• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மிதக்கும் ஆயுதங்கள் --அத்தியாயம் 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
இளமதி தன் வீடு வந்து சேர்ந்தான். நான்கு ஆண்டுகள் முன் வீட்டினை எதிர்த்து தன் காதலியைக் கரம் பிடித்தவன்.


எளிய உடைக்கு மாறிய பின்.. சமையலறைப் புகுந்தான்.


“நைட்டுக்கு என்ன சமைக்க எழில்” என்றான் சமையலறையிலிருந்து டீ போட்டபடியே.


அவள் அமைதியாக இருந்தாள்.


“என்ன மேடம் சைலன்ட்டா இருக்கீங்க… அதே பிரச்சினையா “


“இன்னைக்கும் அப்பா அம்மா போன் பண்ணலடா”


“பண்ணுவாங்கப்பா… “


அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. திருமணமாகி இந்த நாலு வருஷத்தில், தினமும் அவர்களிடம் இருந்து அழைப்பை எதிர்பார்க்கிறாள். அவர்களை மறக்க வைக்கும் அளவிற்கு இன்னும் அன்பு செலுத்த வேண்டும் என்று உள்ளுக்குள் நினைத்தான்.


“சரி, விடு உனக்கு சூப்பரா மசாலா தோச பண்ணித் தரேன்.. அதோட டேஸ்ட்ல நீ எல்லாத்தையும் மறந்துடுவ.. இந்தா முதல டீ குடி” என்று ஒரு கோப்பையை அவளிடம் நீட்டினான்.


“அதெல்லாம் மறக்காது “ என்றாள் டீயை வாங்கியபடி.


“சரிம்மா… இப்படியே இரு” என்று சமையலறை நோக்கி நடந்தான்.


இதற்கிடையில் ப்ரித்திஸிடம் இருந்து அழைப்பு வந்தது.


இவன் ஏன் இப்ப கால் பண்றான் என்று நினைத்தவாறு கைப்பேசியை எடுத்தான்.


“ம்ம் சொல்லு “


“கேகே நகர்ல ஒரு வீட்ல திருடு போய் இருக்கான்டா… உன்னோட கேஸூக்கு இது யூஸாகுமான போய் பாரு…”


“யார்டா சொன்னா”


“ அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் அழகேசன் சொன்னாரு.. அதான் சொல்றேன்… போய் பாத்துக்கோ. “


“சரி போறேன்.. அந்தப்பய என்ன பண்றான்… தெண்டமா தான வீட்ல சுத்திக்கிட்டு இருப்பான்.. அவனுக்கு போன் பண்ணி வரச் சொல்லு”


“உனக்கு தேவைனா நீ போன் பண்ணி கூப்பிட்டுக்கோ.. மகிமா கோபப்படுதுடா வை போன” என்று பேச்சை முடித்தான்.


“இரு மகனே உன்னைய எப்படி மாட்டிவிடுறேன் பாரு” என எண்ணியபடி இன்பன் எண்ணுக்கு அழைத்தான் தோசை சுட்டபடியே.


ஸோபாவில் படுத்தபடியே டீவி பார்த்துக் கொண்டிருந்த இன்பன் கைப்பேசி அதிர்வைக் கண்டு எடுத்தான்.


“சொல்லுங்க என்ன வேணும்”


“எனக்கு ஒன்னும் இல்ல.. ப்ரித்திஸ் கால் பண்ணானா உனக்கு.. “


“இல்ல “


“நாட் ரீச்சபிள்னு வந்துச்சுனு சொன்னான்… அவன் கிட்ட போன் பண்ணிக் கேட்டுக்கோ என்னன்னு”


“இந்த நேரத்திலயா, எதுக்குடா… மகிமா சிஸ்டர் கோபப்படாதா “


“அவன்தான கூப்பிட்டான்… வேணும்னா அவங்கிட்ட கேட்டுக்கோ”


“சரி வை”..


ஆரின்பன் தன் கைப்பேசியில் ப்ரித்திஸ் எண்ணைத் தட்டினான்.

ப்ரித்திஸ் எடுத்தவுடன்…


“ஐயா.. போன் பண்ணீங்களா”


“ஏண்டா இந்தப்பாடு படுத்துறீங்க.. எவன்டா சொன்னது “


“மதி”


“இல்லடா… கேகே நகர்ல ஒரு கேஸப்போய் விசாரிக்கச் சொன்னே… உன்னையக் கூப்பிட்டான்… நீ போனும்னா போ.. இல்லன்னா படுத்து தூங்கு…ஆனா அங்க என்ன நடந்தாலும் போன் பண்ணாதீங்கடா”


“ஐயா, கமிஷனரே இப்படி பேசலாமா”


“வைடா அஸிஸ்ட்டு ”


சிரித்துக்கொண்டே எழுந்து கிளம்பினான் ஆரின்பன்.


