• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மிதக்கும் ஆயுதங்கள் - - அத்தியாயம் 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
இன்பனின் தாய் தந்தையரின் அருகில் இருந்த மதி “இதுதான் அந்த டாக்டர் பொண்ணு“என்று கூறினான்.

உடனே இன்பனின் தாயார் எழுந்து சென்று, அவளை உள்ளே அழைத்து வந்தார்.

இன்பனுடைய அக்கா மற்றும் அவள் கணவர் என அனைவரும் அவளைச் சுற்றி வந்து நின்றனர்.

இதையெல்லாம் இன்பன் ‘என்ன நடக்கிறது இங்கே’ என்று ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது நொடிகளுக்குப் பின், அவனும் அவள் அருகே வந்து நின்றான்.

“அப்பவே வந்து இருக்கலாம் இல்லை… ஏன் லேட் ஆச்சு.. “என்று கேட்டார் இன்பனின் தாய்.

“ஹாஸ்பிடல்ல வேலை இருந்துச்சு.. “
என்றாள்.

கிருஷ்ணன் மருத்துவமனையில், இவள் யாரையும் பார்க்கவில்லை என்று கூறினான், ஆனால் இவள் இப்படி சொல்கிறாளே என்று இன்பனும், மதியும் ஒருசேர அவளை ஆச்சரியமாகப் பார்த்தனர். ஆனால் அவள் அவர்கள் இருவரையும் நிமிர்ந்துகூட பார்க்கவில்லை.

“ஏதாவது சாப்பிடுறயா… “என்று கேட்டாள் இன்பனின் அக்கா.

அனலிக்காவோ ‘வேண்டாம்’ என்பது போல் தலையை மட்டும் அசைத்தாள்.

“இந்த காயம் எப்படிம்மா ஆச்சு.. “என்று கேட்டார் ஆரின்பனின் தந்தை.

அவள் வாய் திறந்து கூறுவதற்கு முன்பே “ கீழ விழுந்திட்டா “ என்றான் இன்பன்.

இப்போது அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் தலை குனிந்து கொண்டான். இப்படி அடுக்கடுக்காய் கேள்விகள் எந்த கேள்விக்கு என்ன பதில் கூற எனத் தெரியவில்லை அவளுக்கு.

திடுதிப்பென “நான் கிளம்புறேன்.. எனக்கு லேட் ஆகுது.. “ என்று எழுந்து விட்டாள்.

எல்லோரும் வித்தியாசமாகப் அவளைப் பார்த்தனர். ஆனால் இன்பன் தான் “ஹாஸ்பிட்டல வேலனு சொன்னால.. அதான் டயர்டா இருக்கும்… “என்று சமாளித்தான்.

“ஒரு நிமிஷம், என் கூட வா…உங்கிட்ட பேசனும்… ” என்று தனியே அவளை அழைத்துச் சென்றார் இன்பனின் தாயார்.

இன்பனும் அவர்கள் பின்னே சென்றான்.

“ நீ எதுக்குடா வர்ற… “ என்று திரும்பிக் கேட்டார்.

“ சும்மாதான்.. “

தனியே அழைத்துச் சென்றவர், அவள் கையைப் பிடித்துக் கொண்டு “சீக்கிரமா உங்க கல்யாணத்த வச்சிக்கலாமா.. மதி எல்லாத்தையும் எங்கிட்ட சொல்லிட்டான்… “என்றார்.

அவள் அதிர்ச்சியாக நிமிர்ந்து ஆரின்பனைப் பார்த்தாள்.

அவன் “நம்மள பத்தி… வேற எதுவும் கிடையாது… “என்றான் நிறுத்தி அழுத்தமாக.

“நீ அவன் வேலைக்கு இப்படி ஆனதெல்லாம் பெரிசா எடுக்காத… எங்களுக்கு இது பழகிருச்சு.. நீயும் பழகிக்கோ.. சரியா.. “என்றார்.

அவள் யோசித்தாள்.

“என்னம்மா… உனக்கு இதுல வருத்தம்மா… “என்றார் மறுபடியும்.

இல்லை என்று தலையசைத்துக், குனிந்து கொண்டாள்.

