நிலவைக் கொண்டு வா - 7

#24
அப்பாடி என்று மூச்சுவிட்டு டோர் லாக் செய்துவிட்டு, கிச்சனில் அவன் என்னென்ன செய்திருக்கிறான் என காண வேண்டி அங்கு சென்ற போது, அவளது போன் அழைத்தது.

ஹாலுக்கு வந்தவள், நியூ நம்பர் என வருவதை பார்த்து, ‘யாரது’ என எண்ணியவாறு “ஹெலோ” என்க....

“நான் ஹிட்லர் பேசுறேன்....உங்கப்பாவோட வண்டி சாவிய எடுத்துட்டு கீழ வா”

“ம்....” சற்று நேரத்தில் அது யாரென்பது புரிந்துவிட...

‘தொலஞ்சேன்.... இன்னிக்கு.... ஒட்டுக்கேட்ருக்கான் யுவர் ஆனர்..... இவன.., ஊர விட்டு நாடு கடத்தணும்’

“இதோ வரேன்” என்றவாறு அடுத்த ஐந்தாவது நிமிடம்.... சாவியுடன் அவன் முன் நின்றாள்.

சற்று கோபம் இருந்தாலும், அதை அவளிடம் காட்டாமல், “அங்க பாரு” என்றான் கை நீட்டி....

‘இவன் ஒரு அக்கப்போறு..... அங்கபாரு....., அண்டர் வேருன்னு....’

சற்று தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவனது டூவீலரை நோக்கி, அங்கு..... போலியோ வந்தது போல அவனது யமஹா நின்றிருந்தது.

அதைக் கண்டவுடன் யாருடைய வேலை அது என்பது அவளுக்கு புரிந்தாலும், அறியாதவள் போல அவள் கையில் இருந்த சாவியை அவனிடம் நீட்டினாள்.

‘இதெல்லாம் சாதாரணமப்பா...!’

அவனும் அதைப் பெற்றுக்கொண்டு, பத்திரமாக இருக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

சரியாக ஒரு மணி நேரத்தில் அங்கு வந்தவன் அவளிடம் இரு பார்சலை தந்து உண்ணுமாறு கூறிவிட்டு, அவன் பிளாட்டில் சென்று கையில் இருந்த ஃபைலை வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து வந்தான்.

‘வதனி, இன்னைக்கு நீ யாரு மூஞ்சில முழிச்சனு தெரியலயே.... எங்க ஆரம்பிச்சு என்னைக்கு? எங்க? இவன் முடிக்க.....? இப்பவே கண்ண கட்டுதே.... ’

அமைதியாக இருவரும் உண்டு முடித்தபின், வதனி கிச்சனுக்குள் இருந்தபடியே இல்லாத வேலையை இருக்குமாறு செய்ததாக பாவனை செய்தபடி இருக்க அங்கு வந்தவன்,

“இந்த பேட் பாய் நம்பர யாரு கிட்டயும் கொடுத்துராத...வதனி....... கார்த்தி கேட்டா.... ஆர்த்தி கேட்டானு யாருகிட்டயும் கொடுத்து....... அவங்ககிட்ட இருந்து எனக்கு கால் வந்தா .... கால் உனக்கு தான் வரும்..... ஏன்னா... அன்னோன் நம்பர்லாம் கால் ஃபார்வெர்டுல உன் நம்பர் தான் குடுக்கப்போறேன்....”, என்றான் சிரித்தபடி...

“எங்க இருந்தாலும் இந்த நம்பர நான் யூஸ் பண்ணுவேன். உனக்கு எதாவது பேசனும்னா, கேக்கனும்னா தாராளமா பேசலாம், வாட்ஸ்அப் பண்ணலாம்”, என சிரித்தபடி அங்கிருந்து அவன் பிளாட்டிற்கு சென்றுவிட்டான்.

‘க்லொஸ் அப்’ விளம்பரத்துக்கு போப்பா ரொம்ப நல்லா சிரிக்கிற'

அது வரை அவனை ஒரு பொருட்டாக எண்ணாதவள், இரு தினங்களாக வழக்கத்திற்கு மாறாக அவன் தன்னிடம் அமைதி காப்பதை உணர்ந்திருந்தாள்.

எப்பொழுதும் கண்டிப்பும், கறாராக இருப்பவன் சற்று லிபரலாக தன்னிடம் இருப்பதை யோசித்தாள். மிக சிறு வயதில் அவளிடம் சிரித்து பேசியிருக்கிறான். ஆனால், இங்கு வந்த கடந்த இரு ஆண்டுகளில் இன்று தான் முதன் முதலாக சிரிக்கிறான்.

பல அழகிகள் அவனை வயது வித்தியாசமின்றி அணுக முயற்சிப்பதை நேராக கண்டிருக்கிறாள். இவள் சிறு பெண் என நினைத்து இவளை தூதிற்காக அனுப்பிய பல பெண்களை தன் மனக்கண் முன் கொண்டு வந்தாள்.

‘மச்சமுள்ள இந்த மன்னார, மடக்க போற ஃபிகரு யாருனு தெரில...’ என எண்ணியபடி அவன் மொபைல் எண்ணை சிடுமூஞ்சி என ஷேவ் செய்தாள்.

‘இன்னிக்கு ஒரு நாளு நம்மள பாத்து சிரிச்சதுக்கு அவ்வளவு பெரிய ரிவார்டெல்லாம் கொடுக்க முடியாது..... ரொம்ப நாளு நம்மகிட்ட சிடுசிடுன்னு பேசுனதால சிடுமூஞ்சி தான் கரெக்ட்...’, என்ற மனவோட்டத்துடன் அவனது எண்ணை சேமித்த கணத்தை நினைத்தவாறு, ஹாஸ்டலில் இருந்து கிளம்பி ஆடிட்டர் அலுவலகம் வந்தவளுக்கு சற்று அதிகமான வேலை. ஆகையால், அவனுக்கு அழைக்க, குறுஞ்செய்தி அனுப்ப மறந்திருந்தாள்.

மதிய உணவின் முன் அமர்ந்தவளுக்கு சிடுமூஞ்சியின் நினைவு வர, கால் செய்யும் துணிவு இல்லாததால், ‘எதிர்பாரா வேலை காரணமாக என்னால் வர இயலவில்லை, அம்மா அப்பா மட்டும் வருகிறார்கள் இன்று’ என ஆங்கிலத்தில் குறுஞ்செய்தியை அவனுக்கு அனுப்பிவிட்டு உண்ணலானாள்.

அலுவலக நேரத்தில் சைலண்ட் மோடில் வைத்திருப்பது வதனியின் வழக்கம். அது ட்ரைனிங்கிற்கு வருமுன்பே டூ, டோண்ட் என இரண்டிலும், பத்து, பத்து, ஆத்திசூடி போல ஆடிட்சூடி கொடுத்தபின்பே அலுவலகத்தில் அனுமதித்திருந்தனர்.


உண்டு முடித்தபின் போனை எதேச்சையாக எடுத்தவள், வந்திருந்த குறுஞ்செய்திகளைப் படித்தாள்.


படித்தவள்.... என்ன பதில் அனுப்ப என யோசித்தவாறு அவளின் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.
😂😂😂😂😂 veryy nice
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#27

Advertisements

Latest updates

Top