• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

போடா.. போடி... - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
டெல்லி இந்திராகாந்தி இன்டெர்நேஷனல் விமான நிலையத்தில் காத்திருந்தார் ஆனந்த் குமார்.

பத்து மாணவர்கள் மற்றும் ஒரு பேராசிரியர் கொண்ட குழுவாக சென்றிருந்தனர் ஆனந்திடம் மூவர் படையை ஒப்படைத்த பேராசிரியர் மற்ற மாணவர்களுடன் தங்கும் விடுதி சென்றார்.

தந்தையிடம் திரும்பிய காவ்யா, " அப்பா இவதான் ஒரு எலி, இரண்டு எலி, மூனு எலி, நாலு எலி இல்ல அஞ்சலி " என்றாள்

அஞ்சலி, " அடியே கா ஃபார் காண்டாமிருகம் நில்லுடி" என்று கூறியவாறே ஆனந்தை சுற்றி ஓடினர்.

அனன்யா, " மாமா இவளுக ஆரம்பிச்சுடாளுக.. இப்போதைக்கு முடிக்க மாட்டாளுக வாங்க நாம போகலாம் " என்று கார் பார்க்கிங்கை நோக்கி சென்றாள் தனது மாமாவின் கை பிடித்தவாறே..

அவர்கள் நகரவும் தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்தவாறே.. கார்பார்க்கிங் சென்று காரில் ஏறினர்.

அனன்யா, " ஏன் மாமா நீங்க வந்தீங்க அத்தான அனுப்பிருக்க வேண்டியது தான மாமா.. சனிக்கிழமை விடுமுறை தானே" என்றாள்

அவளது அத்தான் என்ற விளிப்பில் பின்னிருக்கையில் இருந்த காவ்யா, அஞ்சலி தமது சண்டையை மறந்து ஒரே குரலில்,

" அத்தான் வருவாக ஒரு முத்தம் குடுப்பாக
என் அச்சம் வெக்கம் கூச்சம் அத அள்ளி ருசிபாக"

என்று பாட ஆரம்பித்தனர்..

அனன்யா திரும்பி அவர்களை முறைக்க பாட்டு கச்சேரியை இழுத்து மூடினர்

ஆனந்த், " அவனுக்கு இன்னைக்கு காலேஜ்ல பங்ஷன் இருக்குடா.. மாலை அவனோட மியூசிக் ப்ரோக்ராம் இருக்கு டா.. உங்களை பிக்கப் பண்ணி ரெப்பிரஸ் பண்ணிடு அவன் காலேஜ்க்கு கூட்டிடு வர சொல்லிருக்கான்டா.. " என்றார்

காவ்யா, " வாவ் அண்ணா மியூசிக் ப்ரோக்ராமா.. சூப்பர் பா.. லைவ் வ கேட்டு ரொம்ப டேஸ் ஆகுதுப்பா" என்று குதுகலித்தாள்

அடுத்த அரை மணி நேர பயணத்தில் வீட்டை அடைந்தனர் தோழியர்..

வீட்டில் அவர்களை பாசத்துடன் வரவேற்றார் அமிர்தா. தாயை கட்டி கொண்ட காவ்யா, " அம்மா இவ தான் " என்று ஆரம்பிக்க அவள் வாயை மூடினால் அனன்யா

அனன்யா, " மறுபடியும் ஆரம்பிக்காத காவ்யா அப்புறம் அத்தான் மியூசிக் ப்ரோகராம் முடிஞ்சிரும்" என்றாள்

அஞ்சலி, "ஆண்ட்டி நா அஞ்சலி" என்று அமிர்தாவிடம் கூறி விட்டு காவ்யாவிடம் திரும்பி, " மகளே.. ஒழுங்கா இரு இன்றைய கோட்டா முடிந்தது மறுபடியும் ஆரம்பிச்ச நேசமணி சித்தப்பு சுத்தியல் உன் மண்டைய பதம் பார்க்கும். அப்புறம் #pray for kavya தான் டிரெண்டுங் ஆகும் பார்த்துக்க" என்றாள்..

