• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

போடா.. போடி... - அத்தியாயம் 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
முகில் கூட்டங்கள் மலை முகடுகளில் தவழ்ந்து விளையாடும் இயற்கை அன்னையின் செல்ல மகள் மலைகளின் அரசி ஊட்டியில் காலை நேர பரபரப்போடு இயங்கி கொண்டிருந்தது அந்த மகளிர் விடுதி. ஆனால் அந்த பரபரப்பு சற்றும் இன்றி இருந்து அந்த அறை நிதானமாக தனது பெட்டிகளை தயார் செய்து கொண்டிருந்தனர் மூன்று பெண்களும்.. அவர்கள் அஞ்சலி, காவ்யா, அனன்யா.. மூவ்வரும் B. Sc. ( fashion designing) மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவியர். ஒரு மாத பயிற்சி வகுப்பாக டெல்லியில் உள்ள நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜி செல்ல இருக்கின்றனர் அதற்கே இந்த ஆயத்தங்கள்...

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மணி கண்மணி கண்மணி அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மன்னும் மின்மனி மின்மினி மின்மினி

என்று இசைத்தது அஞ்சலியின் கைப்பேசி.. அழைத்தது அவள் தந்தையே..

அஞ்சலி அசோகன் - தமயந்தியின் ஒரே செல்ல மகள்.. பன்னீர் ரோஜா நிற தேகம் பிறை நெற்றியில் திருத்தப்பட்ட புருவங்கள் குறும்பு நிறைந்த கண்கள் அளவான நாசியில் இன்னும் எடுப்பாக அமைந்திருக்கும் ஒற்றை சிவப்புகல் மூக்குத்தி எப்பொழுதும் சிரிக்கும் உதடுகள்.. என்று பிரம்மன் படைத்த அழகு பூக்குவியல்.. ( மிடில)

அஞ்சலி உற்சாகமாக கைப்பேசியை எடுத்து, " அப்பா" என்று கத்தினாள்.

அவள் கத்தலில் திரும்பி முறைத்தனர் தோழியர் இருவரும்.. சட்டென வாயை மூடி தோழிகளை அசட்டு பார்வையால் கொஞ்சியவாறே போனை ஸ்பீக்கரில் போட்டாள் அஞ்சலி..

அசோகன், " அம்மு என்னடா டிரெயினிங் போக எல்லாம் பேக் பண்ணியாச்சா? பத்திரமா போயிட்டு வரனும்.. தெரியாத ஊர்டா.. ப்ரொபசர் சொல்லுறபடி நடந்துக்கனும் " என்று அறிவுரை பட்டியலை நீட்ட

காவ்யா, " அங்கிள் டோண்ட் வொரி உங்க செல்ல பொண்ண பத்திரமா கூட்டிடு போயிட்டு கூட்டிடு வந்திறோம்.. அண்ட் நாங்க மூணு பேரும் அங்க காலேஜ் ஹாஸ்டல்ல தங்க போறது இல்ல எங்க வீட்டுல தான் தங்க போறோம். அதுக்கு பெர்மிஷனும் வாங்கிடோம்.. சரியா" என்றாள்.

அசோகன், " சரிடா சரிடா" என்றார் சிரிப்புடன்

அஞ்சலி, " இததானப்பா நா ஒரு வாரமா உங்கள்ட கத்திட்டு இருக்கேன்.. அப்போலாம் அட்வைல் மழை பொழிஞ்சுடு இப்ப இந்த காவ்யா சொல்லுறதுக்கு சரி சரி சொல்லூறீங்க" என்று குமறினாள்

காவ்யா, " அஞ்சலி பாப்பா நீ ஒரு வாலில்லாத குரங்குல அதான்.. டெல்லி பார்லிமெண்ட் பில்டிங்க்கு சொக்கா தச்சு போடபோறேனு போயிருவியோனு அங்கிளுக்கு பயம்.. அதான் உன்ன நா கூண்டுகுள்ளயே வச்சி பார்த்துகிறேனு உனக்கு நா கியராண்டி கொடுக்கவும் சரி சரி சொல்லுறாங்க" என்று அவள் சொன்ன அடுத்த நொடி சிட்டாக பறந்து அறையை விட்டு வெளியேறினாள் அவளை துரத்தியபடியே கைப்பேசியை அம்போவென விட்டு சென்றால்.. அஞ்சலி..

