பவன் ல(ட்சி)யா கல்யாணம் -30(1)🤩

Maha

Author
Author
SM Exclusive Author
#1
யூடி 30-part(1)ஹாய் டியர்ஸ்🙏

அதிக இடைவெளி எடுத்துக்கிட்டேன் , மன்னிக்கணும்,சிறிய தகவல் பரிமாற்றத்தோடு இன்றைய யூடி...

கதை நிறைவு பகுதிக்கு வந்தாச்சு. யூடியும் கொஞ்சம் பெருசா த இருக்கு.


அடுத்து pre final அண்ட் finals part 1 and 2 அநேகமா இருக்கலாம். (zappaa... 🙆)

ரைட் ... இனி இன்றய யூடி இதையும் படிங்க
கொஞ்சம் ஜாலியான ரொமான்ஸ் , செண்டிமெண்ட் அண்ட் தேவைன்னு நினைக்கும் இடத்தில் கேரக்டர்ஸ் ஏற்ற காஸ்ட்யூம்ஸ் , லொகேஷன்ஸ்,இருக்கும். கதை போகும் இடங்கள், வீடு , என் கற்பனையின் காட்சியோடு தேடி தேடி பிடிச்சு போட்டு இருக்கேன் .

ஜஸ்ட் அன் எண்ட்ராய்ன்மெண்ட் பாக்டர் அண்ட் பிக்நிக் எபெக்ட் கொடுக்க தான் 😋

அதுவும் ஒரு ஜோவியலான மேல்மட்டத்தில் நடக்கும் கல்யாண இது ,தொடர்ந்தார் போல் ஐந்து நாள் திருமண விழா.

அந்த காலத்திலும் நாலு , அஞ்சு நாளுக்கு வஞ்சனை இல்லாம நிறைய சாஸ்திரம், சம்பிரதாயம் பாத்து ,சாங்கியம் செய்யவாங்கன்னும், பெண்டு நிமிந்துடும் பொண்ணு மாப்பிள்ளைக்குன்னு... எங்க வீட்டு பெரியவங்க சொல்லி கேட்டு இருக்கேன்.
இப்போவும் சிலர் அதே மாதிரி 4 நாள் குறையாமல் கொஞ்சம் மாடர்ன் ஸ்டைலில்
திருமணங்கள் நடத்துறாங்க...


சோ நானும் ஓல்ட் ஸ்டைல் அண்ட் இப்போதய ட்ரெண்ட் சங்கீத், மெஹந்தி பங்க்ஷன் , 5 நாள் திருமண விழாவாக கொடுக்க ட்ரை பண்ணி இருக்கேன்.

அஞ்சு நாளா... 🙄
உங்க மைண்ட் வாய்ஸ் மாதிரியே நானும்
சில வருடத்திற்கு முன்பு
(my fb)...

நாமா போன, ஒரு வட இந்தியர் வி ஐ பி திருமண விழாவில் பிரம்மாண்டம் பார்த்துட்டு மிரண்டு போயிட்டேன், அதை விட அந்த வெட்டிங் கார்டு தான் ஹைலைட் தொடர்ந்து 4 நாளுக்கான விழா கார்டு அது. அப்போ இருந்து தான் கொஞ்ச கொஞ்சமா நம்ப ஆளுங்களும் இந்த சங்கீத், மெஹெந்தின்னு தினம் ஒரு பங்ஷசன் செய்ய ஆரம்பிச்ச நேரம் ...

