• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மிதக்கும் ஆயுதங்கள் - - அத்தியாயம் 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
அமைச்சரின் வீடு


திட்டமிட்டபடியே மாலையில் மதியை விட்டுவிட்டுத் தனியாக அமைச்சரைப் பார்க்க இன்பன் வந்தான். அவரின் பணிச் சூழல் காரணமாக, அவன் அவர் முன் வந்து அமர இரவாகிருந்தது.

அமைச்சரின் கைகளில் அட்டாப்ஸி மற்றும் டிஎன்ஏ ரிப்போர்ட்களைக் கொடுத்திருந்துவிட்டு, இன்பன் தலை குனிந்து உட்கார்ந்திருந்தான்.

முழுவதும் படித்துப் பார்த்தவருக்கு, பெரிய அளவில் அதிர்ச்சி இல்லை. ஏனென்றால் கடந்த மூன்று நாட்களாக, ஒரு தந்தையாக அவர் மகனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்திருந்தார்.

“நீ ஏன்ப்பா தல குனிஞ்சி இருக்க.. இந்த மாதிரி ஒரு பிள்ளையைப் பெத்ததுக்கு, நான் தான் தலை குனிஞ்சி உட்காரணும்… “என்றவரின் குரலில் சோகம் இருந்தது.

“ இல்ல சார்.. “என்று இழுத்தான்..

“ஆனால்… எனக்கு கஷ்டமா இருக்குப்பா.. “

‘ஏன் ‘ என்பது போல் அவரைப் பார்த்தான்.

“நீயேன் எங்கிட்ட சொல்லல.. இத்தன நாளா பழகியிருக்கோமே.. இதான் நீ என்னைப் புரிஞ்சிகிட்டதா” என்றார் ஏமாற்றம் அளிக்கும் குரலில்.

“நீங்க கஷ்டப்படுவீங்கனுதான் தான் சொல்லல… “

“எனக்கென்னமோ அப்படித் தோணல.. இதுல இவன் பையனுக்கும் சம்பந்தம் இருக்கே.. இவன் எப்படி சம்மதிப்பானு நினைச்சிருப்ப… “என்றார் வேதனையுடன்.

அந்த நொடி அவனுக்கு அனலிக்கா மேல் கோபம் வந்தது. இப்படி ஒரு நல்ல மனிதரைக் கஷ்டப்பட வைக்க காரணம் அவளும் தான் என்று நினைத்தான். சரியாக அந்த நேரத்தில் அனலிக்காவிடம் இருந்து அழைப்பு வந்தது. எடுத்துப் பார்த்தவன் “ப்ச் “ என்று அழைப்பைத் துண்டித்தான். பின்

“இல்ல சார்.. நீங்க கஷ்.. “ என்று அவன் முடிக்கும் முன்பே..

“இதுல என்ன கஷ்டம் இன்பா.. இந்த மாதிரி செய்ற எத்தனை பசங்கள நாம அடிச்சிருப்போம்.. அப்போ, அந்த பசங்க வீட்லயும் என்னை மாதிரி, தன் மகனைப் பத்தி ஒன்னுமே தெரியாத ஒரு தகப்பன் இருந்து அழுது இருப்பான்ல.. “ என்று யதார்த்தமாக கூறினார்.

சிறிது நேரம் அமைதி நிலவியது. பின்பு அவரே தொடர்ந்தார்..

“இப்ப நான் என்ன செய்யணும் அத சொல்லு… எதுக்குப் பழைய கதைய பேசிகிட்டு.. தப்பும் பண்ணவன் தண்டனை அனுபவிச்சிருக்கான்… “

“கேஸ வாபஸ் வாங்கனும்….. “என்று நேரடியாகவே விஷயத்திற்கு வந்தான்.

திரும்பவும் இன்பனின் கைப்பேசி அழைத்தது. இந்த முறை அழைப்பு மதியிடம் இருந்து. திரும்பவும் அழைப்பைத் தவிர்த்தான்.

“அவ்வளவு தான.. விடு வாங்குறேன்… நீ இப்படி இருக்காதப்பா.. நல்லா தைரியமா இரு.. இன்னும் நாம சேர்ந்து செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்குப்பா… “

அவன் ஆச்சரியமாக அவரைப் பார்த்தான்.