கைப்பேசியில் இவர்கள் உரையாடல் கேட்டு சிரித்துக் கொண்டிருந்த அசோகனிடம், " அப்பா நா அனன்யா ப்பா டோண்ட் வொரிப்பா நாங்க பார்த்துகிறோம் .. மாமா வந்து ஏர்போர்ட்லயே கூப்பிடுக்குவாங்க.. அப்புறம் காலேஜ் கார்லயே போய்டு வந்திருவோம் ப்பா" என்றாள்

அசோகன், " சரிடா போனதும் போன் பண்ணுங்க" என்று கூறி வைத்து விட்டார்

காவ்யா ஆனந்த் குமார் அமிர்தாவின் இளைய மகள்...அனன்யா அபிராமி பிரபாகரின் இளைய மகள்.. காவ்யா பத்து வயது வரை தாய் தந்தையருடன் டெல்லியில் தான் இருந்தாள் ஒவ்வொரு வருடமும் விடுமுறையில் தனது தமக்கை வீட்டிற்க்கு வந்து செல்லும் ஆனந்த் குடும்பம்.. அப்படிதான் காவ்யாவின் ஐந்தாம் வகுப்பு விடுமுறையில் சென்னை வந்தவர்கள் கிளம்பும் சமயம் காவ்யா நா அனன்யா விட்டு வரமாட்டேன் என்று அடம்பிடித்தாள்.. காவ்யாவும் அனன்யாவும் சமவயது என்பதால் உறவை தாண்டி நட்பின் ஒட்டுதல் அதிகம் இணைபிரியா தோழிகள்..

சிறுபெண் இரண்டுநாளில் சரியாகி விடுவாள் என்று எண்ணி அழைத்து சென்று விட்டனர்.. ஆனால் டெல்லி சென்றும் காவ்யா பிடிவாதம் கூடி அவளை காய்ச்சலில் தள்ளியது.. பதறிய ஆனந்த் தம்பதியர் அவளை சென்னையில் அவளது அத்தை வீட்டிலேயே கொண்டுவந்து விட்டனர் .

அனன்யா பயிலும் பள்ளியிலேயே இவளையும் சேர்த்தனர் அன்றிலிருந்து இதோ இன்று ஊட்டி காலேஜில் சேர்ந்தது வரை சேர்ந்தே பயில்கின்றனர்.. காவ்யா துறுதுறுப்பான பெண் அனன்யா அமைதியானவள்..

இவர்களுடன் கல்லூரியில் நட்பானவள் அஞ்சலி விளையாட்டுதனம் மிகுந்தவள்

ஆனால் தோழிகள் மூவருக்கும் தமது பெற்றோர்களின் மனகசப்பு தெரியாது.. பூர்வீகமும் தெரியாது..

அஞ்சலி காவ்யா கலாட்டாவிலும் அனன்யாவின் பொறுமையான பாதுகாப்புடன் அவர்கள் பயணம் ஊட்டியில் தொடங்கி டெல்லியில் நிறைவுற்றது..

அடுத்து???
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
ஹாய் ப்ரெண்ட்ஸ்

யுடி படிச்சுடீங்களா.. என்ன குட்டியா இருக்கா.. ஹி ஹி.. இன்னும் L. K. G முடிக்கலல.. அதான்..

மன்னிச்சு ப்ரெண்ட்ஸ் இனி லேட்டா ஆகாது ஒரு நாள் விட்டு ஒரு நாள் யுடி வரும் பிங்கி பிராமிஸ்.. ப்ரெண்டஸ்..

அப்படியே கொஞ்சம் லைக் பட்ட கிளிக் பண்ணிட்டு காமெண்டும் சொன்னீங்கனா.. மீ ஹாப்பி.. உங்க காமெண்டுலதான் நா L. K. G pass பண்ணி U. K. G. போறது இருக்கு ப்ரெண்ட்ஸ்.. தயவு செஞ்சு பாஸ்பண்ணி விட்டுருங்க..
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
ஹாய் ப்ரெண்ட்ஸ்

யுடி படிச்சுடீங்களா.. என்ன குட்டியா இருக்கா.. ஹி ஹி.. இன்னும் L. K. G முடிக்கலல.. அதான்..

மன்னிச்சு ப்ரெண்ட்ஸ் இனி லேட்டா ஆகாது ஒரு நாள் விட்டு ஒரு நாள் யுடி வரும் பிங்கி பிராமிஸ்.. ப்ரெண்டஸ்..

அப்படியே கொஞ்சம் லைக் பட்ட கிளிக் பண்ணிட்டு காமெண்டும் சொன்னீங்கனா.. மீ ஹாப்பி.. உங்க காமெண்டுலதான் நா L. K. G pass பண்ணி U. K. G. போறது இருக்கு ப்ரெண்ட்ஸ்.. தயவு செஞ்சு பாஸ்பண்ணி விட்டுருங்க..
இது சூப்பர் ஐடியாவா இருக்கே . கதை முடியும் போது நீ PhD. முடிச்சிடுவே ன்னு சொல்லு.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top