• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience பெக்டெல் சோதனை: கதைகள் தேறுமா?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
K
அன்பான தோழர், தோழிகளே!

தாங்கள் அனைவரும் விவாதித்துக் கொண்டிருக்கும் தலைப்பிற்கு ஏதோ என் அறிவிற்கு எட்டிய ஒரு சில வரிகள்.
நான் முன்பு ஒரு சில வரிகள் எங்கோ படித்திருக்கிறேன். ஆனால், குறிப்பிட்ட ஆசிரியரின் பெயர் நினைவில்லை. அப்பொழுது, அவர்கள் விவாதித்துக் கொண்ட செய்தி என்னவென்றால்?
"நாவல் எழுதுபவர்கள் என்ன செய்கிறார்கள்? காதலைத் தானே வளர்க்கிறார்கள்?" என்ற கேலி ஒரு புறம் எழ, "காதல் இல்லாமல் இவர்களால் எழுத முடியுமா?" என்ற கேள்வியும் அத்தோடு எழுந்தது. அப்படி கேலி பேசியவர்களால் கதை, கவிதை போன்றவற்றை வளர்த்ததை போல் நாவல்களை வளர்க்க முடியவில்லை என்பதே நிஜம். உண்மை என்னவென்றால், காதல் இல்லாமல் கதைகள் எழுத முடியும். ஆனால், அவர்கள் சிறுகதைகளையோ, கவிதைகளையோ சிறப்பாக வடிக்க முடியுமே தவிர ஐந்நூறு பக்கங்களைக் கொண்ட நாவலை வடித்தால் அது சிறந்த பொழுது போக்கு அம்சமாக அமைவதில்லை.
அறிவை வளர்க்க, படம் பார்ப்பவர்களை விட, நாவல்களைப் படிப்பவர்களை விட, பொழுது போக்கிற்காகப் படம் பார்ப்பவர்களும், நாவல்கள் படிப்பவர்கள் அதிகம் என்பது பொதுவான கருத்து.
காதல் என்னும் அழகிய கவிதை அரங்கேறும் பொழுது, அங்கு ஆண், பெண் இருபாலினரின் உரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது.
பெண் - பெண் உரையாடல்களுக்கு தாங்கள் கேட்டதிற்கு இதுவே என் விளக்கம்.

அதே நேரம் சிறுகதைகள்:
என் சிறுகதை உறவென்னும் ஊஞ்சலில் - அம்மா, பெண் பாசத்தைக் கூறி இருப்பேன். அடுத்த சிறுகதை கருப்பனில் - கதாநாயகிக்கும் - நாயிற்கும் உள்ள எசமானியை விசுவாசத்தையும், மது விலக்கைக் குறித்துக் கூறி இருப்பேன். சிறுகதைகளில் எனக்குக் காதல் தேவைப்படவில்லை. இங்கு ஆண், பெண் உரையாடல் எனக்குப் பெரிதாகத் தேவைப்படவில்லை.
இப்படியே நம்மால் பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.
ஆனால், பொழுது போக்கு அம்சமாக அமையும் நாவல்களுக்கு இவை சரிப்பட்டு வரா என்பதே என் தாழ்மையான கருத்து.


படங்கள்:
சினேகிதியே, மகளிர் மட்டும், முப்பத்து ஆறு வயதினிலே, போன்று பெண்களை மையமாகக் கொண்ட வெற்றிப் படங்கள் அமைந்தாலும், தொடர்ந்து இதைப் போல் படங்கள் மட்டுமே வந்தால் அப்படங்கள் வெற்றிப் படங்களாக அமையும் வாய்ப்பு குறைவே.
இது பெண்களுக்கு மட்டுமில்லை ஆண்களுக்கும் பொருந்தும்.
அது கதைகளாயினும், நடை முறையாயினும் சிறு செயலிலும் தொடர்ந்து வெற்றி பெற ஆண், பெண் இருவரும் சம உரிமையோடு ஒன்றாக நடந்தால் மட்டுமே முடியும். (கதாபாத்திரங்கள் உட்பட!)
இதை மையமாகக் கொண்டு உருவாக்கப் பட்ட என் கதையே 50:50

