• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மண் மணக்குதே - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Dhivyabharathi

மண்டலாதிபதி
Joined
Oct 21, 2018
Messages
115
Reaction score
236
Age
29
Location
Coimbatore
லேலைக்கு செல்லும் முதல் நாள் வாழ்வில் அனைவருக்கும் மறக்க முடியாத நாள்.. அந்த நல்ல நாள் , தோழிகள் மூவருக்கும் ஒரே நாளில் வருவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.. அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நாளும் வந்தது..

தமிழை கண்காணிக்க அலுவலகத்தில் நம்பிக்கைகுரிய ஒருவரை பாரதஜோதி குடும்பத்தார் பாரி மற்றும் ரகுவிற்கு தெரியாமல் நியமித்தனர்..

முதல் நாள் அங்கு மேனேஜராக இருந்த நேசமணி தம்மை கவி, தமிழ், செல்லம்மாவிடம் அறிமுகம் செய்து கொண்டு என்ன வேலை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லி கொடுத்தார்.. மூவரும் ஆர்வமாக வேலையை கற்க ஆரம்பித்தனர்..

இடைவேளையின் போது தமிழை தனியாக அழைத்தார் நேசமணி..


“எப்படி இருக்க தமிழ்? “- நேசமணி

“நான் நல்லா இருக்கேன் சார்.. நீங்க எப்படி இருக்கீங்க?”- தமிழ்

“சார்னு கூப்பிடாத அண்ணான்னு கூப்பிடுன்னு பல தடவை சொல்லியிருக்கேன்.. திரும்ப திரும்ப ஏன் சார்னு கூப்பிட்ற.. “ – நேசமணி

“எனக்கு அம்மா அப்பா அண்ணான்னு யாரையும் கூப்பிட பிடிக்காது சார் “ – தமிழ்

“அதான் ஏன்? “-நேசமணி

“அது வந்து.. என்னால யாரையும் அவங்க எடத்துல வெக்க முடியல.. தயவு செஞ்சு என்ன அண்ணான்னு கூப்பிட சொல்லி சொல்லாதீங்க.. “ என்று கூறி கண் கலங்கினாள் தமிழ்


“சரி விடு.. இனிமே கேட்க மாட்டேன்.. வள்ளி எப்படி இருக்கு…??? “

“அவளை பத்தி நான் உங்கள் கிட்ட போன வாரமே சொல்லனும்னு இருந்தேன்.. அவளுக்கு பழைய நியாயம் எல்லாம் வர ஆரம்பிடிச்சிடிச்சு… உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லிடுங்க… இந்த மாசம் கடைசியில் வந்து கூட்டிட்டு போங்க.. அவ அதுக்குள்ள பழைய மாதிரி ஆயிடுவா “ என்று மகிழ்ச்சியாக கூறினாள் தமிழ்..

நேச மணிக்கு மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தான்..


நேசமணி வேறு யாருமில்லை, வள்ளியின் அண்ணன்..

வள்ளி, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது சுற்றுலா சென்றிருந்தாள்.. அங்கு அவள் தண்ணீரில் விளையாட எண்ணி ஆற்றில் இறங்கினாள்.. உடன் வந்த அனைவரும் கிளம்பி சென்றதை அறியாமல், விளையாடிக்கொண்டிருக்கும்போது தண்ணீரின் வேகம் அதிகரிக்க நீச்சல் தெரியாததால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டாள்..


அதே ஆற்றின் ஒரு கரையில் தற்கொலை செய்து கொள்ள வந்த தமிழ் ஆற்றில் ஒரு பெண் உயிருக்கு போராடுவதை கண்டதும் அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்து அவளை காப்பாற்றி மருத்துவ மனையில் சேர்த்தாள்..

தலையில் பலமாக பாறையில் இடித்து அடிப்பட்டதால் அவளுக்கு பழைய நினைவுகள் இல்லாமல் போயின…


தான் யார் என்பதை மறந்த அவள் அழுவதை பார்க்க பொறுக்காமல் தான் அவளின் அக்கா என்று அறிமுகம் செய்து கொண்டாள் தமிழ்..

அவளின் பெயர் என்ன என்பது தெரியாததால் அவளுக்கு செல்வி என்ற பெயரை அன்று தான் சூட்டினாள்..

