• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மனைவிக்காக

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
மனைவிக்காக இவையெல்லாம் செய்யவேண்டுமென மனதில் புதைத்த கணவனின் உணர்வுகள்...!!!!

இல்லற வாழ்வில் கணவன்-மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்...

❤ ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்...

❤ எழுபத்தைந்து வயதில்..... ஆதரவு இன்றி நிக்குது மனசு...

❤ நாற்பதைந்து வருடம் - ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்....

❤ என் கோபத்தை தள்ளுபடி செய்து ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்....

❤ அவள் சமையலை ஒருமுறையாவது நான் மனம் நிறைய பாராட்டி இருக்கலாம்...

❤ ஒரு நாளாவது நான் சமையல் செய்து அவளுக்கு ஊட்டி இருக்கலாம்...

❤ ஒரு நாளாவது அவளுக்கு பதில் - நான் அவளது துணியையும் சேர்த்து துவைத்து இருக்கலாம்...

❤ ஒரு நாளாவது TV யையும், Mobil லையும் அணைத்துவிட்டு, அவளை கொஞ்சி இருக்கலாம்...

❤ ஒரு நாளாவது வேலை தளத்தின் கோபத்தையும் எரிச்சலையும் அங்கேயே விட்டு விட்டு வந்து இருக்கலாம்...

❤ ஒரு நாளாவது, என் விடுமுறை நாட்களில் - அவளை சினிமாவுக்கு அழைத்து சென்று இருக்கலாம்...

❤ ஊர் ஊராய் சுற்றி அவளை உற்சாகப்படுத்தி இருக்கலாம்...

❤ அவள் விரும்பி கேட்காத போதும் - ஒரு புடவை வாங்கி கொடுத்து இருக்கலாம்...

❤ ஒரு மாசமாவது− என் முழு சம்பளப் பணத்தை அவளிடமே கொடுத்து இருக்கலாம்...

❤ ஒரு நாளாவது காலையில் அலாரத்தை கொஞ்சம் அணைத்து வைத்து அவளை தூங்க விட்டு இருக்கலாம்...

❤ நீ சாப்பிட்டியா என்று அவளை ஒரு நாளாவது கேட்டு இருக்கலாம்...

❤ நீயும் வா என்னுடன் வந்து சாப்பிடு என்று ஒரு நாளாவது சொல்லி இருக்கலாம்...

❤ அவள் உடல் நலத்தைப் பற்றி ஒருமுறையாவது விசாரித்து இருக்கலாம்...

❤ அவள் தன்னை கவனிப்பதை விடுத்து பிள்ளைகளை மட்டும் கவனிப்பதை கண்டு நான் கொஞ்சம் - அவளை
கவனித்து இருக்கலாம்...


❤ அவள் நோயில் விழுந்த போது நான் கடன் பட்டேனும் அவளை காப்பாற்றி இருக்கலாம்...

❤ என் தாயே! தாரமே ! − நீ என்னுடன் இருந்த போது நான் கம்பீரமாய் வாழ்ந்தேன்...

❤ நீ என்னை விட்டு போனதும் நான் பலமுறை கால் தடுக்கி விழுகிறேன்...

❤ என்னை தூக்கி விடவும் மூத்தவனுக்கு நேரம் இல்லை...

❤ தேனீர் ஏதாவது போட்டுத்தரக் கேட்டால் இளையவளுக்கு சினம் வருது...

❤ என் மனைவியே உன்னை நான் தினமும் கொண்டாடி இருக்க வேண்டும்...

❤ நான் தவறுகள் இழைத்ததற்கு என்னை நீ மன்னித்து விடு...

❤ ஒரு முழப் பூவாவது ஒரு நாளாவது உனக்கு வாங்கி தராதவன் நான்...

❤ மூச்சு இழந்த - உன் புகைப்படத்துக்கு தினம் தினம் மாலை இட்டு உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்...
மனைவியே! என்னை மன்னித்து விடு...


❤ மீண்டும் ஒரு பிறப்பு இருக்கும் என்றால் நீயே என் மனைவியாய் வந்து விடு... நான் உன்னை கொண்டாட வேண்டும்...
❤ எழுபத்தைந்து வயதில்... இந்த நிலை யாருக்கும் வராமலிருக்க....


❤❤❤ உங்கள் மனைவியை தினமும் நீங்கள் நேசியுங்கள்

❤❤❤ வாழ்க்கை வசந்தமாகும்.

படித்ததில் பிடித்தது
அருமையான வரிகள்
ஆழமான வலிகளின் வரிகள்
இழந்த தருணங்களில்
ஈற்று சீர்கள்
உண்மை சுடும் வலி
ஊமையாய் அழும் நிலை
எல்லோருக்கும் பாடம்
ஏற்றுக் கொள்வோமிதை நல் வேதம்?????????????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
அருமையான வரிகள்
ஆழமான வலிகளின் வரிகள்
இழந்த தருணங்களில்
ஈற்று சீர்கள்
உண்மை சுடும் வலி
ஊமையாய் அழும் நிலை
எல்லோருக்கும் பாடம்
ஏற்றுக் கொள்வோமிதை நல் வேதம்?????????????
Separate Kavithai pottu shock kuduthuteenga... So nice words nathiji????... Keep it up ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top