நிலவைக் கொண்டு வா - 9

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#1
ஹாய் ஃப்ரண்ட்ஸ்:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:,

அனைவருக்கும் வணக்கம்

கடந்த பதிவுகளுக்கு, லைக்ஸ், கமெண்ட்ஸ், சைலண்ட் ரீடிங்க் மூலம் ஊக்கப்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன். படித்துவிட்டு உங்களின் கருத்துகளைப் பதிவு செய்து என்னை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வாருங்கள்..........

நிலவைக் கொண்டு வா - 9

3514.jpg
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#2
நிலவைக் கொண்டு வா – 9

மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்


மனவீணை என நாதமீட்டி
கீதமாகி நீந்துகின்ற தலைவா
இதழோடையிலே வார்த்தையென்னும்
பூக்களாகி மிதக்கின்ற பாட்டா


ரகுநந்தன் – காதம்பரிக்கு பேசியிருந்த திருமணம், காதம்பரியின் சுகவீனத்தால்.....பத்திரிக்கையில் குறித்திருந்த நேரத்தில், குறித்த இடத்தில் ரகுநந்தனுக்கும் - சந்திரவதனிக்கும் இடையே நடந்து முடிந்தது. எதிர்பாரா நிகழ்வாதலால் , இயல்புக்கு வர இருவராலும் இயலவில்லை.

வதனிக்கு, வாழ்க்கைத் துணையாக வந்தவனை அவளின் வாழ்க்கைக்குள் கொண்டு வர, வருடங்கள் தேவைப்படும் என்பதை யாரும் அறியவில்லை.

ராஜமனோகரிக்கு திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது குறித்த மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், அவர்களது எதிர்காலம் குறித்த பயம், அவருக்கு இருந்தது உண்மை.


ரகு எதையும் அனுசரித்து சென்றுவிடுவான். ஆனால், வதனி அப்படியல்ல. சற்று பிடிவாதம் உண்டு.

நெருங்கிய உறவினர்களைத் தவிர மற்றவர்களுக்கு விசயம் தெரியாது. அதனால் குழப்பம் எதுவும் நிகழவில்லை.

கருணாகரன் - கீதஞ்சலிக்கு மகளுடைய விருப்பம் முக்கியம் என்றிருந்தனர்.


சென்னையில் இருக்கும் வரை, வதனிக்கு ரகுவிடம் ஒட்டுதல் இருந்ததில்லை. ரகு ஹாலில் இருந்தால் அவள் ரூமில் இருப்பாள்.

அவனுடைய பிளாட்டில் இருக்கும் போது இலகுவான மனநிலையில் இருப்பவள், இவர்களது பிளாட்டிற்கு அவன் வருவதைக் கண்டதும், அங்கிருந்து நகர்ந்து ரூமில் ஐக்கியமாகி விடுவாள்.

தனது தாயார் ராஜம் இது பற்றி கேட்டதும், இருவருமே “வதனிக்கு பிடிக்கணும்மா..... அவளுக்கு பிடிக்கலனா நீங்க எங்கள தப்ப நினைக்க கூடாது... அவளா சம்மதிச்சா எங்களுக்கும் சம்மதம்..... ரகுகிட்டயும் கேட்டுக்கங்க....” என்பது தான்.

ஆனால் அவள் சம்மதம் தெரிவித்தது இருவருக்கும் ஆச்சரியமே.


ஹரிகிருஷ்ணன், துர்கா தம்பதியினருக்கு ராஜத்தின் திடீர் முடிவு எதிர்பாராதது, என்றாலும் முழு சம்மதமே.

நாயகன் ரகுநந்தன், கல்லூரி படிப்பு, அதனைத் தொடர்ந்து பங்களூருவில் வேலை என இருந்து விட்டு, சென்னையில் சுயமாக மென்பொருள் நிறுவனம் தொடங்கும் வரை எந்த சிந்தனையும் இல்லாமல், வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்தவன்.

கல்லூரியில் படிக்கும் போதும், கிராமத்திலும், அவன் சென்ற எல்லா இடங்களிலும், அவனுடன் பேச, பழக, வாழ என பெண்கள் பலர் அவரவர் விருப்பத்தை பல வகைகளில் தெரிவித்தாலும், அதை கண்டுகொள்ளாமல் கடந்துவிடுபவன்.