“எதுவுமே செய்யாம.. இப்படி ஏதாவது நடக்கும் இவனுக்கு.. “

அந்தப் பேச்சில் அவள் சடாரென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அந்த நேரத்தில் இன்பனுக்கு ஏதோ பொறி தட்டியது. இந்த வார்த்தைகளை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தது. அவன் யோசித்தான். அவன் யோசிப்பதை அவளும் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அதன்பின் ஆரின்பனின் தாயார் என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருந்தார். இருவரும் அதைக் கேட்கவேயில்லை.

சிறிது நேரத்தில் அவனுக்குப் புரிந்துவிட்டது. இது அவன் சற்று முன்பு மதியின் வீட்டில் வைத்து சொன்ன வார்த்தைகள். அதனாலதான் அவளுக்கு அவ்வளவு கோபம். அவன் நிமிர்ந்து பார்த்தான். அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் ‘புரிஞ்சிடுச்சு’ என்பது போல் கண்களால் சிரித்தான்.

பின் “தேங்க்ஸ் மா.. “என்றான் .

“இப்ப எதுக்குடா.. அதுவும் எனக்கு.. “

“எதுக்கோ வச்சுக்கோங்க.. “என்றவன்
“கிளம்பலாமா… “என்று அவளிடம் கேட்டான்.

“ம்ம்ம்.. “ என்று உடனே ஒத்துக் கொண்டு அவனை ஆச்சரியப்படுத்தினாள்.

ஆனால் கோவப்பட்டு போனவள், இப்பொழுது எதற்காக திரும்பி வந்தாள் என்று அவனுக்கு புரியவில்லை. எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு இருவரும் கிளம்பினர்.

கேகே நகர் வீடு

காரில் வரும்போது அவள் எதுவும் அவனிடம் பேசவில்லை. ஆனால் அவனோ அவள் என்னென்ன கேள்விகள் கேட்பாள், அதற்கு எப்படி எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று தெளிவாக யோசித்து வைத்துக் கொண்டான். வீட்டினுள் வந்து அமைதியாக அவள் அமர்ந்தாள். அவனும் அவள் அருகில் வந்து அமர்ந்தான். அவன் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் போது…

“நான் கொஞ்சம் பேசனும்…“ என்றாள். ‘இதுவும் நல்லதுதான்’ என்று நினைத்து வேறு எதுவும் அவன் செல்லவில்லை..

அவள் ஆரம்பித்தாள்…

“அன்னைக்கு என்ன சொன்ன…உன் இடத்தில யார் இருந்தாலும் இதுதான் ப்ளான்னு.... “

“அனலி… “ என்றான் இன்பன்.

“அந்தப் பேரு வேண்டாம் இன்பன்.. அதுக்கும் நான் காரணம் சொல்றேன்… “ இதற்கு அப்போது கத்தியவளின் குரலில், இப்பொழுது அவ்வளவு ஒரு அமைதி குடிகொண்டிருந்தது.

அவளே தொடர்ந்தாள்…
“மீனா இறந்ததுக்கு அடுத்த நாள், உன் கூட பேசணும்னு தோணுச்சு.. எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லி, என்ன பண்ணனும்னு கேட்கத்தான், முதல் நாள் உங்க ஆபீஸ் வந்தேன்…

ஆனா மயக்கம் போட்டு விழுந்தது நானே எதிர்பார்க்காதது… அது ப்ளானெல்லாம் இல்ல இன்பன்.. அந்த ரெண்டு நாள், நான் இருந்து மனநிலைல, சாப்பிடலாம் முடியல.. மீனாவுக்கு அப்படி ஆனதுக்கு அப்புறமா, நான் விழுந்தா பிடிக்கவோ தூக்கிவிடவோ யாருமில்ல.. ஆனா அன்னைக்கு நீ இருக்கிற அப்படிங்கற நம்பிக்கையில தான் விழுந்தேன்..

