• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மனதின் சத்தம் - வெற்றி கொடி கட்டு!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
எந்நாளும் சோம்பல் இல்லாமல்
உதிக்கும் சூரியன்...
கீழே சரிந்தாலும்
விடாமல் ஓடும் நதி...
மண்ணில் புதைந்தாலும்
விருட்சமாக வளர்ந்து நிற்கும் விதை...
தேய்ந்து மறைந்தாலும்
ஓயாமல் வளரும் நிலா...
உறுமீனுக்காக ஒற்றைக்காலில்
தவம் புரியும் கொக்கு...
காலம் பல மாறினாலும்
உணவு சேர்க்கும் எறும்பு...
பாறையையும் கிழித்து விட்டு
தலை நீட்டும் செடி...
தொலைத்த பொருளை தேடி
கரை மோதும் அலைகள்...
கூண்டில் அடைந்தாலும்
பறந்து விரியும் பட்டாம்பூச்சி...
நண்பா, இயற்கை கூறும்
வழிமுறையை கவனி!
வாழும் காலம் குறைவு என்று
தோல்வியை ஒப்புக் கொள்ளாதே! வெற்றியின் வழி கடினம் என்று
முயற்சியை கைவிடாதே!
இழிவை தாங்கும்
இதயத்தோடு போராடு!
தொலையாத பொறுமையோடு
வெற்றி பாதை நோக்கி நட!
வெற்றிகள் தானே
உன்னை வந்து சேரும்!
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,439
Location
Vellore
இயற்கை தரும் பாடத்தை மிக அருமையான வரிகளில் தந்து விட்டாய் சகி?????????
உத்வேகத்தை கூட்டும் கவிதை???
 




Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
இயற்கை தரும் பாடத்தை மிக அருமையான வரிகளில் தந்து விட்டாய் சகி?????????
உத்வேகத்தை கூட்டும் கவிதை???
??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top