“ஆமாப்பா.. நிறுத்தனும்னு நினைச்சா தப்பு பண்ற அவங்க நிறுத்தட்டும்.. நல்லது செய்ற நாம ஏன் நிறுத்தனும்.. “என்றார் நியாயமாக…

சரி என்பது போல் தலை அசைத்தான். திரும்பவும் இன்பனின் கைப்பேசி அழைத்தது. இந்த முறையும் மதியே. திரும்பவும் அழைப்பைத் தவிர்த்தான்.

“யாருப்பா.. எடுத்துப் பேசு… “ என்றார்.

“மதி தான்… அப்புறமா பேசிக்கிறேன்.. நீங்க சொல்லுங்க… “

“ஆனா இந்த மாதிரி பண்ணறது தப்பு.. இது உனக்கும் நல்லதில்லை.. உன்ன சுத்தி இருக்கிறவங்களுக்கும் நல்லதில்ல… நீ யோசிச்சியா, ப்ரித்தீஸ் வந்து எப்படி சமாளிப்பாருனு.. அவர அன்னைக்கு இன்ஃபார்மல் மீட்டிங்னு கூட்டிட்டு போய் எவ்வளவு மோசமா திட்டுனாங்க தெரியுமா… அதுவும் என் முன்னாடியே.. உனக்கு.. “என்றார் கேள்வியாக..

“தெரியும்… அடுத்த நாள் டென்ஸனா வந்து பேசுனான்.. அவங்கிட்ட எவ்வளவோ கேட்டேன்.. சொல்லல…”

“ம்ம்ம்.. நமக்காகத்தான் அவரு எல்லாத்தையும் கண்டுக்காம இருக்காரு.. அதுக்காக அவர ரொம்ப கஷ்டப் படுத்தலாமா.. அவரு பாவம், படிச்ச படிப்பு, சட்டம், பதவி இதெல்லாம் வெச்சு திருத்தலாம்னு நினைக்கிறாரு.. ஆனால் அது இப்ப முடியாது.. “ என்றார் இயலாமையுடன்.

மறுபடியும் மதியிடம் இருந்து அழைப்பு…. மறுபடியும் ஏற்கவில்லை…

“வேற ஏதாவது பிரச்சனை இருக்காப்பா.. “

“தினேஷ்னு இன்னொருத்தன் இருக்கான்… பிரச்சனை பண்ணலாம்.. அப்ப ஏதாவது செய்ய வேண்டியது இருக்கும்.. “

“இனிமே நீ எதுவும் பண்ணாத.. வேற யாராவது நம்பிக்கையான ஆள வச்சு பண்ணு… “என்றார் கட்டளையாக.

“மதி இருக்கான்… “

“அவரு நாலு வருஷமா எதுவும் சரியா பண்ணலயே… “

“நான் சொன்னா செய்வான்… “ என்றான் நம்பிக்கையாக…

“எதுனாலும் வேற யாராவது வச்சு பாரு… நான் கேஸ வாபஸ் வாங்கினாலும், உன்னைய ஹியூமன் ரைட்ஸ் ஆளுங்க விட மாட்டாங்க.. அவங்க ஏதாவது செய்வாங்க… அதனால நீ இனிமே எதுவும் பண்ணாத... கொஞ்சம் அமைதியா இரு…”

“சரி” என்று கிளம்பத் தயாரானான்.

“இன்பா…. “

“என்ன சார்… “

“அடிக்கடி வீட்டுக்கு வாப்பா.. ஒரே புள்ள வேறயா.. வீடே ஒரு மாதிரி இருக்கு.. உன்னப் பார்த்தா கொஞ்சம் நிம்மதி.… “என்றார் தழுதழுக்கும் குரலில்.

அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. அமைதியாக தலையசைத்தான்.

மற்றவர்களைப் பொருத்தவரை எப்படியோ தெரியாது.. ஆனால் அவனுக்கும் அமைச்சருமான உறவு என்பது, ஒரு அரசியல்வாதிக்கும் காவல்துறை அதிகரிக்கும் உள்ள சராசரியான உறவை விட மேலானது..

அமைச்சரின் வீட்டிலிருந்து வெளியே வந்தவன். கைப்பேசியை எடுத்து அனலிக்காவிற்கு அழைப்பு விடுத்தான். அவள் அழைப்பை ஏற்கவில்லை… ‘இது வேறயா ‘ என்று நினைக்கையிலே.. மதியிடம் இருந்து அழைப்பு வந்தது.. எடுத்தவுடன்..

“எதுக்கு இத்தனை தடவடா.. எங்க வந்தேனு தெரியாதா..… “என்றான் என்னவென்று கேட்காமலே..