அடுத்தாக ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம்?
காலப் போக்கில் சில இடங்களில் பெண்கள் தவிர்க்கப் பட்டிருக்கலாமே தவிர நம் சமுதாயம் பெண் ஆதிக்க சமுதாயம் என்றும் பெருமையாகக் கூறலாம்.
தாத்தா சொல்லிற்கு, பாட்டி தலையாட்டுவது போல் தெரிந்தாலும் பல குடும்பங்களின் பிடிமானம் பாட்டிமார்களின் கைகளில் உள்ளது என்பதே நிஜம். தந்தை சொல்லுக்குப் பயப்பட்டும் குழந்தைகளுக்குக் கூட, அந்த பயத்தை உண்டு செய்பவள் ஒரு தாயாகத்தான் இருக்கிறாள்.
பெண்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தினாள் ருசிக்குமா? சில இடங்களில் ஆண்களும் அவர்கள் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றனர். ஆனால், அந்த ஆதிகத்திலும் ஒரு ருசி இருக்கும். ஒரு பலன் இருக்கும். அதை அந்த பெண்ணால் மட்டுமே ருசிக்க முடியும். ரசிக்க முடியும். அந்த ஆண் ஆதிக்கத்தை ஆட்டுவிப்பவளும் பல இடங்களிள் பெண்ணாகத்தான் இருப்பாள். அது வேறு கதை. ஆண் ஆதிக்கத்தைப் பக்குவமாகக் கையாள தெரிந்த பெண் வெற்றி பெறுகிறாள். பெண் ஆதிக்கத்தைப் புரிந்து கொண்டு கையாளும் ஆணும் வெற்றி பெறுகிறான்.
ஆணாதிக்க சமுதாயமாக மட்டுமே இந்த சமுதாயம் இருந்திருந்தால், இத்தனை IT பெண்கள் வந்திருக்க முடியாது. இத்தனை பெண் ஆசிரியர்கள் உருவாகியிருக்க முடியாது. இத்தனை பெண் எழுத்தாளர்கள் உருவாகியிருக்க முடியாது. ஏன், அதை விட அதிமுக்கியமாக இதைப் பெண்கள் ஒன்று கூடி ஆண் ஆதிக்கத்தைக் குறை கூறி இருக்கவும் முடியாது.
ஆண் ஆதிக்கத்தால் பல தவறுகள் நடப்பது நிஜம். அதே பெண் ஆதிக்கத்தால் பாதிக்கப்படும் ஆண்களும் இருக்கிறார்கள். தவறுகளும், சறுக்கல்களும் இரு பக்கமும் இருக்கின்றன. (இதைப் பற்றி மற்றொரு முறை விவாதிக்கலாம்.)

கதைகள்:
பெண்களைக் கவரக்கூடிய சீரியல், நாவல்கள் இவை அனைத்திலும் பெண்களே முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
ஆனால், அந்த பெண்கள் எப்படி வடிவமைக்கப் படுகிறார்கள் என்பதே கேள்வி?
1 . எப்படி அமைக்கப் பட வேண்டும்?
இப்படியா? பெண்கள் நிமிர்வாக, தானே அனைத்திலும் முன்னோடியாக இருப்பது போல்? அனைத்து பிரச்சனைகளையும் தனியாகச் சமாளிப்பவளாக? எந்த ஆணின் துணை இன்றி செயல்படுபவளாக?
ஒரு கதையில் அப்படி அமைக்க முடியும். ஆனால் தொடர்ந்து? நிச்சயமாக முடியாது.
ஒரு பெண் தந்தையின் வழிகாட்டுதலில் வளர்கிறாள். அண்ணனின் பாதுகாப்பில் நிம்மதி அடைகிறாள். ஏற்க மறுத்தாலும், கணவன் தன் சுமைகளைத் தாங்கும் பொழுது சந்தோஷமாகிறாள். அவளைத் தன்மானம் மிக்கவளாகக் காட்ட முடியும். சுயமரியாதை மிக்கவளாகப் படைக்க முடியும். அறிவாளியாகச் சித்தரிக்க முடியும். பொறுமையின் அடையாளமாகவும் காட்ட முடியும்.
ஆனால், ஒரு பெண்ணை ஒரு பொழுதும் தான்தோன்றித்தனமாகவோ, அவளால் எல்லாம் தன்னிச்சையாகச் செயல் பட முடியும் என்று காட்டி இந்த சமுதாயத்திற்கு ஒரு தவறான பாடத்தையோ? ஓர் முன் உதாரணத்தையோ எப்படி உருவாக்க முடியும்?

