• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பொழுதுபோக்கு | சின்னஞ்சிறுகதை - 4 | Sci-Fi

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
புரிஞ்சது புரியாம இருக்காது,
புரியாதது புரியவே புரியாது,
புரிஞ்சது புரிஞ்சுதுனு புரியாம இருக்கலாம்,
புரியாதது புரிஞ்ச மாதிரி இருக்கலாம்,
அதெல்லாம் சீக்கிரமே புரிஞ்சுடும்!

புரிஞ்சுதா? :):)(y)(y)
மிடில தம்பி.....:p:D
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
காந்தம் போலத்தான் ஈர்ப்புவிசையும்... என்ன ஒரே ஒரு வேறுபாடு, காந்தவிசைல இருவகை துருவங்கள் இருக்கின்றன, அவற்றுக்கிடையே ஈர்ப்புவிசை & விலக்குவிசை என இருவகை விசைகள் செயல்புரிகின்றன...

நிறையில் (mass) இருவகை இல்லை, நிறையால் உண்டாகும் விசையில் ஈர்ப்புவிசை மட்டுமே (விலக்கு விசை இல்லை!)

(இதனால்தான், இயற்கையின் நான்கு அடிப்படை விசைகளில் ஈர்ப்புவிசையைத் தவிர மற்ற மூன்று விசைகளையும் இயற்பியலாளர்கள் ஒரே கணித சமன்பாட்டின் மூலம் விளக்கும் நுட்பத்தைக் கண்டறிந்துவிட்டனர் - ஈர்ப்புவிசையை இவற்றுக்குள் கொண்டு வர இயலவில்லை, எனவே இப்பேரண்டத்தின் உருவாக்கத்தில் ஒளிந்திருக்கும் இரகசியத்தை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை!)



அருமை :):)(y)(y)
சூழ்ந்தழுத்தும் ஆற்றல், விலக்கு ஆற்றல் அப்படினு எல்லாம் சொல்லுவாங்களே!

அதுல சூழ்ந்தழுத்தும் ஆற்றல் தான நமக்கு ஈர்ப்பு விசையா தெரியுது ப்ரோ:unsure:

அணு , இறைத்துகள் இது சுத்தும் போது உண்டாகக் கூடிய அலைய தான காந்தம்னு சொல்றோம் தம்பி.o_O

அந்த காந்தஅலை பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கு, அத வான் காந்தம்னு சொல்லுவாங்கள்ள?
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
முன்குறிப்பு-1: கதை புரியலனுலாம் கம்ப்ளெயிண்ட் பண்ணக் கூடாது, உங்களுக்கு என்ன புரியுதோ அதான் கதை! :LOL::LOL::cool::cool:
முன்குறிப்பு-2: பின்குறிப்பையும் படிக்கவும்! நன்றி!

அங்கே இருந்த தூசிகளையெல்லாம் ஒன்றாகத் திரட்டினேன்.

மேலும் சில கற்களையும் திரட்டி ஒன்றாக அழுத்தினேன்.

ஒரு சிறிய தூசு உருண்டையாய் இருந்தது.

அதை அப்படியே சுழற்றிவிட்டேன், அதுவும் வேகமாய்ச் சுழலத் தொடங்கியது.

சுழன்று கொண்டிருந்த அது அருகில் இருந்த தூசுகளை ஈர்த்தது. தூசுகளும் அதனுடன் கலந்தன. மேலும் மேலும் தூசுகளும் சிறிய கற்களும் அதனுடன் கலந்தன. அது மெல்ல மெல்ல பெரியதாக ஆகியது.

ஆனால் உங்களின் சில மணிநேரத்தில் நடக்கும் நிகழ்வு அல்ல, பல கோடி ஆண்டுகள் நடக்கும் ஒன்று… அது உருண்டையாக இருந்தது ஆனாலும் பெரியதாவதை நிறுத்தவில்லை…

பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு அது எண்ணிப் பார்க்க முடியாத அளவு இருக்கும், அப்பொழுது அதன் மேற்பரப்பின் அழுத்தம் காரணமாய் உள்ளே அதன் கரு உருவாகும். ஹைட்ரஜன் அணுக்கள் சேர்ந்து ஹீலியமாக மாறும் – இந்த வினை மூலம் வெப்பமும் கதிரியக்கமும் தோன்றும்.

இந்தக் கதிரியக்கம் அதிகரிக்க அதிகரிக்க எனது தூசு உருண்டை ஒரு நட்சத்திரமாய் மாறும், மெல்ல மெல்ல ஒளிரும்…

எனக்கே எனக்குச் சொந்தமான நட்சத்திரம்!

இதேபோல் நான் ஏற்கனவே பல நட்சத்திரங்களும் கோள்களும் செய்து இருக்கிறேன். ஆனால் அது எவ்வளவு கடினமான வேலை தெரியுமா? உங்களுக்கு எப்படித் தெரியும், அதனோடு ஒப்பிட்டால் நீங்களே ஒரு தூசி…

“கண்ணா… சீக்கிரம் டிஃபன் சாப்பிட வா…”

ச்சே! இந்த அம்மா வேற, ‘டிஃபன் சாப்பிடு, சாப்பாடு சாப்பிடு’னு தொல்லை பண்ணிட்டு… கடவுளுக்குனா தொல்லைப் பண்ண அம்மாவே இல்லை… எனக்கு அப்படியா?!

“த்தோ வரேன்மா…”
* * * * * * * * * * * * * * * * * * *​

பின்குறிப்பு: நான் இளமறிவியல் படித்துக்கொண்டிருந்தபோது (சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்!) கன்னிமாரா பொது நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தேன். அப்போது நான் எடுத்த ஒரு அறிவியல் புனைக்கதை தொகுப்பு நூலில் ‘போபோ’ஸ் ஸ்டார்’ என்ற சிறுகதை இருந்தது. ஒரு சிறுவனுக்கு ஒரு சிறிய பெட்டிக்குள் வைத்து உருவாக்கக் கூடிய நட்சத்திரமொன்றைப் பரிசாகத் தருவர், அவனும் அதை வளர்ப்பான், ஆனால் ஆர்வக்கோளாறால் தேவைக்கு அதிகமான ‘ஊட்டத்தை’ (அதில் சேர்க்க வேண்டிய பொருள் / நிறை) அவன் கொடுக்க, அந்நட்சத்திரம் கட்டுக்கடங்காமல் வளர்ந்து பூமியையே விழுங்கி ஒரு கருங்குழியாக மாறிவிடும் என்று கதை முடியும்! அதைப் படித்த தாக்கத்தில் சில நாள்கள் கழித்து இந்த சி.சி.கதையை எழுதினேன்!
ஐயா ! ராசா.... தம்பி

வீட்ல இருக்குற இயற்பியலை(ஹப்பி) எதிர்நோக்க பயந்துட்டு தான் எஸ் எம் சைட்டு பக்கமா வந்து போறேன்....

உடன் பிறப்பும்(இது நீங்க தான்) இயற்பியலோட இணைந்து இந்த அக்காவ பயமுறுத்திறீங்களே!

நான் எங்க போவேன்?:unsure::LOL::LOL::ROFLMAO:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top