“நீ சீக்கிரமா அனலிக்கா வீட்டுக்கு வாடா… “ என்றான் பதட்டம் கலந்த கோபத்துடன்.

“ஏன்.. என்னாச்சு… “

“அவ தாத்தாவ கொன்னுட்டாங்க… “

“அனலிக்கு எதுவும்…”என்றே அவனது கேள்வி இருந்தது.

“தெரில.. கிருஷ்ணன் தான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருக்காரு.. நான் இன்னும் பார்க்கல.... எனக்கென்னமோ இது தினேஷோட வேலையாத் தான் இருக்கும்னு தோணுது… “

“வாயை மூடு மதி… தயவு செய்து நீ யார்கிட்டயும் எதுவும் சொல்லிடாத, முதல உன்ன யாரு அங்க போச்சொன்னது… “

“ஏன்டா.. அவ கால் பண்ணி அப்படி பேசறப்ப, எப்படி வராம இருக்க முடியும்.. உனக்கு கால் பண்ணலயா.. “

“நான் எடுக்கல…நம்ம ஹாஸ்பிட்டல்ல போயே பார்த்திருக்கலாம்… ச்சு.. அங்க அழகேசன் இருக்காரா… “

“ம்ம்ம்… “

“மதி புரிஞ்சிக்கோ… என்னால எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரேன்….நான் வர்ற வரைக்கும் பேசாம இரு “ என்று அழைப்பை துண்டித்தான்.

பின் கிருஷிற்கு அழைப்பு விடுத்து.. சிறிது நேரம் பேசி விட்டு.. பைக்கில் ஏறிக் கிளம்பினான்.
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
கேகே நகர் வீடு

அழகேசனும் அவருடன் ஒரு கான்ஸ்டபிளும் அங்கே நின்று பேசிக் கொண்டிருந்தனர். பைக்கில் வந்த இன்பன், அதை நிறுத்திவிட்டு, இறங்கி நடந்து வந்தான்.

அழகேசனோ ‘இவன் ஏன் இங்க வந்தான் ‘என்பது போல் இன்பனைப் பார்த்தார்.

அவர் எதுவும் கேட்கும் முன்பே “மதி இருக்கானா… “என்று கேட்டான் இன்பன்.

“இருக்காரு சார் … ஆனா அவர் ஏன் இங்க வந்தாரு… “என்றார் சந்தேகமாக..

“அந்தப் பொண்ணு ஒரு டாக்டர் தான.. எழிலுக்கு அவங்க கொஞ்சம் பழக்கம்.. அதனால வந்திருப்பார்.. சரி தெரிஞ்ச வீடு தானனு நானும் பாத்துட்டு போலாம்னு வந்தேன்… “

“சார் இந்த தடவையாவது கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்லுங்க.. போன தடவை நீங்க சொன்னீங்கனு தான் விட்டுட்டுப் போனேன்… “ என்று அவனிடம் முறையிட்டார்.

அவனுக்குத் தெரியும் அவருடைய கேள்வி இதுவாகத்தான் இருக்கும் என்று..

“அவங்க ஹாஸ்பிட்டல இருந்து வந்ததும் நானும் சொல்றேன்.. காலைல வந்து கம்ப்ளைன்ட் கொடுப்பாங்க…… ”என்றான் அவரைச் சமாதானப்படுத்தும் விதமாக.

“சரி சார்.. எல்லாமே கேமரா இருக்கற ஏரியா தான்.. ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்… “

அவன் சுற்றிப் பார்த்தான் கேமராக்கள் இருந்தது தெரிந்தது. யோசித்தான்.

“அந்தப் பொண்ணோட தாத்தா.. .. “

“நாலைஞ்சு இடத்துல அந்த ஆள வெட்டிருக்காங்க.. அரிவாளா வச்சி வெட்டிருகலாம்னு நினைக்கிறேன்... பிங்கர் பிரிண்ட் எல்லாம் பார்த்து செக் பண்ணியாச்சு சார்.... ரெண்டு மூனு பிங்கர் பிரிண்ட் கிடைச்சிருக்கு… டெட் பாடிய எடுத்துட்டுப் போயிட்டாங்க சார்“

அவன் எதுவும் சொல்லவில்லை. பின் அவரே…

“நான் அந்தப் பொண்ணு வந்ததுக்கு அப்புறம்… அது கிட்டயும் ஒரு தடவை சொல்லிட்டுப் போறதுக்காக இங்க நிக்கிறேன் சார்… “என்றார்.

