• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பரங்கிக்காய் புளிக்கறி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
_20190306_132917.JPG
தேவையான பொருட்கள்:-
பரங்கிக்காய் - ஒரு துண்டு
சி. வெங்காயம் - 15
தக்காளி - 1
து. பருப்பு- ஒரு கரண்டி ( வேக வைத்தது )
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
சோம்பு சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
தாளிக்க - கடுகு, சீரகம், கறிவேப்பிலை
உப்பு - தேவையான அளவு
செய்முறை :-
பரங்கிக்காயை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதனுடன் மிளகாய்த்தூள், சோம்பு சீரகத்தூள், உப்பு சேர்த்து பிசறி வைத்துக் கொள்ளவும். புளியை 1/2 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து கொள்ளவும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய சி. வெங்காயத்தை போட்டு வதக்கவும். சிறிது வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் பிசறி வைத்துள்ள பரங்கிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேர்த்து ஒரு கரண்டி வேக வைத்த பருப்பை சேர்க்கவும். பின்னர் அதனை மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் வேக விடவும். பரங்கிக்காய் வெந்தவுடன் அடுப்பை அணைத்து வேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top