அவனின் கனவான, சுயமாக மென்பொருள் நிறுவனம் தொடங்கி, திறம்பட நடத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னை வந்தவனுக்கு, உன் கனவுகளில் எனக்கும் இடம் கொடு என வந்து நின்றவளை, அவன் நெருங்க நினைக்க, நிஜத்தில் தூரம் போனாள் பெண்.

மாலை வேளை, வேண்டிய திங்க்ஸுடன் பங்களூருவில் இருந்து நேராக அப்பார்ட்மெண்ட் வந்தவன், நின்றிருந்த வாட்ஸ்மேனிடம் மூன்றாவது மாடியில் இருக்கும் அவனது பிளாட்டில் அவனது பொருட்களை வைக்க உதவுமாறு கேட்டுக்கொண்டிருந்தான்

அப்போது, சந்தன நிற ஃபேப்ரிக் பாட்டம், காலர் நெக்.. டார்க் ப்ளூ.... ¾ ஸ்லீவ்..... எம்ப்ராய்டரி வொர்க் செய்த சல்வார், ஃபேப்ரிக் நாஸ்னீன் துப்பட்டாவில் , ஒற்றைப் பின்னலுடன், மாசு மரு இல்லாத சந்தன நிற, அவனைத் திரும்ப பார்க்கத் தூண்டிய தேவதை......,

இவனை கண்டுகொள்ளாமல் சிறுவர் பட்டாளத்துடன்.... சிரித்தபடியே கைகளில் நீளமான நோட்டுக்களுடன் சென்றிருந்தாள். அவளின் முகம் அறிமுகமானவளைப் போல தோன்ற சற்று யோசித்தவன், நினைவில் வராததால் அவனின் பொருட்களுடன் லிஃப்டில் ஏறினான்.
வீட்டைத்திறந்து அவன் கொண்டு வந்திருந்த அனைத்தையும் வைத்து விட்டு நிமிர்ந்தபோது,


“வா நந்தா...”, என்றபடி கீதாஞ்சலி எதிர் பிளாட்டில் இருந்து வந்தார்.

“வாங்கத்த.....”

“சரி..... அங்க வரியா.... உனக்கு காஃபீ தரேன்... இல்ல இங்கயே... ப்ரவீண்ட குடுத்து விடவா..?”

“...தோ.... வரேன் த்த...நீங்க போங்க.....”

அவர்களின் பிளாட்டிற்கு வந்தவனை பயங்கரமாக கவனித்துக் கொண்டிருந்தார் கீதாஞ்சலி

“மாமா இன்னும் வரலயாத்த.....”

“அவரு ரெஃப்ரெஷெர் கோர்ஸ் போயிருக்காருப்பா........ காலையில மதினி போன் பண்ணாங்க.. நீ இன்னிக்கு இங்க வந்துருவனு....”

“ஆமாத்த..... இடம்லாம் பாத்து எல்லா வேலையும் முடிச்சு ரெடியா இருக்கு..... இண்டர்வியூ முடிச்சு ஸ்டாஃப் எல்லாம் ட்ரைனிங்ல இருக்காங்க..... நெக்ஸ்ட் வீக்ல இருந்து இங்க ரன் ஆக ஆரம்பிச்சுரும்”

“அம்மா..... என்னோட... கவர் ஃபைல காணோம்மா.....”, என்றவாறு அருகிலுள்ள ரூமிலிருந்து வெளியே வந்தவளை கண்டவன் அதிர்ந்தான்...
 
Last edited:

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#3
“வதனி.... இது நம்ம நந்தா....... பாத்து.... ரொம்ப நாளாச்சு.... எனக்கே உன்ன அடையாளம் தெரிலப்பா... அவளுக்கு எங்க தெரியப் போகுது...”

‘வதனியா...... அதுக்குள்ள இவ்வளவு பெரிய பொண்ணாயிட்டாளா...... ரகு மச்சான்... ரகு மச்சான்னு நம்ம பின்னாடி தெரிஞ்ச வாண்டா.... இது...... என் வயச கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே சோதிச்சிட்டாளே....’

“வாங்க....”, என்றவள் அதற்கு மேல் அங்கு நிற்காமல் ரூமிற்குள் சென்றுவிட்டாள்.