2 . ஆண்கள் - இவர்கள் எப்படி வடிவமைக்கப் பட வேண்டும்? இதைப் பற்றி கேள்விகள் இல்லை - ஆதலால் நானும் பதில் கூற வில்லை.

ஆனால், பொதுவாக இவர்கள் கதாபாத்திரங்களும் பெண்களைச் சார்ந்தே வடிவமைக்கப் பட்டிருக்கும்.

ஓர் வாசகியாக,

இவை அனைத்தையும் தாண்டி கதை என்பது எழுத்தாளரின் கற்பனை விதையில் மலரும் மலர். அது ரோஜாவாக, தாமரையாக, அல்லியாக, முல்லையாக, இப்படிப் பல மலர்களைப் போல் எந்த நிறத்திலும், எந்த மணத்திலும் இருக்கலாம். அந்த மலர் இப்படி இருக்க வேண்டும் என்ற ஆசை என்னிடம் இருக்கலாம். ஆனால், எல்லா மலர்களை ரசிக்கும் என்னுள் வாசம் செய்து கொண்டிருக்கும் ரசிகை புத்துணர்ச்சியோடு எல்லாம் கதைகளுக்காகவும் காத்திருப்பாள்.
அகிலா. நீங்கள் சொன்ன எதையுமே நான் மறுத்து பேச போவதில்லை.

ஆனால் நாம் படிக்கும் நாவல்கள் எத்தனை நாவல்கள் வித்தியாசப்படுகிறது என்று யோசித்து பார்ப்போம்.

அல்லி, மல்லி, ரோஜா மட்டுமே போதுமா? எல்லாமே வாசனை கொண்ட மலர்கள். வெறும் மலர் வகைகள். ஆனால் உலகம் பெரியது. நிறைய நிறைய புதுப்புது படைப்புகள் இருக்கின்றன.

பல நாவல்கள் கூட நீங்கள் சொன்ன மலர்கள் போல சில நாட்களில் வாடி விடுபவை உதிர்ந்து விடுபவையும் கூட.

நாம் எழுதும் கதைகள் பலகாலங்கள் கடந்து பேசப்பட வேண்டும். ஒரு சமூக மாற்றத்திற்கு வித்திட வேண்டும் என்பதுதான்.

சித்ரம்மா பட்டிமன்றத்தில் சொன்னதை நீங்கள் நினைவுப்படுத்திகொள்ள வேண்டும். (ஞானபீடம் விருது. )

ஒரு ஆணை சார்ந்த கதாநாயகிகளை காட்டி காட்டி நம் பெண்ணிய சமுதாயத்தை நாமே முடமாக்கி முதுகெலும்பு இல்லாமல் மாற்றி கொண்டே இருக்கும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. ( நிச்சயம் உங்கள் கதைகளில் வரும் பெண்கள் அப்படி இல்லை. நந்தினி கீர்த்தனா லவி என்று எல்லோருமே சுயசார்பான பெண்கள்)

நீங்களே அப்படி எழுதிவிட்டு மற்ற நாவலாசிரியர்களிடம் பொழுது போக்குகாகதான் நாவல்கள் என்று சொல்லலாமா?

