• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience பெண் குழந்தை பாதுகாப்பு - Discussions

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli

பெண் குழந்தைகளுக்கு மட்டுமா பாதுகாப்பு?
________________________________________________

"..இந்த தளத்தில் தேவா என்ற எழுத்தாளர் ரொம்ப அருமையான செக்ஸ் பாடத்தை காதல் நீலாம்பரி என்ற கதையில் சொல்லி இருப்பார் முடிஞ்சா தயவு செய்து படியுங்கள். matured content என்று ஆபாசமாக நினைத்து ஒதுக்க வேண்டாம். வாழ்க்கை பாடம். ஆபாசம் இல்லை, அத்தியாவசியமானது. இப்ப நமக்கு சொல்லி தர யாரும் இல்லை அதனால தான் இப்படிபட்ட சூழலில் சிக்கி தவிக்கிறோம்......."

...சகோதரி பிரேமலதா தன் கட்டுரையில் !

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

காதல் நீலாம்பரியக் கொஞ்சம் பேரு பாராட்டின போது அதப் நான் பெருசா எடுத்துக்கல.. ஏன்னா,ஒரு நெருக்கடில அடிச்சுப் புடிச்சு எழுதின ஒரு மசாலாக் கதையது ! அப்படித் தான் இன்னமும் கூட என் நெனப்பு ! என் கனவு நாவல் வேற.. எங்க ஊர் சிப்காட்ட வச்சுச் 'சுழியம்'னு (தலைப்பு உபயம்.. விஜி மேடம் ! வழக்கம் போல !!) ஒரு நாவல் எழுதணும்னு எம் மண்டைக்குள்ள அஞ்சு வருசமா ஓடிட்டிருக்கு.. ஆனா, அதுக்கு நிறைய தகவல்கள் திரட்டணும்.. கள ஆய்வுகளுக்குப் போகணும்.. அதுக்கான பொருளாதார நிலை இப்ப எங்கிட்ட இல்ல...

'காதல் நீலாம்பரி' காலத்தின் கட்டாயம்.. வெறும் பொழுது போக்குன்னு நான் நெனச்சுக்கிட்டிருந்த நேரத்துல தான் இந்த நாவலால எனக்குக் கெடைச்ச சகோதரி,மகள்கள்ல ஒரு மகளான தமிழச்சி வாட்ஸ் அப்ல வந்து இப்படி உங்க நாவலப் பத்தி ஒருத்தர் சொல்லியிருக்காங்க;பாத்தீங்களான்னு கேக்கவும் தான் லிங்க் அனுப்பச் சொல்லி வந்து பார்த்தேன்..

சந்தோசம்.. பாராட்டினதுக்காக இல்ல ! அத நெறையப் பாத்துக் கேட்டாச்சு.. ஒரு படைப்புங்கறது யாரோ ஒருத்தருக்காவது மனசுல பாதிச்சு நல்ல எண்ணங்களை விதைச்சா மட்டுமே அது முழுமை பெற்றதா நான் நம்பறேன்.. இந்த நாவல்ல நானும் ஏதோ சொல்லியிருக்கறதா சகோதரி பிரேமலதா குறிப்பிட்டிருக்கறதப் பாத்த பின்னால தான், 'ஓஹோ, நாம கூட ஏதோ உபயோகமா எழுதி இருக்கோம் போலிருக்கே?'ன்னு நம்பிக்கை வந்தது..

சகோதரியும் ஒரு படைப்பாளி.. நிறைய எழுதறவங்க.. நிச்சயமா வெறும் பாராட்டாவோ,மிகைப் படுத்தியோ சொல்லியிருக்க மாட்டாங்கன்னு நம்பறேன்.. எனக்குள்ள என் நாவலப் பத்தி ஒரு நல்லெண்ணத்தையும்,நம்பிக்கையையும் விதைச்ச ்சகோதரிக்கு மனமார்ந்த அன்பும் ஆசிகளோடு மகத்தான நன்றிகளும் !

பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு தாய்மார்களான உங்கள விட பெருசா நான் சொல்லிடப் போவதில்ல.. ஆனா,எனக்குத் தெரிஞ்சதக் கொஞ்சம் இங்க சொல்றேன்..

பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல.. ஆண் குழந்தைகளுக்குமே பாதுகாப்புத் தேவை..நானே என் சிறு வயதில் பாலியல் தொல்லைக்கு உள்ளானவன்.. இத்தனைக்கும் சம்பந்தப் பட்டவர் என் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர் ! இன்னதென்று புரியாமல் பயந்து, குழம்பி,என்னை நானே வெறுத்து மெல்ல மெல்ல தாழ்வு மனப்பான்மையில் சிக்கி நல்ல நட்புகளை நாடாமல் எட்டாவது படிக்கும் போதே புகை பிடிக்கத் தொடங்கினேன்.. அத்தனைக்கும் ஆரம்பப் புள்ளி அது தான்.. இன்றைக்கும் அந்த ஞாபகம் வந்தால் கூனிக் குறுகி விடுகிறேன்..