என் பக்கத்தில் இருந்த ஓல்ட்டிஸ்!"
லோட்டா வாய் சும்மான்னு இல்லாம,

நம்ப கிட்ட... என்ன கொழுப்பு, எப்பிடி பணத்தை வரி இறைச்சி இருக்குங்க, அதுவும் 4 நாளுக்குன்னு வாய் பொலந்தே கேட்டுருச்சு,

அவங்க அடுத்து இருந்த லேடியையும் மறந்துடுச்சு இந்த அம்மா...? மைல்டான வாய்ஸ்லில் பேசுறோம் சத்தமா மியூசிக் வேற 🤭

அதுவும் யாரு அவங்க பொண்ணு சைடு , சைடுல இருந்த லேடி பாஷா 🤐🤒
சைலென்ட் மோட் வார்த்தையால்

ஹேய் , நிம்பல் கீ எங்க ஜல்த்தா ஹேய் ஜி நிம்பல் பைசா தேத்தா ஹே க்யா...
(உனக்கு எங்க எரியுது நீயா பணம் கட்ட போறே )

அந்த அம்மாவை வாகுந்துடுச்சு 🤭
ஆனா என்ன கொடுமை, அந்த அம்மாக்கு இந்த அம்மா பேசுனது புரியல...
மீ காதுல புகை ஜி ! 😤

இப்போ நிறைய இப்பிடி லக்சூரி பட்ஜெட் வெடிங்ஸ் தான் பார்க்க முடியுது. கடன் வாங்கியாவது பண்ண ஆரம்பிச்சுட்டாங்க,

இப்போ வாழ்க்கை முறையும் மாறிப்போச்சு. எந்த நிமிடமும் என்ன வேணாலும் நடக்கலாம்ன்னு ஒரு பயம் வந்துடுச்சு .

வாழ்வாதாரத்திற்காக சம்பாதிக்கிறது போயி... இப்போ சம்மதிப்பதே இஷ்டமா சந்தோஷமாக நாமா வாழ தானே,
மனசுக்கு பிடித்தமா, நினைச்ச போல வாழ்ந்துட்டு போயிடணும்ன்னு , இன்றய ஜெனெரேஷன் நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க.அதுவும் பணம் படைத்தவர் அதிகம்.

நான் பார்த்த கல்யாணங்கள், சில காட்சிகள், ஏன் நம் கதையில் புகுத்த கூடாதுன்னு, என் மேல் மாடியில் ஒரு எண்ணம்,
அந்த முயற்சியோடு கற்பனை, சுவாரசியம் கலந்து சொல்லலாம்ன்னு தோணியது. அதுவும் என் கதையின் டைட்டில் பேரும் அது தானே

"பவன் லயா லட்சிய கல்யாணம்"

சோ... எப்பிடி எல்லாம் இப்போ கொண்டாடுறாங்க, செய்யறாங்கன்னு கொஞ்சமா மசாலா பூசி காட்டி இருக்கேன்.
சின்ன முயற்சி அண்ட் ஆசை.
எப்பிடி இருக்குன்னு கண்டிப்பா cmt போட்டு சொல்லுங்க சும்மா ஒரு ரெண்டு வரி ஓகே வா,டன் 😊


🔹🔹🔹🔹🔹🔹🔹

எப்போ வந்து படிச்சாலும் நம்ப கதை புரியும் என்ற நம்பிக்கையில் இதோ.

இரண்டு மாதம்... சென்னையில் மழை நானும் வந்தேன் சென்றேன் என்று சில தூறல்கள் தூவி விட்டு மாயமானது போல நகர்ந்து விட்டன நாட்களும் .

சுனாமியே வந்த கூட, விடறதா இல்ல நாங்க, நம்ப இஷ்ட வஷ்ட கொஞ்சம் தூரம் தள்ளி வைச்சு.

பிள்ளைங்க மனம் கோணாமல் அவங்க மனம் போல் மாங்கல்யம் தருவோம் என்ற முடிவோடு எல்லா காரியங்களும் தக்கு தடையில்லாமல் அதன் போக்கில் நடந்து கொண்டு இருந்தது...

மீதம் 7 நாள்.
ஒவ்வொரு நாளும் ஒரு விழாக்கோலம்.

மணநாள் நெருங்க நெருங்க மணமேடை எதிர் நோக்கி காத்திருக்கும் மணமக்களுக்கு இந்த ஒரு வாரம் நெட்டி தள்ளுவது தான் பிரம்மப்பிரயத்தனம் எப்போது டா மங்கலநாண் பூட்டுவோம் எப்போடா டா தனிமை கிடைக்கும் என்ற காத்திருப்பு தான் இன்னும் கொடுமை.