“இதுக்கு நீங்க நிக்கனுமா.. கான்ஸ்டபிள் யார் கிட்டயாவது சொல்லிட்டுப் போயிறலாமே… “

“பரவால்ல சார்… எவனாவது இருக்கானானு சுத்திப் பார்த்துக்கிட்டு இருக்கேன்.. அந்தப் பொண்ணு வந்ததுக்கு அப்புறம் சொல்லிட்டேப் போறேன்… “என்றார் விடாமல்.

“சரி.. இன்னிக்கு நானும் இருந்து கம்ப்ளைன்ட் கொடுக்கச் சொல்லிட்டுப் போறேன்… “ என்று சொல்லி, வீட்டினுள்ளேச் சென்றான்..

அங்கே வாசல் அருகே மதி கோபமாக நின்றிருந்தான். இருவரும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அமைதியாகப் பேச்சை ஆரம்பித்தனர்.

“அறிவிருக்கா… நீ பேசறத யாராவது கேட்ருந்தா… “

“கோபமா இருந்தது அதான்.. உனக்கு கோபமே வரலையா.. “

“யாரா இருந்தாலும் கோபம் வரும்.. ஆனா இன்னும் கொஞ்ச நாளைக்கு அமைதியா இருனு அமைச்சர் சொன்னாரு.. “

இப்பொழுது தான் மதிக்கும் ஞாபகம் வந்தது ” அவரு கேசை வாபஸ் வாங்குகிறேனு சொல்லிட்டாரா ..” என்றான் சந்தேகத்துடன்…

“சந்தேகம்…. உங்களெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது… “

ஆச்சரியமாக இருந்தது மதிக்கு. பின்னர் இருவரும் யோசித்தனர்.

திடீரென்று “அந்த தினேஷக்கு கருப்பசாமி தான சொல்லிருப்பாரு… அந்த ஆள ஏதாச்சும் செய்யனும்… “ என்றான் மதி இன்னும் கோபம் தீராமல்.

“ ஒன்னும் பண்ண வேண்டாம்.. “

“ஏன்… “

“இப்ப பிரச்சனை அந்த ஆளில்ல… அவருக்கு எல்லா கேஸ்ல நடக்கிற எல்லா விஷயமும் தெரியும்.. அதனால தான் சொல்றேன் அவர ஒன்னும் பண்ண வேண்டாம்னு… அப்படியே நீ அவரப் போய் விசாரிச்சு.. தினேஷ் உஷாராயி, வெளிய பேசிட்டானா… அதான் இப்ப பிரச்சனை தினேஷ்.. நீ அவன பாலோவ்.. “என்று இன்பன் முடிப்பதற்குள்…

“ இதயே எத்தன தடவ கேட்ப..”

“ஏன்னா.. இங்க யாருக்கும் உன் மேல நம்பிக்கை இல்லை… அன்னைக்கு ப்ரித்திஸ் கேட்டான், ‘நம்ம டிபார்ட்மெண்ட்ல வேற யார்கிட்டயாவது கொடுக்கலாம்னு’… இன்னைக்கு அமைச்சர் கேட்கறாரு ‘அவன் பண்ணுவானானு’… அவங்க கிட்ட எல்லாம் உனக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டு வந்தா… இதுதான் நீ பாலோவ் பண்ண லட்சணமா… எனக்கே உன் மேல நம்பிக்கை போயிரும் போல.. பழசயே நினைச்சிக்கிட்டே இருக்காத… அவங்க எழிலுக்குப் பண்ணதுக்கு.. நீ அவங்களைத் திருப்பி அடிச்சிட்ட.. அதோட விடு… நான் வேற யார்கிட்ட போய் இதெல்லாம் சொல்ல முடியாதுடா… புரிஞ்சுக்கோ”

அப்பொழுதுதான் மதிக்க புரிந்தது. நடந்ததையே நினைத்துக் கொண்டு, தான் இந்த விஷயத்தில் கோட்டை விட்டிருக்கிறோம் என்று.. யோசித்துக் கொண்டே நின்றான்..

“நான் சொல்ற மாதிரி.. “என்று இன்பன் சொல்லும் போது கைகாட்டி நிறுத்தினான் மதி .

“நான் பார்த்துக்கிறேன்….. “என்றான் உறுதியாக.

