மறந்துபோ என் மனமே(1) - MEM1 - Chapter 22 - 25

#1
Chapter 23:

“Nandy, நம்ம கம்யூனிட்டில சில லேடீஸ் கேட்டுருக்காங்க நீ அவங்க பசங்களுக்கு டான்ஸ் சொல்லித்தரமுடியுமானு” என்று க்ரிஷ் பேச்சை ஆரம்பித்தான். “வாவ் ரியலி. நான் ராம்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்” என்றாள்.

“அவன் உன்னோட EAD பத்தி சொன்னான். சீக்கரம் ப்ரோஸஸ் ஸ்டார்ட் பண்ணிடலாம். அப்போ இந்த வாய்ப்ப நீ யூஸ் பண்ணிக்கலாம். EAD இல்லாம வேலைபாக்கறது ரிஸ்க்.” என்றவன் தொடர்ந்து

“நான் சிகாகோ தமிழர் சங்கம்ல பேசிப்பாக்கறேன் உன்னோட டான்ஸ் பர்ஃபோர்மன்ஸ்க்கு ஹெல்ப் பண்ண முடியுமான்னு. அதோட ரீச் இன்னும் அதிகமா இருக்கும்” என்று சொல்ல “எதுக்கு உங்களுக்கு கஷ்டம்” என்றாள்.

“இதுல கஷ்டத்துக்கு என்ன இருக்கு. அம்மாக்கூட சொல்லிட்டு இருந்தாங்க. அப்பாக்கு அங்க காண்டாக்ட்ஸ் இருக்கு. பெரிய விஷயம் இல்ல. உன் வந்துடுச்சுன்னா போதும்.” என்றான்.

“தேங்க்ஸ், க்ரிஷ்” என்றாள். “டோன்ட் மென்ஷன் இட்” என்றான் புன்னகையுடன்.

“அன்ட் Nandy, உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்றான் தயக்கத்துடன். “சொல்லுங்க க்ரிஷ்” என்றாள் நந்தினி.

“யூஷுவலா நான் பொய் சொல்லமாட்டேன். எப்பயாச்சும் அதுக்கான தேவ இருந்துச்சுன்னா வேற வழியில்லாம சொல்றதுதான். ராம் அன்னைக்கி ப்ரோக்ராம்க்கு ஏன் வரலன்னு உன்கிட்ட சொன்னானா?”

“எஸ் ஹி டிட்” என்றவள் சிறிது இடைவெளிக்கு பிறகு “அவரு சிகாகோக்கு சுஷீலாவோட போயிருக்காரு. அத என்கிட்டே சொல்லிட்டாரு க்ரிஷ்.” என்றாள் நந்தினி.

“குட். நான் இதுவரைக்கும் பாதத்துல அவன் ரொம்ப நேர்மையானவன். அவன் என்கிட்டே பொய் சொல்ல சொல்லச்சொன்னது சந்தேகமா இருந்துச்சு. அவனா இப்படினு”

“ஹி ஹாஸ் நெவர் ஹர்ட் எனிஒன். இன்னும் சொல்லப்போனா எனக்கு சுஷீலாவ விட அவனப்பதில்லை அதிகமா தெரியும். அவனே சொல்லசொல்றான்னா ஏதோ இருக்கும்னு தான் பொய் சொன்னேன்” என்று நிறுத்திவிட்டு தொடர்ந்தான்.

“அன்ட் யூ ஆர் கிபிட்டட் டு ஹாவ் ஹிம் இன் யுவர் லைஃப் (And you are gifted to have him in your life)” என்று சொல்லும்போது நந்தினிக்கு பெருமிதமாக இருந்தது. அவனை உடனே பார்க்கவேண்டும் என்பதுபோல் இருந்தது.

“கண்டிப்பா அவன் அவளோட இருக்க ரிலேஷன்ஷிப்ப சீக்கரம் முடுச்சுப்பான். அதுதான் அவளுக்கும் நல்லது.” என்றான். பதிலுக்கு அவள் புன்னகைத்து “தேங்க்ஸ், க்ரிஷ்” என்றாள்.

“எதுக்கு?” என்று அவன் கேட்க “அவரை பத்தி நீங்க சொன்னதுக்கு” என்றாள். “அவன் என்னோட நல்ல நண்பன். நீங்க ரெண்டு பேரும் அமைதியா சந்தோஷமா இருக்கனும். அதுதான் வேணும்” என்றான்.

