• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மரக்குதிரையில் அப்படி என்ன அறிவியல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
IMG-20190829-WA0024.jpg
#அமெரிக்க_ஹிப்போதெரபிக்கு #அடிப்படையாக_இருந்த_மரக்குதிரை #விளையாட்டு!

மரக்குதிரையில் அப்படி என்ன அறிவியல் இருந்து விடப்போகிறது என்று நீங்கள் எண்ணலாம்.

மரக்குதிரை என்றதும் நம்மில் பலருக்கு குழந்தைப் பருவம் கண்முன்னே வந்துபோகும். நடைவண்டி, மரக்குதிரை, அன்னப்பறவை வண்டி போன்றவையே அக்காலக் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருள்களாக இருந்தன. ஒரு குழந்தை வளர்ந்துவிட்ட பிறகு இந்த மரச்சாமான்கள் அடுத்த குழந்தைக்காகப் பரண்களில் பத்திரமாக இருக்கும்.

மரக்குதிரைகள் மௌனமாக ஒவ்வொரு தலைமுறையின் கதைகளைப் பேசக்கூடியவை. ஆனால் தற்போது அவை காணாமல் போய்விட்டன. மரக்குதிரையில் அப்படி என்ன அறிவியல் இருந்து விடப்போகிறது என்று நீங்கள் எண்ணலாம். பெரும்பாலும் மா மரத்தில் செய்யப்படும் மரக்குதிரைகளில் சில மருத்துவக் குணங்கள் இருப்பதாக மருத்துவம் சொல்கிறது.

"இரண்டு முதல் நான்கு வயது வரையுள்ள குழந்தைகள் மரக்குதிரையைப் பயன்படுத்துவதால் அவர்களின் உட்செவியில் உள்ள……
`#வெஸ்டிபுலர்_இயக்கம்'
(Vestibular movement) திடப்படுகிறது.

சமநிலை,

அசைவு,

ஈர்ப்புவிசை,

வேகம்

ஆகியவற்றை தோலின் கீழ் உள்ள தசைகளில் பொதிந்துள்ள உணர்வு நரம்புகள் உள்வாங்கிக்கொண்டு புலனுறுப்புகள் வழியாக மூளைக்குத் தெரிவிக்கும் பணியே `வெஸ்டிபுலர் இயக்கம்'.

தமிழில் ‘#செவி_முன்றில்’ என்று குறிப்பிடுவார்கள்.

பயணங்களின்போதும் ராட்டினம் விளையாடுவது மற்றும் கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபடும்போது தலைசுற்றல், வாந்தி ஏற்பட ‘செவி முன்றில்' சரியாக இயங்காதது ஒரு காரணம்"

"குழந்தைகள் நல மருத்துவத்தின் தலைமைப்பீடமான………

`அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்' (American academy of paediatric) தன் நாட்டில் உள்ள 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மரக்குதிரையைப் (rocking horse) பரிந்துரை செய்கிறது.

மேலும், சிறப்புக் குழந்தைகளுக்கும்
(Special child ) நோயிலிருந்து விடுபட இது நன்கு உதவிபுரிகிறது என்றும் தெரிவித்துள்ளது.

இதேபோல், அட்லாண்டாவில் உள்ள `அசோசியேஷன் ஆஃப் அகடமிக் பிசியாட்ரிஸ்ட்' (Association of Academic Physiatrists) நடத்திய ஆய்வில் மரக்குதிரையின் நன்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஒரு குதிரையின் தொடர்ச்சியான மற்றும் தாள இயக்கத்தை உருவகப்படுத்தும் ஒரு வகை சிகிச்சை '#_ஹிப்போதெரபி'. #பெருமூளை_வாதம் எனப்படும்
`#செரிப்ரல்_பால்சி' (Cerebral palsy) உள்ள குழந்தைகளுக்கு, ஹிப்போதெரபி சிகிச்சை பயனளிக்கும்.

மேலும் இந்த சிகிச்சை சமநிலை (balance), வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் செயல்பாடு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும்.

தற்போது அதுவே 'ஹிப்போதெரபி' என்ற பெயரில் மேலைநாடுகளில் உயிருள்ள குதிரைகளின்மீது சவாரி மேற்கொள்ளப்படுகிறது.

சிறுகுழந்தைகளால் உயிருள்ள குதிரையில் சவாரி செய்ய முடியாது என்பதற்காகவே நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டதே இந்த மரக்குதிரை.

தற்போது அதுவே 'ஹிப்போதெரபி' என்ற பெயரில் மேலைநாடுகளில் உயிருள்ள குதிரைகளின்மீது சவாரி மேற்கொள்ளப்படுகிறது. ஒரு குழந்தை மரக்குதிரையின்மீது இருக்கும்போது, அவர்களது கால் மற்றும் முக்கிய தசைகளைப் பயன்படுத்தி அந்தக் குதிரையைப் பின்னோக்கியும் முன்னோக்கியும் நகர்த்த வேண்டும்.

கைகளும் விரல்களும் முழுமையாகப் பயன்படுத்தப்படும். இந்தச் செயல்பாட்டின்போது உடலின் முழு இயக்கமும் கைகள், கால்கள் மற்றும் தொடையை ஒருங்கிணைத்துப் பயன்படுத்துவதையும் கற்பிக்கிறது.

உண்மையில், குழந்தைகள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, அவர்கள் ஏற்கெனவே உடற்பயிற்சி செய்கிறார்கள் என்பதை அவர்கள் உணராமல் இருப்பார்கள்.

மேலும் அவர்கள் குதிரையின்மீது அமர்ந்து ஆடும்போது தன்னை ஒரு போர் வீரனாக நினைத்துக் கொள்வார்கள். இது அவர்களின் சிந்தனைத் திறன், சமூக மற்றும் உணர்ச்சித் திறன் மற்றும் படைப்பாற்றல் திறன் போன்றவற்றை உருவாக்குகிறது.

Padithathai pagirnthen
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
அணுஅணுவாய் அறிவியலை அனைத்திலும் மறைத்துவைத்த தமிழனின் அறிவை திரும்பிப்பார்க்க வைக்கும் அருமையான செய்தி???????? நன்றி சகோ???????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top