• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience பெக்டெல் சோதனை: கதைகள் தேறுமா?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
வணக்கம் தோழமைகளே,

நான் சில நாள்களாகவே இதைப் பற்றி எழுத வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன், இன்றுதான் அமைந்தது.

பெக்டெல் சோதனையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?

இது திரைப்படங்கள், கதைப்புத்தகங்கள் முதலியவற்றில் பெண்கள் எந்தளவிற்குப் பங்களிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு அடிப்படை சோதனையாக இன்று அமைந்துள்ளது.

இவ்வுலகின் பெரும்பான்மையான சமூகங்கள் ‘ஆணாதிக்க’ நிலையில் இருப்பதை நாம் அறிவோம். (’ஆணாதிக்கம்’ என்பதில் ஆண்களைப் போலவே பெண்களின் பங்கும் உள்ளது என்றே நான் கருதுகிறேன், அது வேறு கதை, அதை இன்னொரு நாள் விவாதிப்போம்!)

அதாவது, ஏறத்தாழ எல்லாத் துறைகளிலுமே பெண்களுக்கான முறையான வாய்ப்பும் பங்கும் வழங்கப்படுவதில்லை என்பதே உண்மை!

திரைப்படங்கள், கதைகளிலும் இதே நிலைதான்!

பெரும்பான்மையான கதைகள் ஆண்கள் சார்ந்ததாகவே இருக்கின்றன. தமிழ்த் திரப்படங்களில் பெண்களை (கதாநாயகி) முதன்மையாகக் கொண்ட படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்!

இக்குறையைச் சுட்டிக்காட்டும் வகையில் எழுந்ததுதான் இந்த பெக்டெல் சோதனை.

அலிசன் பெக்டெல் என்ற கேலிச்சித்திரக்காரர் (கார்ட்டூனிஸ்ட் ) ‘டைக்ஸ் டு வாட்ச் அவுட் பார்’ என்ற தான் நடத்திய ஒரு கேலிச்சித்திர வரிசையில் 1985-இல் ஒரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டார் (காண்க படம்).

Bechdel_test_Dykes-to-watch-out-for.jpg

அதில் இரண்டு பெண்கள் திரைப்படம் பார்க்கச் செல்ல விழைந்து எந்தப் படத்திற்குப் போகலாம் என்று சிந்திக்கின்றனர்.

அதில் ஒருத்தி சொல்கிறாள் ‘நான் சில நிபந்தனைகள் வைத்துள்ளேன், அவற்றில் தேறும் படங்களைத்தான் நான் பார்ப்பேன்’ என்று.

அவள் குறிப்பிடும் அந்த நிபந்தனைகளைத்தான் இன்று ‘பெக்டேல் சோதனை’ (Bechdel test) என்கிறோம்.

என்ன நிபந்தனைகள்?

1. திரைப்படத்தில் குறைந்தது இரண்டு பெண் கதாப்பாத்திரமாவது இருக்க வேண்டும்,
2. அந்த இருவரும் தமக்குள் உரையாட வேண்டும்,
3. அவ்வுரையாடல் ஒரு ஆணைப் பற்றியதாக இருக்கக் கூடாது!

இதுதான் அவளின் நிபந்தனைகள். (எந்தப் படமும் இதில் தேறவில்லை என அவர்கள் திரைப்படம் பார்க்காமலே வீட்டுக்குச் சென்றுவிடுகின்றனர். ‘நான் கடைசியாகப் பார்த்த படம் ‘ஏலியன்ஸ்’!’ என்கிறாள் அவள்!)

மேலே சொன்ன நிபந்தனைகள்தான் பெக்டெல் சோதனை. இது திரைப்படங்களுக்கு மட்டுமன்றிப் புனைகதைகளுக்கும் (fictions / novels) பொருந்தும் (நாடகங்கள், பாப் இசை என்று பல்வேறு துறைகளிலும் கூட இதைப் பொருத்திப் பார்க்கின்றனர்!)