சற்று தூரத்தில் கோவில் வர, இருவரும் சென்று வழிபட்டு வந்தனர். “நானும் அவனும் அடிக்கடி இந்த கோவிலுக்கு வருவோம்” என்றான் க்ரிஷ். “அழகான அமைதியான இடம். என்றாள். “ஐ நோ” என்றான். சிறிது நேரத்தில் வீட்டை வந்தடைந்தனர்.

-------

“இன்னிக்கி சுவாமி தரிசனம் நல்ல இருந்துச்சு” என்றான் க்ரிஷ்.

“சூப்பர்ரா இருந்துச்சு. நேத்து அவர் என்ன அரோரா பாலாஜி டெம்பிள்க்கு கூட்டிட்டு போனாரு. அதுவும் ரொம்ப நல்லா இருந்துச்சு” என்றாள் காபி போட்டுக்கொண்டே. “உம்ம்ம். அவன் சொன்னான்” என்றான்.

“ஹாய் டா க்ரிஷ். கோவிலுக்கு போய்ட்டு வந்தாச்சா?” என்றான் ராம் நுழையும் போதே நந்தினியை பார்த்து புன்னகைத்துக்கொண்டே.

“எஸ் மேன். எப்படி போச்சு பங்க்ஷன்?” என்று க்ரிஷ் கேட்க “இட் வாஸ் குட். சர்ரும், ஆண்ட்டியும் அங்க தான் இருக்காங்க. வர டைம் ஆகும்னு சொல்லச்சொன்னாங்க” என்று சொல்லிக்கொண்டே அவன் அருகில் அமர்ந்தான்.

“மச்சா குடுச்சுருக்கயா??” என்று காதருகே கேட்க “ஐயோ ஆமாடா. வேணாம்னு சொன்னேன். கேக்காம குடிக்க வெச்சுட்டாங்க. நந்தினிக்கிட்ட கூட சொல்லல. எப்படியோ டிரைவ் பண்ணி வந்துட்டேன்” என்றான் முணுமுணுத்துக்கொண்டு.

“ஓ ஓ இதுனால தான் அவங்களும் லேட்டா வராங்கலா. செம்ம பார்ட்டி போல?” என்றான் பதிலுக்கு. இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அவள் மூவருக்கும் காபி எடுத்துவந்தாள்.

“க்ரிஷ் நாளைக்கி டாக்குமெண்ட்ஸ்லாம் குடுத்துடறேன்” என்று ராம் சொல்ல “சரிடா. நாளைக்கி ஆஃபீஸ் போறேன். எவளோ சீக்கரம் முடியுமோ அவளோ சீக்கரம் ட்ரை பண்ணலாம்” என்றான் க்ரிஷ். சொன்னவன் எழுந்தவாறே “ஆல்ரைட் நான் கிளம்பறேன்” என்றான்.

“டின்னர்?” ராம் கேட்க “ஏதாச்சும் ஆர்டர் பண்ணிக்கறேன்” என்றவன் “டேக் கேர்டா. பை Nandy” என்று புறப்பட்டான். இருவரும் அவனை வழி அனுப்பி வைத்தனர்.

“இன்னைக்கு என்ன ட்ரிங்க்ஸ் பார்ட்டியா?” என்றாள் கதவை மூடிவிட்டு உள்ளே வரும்போது. “ஹ்ம்ம் லைட்டா தான். நாங்க பேசுனது கேட்டுச்சா?” என்றான்.

“நீங்க பேசறதுல இருந்து தெரிஞ்சுது. அப்போ நீங்க ரெண்டுபேரும் இத தான் குசுகுசுன்னு பேசுனீங்களா?” என்றாள் புன்னகையுடன். “சாப்பிட்டயா நீ?” என்று அவன் கேட்க “அங்க பிரசாதம் சாப்பிட்டோம், சோ பசிக்கல” என்றவள் அவன் அருகில் வந்து அமர்ந்து “எனக்கு சில டவுட்ஸ் இருக்கு இந்த ஃபோர்ம்ல” என்று காட்ட அவன் உதவி செய்தான்.