அஞ்சலி கூறியதை கேட்ட காவ்யா தலையில் கை வைத்தாவாறே அறைக்கு ஓடினாள்.. அவள் சென்றதை பார்த்த ஹாலில் இருந்த அனைவரும் சிரித்தனர்..

அமிர்தா, " நீங்களும் போங்கமா ரெடியாகிட்டு வாங்க சாப்பிட்டு நிகழ்ச்சி போக சரியா இருக்கும்" என்றார்.

அதன் பின் தோழிகள் எந்த கலாட்டாவும் இன்றி தயாராகி வந்து உணவருந்தினர். ஆனந்த் அவர்களை அழைத்து கொண்டு சென்றார் கல்லூரிக்கு..

அவர்கள் உள் நுழையும் போது நிகழ்ச்சி ஆரம்பம் ஆக இருந்தது.. ஆனந்த் அவர்களை கல்லூரியில் விட்டுவிட்டு பையனுடன் வருமாறு கூறி விட்டு நண்பனை காண சென்று விட்டார்..

மூவர் படை அந்த கலையரங்கத்திற்குள் நுழையும் போது மாணவர்களின் கூச்சல் சத்தம் காதை பிளந்தது.. அனைவரும் ஒன்று போல் AK, AK, AK என்று ஆர்பரித்து கொண்டிருந்தனர்..

அஞ்சலி மனத்தில் யார்ரா அந்த அப்பாடக்கர் என்று எண்ணியபடி மேடையை நோக்கினாள்..

அதே நேரம் அவள் காதில் காவ்யா, " அஞ்சலி மேடைல இப்ப பாட போறது என்னோட அண்ணா தான்டி " என்றாள்..

அஞ்சலி, " ஏதோ AKனுலடி பசங்க கத்துறாங்க நீ வேற ஏதோ பெயர் சொன்னியே" என்றாள்.

அனன்யா, " அத்தான் பெயர் அசோக் குமார் இன் ஷாட் AK "என்றாள்.

காவ்யா, அஞ்சலி இருவரும் இணைந்து " ஓ" என்றனர்

அனன்யா, " அடியே குட்டி சாத்தான்களா.. உங்க மூளை தப்பு தப்பாவேதான் நினைக்குமா.. மாமா கூட கார்ல வரும் போதும் அப்படிதான் பாட்டு பாடி கலாய்ச்சிங்க.. அடங்கவே மாட்டீங்களா டி.. மாமா என்ன? நனைப்பாங்க என்னை பத்தி நா ஏற்கனவே சொல்லிருக்கேன்.. காவ்யாக்கு அசோக் அத்தான் எப்படியோ அப்படித்தான் எனக்கும்னு.. எங்களுக்குள்ள சகோதர பாசம் தான் இருக்கு.. என்ன சின்ன வயசு பழக்கம் அத்தான் கூப்பிட்டது இப்பவும் அப்படியே கூப்பிடுறேன்" என்று நண்பிகளை கடிந்தாள்.

காவ்யா, " ஹே சாரி அனு குட்டி சும்மா தான்யா கோச்சுகாத"

அஞ்சலி, " சாரி அனும்மா"

அனன்யா, " சரி சரி விடுங்க ப்ரோக்ராம் பாக்கலாம்" என்று கூறி தோழிகளின் கவனத்தை மேடையை நோக்கி திருப்பினாள்.

அதே நேரம் தனது மியூசிக் பேண்டுடன் கிதாரினை கையில் ஏந்திய வண்ணம் மேடை ஏறியனான் AK என்கிற அசோக் குமார்.. பிறந்ததிலிருந்து தலை நகரிலே இருப்பதாலோ என்னவோ வட இந்தியனை போலவே இருந்தான். ஆறடி உயரம்.. நெற்றினை மறைக்கும் அடர்ந்த கேஷம்.. சிரிக்கும் கண்கள்.. கூர்மையான நாசி.. சதை பற்றே இல்லாத கன்னம்.. ( மீசை தாடிலாம் இல்லபா வட நாட்டுகாரன்ல)