மாற்றத்தை நாம் தொடங்கிவிட்டோம். அது தொலைக்காட்சிகள் சீரியல்களிலும் தொடரட்டும். ஒரு புது சமுதாயத்தை உருவாக்கும் சக்தி
எழுதுகோலுக்கும் நம் எழுத்துக்கும் உண்டு என்பதை நான் திடமாக நம்புகிறேன். அந்த நம்பிக்கை சில வாசகர்களிடம் பேசியது மூலமாக எனக்கு ஊர்ஜிதமுமானது.

இந்த பெக்டால் சோதனையில் கதைகளில் காதல் வேண்டாம் என்ற கண்டிஷன் இல்லை. வெறும் பெண் சார்ந்த கதையாக மட்டும் இருக்க வேண்டும் என்ற கண்டிஷனும் இல்லை.

இது ரொம்பவும் சாதாரணமான சோதனை. கதையில் முக்கியமாக இரண்டு பெண் கதாபாத்திரங்கள். அவர்கள் பேசும் போது ஆணை பற்றி இருக்க கூடாது. ஜேம்ஸ் பாண்ட் போல ஒரு பெண்ணை வீரதீரமாக காண்பிக்க சொல்லி எல்லாம் கண்டிஷன் இல்லையே

இதற்கு எதற்கு இவ்வளவு விளக்கம் மற்றும் கேள்விகள் அகிலா? இப்படி ஒரு காட்சி கூட அப்போது நம் நாவல்களில் இல்லையா?
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
பெக்டெல் சோதனையில் தேறிய கதைகளை வாசகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அப்படியே ஏற்றுக் கொண்டாலும் அது அச்சுக்குப் போகுமா?
நடைமுறைச் சிக்கல்களும் இருக்கின்றன தம்பி.‌? (இந்தப் புள்ளியில் தான் அறிமுக எழுத்தாளர்கள் கொஞ்சம் சுதாரித்துக் கொள்கிறார்கள். தங்களுக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்த பிறகு அவர்களும் இவற்றை எல்லாம் பரிசோதித்துப் பார்க்கலாம். காலம் வரும். காத்திருப்போம்.?)
அக்கா, நாம் மீண்டும் தொடங்கிய புள்ளிக்கே வருகிறோம் - Back to square one!

நடைமுறைச் சிக்கல்கள் ஏன் வருகின்றன? கண்டிஷனிங்!

வாசகர்கள் ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்? கண்டிஷனிங்!

இதை எப்படி உடைத்து வெளியேறுவது?

எனக்கு இரண்டு உவமைகள் நினைவிற்கு வருகின்றன (சற்றே மேலோட்டமாக மட்டும் இவற்றை எடுத்துக்கொள்வோம், ரொம்ப ஆழமாகச் சென்று அலச வேண்டா!)

முதலாவது:

நெடுநாள்கள் பசியில் இருந்த ஒரு நாய்க்கு ஒரு காய்ந்த எலும்புத் துண்டு கிடைத்தது.

அது மிகுந்த மகிழ்வோடு அவ்வெலும்புத் துண்டை வாயில் வைத்துக் கடித்தது. காய்ந்த அந்த எலும்பிலிருந்து என்ன வந்துவிடப் போகிறது? ஆனால், எலும்பை அழுத்திக் கடித்ததில் பசியில் வலுவிழந்திருந்த நாயின் வாய் கிழிந்து இரத்தம் கசிந்தது...

ஆனால், அந்த நாய் அவ்விரத்தம் எலும்புத்துண்டிலிருந்துதான் வருகிறது என்று எண்ணி மேலும் மேலும் அழுத்திக் கடித்துச் சுவைத்து மகிழ்ந்ததாம்...

எத்தனை நேரம் அதனால் அவ்வாறு சுவைத்திருக்க இயலும்?!

இரண்டாவது:

ஒரு கொடூர மனம் படைத்த (சீன) சமையற்காரன் ஒரு தவளையைச் சமைப்பதற்காக ஒரு கலத்தில் நீர் நிரப்பி அடுப்பில் ஏற்றி வைத்தானாம்.