ஒருவழியாக முடித்தவுடன், அதை டேபிள் மேல் வைத்துவிட்டு, அவள் பக்கம் திரும்பினான். “என்மேல சந்தேகம் போய்டுச்சா இப்போ” என்று கேட்க “ஹ்ம்ம்” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.

“தேங்க்ஸ்” என்றான் “நான் தான் தேங்க்ஸ் சொல்லணும். நீங்க எனக்காக தந்த கிஃபிட். எல்லாத்துக்கும்” என்றாள். “நீ ஆடினதை நேர்ல தான் பாக்கல பட் நீ சலங்கை இல்லாம ஆடுனதை பார்த்தேன்”

“அது இருந்தா இன்னும் நல்லா இருக்கும்னு தான். கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் வாங்கினேன். அவளோ ஈசி இல்ல. இங்க கிடைக்கறது கஷ்டம்” என்று சொல்லும் போது “இருங்க” என்று சொல்லிவிட்டு சலங்கை எடுத்துக்கொண்டு வந்தாள் முகத்தில் மலர்ச்சியுடன். “நான் இதைபோட்டுட்டு ஆடிக்காட்டவா உங்களுக்கு?” என்று அவனிடம் கேட்க

“இத கேட்கணுமா? ஆசையா இருக்கு பாக்கணும்னு” என்று அவன் சொல்ல அவள் துள்ளிக்குதித்துக்கொண்டு கால்களில் சலங்கை அணிந்துகொண்டாள். மொபைலில் பாடல் போட்டு ஆட தொடங்கினாள்.

அசந்துபோனவனாய் அவளை ரசித்துக்கொண்டிருந்தான். அவள் நடனத்தை முடிக்கும் போது அவளை பார்த்துக்கொண்டு கைகளை தட்டியவாறே எழுந்து அவள் அருகில் சென்று “யூ ஆர் அமேஸிங்” என்று அவளை கட்டிக்கொண்டான்.

சிறிது நேரம் கழித்து அவளை விடுவித்தவன் அவள் முகத்தை பார்த்து “யூ ஹாவ் காட் அன் அமேஸிங் டேலண்ட் . இதை நீ கண்டிப்பா தொடரனும்.” என்று அவன் சொல்ல அவள் கண்கள் ஆனந்த கண்ணீரால் கலங்கின.

Chapter 24::

அவள் ஆனந்த கண்ணீருடன் அவனை அணைக்க, அவன் மது அருந்தியதால் அவளை சற்று விலக்கினான். “என்கிட்டே ஸ்மெல் அடிக்குதுன்னு நினைக்கறேன்” என்று விலகியவன் ஸாரி உன்கிட்ட சொல்லாம..” என்று தயங்க “இதுல என்ன இருக்கு. தட்ஸ் ஒகே” என்றாள் பதிலுக்கு. சிறிது நேரம் பேசிவிட்டு அவன் சோர்வாக இருந்ததால் படுக்க சென்றான்.

-----

எப்பொழுதும் போல் அவன் தயாராகி வந்தான். காலை உணவு முடித்துவிட்டு மதியம் வருகிறேன் என்று சொல்லி ஆபீசுக்கு கிளம்பினான். அவள் காலை வேலைகளை முடித்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் போது காலிங் பெல் அடித்தது.

கதவை திறக்க வெளியே ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். மெல்லிய உடம்பு. அதற்கு ஏற்றாற்போல் உடை. பளிச்சென்ற முகம் அங்கும் இங்கும் பறக்கும் பட்டுபோன்ற கூந்தல். பார்க்க இந்திய முகஜாடை ஆனால் அங்குள்ளவர்கள் போல் தோற்றம்.

“ஹலோ அம் சுஷீலா” என்றாள். “ஹ... லே...., ப்ளீஸ்.... ப்ளீஸ்.. கம் இன்சைட்” என்று தடுமாறினாள் நந்தினி.

“இவங்க தான் சுஷீலாவா. எதுக்கு இங்க வந்துருக்காங்கனு தெரில. ஒரு வேள அவர் இருப்பாருனு வந்துருப்பாங்களோ” என்று அவள் நினைத்துக்கொண்டிருக்க “ப்ளீஸ் உட்காருங்க” என்றவள் அவளுக்கு தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தாள்.

சுஷீலா US 'இல் பிறந்து வளர்ந்த பெண். நுனிநாக்கில் ஆங்கிலம் மட்டுமே நன்றாக வரும். தமிழ் கொஞ்சம் வரும். வாசகர்களுக்காக போதியவரை தமிழில் இதோ….