கேகே நகர்…


அது ஒரு தனி வீடு.பெரிய வீடெல்லாம் இல்லை.. இரு படுக்கை அறைகள் கொண்ட சிறிய வீடுதான். வரவேற்பறையில் ஒரு முதியவரும், ஒரு இளம் வயதுப் பெண்ணும் அமர்ந்திருந்தனர். இன்ஸ்பெக்டர் அழகேசன் உள்ளே சென்று ஆராயத்தொடங்கினார். ஒரு கடிதம் கிடைத்தது. வழக்கம் போல அதில் “தன் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை” என எழுதி இருந்தது.


கைரேகைகள் ஏதும் கிடைக்குமா என ஒரு பிரிவினர் ஆராய்ந்தனர்.


அப்பொழுதுதான் இளமதி தன் பைக்கில் வந்து அந்த வீட்டின் முன் நின்றான். அங்கிருந்த கான்ஸ்டபிளிடம்,


“இந்த வீடா “ என்றான்.


“இல்ல சார்.. இது வேற… சூசைடு கேஸூ… நீங்க கேட்ட வீடு இங்க இருந்து மூனாவது வீடு “


“அழகேசன வெளியில கூப்பிடுங்க”


அதற்குள் அவரே இளமதியின் குரல் கேட்டு வெளியில் வந்தார்.


“அங்க இருக்குற வீடுதான் சார்.. நீங்க போய் பாருங்க… கான்ஸ்டபிள் வந்து உங்களுக்கு கெல்ப் பண்ணுவார்”என்று வீட்டை நோக்கி கை காட்டியபடி.


“இங்க என்ன விஷயம்”


“இது சூசைட் கேஸ்… “

"சரி.. நீங்க கன்டினியு பண்ணுங்க"

அதற்குப் பிறகு அழகேசன் அந்த வீட்டினரிடம் விசாரிக்க உள்ளே சென்றார்..


“என்ன பிரச்சனைனு தெரியுமா” என்று அங்கு அமர்ந்திருந்த இருவரிடமும் கேட்டார்.


“தெரியல சார் ” என்றார் அந்த முதியவர்.


இன்ஸ்பெக்டர் அந்தப் பெண்ணை பார்த்தார்.


“அவ ரொம்ப பயந்துட்டா… எதுனாலும் என் கிட்ட கேளுங்க” என்று சொன்னார்.


“அப்படியெல்லாம் நீங்க சொல்ல முடியாது “ என்றவர்… பின் என்ன நினைத்தாரோ..


“சரி நீங்களே சொல்லுங்க… என்ன தான் பிரச்சனைனு இப்படி ஒரு முடிவ எடுத்திருக்கு”


“ நல்லாதான் பேசிக்கிட்டிருந்தோம் காலையில.. ஆனா சாயங்காலம் இப்படி ஆயிருச்சு”


“நீங்க உடனே ஏன் போலிஸிக்குச் சொல்லல”


“இல்ல சார், நாங்க கொஞ்சம் பயந்திட்டோம்… கையும் ஓடலை காலும் ஓடலை… அதான் லேட்டு”


“அட்டாப்ஸி பண்ண வேண்டியிருக்கும்…. அதனால பாடிய ஹாஸ்பிட்டல் எடுத்திட்டுப் போனும்… “


“அதெல்லாம் வேண்டாம் சார்… நாங்க எந்தக் கம்ப்ளைன்டும் கொடுக்க வேண்டாம்னு நினைக்கிறோம்”


“அப்படி எல்லாம் முடியாது… கண்டிப்பா அட்டாப்ஸி செய்யனும்… கொஞ்சம் பார்மாலிட்டீஸ் இருக்கு.. அதெல்லாம் நீங்க பாக்கணும்.. ஸ்டேஷனுக்கு வரனும் “ என்றார் அந்தப் பெண்ணைப் பார்த்தபடி.


அப்போதும் அந்தப் பெண் அமைதியாகவே இருந்தாள்.


அழகேசன் அப்போதான் கேட்டார்.


