• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புறநானூற்று சிறுகதைகள்__39___ கனி கொடுத்த கனிவு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
தகடுர் அதியமானின் தலைநகரம் தகடுரையொட்டி, உயரிய மலைத் தொடர் ஒன்றுஅமைந்திருந்தது.அதற்குக் குதிரைமலைத்தொடர் என்று பெயர்.அதியமான்தலைநகரில் ஒய்வாக இருக்கும் நாட்களில்இந்த மலைத் தொடரில் வேட்டையாடப்போவது வழக்கம்.குதிரைமலையில் நல்லபழமரங்கள் இருந்தன. ஒருமுறைவேட்டையாடச் சென்றிருந்தபோதுவேடர்களிடமிருந்து ஒரு நெல்லி மரத்தைப்பற்றி அதியமான் தெரிந்து கொண்டான். அது ஒரு அற்புத நெல்லிமரம்.அதன் கனிஉண்டவர்களை நீண்டநாள் உயிர்வாழச்செய்யும் இயல்பு உடையது.ஒரே ஒருகணிதான் அந்த மரத்தில் தோன்றுவதுவழக்கம். அந்த ஒரு கனியையும் எவரும்பறித்துக் கொள்ள முடியாது! நெல்லிமரம்அப்ப்டிப்பட்ட உயரமான இடத்தில்அமைந்திருந்தது.

மலை உச்சியில் ஒரு பிளவு. அந்தப்பிளவின் செங்குத்தான பகுதியில் மரம்இருந்தது. மரத்தின் ஒரு துனியில் அந்தஒரே ஒரு நெல்லிக்கனியும் இருந்தது. இதுவரை அந்த நெல்லிக்கனியைப் பறிக்கமுயன்றவர்கள் யாவரும் தோல்வியேஅடைந்திருந்தார்கள். அந்த அருமையானநெல்லிக்கனியை எப்படியாவதுதான்அடைந்துவிட வேண்டும் என்று விருப்பம்கொண்டான் அதியமான். காட்டுவேடர்களைக் கலந்து ஆலோசித்தான்.

“அரசே! செங்குத்தான பாறைப் பிளவில் ஏறமுடியாது. நச்சுத்தன்மை பொருந்தியவண்டுகள் வேறு அந்தப் பிளவில்இருக்கின்றன. கொட்டினால் உடலில் நஞ்சுஏறி இறக்க நேரிடும். முதலில் மாற்றுமருந்துகளைத் துரவி வண்டுகளைக்கொல்ல வேண்டும். பின்பு மரத்திற்குஏறிச்செல்ல வசதியாகச்சாரம் கட்டவேண்டும். செங்குத்தான பிளவின்உச்சிவரை உயர்ந்த மூங்கில் களால் சாரம்கட்டிவிட்டால் நெல்லிக்கனி கிடைத்ததுபோலத்தான்” என்றார்கள் வேடர்கள்.

“அப்படியே செய்வோம். மூங்கில்களைத்தயார் செய்து சாரம் கட்டுங்கள். மருந்தைத்துவி வண்டுகளைப் போக்குங்கள். கனிஎப்படியும் நமக்குக் கிடைக்க வேண்டும். அதியமானின் வற்புறுத்தலானகட்டளையை மறுக்க முடியாமல் வேடர்கள்நெல்லி மரத்தில் ஏறுவதற்கானஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர். சிலநாட்களில் மருந்து தூவி வண்டுகள்அழிக்கப் பட்டன. அரிய முயற்சியின்விளைவாகச் சாரமும்அமைக்கப்பட்டது.வேடர்களும்,அதியமானும்சேர்ந்து முயன்று அந்த ஒருநெல்விக்கனியை அடைந்தனர்.

அதியமான் நெல்லிக் கனியோடுஅரண்மனைக்குத் திரும்பினான். பெறமுடியாத பொருள் ஒன்றை அரியமுயற்சியால் பெற்றுக் கொண்டுவந்துவிட்ட மகிழ்ச்சி அவன் மனத்தில்நிறைந்திருந்தது.

அங்கே அரண்மனையில் ஒளவையார்அவனைச் சந்திப்ப தற்காகக் காத்துக்கொண்டிருந்த சமயத்தில்நெல்லிக்கனியோடு போய்ச்சேர்ந்தான்.அவன் ஒளவையாரைக்கண்டதும் தனக்குள் இப்படிச் சிந்தித்தான்.