“என்னப்பத்தி தெரியும் அவளுக்கு. இருந்தாலும் கேஸுல்லா ரிஸீவ் பண்றாளே. வெரி மேச்சுயர்ட்” என்று Sue நினைத்துக்கொண்டிருக்கும்போது “ராம் இல்ல. ஆஃபீஸ் போய்ட்டாரு” என்றாள், “நான் உன்னப்பாக்கத்தான் வந்துருக்கேன்” என்று சொல்ல புரியாதவளாய் நந்தினி Sue’வை பார்த்தாள். சொன்னவள் எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

“உனக்கு எனக்கும் ராமுக்கும் இருந்த ரிலேஷன்ஷிப் பத்தி தெரியும். எஸ், நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணோம். அவன் இங்க வந்த கொஞ்சநாள்ல்ல, எனக்கு அவனை பிடிச்சிருந்தது. ஹி வாஸ் அன் அமேஸிங் பெர்ஸன். எல்லாத்தையும் பாத்து பாத்து செய்வான்”

“மொதல்ல ரொம்ப தயங்கினான் நான் லவ் சொன்னப்ப. பட் கொஞ்ச நாள்ல அவனும் லவ் பண்ணறேன்னு சொல்லிட்டான். ரெண்டு பேரும் லவ் பண்ணோம் பட் எப்பவுமே அவனோட எல்லையை தாண்டினதே இல்ல. பெர்ஃபெக்ட் ஜென்டில் மேன்”

“ரொம்ப சாஃப்ட் ஸ்போக்கன். ஹி ஹாஸ் நெவர் ரெய்ஸ்ட் ஹிஸ் வாய்ஸ். எப்பவுமே அடுத்தவங்க பேசறதை காதுக்கொடுத்து கேப்பான். இந்த மாதிரி அவனோட குணங்கள் என்ன ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணுச்சு”

“இந்த மாதிரி ஒருத்தர எந்த பொண்ணும் மிஸ் பண்ண நினைக்கவேமாட்டா… பட் எனக்கு அத தவிர வேற ஆப்ஷன் இல்ல இப்போ. எஸ், நான் அவன மட்டும் இல்ல, இந்த இடத்தை விட்டே போகப்போறேன்” சொல்லும்போது அவள் தொண்டை அடைத்தது.

சிறிது இடைவெளிக்கு பின் " உங்க கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாம் கைய மீறி போய்டுச்சுன்னு சொன்னான். பாவம் அவன் பொஷிஷன் அப்படியாடுச்சு. அப்போவே நான் அவனை விட்டுருக்கணும். ஆனா நான்... என்னால அவளோ ஈசியா கல்யாணத்த அக்ஸப்ட் பண்ண முடில”

"நேத்து நீங்க என் வாய்ஸ் மெயில் கேட்டதா என்கிட்ட சொன்னான். ஐம் ஸாரி. அத நீ கேப்பனு எதிர்பார்க்கல. இனி உங்க ரெண்டு பேருக்கும் ட்ரபில்லா இருக்க விரும்பல நான் பண்ணினது எவளோ கஷ்டமா இருக்கும்னு புரிது. ஐம் ஸாரி"

" கொஞ்ச நாள் முன்னாடி எனக்கு ஒரு ஆஃபர் வந்துச்சு புது வேல விஷயமா. பட் அப்போ நான் அது பெரிசா நினைக்கல. ராம் தான்னு இருந்துட்டேன். பட் இப்போ என்னோட கேரியர்ல ஃபோகஸ் பண்ண முடிவு பண்ணிருக்கேன்”

“எஸ், ஐ லவ்ட் ஹிம். பட் எனக்கு வேற ஏதோ ஒன்ன விதி முடிவு பண்ணிருக்கு போல. அவன் சொன்ன மாதிரி life has other plans for me. அவன மறக்கறது ஈசி இல்லதான். பட் கண்டிப்பா இதுல இருந்து மீண்டு வருவேன்" அவள் பேசும்போது அவளிடம் வெறுமையே தெரிந்தது.