பவனின் பூர்விக ப்ளஸ் பழமையும் மாறாது புதுப்பித்த வீடு, சென்னை பரணி, சிவாஜி வீடு, வண்ண வண்ண விளக்குகளோடு ஜெகஜோதியாக விழா கோலமாக இருந்தது.

புவனா இல்லம்...

நெருங்கிய பந்தங்கள் வருகையோடு பூவிருத்தவல்லியில் பவன் இல்லம் கல்யாண கலை சொல்லவே வேண்டாம்.

தந்தையின் இரண்டு தலைமுறை உறவினர்கள் மொத்தமும் அந்த சுற்று வட்டாரம் சுற்றியே இருப்பதால் உறவு பெண்கள் வந்து போக ஆளுக்கு ஒரு வேலை என இழுத்து போட்டு செய்து கொண்டு இருந்தனர்.

பின்கட்டு முழுவதும் கண்ணுக்கு குளிச்சியாக மனதுக்கும் குளுமை தரும் நந்தவனமாக இருந்தது.
பச்சை வண்ணம் பூசியது போல் காய்கறி, பழங்கள் பூக்கள் தோட்டம் நடுவே
நிழல் தரும் குடையாக அர்ச் வடிவத்தில் இடைவெளி விட்டு நான்கு திசையில் பந்தல்...கொடி எல்லாம் நித்திமல்லி, ஜாதிமல்லி, முல்லை, பட்டன் ரோஜாக்கள் பூத்து குலுங்கியது.

அதன் நடுநடுவே வண்ண வண்ண குட்டி பறவைகள் பல வண்ண நிறம் அடித்து கூண்டில் கீச் கீச் என்ற அதன் சத்தம். ரம்மியமான மாலை பொழுதை கழிக்க இருக்கையாக பனை மரம் அடிவேர் கனமான பகுதியை மோட போல செதுக்கி இருந்தனர்.பின் வாசல் தொடங்கி தோட்டம் வரை சுற்றியும் சிமெண்ட் தரை, போட்டு மிகவும் விசாலமாகவே இருந்தது ...

அங்கேயே பாய் விறித்து அமர்ந்து சில பெண்கள் மாவு ஜலித்து.

நலுங்கிற்கு புது மஞ்சள் இடிப்பது...

கொல்லையில் மருதாணி செடியில் பறித்த இலை குவியலை காய வைத்தும்,

கல்யாண வரிசை பலகாரங்கள் எல்லாம் புனிதா ஊரில் ஆட்கள் நிறைய இருப்பதால் தானே அந்த ஏற்பாடுகள் செய்வதாக சொன்னதால் பெரிய பெரிய அடுப்புகள் ஒரு பக்கம் வைத்து ஊரே மணக்க மணக்க ஆட்கள் உதவியோடு பலகாரம் செய்வதில் பிஸியாக இருந்தார்.

********

சிவாஜி இல்லம்...

இதற்கிடையில் வெளிநாட்டில், உள்நாட்டில் இருக்கும் சிவாஜி உடன் பிறப்பு மூத்த சகோதரிகள் குடும்பங்கள், பல வருடங்கள் கழித்து அவர்கள் பிள்ளைகள் , டாக்டர் மருமகள், பிஸி பிசினஸ் மருமகன், பேரன் பேத்திகள் என மொத்த குடும்பமாக...

(நிச்சயத்துக்கே வர இயலாத வருத்தம், தங்கள் சகோதரன் இப்போது அடிக்கடி போனில் பேசும் போதே புரிந்தது தம்பி, தங்களின் வரவு அன்புக்காக ஏங்குவது )

அன்றாட பிஸி வாழ்க்கைக்கு சிறிது ஓய்வு கொடுத்து, நீண்ட பிரிவின் தக்கதோடு தங்களின் கடைகுட்டி தம்பியின் வீட்டு விழா கான மற்றும், தாய் மண்ணை, சுவாசிக்கும் அவலில், தம்பி வீடும் தாய் வீடு மாதிரி தானே அந்த பாசத்தோடு ஒரு வாரம் முன்பே வந்து விட்டனர்.

