• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பயணம் இரண்டு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
ஹாய் தோழிகளே!

என் அடுத்த பயணம்,நம்ம இப்போ எங்க போறோம்,ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி அப்புடின்னு சொல்லமாட்டேன்,ஏழு மலை தாண்டி ஏழு மலையானை பார்க்கறதுக்கு சமம்,நம்ம “உத்தமர் கோவில்” போறது….. அதாங்க என் புகுந்த விடு வாங்க என் புருஷோத்தமன பார்க்கலாம்.

உத்தமர் கோவில்:

திருச்சியில் புகழ் பெற்ற கோவில்களில் உத்தமர் கோவிலும் அடக்கம், கொள்ளிடம் கரையோரம் சிறுது நடைபயின்றால் “உத்தமன் என்னும் புருஷோத்தமன் தரிசனம்,இக்கோவிலை பிச்சாண்டார் கோவில், என்றும் ஆதிக் காலத்தில் திருக்குறம்பூர் என்றும் அழைக்கப் படுகின்றன”.

தல வரலாறு என் கண் தோற்றம்:

பிரம்மனின் தலையை சிவா பெருமான் கிள்ளி எரிந்ததால் அவர்க்கு தோஷம் பற்றிக்கொள்ள,அதனை தீர்க்க சிவா பெருமான் இங்கு வந்த பிச்சை எடுத்ததால் பிக்ஷந்தர் ஆனார்,அவர் பிச்சை எடுத்த வீதி தேவதானம் என்று, இன்று அளவும் அழைக்க படுகின்றது,சிவனுக்கு அருள் பாலித்த தயார் அன்னமிட்டதால் பூர்ணவள்ளி தயாராக காட்சியளிக்கிறார்,பிரம்ம தேவனின் பூஜைக்கு செவி சாய்த்த விஷ்ணு கடம்ப மரமாக உருவாகினர்,எனவே இதனை கத்தம்பனூர் என்றும் அழைப்பர்.

இன்னும் சில புராணங்கள்:

பிரம்மாவும் சிவனும் முதலில் ஐந்து தலைகளில் இருந்தனர். சிவபெருமானின் மனைவியான பார்வதி, ஒருமுறை குழப்பம் அடைந்து, சிவபக்தியைத் தவிர்த்து பிரம்மாவுக்கு பாதக பூஜை செய்தார். பிரம்மாவின் செயலில் சிவன் கோபமடைந்தார். பிரம்மாவின் சாபம் காரணமாக வெட்டு தலமானது சிவனின் கையில் சிக்கியது. பாவத்தை அகற்ற சிவன், பிக்ஷடனாக விஷ்ணுவை வணங்கி, அவருடைய பாவத்தின் ஒரு பகுதியை விடுவித்தார். திருக்குண்டியாரில் விஷ்ணுவை விஜயம் செய்து, கோவிலின் தொட்டியில் கமலா புஷ்கரணி, ஹரா சாபா விமோகாசன பெருமாள் கோவிலில் புனித நீராடினார். இந்த சம்பவத்திற்குப் பின், கபலா தீர்த்தம் (கபால மண்டை ஓடு) என்று தொட்டிக்கொள்ளப்பட்டது.

கோவிலின் சிறப்பு:

108 திவ்யதேசத்தில் ஒன்று உத்தமர் கோவில்,சோழ நாட்டில் திரு மூர்த்திகளும் ஒன்றாய் இருக்கும் தளங்களில் இரண்டில் ஒன்று தான் இக்கோவில்,ஒரு கோவில் சுவற்றுக்குள் அணைத்து தெய்வங்களுக்கும் தனித் தனி கருவறை உள்ளது,இங்கு நடக்கும் கோ பூஜை சிறப்பு,”வியாழன் தோறும் இங்கு வந்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும்,இங்கு அருள் பாலிக்கும் சரஸ்வதி தேவி நற்க் கல்வியும்,இங்கு அருள் புரியும் தட்சணா மூர்த்தி நல்ல வேலையும் கிடைக்க பெரும் என்பதாக கூறப்படுகின்றது, மேலும் குருவின் ஏழு வடிவங்களும் இருப்பதாக கூறப்படுகின்றது (பிக்ஷனார் குரு,சக்தி குரு,பிரம்மா குரு,விஷ்ணு குரு,தேவா குரு,சுப்பிரமணியர் ஞான குரு,சுகராச்சாரியார் குரு)”.