அதுக்கப்புறம் உங்க வீட்டுக்கு வந்தது.. உன் கூட இருந்தது.. காஃபி ஷாப்பில சொன்னது.. எல்லாமே உன்ன எனக்குப் பிடிக்கும்… ரொம்ப பிடிக்கும்.. அதான் அப்படி … ஏன்னு கேட்டா… முதல் நாள் நீ எங்கிட்ட என்ன சொன்னேனு தெரியுமா ‘ஆம்புலன்ஸ் பின்னாடியே போவீங்களா’னு.. நீ எப்படி சொன்னனு தெரியாது.. அதுல அன்பு, கோபம் ரெண்டும் இருந்துச்சு.. பரிதாபம் சுத்தமா இல்ல.. அது எனக்கு ரொம்பப் பிடிச்சது…

ஆனா … யாராவது ஒரு போலீஸ் ஆஃபீசர் தெரிஞ்சா கேஸ் எப்படி போகுதுங்கிற டீடெயில்ஸ் கிடைக்கும்னு தாத்தா சொன்னது உண்மைதான்.. ஆனா அதுக்காக நான் உன்ன யூஸ் பண்ணல.. இது எனக்குத் தெரியும்.. போதும்… வேற யாருக்கும் தெரியனும்னு அவசியமே இல்ல.. “

அவள் சிறிது நேரம் அமைதி காத்தாள். அத்தனையும் அவன் கூறிய வார்த்தைகள் தான். ஆனால் அதற்கு இத்தனை அர்த்தங்களா.. அவளை இவ்வளவு அது பாதித்திருக்குமா.. என்று அவன் இந்த நிமிடம் வரை அறிந்திராதது தான்.

“இத ரொம்ப நாளா சொல்லணும்னு தோணுச்சு.. இன்னைக்கு சொல்ல டைம் கிடைச்சுச்சு.. சொல்லிட்டேன்.. நீங்க போலாம்.. “என்றாள் கொஞ்சமும் யோசிக்காமல்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹப்பாடா, ஒரு வழியாக
டாக்டர் புள்ளய எல்லாத்தையும்
சொல்ல வைச்சுட்டான், இன்பன்
இனிமேல் சமாதானம், சமாதானம்
ஜாலிலோ ஜிம்கானாதான்
அப்படின்னு பார்த்தால் இது
என்ன அனலிக்கா டாக்டரக்கா
கதம் கதம்-ங்கிறாளேப்பா
அனலி-ங்கிற பேர் புடிக்கலையாம்
வேற நல்ல அழகான பேரா
வைங்க, காதம்பரி டியர்
 




Last edited:

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
“ போகவா..அதெல்லாம் முடியாது.. “

“தயவுசெய்து வெளிய போங்க.. என்னால உங்க அம்மா சொன்ன மாதிரி உங்கள கல்யாணம் பண்ணிக்க முடியாது… “

“ ஏன்.. தீடீர்னு இந்த முடிவு.. “

“இது நான் எப்பவோ எடுத்த முடிவு தான்.. நீங்க வெளிய போகலாம்.. “

“நான் மதி வீட்ல வச்சு பேசினத தப்பா எடுத்துக்கிட்டா.. “

“இல்ல.. நீ எப்பவும் அப்படித்தான் பேசுவ.. எனக்கு அந்த நேரத்தில கோபம் வரும்… அதுக்கப்புறம் சரியாயிருவேன்… அப்புறம் நானே தான உன்னத் தேடி வந்திருக்கேன்.. “

“அப்புறம் என்ன.. இப்ப கோபம் போயிருச்சில.... “

“இது வேற இன்பன்.. நீ வெளியில போ.. “

காலையில் இருந்து அவன் இருந்த மனநிலைக்கும், நடந்த விஷயங்களிலும்…. இப்பொழுது அவள் சொல்வதும்.. அவனுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது. ‘சரி இன்னைக்கு விட்டுட்டு நாளைக்கு பேசலாம் ‘ என்ற மனநிலையிலேயே அவன் எழுந்து வாசல் வரைக்கும் சென்று கதவைத் திறந்தான்.

அவனுக்குச் சந்தேகம் ‘இன்னிக்கு இந்த நேரத்தில வீட்டுக்கு வருவதற்கு காரணம் என்னவாயிருக்கும்’ என்று நின்று திரும்பினான். அவளும் எழுந்து நின்று கொண்டிருந்தாள்.

“இன்னைக்கு.. அதுவும் இந்த நேரத்துல எதுக்கு வீட்டுக்கு வந்த.. அதுக்கு வேற ஏதோ காரணம் இருக்கு… அதைச் சொல்லு.. “ என்றான் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு திரும்பி நின்று.