“இவங்க என்ன பண்றாங்க”


“என் பேத்தி சார் … டாக்டரு… இங்கதான் ஒரு ஹாஸ்பிட்டல்ல வேல பார்த்துகிட்டு இருக்கா”


“ஹாஸ்பிட்டல் பேர் என்ன “


“அருவி ஹாஸ்பிட்டல் சார்”


“லவ் ஃபெயிலியர் மாதிரி ஏதாவது சந்தேகப்படுறீங்களா”


“அய்யோ சார்.. இல்ல சார் அப்படி எல்லாம் எதுவும் இல்லை… “


உடனே அழகேசன் திரும்பிஅந்தப் பெண்ணிடம் கேட்டார்..


“உங்களுக்கு ஏதாவது தெரியுமா”


“அவளுக்கு எதுவுமே தெரியாது… “என்று அந்தப் பெரியவரே பதில் கூறினார்.


அப்பொழுது மருத்துவமனையிலிருந்து வந்த ஊழியர்கள் அந்தச் சடலத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினர்.


இதற்கிடையில் ஆரின்பன் வந்திருந்தான். இளமதியும் அந்த மூன்றாவது வீட்டில் இருந்து வெளியே வந்தான். இன்பன் நிற்பதைப் பார்த்து அவனருகே வந்தான்.


“என்னடா பிரச்சனை பக்கத்துல”


“ஏதோ சூசைட் கேஸ் “


இதற்கிடையில் அழகேசனும் அங்கே வந்து சேர்ந்தார்.


“நீ செக் பண்ணியா… வீட்ல எதுவும் கிடைச்சதா” என்றான் இன்பன்.


“அது பெரிய காமெடிடா… அப்புறமா சொல்றேன்”


ஆரின்பன் அழகேசனைப் பார்த்து..


“நீங்க அந்த வீட்டுல விசாரிச்சிங்களா”


“பொண்ணு எதுவுமே பேசமாட்டேங்குது.. அழுதுக்கிட்டே வேற இருக்கு… அந்த பெரியவர் முழுங்கி முழுங்கி பேசுறாரு… அவங்களுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்க விருப்பமில்லை “


“ஸ்டேஷனுக்குப் கூட்டிட்டுப் போய் விசாரிங்க… அப்ப பேசுவாங்க” என்றான் இன்பன் கோபமாக.


“சரி சார்… “


பின் அழகேசன் அந்த சடலத்தை எடுத்து மருத்துவமனை அனுப்பும் பணியில் ஈடுபட்டார்.


இன்பனும் மதியும் இரு வீட்டுக்கும் நடுவே நடந்து கொண்டே பேசினர்.


“எழில் சாப்ட்டாளா… என்ன சொல்றா”


“தோச சுட்டு கொடுத்துட்டு தான் வந்தேன்… டெய்லி அம்மா அப்பா பத்திக் கேட்கிறா”


“அம்மா அடுத்த வாரம் ஊரிலிருந்து வந்தபின்னாடி… வீட்டுக்கு வந்து ஒரு வாரம் ரெண்டு பேரும் இருங்க .. சரியாருவா“


“அக்கா எப்படி இருக்காங்க “


“ம்ம் சூப்பர்… “


“அக்காக்கு ரெண்டாவது பிள்ளையும் பிறந்திருச்சி… நீ இன்னும் கல்யாணமே பண்ணல”


“அய்யய்ய்ய… வேற பேசு“


மதி அமைதியானான்.


“ப்ரித்திஸிக்குப் போன் பண்ணேன்டா… புலம்பறான்” என்று பேச்சின் போக்கை மாற்ற முயன்றான் இன்பன்.


“கல்யாணம் பண்ணிப் பாரு… அப்பத் தெரியும் உனக்கு “


“ச்சு.. “


“இந்த வருஷத்திலேயே ஒரு பொண்ணு உன் கையப் பிடிக்கப் போறா பாரு… “என்று ஆருடம் சொன்னான் மதி.


இப்படியே இருவரும் பேசிக் கொண்டிருக்கையிலேயே….

அந்தப் பக்கத்து வீட்டிலிருந்துச் சடலத்தை எடுத்துக் கொண்டு மருத்துவ ஊழியர்கள் வெளியே வந்தனர். ஆம்புலன்ஸ் அந்தச் சடலத்தை ஏற்றிக் கொண்டு கிளம்பியது.

ஆம்புலன்ஸ் பின்னே ஒரு பெண் ஓடி வந்தாள். அவள் வந்த வேகத்தில் தடுமாறி விழப்போனவள்… அருகில் நின்ற ஆரின்பனின் கையைப் பற்றி நின்றாள்.

(தொடரும்)
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top