும் கண்ணீர் இனிக்கும்
முள் மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை
நீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்
நம்மை விழி சேர்த்ததோ இல்லை விதி சேர்த்ததோ
உள்ளம் ஒன்றானதே போதும் இன்பம் போதும்


காலையில் எழுந்த வதனி, அவளால் இயன்ற பிரேக்ஃபாஸ்ட், க்கர்டு ரைஸ் வித் பொட்டடோ என சிடுமூஞ்சிக்கும் சேர்த்து செய்து விட்டு காலேஜ் கிளம்பினாள்.

எட்டு மணிக்கு அவர்களின் பிளாட்டுக்கு வந்தவன், கிச்சனில் நிற்கும் வதனியை ஆச்சர்யம் கலந்த பார்வையோடு,


“வதனி....... என்ன செஞ்சுட்டு இருக்க”

ஹூம்......சட்டியும், பானையும் செய்யுறேன்’

“மார்னிங்கு.... உப்புமா..............., மதியம் தயிர் சாதத்துக்கு உருளைக் கிழங்கு செஞ்சுருக்கேன்”

“எனக்குமா சேர்த்து செஞ்ச....”

‘எனக்கு மட்டும் செஞ்சா..... வந்தவுடனே கீத் என்னைய செஞ்சுரும்’

“ஆமா....”, என மெலிந்த குரலில் பதில் வந்தது.

“உனக்கு நேரமாகுது......... நீ கிளம்பு........ நான் கிளம்பும் போது இங்க வந்து சாப்டுட்டு..... எனக்கு லன்ஞ் எடுத்துக்கறேன்.....”

“கீ.......”

“நான் ஒன்னு வச்சிருக்கேன்...... நீ கிளம்பு நான் பாத்துக்கறேன்”


‘என்னது உன் கிட்டயும் கீ யா?...... காந்தி செத்துட்டாராங்கிற மாதிரி ...... இன்னும் அப்டேட் ஆகாம.... பச்ச மண்ணா இருக்கியே வதனி.........!’

CA வில் இண்டர்மீடியட் கோர்ஸினை முடிக்க இருக்கும் நிலையில், அடுத்து ட்ரைனிங் சார்பாக ஆடிட்டரிடம் சென்று இரண்டரை ஆண்டுகள் ட்ரைனியாக பணியாற்ற ஆடிட்டர் ஒருவரை வலை வீசி தேடிக்கொண்டிருக்கிறாள்.


சென்னையில் அமைந்தால் நன்றாக இருக்கும் என தேடியவளுக்கு அங்கு அனைவரும் எங்கேஜாக இருப்பதால், திருச்சி செல்வதாக முடிவானது.

போனில் மட்டுமே தொடர்பு கொண்டிருந்தவளை, நேரில் வந்து செல்லுமாறு ஆடிட்டர் கூறியிருந்தார்.

IPCC பரீட்சை முடிந்தவுடன் திருச்சி சென்று வரலாம் என அவளின் தாய் கீதாஞ்சலி கூறியிருந்தார்.

மாலை வீடு திரும்ப மிகுந்த யோசனையுடன் இருந்தவள் ‘எல்லாம் இந்த கீர்த்திக்கானால வந்தது.....’ என எண்ணியவாறு, மிகவும் தாமதமாக வீடு திரும்பினாள்.

அங்கு ஒரு அதிர்ச்சி அவளுக்காக காத்திருந்தது.


இவர்களின் பிளாட்டில் சிடுமூஞ்சி சிரத்தையோடு கிச்சனில் ஏதோ செய்து கொண்டிருந்தான்.

‘அதுக்குள்ள எப்டி வந்தான்?’

“வா..... வதனி.......”

‘எங்க வீட்டுக்குள்ள வந்து என்னயே வா....னு ..... கேட்டா..... நான் உனக்கு விருந்தாளியாயிருவேனா..... நான் இந்த வீட்டுக்காரியாக்கும்!’


“ம்.....என்ன இவ்ளோ சீக்கிரமா வந்துட்டிங்க?”

“காலைல ...... நீ நிறைய வேல பாத்துட்டு காலேஜ் போன...... ஈவ்னிங் நான் கொஞ்சம் ஃப்ரீயா இருந்தேன்..... கிளம்பி வந்துட்டேன்......