சிவாஜி தான் திக்குமுக்காடி விட்டார் . சந்தோஷம் ஒரு பக்கம்,குறை இல்லாமல் கவனிக்கும் பதட்டம் வேறு...

10 குடும்பம் கூட தாங்கும் வசதிகளோடு இருந்தும் , சென்னை சிவாஜி வீடு எப்போதும் ஒரு அமைதியோடு இருக்கும்.

பாபியின் தாய்வழி தாத்தா அம்மம்மா வயதான காரணத்தால் அவர்கள் இருப்பிடம் என்றும் குன்னூர் எஸ்டேட் தான். இங்கு சென்னை சூடு ஒத்து கொள்ளாத காரணம் வேறு,

( அவர்களையும், எஸ்டேட்டையும் கவனிக்க ஆட்கள் அமைத்து இருப்பதால் அவர்கள் அங்கே இருக்க, சிவாஜி இங்கு இருப்பதை கவனிக்க முடித்தது. )

பேரனை காண வேண்டி மூன்று மாதத்துக்கு ஒரு முறை வந்து போக இருந்தனர்.இன்று அவர்களோடு சேர்த்து புது வரவுகளால் வீடு என்றும் இல்லாத திருநாளாக காட்சி அளித்தது.

உறவினர் வந்த மாலை பொழுது...

பாபி வேளையில் இருந்து வீடு வர வேகமாக ஹாலுக்கு நுழைந்தவன் கண்ணில்...
அந்த பெரிய ஹாலில் அவ்வளவு பெரிய சோபாக்கள் இருந்தும் ஹாலை ஒட்டிய கண்ணாடி கதவுகள் திறந்தால் பெரிய வராண்டா, வெளி தோட்டம் தெரியும் (backyard )

பெரியவர்கள் சேரில், மற்றவர்கள், வண்டு சிண்டு எல்லாம் கீழே சுற்றியும் அமர்ந்து டீ டைம் பஜ்ஜி, பணியாரம், கொழுக்கட்டை ஸ்வீட்ஸ் வேலையாட்கள் சுட சுட கொண்டு வந்த வண்ணம் இருக்க, ஒரு காட்டு காட்டி கொண்டே...

தந்தையோடு அரட்டை, வெடி சிரிப்பு, கட்டிப்பிடித்து உருண்டு புரண்டு குழந்தைகளோடு குழந்தையாக விளையாடும் தன் தந்தையை கண்டான் மிகவும் வித்யாசமாக தெரிந்தார், அப்பிடியே நின்று விட்டான். பாபி வந்ததை யாரும் கவனிக்கவில்லை.

தந்தையின் முகத்தில் என்றும் காணாத மகிழ்ச்சியை, பூரிப்பை கண்டு, அமைதியாக பார்த்த பாபிக்கு ஏதேதோ எண்ணங்கள் மனதில் அலைபாய்ந்து...

துக்கம் தொண்டையில் ஒரு பக்கம் அடைக்கவும் , குற்ற உணர்ச்சியால் கண்கள் அவனையும் மீறி கண்ணீர் பீறிட்டு வந்தது.
யாரும் கவனிக்காதவாறு திரும்பி நின்றும் தன்னை கட்டு படுத்த முடியாது.

தன் அறைக்கு வந்து மெத்தையில் குப்புற விழுந்து சற்று நேரம் அமைதியாக இருந்தவன், ஸ்வராவுக்கு கால் செய்தான்...