இன்னும் பல…………………..

இனி என்னுடன்….

நான் ஒரு கார்பொரேட் கம்பெனில ஒர்க் பண்ணிட்டு இருந்தேங்க,திருச்சி சொந்த ஊரா இருந்தாலும் அப்போ அப்போ தான் உத்தமர பார்ப்பேன்,ஆனா வேலைக்கு போனதுக்கு அப்புறம் வியாழன் மாலை 6 மணிக்கு என் தோழி கனகா கூட அங்க இருப்பேன் .

அவளும் என்ன மாதிரி தான் கோவிலுக்கு கெளம்பிடுவா,உள்ள நுழையும் போதே அவ சிரிப்பு மோடுக்கு போய்டுவா,ஏன்னா என் அலும்பு தாங்காது,கொடி மரத்துக்கிட்ட விளக்க போட்டுட்டு என் ஆள பார்க்க உள்ள போவேன்,இங்க ஸ்ரீரங்கம் மாதிரி கிடையாது பத்து பெற போய் புருஷோத்தமன கிட்ட பார்க்கலாம்,கொஞ்சம் டகால்டி வேலை எல்லாம் பண்ணி அவர்கிட்ட போய்டுவேன்,முதல்ல பாத தரிசனம் அப்புறம் தான் திருமுகம்,பாப்ரே ஏன் கண்ண விட ஒரு மடங்கு பெருசு அந்த திருடனுக்கு, கன்னம் பார்த்தீங்கன்னா கொழு கொழுன்னு இருக்கும்,அப்புடியே சயன கோலத்துல இருப்பார்।(ஆமாங்க இங்க பெருமாள் ஸ்ரீ ரங்கம் மாதிரி சயன கோலம் தான்,அங்க விட இங்க முத்தங்கி சேவை பார்க்குறது எனக்கு புடிக்கும் ).

“ப்ப்பா ….என்ன கண்ணுடா” அதுவும் வெள்ளி கண் மலரோட பார்க்க …………..ஒரு பிராமிணன் பூணுல் போட்டுட்டு வேஷிட்டு கட்டிட்டு அசட்டையா படுத்து இருந்த எப்டி இருக்கும்,ஹாண்ட்சம் பாய்,அதுவும் உற்சவர் சிலையுல பச்சை கல் பதைக்கம்,அங்கி போட்டுட்டு இருப்பார் பாருங்க செம,அதுக்கு மேல பார்த்த பக்கத்துல இருக்க தயார் என் கண்ண நோண்டிடுவாங்க,மனமே இல்லாம லட்சுமி சன்னதிக்கு வருவேன்…

பொண்ணுன்னா இப்புடி தான் அடக்கம் ஒடுக்கமா இருக்கணும்,கருப்ப கலைய குட்டி பொண்ணு வைர நகை போட்டுட்டு செப்பு வை திறந்து சிரிச்ச எப்படி இருக்கும் அது மாதிரி இருப்பாங்க லட்சுமி.

அவுங்கள பார்த்துட்டு நம்ம பூரணவள்ளி தயார் பார்க்க போவேன்,சும்மா சொல்லக்கூடாதுங்க அழகு தேவதை,கை தான சேர்ந்துடும் அங்க மஞ்சள் தான் பிரசாதம்,அவரே வச்சுட்டு தீர்க்க சுமங்கலி பவனு சொல்லுவாரு.

