பிரமாண்டக் காதல் - பிரகடனம்

Kathambari

Author
Author
SM Exclusive Author
#1
உத்தரவுகள் ஏதுமின்றி - இவள்
நித்திரைக்குள் புகுந்து
யாத்திரை செய்திடும்
யவ்வனக் காதலனே...

ஆர்ப்பரிக்கும் அன்பால் - இவள்
ஆருயிர் கலந்து
அக்களிப்பு தந்திடும்
அன்புக் காதலனே…

உரசாது நின்றுகொண்டு - இவள்
உள்மனது சென்று
உற்சாக ஊஞ்சலாட்டிடும்
உன்னதக் காதலனே…

கண்ணியப் பேச்சால் - இவள்
காதிற்குள் நுழைந்து
கரகோஷம் எழுப்பிடும்
கருவக் காதலனே…

நாழிகை பாராமல் - இவள்
நயனங்கள் நோக்கி
நேசங்கள் நவின்றிடும்
நேயக் காதலனே…

மந்தகாச மொழியால் - இவள்
முன்பு மண்டியிட்டு
மறுமொழிக்கு மன்றாடிடும்
மாயக் காதலனே…

இத்தகைய,
பிரியக் காதலனைக் கண்டு
வெளிப்படையாக வெட்கப்பட்டு
பிரமாண்டக் காதலைப்
பிரகடனப் படுத்திடும்
இவள்!
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#3
அருமை... உண்மையான வரிகள் தான் சில நேரங்களில்:p:D

காதல் பேசி விளையாட அழைத்தேன் உன்னை
நாம் போக ஓரு பாதை கண்டேன் கண்ணில்
நதியோரம் நமக்காய் மலர்த்தோட்டம்
கை கோர்த்து செல்வோம் காதல் பயணம்----- இவையெல்லாம் இவளின் காதல் மொழியாம்
 

Kathambari

Author
Author
SM Exclusive Author
#7
அருமை... உண்மையான வரிகள் தான் சில நேரங்களில்:p:D

காதல் பேசி விளையாட அழைத்தேன் உன்னை
நாம் போக ஓரு பாதை கண்டேன் கண்ணில்
நதியோரம் நமக்காய் மலர்த்தோட்டம்
கை கோர்த்து செல்வோம் காதல் பயணம்----- இவையெல்லாம் இவளின் காதல் மொழியாம்
மகிழ்ச்சி ஸ்ரீ அக்கா 😊
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#8
உத்தரவுகள் ஏதுமின்றி - இவள்
நித்திரைக்குள் புகுந்து
யாத்திரை செய்திடும்
யவ்வனக் காதலனே...

ஆர்ப்பரிக்கும் அன்பால் - இவள்
ஆருயிர் கலந்து
அக்களிப்பு தந்திடும்
அன்புக் காதலனே…

உரசாது நின்றுகொண்டு - இவள்
உள்மனது சென்று
உற்சாக ஊஞ்சலாட்டிடும்
உன்னதக் காதலனே…

கண்ணியப் பேச்சால் - இவள்
காதிற்குள் நுழைந்து
கரகோஷம் எழுப்பிடும்
கருவக் காதலனே…

நாழிகை பாராமல் - இவள்
நயனங்கள் நோக்கி
நேசங்கள் நவின்றிடும்
நேயக் காதலனே…

மந்தகாச மொழியால் - இவள்
முன்பு மண்டியிட்டு
மறுமொழிக்கு மன்றாடிடும்
மாயக் காதலனே…

இத்தகைய,
பிரியக் காதலனைக் கண்டு
வெளிப்படையாக வெட்கப்பட்டு
பிரமாண்டக் காதலைப்
பிரகடனப் படுத்திடும்
இவள்!
மன்மதனின்
ஷில்ப சாஸ்திரம்!!! அருமை:love:(y)
 

Kathambari

Author
Author
SM Exclusive Author
#10
மன்மதனின்
ஷில்ப சாஸ்திரம்!!! அருமை:love:(y)
புதுசா இருக்கு... இருந்தாலும் நன்றி சரோ அக்கா 😍😍
 

Advertisements

Latest updates

Top