“அழகேசன் டவுட் பண்றாரு… அவர் ஏற்கனவே நடந்த சூசைடையும் இதையும் சம்பந்தப் படுத்திப் பார்ப்பாரு.. அவர் ஒருத்தர் தான் மீனாட்சியோட அட்டாப்ஸி ரிப்போர்ட்ட பாத்தவரு.. நான் இங்கேயே இருந்தா, நான் விசாரிக்கிற மூனு பசங்க கேஸோட ஈசியா சம்பந்தப்படுத்தி பார்த்தவாரு.. என்னால ரொம்ப நேரம் இங்க இருக்கவும் முடியாது.. அதுக்கு தான் சொன்னேன் ஹாஸ்பிட்டல் போயிருந்தா, நான் அவ கூட இருந்திருப்பேன்…உன்னால இங்க வந்து… ச்ச்சே.. “ என்றான் கோபம் இயலாமை கலந்த குரலில்.

“நீ அன்னைக்கு அந்த அட்டாப்ஸி ரிப்போர்ட்ட பார்க்கலையா..ஆனா அனலிக்கா சொல்லும்போது ஒண்ணுமே சொல்லாம இருந்த… “ என்றான் தேவையில்லாத கேள்வியாய்..

“அதுக்காக.. அவகிட்ட போய் வீடியோ பத்தி சொல்லுவாங்களா.. இப்ப பேச வேண்டிய பேச்சா இது… அழகேசன் கோவத்தில் இருக்கிறாரு.. சந்தேகமும் படுறாரு.. இதுவே முரளியோ தேவனோவா இருந்தா போங்கடான்னு போயிடலாம்… ஆனா இவர் நல்லவர்.. அதான் என்ன பண்ணனே தெரியல.. “ என்றான்.

“அவர் ஏன் கோபப் படுறாரு.. “

“பின்ன அவர் ஏரியால வந்து, நான் அதிகாரம் செஞ்சா கோபம் வராதா.. “

“உடனே, கம்ப்ளைன்ட் கொடுத்தா அவருக்கு டவுட் வராதில்ல.. “

“ம்.. கம்ப்ளைன்ட் கொடுத்த அடுத்த ரெண்டு மணி நேரத்துல, தினேஷ் வீட்டு முன்னாடி போய் நிப்பாரு… அவன் என்ன சொல்லுவானு உனக்குத் தெரியுமா.. இல்ல அவனுக்கு என்ன விஷயம் தெரிஞ்சிருக்குனு உனக்குத் தெரியுமா…”

“ இப்ப மட்டும் கண்டுபிடிக்க மாட்டாரா.. “

“கண்டுபிடிப்பார்.. ஆனா அங்க போய் நிக்கிறதுக்கு அவர்கிட்ட கம்ப்ளைன்ட் இருக்காது… நாளைக்கு காலைல கம்ப்ளைன்ட் கொடுத்ததுக்கு அப்பறமா அவர் போய் நிக்கும் போது… அவங்க யாரும் உயிரோடு இருக்க கூடாது.. இவரெல்லாம் ரூல்ஸ் படி போறவங்க.. “

“ம்ம்ம் “

சில நிமிடங்கள் அமைதியிலும் யோசனையிலும் கரைந்தன.

“ஏன் இன்பா.. அந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு ஒரு வார்த்தை கூட நீ கேக்கல…“என்றான் மதி குனிந்து கைப்பேசியைப் பார்த்தபடி.

“ தேவையில்ல.. “ என்றதும் நிமிர்ந்த மதியின் பார்வை இன்பனின் பின்புறம் சென்றது.

இன்பனும் திரும்பிப் பார்த்தான்.. அங்கு அனலிக்கா நின்று இருந்தாள். அவளைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு நின்றான் கிருஷ்ணன். இருவரும் இன்பனைப் கடந்து உள்ளே சென்றனர்.

சிறிது நொடிகளில் வெளியே வந்த கிருஷ்ணன் “நீங்க போன் பண்ணும் போது என்னால் சரியா பேச முடியல..“ என்றான் .

“பரவால்ல.. ஹாஸ்பிட்டல்ல இருந்திருக்கலாமே.. “

“அவதான், வீட்டுக்கு போகனும்னு சொன்னா.. “

“பயப்படுற மாதிரி எதுவும் இல்லைல… “

“அந்த மாதிரி எதுவும் இல்லை.. பெயின் கில்லர் கொடுத்திருக்கு, கொஞ்சம் டயர்டா இருக்கா.. “என்று மெல்லியதாக சிரித்து விட்டு உள்ளே சென்றான்.