அதன் பின் அவளது வயதையும், கல்வியையும் யோசித்து எட்ட நின்று பார்ப்பதுடன் சரி..... அவள் மேலுள்ள அவனது வருத்தம்...... அவனை ஒரு பொருட்டாகக் கூட எண்ணாமல் அவளுண்டு, அவள் வேலையுண்டு என்றிருப்பது மட்டுமே.

அவள் அவனை நிராகரிக்கவில்லை....., நினைவிலேயே கொள்ளவில்லை என்பதால் மட்டுமே அவளின்பால் அதிகமாக ஈர்க்கப்படுவதை உணர்ந்தவன், வேலையில் அவனை மறக்குமாறு பார்த்துக் கொண்டான்.

ஆனால் அந்த அபார்மெண்ட் வாண்டுகளுடன் நேரம் காலம் தெரியாமல் அவள் நேரம் செலவழிப்பதை பார்க்கும் போது, சற்றே பொறாமை தோன்றும். ஆனால், சில நேரம் அவனை மீறி சத்தம் போடுவான். கண்டு கொள்ளாமல் செல்பவளைப் பார்த்து, ‘இவ எதுக்கும் அசரவே மாட்டாள்’ , என எண்ணிக்கொள்வான்.

‘எவளுக்கோ நம்பர் வேணும்னு நிக்கிறா..... இவள .... ஒண்ணும் செய்ய முடியாது.....’ என அந்த இரு தினமும் அவளுடன் இருந்த நேரத்தினை பொக்கிஷமாக எண்ணியவனை ..... எண்ணாதவள்.

அவ கோர்ஸ் முடிஞ்ச பின்னாடி வீட்ல சொல்லுவோம் என எண்ணியவனுக்கு, தனது வயோதிகத்தினை காரணம் காட்டி திருமணத்திற்கு சம்மதம் கேட்ட அவனுடைய அப்பத்தா ராஜத்திடம் சொல்லலாம் என எண்ணினான்.

அதே நேரத்தில், அவனின் மற்றுமொரு அத்தையான தீபாஞ்சலியின் மகளும் வதனியும் ஆறு மாத வித்தியாசத்தில் பிறந்தவர்கள். இருவரில் யாரை எடுத்தாலும் மற்றவருக்கு மனவருத்தம் உண்டாகும் என ராஜம் தனது மகனிடம் சொல்லும் போது ரகு உடன் இருந்ததால் அதற்கு மேல் அவன் அதை சொல்ல எண்ணவில்லை.

மேலும் வதனிக்கும் அவன் மேல் விருப்பம் இருப்பது போல தோன்றவில்லை , இருவருக்கும் எட்டு வயது வித்தியாசம் என பல காரணங்களால் வீட்டில் கூறும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறிவிட்டான்.

எதிர்பாரா வதனியுடனான அவனது திருமணம், அவனுக்கு கனவு போல இருந்தது. அவளின் சம்மதம் எப்படி கிடைத்தது என்பதும் அவனின் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது.

மலராத மொட்டினை, மனமெனும் செடியில் இருந்து பறிக்க எண்ணி....., பறித்தாலும் மீண்டும் வளரும் என விட்டு விட்டவன். மரணம் வரை மறக்க முடியாதவள் அவள் என்பதால் மறக்க நினைத்ததை மறந்துவிட்டான்.

ஆனால், அந்த மொட்டு மலர்ந்து மணம் வீசுமா ..... எனத் தெரியாத போதும், நீரூற்றி வளர்க்க, அவன் மனம் தீர்மானித்து விட்டது.

திருமணம் முடிந்து, குல தெய்வ வழிபாடு, பின்பு விருந்து என அடுத்தடுத்த நிகழ்வுகளில் நேரம் போக, மணமக்களைச் சுற்றி கூட்டம் இருந்த வண்ணம் இருந்தது. பெரியவர்கள் அனைவரும் அசீர்வாதம் செய்து திருநீறு பூசியதில் மாலையாகி விட்டது.