அடுத்து நமக்கு தேவை? அதாங்க வேலைக்கு பெட்டிஷன் தட்சணை மூர்த்திக்கிட்ட,அப்புடியே போன ராமர் சந்நிதி அங்க போக மாட்டேன், எங்க அப்பாவை பார்க்க போய்டுவேன் பிச்சாண்டார்,சௌந்தர்யா பார்வதி,அவுங்கள வணங்கிட்டு,இப்புடிக்கா வந்தா நம்ம சீ ட்டர் அதாங்க கண்ணன் சந்நிதி ஒரு நாள் கூட கையெடுத்து கூமுட்டது இல்ல,அபுட்டு பாசம் அப்புடியே ஓர கண்ணால பார்த்துட்டே போய்டுவேன்,



வழக்கம் போல துர்க்கை,நவக்கிரகம், என் அப்பா இந்த பக்கமும் இருப்பாரு,அப்பாக்கு தெரியாம காதலனை பார்க்க போற மாதிரி தான் அந்த சன்னிதியை கடந்து போவேன்,அடுத்த டார்கெட் பிரம்மா அதற்கு முன்னால் அனுமார்,கோதண்ட ராமன் எல்லாம் இருக்காங்க,நேரம் வேணுமுள்ள அதான் நேர டீல் பேச போய்டுவேன்,முதல்ல கேக்குற வார்த்தையே ஏன்யா படைச்ச அப்புடின்னு தான்(அதுக்கு அவரு நீ திருப்பட்டூர் வா உன் வீதியை மாத்தி எழுதுறேன்னு சொல்லுறாரு)

அவர்க்கு அப்புறம் எனக்கு கொஞ்சம் முலைய குடு தாயே!!!! சரஸ்வதி சன்னிதி போய்டுவேன்,அறிவு கலை அபிநய சரஸ்வதி (வாணிஷா கிட்ட போய்டாதீங்க யா) வெண் பட்டில்,வெண் தாமரை கையில் வைத்து அமைதியின் உருவாய்,அறிவின் சுடராய் அமர்ந்து இருப்பாங்க.

திரும்ப வந்து கொடி மரத்த வணங்கி உக்காந்து சிரிச்சுக்கிட்டு இருப்போம்,அப்பவே எல்லாரும் சொன்னாங்க நீ வேலைக்கி வேண்டிக்கிட்டு போற ஆனா பாரு உனக்கு கல்யாணம் நடக்க போகுதுனு, எந்த நேரத்துல வாய் வச்சுதுங்களோ தொடர்ந்து 21 வாரம் போனேன், 22 வது வாரத்துல அதே லட்சுமி சன்னிதி முன்னாடி என் கல்யாணம் வாழ்கையில நான் ஆசை பட்டது உத்தமர் சந்நிதியில் என் திருமணம் நடக்கணும்,ஆனா ஏவுளோ சீக்கரம் என்ன சிக்க வைப்பாருனு கணுவுல கூட நினைக்கல………………….



அடுத்த வாரம் வியாழக் கிழமை கோவிலே இவ என்ன லூசானு பார்த்துச்சு,அந்த அளவுக்கு பெருமாள் கூட பேர்பாமன்ஸ்,கனகா தான் எல்லாரும் பார்க்குறாங்கனு இழுத்துட்டு வந்தா வாழ்க்கையில மறக்க முடியாது ஜூன் 8 ஆம் தேதியை,ஆனா பாருங்க நம்ம ஆளுகிட்ட கோச்சுக்க மனசு இல்லாம திரும்ப அடுத்த வாரமே கோவிலுக்கு போயிட்டேன்.



கூடிய விரைவில் கும்பாபிஷேகம் .



புலவர் லெவெலுக்கு புராணம் சொல்ல தெரியாது, இவற்றையெல்லாம் என் செவி வழி கேட்டு தான் நான் வளர்ந்தேன் தோழிகளே!,பெருமாள் மேல் பித்துக்கொள்ள வைத்ததும் இவை தான் , அப்பவே நான் பிளாட்,திருடனா இருந்தாலும் அவரை தானே புடிக்குது,சரியான ஆளு ஏன் திருடனு சொல்லுரேனு அப்புறம் சொல்லுறேன் வரேங்க போர் அடுச்ச சொல்லுங்க…………………. எழுத்து பிழை இருந்தாலும் மன்னுச்சு…………









































 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Thanks sister nalla information Students kku homam panni pen and paper ellam archanai senju kuduppanga Inge rombave vishesama nadakkum Nan poyirukken
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top