வந்து பாத்தா உன்ன காணோம்..... சரி நமக்கு தெரிஞ்சத செய்வோம்னு கிச்சன்ல போயி பாத்தா அங்க ஒன்னும் இல்ல..... ‘ம்.......வாங்கி வைக்கணும்’ சரினு இங்க வந்துட்டேன்”

இங்கிதத்தோடு பேசியபடியே அவனின் பிளாட்டிற்கு சென்றவன் அரை மணி நேரம் கழித்தே வந்தான்.


வதனி அதற்குள் அவளை ரெஃப்ரெஷ் செய்து காஃபீ குடித்துவிட்டு, அவன் வாங்கி வந்திருந்த ஸ்நாக்ஸுடன் ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்து உண்டபடி டிவி பார்த்தாள்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த அவளின் விளையாட்டு தோழமைகள் இருவர், அவளின் எதிரில் இருந்த ஸ்நாக்சை எடுத்து உண்டபடி,

“வதன், ஏன் இன்னிக்கு ரொம்ப லேட்...?”


“வாங்கடா..... கொஞ்சம் நோட்ஸ் எடுக்கவேண்டி இருந்தது..... அதாண்டா....”

“நோட்ஸ் வேணும்னா.... புக் ஸ்டால்ல வாங்காம, எங்க போயி எடுப்ப.....?”, இது நரேன்

“லைப்ரரிலதான்டா”

“ஷாப்ல வாங்கிரு.... எங்களுக்கு போரடிக்குது.....”, இது கவின்


“சரி.... வேற என்ன பண்ணுனீங்க... இன்னிக்கு?”

“கிரிக்கெட் விளையாடலாம்னு இருந்தோம்.....

நீ, நம்ம மீனு, மதன் வரல.... மூனு பேரு இல்லனால..... வேற விளையாட்டு விளையாடலாம்னு யோசிச்சு,..... கள்ளன் .... போலீஸ் விளையாண்டோம்.....”

“அப்றமென்ன....”

“இருந்தாலும்..... நீ வந்தா.... புது புது கேம் சொல்ற.... இன்னும் ஜாலியா இருக்கும்”

“நாளைக்கு சீக்கிரமா வந்துரேண்டா.......”


“இப்பொ தான் உங்க மம்மி ஊருக்கு போயிட்டாங்கல்ல..... அப்ப எல்லாரையும் இங்க கூட்டிட்டு வரவா?”

“இல்லடா..... எதித்த வீட்ல ஒரு ஹிட்லர் இருக்காரு.....அதனால.... நாளைக்கு பாப்போம்....”

“யாருக்கும் பயப்படக்கூடாதுனு ..... எங்கட்ட சொல்லுவ”

“இது பயமில்லடா..... அப்றம் ஊருல இருந்து வந்த எங்கம்மாட்ட போட்டுக்குடுத்துட்டா.... எங்கம்மா என்ன உங்களோட சேர விடமாட்டங்க”


“நாங்க குட் ஃப்ரெண்ட்ஸ் தான உனக்கு”

“ஆமாடா.... ஆனா அந்த ஹிட்லர் பேட் பாய்......அதான்....”

“அப்டி சொல்றியா?”, என்று அவளுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த அவளின் சிடுமூஞ்சி,

ஆஃபீஸ் விசயமாக வெளியே சென்று, ஒரு மணி நேரத்தில் திரும்பி வருவதாகக் கூறிவிட்டு செல்ல எண்ணி அங்கு வர......, இரு வாண்டுகளுடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்து.......

“என்ன அங்க...?”, என்றவாறு உள்ளே வந்தவன்

‘மூக்குல வேர்த்துரும்போல”

“இல்ல சும்மா.... என்னை பாக்க வந்தாங்க.....”


“டேய் பார்த்தாச்சுல்ல..... போங்க.... போயி ஹோம்வர்க் செய்யுங்க...”, என்றவுடன் இருவரும், வதனி முகம் பார்த்து,

இவந்தான் அந்த ஹிட்லரா என்பது போல பார்க்க.... அவளும் ... ஆம் என்பது போல் கண்களை மூடி திறக்க இருவரும் வேகமாக அங்கிருந்து அகன்றனர்.

“உன் வயசென்ன.... அவங்க வயசென்ன ..... அவங்க கூட எதுக்கு சின்னபுள்ள மாதிரி இன்னும் திரியற”


‘ஏங்கூட சேரவங்களோட தான.... நான் விளையாட முடியும்’

“நான் எங்கயும் போகறதில்லயே!”