அஞ்சலி, " ஏன்டி இந்த பாவ் பஜ்ஜி தான் உன் நொண்ணணா" என்றாள்

காவ்யா, " ஆமாம் டி மொளகா பஜ்ஜி" என்றாள்

அஞ்சலி திரும்பி காவ்யாவை அடிப்பதற்குள் மேடையில் கச்சேரி ஆரம்பித்தது.
அசோக் கிதாரினை இசைக்க ஆரம்பித்ததும் அரங்கமே அமைதியாகியது. பல்வேறு ஹிந்தி பாடல்களை அரங்கேற்றிய இசை கச்சேரி ஏ. ஆர். ரஹ்மானின் மார்வெல் அன்தமில் நிறைவு செய்தனர்.. மாணவர்கள் அனைவரும் அந்த பாடல்களின் தாள லயத்திற்கேற்ப கரகோஷன் எழுப்ப அந்த இடமே அதிர்ந்தது.. இசை நிகழ்ச்சி நிறைவிற்றதும் மாணவர்கள் அனைவரும் ஒன்று போல் " AK தமிழ் சாங்" " AK தமிழ் சாங்" என்று ஆர்பரித்தனர்..

காவ்யாவும் அனன்யாவும் இவர்கள் தமிழ் பாடல் கேட்டத்தில் "ஹே" என்ற துள்ளலுடன் ஆர்ப்பரித்தனர்..

அஞ்சலி, " ஏன்டி நீங்களும் அலப்பறைய கூட்டுறீங்க.. " என்று கூறீ முடிப்பதற்குள் அங்கே மேடையில் பாட ஆரம்பித்தான் அசோக் இவ்வளவு நேரம் ஹிந்தி பாடல்களை பாடும் போது தெரியாத அவனது கம்பீர குரல் தமிழில் முண்டாசுக்கவி பாரதியின் பாடலை பாடும் போது உணர்ந்தாள் அஞ்சலி தன்னை மறந்து அவன் குரலில் லயித்தால்.. அவள் மட்டும் அல்ல ஒட்டு மொத்த அரங்கமே அமைதியில் ஆழ்ந்து ரசித்தது.

"சுட்டும் விழி சுடர்தான்,- கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
வட்டக்கரியவிழி,-கண்ணம்மா!
வானக்கருமை கொள்லோ?
பட்டுகருநீலப்-புடவை
பதித்த நல்வயிரம்
நட்டநடுநிசியில் -தெரியும்
நட்சதிரம்களடீ!

சோலைமல ரொளியோ- உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலகட லலையே - உனது
நெஞ்சில லைகளடீ!
கோலக்குயி லோசை -உனது
குரலி னிமையடீ
வாலைக் குமரியடீ,-கண்ணம்மா
மருவக் காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் -கண்ணம்மா
சாத்திரமேதுக்கடீ?
ஆத்திரம் கொண்டவர்க்கே,- கண்ணம்மா
சாத்திர முண்டோடீ?

மூத்தவர் சம்மதியில்-வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப்பேனோடீ? இது பார்,

கன்னத்து முத்த மொன்று!"

அரங்கத்தின் கரகோஷ சத்தத்தில் சுய உணர்வு பெற்றாள் .( உடனே பல்பு எரிஞ்சுது மணி அடிச்சுதுனு அதான்ங்க இந்த காதல் வந்த தெரிர சிம்ப்டம்ஸாம் சொல்லுனும்னு ஆசை தான் ஆனா.. அதலாம் இப்பவே நடந்துடா நா கதைக்கு எங்க போவேன் அதனால.. இங்க லோகேஷன கட் பண்ணுறேன்)

அடுத்து???
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
ஹாய் Friends

யுடி படிச்சுடீங்களா..

நா L. K. G pass பண்ணி U. K. G போயிட்டேன்??? அதான்.. கொஞ்சம் வார்த்தைகள் அதிகம்... முறைக்காதீங்க 400,500 words ??குடுத்தவ இந்த யுடி 780 words ?? நா L. K. G pass பண்ண like &comments பண்ண எல்லாருக்கும் big big thanks ங்க...

அடுத்து 1வகுப்பு போனும் அதனால.. அந்த லைக் பட்டன லைட்டா தட்டி.. அப்படியே உங்க keypadum தட்டி கொஞ்சம் commentum சொன்னா போதும்.. நா pass பண்ணிரூவேன் ??
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top