• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience மாடிவீட்டு தமிழரசி - அறிமுகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,434
Location
Vellore
அறிமுகம் என்று அசத்தி இருக்கீங்க சாந்தினி சகி ???
இதோ நானும் வந்துட்டேன் ???
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
அறிமுகம் என்று அசத்தி இருக்கீங்க சாந்தினி சகி ???
இதோ நானும் வந்துட்டேன் ???
வாங்க வாங்க யுவாக்கா ??
 




ப்ராம்மி

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jul 3, 2019
Messages
150
Reaction score
653
Location
Chennai
ஹாய் மக்களே...

மீண்டும் நானே... எல்லாரும் எப்படி இருக்கீங்க.. நான் சூப்பரா இருக்கேனுங்க :love::love:...

இந்த முறை எங்க ஊரை சுற்றி நடக்கும் ஒரு காதல் கதையுடன் வந்துவிட்டேன்... நாம எல்லாம் 90 கிட்ஸ்... சோ 90 - க்கு ஒரு ரவுண்ட் போயிட்டு வருவோமா? ஆத்தாங்கரை / குளத்தாங்கரை குளியல், புளியமரத்தில் ஆடுன ஊஞ்சல், சுட்ட மீன், சுட்ட புளி, இடிச்ச புளி, கூட்டாஞ்சோறு, நாணல் வச்சு பிடிச்ச நண்டு, ஒரு புளிய மரம், மாங்கா மரம் விடமாட்டோம் எல்லாம் ஆட்டைய போட்டு உப்பு, மிளகாய் வச்சு திங்குறது தான் முழு நேர வேலையா வச்சுருப்போம்... இப்படி நிறைய இருக்கும் ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் அந்த நாட்களுக்கு இனி நினைச்சா போக முடியாது :(:(...

அப்புறம் நாம ஸ்கூல் படிக்கும் போது நடந்து தான் போயிருப்போம். அப்போ எல்லாம் ரொம்ப நல்லா இருந்திருக்கும். படத்துல எல்லாம் வருமே பொண்ணுங்க ஸ்கூல் போயிட்டு வரச்ச பசங்க சைக்கிளில் பெல் அடிச்சுட்டு வாரதும், ஒரு பீப்பி வாங்கி வச்சு அடிக்கிறதும் அப்படியே இங்கிட்டு சிக்னல் கொடுக்குறதுமா செமயா இருந்திருக்கும் :LOL::LOL::LOL:...

எப்பவாச்சும் ஊருக்கு போற பஸ்ல ஜன்னல் ஒர இருக்கை... மழை குளியல்... வீசும் காற்றில் ஒரு பட்டம்... சுட்டிக்கல்... தாயம்... நொண்டி... பூப்பறிக்க வருகிறோம்... ஒடஞ்ச பானை... கொலகொலையா முந்திரிக்கா... கிச்சு கிச்சு தாம்பலம்... கண்ணாமூச்சி... செவன் ஸ்டோன்... பம்பரம்... கோலி குண்டு... குச்சி கம்பு... கொக்கோ... கபாடி... அண்ணாச்சி கடை... திருவிழா... ராட்டு... ராத்திரி திரைபடம்... எம்ஜிஆர் கலரு... இப்படி நிறைய இருக்கும்... இப்படி நினைவுகளோடு கதையில் அழகா ஒரு ரவுண்ட் அடிக்கலாம். மீண்டும் ஒரு முறை அந்த நாட்களுக்கு திரும்பி போயிட்டு வருவோம். எனக்கு துணையாக நீங்களும் வாங்க :love::love:

உங்க வாழ்க்கையிலும் இதே போல நிறைய இருக்கும். வாங்க அந்த நாட்களை மீண்டும் ஒருமுறை திரும்பி பாப்போம்.. நம்மளோட சின்ன வயசு நினைவு எல்லாருக்கும் இருக்கும். கிராமத்துல சில கட்டுப்பாடுகள் இருக்கும், நம் முன்னோர் வைத்த கட்டுப்பாடுகளை நாம் மீறும் போது என்ன நடக்கும்? அதை பற்றியும் கொஞ்சமாய் கதையில் பார்ப்போம்...

அதெல்லாம் ஒரு அழகான நாட்கள். அதே நாட்களை என் கதையில் உங்கள் துணையோடு கொண்டு வர ஆசைப்படுறேன்... நீங்களும் உங்களோட நினைவுகளை ஷேர் பண்ணலாம்… அதுக்கு உங்க ஒத்துழைப்பு கண்டிப்பா தேவை மக்களே... இப்போ கதைக்கு வருவோம்.

டைட்டில் : மாடிவீட்டு தமிழரசி.

நாயகன் : அழகேசன் (எ) அழகு.

சுருக்கமா சொல்லனும்னா "ஏழை வீட்டு பணக்காரன்" பத்து மூட்டெலும்பையும் ஒரே நேரத்தில் கடிச்சு விளாசுர வீரன் அவன். கடன் வாங்கின சைக்கிள் வச்சி பீலாவுடுற ரெண்டு மூணு வீணா போன பிரண்ட்ஸ்...

நாயகி : தமிழரசி (எ) தமிழ்.

சுருக்கமா சொல்லனும்னா "பணக்கார வீட்டு ஏழை"… பாரதி கண்ட புதுமை பெண், வீராதி வீரி (பெண் பால்) இப்படி எல்லாம் சொல்ல ஆசை தான். ஆனா நம்ம தமிழ் அப்படி இல்லை... நல்லி எலும்பை பத்து நாளா வச்சு கடிக்கும் வீர புள்ள… அவளோட அறை, மாடி ஜன்னல், வீட்டு வாசலில் இருக்கும் கற்தூண் இவங்க தான் இவளுக்கு நண்பர்கள்.

இவங்களை சுற்றி தான் கதை பயணிக்கும். சீக்கிரம் எபியுடன் வருகிறேன்... என்னோட எல்லா கதைக்கும் தந்த ஆதரவை இந்த கதைக்கும் எதிர்பார்க்கிறேன் நண்பர்களே... போன கதைக்கு முன்னாடியே போட்ட பிளான்.. சந்தோஷ் பார்த்து கொஞ்சம் சிலிப் ஆகிட்டேன். அது தான் இது வர லேட் ;);)..
Evlo Azhagu shaa unnoda intro I loved it???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top