“இன்னிக்கு மட்டும் போகல..... அத சொல்றியா?”


என்ன சொல்ல என்பது போல பார்த்தவள், ஆம் என்று ஒத்துக்கொண்டால் அதற்கும் அரைமணி நேரம் எதாவது மண்டகபடி நிச்சயம் என்பதை உணர்ந்து அமைதியாக இருந்தாள்.

ஆனால் மனம் சொன்னது...... ‘எல்லாத்தையும் பயபுள்ள கண்டுபிடிச்சுருது..... பேசாம இது டிடெக்டிவாகிருந்திருக்கலாம்’


“சரி பாத்து இருந்துக்கோ, நான் ஒன் அவர்ல வந்துருவேன்....”

‘அட இடத்த காலி பண்ணுப்பா..... காத்து வரட்டும்’
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#3
அப்பாடி என்று மூச்சுவிட்டு டோர் லாக் செய்துவிட்டு, கிச்சனில் அவன் என்னென்ன செய்திருக்கிறான் என காண வேண்டி அங்கு சென்ற போது, அவளது போன் அழைத்தது.

ஹாலுக்கு வந்தவள், நியூ நம்பர் என வருவதை பார்த்து, ‘யாரது’ என எண்ணியவாறு “ஹெலோ” என்க....

“நான் ஹிட்லர் பேசுறேன்....உங்கப்பாவோட வண்டி சாவிய எடுத்துட்டு கீழ வா”

“ம்....” சற்று நேரத்தில் அது யாரென்பது புரிந்துவிட...

‘தொலஞ்சேன்.... இன்னிக்கு.... ஒட்டுக்கேட்ருக்கான் யுவர் ஆனர்..... இவன.., ஊர விட்டு நாடு கடத்தணும்’

“இதோ வரேன்” என்றவாறு அடுத்த ஐந்தாவது நிமிடம்.... சாவியுடன் அவன் முன் நின்றாள்.

சற்று கோபம் இருந்தாலும், அதை அவளிடம் காட்டாமல், “அங்க பாரு” என்றான் கை நீட்டி....

‘இவன் ஒரு அக்கப்போறு..... அங்கபாரு....., அண்டர் வேருன்னு....’

சற்று தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவனது டூவீலரை நோக்கி, அங்கு..... போலியோ வந்தது போல அவனது யமஹா நின்றிருந்தது.

அதைக் கண்டவுடன் யாருடைய வேலை அது என்பது அவளுக்கு புரிந்தாலும், அறியாதவள் போல அவள் கையில் இருந்த சாவியை அவனிடம் நீட்டினாள்.

‘இதெல்லாம் சாதாரணமப்பா...!’

அவனும் அதைப் பெற்றுக்கொண்டு, பத்திரமாக இருக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

சரியாக ஒரு மணி நேரத்தில் அங்கு வந்தவன் அவளிடம் இரு பார்சலை தந்து உண்ணுமாறு கூறிவிட்டு, அவன் பிளாட்டில் சென்று கையில் இருந்த ஃபைலை வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து வந்தான்.

‘வதனி, இன்னைக்கு நீ யாரு மூஞ்சில முழிச்சனு தெரியலயே.... எங்க ஆரம்பிச்சு என்னைக்கு? எங்க? இவன் முடிக்க.....? இப்பவே கண்ண கட்டுதே.... ’

அமைதியாக இருவரும் உண்டு முடித்தபின், வதனி கிச்சனுக்குள் இருந்தபடியே இல்லாத வேலையை இருக்குமாறு செய்ததாக பாவனை செய்தபடி இருக்க அங்கு வந்தவன்,

“இந்த பேட் பாய் நம்பர யாரு கிட்டயும் கொடுத்துராத...வதனி....... கார்த்தி கேட்டா.... ஆர்த்தி கேட்டானு யாருகிட்டயும் கொடுத்து....... அவங்ககிட்ட இருந்து எனக்கு கால் வந்தா .... கால் உனக்கு தான் வரும்..... ஏன்னா... அன்னோன் நம்பர்லாம் கால் ஃபார்வெர்டுல உன் நம்பர் தான் குடுக்கப்போறேன்....”, என்றான் சிரித்தபடி...

“எங்க இருந்தாலும் இந்த நம்பர நான் யூஸ் பண்ணுவேன். உனக்கு எதாவது பேசனும்னா, கேக்கனும்னா தாராளமா பேசலாம், வாட்ஸ்அப் பண்ணலாம்”, என சிரித்தபடி அங்கிருந்து அவன் பிளாட்டிற்கு சென்றுவிட்டான்.