அவள் பேசிமுடிக்கும் போது நந்தினிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. திரும்பி அவளிடம் வந்த Sue, நந்தினியின் கைகளை அவள் கைகளில் வைத்து, “Ram is yours and அன்ட் அவனும் உன்ன புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டான். ஆல் தீ பெஸ்ட்” என்று சொல்லிவிட்டு கைகளை விடுவித்தாள்.

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில சுஷீலா. அம் வெரி தேங்க்ஃபுல் டு யூ. I என் லைப்ல நான் இவளோ ஒரு மெச்சூர்ட் பெர்சன்ன பாத்ததே இல்ல. தேங்க்ஸ் சுஷீலா” என்றாள் நந்தினி.

“என்ஜோய் யுவர் லைப். அன்ட் ஒரு சின்ன ரெக்வெஸ்ட். நான் வந்து பேசினதை அவன்கிட்ட சொல்ல வேணாம். இனி அவன் என்ன பத்தி நினைக்கவே கூடாது அதுக்கு தான். பை” என்று சொல்லிவிட்டு கண்கள் கலங்கியவாறே திரும்பி பார்க்காமல் சென்றாள் Sue.

Please see below
 
#2
என்ன நடந்தது என்று அவளால் நம்ப முடியவில்லை. "எவளோ கஷ்டமா இருக்கும் அவங்களுக்கு. விட்டுக்கொடுப்பதற்கும் மனம் வேண்டும்" என்று நினைத்து கண்கலங்கினாள்.

அவள் மனம் சற்று கனமாக இருந்தது. இனி எந்த பிரச்சனைகளும் அவளுக்கு இல்லை இருந்தாலும் அவள் மனம் Sue’காக வருந்தியது. சிறிதுநேரத்தில் ராம் மதிய உணவுக்கு வந்தான். அவள் எதுவும் செய்யவில்லை.

காலிங் பெல் அடித்தது அவள் திறந்து விட்டு “ஐம் ஸாரி ராம். கொஞ்சம் உடம்பு முடியல. அதுனால சமைக்கலை” என்று சொல்லி சோபாவில் சாய்ந்தாள்.

"இன்னிக்கும் முகம் வாடி இருக்கு. அவ திரும்ப ஏதோ மூட் அவுட்ல இருக்கா" என்று உணர்ந்து அவன் “நந்தினி” என்று அவள் அருகில் வந்து உட்கார்தான். அவள் அவன் மடியில் படுத்து கண்கலங்க ஆரம்பித்துவிட்டாள்.

“நந்தினி என்ன ஆச்சு? ஐம் ஒரிட் (I’m worried)” என்று அவளை கேட்க “தெரில ராம். கொஞ்சம் கஷ்டமா இருக்கு. படபடப்பா இருக்கு” என்று சொல்ல “ஐயோ டாக்டர்கிட்ட போலாம் எந்திரி” என்றான் பதறியவாறே.

“இல்லசிலசமயம் இப்படி டிஸ்டர்ப் ஆகும், கொஞ்ச நேரத்துல சரியாகிடும்” என்றாள் கண்ணீருடன். “எதுனால டிஸ்டர்ப்ட்டா இருக்க. உன்மனசுல ஏதாச்சும் இருந்துச்சுன்னா ப்ளீஸ் சொல்லு” என்று அவன் கேட்க காலையில் நடந்ததை முழுக்க ராமிடம் சொன்னாள்.

“அவங்க மனசு எவளோ கஷ்டப்பட்டுருக்கும் அத அவங்க சொல்றப்ப. ஒரு வேள நான் உங்க லைப்ல இல்லனா நீங்க அவங்க சந்தோஷமா இருந்துருப்பீங்கல? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று அவன் மடியிலேயே இன்னும் அழ ஆரம்பித்துவிட்டாள்.

அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் எப்படி சமாதானப்படுத்துவது என்று தவித்தான். அவள் தலை முடியை கோதியவரே “இங்க பாரு நந்தினி, நீ தான் பாஸ்ட் பத்தி இனி வேணாம் புது லைப் ஸ்டார்ட் பண்ணலாம்னு சொன்ன. இப்போ எதுக்கு மறுபடியும்? "

"யாருக்கு யாருனு எழுத்துவெச்சுருக்கோ அதுதான் நடக்கும். எவளோ தலைகீழா நின்னாலும் நாம மாத முடியாது. இத நான் உனக்கு சொல்ல வேண்டியதில்லை" என்றான் சமாதானமாக. அவள் சிணுங்கிக்கொண்டே இருந்தாள்.