எனவே,குழந்தைகள் ஆணோ,பெண்ணோ உங்களுடன் கலந்து பேச அனுமதியுங்கள்.. செக்ஸ் பற்றியும் ! உங்களை உங்கள் குழந்தைகள் எதற்கும் பயமின்றி அணுக வேண்டும்.. அதற்கு நீங்கள் அவர்களுடன் தோழமையுடன் பழக வேண்டும்.. அவர்களின் எந்தக் கேள்விக்கும் எந்த நேரத்திலும் பதில் சொல்லத் தயாராக இருக்க வேண்டும்.. தயங்காமல்,தெளிவுடன், மிகப் பொறுமையுடன் ! தவறே நடந்திருந்தாலும் அது அந்தக் குழந்தையின் தவறல்ல என்பதைப் புரிய வைக்கும் தெளிவு உங்களுக்கு இருக்க வேண்டும்.. அது இல்லா விட்டால் நீங்களே இன்னும் குழந்தைகளே !

பாதுகாப்பு.. எது பாதுகாப்பு ? நம்மைப் பெற்ற தாய்,தந்தையா ? கட்டிய கணவனா?நாம் பெற்ற குழந்தைகளா? உற்றார்,உறவினர்களா ? இல்லை.. இவை எதுவுமே இல்லை..அவளுக்கு அவளே பாதுகாப்பு ! அவள் பெறும் கல்வி,அதனால் உண்டாகும் செல்வம்,வாழ்க்கை முகத்திலறைந்து சொல்லித் தரும் அனுபவப் பாடங்கள்.. இவையே அவளுக்கு என்றுமே பாதுகாப்பு !

எனக்கு இந்த மெக்காலே கல்வி முறையில் நம்பிக்கை இல்லை தான்.. வாழ்வியலுக்கான பாடத்தை அது கற்றுத் தருவதில்லை என்று இன்னமும் நம்புகிறேன்.. ஆனால்,பெண்களுக்கான பொருளாதாரச் சுதந்திரத்திற்கு கல்வி அவசியம்.. கல்வி உள்ளத்தை விரித்து உலகைச் சுருக்கும்.. மகத்தான தன்னம்பிக்கையைத் தரும்.. படிக்க வையுங்கள்.. அதன் அவசியத்தை உறுத்தாது அந்தக் குழந்தைகளுக்குச் சொல்லிப் புரிய வையுங்கள்..நாளைய குழந்தைகள் சமுதாயம் வக்கிரமின்றி நல்லதாய் மலரட்டும் !

அனைவருக்கும் நன்றி ! வணக்கம் !!
மிகவும் அருமையான கருத்துக்கள் தோழரே.
 
சூப்பர் தேவா அண்ணா....
 
Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
100%உண்மை @Deva sago ஏன்னா எங்க குடும்பத்திலும் நடதாதை வைச்சு சொல்றேன்

(ஒருஆண் குழந்தையா கூட சுதந்திரமா வளர்க்க முடியால எல்லாத்துக்கும் பயாபட வேண்டி இருக்கு )

அவனோட சீனியர் student மூலமா பாலியல் தொல்லை ஆனா அந்த குழந்தை சொல்வில்லை காரணம் பயம் அவன் சகதோழன் முலமா தெரிஞ்சு இப்போ அந்த ஆண் குழந்தையா பொத்தி பொத்தி கூடவே ஒரு ஆள் போட்டு அனுப்புறாங்க ஸ்கூலுக்கு
பெண் குழந்தைக்கு மட்டும் இல்லை இப்போ இருக்கும் மிடியா வலைதளம் எல்லாம் தாப்பை தப்பே இல்லைன்னு கத்துகுடுக்குது வெக்ககேடு??‍♀??‍♀

உங்க கருத்து ரொம்ப அருமை இந்த நாட்டுக்கு ரொம்ப தேவை சகோ?????????
நன்றிங்க சகோதரி...
 
lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
:) @Dhanuja , @Selva sankari, @sandhiya sri, @Kaniskavarna

Katturaigal super friends..
Sandhya dhanuja kanishka - pengal poraaligalaai irupathivida puthisasliya irukkanum..Dhairiyam, kaanai uruthaadha udaigal.. nalla points..
Selva -aan kuzhandaigsluku pengalai paarhukakka dollitharanum.. nice view.. nalla karuthu selva.. arumayaana katturai..
 
Last edited:

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli

Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top