"ஹா.. லோ..? " குரல் உடைந்து வந்தது -பாபி

"பேபி... என்னமா ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு.. இந்த நேரம் கால் பண்ண மாட்டிங்களே.. பப்பும்மா என்னடா...? "

"ஹனி....? " விசும்பும் சத்தம் வரவே பதறி போனவள்,
(ஆறடிக்கு மேல் வளர்த்தவன் ஆறு வயது சிறுவனாக மாறி தன் காதலியிடம் ஆறுதல் தேடி வந்தவன் அவள் குரல் கேட்டு மேலும் உடைத்து போனான் )

ஹேய் பப்பு... என்ன மா சொல்லுங்க எனக்கு இங்க பதட்டம்மா இருக்கு டா, அவள் பதறிட,
சற்று குரல் சரி செய்து,

"ஹேய், ஹனி.." , நர்திங் சீரியஸ் டா கொஞ்சம் இமோஷனல் ஆயிட்டேன் உன் கிட்ட பேசின ஐ பில் பெட்டெர் பேபி... "

"ஐயம் சாரி டி உன்னையும் டென்ஷன் பண்ணிட்டேன்".

" ஓகே, why? என்னாச்சு பேபி,
நொவ் யூ... யூ... ஆல்ரைட், ரைட்? "
நான் வேணா வரவா பேபி...? "

" " - பாபி

"டெல் மீ வாட் ஸ் இட்டீங் யூ, ஏன் மா இவ்வளவு ஸ்ட்ரெஸ், - ஸ்வரா

"பப்புமா ஸ்பீக் அவுட்...? " சற்று பதட்டம் ஸ்வராவிடம்,

சற்று குரல் செரும்பியா பாபி,
மனம் திறந்தான்.
உறவுகள் வருகை, தன் தற்போதைய
மனநிலை, தந்தைக்கு தன் கும்பத்தாரிடம்
இருக்கும் பாசம்,
குழந்தையாக மாறிய அவரின் இன்றைய நடத்தை, எதையும்
இது வரை கவனிக்காது சுயநலமாக இருந்த தன்னையும் நொந்து, ஒரு மூச்சு கொட்டி தீர்த்த பின் அவன் மனம் சற்று அமைதி அடைந்தது.

பேசி முடித்ததும், அவன் நிலை அறிந்து தனியே அவனை வருந்த விட மனம் இல்லாமல் அடுத்து 10தாவது நிமிடம் அவன் அருகில் வந்து இருந்தனர் ஸ்வராவுடன் பவன், லயா...

பாபி...
இத்தனை வருடம் இவ்வளவு அன்பு உள்ளங்களை நெருங்க விடாது, ஒதுக்கி அவர்களும் ஒதுங்கி தனித்தே இருந்த முட்டாள் தனத்தை நினைத்தும், தான் தந்தையின் தனிமைக்கும் தானும் ஒரு காரணம் அனாதை உணர்ந்து மிகவும் சோகம் நிறைந்த முகத்தோடு அமைதியாகி வலம் வந்தவனை,

அப்பிடியே இருக்க விட வில்லை வந்த பிஞ்சு வானர கூட்டம்.அவனை தேடி அவன் அறைக்கு வந்த வண்டுகள் பாபியை கலகப்பாகும் வரை உண்டு இல்லை என ஒரு வழி செய்து விட்டனர்.கூடவே ஸ்வராவும் சேர்த்து கொண்டாள்.

பாபியும் முன் போல் முசுடாய் இல்லாமல்.உறவில் அருமை புரிந்து... , கிடைக்கும் நேரத்தில் தன் தந்தையோடும், உறவுகளோடு கெட் டு கெதர், விருந்து wedding ஷாப்பிங், கோவில் என ஒருவரை ஒருவர் கேலி, கிண்டல் செய்து சகஜமாய் சுற்றினார்கள் பாபி ஸ்வரா, பவன் லயா .

இப்போதும், ஒன்று கூடி நாளை மாலை சங்கீத், மெஹந்தி விழாவுக்கு தேவையான அரேஞ்மெண்டஸ் தான் செய்து கொண்டு இருந்தனர்

இன்னோரு பார்ட் இருக்கு👇...