முதலில் நீர் குளிராக இருக்கவே, தவளை ஆனந்தமாக அதில் நீந்தித் திளைத்தது. ஆனால், நேரம் செல்லச் செல்ல நீர் மெல்ல சூடேறியது. தொடக்கத்தில் அந்த மிதமான வெப்பத்தை சுகமாக அனுபவித்த அத்தவளை, விரைவில் நீரின் வெப்பம் தன்னால் தாங்க இயலாத அளவு ஏறுவதை உணர்ந்தது.

ஆனால், அந்நிலையில் அதிக நேரம் சுடுநீரில் இருந்த அதன் தசைகள் இளகிப் போயிருந்தன, அதனால் நீரைவிட்டு வெளியே தாவ இயலவில்லை...

இப்போது நாம் வெண்ணீர் சுகமாக இருக்கிறது என்று நீந்திக்கொண்டிருக்கிறோம்... நீர் மெல்ல வெப்பமேறிக் கொண்டிருக்கிறது!

வெளியே தாவுவது தீர்வா? இருந்து வெப்பத்திற்குப் பழகிக்கொள்வோம் என்பது தீர்வா?

:):):)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
விவாதிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்:

1. விவாதங்கள் பொதுநிலையிலேயே முன் வைக்கப்படுகின்றன - அப்படித்தான் முன்வைக்கப்பட வேண்டும் - எனவே எதையும் தனிப்பட்டு எடுத்துக்கொள்ளாதீர்கள்

2. உங்கள் கதைகளே விவாதிக்கப்பட்டாலும் நீங்களும் ஒரு வாசகராய் நின்று அதை அலசுங்கள்

(எழுதும்வரைத்தான் அக்கதை ஒரு ஆசிரியருக்கு முழுமையாகச் சொந்தம், முடிந்து பதிப்பித்துவிட்டால் அது ஆசிரியருக்குப் பாதியும் படிக்கும் வாசகர்களுக்குப் பாதியும் சொந்தம் - நான் காப்புரிமையைக் குறிப்பிடவில்லை! கதையை நாம் ஒன்று நினைத்து எழுதுகிறோம், வாசகர் அதை எப்படிப் புரிந்துகொள்கிறார் என்ற ஒன்றும் உள்ளதல்லவா? அந்தப் பங்கைத்தான் குறிப்பிடுகிறேன்!)

3. நம் அனைவரின் நோக்கமுமே சமூகத்தில் ஆணும் பெண்ணும் சமநிலையில் மதிப்போடும் உரிமையோடும் இருக்க வேண்டும் என்பதே.

இன்றைய சூழலில் அது இல்லை என்பதே உண்மை. சில இடங்களில் ஆணின் கை ஓங்கியும், சில இடங்களில் பெண்ணின் கை ஓங்கியும் உள்ளன.

ஓரே நோக்கம் கொண்ட நம் வாதங்கள் நடைமுறை சார்ந்து முன் வைக்கப்படுகையில் சில சமயம் எதிரெதிர் கருத்துகளைப் போலத் தோன்றுகின்றன - அவை அப்படி அல்ல என்பதை உணர்க!

‘நம் நோக்கம் என்ன?’ ‘இவரது நோக்கம் என்ன?’ என்ற வினாக்களை எழுப்பிப் பாருங்கள் ஒரே விடைதான் கிடைக்கும்!

4. நண்பர்களாக இவ்விவாதத்திற்குள் நுழையும் நாம் நண்பர்களாகவே இதைவிட்டு வெளியேறுவோம்... (வெளியேறும்போது - இது இப்போதைக்கு முடியுற மாதிரி தெரியல!!)

5. விவாதம் என்பது ‘எது சரி’ என்று அலசுதல், அங்கே ‘யார் சரி’ என்ற அலசல் நுழைந்துவிடும்போதுதான் சிக்கல், அடிதடி, ரணகளம் ஆகிவிடுகிறது - அது நுழையாமல் பார்த்துக்கொள்வோம்.