இவர்கள் பேசிக் கொண்டதைக் கவனித்த மதி “நீ இவருக்கு போன் பண்ணியா… “என்று கேட்டான்.

“அவருதான கூட்டிட்டுப் போனாருனு சொன்ன… போன் பண்ணி கேட்க மாட்டேனா… “

“இல்ல.. “

“போதும்டா.. அட்லீஸ்ட் ஒரு ரெண்டு வார்த்தையாவது பேசிட்டு வரேன்.. அழகேசன் வந்தா சொல்லு.. ”இன்பன் உள்ளே சென்றான்.

உள்ளே அனலிக்கா சோபாவில் படுத்திருந்தாள். அருகில் கிருஷ்ணன் இருந்தான்.

உள்ளே வந்த இன்பன் “ நான் கொஞ்சம் தனியா பேசனும்.. “ என்றான் கிருஷைப் பார்த்து.

கிருஷ் எழுந்து வெளியே சென்றான். அவனுக்கு இப்பொழுது நிறைய விஷயங்கள் புரிந்தன. அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள உறவு புரிந்தது. ஆனால் அனலிக்காவின் மீதுள்ள அக்கறையில் மட்டுமே, அவன் இந்த உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறான்..

இன்பன் அனலிக்காவின் அருகில் அமர்ந்தான். கண்மூடி இருந்தாள். அவளது தலையிலும் கைகளிலும் கட்டுப் போடப்பட்டிருந்தது. கைகளில் அங்கங்கே சிராய்ப்புகள் இருந்தன. அவள் எழுந்து சொன்னால் மட்டும் தானே தெரியும் என்ன நடந்தது என்று..

அவளின் கரத்தைப் பற்றினான். அவள் லேசாகக் கண் திறந்து அவனைப் பார்த்தாள்.

“நாளைக்கு காலைல, இந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் கம்ப்ளைன்ட் கொடுத்திரு.. கம்ப்ளைன்ட் மட்டும்தான் கொடுக்கணும்..சரியா “என்றான்.

அவள் எதுவும் பேசவில்லை. தலையை மட்டும் சரியென லேசாக அசைத்தாள். அவன் இன்னும் நெருங்கி அமர்ந்து, அவளது நெற்றியை வருடினான். அந்த நேரத்தில் அவளுக்கு அவன் மீதான கோபம் குறைந்ததா இல்லை வலியினால் கோபம் மறைந்ததா என்று தெரியவில்லை… இப்போது அவள்தான் அவன் கரத்தை அழுத்திப் பிடித்திருந்தாள். அவனின் மனதில் இருந்தது ‘இன்னும் ரெண்டே நாள் தான்… அப்புறமா நீயே நினைச்சாலும் என்னய விட்டுப் போக முடியாது ‘ என்பது தான். இதை அவளிடமே சொல்ல நினைத்து வாய் திறக்கும் போதுதான்…..

மதி “வாங்க அழகேசன் ” என்று இன்பனுக்கு கேட்கும்படி அழைத்தான்.

சடாரென “கையவிடு… “ எனச் சொல்லி எழுந்து கொண்டான் இன்பன். அவள் கண்கள் சுருக்கி ‘என்ன ‘ என்பது போல் புரியாமல் அவனைப் பார்த்தாள்.

அழகேசன் உள்ளே வந்தார். இன்பன் எழுந்து நின்று கொண்டிருந்தான்.

“நானே சொல்லிட்டேன்… இருந்தாலும் நீங்களும் சொல்லுங்க.. ஆனா அவங்க டயர்டா இருக்காங்க… “ என்றான் இன்பன்.

“பரவாயில்ல சார் விடுங்க… நான் எதுக்கும் ஒரு கான்ஸ்டபிள இங்கேயே இருக்கச் சொல்றேன்… “ என்று அவனை அளவிடும் பார்வையில் பார்த்தார்.

“இது உங்க ஏரியா அழகேசன்… நீங்களே முடிவு எடுத்துக்கோங்க… “ என்று வெளியேறினான். இன்னும் இருந்தால் சந்தேகம் வலுக்கும் என்று.

எல்லாம் சில நொடிகளில் நடந்தது.

அனலிக்காவிற்கு அவன் மனதில் இருப்பது புரிய வாய்ப்பு இல்லை. ஆனால், அவனின் செய்கைக்கும் பேச்சுக்குமே அர்த்தம் காண இயலாமல், மறுபடியும் கண்கள் மூடினாள்.

(தொடரும்)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top