“இரு நான் போய் சூடா ஏதாச்சும் குடிக்க போடறேன்” என்று அவளை மடியில் இருந்து தூக்க “இல்ல வேணாம் எதுவும்” என்று அவன் மேல் சாய்ந்துகொண்டாள். “சொன்னா கேளு” என்று அவள் முகத்தை அவன் கைகளுக்குள் வைத்து “நீ அழக்கூடாதுனு சொன்னேன் மறந்துட்டயா?” என்று கண் துடைத்துவிட்டான்.

“இனி எனக்கு நீ உனக்கு நான். இரு நான் ஏதாச்சும் போடறேன்” என்றான். இதை சொல்லும் போது மனதில் ஒரு ஓரத்தில் Sue வந்தாள். “பட் அவளுக்கு சொன்னதே தான் ராம். தட் இஸ் பாஸ்ட்” என்று நினைத்துக்கொண்டான்.

அவன் எழ அவள் அவன் கையை பிடித்து தடுத்தாள். அவன் திரும்ப, அவள் அவனை இறுக கட்டிஅணைத்தாள். அவன் அவள் முகத்தை தூக்கி நெற்றியில் முத்தமிட்டு அவள் கண்களை பார்த்தவாறே “ஐ லவ் யூ” என்றான்.

Chapter 25::

அவள் கண்கள் கலங்கி இன்னும் இறுக அணைத்துக்கொண்டாள். ஒரு சிறிய இடைவெளிக்கு பின் அவன் அவளை அணைத்தவாறே “சரி இப்படியே இருந்தோம்னா மயங்கி விழுந்துடுவோம். நான் ஏதாவது ஆர்டர் பண்றேன் சாப்பிட” என்றான்.

அவள் அவனை விடுவித்து “ஐம் ஸாரி உங்கள வரச்சொல்லிட்டு எதுவும் பிரிப்பர் பண்ணல” என்றாள். “இதுக்கு ஸாரியா. இதுல என்ன இருக்கு. நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு” என்று சொல்லிவிட்டு போன் எடுத்து ஆர்டர் செய்தான்.

அவள் சற்று முடியாமல் சோபாவில் படுத்துகொண்டாள். அவள் படுத்துக்கொண்டிருப்பதை பார்த்து “நான் வேணும்னா ஆஃபீஸ்க்கு ஹாஃப் டே லீவ் போட்டுடவா?” என்று கேட்க “இல்ல பரவால. உங்க லேப்டாப் லாம் அங்க தான் இருக்குல்ல. நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்” என்றாள்.

“தட்ஸ் ஒகே. நான் போய் எடுத்துட்டு வந்துடறேன்” என்றான். அவள் அப்படியே படுத்திருக்க அவனும் சோபாவில் சாயந்தான். உணவு சிறிது தாமதமாக வர அவள் தூங்கியிருந்தாள். அவன் அவளை எழுப்ப அவள் எழ தடுமாறினாள். உடம்பில் லேசான காய்ச்சல் தெரிந்தது.

“நந்தினி, காய்ச்சல்னு நினைக்கறேன். உன்கிட்ட முன்னாடியே சொன்னேன். ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத எதையாவது யோசிச்சுனு. இப்போ சாப்பிடு. நம்ம செக் அப் போலாம்” என்றான். “காய்ச்சலெல்லாம் இல்ல. தூங்கினா சரியாடும்” என்றாள்.

“மொதல்ல சாப்பிடு” என்று கொஞ்சமாக சாதம் எடுத்துவர, அவள் வாங்கிக்கொண்டு சாப்பிட கையில் சிறிது நடுக்கம். அதை பார்த்த அவன் ஒரு ஸ்பூன் எடுத்துவந்து அவளிடம் ப்ளேட்டை வாங்கி அவளுக்கு கொடுக்க ஆரம்பித்தான்.

முதலில் தயங்கியவள், பின் சாப்பிட ஆரம்பித்தாள். சிறிது சாப்பாடு உள்ளே சென்றவுடன் போதும் என்றாள். “ஆல்ரைட். கிளினிக் போயிட்டு வந்துடலாம் வா” என்று அவன் சொல்ல “ஐயோ அதெல்லாம் வேணாம். அவளோ மோசமா இல்ல” என்றாள்.