சரியாகக் காரணத்தைக் கண்டுபிடித்து விட்டான் என்று அவளுக்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும்.. முகத்தில் அதைப் பிரதிபலிக்கும் முடியாமல் மெதுவாக நடந்து முன்னே வந்தாள்.

“சொல்லு.. “ என்றான் அவனும் முன்னே வந்து.

“அவங்க திரும்பி வருவாங்களா இன்பன்.. “என்று சம்பந்தமில்லாமல் ஆரம்பித்தாள்.

“யாரைச் சொல்ற.. “என்றான் புரியாமல்.

“அன்னைக்கு வந்து அடிச்சாங்களோ.. அந்த ஆளுங்கள… அன்னைக்கு நான் கார வெளிய நிறுத்திட்டு, உள்ளே வந்தப்போ, யாரோ வேகமாக கத்தியால் குத்த வர்ற மாதிரி இருந்தது.. தெரிஞ்சு தடுக்கறப்ப தான் கைல பட்டது.. வெளிய போலாம்னு திரும்பினப்ப மறுபடியும் தலையில அடி விழுந்தது.. வலி தாங்காம கீழ விழுந்..

நிறுத்தி, நன்றாகவே அழுதாள்… பின் தொடர்ந்தாள்..

கொஞ்சம் தைரியம் வந்து எந்திரிச்சு ஓடுறப்ப, உள்ளருந்து தாத்தா கத்தற சத்தம் கேட்டுச்சு.. என்னால ஒன்னுமே பண்ண முடியல.... தாத்தாவும்… “

திக்கித் திணறி அழுது கொண்டே சொன்னாள். இடையிடையே கைகளால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். இது அவனே அறிந்திராத அவளின் முகம் அல்லவா. அன்று என்ன நடந்தது என்று அவனும் தெரிந்துகொள்ள நினைத்தான். ஆனால் இன்று அவள் வாயால் கூறும்போது, தெரியாமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

தொடர்ந்து புலம்பினாள்…

அப்புறமா கொஞ்ச தூரம் ஓடி வந்தேன்… உடனே உன்னைப் பார்க்கணும்னு தோணுச்சு ...உனக்கு போன் பண்ணேன்.. நீ ஏன் போனை எடுக்கல இன்பன்… அவங்களெல்லாம் யாரு.. எதுக்காக வந்தாங்க.. இனி இப்படித்தான் என்னோட லைப் இருக்குமா.. “என்று புரியாமல் அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“பயமா இருக்கா… “என்றான்.. அவள் பேசிய அத்தனை விஷயங்களுக்குப் பின்னே இருந்த உண்மையைக் கண்டறிந்து.

கண்களில் கண்ணீருடன் “ரொம்ப இன்பன்… “ என்றாள் உதடுகள் நடுங்க.

அவன் திரும்பிச் செல்லப் போனான். அதற்குள் அவள் ஓடி வந்து, அவன் கையைப் பிடித்துக் கொண்டு..

“தனியா மட்டும் விட்டுட்டு போகாத இன்பன்.. அன்னைக்கும் இப்படித்தான் போன.. எனக்குப் பயமா இருக்கு… “ என்று அவன் தோள்களில் அழுந்தச் சாய்ந்து அழுதாள்.

“கதவு திறந்திருக்கு… பூட்டிட்டு வரேன்.. நீ உட்காரு.. “ என்றான்.

அவள் அப்படியே அங்கு அருகில் இருந்த சோபாவின் கைப்பிடியில் அமர்ந்து, மேலும் மேலும் அழ ஆரம்பித்தாள்.

அவன் திரும்பி, அவள் அருகில் வந்து நின்று கொண்டு “நேத்து என்ன பண்ண.. நேத்தும் பயந்திருப்பல.. “ என்றான் அமைதியாக.

ஆமாம் என்பது போல தலையசைத்து விட்டு, “வீட்ல இருக்க பயமா இருந்துச்சு.. அதான் கார எடுத்துட்டு நைட் புல்லா அங்க இங்கனு சுத்திட்டு இருந்தேன்…“என்றாள்.

அவனுக்குத் தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது. “எனக்கு ஒரு போன் பண்ணிருக்க கூடாதா… “என்றான் இயலாமையின் வெளிப்பாடாய்…

“கமிஷனர் சார் தான், நேத்து போன் பண்ணிச் சொன்னாங்க.. இன்னைக்கு ஒருநாள் எதுவும் வேண்டாம்னு… அதான் போன் பண்ணல.. “

“கமிஷனர் சாரா.. “ என யோசித்தவன்… “ப்ரித்திஸா… “ என்றான்.