ராஜம் மணமக்களை தனது அறைக்குள் வருமாறு அழைக்க,

“ரகு...... உனக்குன்னு வதனி வந்துட்டா..... இனி ரெண்டு பேரும் ஒருத்தவங்கள மத்தவங்க புரிஞ்சுக்கங்க...... திடீர்னு முடிவானதால அவ மனசு மாறுற வர நீ பொறுமையா இருக்கணும்”

“சந்திரா.... நீ இன்னும் சின்ன புள்ள இல்ல..... அதுனால பாத்து பக்குவமா நடந்துக்க....”

“ரகு.... மூனா நாளு நல்லாருக்கு, அன்னைக்கு அவளுக்கு மாங்கல்யத்த.... செயின்ல மாத்தி போடுறோம்..... அவளுக்கு லீவு இல்ல..... அதனால அவ திருச்சி போயிருவா..... அவளுக்கு படிப்பு முடியற வர அங்கதான் இருக்கணும்.... அதனால.... உங்க தோது பாத்து..... நீ எங்க இருக்கலாம்னு முடிவு பண்ணு....”

“இன்னிக்குல இருந்து ரகு ரூமுக்குள்ள தங்கிக்கோ, அவன் ரூம்ல உன்னோட பொருளெல்லாம் வைக்கச் சொல்லிட்டேன்....சந்திரா”

சரியென்றவுடன் ஓய்வெடுக்குமாறு கூறி இருவரையும் அவர்களின் அறைக்கு அனுப்பி வைத்தார். அவளுடன் அறை வரை வந்தவன்,

“நீ ரெஸ்ட் எடு..... நான் வரேன்...”, என்றுவிட்டு வெளியில் சென்று விட்டான்.வதனியின் மீதான நந்தனின் ஆர்வமான பார்வையை கண்ட ராஜத்திற்கு சந்தோஷம். ஆனால், ஒரு சந்தேகம் அவருக்கு....... இது புதிதாக வந்த ஆர்வமல்ல.... என்பது. அதையும் பேரனை அழைத்து நேரடியாகவே கேட்டார். முதலில் மறுத்தவன் பிறகு ஒத்துக்கொண்டான்.

தீபாவளி, பொங்கல் என விஷேசங்களுக்கு மட்டும் இங்கு வந்து செல்வாள் வதனி. ரகு வழக்கம்போல இருந்தாலும் இரண்டரை ஆண்டுகள் போனதே தவிர வதனியிடம் மாற்றங்களைக் காண முடியவில்லை.

ரகு, வதனியின் ஒட்டாத வாழ்வு நம்மால் தான் என எண்ணியதால் வந்த குற்ற உணர்வினால் ராஜம் மரணத்தை தழுவினார்.

தாயின் மரணம், ஹரிகிருஷ்ணனுக்கு இதய நோயைத் தந்தது. அவரால் வழக்கம்போல செயல்பட இயலவில்லை.

ரகு, அது வரை சென்னையில் இருந்தவன், தந்தையின் உடல் நலம் கருதி ஊருக்கு வந்துவிட்டான். அவனின் நம்பிக்கைக்கு உரியவர்களை வர்க்கிங் பார்ட்னராக நியமித்து விட்டு அவன் சுந்தரமுடையான் வந்து ஓராண்டாகி விட்டது.

இரண்டரை ஆண்டு கழித்து இங்கு வந்து இனி தங்குவதாகச் சொன்ன மனைவியைக் காண ஆவலாக வந்தவனை வரவேற்றது அவனது மாமியாரும், மாமனாரும் மட்டுமே.

அதன் பிறகே, அவளிடமிருந்து வந்தது குறுஞ்செய்தி.

மூன்று ஆண்டுகளுக்கு முன் கொடுத்த எண்ணிற்கு இன்று தான் முதன் முதலாக மெசேஜ் செய்திருக்கிறாள், அவனின் மனைவி.

மதிய உணவை உண்டு விட்டு அறைக்குள் சென்றவன்....

“எப்போ வரேனு சொல்லு..... நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்”, என மெசேஜ் செய்துவிட்டு...... நீண்ட நேரம்.... போனை பார்த்துக் கொண்டிருந்தவன்..... அவளிடமிருந்து ரிப்ளை வராததால்.....

“நீ தனியா வந்திருவனு தெரியும்..... இருந்தாலும் இனி அப்டிவிடறதா உத்தேசமில்லை”, என அனுப்பினான்.
 
Last edited:

Advertisements

Latest updates

Top