‘க்லொஸ் அப்’ விளம்பரத்துக்கு போப்பா ரொம்ப நல்லா சிரிக்கிற'

அது வரை அவனை ஒரு பொருட்டாக எண்ணாதவள், இரு தினங்களாக வழக்கத்திற்கு மாறாக அவன் தன்னிடம் அமைதி காப்பதை உணர்ந்திருந்தாள்.

எப்பொழுதும் கண்டிப்பும், கறாராக இருப்பவன் சற்று லிபரலாக தன்னிடம் இருப்பதை யோசித்தாள். மிக சிறு வயதில் அவளிடம் சிரித்து பேசியிருக்கிறான். ஆனால், இங்கு வந்த கடந்த இரு ஆண்டுகளில் இன்று தான் முதன் முதலாக சிரிக்கிறான்.

பல அழகிகள் அவனை வயது வித்தியாசமின்றி அணுக முயற்சிப்பதை நேராக கண்டிருக்கிறாள். இவள் சிறு பெண் என நினைத்து இவளை தூதிற்காக அனுப்பிய பல பெண்களை தன் மனக்கண் முன் கொண்டு வந்தாள்.

‘மச்சமுள்ள இந்த மன்னார, மடக்க போற ஃபிகரு யாருனு தெரில...’ என எண்ணியபடி அவன் மொபைல் எண்ணை சிடுமூஞ்சி என ஷேவ் செய்தாள்.

‘இன்னிக்கு ஒரு நாளு நம்மள பாத்து சிரிச்சதுக்கு அவ்வளவு பெரிய ரிவார்டெல்லாம் கொடுக்க முடியாது..... ரொம்ப நாளு நம்மகிட்ட சிடுசிடுன்னு பேசுனதால சிடுமூஞ்சி தான் கரெக்ட்...’, என்ற மனவோட்டத்துடன் அவனது எண்ணை சேமித்த கணத்தை நினைத்தவாறு, ஹாஸ்டலில் இருந்து கிளம்பி ஆடிட்டர் அலுவலகம் வந்தவளுக்கு சற்று அதிகமான வேலை. ஆகையால், அவனுக்கு அழைக்க, குறுஞ்செய்தி அனுப்ப மறந்திருந்தாள்.

மதிய உணவின் முன் அமர்ந்தவளுக்கு சிடுமூஞ்சியின் நினைவு வர, கால் செய்யும் துணிவு இல்லாததால், ‘எதிர்பாரா வேலை காரணமாக என்னால் வர இயலவில்லை, அம்மா அப்பா மட்டும் வருகிறார்கள் இன்று’ என ஆங்கிலத்தில் குறுஞ்செய்தியை அவனுக்கு அனுப்பிவிட்டு உண்ணலானாள்.

அலுவலக நேரத்தில் சைலண்ட் மோடில் வைத்திருப்பது வதனியின் வழக்கம். அது ட்ரைனிங்கிற்கு வருமுன்பே டூ, டோண்ட் என இரண்டிலும், பத்து, பத்து, ஆத்திசூடி போல ஆடிட்சூடி கொடுத்தபின்பே அலுவலகத்தில் அனுமதித்திருந்தனர்.


உண்டு முடித்தபின் போனை எதேச்சையாக எடுத்தவள், வந்திருந்த குறுஞ்செய்திகளைப் படித்தாள்.


படித்தவள்.... என்ன பதில் அனுப்ப என யோசித்தவாறு அவளின் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#4
ஆத்திசூடி போல ஆடிட் சூடி... நல்லா இருக்கு😉😂😍 ... இப்போ இந்த சிடுமூஞ்சிய யார் கேட்டா... Kat Enna ஆனா அத சொல்லுங்க author ji.....👌😍😍
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#7
aduttha ud la vara....kad
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#8
ஆத்திசூடி போல ஆடிட் சூடி... நல்லா இருக்கு😉😂😍 ... இப்போ இந்த சிடுமூஞ்சிய யார் கேட்டா... Kat Enna ஆனா அத சொல்லுங்க author ji.....👌😍😍
adudha ud la vara....
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#9
adudha ud la vara....
ஐயோ இன்னும் ஒரு வாரம் வெயிட் பண்ணனும் அதுக்கு 🙄... சீக்கிரம் வாங்க சரோ dear...😍
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top