“ம்ம்ம்.. அந்த சார் தான்… “

“மதி மாதிரி தான் அவனும் உனக்கு… “

“இல்ல, அவரைப் பார்த்தா பயமா இருக்கும்.. “

இவள் அவனைக் கண்டு பயந்திருக்கப் போய் தான்.. ப்ரித்திஸ் இவளைச் சந்தேகப்பட்டிருக்கான். ப்ரித்திஸ் தனக்காக, அவளை அழைத்துப் பேசி இருக்கிறான் என்பதே அவனுக்கு வியப்பாக இருந்தது. அவன் இந்த மாதிரி தனிப்பட்ட விஷயங்களை எல்லாம், தன்னை சம்பந்தப்படுத்திக் கொள்பவன் அல்ல.

ஆரின்பன் அவள் அருகில் வந்து, அவளது தலையை தடவிக் கொடுத்துக் கொண்டே “அதுக்காக இப்படியா… சரி வீட்ல இருந்தா என்ன பயம்.. “என்றான்.. இன்னும் எதற்கெல்லாம் பயப்படுகிறாள் என்று அறிய..

“அது இன்னும் கொடும… ஒரு ரூம்ல மீனா.. பாத்ரூம்ல கல்பனாமா.. அப்பறமா இப்ப இந்த ரூம்ல தாத்தா.. இப்படி என்ன சுத்தி இருக்கிற எந்த உயிரையும் நான் காப்பாத்தல இன்பன்… இது பத்தாதுன்னு.. மூனு பேரோட உயிர வேற எடுத்திருக்கேன்… எனக்குத் தெரியும் இன்பன், ஹார்ட் அட்டாக், ஸ்டோர்க் வந்தா என்ன செய்யனும்னு… ஆனா என் கண்ணு முன்னாடி அந்தப் பசங்க துடிச்சப்ப, நான் சும்மாதான் நின்னேன்… அன்னைக்கு ஒன்னும் தோணல… அவங்க பண்ண தப்புக்கு தண்டனனு தோணுச்சு… ஆனா இப்ப நினைச்சா தப்போனு தோணுது ..உயிரக் காப்பாத்தாத நான் எப்படி டாக்டர், இன்பன்…எனக்குப் பேஸன்ட்ட பாக்கவே பயமா இருக்கு… சிரெஞ்ச தொடவே முடியல… பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு.. “ என்று அவள் பேசியதற்கு ஏற்ப கைகளை அசைத்துக் கொண்டும், அழுது கொண்டும் சொன்னாள்.

அவனுக்குப் புரிந்தது. இந்தக் காரணங்களால் தான், அவள் கிருஷ்ணனிடம் யாரையும் பார்க்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறாள்.

அவன் எவ்வளவு பதில்கள் தயாரித்து வைத்திருந்தான். ஆனால் இப்பொழுது அவனது பதில்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட கேள்வியாக அல்லவா அவள் நிற்கிறாள்.

“சிலநேரம் தோணும் உனக்கு உண்மையாய் இருக்கலயோனு.. குற்ற உணர்ச்சியா இருக்கும்.. அப்படி ஒரு உணர்வோட, நான் எப்படி உன்னக் கல்யாணம் பண்ணிக்க முடியும்… அதான் உன் போனை அட்டென்ட் பண்ணல… இதுக்கு முன்னாடியும் நான் தனியா வாழ்ந்திருக்கேன்… இப்பக் கொஞ்ச நாளா தான் இப்படி ஒரு வாழ்க்கை, மீனாவால… பழைய மாதிரி தனியா வாழ்றது ஈஸிதானு நினைச்சேன்.. ஆனா உன்ன விட்டுட்டுத் தனியா வாழனும்னு நினைச்சா பயமா இருக்கு.. முடியாதுன்னு தோணுது.. அதேநேரம் குற்ற உணர்ச்சியோட உங்கூட எப்படி வாழமுடியும் இன்பன்.. “ என்று நின்று கொண்டிருந்த அவனின் மீது தலை சாய்த்து, தன் நடுங்கிய கரங்களினாள் அவனைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.