🔹🔹🔹🔹🔹🔹
 
Last edited:

Maha

Author
Author
SM Exclusive Author
#4
5 நாட்கள் நடக்கும் தொகுப்பு ஒவ்வொன்னும் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா

ஷார்ட்டா, ஸ்வீட்டா 🤔 இருக்குமா.. !" அப்பிடி தான் நினைக்கிறேன்.


நாள் 1...

சங்கீத் மற்றும் மெஹந்தி பங்க்ஷன்
இன்றைய தலைமுறையின் விருப்பமான விழா, முதலில் இதில் தொடங்கி தான் ஒவ்வொன்றாக மற்ற சம்பிரதாயங்கள்
வரும். இது முழுக்க முழுக்க மணமக்கள் ஏற்பாடு,

முக்கியமாக மணம் ஆக போகும் தம்பதிகளுக்கு இது மறக்க முடியாத
விழா, அதனால் பெண்களுக்கான மெகந்தி, ஆண்களுக்கான சங்கீத்வுடன் நண்பர்களுக்கு தரும் காக்டெய்ல், மாக்டாய்ல் பார்ட்டி என்று தனி தனியாக செய்வதை விடுத்து நேரமும் நாட்கள் குறைவாக இருக்கும் காரணத்தால் இரண்டையும் சேர்த்தே வைத்து கொண்டனர்.

பரணி வீட்டின் டெரெஸ் மிக விசாலமானது.
அங்கே எல்லா ஏற்பாடுகள் செய்ய பட்டது .
C64C0785-AAA5-4850-861E-08DEBEFCF2C6.jpeg

0DDE0C54-28AE-4A38-9C66-C5359F9AF3BE.jpeg

பாக் (back ground )கிரௌண்ட் தீம் அண்ட் டிரஸ் கோட், மஞ்சள் நிறம் பெண்களுக்கும், ஆண்களுக்கு சிகப்பு.

C2597E0F-BA42-499C-B10F-7F30361FB065.jpeg 16014E60-05BC-4FB7-9823-D958DD683B3C.jpeg 573ACD3E-53CD-4715-BDAC-9BB5074DE8E1.jpeg
இது அந்த குடும்பம் உறுப்பினர்களுக்கு மட்டும். என்பதால்... மலரில் இருந்து எல்லாமே அதே நிறத்தில் ஜொலித்தது டெர்ரெஸ்.A8C86FFE-2CB7-4D1D-AEDA-ED3CE3567C92.jpeg

ஒரு பக்கம் இருக்கைகள் , மறுப்பக்கம் திவான் ப்ளோர் பெட்கள், நடுவே நடனம் அடி வருவோருக்கு வழி முன்னே, சின்ன மேடை அதற்க்கு ஒரு பக்கம் டிஜே மியூசிக் குரூப்,

மறுபக்கம் மெஹந்தி வைத்து கொள்ள என பெண்களுக்கு அமர திவான் தனி செட்டிங்...
E90B6C61-3904-4EB0-A647-049C5C2A1D66.jpeg
மாலை , வருவோர்க்கு கையில்
வளையல் போடுதல், மெஹந்தி
வைத்தால், போட்டோ சூட், குழந்தைகளுக்கு ஹாம்லெஸ்
டாட்டூஸ், சாட் கவுண்டர் என
அனைத்திற்கு தனி தனியாக
செக்ஷன்ஸ் வைத்துஅது ஒரு
தனி கலையோடு இருந்தது.


🎉🎼🎵சங்கீத் பங்க்ஷன் 🎼🎶🎊


மாலை மணி 6:00...

டிஜே மியூசிக், பாடலோடு கோரியோக்ராப்ட்
நடனம் ஆரம்பம் ...

முதலில் தோழிகள், தோழர்கள் புடை
சூழ மணமக்கள் வரவேற்பு பாடல் ....