நன்றி... :):)(y)(y)


ஓம் நமோ த்ரிலோக சஞ்சார்யாய நாரதாய நமஹ!
நாராயண... நாராயண... :LOL::LOL::LOL:
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
தெரு முழுவதும் உணவகங்கள். தினுசு தினுசாக உணவுகள்.
இப்படி இருக்கும் போது உடலுக்கு இதுதான் ஆரோக்கியம் என்று கூறி உப்பையும் காரத்தையும் எண்ணெயையும் அளவாகப் பாவித்து நாம் கொடுக்கும் பக்குவமான உணவிற்கு இன்று மரியாதை இல்லை தம்பி.
உடலின் ஆரோக்கியத்தில் கவனம் கொண்டவர்கள் நம் கடைக்கு வருவார்கள். ஆனால் எத்தனை பேர்?
நல்ல உணவைக் கொடுத்தோம் என்ற ஆத்ம திருப்தி நிச்சயம் கிடைக்கும். அதில் மாற்றுக்கருத்து இல்லை.
போட்டி மிகுந்த கடைத்தெருவில் ஆத்ம திருப்தியோடு எத்தனை காலம் நம்மால் போராட முடியும்?
ஒட்டு மொத்தக் கடைக்காரனும் ஆரோக்கியத்தை மட்டுமே கருத்தில் கொண்டால் ஒரு வேளை நீங்கள் சொல்வது சாத்தியப்படலாம்.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
அருமையான விளக்கம் ஆசிரியரே... நிச்சயமாய் பெருமை கொள்கிறேன் இத்தளத்தில் இணைந்தமைக்கு & இங்குள்ள அனைத்து நண்பர்களின கருத்துக்களை அறிந்தமைக்கு... மீண்டும் நன்றி @Vijayanarasimhan விவாத மேடையை அருமையாக அமைத்ததற்கு...
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
தெரு முழுவதும் உணவகங்கள். தினுசு தினுசாக உணவுகள்.
இப்படி இருக்கும் போது உடலுக்கு இதுதான் ஆரோக்கியம் என்று கூறி உப்பையும் காரத்தையும் எண்ணெயையும் அளவாகப் பாவித்து நாம் கொடுக்கும் பக்குவமான உணவிற்கு இன்று மரியாதை இல்லை தம்பி.
உடலின் ஆரோக்கியத்தில் கவனம் கொண்டவர்கள் நம் கடைக்கு வருவார்கள். ஆனால் எத்தனை பேர்?
நல்ல உணவைக் கொடுத்தோம் என்ற ஆத்ம திருப்தி நிச்சயம் கிடைக்கும். அதில் மாற்றுக்கருத்து இல்லை.
போட்டி மிகுந்த கடைத்தெருவில் ஆத்ம திருப்தியோடு எத்தனை காலம் நம்மால் போராட முடியும்?
ஒட்டு மொத்தக் கடைக்காரனும் ஆரோக்கியத்தை மட்டுமே கருத்தில் கொண்டால் ஒரு வேளை நீங்கள் சொல்வது சாத்தியப்படலாம்.
உண்மைதான் அக்கா... இது சமூக விதி மட்டுமல்ல, இயற்பியல் விதியும் கூட...

நியூட்டனின் முதல் விதி இதைத்தான் சொல்கிறது (பருப்பொருள்களுக்கு!)

வெளி விசைகள் இல்லாத நிலையில், நேர்க்கோட்டில் பயணிக்கும் ஒரு பொருள் நேர்க்கோட்டிலேயே எந்த மாற்றமும் இன்றிப் பயணித்துக்கொண்டே இருக்கும்...

அதாவது, ஒரு பாதையில் செல்வதை அப்படியே செல்லவிட எந்த விசையும் தேவையில்லை... அதன் பாதையை (அல்லது விரைவை) மாற்ற வேண்டுமானால்தான் விசை தேவைப்படுகிறது...

எவ்வளவுக்கு எவ்வளவு பாதையை (விரைவை) மாற்ற வேண்டுமோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிக விசை தேவை!