சிலர் மேலே சொன்ன நிபந்தனைகளை இன்னும் கொஞ்சம் நீட்டிப்பர்:

1. இரண்டு பெண் கதாப்பாத்திரங்களுக்கும் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்
2. அவர்கள் உரையாடல் குறைந்தது 60 நொடியாவது (திரைப்படத்தில்) இருக்க வேண்டும்

இப்படி!

இதை நன்றாகக் கவனித்துப் பாருங்கள்:

1. திரைப்படங்கள், கதைகளில் அவ்வளவாக பெண் கதாப்பாத்திரங்கள் இருப்பதில்லை
2. அப்படியே இருந்தாலும் அவர்கள் ஆண் கதாப்பாத்திரங்களின் துணைப்பாத்திரமாகவே வருகிறார்கள், கதையில் இரண்டு பெண்கள் பேசிக்கொண்டாலும் அவர்களின் பேச்சு ஒரு ஆணைப் பற்றியதாகவே இருக்கிறது!

(இந்தச் சோதனை பிரபலமடைந்த பின் ஆங்கிலத் திரைப்படங்களில் பெண்களுக்கான சரியான அங்கீகாரம் பல படங்களில் கிடைத்துள்ளது. இன்றைய நிலையில் ஏறக்குறைய பாதிக்கும் அதிகமான படங்கள் இச்சோதனையில் தேறுகின்றன என்று விக்கிப்பீடியா கட்டுரை சொல்கிறது!)

ஒன்றை மனத்தில் வைத்துக்கொள்வோம், இது ஒரு அடிப்படையான சோதனைதான். திரைப்படங்களில், கதைகளில் பெண்கள் முறையாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்ட எழுந்த ஒரு கேலிச்சித்திரமே இது. இதில் தேறும் படங்களில் வேறு காட்சிகளில் பெண்களை மட்டமாகக் குறைவாகக் காட்டும் நிலை இருக்கலாம், அல்லது படமே குப்பையாக இருக்கலாம். சில சமயம், நல்ல படங்கள் இச்சோதனையில் தேறாமல் இருக்கலாம்! (அதற்கு அதன் கதையமைப்பு காரணமாக இருக்கும்!)

சரி, விஷயத்துக்கு வருவோம், பெண் எழுத்தாளர்களும் பெண் வாசகர்களும் அதிகம் இருக்கும் இத்தளத்தில் உள்ள கதைகளில் எத்தனை கதைகள் இந்தச் சோதனையில் தேறும் என்று பார்ப்போமா?

நீங்கள் படித்த கதைகளில் எவையெல்லாம் இச்சோதனையில் தேறின என்பதைக் கருத்தில் குறிப்பிடுங்கள்.

இயன்றால் அக்கதையில் வரும் பெண் கதாப்பாத்திரங்களையும், ஒரு ஆணைச் சாராமல் / ஆணுக்குத் துணையாக இல்லாமல் அவர்கள் செய்த / பேசிய பகுதிகளையும் குறிப்பிடுங்கள்.

நான் மீண்டும் நினைவூட்டுகிறேன், இது கதைகளில் பெண்களின் அங்கீகாரம் குறித்த ஒரு அடிப்பதைச் சோதனை, அவ்வளவுதான். இதில் தேறினால்தான் நல்ல கதை, தேறாததெல்லாம் மோசமான கதை, அல்லது ஆணாதிக்கத்தை ஆதரித்து வளர்க்கும் கதை என்று பொருள் அல்ல! கதைகளில் பெண்களுக்கான பங்களிப்பு சரியாக இருக்கிறதா என்பதற்கான ஒரு முதற்கட்ட சோதனை இது! அவ்வளவே!

ஆனால், ஒன்று நிச்சயம், இதில் கூட தேறாத திரைப்படங்கள் / கதைகளை அதிகம் நம் சமூகத்தில் இருக்கவிடுவதன் மூலம் நாம் நம்மையே அறியாமல் நமது இளந்தலைமுறைப் பெண்/ஆண்களிடம் ஒருவித ஆழ்மன ஆணாதிக்க ஆதரவு / ஏற்புச் சூழலை உருவாக்குகிறோம்!