" தொடக்கம் மாங்கல்யம் தந்துனானே நா...!"🎼🎼🎼💃🕺
எங்கள் ஜீவிதம் தந்துனானே நா... !🎼🎼

அவரவர் ஜோடியை கைகோர்த்து நடனம் அடி கொண்டு வந்த பவன் திடீர் என பாபியை பார்த்து கண்ணடித்த அடுத்த நிமிடம்,

லாயவை கையில் தூக்கி கொள்ள, பாபியும் அவனை தொடர்ந்து ஸ்வராவையும் தூக்கி கொண்டே மிதமாய் நடனம் ஆட,
சுற்றிலும் ஒரே விசில் கரகோஷம்...


இரு பெண்களும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு போயி அவர்கள் முகதோடு முகம் மோதா குறை , கழுத்தை பின்னி கொண்டனர்.

சர்வ சாதாரணமாய் ஒரு பூக்குவியலை அள்ளி செல்லுவது போல இருந்தது அவர்கள் தூக்கி செல்லும் அழகு.

ஒருவர் முறைக்க ஒருவர் காதல் பார்வை பார்க்க என இரு பெண்கள் தங்கள் மனநிலையில்.

பவன் தூக்கியதும் பாடல் மாறியது எல்லாம் பிரி ப்பிளான்ட்...


அத்தனை நெருக்கம் பார்வையில் காதல், அவளை பார்க்கும் போது எல்லாம் அடிக்கடி அவன் முணுமுணுக்கும் அவளுக்கு பிடித்த அந்த பாடல்...முறைத்த அவள் விழிகள், தானாய் கனிவு காதலாக மாற்றியது அவன் பார்வை,

பாடல் முடியவும் இறக்கி விட்டதும் தன் லயாவுக்கு மூச்சு வந்தது.

எதிர்பாராத நேரம் பவன் தரும் தாக்குதலால் திணறி போனாள்.
வெக்கம் கூச்சம் ஒரு பக்கம் பின்னியது
பவன் அவளை கீழே இறக்கி விட்டாலும். இடை வளைத்த கையை லயா பிரித்து விட முயற்சி செய்தும் விடாது வளைத்து இருந்தான் பவன்.

உதடு அசையாது அவள் மனதோடு பேசியது அவன் கண்கள்...

அத்தனை குறும்பும் கலாட்டா செய்து காதலித்த பெண்ணா நீ என் கண்ணம்மா, இன்னும் எதற்கு இந்த மவுன நாடகம் கண்மணி... இனியும் தாங்காது டி நீ இருக்கும் என் இதயம்.

துரத்தி துரத்தி எனக்குள் நுழைந்தாய் நீ...
பேசி பேசி என்னுயிர் ஆனாய் நீ...
இப்போது போசது போது புரிந்தது... நீ
தான் நான் சுவாசிக்கும் உயிர், பிடித்தம் நீ...
உன் பைத்தியம் ஆனேன் டி காரணம் நீ...
இன்று என்னடி பெண்ணே இத்தனை கூச்சம், ஒதுக்கம் உனக்கு...

அவளின் மென்மை, ஸ்பரிசம் மிக அருகில் தெரிந்த கள்ளம் இல்லாத அவள் கண்கள் மின்னாமல் முழங்காமல் அவன் உள்ளே நுழைத்து ஆர்ப்பரித்தது,

மனது தானாக புலம்பியது சற்று வருத்தம் இருந்தாலும் விடும் எண்ணம் இல்லை அவனுக்கு அவளை தன் வாசம் ஆக்காமல் ஓயப்போவது இல்லை என்ற மனநிலையில் இருந்தான்.

ஸ்வரா, வெகு இயல்பாக பாபியுடன் இடை கோர்த்து ஆடியவாறு இருந்தாள்.


அடுத்து ஜோடிக்களுக்கு தனியாக மெலடி ரொமான்டிக் பாடலுக்கு நடனம் அட செய்து ஒரே விசில் கைதட்டல் ,

நெருக்கமான நடனம், பாடல் சொல்லவே வேண்டாம் விழாவில் நாயகர்களுக்கு
ஒரு வழி செய்து விட்டனர்.