அப்போதுதான் பத்தாம் வகுப்பு முடித்திருந்த தமிழ், செல்வியை எப்படி அவள் பெற்றோரிடம் சேர்ப்பது, யார் அவள் , அவளை பெற்றோரிடம் சேர்க்கும் வரை எப்படி காப்பாற்றுவது என்று குழம்பினாள்..


மருத்துவ மனையில் தாங்கள் இருவரும் பெற்றோரை இழந்தவர்கள் என்று செல்வியை தன்னோடு அனுப்பி வைக்குமாறு கேட்டாள் தமிழ்..

தான் வைத்திருந்த பணத்தில் அனைத்து பில்களையும் கட்டி விட்டு செல்வியை தன்னோடு அழைத்துச் சென்றாள் தமிழ்..


தமிழோடு செல்வியும் சேர்ந்து பாட ஆரம்பித்தாள்.. அப்போது தான் கவியின் பெற்றோர் இருவரையும் தங்கள் ஊருக்கு அழைத்து வந்தனர்..வாழ்க்கையில் இருவரும் ஆனந்தமாக இருந்தனர்..

சென்னைக்கு வந்த பிறகு, மருத்துவ உதவியால் செல்விக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்ப ஆரம்பித்தது..


தமிழ், தம் முயற்சியால் ஒருவாறு செல்வியின் குடும்பத்தை இரண்டு மாதங்கள் முன்பு தான் கண்டுபிடித்தாள்.. வள்ளி பற்றி தகவல் அறிந்த அவளின் பெற்றோர், ஆனந்தத்தில் செய்வதறியாது திகைத்தனர்..

வள்ளியின் அப்பா பெரியசாமி “ உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல மா.. சாமி மாதிரி என் பொண்ண காப்பாத்திருக்க.. வள்ளி தான் எங்க உயிர் அவளை காப்பாத்தியிருக்க… ரொம்ப நன்றி மா.. “ என்றார்

தமிழ், வள்ளியின் தற்போதைய நிலையை விளக்கி கூறிவிட்டு, இன்னும் ஒரு சில மாதங்களில் அவள் முழுவதும் குணமானதும் அவளை அழைத்து செல்ல வருமாறு கூறி தன்னுடைய முகவரியை அவர்களிடம் அளித்தாள்..

வள்ளியின் அம்மா செண்பகம், “ அவ உசுரோட இருக்கறதே எங்களுக்கு போதும் கண்ணு.. இத்தனை நாள் அவ எப்படி இருக்கா.. உசுரோட இருக்காளா இல்லையா அப்படின்னு தெரியாம நாங்க நரக வாழ்க்கை வாழ்ந்தோம்…. உன்ன மாதிரி நல்ல பிள்ளைங்க கூட அவ இருக்கறது எங்களுக்கு ரொம்ப சந்தோசம் கண்ணு… நீ எப்போ சொல்றியோ அப்போ நாங்க வரோம் கண்ணு “ என்றார்..

நேசமணி, தமிழிடம் வள்ளியின் மருத்துவ சிகிச்சைகாக நிறைய பணம் கொடுத்தான்.. தமிழ் வேண்டாம் என்று மறுக்க செண்பகம் “தயவுசெய்து வாங்கிக்க கண்ணு “ என்று கெஞ்சும் தொனியில் சொல்ல, தமிழ் மறுக்காமல் அதை பெற்றுக்கொண்டாள்…

நேசமணி பாரதஜோதியில் வேலை செய்வதை தமிழ் முன்பே அறிந்திருந்தாள்.. தமிழ் அங்கு வேலைக்கு வருவதை அறிந்த நேசமணி மிகவும் ஆர்வமாக காத்திருந்தான்..


வள்ளியை போல தமிழையும் தன் தங்கையாக நினைத்தான்..

தமிழ் எந்த சலுகையும் நேசமணியிடம் எதிர்பார்க்காமல் அன்பாக பழகினாள்.. வள்ளியால் தமக்கு கிடைத்த புதிய சொந்தங்களை எண்ணி அக மகிழ்ந்தாள்..

இந்த மூன்று வருடங்களில், ரகுவின் மனம் மாறாமல் இருப்பதை கண்டு பாரிக்கு ஆச்சர்யமாக இருந்தது…

இரவெல்லாம் ரகு செய்த சேட்டையை எண்ணி சிரித்தான் பாரி..