விவாதிப்போம்... நன்றி :)(y)
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Naan sharp paa 5 maniku varugiren.. ???
வா வா... உன் தேர்வைச் சிறப்பாக எழுத வாழ்த்துகள்... :):)(y)(y)

ஆமா, என்ன தேர்வு?
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
முதலில் நீங்களே ஒரு பட்டியல் கொடுக்கலாமே ஆசிரியரே... கருத்தை சொன்னவர் உதாரணத்தையும் சொல்லாமே...

நீங்கள் ஆரம்பித்தால் பின்னே மாணவர்கள் நாங்கள் வந்து சொல்ல சரியா இருக்கும்....
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
முதலில் நீங்களே ஒரு பட்டியல் கொடுக்கலாமே ஆசிரியரே... கருத்தை சொன்னவர் உதாரணத்தையும் சொல்லாமே...

நீங்கள் ஆரம்பித்தால் பின்னே மாணவர்கள் நாங்கள் வந்து சொல்ல சரியா இருக்கும்....
வரம் கொடுத்த சிவன் தலைலயே கை வெச்சுப் பார்க்க வந்த பாணாசுரன் மாதிரி இருக்கே... :LOL::LOL::LOL:

நான் இத்தளத்தில் இதுவரை ஒரு சில கதைகளையே முழுதாகப் படித்துள்ளேன்...

@Thendral தென்றலின் ‘கந்தர்வ லோகா’ - இதில் ஒரு பெண்தான் நாயகி என்றாலும் அவளின் உலகம் விஸ்வா என்ற ஆண்தான்! ஸோ, வெரி சாரி...
(ஆனால், நாயகி லோகாவின் பாட்டி ஒருவர் இருப்பார் - எனவே கண்டிஷன் 1 ஓக்கே!
ஆனால், லோகாவும் பாட்டியும் விஸ்வா தவிர்த்துப் பிற விஷயங்களைப் பேசினார்களா? எனக்கு நினைவில்லை... பார்க்க வேண்டும்! அப்படி இருந்தால் கதை தேறிவிடும்!)

@Monisha மோனிஷாவின் ‘யாரடி நீ மோகினி’ குறுநாவல் - இதிலும் பல பெண்கள் உள்ளனர். நாயகி (ஐயையோ, அவ பேர மறந்துட்டேனே! மதியா?!) அவள் அம்மாவோடு பேசும் காட்சிகள் உண்டு, ஆனால் அவையெல்லாம் அவளின் அப்பா, முறைப்பையன் பற்றியனவே (என்று என் நினைவில் இருக்கின்றன! தவறாகவும் இருக்கலாம்!)

@Kavyajaya காவியாவின் ‘மழையாக நான் வரவா’ படித்துக்கொண்டிருக்கிறேன் (அவள் எழுதிக்கொண்டே இருக்கிறாள்!) - இதன் நாயகியும் நல்ல துடிப்பான, தனித்துவம் மிக்க பெண்தான். ஆனால், கதையில் இவளைத் தவிர வேறு ‘ஸ்ட்ராங்க்’ஆன பெண் பாத்திரங்கள் இல்லை! இவளின் வாழ்வின் இலட்சியமும் :)LOL::LOL:) தன் மாமன் அரசனைத் திருமணம் செய்துகொவதுதான்! (ஆனால், இப்போதைக்கு இவள் அரசனின் அப்பாவைக் கொன்றவரைக் கண்டுபிடித்தல், அவரிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துகளை மீட்டல் ஆகியவற்றிலும் ஆர்வம் காட்டுகிறாள்... ஆனால், அவளது இந்த உரையாடல்கள் எல்லாம் பிற ஆண் கதாப்பாத்திரங்களுடன்தான்!)