சிறிது கண்ணீர் வற்றியவுடன்…

“எனக்குக் குழப்பமா இருந்திச்சு... அதான் உங்க வீட்டுக்கு வந்தேன்… எனக்குத் தெரியாது அங்க எல்லாரும் இருப்பாங்கனு.. தெரிஞ்சா வந்திருக்கவே மாட்டேன். ஆனா என்னய மட்டும் ஏன் கூப்பிடல.. நான் வேண்டாம்னு நினைக்கிறியா இன்பன்… “என்று நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்து ஏக்கத்துடன் கேட்டாள்.

அவன் இதற்கு மேல் அவளை அழவிடக் கூடாது என்று நினைத்தான். அவள் தலையை தன்னிடமிருந்து தள்ளி வைத்து ..

“ஒரு மூனு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்றியா.. “என்றான்.

‘என்ன’ என்பது போல் பார்த்தாள்.

“வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா.. எதுக்கு யாரையாவதுனு... உங்க டாக்டர கல்யாணம் பண்ணிக்கிட்டா.. நீ சொல்ற குற்றவுணர்ச்சியில்லாம இருப்பியா.. “

இல்லை என்று தலையசைத்து ,” யாரை… “

“போதும்.. ரெண்டாவது கேள்வி… யாரக் கல்யாணம் பண்ணாலும் இப்படித்தான் இருப்பேனா.. என்னையக் கல்யாணம் பண்ணிக்கோ.. நானாவது சந்தோஷமாக இருந்திட்டு போறேன்… “ என்றான் இலகுவாக.

அவள் அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். விருட்டென எழுந்து அவனைக் கழுத்தோடு சேர்த்துக் கட்டிக்கொண்டாள். திரும்பவும் அழ ஆரம்பித்தாள்.

“அழாத அனலி” என்று சொல்லிக்கொண்டே அவளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

“இந்தப் பேர் மட்டும் வேண்டாம் இன்பன்… நான் எல்லாத்தையும் மறக்கனும்னு நினைக்கிறேன்.. அந்தப் பேரச் சொன்னாலே மீனா நியாபகம் வருது.. மீனா பத்தி நினைச்சா, அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாமே நியாபகம் வருது.. …

இங்க இருக்கவே எனக்குப் பிடிக்கல.. கொஞ்ச நாளைக்கு இந்த ஊரு, இந்த வீடு, இது எதுவுமே வேண்டாம்னு தோணுது… என்னை எங்கயாவது கூட்டிட்டு போறீயா இன்பன்.. “ என்று முதல் முதலாக தனக்கு ‘இது வேணும்’ என்று அவனிடம் கேட்டாள்.

சிறிது நேரம் நேற்றைய அவளின் பயத்தைப் போக்காததற்கு மன்னிப்பாகவும்.. நாளை அவன் தரப்போகும் பாதுகாப்பிற்கு நம்பிக்கையாகவும்… அவன் அவளை அணைத்திருந்தான்.

திடுமென ஞாபகம் வந்தவளாய் “மூனு கேள்வி கேட்கிறேனு சொன்ன.. ரெண்டு கேள்விதான் கேட்ருக்க..” என்றாள் அவனிடம் இருந்து சிறிது விலகி, தலை உயர்த்தி.
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
அவளை நன்றாக விலக்கி நிறுத்தி “ம்.. தெளிவு...சரி மூனாவது கேள்வி… நாலு நாளா தூக்கமே இல்ல… மணி ஒன்னாகுது.. தூங்கலாமா..“ என்றான் தனது கைக் கடிகாரத்தைக் காட்டியபடி…

‘சரி’ என்று தலை அசைத்தாள். அவ்வளவு நேரத்திற்கு பிறகு, அவள் முகம் கொஞ்சம் தெளிவானது. அவன் அவளை அழைத்து வந்து, சோபாவில் தூங்கச் சொன்னான். பின் அதன் அருகில் அமர்ந்து… அவள் கன்னத்தில் கை வைத்து…

“எதையும் நினைக்காத.. நாளைக்கு நாம இந்த ஊருல இருக்க மாட்டோம்….சரியா …” என்றான்.