நாம் நேரெதிராகத் திருப்ப முயல்கிறோம், எவ்வளவு விசை தேவை?

சாதாரண காரியம் அல்லதான், ஆனால், செய்துதானே ஆக வேண்டும்? யாரோ ஒருவர் தொடங்க வேண்டும்தானே?

நீங்கள் குறிப்பிட்ட உவமையையே பாருங்கள், இன்று ‘ஆர்கானிக்’ காய், கனி, மளிகை விற்கும் கடைகள் பெருகிக்கொண்டு வருகின்றன...

என் நண்பர் ஒருவர் மரபு உணவுகள் விற்கும் உணவகத்தைத் தொடங்கியுள்ளார், அது நல்ல வரவேற்பு பெற்று வருகிறது (திருக்குறள் உணவகம் என்று அடையாற்றில் - இது விளம்பரம் அல்ல, எடுத்துக்காட்டு மட்டுமே!)

மாற்றம் ஒன்றே மாறாதது!

சமூகத்தைப் பொருத்தவரை இது 100% பொருந்தும்!

நாம் எதுவுமே செய்யவில்லை என்றாலும் சமூகம் மாறிக்கொண்டே இருக்கும்...

ஆனால், அம்மாற்றம் நல்ல முறையில் இருக்க வேண்டுமென்றால் நாம் தேவையான இடங்களில் கணக்கிட்டுக் கொஞ்சம் தள்ளிவிட வேண்டும் (விண்வெளியில் விண்கலங்களை இவ்வாறுதான் அவற்றில் சுற்றிலும் உள்ள சிறு சிறு முடுக்கிகளின் (thrusters) மூலம் நகர்த்துவர்!)

இதற்குப் பெயர்தான் ‘ஸோஷியல் இஞ்சினியரிங்’ - இதைச் செய்யக் கூடிய சிலரில் ஒருசாரர் கதாசிரியர்கள்...
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அருமையான விளக்கம் ஆசிரியரே... நிச்சயமாய் பெருமை கொள்கிறேன் இத்தளத்தில் இணைந்தமைக்கு & இங்குள்ள அனைத்து நண்பர்களின கருத்துக்களை அறிந்தமைக்கு... மீண்டும் நன்றி @Vijayanarasimhan விவாத மேடையை அருமையாக அமைத்ததற்கு...
நன்றி ஸ்ரீ சகோ...

இதை நான் முன்பே சொல்லிவிட்டேன்: இத்தள எழுத்தாளர்களும், வாசகர்களும் பொறுமையும் பெருமையும் கொண்டவர்கள். அதனால்தான் என்னால் இது போன்ற விவாதங்களை முன் வைத்து நகர்த்த முடிகிறது.

சில முகநூல் போராளிகளைப் போல இங்குள்ளவர்கள் இருந்திருந்தால் நான் ‘நமக்கேனடா வம்பு’ என்று பேசாமல் போயிருப்பேன்...

எனவே, எல்லாப் புகழும் இத்தளத்திற்கே! :):)(y)(y)

(அட்மின் ஜி, நீங்க சொன்னா மாதிரியே சொல்லிட்டேன், பேமண்ட் காஷா? செக்கா? :LOL::LOL::LOL::LOL:)
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,430
Location
Vellore
என்னவோ புதுசா சொல்றீங்க அண்ணா, ஆனால் கருத்தா சொல்றீங்க கேட்டு தான் ஆகணும்,
நம்ம சமூகம் அப்பவும் இப்பவும் ஆணாதிக்க சமூகம் தான், முன்னவிட இப்ப கொஞ்சம் பரவாயில்ல, பெண்களோட தலைகளும் ஆங்காங்கே தென்படுது, பாராட்ட வேண்டிய விசயம். நான் எல்லா துறைகளிலும் பொதுவா சொன்னேன்.