நிறைய கதைகளைப் படிக்கக் குறித்துவைத்துள்ளேன்... நேரம் அமையும்போது படிப்பேன்... :):)(y)(y)

---

ஒரு கொசுறு தகவல் சொல்கிறேன்:

என் தோழி ஒருத்தி கார் வாங்க திட்டமிட்டார். அதற்காக ஒரு ஏஜென்சியைத் தொடர்புகொள்ள அவர்களும் ஒரு முகவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டிற்கு வந்த முகவர் ‘மேடம், நான் அந்த கார் விற்கும் நிறுவனத்திலிருந்து வருகிறேன்’ எனவும் இவரும் ‘சரி, சொல்லுங்க...’ என அமர, அவர் உடனே

‘உங்க ஹஸ்பெண்ட் இல்லையா?’னு கேட்டாராம்.

’ஏன்’னு இவங்க கேட்டதுக்கு,

‘இல்ல, கார் வாங்குறதப் பத்திப் பேசத்தான்’னு சொன்னாராம்.

உடனே இவங்க டென்ஷன் ஆகி

‘ஏன் நான் கார் வாங்கமாடேனா? என்கிட்டலாம் பேச மாட்டீங்களா? இல்ல எனக்கு கார் விக்க மாட்டீங்களா?’னு கேட்டு அவரை அனுப்பிட்டாங்க! ‘நீயும் வேணாம், உன் காரும் வேணாம்’னு!

உண்மையில் அந்தக் காரை வாங்க இருந்தது அவங்க சம்பாத்தியத்துலதான்!

நம் சமூகத்தின் நிலை இப்படித்தான் இருக்கிறது! இதற்கு ஒரு பெரிய காரணி திரைப்படங்களும் கதைகளும்தான்! :(
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore

En kathaiya pathi neenga sonnathu ..:LOL::LOL::LOL::LOL: mudiyala naa.. but enaku oru thought ipo adutha kathai nu onnu naan eluthuna neenga solra maathiri try pannanum nu.. thanks naa ippo vara padikuravangaluku bore adika koodathu ngra aim la thaan eluthunen.. ini paakalaam.. ???
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
நானும் ஒரு சில கதைகள் தான் படிக்கிறேன்.. என் பார்வையில் :D:D

அகிலா கண்ணன் அவர்களின் இரண்டல்ல ஒன்று:love::love: அதில் பெண் கதாபாத்திரங்கள் தான் அதிகம் ...

அடுத்து மோனிஷா அவர்களின் பாடல் தேடல் :love::love:

அழகி அவர்களின் வண்ணம் கொண்ட வெண்ணிலவே இந்த கதையில் வரும் பெண் கதா பாத்திரங்கள் அவ்வளவு உயிர்ப்புடன் இருக்கும்... குறிப்பாய் காந்திமதி பாட்டி அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் எல்லோரும் வாயடைத்து தான் போவர்...நல்லவையோ கெட்டைவையோ அனைவரையும் வாயடைக்க செய்த பெருமை காந்திமதி& உத்தமி அண்ட் ஜானு இன்னும் பட்டியல் இருக்கிறதுதான்... எனக்கு நினைவில் இல்லை... :love::love:

உங்கள் கொசுறு தகவல் உண்மை தான் ஆசிரியரே.. என்னதான் தொழில் செய்யும் இடத்தில் நிர்வாகியாய் பெண்கள் அமர்ந்தாலும் புதிதாய் வருபவர்கள் கேட்கும் கேள்வி "சார் இல்லையா மேடம்.. நம்ம கம்பெனி details சொல்லணும்" என்பது தான்... இங்கே நாங்கள் தான் சார் என்று சொன்னால் தான் மேற்கொண்டு பேச்சை தொடங்குவார்கள்.. அனுபவம் பேசுகின்றது ஆசிரியரே.... :love::LOL:

தங்களின் இந்த சோதனை முயற்சிக்கு வாழ்த்துகள் & நன்றி:love::love:(y)(y)
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top