“அத டாக்டர் சொல்லட்டும். நீ கிளம்பு” என்றான். அடுத்த சிறிது நேரத்தில் கிளினிக் சென்றனர். சென்ற இடத்தில் டாக்டர், நந்தினிக்கு அவள் எடுக்கும் தூக்க மாத்திரைனால கூட இப்படி சைட் எஃபெக்ட்ஸ் வரலாம். கிளைமேட் கூட கொஞ்சம் மாறுது என்று சொல்லி அவளுக்கு மாத்திரைகளை பரிந்துரைத்தார்.

சிறிது நேரம் ராமிடம் ஏதோ பேசினார் தனியாக. திரும்பி வரும் போது “நந்தினி நீ இனி தூக்க மாத்திர எடுக்க வேணாம். எதுக்காக அத எடுக்கணும். மொதல்ல அதெல்லாம் என்கிட்ட குடு. எப்படி தூக்கம் வராம போகும்னு பாக்கறேன்” என்றான்.

“அது போட்டு போட்டு பழகிடுச்சு அதான்” என்று சொல்ல “இனி வேண்டாம்” என்று அழுத்தமாக பதில் சொன்னான்.

“அப்பறம் உனக்கு இந்த கிளைமேட் கஷ்டமா இருக்கா? ஏன்னா விண்டர் இன்னும் மோசமா இருக்கும். இப்போ வெறும் ரெண்டு டிக்ரீ” என்று சொல்ல, “என்னது வெறும் ரெண்டு டிக்ரீயா. இது உங்களுக்கு நார்மலா” என்று கேட்க “இங்க மைனஸ் டென் வரைக்கும் போகும்” என்றான்.

அவள் எதுவும் பேசாமல் வந்தாள். “போற வழிலதான் ஆஃபீஸ். லேப்டாப் எடுத்துட்டு போய்டலாமா” என்று அவன் கேட்க சரி என்றாள். அவன் பார்க் செய்துவிட்டு அவளிடம் “டூ மினிட்ஸ் வந்துடறேன்” சொல்லி செல்லும்போது அங்கே இரு பெண்கள் அவனை பார்த்ததும் ஏதோ பேச அவன் பேசிவிட்டு சென்றான் உள்ளே.

இருவரும் அவளிடம் வந்து அவர்கள் அவனுடன் வேலை செய்வதாக அறிமுகப்படுத்துக்கொண்டனர். அவள் நடனம் மிக நன்றாக இருந்ததாக சொல்ல அவள் நன்றி தெரிவித்தாள்.

அவர்கள் அவள் வீட்டு பக்கத்தில் உள்ள அபார்ட்மெண்டில் இருப்பதாக தெரிவித்தனர். அதற்குள் அவன் வெளியே வர இவர்கள் நந்தினியிடம் விடைபெற்றுக்கொண்டு போகும்போது ராமிடம் ஏதோ நந்தினியை பார்த்து சொல்லிவிட்டு சென்றனர்.

“போலாமா?” என்று கேட்டுக்கொண்டே காரில் ஏற அவளும் ஏறினாள். “அவங்க என் டீம் மேட்ஸ். உங்கிட்ட என்ன பேசினாங்க?” என்று கேட்க “டான்ஸ் நல்லாஇருந்துச்சுனு சொன்னாங்க” என்றாள் புன்முறுவலுடன்.

“போறப்ப உங்ககிட்ட ஏதோ சொன்னாங்க?” என்று கேட்க “அதுவா நீ ரொம்ப அழகா இருக்கனு சொன்னாங்க” என்றான் இதழோரத்தில் சிறிய புன்னகையுடன்.

“பொய் தான?” என்றாள் சிரித்துக்கொண்டு “நீ நிஜமாவே ரொம்ப அழகு” என்றான் அவளை பார்த்து. “நீங்க சொல்றீங்களா அவங்க சொன்னாங்களா"

“யாரு சொன்னா என்ன?” என்றான். வெட்கப்பட்டவள் ரோட் பாத்து ஓட்டுங்க என்றாள்.

“நீ இருக்கப்ப வேற எங்க பாக்கமுடியும்? உன்னைமட்டும் பாக்கணும்னு இருக்கு” என்று நக்கலாக சொல்ல “அயோ எனக்கு ரொம்ப குளுருது இதுல ஐஸ் வேறயா?” என்றாள் விளையாட்டாக.

