• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புறநானுற்று சிறுகதைகள்----42---- தமிழ் காப்பாற்றியது!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
நல்ல வெயிலில் பசிக்களைப்போடு பலகாத தூரம் நடந்து வந்திருந்தார் மோசிகீரனார். சேரமான் பெருஞ்சேரம் இரும்பொறையின் அரண்மனைக்குள் அவர் நுழைந்தபோது அலுப்பும், சோர்வுமாக அவரைக் கிறக்கமடையச்செய்திருந்தன. உறக்கம் கண்
இமைகளைஅழுத்தியது. எங்கேயாவது ஒரிடத்தில்கொஞ்சநேரம் படுத்துஉறங்கினாலொழியக் களைப்பு தீராது என்று தோன்றியது.

அரண்மனையின் முன்புறப்பகுதியில் நின்றுகொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார்.அங்கிருந்த ஒரு மண்டபத்தின் நடுவில் மேடை மேல் அழகான கட்டில் ஒன்று காலியாகக் கிடந்தது. கட்டில் வைக்கப்பட்டிருந்த விதத்தையும் அதைச் சுற்றிப் பூக்கள் சிதறிக் கிடந்ததையும் கண்டு அது ஏதோ வழிபாட்டுக்குரிய ஒருபொருளை வைக்கின்ற இடம் என்றுஎளிதில் அனுமானித்து விடலாம். ஆனால் புலவருக்கு அப்போதிருந்த களைப்பில்அவற்றையெல்லாம் எண்ணத்தோன்றவில்லை.

விறுவிறு என்று அந்த மண்டபத்திற்குள்சென்றார். கட்டிலில் ஏறிப் படுத்துவிட்டார். கையை மடக்கித் தலைக்கு அணைவாகவைத்துக்கொண்டு படுத்தவர் விரைவில் நல்ல தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். கட்டிலின் மேல் எண்ணெய் நுரையைப் போன்ற மெல்லிய பூம்பட்டு விரிக்கப்பட்டிருந்தது.

பட்டு விரிப்பின்மேல்படுத்த சுகம், உடம்பு தன்னை மறந்தஉறக்கத்தில் உணர்வொடுங்கியிருந்தது. புலவர் வெகுநேரம்
உறங்கினார். நன்றாகஉறங்கினார். உறக்கத்தின்போது அங்கே மண்டபத்திற்குள் யார் வந்தார்கள்? என்னசெய்தார்கள்? என்பதே அவருக்குத்தெரியாது.

மறுபடியும் அவர் கண்விழித்தபோது திகைப்படையத்தக்க காட்சியைக் கட்டிலின் அருகே கண்டார். மன்னர்
மன்னாகிய பெருஞ்சேரல் இரும்பொறைமயில் தோகையாற் செய்யப்பட்டவிசிறியால் தமக்குவீசிக்கொண்டிருப்பதைக் கண்டார் அவர். தூக்கிவாரிப் போட்டது அவருக்கு பதைபதைத்துப் போய் எழுந்திருந்துகட்டிவிலிருந்து கீழே குதித்து இறங்கினார்.

“ஏன் எழுந்திருந்து விட்டீர்கள் புலவரே? இன்னும் உறங்க வேண்டுமானால்உறங்குங்கள். இன்னும் சிறிதுநேரம் உங்கள் பொன்னான உடம்புக்குவிசிறியால் வீசுகின்ற பாக்கியத்தையாவது நான் பெறுவேனே?’ சிரித்துக்கொண்டே தன்னடக்க மாகக் கூறினான்அரசன்.

“என்ன காரியம் செய்தீர்கள் அரசே! நான்தான் ஏதோ துரக்க மயத்தில் என்னைமறந்து உறங்கிவிட்டேன்.தாங்கள்அதற்காக..”

“பரவாயில்லை மோசிகீரனாரே! தமிழ்ப்புலவர் ஒருவருக்குப் பணிவிடைசெய்யக்கொடுத்து வைக்க வேண்டுமே!”

