• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பன்னீர் பக்கோடா, மயோனைஸ் சாஸ்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
_20190306_132725.JPG_20190306_132840.JPG
பன்னீர் பக்கோடா:-
தேவையான பொருட்கள்:-
பன்னீர் - ஒரு கப் ( துருவியது)
வெங்காயம் - 1
ப. மிளகாய் - 1
இஞ்சி - ஒரு துண்டு
கடலைமாவு - 3/4 கப்
அரிசி மாவு - 1/4 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :-
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு, துருவிய பன்னீர், பொடியாக நறுக்கிய வெங்காயம், ப. மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து கொள்ளவும். பின்னர் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்க்கவும். பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து கலந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பொரித்து எடுக்கவும்.
மயோனைஸ் சாஸ்:-
தேவையான பொருட்கள்:-
முட்டை - 1
பூண்டு - ஒரு பல்
மிளகு - 6
எலுமிச்சை - பாதி
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - 75 மிலி ( அ) கால் டம்ளர்
செய்முறை :-
மிக்ஸி ஜாரில் முதலில் முட்டை, மிளகு, பூண்டு, உப்பு, பாதி எலுமிச்சை சாறு இவற்றை சேர்த்து முதலில் ஒரு சுற்று அரைக்கவும். பின்னர் அதில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து முதலில் அரைத்தது போலவே ஒரு சுற்று அரைக்கவும். பின்னர் அதே போல் ஒவ்வொரு முறையும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அரைக்கவும். திரும்ப திரும்ப அதே போல் சிறிது சிறிதாக எண்ணெய் சேர்த்து அரைக்கும் போது கிரீம் பதத்திற்கு வந்ததும் அதனை பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top