“தம்முடைய அறிவுரைகளால்இளைஞர்களையும் முதியோர்களையும்என்போன்ற அரசர்களையும் பண்பட்டுவாழச் செய்கின்ற இவருக்கு மூப்புவந்துவிட்டது. இவர் இன்னும் நீண்டநாள்உயிர் வாழ்ந்தால் இந்த உலகத்துக்குஎவ்வளவு பயன்? என் போன்ற அரசர்கள்உலகத்தை நாங்களே பாதுகாப்பதாகஎண்ணிக்கொண்டு தலை கனத்துஇறுமாந்து திரிகின்றோம். உண்மையில்உலகத்தை வாழ்விப்பவர்கள் இவரைப்போலத்துாய உள்ளம் பெற்ற புலவர்கள்அல்லவா? என்னிடம் இருக்கும் இந்தநெல்லிக்கனியை இவருக்கு அளித்துஇவரை நீண்டநாள் வாழச் செய்தால்என்ன?

அதியமான் ஒளவையாரை வணங்கினான். ஒளவையார் வாழ்த்தினார்.

“தாயே! இதை என் அன்பளிப்பாக ஏற்றுஉண்ண வேண்டும்” நெல்லிக் கனியைப்பணிவாக எடுத்து அவரிடம் நீட்டினான்.

“இது என்ன அதியா? நெல்லிக் கனியா?” - “ஆமாம் தாயே!” ஒளவையார் வாங்கிக்கொண்டார்.

“இது மாதிரி நெல்லிக் கனியை நான்இதுவரை கண்டதே. இல்லையே? என்னகனிவு? என்ன திரட்சி? எவ்வளவுஅருமையான நெல்லிக்கனி இது? இதைஎங்கிருந்து கொண்டு வந்தாய் நீ”

“முதலில் இதைச்சாப்பிடுங்கள்தாயே! மற்றவற்றை எல்லாம் பின்புகூறுகின்றேன்.” ஒளவையார்நெல்லிக்கனியை எடுத்து உண்டார். உண்ணும் போதே அதன் சுவையைவியந்தார். அதியமான் அந்த நெல்லிக்கனிதனக்குக் கிடைத்த விவரத்தைக்கூறினான்.அதோடு அந்தக் கனியின்பயனையும் கூறினான்.

“அதியா! உண்டாரை நீண்டநாள் வாழவைக்கும் இந்தக் கனியை, நீ அல்லவாஉண்டிருக்க வேண்டும்? எனக்கு ஏன்கொடுத்தாய்? சாகின்ற வயதை எட்டிக்கொண்டிருக்கும் கிழவி நான்! முன்பேசொல்லியிருந்தால் இதை நான்உண்டிருக்க மாட்டேனே!”

“நீங்கள் மறுப்பீர்கள் என்பதற்காகவேஅதன் பயனை முதலில் உங்களிடம் நான்கூறவில்லை”

“சிவபெருமான் திருப்பாற் கடலில்தோன்றிய நஞ்சை யெல்லாம் தாம்உண்டுவிட்டு அமுதத்தைத் தேவர்களுக்குக்கொடுத்தாராம். இந்த அரிய கனியைஅடைய முயற்சி களையெல்லாம் நீசெய்துவிட்டு, இப்போது நான்உண்ணுமாறு கொடுத்துவிட்டாயே! சிவபெருமானைப் போல நீ நீடுழி வாழ்க!”

“தாயே! நீங்கள் உண்டால் எத்தனையோபேரை வாழ்விக்க முடியும்.நான் கேவலம்ஒரு நாட்டைக்காக்கும் காவலாளி. நீங்கள்உலகைக் காக்கும் அறிவுத்தாய். நீங்கள்ஊழி ஊழி காலம் அழியாமல் வாழவேண்டும். இந்த உலகம் நெறியோடு வாழஉங்களைப் போன்றவர்கள் அறிவுரைகூறுவது என்றும் தேவை.”

“நீ கொடுத்த கனியில் கணிவைவிட உன்இதயக் கனிவுதான் மிகுதி அதியா”

“அவ்வளவு புகழ்ச்சிக்கு அதியன்தகுதியில்லாதவன் தாயே?”

“உண்மை அப்பா! புகழ் என்ற சொல்லின்எல்லைக்கு அப்பாற்பட்டதுதான் உன் புகழ்”.

நெல்லிக் கனியைவிட இதயக் கனியேஉயர்வாகத் தோன்றுகிறது, புலவர்ஒளவையாருக்கு.

வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்றொருவன் போல்
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் திங்கனி குறியாது
ஆதல் நின்னகத் தடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே(புறநானூறு-91)​

வலம்படு = வெற்றி உண்டாக, ஒன்னார் = பகைவர்கள், நறவு = மது, சுழல் = வீரக்காப்பு, தொடி = வீரவளை, ஆர்கலி = மகிழ்ச்சி, பொலந்தார் = பொன்மாலை, புரை = போல, சென்னி = தலை, நீலமணிமிடற் றொருவன் = சிவபெருமான், மன்னுக = நிலைபெற்று வாழ்க, ஆதல் = பயன், தீங்கனி - இனிய கனி.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top