அரசனைச் சுற்றி நின்றவர்கள் கையில்பெரிய முரசம் ஒன்றைத் தாங்கிக் கொண்டுநிற்பதைப் புலவர்
அப்போதுதான்கவனித்தார். உடனே திடுக்கிட்டார். அவர் உடல் வெடவெட வென்றுநடுங்கியது.கண்கள் பயத்தால்மிரண்டன வாயில் பேச்சு எழாமல் பயத்தினால் நா குழறியது.

அவருடைய இந்தத் தடுமாற்றத்துக்குக்காரணம் என்ன? தாம் படுத்திருந்த கட்டில்அரசனுடைய முரசு கட்டில் என்பதை அவர்தெரிந்துகொண்டு விட்டார். முர்சு கட்டிலில்முரசு தவிர வேறு மனிதர்கள் யாராவதுஏறினால் அவர்களைஅந்தக்கணமே
வாளால் வெட்டிக்கொன்றுவிடுவது வழக்கம். அவர் அரண்மனைக்குள் நுழைந்த நேரத்தில் அந்தக்கட்டில் காலியாயிருந்ததன் காரணம், காவலர்கள் முரசத்தை நீராட்டுவதற்குஎடுத்துக் கொண்டு போயிருந்ததுதான்.

“அரசே! இதுவரை முரசு கட்டிவிலா நான்படுத்துக் கொண்டிருந்தேன்?”

“ஆமாம் புலவரே! நீங்கள் வேண்டுமென்றா செய்தீர்கள்? உறக்க களைப்பு. பாவம்தெரியாமல் ஏறிப்படுத்துக் கொண்டுவிட்டீர்கள்.”

“முறைப்படி என்னை இந்தக்குற்றத்திற்காக நீங்கள் வாளால் வெட்டிக்கொன்றிருக்க வேண்டுமே! என்னை எப்படிஉங்களால் மன்னிக்க முடிந்தது?”

“வேறொருவர் இதே காரியத்தைச்செய்திருந்தால் முறைப் படி அவ்வாறுசெய்திருக்கத் தயங்க மாட்டேன் புலவரேநான் இந்தப் பக்கமாக வரும்போதுகட்டிலில் ஆள் படுத்திருப்பதைக் கண்டுஆத்திரத்தோடு வாளை உருவிக்கொண்டுதான் வந்தேன்.
நல்ல வேளையாக நீங்கள் அப்போது புரண்டுபடுத்தீர்கள்.

உங்கள் முகத்தைக் கண்டு கொண்டேன். கோபம் அடங்கியது. தமிழுக்கு மரியாதைசெய்வது என் கடமை, உருவிய வாளை
உறைக்குள் போட்டேன். எழுந்தஆத்திரத்தை அன்பிற்குள் அடக்கினதைப்போல. அப்போதிருந்தே விசிறியை
எடுத்து வீசிக்கொண்டுதான் இருக்கிறேன். நடுவில் நீராட்டச் சென்றிருந்த இவர்கள் முரசத்தை வைப்பதற்காகக் கொண்டு வந்தார்கள், உங்கள் அமைதியான உறக்கம்கலைந்துவிடக்கூடாதே’ என்பதற்காக இவர்களை இப்படியே தடுத்து நிறுத்திவைத்தேன். இப்போதுதான் உங்கள்தூக்கம் கலைந்தது. நீங்கள்எழுந்திருந்தீர்கள் இரும்பொறைதூங்கும்போது நடந்த
நிகழ்ச்சிகளைப்புலவருக்கு விவரமாக எடுத்துக் கூறினான்.

புலவர் மோசிகீரனார் நன்றிப்பெருக்கினால் கண்களில் நீர் சுரக்கஅவனை அப்படியே இறுகத்தழுவிக்கொண்டார்.

