• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புறநானுற்று சிறுகதைகள்--- 38--- எவனோ ஒரு வேடன்!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,081
Reaction score
49,948
Location
madurai
கொல்லி மலையின் அடிவாரம். அது வளம்நிறைந்த பகுதி. புலவர் வன்பரணரும்அவரோடு வந்திருந்த இன்னிசை வாணர்களாகிய பாணர்களும் வழி நடைக்களைப்புத் தீர அங்கே தங்கியிருந்தனர். அன்றைய, பகற்பொழுதை அங்கேகழித்தாக வேண்டும்.


கொல்லி மலையில் மிருகங்கள் அதிகம். அதனால், வேட்டுவர்கள் பலர் எப்போதும்வில்லும் கையுமாகத்
திரிந்துகொண்டிருப்பதைக் காணலாம். அவ்வாறுபல வேட்டைக் காரர்கள் வேட்டையாடுவதை வன்பரணரும் அவரைச்
சேர்ந்தவர்களும்பொழுதுபோக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.


அவர்கள் தங்கியிருந்தஇடம் மேடாக இருக்கும் பகுதியிலுள்ள ஒருமலைக் குகை யாகையினால் அங்கேமிருகங்களால் தொல்லை நேரவழியில்லை. சரியாக உச்சிப்போது வந்தது. வேட்டைக்காரர்கள் எல்லோரும்போய்விட்டனர். அப்போது புதுவேட்டைக்காரன் ஒருவன் பெரிய யானைஒன்றை அம்பு எய்து துரத்திக்கொண்டுஅங்கே வந்தான்.

கம்பீரமான உருவத்தையுடைய அந்த வேடன் மார்பில் விலை மதிக்க முடியாத மணியாரங்களை அணிந்து கொண்டிருந்தான். மார்புநிறையச் சந்தனம் பூசிக் கொண்டிருந்தான். பரந்த மார்பின் அழகை அது எடுத்துக்காட்டியது.அவனைப் பார்த்தால் யாரோ ஒருசிற்றரசன் என்றோ, செல்வச் சீமான்என்றோ மதிக்கலாமே தவிர, கேவலம் வேட்டையைத் தொழிலாகக் கொண்டவன்என்று சொல்ல முடியாது.

வன்பரணர் ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தார். சற்றேனும் பயமின்றி யானையைப் பின்பற்றி விரட்டிக் கொண்டிருந்தான் அவன். ஆனால் அடுத்த நொடியில் வேறு ஒருபயங்கரமும் அவனெதிரே வந்து வாய்த்தது. அவனால் துரத்தப்பட்டுக் கொண்டிருந்த யானைக்கு முன் ஒரு பெரிய வேங்கைப்புலி மகா கோரமாக உறுமிக் கொண்டேபாய்ந்தது.


அந்த வீரன் வில்லை வளைத்தான். கூரிய எஃகு அம்பு ஒன்றுஅவன் வில்லிலிருந்து. “கிர் ரென்றுபாய்ந்தது. என்ன வேடிக்கை? அந்த அம்புயானையை ஊடுருவிப் புலியையும் ஊடுருவி இரண்டையும் கீழே வீழ்த்திவிட்டுப் புதரில் பதுங்கியிருந்த ஒருபுள்ளி மானைக் கீழே உருட்டித் தள்ளி அருகே மயிரைச் சிலிர்த்துக் கொண்டு நின்ற ஒரு முள்ளம் பன்றியைக் கிழித்துவிட்டு மரத்தடியில் புற்றின்மேல்கிடந்த உடும்பின் மேல்போய்த் தைத்தது.


‘என்ன வினோதம்? ஒரே ஒர் அம்பு! ஐந்துஉடல்களை ஊடுருவி விட்டதே! வில்பயிற்சியிலேயே இது ஒரு
சாமர்த்தியமானஅம்சம். இதற்குத்தான் வல்வில் என்றுபெயர் சொல்லுகிறார்கள் போலும்!’ வன்பரணர் ஆச்சரியத்தோடு சிந்தித்தார்.



அப்படியே அவனருகில்போய் அவனைப்பாராட்ட வேண்டும் என்று தோன்றியதுஅவருக்கு அங்கிருந்த பாணர்களையும்
விறலியர்களையும் உடன்அழைத்துக்கொண்டு சென்றார். அவன்வேட்டையாடி வீழ்த்திய மிருகங்களைப் பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டுநின்றான்.ஒரே அம்பினால் ஊடுருவிக்கொல்லப்பட்ட யானை, புலி, மான், பன்றி, உடும்பு எல்லாம் அடுத்து அடுத்துவரிசையாக இரத்தம் ஒழுகிட வீழ்ந்துகிடந்தன.