முன்தினம் இரவு…


“டேய் பாரி.. கூப்பிட்றது காதுல விழலையா..?... எவ்வளவு நேரமா கத்திட்டு இருக்கேன்.. பதில் பேச மாட்டேங்குற.. “ என்று கூறிக்கொண்டே பாரியை உலுக்கினான் ரகு

“என்னால முடியல டா… மணி பாத்தியா 4 மணி.. இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிய போகுது டா… ராத்திரி 9 மணிக்கு ஒரு சர்ட்டை காட்டி இது நல்லா இருக்குன்னு கேட்ட.. நானும் தெரியாம இது நல்லா இல்லை வேற டிரை பண்ணுன்னு சொல்லிட்டேன்.. நைட் பூரா இது நல்லா இருக்கா அது நல்லா இருக்கா அப்படின்னு கேட்டு கேட்டு என்னை தூங்க கூட விடாம இப்படி இம்சை பண்றியேடா.. இது உனக்கே நல்லா இருக்கா .. சொல்லு … எந்த டிரஸ் போட்டாலும் மூஞ்சி மாறாது.. அத நியாயம் வெச்சுக்கோ” என்று கடுப்புடன் கூறினான்

“அது இல்ல டா சர்ட் செலக்ட் பண்ணிட்டேன்டா “ – ரகு


“அப்பாடி.. இனிமேல் நிம்மதியாக தூங்கலாம் “-பாரி

“எந்த பேன்ட் போட்றதுன்னு குழப்பமா இருக்குடா.. செலக்ட் பண்ண ஹெல்ப் பண்ணுடா “-ரகு

இதை கேட்டதும் உன்னை.. என்று கூறி கொண்டு ரகுவை அடிக்க துரத்தினான் பாரி..

ரகுவை அடித்து துவைத்து தூங்க சொன்னான் பாரி.. “நீ மட்டும் இப்போ தூங்கல அந்த பொண்ணை நாளைக்கே வேலைவிட்டு தூக்கிடுவேன்.. அந்த பொண்ண நீ தான் வேலைக்கு செலக்ட் பண்ண சொன்னன்னு எனக்கு தெரியும்” என்று கூறி ரகுவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தான்.

“அடப்பாவி, இன்னும் பத்து அடி வேணும்னா அடிச்சுக்கோடா.. ஆனா அவள வேலையில் இருந்து மட்டும் அனுப்பிடாத.. அப்புறம் நான் தேவதாஸா மாறி உன்ன தான் டார்ச்சர் பண்ணுவேன்… “-ரகுராம்

“சாமி.. இப்போவே உன் டார்ச்சர் தாங்க முடியல.. அப்புறம் நீ தேவதாஸ் ஆனா நான் அவ்ளோதான்.. என்னை விட்ரு ப்ளீஸ்... தயவு செஞ்சு தூங்க விடு.. நான் வேற எதையும் கேட்கல “ என்று கெஞ்ச ஆரம்பித்தான் பாரி..

“சரி.. போய் தூங்கு போ… “ – ரகு

பாரி தூங்கினாலும் ரகு தூங்காமல் தான் நாளை அணிய போகும் ஆடையை தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக இருந்தான்.. எப்போது தூங்க ஆரம்பித்தான் என்று அவனுக்கே தெரியாது

விடிந்து பல மணி நேரம் கழித்து தான் பாரி எழுந்தான்… பக்கத்தில் ரகு அசந்து தூங்கிக்கொண்டு இருந்தான்.. அவனை எழுப்ப முயற்சி செய்து கொண்டு முயற்சியில் தோல்வியை தழுவிக்கொண்டு இருந்தான் பாரி…

பின்பு தான் மட்டும் எழுந்து கிளம்ப தயாரானான் பாரி..

ஹோட்டல் வந்தடைந்த பாரி, புதிதாக வேலைக்கு வந்தவர்களை தன் கேபின்கு அனுப்பி வைக்குமாறு நேசமணியிடம் கூறினான்..

வீட்டில் கண் விழித்த ரகு, மணி பன்னிரண்டை காட்ட அதிர்ந்தான்.. (அவனுடைய மயின்ட் வாய்ஸ்… நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே…)

இந்த பாரி என்னை எழுப்பி கூட விடாம போயிட்டானே.. இன்னைக்கு நைட் இருக்கு அவனுக்கு என்று திட்டிக்கொண்டே கிளம்ப தயாரானான்..