“தமிழுக்காக இவ்வளவு பெரிய மன்னிப்பா? மன்னிக்க முடியாத பிழையை நீங்கள்மன்னித்துவிட்டீர்கள் அரசே!”

“இல்லை புலவரே! நீங்கள் என்னைஅதிகமாகப் புகழ்கிறீர்கள்.அளவுக்குமீறிநன்றி செலுத்துகிறீர்கள்.தமிழுக்காக எதைவேண்டுமானாலும் செய்யலாம். நான்செய்ததோ மிகச்சிறிய காரியம்”

“சேரர் பெருந்தகையே! உருவிய வாளைஉறைக்குள் போட்டுவிட்டதோடு நிற்காமல், உங்கள் கையில் விசிறியை எடுத்து மத்தளம் போலப் பருத்த தோள் வலிக்கும் படியாக எனக்கு விசிறியிருக்கிறீர்கள். நீ தமிழை முழுமையாக உணர்ந்து கொண்ட தற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இந்த உலகில் நலம் புரிந்தவர்களுக்கேமறுமை நல்லதாக இருக்கும் என்று அறிந்தஅறிவின் பயன்தான் இச்செயலோ?”

“இல்லை! இல்லை! இம்மையில்புகழையோ, மறுமையில்புண்ணியத்தையோ விரும்பி இதை நான்செய்யவில்லை,
புலவர்பெருமானே! உங்கள் தமிழ்ப் புலமைக்கு நான்செலுத்திய வணக்கம்இது.வேறொன்றுமில்லை”

“உனது வணக்கத்திற்கு நான் மட்டும்இல்லை. என் உயிரும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது. தமிழின் பெயரால்பிழைத்த உயிர் அல்லவா இது?”

இரும்பொறை சிரித்தான். வீரர்கள் முரசத்தைக் கட்டிலின்மேல் வைத்து அதற்குவழக்கமாகச் செய்ய வேண்டியவழிபாடுகளைச் செய்தனர்.

அரசன் புலவரை அழைத்துக் கொண்டுஅரண்மனைக்குள் சென்றான். மோசிகீரனார் தூக்கக் கிறக்கம் தணிந்து அவனோடு சென்றார். அவர் உள்ளம்தமிழை வாழ்த்திக் கொண்டிருந்தது.

தமிழ்ப்புலமைக்குத் தமிழ் அரசு செய்தமரியாதைக்கு இந்தச் சம்பவம் ஒருசரியான அளவுகோலாகவிளங்குகின்றது. மாசற விசித்த வார்புறுவள்பின்

மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை

ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்

பொலங்குழை உழிஞையொடு பொலியச்சூட்டிக்

குருதி வேட்கை உருகெழு முரசம்

மண்ணி வாரா அளவை எண்ணெய்

நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை

அறியா தேறிய என்னைத் தெறுவர

இருபாற் படுக்கும்நின் வாள்வாய்ஒழித்ததை

அதூஉம் சாலும்நல் தமிழ் முழுது அறிதல்

அதனொடும் அமையாது அணுக வந்துநின்

மதனுடை முழவுத்தோள் ஒச்சித்தண்ணென

வீசி யோயேவியலிடம் கமழ

இவணிசை உடையோர்க் கல்லது அவணது

உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை

விளங்கக் கேட்ட மாறுகொல்

வலம்படு குரிசில் நீ ஈங்கிது செயலே! (புறநானூறு - 50)

விசித்த = கட்டிய, வார்புறு = வாரையுடைய, மஞ்ஞை = மயில், பீலி= மயில் தோகை, மண்ணி = நீராட்டி, சேக்கை = விரிப்பு, தெறுவர = பிளந்து போக, சாலும் = அமையும், மதன் = வலிமை, முழவு = மத்தளம், குருசில்=அரசனே, இசை = புகழ், வலம்= வெற்றி, பொலம் = பொன், உறையுள் = வசிப்பது.




 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Thanks dear ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top