வன்பரணர் அவனருகில் போய் நின்றுவணங்கினார்.அவன் பதிலுக்குவணங்கினான். அவர் தாம் புலவரென்றும் தம்மோடு இருப்பவர்கள் இசைவாணர்கள்என்றும் கூறி அவனுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டார். பாணர் யாழ் வாசித்தார். விறலி
மத்தளம்கொட்டினாள். மற்றொருவர்புல்லாங்குழலில் இசையைப்பெருக்கினார். வன்பரணர் அந்த இனியவாத்தியங்களின் ஒசையோடு இயையும்படி அவனைப் பாராட்டி ஒரு பாடல்பாடினார்.



அவன் சிரித்துக் கொண்டே கழுத்திலிருந்தஅழகான மணி மாலையையும் பொன்மாலையையும் கழற்றி அவரிடம்அளித்தான்.
“புலவர் பெருமானே! இதை என் அன்புப்பரிசிலாக ஏற்றுக்கொள்ளுங்கள். இதோ இந்த மான் இறைச்சியை நெருப்பில் வாட்டிஉங்களுக்கு விருந்திடுவேன். என்விருந்தையும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளவேண்டும்.”
வன்பரணர் பரிசிலைவாங்கிக்கொண்டார்.

அவன் நெருப்பு மூட்டிவாட்டிக்கொடுத்தமான் இறைச்சியையும்தனியே அளித்த மலைத் தேனையும் மறுக்கமனமின்றி உண்டு மகிழ்ந்தார்கள் அவர்கள்.


“அப்பா, உன்னைப் பார்த்தால் சாதாரணவேட்டுவனாகத் தெரியவில்லையே? நீ யார்என்பதை நாங்கள் தெரிந்துகொள்ளலாமோ?” வன்பரணர் நன்றிப்பெருக்கோடு அவனை நோக்கிக் கேட்டார்.


அவன் பதில் கூறாமல் அவரைப் பார்த்துப்புன்முறுவல் பூத்தான். புன்னகையா அது? மனிதப் பண்பின் ஒரு மின்னலாகத்தோன்றியது வன்பரணருக்கு.

“நீ யார் என்பதைச் சொல்லமாட்டாயா?”

“எவனோ ஒரு வேடன் என்றுவைத்துக்கொள்ளுங்களேன்.”

“இல்லை! நீ வெறும் வேடனில்லை. வேடன் என்பதிலும் பெரிய தகுதி ஒன்று உனக்குள்அடங்கிக் கிடக்கிறது. நீ அதை என்னிடம்மறைக்கிறாய்...”

“புலவரே! அன்பும் ஆதரவும் நல்குவதற்குத் தகுதியா முக்கியம்.நல்ல மனம் ஒன்றுபோதாதா? அது என்னிடம் உண்டு.”

“பரவாயில்லை சொல்லிவிடு. நீ யார்?”

“புலவரே என்னை வல்வில் ஓரி’ என்பார்கள். இந்த மலைக்குத் தலைவன். வணக்கம். நான் வருகிறேன்” சொல்லிக்கொண்டே நகர்ந்தான். அவன்.

வியப்போடுநடந்து செல்லும் அவன் உருவத்தைப்பார்த்தார் அவர் ‘அவனா எவனோ ஒருவேடன்? மனிதப் பண்பின் வீரசிகரமல்லவா அவன்?’ புலவர் தமக்குள்முணுமுணுத்துக் கொண்டார்.

வேட்டுவரில்லை நின்னொப் போர்என
வேட்டது மொழியவும் விடா அன்வேட்டத்திற்
றான்.உயிர் செகுத்தமான்நிணப்புழுக்கோடு
ஆனுருக் கன்ன வேரியை நல்கித்
தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்
பன்மணிக் குவையொடும் விரைஇக்கொண்மெனச்
சுரத்திடை நல்கியோனே விடர்ச்சிமை
ஓங்கிருங் கொல்லிப் பொருநன்
ஓம்பர் ஈகை விறல்வெய்யோனே! (புறநானூறு -152)
வேட்டது = விரும்பியது, செகுத்த- போக்கிய, புழுக்கு = வாட்டல், வேரி = தேன். தாவில் = குற்றமற்ற, மணிக்குவை = மணியாரம், விரைஇ= கலந்து, பொருநன் = வல்விலோரி.
 




devisaran

நாட்டாமை
Joined
Mar 16, 2018
Messages
21
Reaction score
34
Age
48
Location
chennai
மிகவும் நல்ல பதிவு என் மகனுக்கு உங்களின் பதிவை என் கற்பனையில் கலந்து கதையாக சொன்னேன்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,081
Reaction score
49,948
Location
madurai
மிகவும் நல்ல பதிவு என் மகனுக்கு உங்களின் பதிவை என் கற்பனையில் கலந்து கதையாக சொன்னேன்
நன்றி தோழி ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top