பேப்பர் காரன் வந்தால் அப்பாவ கூப்பிடனும், பால்காரன் வந்தால் அம்மாவ கூப்பிடனும்னு நம்ம குழந்தைகள் யாரும் சொல்லி தராமலேயே ஆணாதிக்க சமூகத்திற்குள் புகுந்து கொள்கிறார்கள்னு, ஏதோ புத்தகத்தில படிச்ச நினைவு. இது நூற்றுக்கு நூறு உண்மை தான்னு தோணுது.
தங்களுடைய முயற்சிக்கு எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள் அண்ணா ????
நானும் இத்தளத்தில இன்னும் நிறைய கதைகள் படிக்கல,‌ இதை படிக்கணும் அதை படிக்கணும்னு யோசிச்சு வச்சிருக்கேன், இன்னும் நேரம் கிடைக்கல, இனிமே கதை படிக்கும் போது நிச்சயமா இந்த விசயத்தை நினைவு வச்சிக்கிறேன். கதை எழுதும் போதும் அதன் கட்டமைப்பு சிதையாமல் மேற்சொன்ன நிபந்தனைகளை கடைபிடிக்க முயற்சிக்கிறேன். நன்றி அண்ணா. பயனுள்ள தகவலை எங்களுக்கு தந்தமைக்கு ?
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
நன்றி ஸ்ரீ சகோ...

இதை நான் முன்பே சொல்லிவிட்டேன்: இத்தள எழுத்தாளர்களும், வாசகர்களும் பொறுமையும் பெருமையும் கொண்டவர்கள். அதனால்தான் என்னால் இது போன்ற விவாதங்களை முன் வைத்து நகர்த்த முடிகிறது.

சில முகநூல் போராளிகளைப் போல இங்குள்ளவர்கள் இருந்திருந்தால் நான் ‘நமக்கேனடா வம்பு’ என்று பேசாமல் போயிருப்பேன்...

எனவே, எல்லாப் புகழும் இத்தளத்திற்கே! :):)(y)(y)

(அட்மின் ஜி, நீங்க சொன்னா மாதிரியே சொல்லிட்டேன், பேமண்ட் காஷா? செக்கா? :LOL::LOL::LOL::LOL:)
????????
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
என்னவோ புதுசா சொல்றீங்க அண்ணா, ஆனால் கருத்தா சொல்றீங்க கேட்டு தான் ஆகணும்,
நம்ம சமூகம் அப்பவும் இப்பவும் ஆணாதிக்க சமூகம் தான், முன்னவிட இப்ப கொஞ்சம் பரவாயில்ல, பெண்களோட தலைகளும் ஆங்காங்கே தென்படுது, பாராட்ட வேண்டிய விசயம். நான் எல்லா துறைகளிலும் பொதுவா சொன்னேன்.

பேப்பர் காரன் வந்தால் அப்பாவ கூப்பிடனும், பால்காரன் வந்தால் அம்மாவ கூப்பிடனும்னு நம்ம குழந்தைகள் யாரும் சொல்லி தராமலேயே ஆணாதிக்க சமூகத்திற்குள் புகுந்து கொள்கிறார்கள்னு, ஏதோ புத்தகத்தில படிச்ச நினைவு. இது நூற்றுக்கு நூறு உண்மை தான்னு தோணுது.
தங்களுடைய முயற்சிக்கு எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள் அண்ணா ????
நானும் இத்தளத்தில இன்னும் நிறைய கதைகள் படிக்கல,‌ இதை படிக்கணும் அதை படிக்கணும்னு யோசிச்சு வச்சிருக்கேன், இன்னும் நேரம் கிடைக்கல, இனிமே கதை படிக்கும் போது நிச்சயமா இந்த விசயத்தை நினைவு வச்சிக்கிறேன். கதை எழுதும் போதும் அதன் கட்டமைப்பு சிதையாமல் மேற்சொன்ன நிபந்தனைகளை கடைபிடிக்க முயற்சிக்கிறேன். நன்றி அண்ணா. பயனுள்ள தகவலை எங்களுக்கு தந்தமைக்கு ?
நன்றி சகோ...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top