அவள் அவன் கரத்தை எடுத்து, தன் இதழ் பதித்தாள்… அவன் புன்னகைத்தான்…

“தூங்கு “ எனச் சொல்லிவிட்டு… அருகிலிருந்த மற்றொரு சோபாவின் கீழே அமர்ந்து கால் நீட்டினான்.

“இன்பன்.. உங்க அப்பா, அக்கா.. அவங்களுகெல்லாம் என்னய பிடிக்குமா.. “ என்றாள் சந்தேகத்துடன்..

அவன் கண்களால் ‘இங்கே வா’ என்பது போல் காட்டினான்.

அவளும் எழுந்து வந்தாள்…

“உட்காரு.. “என்றான்.

அவள் அமர்ந்தவுடன்

“அன்னைக்கு, காஃபி ஷாப்ல வச்சு சொன்னது நியாபகம் இருக்கா.. “ என்று கேட்டான்.

‘இருக்கு’ என்பது போல் தலையை அசைத்தாள்.

“அதேதான்.. திருப்பித் திருப்பிச் சொல்ல முடியாது.. “என்று சொல்லி விட்டான்.

“அன்னைக்கு எதுக்கு ஹாஸ்பிடல்ல இருக்க மாட்டேன்னு சொல்லி.. வீட்டுக்கு வந்த.. “என்று அவள் செய்தது தப்பு என்ற தொனியில் கேட்டான்.

அதற்கும் அவளிடம் பதில் இருந்தது.

“இல்ல.. நீ எப்பவும் மர்டர் நடந்த இடத்தில தான இருப்ப.. எழில் பர்த்டே அன்னைக்கு கூட, அப்படி ஒரு நியூஸ் வந்தவுடனே எல்லாத்தையும் விட்டுட்டுப் போனல.. அதான் வீட்டுக்கு வந்தாதான் உன்னய பார்க்க முடியும்னு.. “ என்று இழுத்தாள்.

அவன் மெளனமாகப் புன்னகைத்தான்.

“என்ன.. “என்றாள்.

“ம்ம்.. நீ இன்னும் கொஞ்சம் என்னய புரிஞ்சிக்கலாம்.. அவ்வளவுதான் சொல்லமுடியும்.. “என்று அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான், புதிதாகப் பார்ப்பது போல.

பின் “சரி தூங்கு.. “என்றான்.

அவள் எழப்போனாள். ஆனால் அவன் அவளைப் பிடித்து நிறுத்தி, மெதுவாகத் தன் மடியில் சாய்த்துக் கொண்டான்.

பின் “இங்கேயே தூங்கு” என்றான்.

அவளுக்கு இப்பொழுதும் கொஞ்சம் அழுகையாக இருந்தது. அவன் அவள் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டே.. பின்புறம் இருந்த சோபாவில் தலையைச் சாய்த்து முழங்கைகளால் கண்களை மூடிக்கொண்டான்.

அவன் நினைத்துப் பார்த்தான். இவளுக்காக என்ன செய்திருக்கிறோம் என்று… இதே நிலைமையில் எந்த பெண் வந்து, அவன் முன்னால் நின்றாலும் இதையேதான் செய்திருப்பான். என்ன கொஞ்சம் பயமின்றி தெளிவாகச் செய்திருப்பான்.. அவ்வளவே…

அவனுக்கேத் தெரியும், அவன் காதலைக் கூட அவளிடம் சரியாகச் சொல்லவில்லை என்று. ஆனால் அவளோ தனது இதழ் அணைப்பிலும், இதயத்தின் வார்த்தைகளிலும் இதமாகச் சொல்லிவிட்டாள்.

திடீரென குனிந்து அழுகிறாளா என்று பார்த்தான். ஆனால் அவள் நன்றாக உறங்கிப் போய் இருந்தாள். திரும்பியும் பழைய நிலைக்கு சென்று கண்களை மூடினான்…

நிச்சயமாக, அவன் தன் காதலை சரியாகச் சொல்லவில்லை … ஆனால் அவன் கண்களின் ஓரத்திலிருந்து வழியத் தொடங்கி இருக்கும் கண்ணீர் துளிகள் சொல்லிவிடும், அவளுக்கான அவனின் பரிபூரணக் காதலை….
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
இதுவே நிறைவுதான்... எனினும் நிம்மதியான நிறைவாய் அடுத்த அத்தியாயம் ?. Don't miss that!!
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top