கடைசியாக இரண்டு ஜோடியும் ஒரே பாடலுக்கு தங்களையும் மறந்து படு ரொமான்டிக் ஆகி ஆடிய மெல்லிய ஆட்டம் தான் heighlight..

"வேறு எதுவும் தேவையில்லை நீ மட்டும் போதும்.. "


குறிப்பாக ஆடினார் என்பதை விட லயாவை தன்னுடைய மென்மையான காதல் பார்வையில் , அணுகுமுறையால் அவன் மீதிருக்கும் பார்வையில் இருந்து மீளமுடியாது , அவன் மேல் கொண்ட காதலை வெளிக்கொண்டு வர அட விட்டான் என்று தான் சொல்லணும்.. 😉😝🤭🤩.

இமைக்கவும் மறந்த நிலையில் அவன் கண்ணோடு கண் நோக்கிய மைவிழியால்
அவ்வளவு நெருக்கமான அணைப்பில்... இருக்கும் நிலை மறந்து இருந்தது ஒரு கனவு நிலையில்...

அவள் முகத்தில் அவனின் மூச்சு காற்றுப்பட்டு நெற்றி முடி அசைந்து சாமரம் வீசியும் , அவன் மேல் இருக்கும் அவள் இமை மட்டும் அசைக்க வில்லை..

இந்த குறும்பன், குறும்பு சிரிப்போடு கண்ணோரம் சிமிட்டி, புருவம் இரண்டும் மேலும் கீழும் இறக்கி லயாவை சுய உணர்வு திரும்பிட ஏதேதோ செய்த வண்ணம் இருந்தான்...

இவர்களில் மௌன காதலை
உடைத்து கொண்டு வர,
சுற்றியும் ஒரே விசில் ...

சுற்றும் முற்றும் பேந்த, பேந்த விழித்து ஒரு நிலைக்கு வந்த லயா பாவனை
பிடித்து தள்ளி விட்டு விலகி போக நினைத்தாலும் விடாக்கண்டன் விடாது அவள் இடை வளைத்து இழுக்க, தடுமாறியவளை அவன் நெஞ்சில் தஞ்சமாக்கி ஆடினான்.

இருவர் இதய துடிப்பு தக் திக் டக் பக்...அதை இருவரும் உணரும்
நிலையில் ஆடினர் .

அடுத்து மற்ற ஜோடிகளும் தங்களை மறந்து இவர்களை பார்த்து காதல் போதை தலைக்கேறி நடனம் ஆடினார் .

வந்து இருந்த எல்லா பெண்களும் தங்கள் பதவி, வயது மறந்து குழந்தையாக மாறி சேர்த்து பாஸ்ட் பீட் பாடலுக்கு ஆடினார்...
BF87DD83-0AC3-48D6-BD30-DAC843453846.jpeg

நாளை ஒரு யூடி போடுவேன் அது
"மெஹந்தி பங்க்ஷன்" இன்னும் கொஞ்சம் ரொமான்டிக் சேர்த்து வரும் 😉👍🤩

இன்னொரு பார்ட் இருக்கு 👇

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
 
Last edited:

Maha

Author
Author
SM Exclusive Author
#7
ஹப்பா மஹா டார்லிங்கின்
ஸ்டோரிக்கு இப்போத்தான் நான்
First வந்திருக்கேன்
ஐ ஆம் சோ சோ ஹேப்பி,
மஹா டார்லிங்
மீ to சோ ஹாப்பி டியர் பானு மா 😘படிச்சு எனக்கும் நிறைகள் , குறைகள் எதுவா இருந்தாலும் சொல்லுங்க டார்லி நான் சரி செய்ய உதவிய இருக்கும் நன்றி பா 👍😉😍😍💖
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#9
nice ud:love::love: அஞ்சு நாள் function உங்க style லா பாக்க ரொமபவே ஆசை சீக்கிரம் வாங்க மஹாக்கா, songs எல்லாம் ரொம்ப perfect, function decration எல்லாம் சூப்பரா சொன்னீங்க .
 

Sponsored

Advertisements

Top