நேசமணியிடம் பேசியதில் இருந்து தமிழின் மனம் தன் குடும்பத்தை எண்ணியவாறே இருந்தது.. கலங்கிய கண்களுடன் தமிழை கண்ட கவி, என்னாச்சி என்று கேட்க ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு கண்ணீரை மறைக்க பெரும்பாடுபட்டாள் தமிழ்…

அதற்குள், நேசமணி மூவரையும் பாரியிடம் அழைத்து செல்ல வந்தார்.. ஜெனரல் மேனேஜர் உங்க மூவரையும் பார்க்கனும்னு வர சொன்னார்.. போய் பாருங்கள் என்று அனுப்பிவைத்தார்..

“சார் உள்ள வரலாமா“ என்று தமிழ் கேட்க, “வாங்க “ என்று அழைத்தான் பாரி..

மூவரும் உள்ளே வந்ததும் ஆராய்ச்சி பார்வையுடன் மூவரையும் பார்த்தான் பாரி ( இதுல யாரு ரகு சொன்ன பொண்ணா இருக்கும் என்று ஆராய்ந்தான்..

“மூனு பேரும் உட்காருங்க.. கொஞ்சம் உங்க கிட்ட பேசனும்… முதல்ல நான் உங்க எல்லோரையும் நம்ம ஹோட்டல் சார்பா வெல்கம் பண்றேன்.. உங்க கரியர் நல்லபடியா அமைய என்னோட வாழ்த்துக்கள்… நீங்கள் எப்படி வேணும்னா இருங்க.. எனக்கு அதை பத்தி கவலை இல்லை.. ஆனால் வேலைல நான் எல்லோர்கிட்டையும் ரொம்ப பர்பெக்சன் எதிர்பார்ப்பேன்.. நீங்கள் செய்ற வேலையை ரசிச்சி செய்யுங்க.. அப்போதான் தப்பு வராது.. டைம் மேனேஜ்மென்ட் பத்தி உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சு இருக்கும்.. நம்ம வொர்க்ல அது ரொம்ப முக்கியம்.. செஞ்ச தப்ப திரும்ப திரும்ப செஞ்சா எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது.. அப்பறம் அதுக்கு தண்டனை ரொம்ப கடுமையா இருக்கும்.. நியாயம் வெச்சிக்கோங்க.. “ என்று பாரி சொல்லும்போதே கவியும் செல்லம்மாவும் தாங்கள் இருவரும் சேர்ந்து கசையடி வாங்குவது போல கற்பனை செய்து கொண்டு இருந்தனர்…

தமிழ் எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை.. பாரி சொன்ன எந்த வார்த்தையும் அவள் மூளையை எட்டவில்லை..

மேலும் தொடர்ந்த பாரி, “ தப்பு செஞ்சா தண்டனை இருக்கற மாதிரி.. நல்லா வொர்க் பண்றவங்களுக்கு நல்ல பரிசும் இருக்கு.. “

“என்ன பரிசு சார்” என வேகமாக கேட்டாள் செல்லம்மா..
அவள் ஆர்வத்தை பார்த்த பாரி, ம்ம் சொல்றேன்…..

“நமக்கு கோவால ஒரு ரிசார்ட் இருக்கு.. அது இந்தியாவிலேயே இருக்கற ஹோட்டல் இன்டஸ்ட்ரீஸ்ல டாப் டென் ல ஒன்னு.. அங்க வொர்க் பண்ற சான்ஸ் உங்களுக்கு கிடைக்கும்” என்றான் பாரி…


இங்கே ரகு வேகமாக கிளம்ப, அவனின் தாய் வேதவல்லி அவனை மதிய உணவு சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு கூறிக்கொண்டு இருந்தார்..

“அம்மா கையால நீ மதிய சாப்பாடு சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சி.. இன்னைக்கு சாப்பிட்டுட்டு தான் போகனும் “என்று சொல்லி விட்டு சென்றார்..

“அம்மா நேரம் காலம் தெரியாம நம்ம வாழ்க்கையோட விளையாடுறாங்களே” என்று எண்ணினாலும் பசி காதை அடைத்ததால் சாப்பிட்டு செல்லலாம் என அமர்ந்தான் ரகு…








 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
திவ்யபாரதி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top