பேசிக்கொண்டே இருவரும் வீட்டுக்கு வந்தடைந்தனர். அவளுக்கு மருந்து கொடுத்து சிறிது நேரம் தூங்க சொன்னான்.

-----

அவன் அவளுக்காக ரசம் செய்திருந்தான். அவளை எழுப்பி உணவு கொடுத்துவிட்டு மருந்து கொடுத்தான்.

“ஐம் ஸாரி. என்னால ரொம்ப கஷ்டம் உங்களுக்கு” என்று சொல்ல “உஃப்ப். இதோட நூறு தடவ சொல்லியாச்சு” என்றான் நமட்டு சிரிப்போடு. அவன் சாப்பிடும்வரை அவள் பொறுத்திருந்து அவள் அறைக்கு தூங்க சென்றாள். அவன் சிறிது நேரம் கழித்து அவள் அறைக்கு சென்று பார்த்தபோது அவள் போர்வைகளால் போர்த்திக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

“என்ன ஆச்சு?” என்று அவன் கேட்க “ரொம்ப குளுருது உங்ககிட்ட ஏதாச்சும் எக்ஸ்ட்ரா ப்ளாங்கெட் இருக்கா?” என்று நடுங்கியவரே கேட்கும் போதுதான் அவனுக்கு நினைவிற்கு வந்தது சென்ட்ரலைஸ்ட் ஹீட்டர் (centralized heater) ஒர்க் ஆகவில்லை, சரி செய்யவும் இல்லை என்று.

போன வருடம் அது பழுதடைந்திருந்தது. அவன் மட்டும் தானே என்று சரிசெய்யாமல் தனி எலக்ட்ரிக் ஹீட்டர் வாங்கிக்கொண்டான். “ராம்” என்று அவள் மறுபடியும் அழைக்க “ஓ ஸாரி, ஏதோ யோசிச்சுட்டு இருந்தேன். இந்த ரூம்ல ஹீட்டர் இல்ல. மேல என் ரூம்ல தனி ஹீட்டர் ஃபிக்ஸ் பண்ணிருக்கேன். உனக்கு ஒகே என் ரூமுக்கு வந்துக்கோயேன்” என்றான்.

“இல்ல உங்களுக்கு எதுக்கு தொல்லை...” என்று அவள் இழுக்க “அதெல்லாம் ஒன்னும் இல்ல வா” என்று அவன் கையை நீட்டினான் அவளுக்கு உதவ. அவள் தயக்கத்தோடு அவன் கையை பிடித்துக்கொண்டு எழுந்தாள்.

அவளை கைத்தாங்கலாக மேலே அவன் அறைக்கு அழைத்துச்சென்றான். அவளை கட்டில் மேல் படுக்க உதவிவிட்டு, ஹீட்டர் ஆன் செய்தான்.

“இன்னும் கொஞ்ச நேரம், ரூம் warm ஆயிடும்” என்றான்.

“இந்த ரூம் உள்ள இப்போ தான் வரேன். கதவு வரைக்கும் வந்துருக்கேன். அவரே சுத்தம் கூட பண்ணிப்பாரு. உடம்பு சரியில்லாததால் கூட்டிட்டு வந்துருக்காரு. அவரோட பெட் யூஸ் பண்ணிட்டு இருக்கேன்”

கண்ணைமூடி ஏதோ நினைத்துக்கொண்டு நடுங்கிக்கொண்டே இருந்த அவள், கண்விழிக்க திடீரெனெ இன்னும் நடுங்கி போனாள், அவன் அவள் அருகில் உட்கார்ந்திருப்பதை பார்த்தவுடன்.

அவன் மெல்ல அவளின் கையை எடுத்து அவன் கையால் தேய்த்துவிட, “ஐயோ நீங்க ஏன் இதெல்லாம் செய்யறீங்க” என்று கையை இழுக்க முயல “நத்திங், ரொம்ப குளுருதுல்ல, ரூம் warm ஆக கொஞ்சம் நேரம் ஆகும், அதான்” என்றான். அவள் தடுத்தாலும் அந்த சூடு, அந்த குளிருக்கு தேவைப்பட்டது அவளுக்கு.

Thank you so much for reading. Do share your feedback and keep supporting me please.

A24.jpg
 

Sponsored

Advertisements

Top